Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

13th February 2020 Current Affairs in Tamil & English

13th February 2020 Current Affairs in Tamil & English

13th February 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

13th February 2020 Current Affairs in Tamil

13th February 2020 Current Affairs in English

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. இரண்டாவது BIMSTEC பேரிடர் மேலாண்மை பயிற்சி–2020 நடத்தப்பட்ட நகரம் எது?

அ. திம்பு

ஆ. புவனேசுவர்

இ. கொழும்பு

ஈ. காத்மாண்டு

  • சமீபத்தில், ஒடிசாவின் தலைநகரமான புவனேசுவரில் அம்மாநிலத்தின் முதலமைச்சர் நவீன் பட்நாயக் இரண்டாவது BIMSTEC பேரிடர் மேலாண்மை பயிற்சி–2020ஐ தொடங்கிவைத்தார். இந்தப்பயிற்சியை தேசிய பேரிடர் மீட்புப்படை (NDRF) மைய முகமையாக இருந்து நடத்துகிறது. “Response to a Cultural Heritage Site that Suffers Severe Damage in an Earthquake” & “Response to a Cultural Heritage Site that is Affected by Flooding or Storm Surge” என்பது இந்தப்பயிற்சிக்கான கருப்பொருளாகும்.

2.ஹக்கீம் அஜ்மல் கான், மருத்துவத்தின் எந்தத் துறையில் சிறந்து விளங்கினார்?

அ. ஹோமியோபதி

ஆ. சோவா ரிக்பா

இ. ஆயுர்வேதம்

ஈ. யுனானி

  • சிறந்த யுனானி மருத்துவரும் சமூக சீர்திருத்தவாதியுமான ஹக்கீம் அஜ்மல் கானின் பிறந்தநாள், ஒவ்வோர் ஆண்டும் பிப்.11 அன்று உலக யுனானி நாளாக கொண்டாடப்படுகிறது. யுனானி மருத்துவ முறையில் அறிவியல் ஆராய்ச்சியின் நிறுவனராகவும், புது தில்லியில் அமைந்துள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் நிறுவனர்களுள் ஒருவராகவும் அவர் இருந்தார்.
  • கிரேக்கத்தில் தோன்றிய யுனானி மருத்துவமுறை, இந்தியாவில் அரேபியர்கள் மற்றும் பெர்சியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. யுனானி மருத்துவமுறைமூலம் சுகாதாரப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்நாள் கொண்டாடப்படுகிறது.

3.சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, வரும் ஏப்ரல் 1, 2020 முதல், எந்தக்கூறு ‘மருந்துகளாக’ கருதப்படும்?

அ. மருத்துவ சாதனங்கள்

ஆ. ஆயுஷ் மருந்துகள்

இ. மது

ஈ. மருந்துகளுக்கான மூலப்பொருட்கள்

  • நாட்டில் விற்கப்படும் அனைத்து மருத்துவ சாதனங்களும் வரும் 2020 ஏப்ரல் 1 முதல் மருந்துகளாகக் கருதப்படும் என்றும், அவை 1940ஆம் ஆண்டின் மருந்துகள் & அழகுசாதனப்பொருட்கள் சட்டத்தின்கீழ் ஒழுங்காற்றப்படும் என்றும் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் தனது அண்மைய அறிவிப்பில் கூறியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, இருபத்துமூன்று மருத்துவ சாதனங்கள் மட்டுமே மருந்துகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
  • கார்டியாக் ஸ்டெண்டுகள் மற்றும் கருப்பையக சாதனங்கள் உட்பட இவற்றில் சில மட்டுமே விலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவுடன் கலந்துரையாடிய பின்னரே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

4.உலக நலவாழ்வு அமைப்பின்படி, சீனாவில் பரவிய வைரஸின் அதிகாரப்பூர்வ பெயர் என்ன?

அ. COVID–19

ஆ. CORO–19

இ. n–COR –19

ஈ. NOVEL–19

  • உலக நலவாழ்வு அமைப்பானது (WHO) அண்மையில் சீனாவிலிருந்து பரவிய கொடிய வைரஸ், “COVID-19” என அழைக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. குறிப்பிட்ட இருப்பிடங்கள், விலங்கினங்கள் அல்லது மக்கள் குழுக்கள் பற்றிய குறிப்புகளைத் தவிர்ப்பதற்காகவே அதிகாரப்பூர்வ பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பெயரிடுவதற்கு முன்புவரை அந்த வைரஸுக்கு, “2019-nCoV கடுமையான சுவாசத்தொற்றுநோய்” எனத் தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்தது.
  • அதிகாரப்பூர்வமான இந்தப்பெயரில், ‘CO’ என்பது ‘கொரோனா’, ‘VI’ என்பது ‘வைரஸ்’ மற்றும் ‘D’ என்பது ‘நோய்’ என்பதையும், ‘19’ என்பது ஆண்டையும் குறிக்கிறது.

5.இந்தியா-அமெரிக்க வர்த்தகச்சூழலில், ‘GSP’ என்பது எதைக்குறிக்கிறது?

அ. Globalised System of Preferences

ஆ. Generalized System of Preferences

இ. Globalised System of Partners

ஈ. Generalized System of Partners

  • ஐக்கிய அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளின் அலுவலகம், அண்மையில், இந்தியாவை ஒரு வளர்ந்த பொருளாதாரம் என வகைப்படுத்தியது. ஆனால் இது, ஐக்கிய அமெரிக்காவின் GSP சலுகைகளைப் பெறுவதற்கான தகுதி கிடையாது. பொதுமைப்படுத்தப்பட்ட அமைப்பு விருப்பத்தேர்வுகள் (Generalized System of Preferences – GSP) திட்டமானது வளரும் நாடுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவின் ஏற்றுமதியாளர்களுக்கு, குறைந்த கட்டணத்தை வழங்குகிறது. GSPஇன்கீழ், கடந்த ஜூன் மாதம் வரை கட்டணமில்லா அணுகலை அனுபவித்த மிகப்பெரிய பயனாளி நாடாக இந்தியா உள்ளது.

6.புதிதாக உருவாக்கப்பட்ட விண்வெளி பொதுத்துறை நிறுவனமான நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெடின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

அ. சதீஷ் ரெட்டி

ஆ. K சிவன்

இ. G நாராயணன்

ஈ. கஸ்தூரி ரங்கன்

  • இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (ISRO) புதிதாக உருவாக்கப்பட்ட வணிக நிறுவனமான நியூ ஸ்பேஸ் இந்தியாவின் (NSIL) தலைவராக புகழ்பெற்ற விண்வெளி அறிவியலாளர் G நாராயணன் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இந்த நியமனத்துக்கு முன்பு, திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள ISROஇன் பிரிவான திரவ உந்துவிசை அமைப்புகள் மையத்தில் (LPSC) துணை இயக்குநராக G நாராயணன் பணியாற்றி வந்தார்.
  • விண்வெளி சந்தையை வணிக ரீதியாக ஆராய்வதற்காக, நியூ ஸ்பேஸ் இந்தியா லிட், கடந்த ஆண்டு ISROஇன்கீழ் பொதுத்துறை நிறுவனமாக நிறுவப்பட்டது. சிறு செயற்கைக்கோள் செலுத்திகள் (SSLV) மீது மிகுகவனஞ்செலுத்தி, அதற்கான செலுத்திகளை தயாரிப்பதற்காக NSIL உருவாக்கப்பட்டுள்ளது.

7. ‘PehleSafety’ என்பது எந்தத் தொழினுட்ப நிறுவனத்தின் இணைய பாதுகாப்பு குறித்த பரப்புரையாகும்?

அ. பேஸ்புக்

ஆ. மைக்ரோசாப்ட்

இ. கூகிள்

ஈ. ஆப்பிள்

  • ‘Pehle Safety’ என்ற பெயரில், இணைய பாதுகாப்பு குறித்த புதிய பொதுமக்கள் பங்கேற்பு பரப்புரையை கூகிள் இந்தியா நிறுவனம் அண்மையில் அறிவித்தது. தனது பயனர்களுக்கு இணைய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தெரிவிப்பதற்காக கூகிள் இந்தியா இந்தப் பரப்புரையைத் தொடங்கியுள்ளது. பயனர் தரவின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, பாதுகாப்பு சோதனை மற்றும் கடவுச்சொல் சரிபார்ப்பு போன்ற சக்திவாய்ந்த கருவிகளையும் இது அறிமுகப்படுத்தியுள்ளது.

8.தேசிய குளிர்கால விளையாட்டு நிகழ்வு நடைபெறவிருக்கும் குல்மார்க், எந்த மாநிலம் / யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ளது?

அ. உத்தரகண்ட்

ஆ. அருணாச்சல பிரதேசம்

இ. சிக்கிம்

ஈ. ஜம்மு & காஷ்மீர்

  • குல்மார்க் ஒரு புகழ்பெற்ற பனிச்சறுக்கு விளையாட்டுத்தலமும் இந்திய யூனியன் பிரதேசமான ஜம்மு -காஷ்மீரில் அமைந்துள்ள ஒரு மலைவாழிடமுமாகும். இது, மேற்கு இமயமலையில் உள்ள பிர் பஞ்சால் மலைத்தொடரில் அமைந்துள்ளது. மார்ச் 7 முதல் கெலோ இந்தியாவின்கீழ் ஐந்து நாள் நடைபெறவுள்ள தேசிய குளிர்கால விளையாட்டு நிகழ்வை, குல்மார்க் நகரம் நடத்தவுள்ளது. இதில், முப்பதுக்கும் மேற்பட்ட நிகழ்வுகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

9.வல்லுநர்களின் துணைகொண்டு மாணாக்கரின் ஐயங்களுக்குத் தீர்வுகாண்பதற்காக, அண்மையில், இலவச தொலைபேசி சேவையை அறிமுகப்படுத்திய மாநில அரசு எது?

அ. ஒடிசா

ஆ. உத்தர பிரதேசம்

இ. மேற்கு வங்கம்

ஈ. ஹரியானா

  • உத்தரபிரதேச மாநில அரசானது அண்மையில், பொதுத் தேர்வுகளுக்கு முன்னதாக மாணாக்கரின் ஐயங்களுக்குத் தீர்வுகாண்பதற்காக ஓர் இலவச தொலைபேசி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மத்தியமிக் சிக்ஷ பரிஷத்தின் மூத்த அதிகாரி இதன் முக்கிய அதிகாரியாக நியமிக்கப்பட் -டுள்ளார். மாணாக்கரின் ஐயங்கள், கல்வியாளர்கள் மற்றும் பல்வேறு பாடங்களின் வல்லுநர்களின் துணைகொண்டு தீர்க்கப்படும்.

10. ‘We Think Digital’ என்பது எந்தப் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனத்தின் டிஜிட்டல் கல்வியறிவு குறித்த திட்டமாகும்?

அ. கூகிள்

ஆ. பேஸ்புக்

இ. ஆப்பிள்

ஈ. அமேசான்

  • ‘We Think Digital’ என்பது தொழில்நுட்ப நிறுவனமான பேஸ்புக்கின் டிஜிட்டல் கல்வியறிவு திட்டமாகும். இணையவெளியில் பாலின ஏற்றத்தாழ்வை நீக்கும் நோக்கில் கடந்த 2019ஆம் ஆண்டில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. சமீபத்தில், தேசிய பெண்கள் ஆணையம் மற்றும் இணைய அமைதி அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து உத்தரபிரதேச மாநிலத்தில், ‘We Think Digital’ என்ற திட்டத்தை பேஸ்புக் அறிமுகப்படுத்தியது. இந்தியாவின் ஏழு மாநிலங்களில் கிட்டத்தட்ட 1,00,000 பெண்களுக்கு டிஜிட்டல் கல்வியறிவை வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!