Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

13th January 2021 Tnpsc Current Affairs in Tamil & English

13th January 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 13th January 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

13th January 2021 Tnpsc Current Affairs in Tamil

1. பின்வரும் எத்துறையில், ‘ஒற்றைச்சாளர ஒப்புதல் அமைப்பை’ உள்துறை அமைச்சர் தொடங்கவுள்ளார்?

அ) நிலக்கரி சுரங்கங்கள்

ஆ) DISCOM

இ) எஃகு ஆலை

ஈ) செப்பு சுரங்கங்கள்

  • இந்தியாவில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு ஒப்புதலையும், அனுமதியையும் அளிப்பதற்கான ஒற்றைச்சாளர தளத்தை மத்திய நிலக்கரி அமைச்சகம் தொடங்கியுள்ளது.‌ மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இத் தளத்தைத் தொடங்கிவைத்தார். இந்தியாவின் நிலக்கரி துறையில் எளிதான வர்த்தகத்தை மேற்கொள்வதற்கு இது அடித்தளமாக அமையும்.

2. தேசிய இளையோர் நாடாளுமன்ற விழாவின் முதலாவது பதிப்பு, எந்த ஆண்டில் நடைபெற்றது?

அ) 2015

ஆ) 2017

இ) 2019

ஈ) 2020

  • முதல் தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவானது 2019 பிப்ரவரி மாதம் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தத் திருவிழாவின் இரண்டாவது பதிப்பு, 2020 டிசம்பரில் தொடங்கப்பட்டது.
  • மாவட்ட மற்றும் மாநில அளவிலான நிகழ்வுகளுக்குப் பிறகு, இறுதி நிகழ்வு சமீபத்தில் நாடாளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் நடைபெற்றது. 18 முதல் 25 வயது வரையிலான இளைஞர்கள் தேசிய நடுவர் மன்றத்தின் முன் பேசுவார்கள், அவர்களில் மூன்று பேர் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள்.

3. எந்த அதிவேக ரயில் திட்டத்திற்காக, நொய்டாவிலிருந்து LiDAR ஆய்வு தொடங்கப்பட்டது?

அ) தில்லி-வாரணாசி அதிவேக இரயில் வழித்தடம்

ஆ) தில்லி-பாட்னா அதிவேக இரயில் வழித்தடம்

இ) மும்பை – அகமதாபாத் அதிவேக இரயில் வழித்தடம்

ஈ) சென்னை-பெங்களூரு அதிவேக இரயில் வழித்தடம்

  • தில்லி-வாரணாசி அதிவேக இரயில் வழித்தடம் அமைப்பதற்கான ஆய்வுப்பணி பெருநகர நொய்டாவிலிருந்து தொடங்கப்பட்டது. இதன் படி, ஹெலிகாப்டர்மீது லேசர் கருவிகள் பொருத்தப்பட்டு கள ஆய்வு தொடர்பான தரவுகள் சேகரிக்கப்பட்டன.‌
  • தேசிய அதிவேக இரயில் கழகம், LiDAR தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மூன்று – நான்கு மாதங்களுக்குள் களம் தொடர்பான தகவல்களையும், தரவுகளையும் சேகரிக்கிறது. நுண்ணிய விவரங்களை சேகரிப்பதற்காக இந்த ஆய்வு, 60 மெகாபிக்சல் கேமராக்களைப் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

4. உலக ஹிந்தி நாளானது, எந்த நகரத்தில் நடந்த முதல் உலக ஹிந்தி மாநாட்டின் ஆண்டுநிறைவை நினைவுகூர்கிறது?

அ) வாரணாசி

ஆ) நாக்பூர்

இ) புனே

ஈ) தில்லி

  • ஒவ்வோர் ஆண்டும் ஜன.10 அன்று உலக ஹிந்தி நாள் கொண்டாடப் -படுகிறது. இது விஸ்வ ஹிந்தி திவாஸ் என்றும் அழைக்கப்படுகிறது, இது, 1975ஆம் ஆண்டு இதே நாளில் நாக்பூரில் நடைபெற்ற முதல் உலக ஹிந்தி மாநாட்டின் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.
  • உலக ஹிந்தி நாள் முதன்முதலில் கடந்த 2006ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. ஹிந்தி, நாட்டின் அதிகம் பேசப்படும் மொழி மட்டுமல்ல மேலும், உலகிலேயே அதிகம் பேசப்படும் மூன்றாவது மொழியுமாகும்.

5. இந்திய புவியியல் ஆய்வுமையத்தின் கூற்றுப்படி, எந்த இந்திய மாநிலத்தில் வனேடியம் (Vanadium) இருப்பு இருக்கக்கூடும்?

அ) ஜார்க்கண்ட்

ஆ) பீகார்

இ) அருணாச்சல பிரதேசம்

ஈ) ஒடிசா

  • இந்திய புவியியல் ஆய்வு மையமானது (GIS) அருணாச்சல பிரதேச மாநிலத்தை ஆராய்ந்து வருகிறது. அம்மாநிலம் இந்தியாவின் பிரதான வனேடியம் இருப்புக்கொண்ட மாநிலமாக இருக்கலாம் என GIS கூறியுள்ளது.
  • வனேடியம் என்பது எஃகு மற்றும் டைட்டானியத்தை வலுப்படுத்த பயன்படும் ஓர் உயர்-மதிப்புடைய உலோகமாகும். வனாடிஃபெரஸ் காந்தத்தாதுக்களை செயலாக்கும்போது சேகரிக்கப்படும் கசடுகளில் இருந்து, இது ஒரு துணைப்பொருளாக சேகரிக்கப்படுகிறது.

6.ஃபின்டெக் புத்தாக்க மையத்தை அமைப்பதற்காக கான்பூர் IITஉடன் கூட்டினைந்துள்ள இந்திய வங்கி?

அ) பாரத வங்கி

ஆ) கனரா வங்கி

இ) பஞ்சாப் தேசிய வங்கி

ஈ) ICICI வங்கி

  • நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் தேசிய வங்கியானது ஃபின்டெக் புத்தாக்க மையத்தை நிறுவுவதற்
    -காக IIT கான்பூர் மற்றும் FIRST (அறிவியல் & தொழில்நுட்பத்தில் புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சிக்கான அறக்கட்டளை) உடன் கூட்டு சேர்ந்துள்ளது. IIT வளாகத்திலேயே இம்மையம் நிறுவப்படும். அது, வங்கி மற்றும் நிதித்துறையில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப தீர்வுகளின் மீதான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு உதவும்.

7. அண்மையில் வெளியான, “India’s 71-Year Test: The Journey to Triumph in Australia” என்ற நூலின் ஆசிரியர் யார்?

அ) R கெளஷிக்

ஆ) VVS லக்ஷ்மன்

இ) ஹர்பஜன் சிங்

ஈ) சுனில் கவாஸ்கர்

  • இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரும், இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரருமான ரவி சாஸ்திரி, “India’s 71-Year Test: The Journey to Triumph in Australia” என்ற தலைப்பில் நூலொன்றை வெளியிட்டார்.
  • இந்நூலை கிரிக்கெட் பத்திரிகையாளர் R கெளசிக் எழுதியுள்ளார். இது, பிராட்மேன் அருங்காட்சியகத்தின் ஒரு முன்னெடுப்பாகும். இது, ஆஸ்திரேலியாவுக்கான இந்தியாவின் முதல் பன்னிரண்டு சுற்றுப் பயணங்களை விவரிக்கிறது. பிராட்மேன் அருங்காட்சியகத்தில் இருந்து 200’க்கும் மேற்பட்ட அரிய படங்களும் இந்நூலில் அடங்கும். சிட்னி மைதானத்தில் முன்னாள் இந்திய அணித் தலைவர் சுனில் கவாஸ்கரின் உருவப்படம் வெளியிடப்பட்டது.

8. 16ஆவது பிரவாசி பாரதிய திவாஸின் கருப்பொருள் என்ன?

அ) Contributing to Aatmanirbhar Bharat

ஆ) Redefining engagement with the Indian diaspora

இ) Role of Indian Diaspora in building a New India

ஈ) Contributing to New India

  • ஜன.9 அன்று பிரவாசி பாரதிய திவாஸின் 16ஆவது பதிப்பை பிரதமர் மோடி மெய்நிகராக திறந்து வைத்தார். வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்திய சமூக-பொருளாதார வளர்ச்சியின் ஒருபகுதியாக திகழ்வதற்கு அவர்களை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • “தற்சார்பு இந்தியாவுக்கு பங்களியுங்கள்” என்பது நடப்பாண்டு (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். சுரினாம் குடியரசின் தலைவர், இதன்போது முக்கிய குறிப்புரையை வழங்கினார்.

9. எந்த ஆயுதப்படையின் புதிய தலைமை இயக்குநராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் பொறுப்பேற்றுள்ளார்?

அ) CISF

ஆ) CRPF

இ) ITBP

ஈ) NSG

  • மூத்த IPS அதிகாரியான சுபோத் குமார் ஜெய்ஸ்வால் மத்திய தொழிலக பாதுகாப்புப்படையின் (CSIF) புதிய தலைமை இயக்குநராக பொறுப்பே -ற்றார். 2019 முதல் அவர் மகாராஷ்டிரா காவல்துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். முன்னதாக நாட்டின் சிறப்பு பாதுகாப்புக் குழுவில் பணியாற்றிய அவர், பிரதமரைப் பாதுகாத்தார்.

10. சுய-உதவிக்குழுக்களுக்கு உதவுவதற்காக, பின்வரும் எந்த வங்கி, ‘NABFOUNDATION’ உடன் கூட்டிணைந்துள்ளது?

அ) பாரத வங்கி

ஆ) கனரா வங்கி

இ) சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா

ஈ) ICICI வங்கி

  • சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா ஆனது NABFOUNDATION உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா தன்னுடன் கணக்கு வைத்திருக்கும் சுய-உதவிக்குழுக்களுக்கு இணையற்ற செயல்பாட்டு மூலதனத்தை வழங்கும் மற்றும் NABARD நிதியுதவி வழங்கும் ‘My Pad My Right’ திட்டத்தை நடத்தும். NABFOUNDATION என்பது NABARD’இன் ஓர் இணை அமைப்பாகும்.

1. Union Home Minister is to launch the ‘Single Window Clearance System’ in which sector?

A) Coal Mines

B) DISCOMs

C) Steel Plants

D) Copper Mines

  • Union Home Minister Amit Shah is set to launch the ‘Single Window Clearance System’, for coal mines. It is an online platform to obtain clearances for smooth and seamless functioning of coal mines. Union Minister of Coal Pralhad Joshi will also attend the virtual ceremony.

2. The first edition of National Youth Parliament Festival was held in which year?

A) 2015

B) 2017

C) 2019

D) 2020

  • The first National Youth Parliament Festival (NYPF) was organised in February 2019 at District, State and National levels. The second edition of the festival was launched in the month of December 2020.
  • After District and State–level events, the final event was held recently Central Hall of Parliament. Youth between 18 to 25 years will speak before the National jury and out of them, three will be declared winners.

3. The LiDAR survey was started for which high speed rail project, from Noida?

A) Delhi–Varanasi High–Speed Rail Corridor

B) Delhi–Patna High–Speed Rail Corridor

C) Mumbai–Ahmedabad High Speed Rail Corridor

D) Chennai–Bengaluru High Speed Rail Corridor

  • The Light Detection and Ranging Survey (LiDAR) for Delhi–Varanasi High–Speed Rail (DVHSR) Corridor was recently started from Greater Noida.
  • Under the survey, a helicopter is fitted with the Aerial LiDAR and imagery sensors. The first flight captured the data and details related to ground survey in three–four months. The survey uses 60–megapixel cameras, to capture minute details.

4. World Hindi Day commemorates the anniversary of first World Hindi Conference held in which city?

A) Varanasi

B) Nagpur

C) Pune

D) Delhi

  • World Hindi Day is celebrated every year on January 10. Also known as the Vishwa Hindi Divas, it commemorates the anniversary of the first World Hindi Conference held in Nagpur on the same day in 1975.
  • World Hindi Day was first celebrated in the year 2006. Hindi is not most–spoken language of the country, and also the third most–spoken language in the world.

5. As per Geological Survey of India (GSI), which Indian state could contain Vanadium Deposits?

A) Jharkhand

B) Bihar

C) Arunachal Pradesh

D) Odisha

  • Geological Survey of India (GSI) has been exploring the state of Arunachal Pradesh and said that it could be India’s prime producer of vanadium.
  • Vanadium is a high–value metal used for strengthening steel and titanium. The Geologists assured that a deposit will be soon identified. It is recovered as a by–product from the slag collected during the processing of vanadiferous magnetite ores.

6. Which Indian bank has collaborated with IIT Kanpur to set up a Fintech Innovation Centre (FIC)?

A) State Bank of India

B) Canara Bank

C) Punjab National Bank

D) ICICI Bank

  • The country’s second largest public sector bank, Punjab National Bank has partnered with IIT Kanpur and FIRST (Foundation for Innovation & Research in Science & Technology), to establish Fintech Innovation Centre (FIC).
  • The Innovation centre will be set up at the IIT campus, which will facilitate research and development in technological solutions used in the Banking and Finance Sector.

7. Who is the author of the book titled ‘India’s 71–Year Test: The Journey to Triumph in Australia’, which was released recently?

A) R Kaushik

B) VVS Lakshman

E) Harbajan Singh

D) Sunil Gavaskar

  • The head coach of Indian cricket team and former India all–rounder Ravi Shastri launched a book titled ‘India’s 71–Year Test: The Journey to Triumph in Australia’. The book is authored by the cricket journalist R Kaushik and it is an initiative of Bradman Museum.
  • It describes the first 12 tours of India to Australia. It also includes over 200 rare pictures from the Bradman Museum. A portrait of former Indian captain Sunil Gavaskar was unveiled at the Sydney Ground.

8. What is the theme of the 16th edition of Pravasi Bharatiya Divas?

A) Contributing to Aatmanirbhar Bharat

B) Redefining engagement with the Indian diaspora

C) Role of Indian Diaspora in building a New India

D) Contributing to New India

  • Prime Minister Narendra Modi is inaugurating the 16th edition of Pravasi Bharatiya Divas on January 9, virtually.
  • It aims to encourage the Indian diaspora to be part of socio–economic development in India. The theme of this year’s convention is “Contributing to Aatmanirbhar Bharat”. President of the Republic of Suriname is to deliver the key note address.

9. Subodh Kumar Jaiswal has taken charge as the new Director General of which armed force?

A) CISF

B) CRPF

C) ITBP

D) NSG

  • Veteran IPS Officer Subodh Kumar Jaiswal took charge as the new Director General of the Central Industrial Security Force (CISF).
  • He was serving as the DGP heading the Maharashtra Police since 2019. He had earlier served with the Special Protection Group (SPG) of the country, securing the Prime Minister.

10. Which bank has partnered with NABFOUNDATION to assist self–help groups?

A) State Bank of India

B) Canara Bank

C) Central Bank of India

D) ICICI Bank

  • Central Bank of India (CBoI) has entered into a Memorandum of Understanding (MoU) with NABFOUNDATION.
  • As per the MoU, CBoI will provide collateral–free working capital to those self–help groups having an account with it and are undertaking the Nabard–sponsored ‘My Pad My Right’ project. NABFOUNDATION, which is a wholly–owned subsidiary of NABARD.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!