Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

13th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

13th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 13th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

July Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

13th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. கங்கையாற்று வடிநிலத்தின் ஒருபகுதியாக இருக்கும் பனிப் பாறை ஏரிகளின் வரைபடத்தை புதுப்பித்துள்ள அமைச்சகம் எது?

அ) ஜல் சக்தி அமைச்சகம்

ஆ) சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம்

இ) உள்துறை அமைச்சகம்

ஈ) பாதுகாப்பு அமைச்சகம்

  • கங்கையாற்று வடிநிலத்தின் ஒருபகுதியாக இருக்கும் பனிப்பாறை ஏரிகளின் புதுப்பிக்கப்பட்ட வரைபடத்தொகுப்பை நடுவண் ஜல் சக்தி அமைச்சகம் அண்மையில் வெளியிட்டது. இந்த வரைபடத்தொகுப்பை பொருத்தவரை, கங்கையாற்று வடிநிலத்தில் 4,707 பனிப்பாறை ஏரிகள் வரைபடமாக்கப்பட்டுள்ளன. அவை மொத்தம் 0.25 ஹெக்டேருக்கு மேல் பரவியுள்ளன. இதற்காக ரிசோர்ஸ்ஸாட்-2 பயன்படுத்தப்பட்டுள்ளது.

2. 2021 ஜூலை.3 அன்று கொண்டாடப்பட்ட பன்னாட்டு கூட்டுறவு நாளுக்கான கருப்பொருள் என்ன?

அ) Cooperatives for a Better World

ஆ) Cooperatives for Yesterday, Today and Tomorrow

இ) Cooperatives for Every Community

ஈ) Rebuild Better Together

  • பன்னாட்டு கூட்டுறவு நாளானது 2021 ஜூலை.3 அன்று “Rebuild Better Together” என்ற கருப்பொருளின்கீழ் கொண்டாடப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதத்தில் வரும் முதல் சனிக்கிழமையன்று இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

3. சமீபத்தில் உத்தரகண்ட் மாநிலத்தின் 11ஆவது மற்றும் இளம் முதல்வருமான புஷ்கர் சிங் தாமி சார்ந்த தொகுதி எது?

அ) சம்பாவத்

ஆ) சித்தர்கஞ்ச்

இ) காதிமா

ஈ) கோட்வார்

  • கடந்த 1975ஆம் ஆண்டில் பிறந்தவரான புஷ்கர் சிங் தாமி அண்மையில் உத்தரகண்ட் மாநிலத்தின் 11ஆவது மற்றும் இளம் முதல்வராக ஆனார். அவர் உத்தம் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள காதிமா தொகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

4. BOLD திட்டம் (வறண்ட நிலங்களில் மூங்கில் சோலை) சமீபத்தில் இந்தியாவில் எந்த மாநிலத்திலிருந்து தொடங்கப்பட்டது?

அ) குஜராத்

ஆ) இராஜஸ்தான்

இ) ஹரியானா

ஈ) மத்திய பிரதேசம்

  • இராஜஸ்தானில் பழங்குடியினர் வருவாய் மற்றும் மூங்கில்சார்ந்த பொருளாதாரத்தை ஊக்குவிக்க வறண்ட நிலத்தில் மூங்கில் சோலை திட்டம் என்ற தனித்துவமான திட்டத்தை காதி மற்றும் கிராமத்தொழில் ஆணையம் தொடங்கியுள்ளது.
  • பாலைவனப்பகுதியை குறைக்கவும், வாழ்வாதாரத்தை அளிக்கவும், பல் நோக்கு ஊரக தொழில் உதவியை காதி மற்றும் கிராமத்தொழில் ஆணையம் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்துக்கு வறண்ட நிலத்தில் மூங்கில் சோலை (Bamboo Oasis on Lands in Drought (BOLD) எனப் பெயரிடப்பட்டுள்ளது. நாட்டில் முதன்முறையாக இத்திட்டம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் நிக்லாமண்டவா என்ற பழங்குடியின கிராமத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
  • நாட்டின் 75ஆவது விடுதலை ஆண்டை கொண்டாட காதி கிராமத் தொழில் ஆணையம் நடத்தும் ‘காதி மூங்கில் திருவிழா’வின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இதே திட்டத்தை குஜராத் ஆமதாபாத் மாவட்டத்திலுள்ள தோலேரா கிராமம் மற்றும் லே-லடாக் பகுதியிலும் காதி கிராமத் தொழில் ஆணையம் இந்தாண்டு ஆகஸ்டுக்குள் தொடங்கவுள்ளது. ஆக.21ஆம் தேதிக்கு முன்பாக மொத்தம் 15,000 மூங்கில் கன்றுகள் நடப்படும்.

5. அண்மையில் பதவி நீட்டிப்பு அளிக்கப்பட்ட அமிதாப் காந்த், பின்வரும் எந்தப் பதவியை வகித்து வருகிறார்?

அ) SBI தலைவர்

ஆ) NITI ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி

இ) துணைத் தேர்தல் ஆணையர்

ஈ) தலைமைக் கணக்கு தணிக்கை அதிகாரி

  • NITI ஆயோக்கின் தலைமைச் செயல் அதிகாரியாக (CEO) அமிதாப் காந்த், பணியாற்றிவருகிறார். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை நியமனக்குழு, அமிதாப் காந்தின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டு காலத்திற்கு நீட்டித்துள்ளது. 2016ஆம் ஆண்டில், அவர், NITI ஆயோக்கில் சேர்ந்த பிறகு, அவர் பெறும் மூன்றாவது நீட்டிப்பு இதுவாகும்.

6. உலகளாவிய இணையவெளிப் பாதுகாப்பு குறியீடு – 2020’இல் இந்தியா அடைந்துள்ள தரநிலை என்ன?

அ) 35

ஆ) 25

இ) 16

ஈ) 10

  • உலகளாவிய இணையவெளிப் பாதுகாப்பு குறியீடு – 2020’ஐ ஐநா’இன் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU) அறிமுகப்படுத்தியுள்ளது. முதன்முறையாக பட்டியலின் முதல் பத்து இடங்களுக்குள் இந்தியா இடம்பெற்றுள்ளது.
  • முதன்மை இணையவெளிப்பாதுகாப்பு அளவுருக்களில் உலகின் 10ஆம் சிறந்த நாடாக இடம்பெறுவதற்கு, இந்தியா, 37 இடங்கள் முன்னேறி வந்துள்ளது. இக்குறியீட்டில் அமெரிக்கா முதலிடத்திலும், இங்கிலாந்து (UK) மற்றும் சௌதி அரேபியா (UAE) ஆகியன இரண்டாவது இடத்திலும், எஸ்தோனியா மூன்றாவது இடத்திலும் உள்ளன.

7. தேசிய விண்வெளிப் போக்குவரத்துக் கொள்கையை வெளியிட்ட துறை எது?

அ) விண்வெளித் துறை

ஆ) தகவல் தொழில்நுட்பத் துறை

இ) தகவல் தொடர்புத் துறை

ஈ) தளவாடங்கள் துறை

  • இந்திய அரசின் விண்வெளித் துறையானது அண்மையில் வரைவு விண்வெளி போக்குவரத்துக் கொள்கையை கொண்டு வந்துள்ளது. விண்வெளி தொழில்நுட்பத்தில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் இது உள்ளது. பசுமை எரிபொருள், ரோபோட்டிக் விண்வெளி ஆய்வு மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஏவுகலங்கள் ஆகியவற்றில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு இந்தக்கொள்கை சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது.

8. இந்தியாவில் GST வரிவிதிப்பு முறை செயல்படுத்தப்பட்ட தேதி எது?

அ) 2019 ஜூன் 01

ஆ) 2018 ஜூலை 01

இ) 2017 ஜூலை 01

ஈ) 2018 ஆகஸ்ட் 15

  • 2021 ஜூலை.1 – சரக்கு மற்றும் சேவை வரியின் (GST) 4ஆம் ஆண்டு நிறைவைக்குறிக்கிறது. கடந்த 2017 ஜூலை.1ஆம் தேதியன்று GST வரி விதிப்புமுறை செயல்படுத்தப்பட்டது. இத்தேதியை, நடுவணரசு, GST நாளாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டு (2021) GST நாளைக் குறிக்கும் வகையில், சரியான நேரத்தில் வரிதாக்கல்செய்த 54,000 GST வரி செலுத்துபவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்க நடுவண் நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

9. எந்த நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி, அண்மையில் தனது 100ஆவது நிறுவன ஆண்டைக் கொண்டாடியது?

அ) இந்தியா

ஆ) சீனா

இ) ஜப்பான்

ஈ) தைவான்

  • சீனத்தின் கம்யூனிஸ்ட் கட்சியானது அண்மையில் தனது நூறாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. அது சீன நாட்டின் தியனன்மென் சதுக்கத்தில் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், வானை நோக்கி 100 குண்டுகள் முழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங், நாட்டின் எழுச்சியை உறுதிசெய்யும் ஒரே ஆற்றல் கட்சி கம்யூனிஸ்ட் மட்டுமே என்று உரையாற்றினார்.

10. ‘COVID-19 மற்றும் சுற்றுலா’ என்ற தலைப்பிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பன்னாட்டு அமைப்பு எது?

அ) IMF

ஆ) UNCTAD

இ) WHO

ஈ) UNESCO

  • ஐநா வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அமைப்பானது (UNCTAD) சமீபத்தில் “COVID-19 மற்றும் சுற்றுலா” என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, உலகின் சுற்றுலாத்துறையானது குறைந்தது $1.2 டிரில்லியன் டாலர்கள் அல்லது உலகின் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 1.5% அளவுக்கு இழக்கக்கூடும்.
  • பன்னாட்டளவிலான சுற்றுலாவின் இடைவெளி எட்டு மாதங்களுக்கும் மேல் நீடித்தால், இந்த இழப்பு, $2.2 டிரில்லியன் அமெரிக்க டாலர் அல்லது உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.8%ஆக உயரக்கூடும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. கட்டாய ஹால்மார்க் திட்டம் அமல்: அதிக மாவட்டங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம்

தங்க நகைகளின் தரத்தை நிர்ணயிக்கும் ஹால்மார்க் முத்திரையை கட்டாயமாக்கும் முதல்கட்டத் திட்டத்தில் தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிர மாநிலங்களைச் சேர்ந்த அதிக மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஜூன்.16 முதல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரையிடுவதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.

இதுதொடர்பாக நடுவண் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘கட்டாய ஹால்மார்க் திட்டம்’ 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 256 மாவட்டங்களில் முதல்கட்டமாக செயல்படுத்தப்படுகிறது. இதில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களும், குஜராத்தில் 23 மாவட்டங்களும், மேற்கு வங்கம் மற்றும் உத்தர பிரதேசத்தில் 19 மாவட்டங்களும் இடம்பெற்றுள்ளன.

தில்லி, தெலங்கானா, ஆந்திர பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலா 12 மாவட்டங்களும், கேரளத்தில் 13 மாவட்டங்களும், கர்நாடகத்தில் பதினான்கு மாவட்டங்களும், ஹரியானாவில் 15 மாவட்டங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் 14, 18, 22 காரட் தங்க நகைகள் மட்டும் ஹால்மார்க் முத்திரையுடன் விற்பனை செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (BIS) 2000, ஏப்ரல் மாதம் முதல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை வழங்கி வருகிறது. தற்போது சுமார் 40 சதவீத தங்க நகைகள் ஹால்மார்க் முத்திரையிடப்படுகின்றன. இந்தியாவில் சுமார் 4 லட்சம் தங்கநகை வியாபாரிகள் உள்ளனர். இதில் 35,879 பேர் மட்டுமே BIS தரச்சான்றிதழ் பெற்றுள்ளனர். ஆண்டுதோறும் 700-800 டன் தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்வதாக உலக தங்க கவுன்சில் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

2. பிஎம்சி வங்கியை கையகப்படுத்தி ‘ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்’ அமைக்க ஒப்புதல்: நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி தகவல்

மோசடியில் சிக்கிய பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு (பிஎம்சி) வங்கியை விரைவில் கையகப்படுத்தி ‘ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்’ அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தில்லி உயர்நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பிஎம்சி வங்கி தொடர்பான வழக்கு தில்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் டி என் பாட்டீல், ஜோதி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

3. `9,695 கோடியில் நீர்மின்னுற்பத்தி திட்டம்: இந்தியாவுடன் நேபாளம் ஒப்பந்தம்

நேபாளத்தில் 679 மெகாவாட் உற்பத்தித் திறனுடன் கூடிய நீர் மின் திட்டத்தை அமைத்துத் தருவதற்கான `9,695 கோடி ஒப்பந்தத்தை அந்நாடு இந்தியாவுடன் மேற்கொண்டுள்ளது. இது அந்த நாட்டுடன் இந்தியா மேற்கொள்ளும் இரண்டாவது மிகப்பெரிய திட்டமாகும்.

முன்னதாக, அந்த நாட்டில் 900 மெகாவாட் உற்பத்தித் திறனுடன் கூடிய அருண்-3 நீர்மின் திட்டத்தை அமைத்துத் தருவதற்கான `7,756 கோடி ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டது. இப்போது, கிழக்கு நேபாளத்தில் சங்குவசபா மற்றும் போஜ்பூர் மாவட்டங்களுக்கு இடையே அமைந்துள்ள கீழ் அருண் நதியில் 679 மெகா வாட் நீர் மின் நிலையத்தை அமைத்துத் தருவதற்காக இந்தியாவின் சட்லஜ் ஜல் வித்யத் நிகாம் நிறுவனத்துடன் நேபாளம் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இதன் திட்ட மதிப்பு `9,695 கோடியாகும். கடந்த 2017ஆம் ஆண்டு விலை நிலவரத்தின் அடிப்படையில் இந்தத் திட்ட மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

1. Which Ministry has updated the atlas of glacial lakes that are part of the Ganga River basin?

A) Ministry of Jal Shakti

B) Ministry of Environment, Forest and Climate Change

C) Ministry of Home Affairs

D) Ministry of Defence

  • The Union Ministry of Jal Shakti has recently released the updated atlas of glacial lakes that are part of the Ganga River basin. As per the atlas, 4,707 glacial lakes have been mapped in the Ganga basin which have a spread area greater than 0.25 ha. Resourcesat–2 (RS–2) has been used for this purpose.

2. What was the theme of International Day of Cooperatives celebrated on July 3, 2021?

A) Cooperatives for a Better World

B) Cooperatives for Yesterday, Today and Tomorrow

C) Cooperatives for Every Community

D) Rebuild better together

  • The International Day of Cooperatives was celebrated on July 3, 2021 under the theme of ‘Rebuild better together’. The day is celebrated every year on first Saturday of July.

3. Pushkar Singh Dhami, who recently became 11th and youngest CM of Uttarakhand, is an MLA from which constituency?

A) Champawat

B) Sitarganj

C) Khatima

D) Kotdwar

  • Pushkar Singh Dhami (born 1975) has recently become the 11th and youngest Chief Minister of Uttarakhand. He is a member of the Uttarakhand Legislative Assembly from the Khatima constituency in Udham Singh Nagar district.

4. The Project BOLD (Bamboo Oasis on Lands in Drought) was recently launched from which state in India recently?

A) Gujarat

B) Rajasthan

C) Haryana

D) Madhya Pradesh

  • The Project BOLD (Bamboo Oasis on Lands in Drought) is a project of Khadi and Village Industries Commission (KVIC) that seeks to create bamboo–based green patches in arid and semi–arid land zones.
  • It was launched on July 4, 2021 from tribal village Nichla Mandwa in Udaipur, Rajasthan. It is unique and first of its kind scientific exercise serving the combined national objectives of reducing desertification and providing livelihood and multi–disciplinary rural industry support.
  • It has been launched as part of KVIC’s “Khadi Bamboo Festival” to celebrate 75 years of independence “Azadi ka Amrit Mahotsav”. KVIC is set to replicate the Project at Village Dholera in Ahmedabad district in Gujarat and Leh–Ladakh region by August this year. Total 15,000 bamboo saplings will be planted before August, 2021.

5. Which post is held by Amitabh Kant, whose tenure has been extended?

A) SBI Chairman

B) NITI Aayog CEO

C) Deputy Election Commissioner

D) Comptroller and Auditor General

  • Amitabh Kant is serving as the Chief Executive Officer (CEO) of Indian Government think tank NITI Aayog. The Appointments Committee of the Cabinet (ACC), chaired by Prime Minister Narendra Modi, has extended the tenure of Amitabh Kant to another one year. This is the third extension since he joined the NITI Aayog in 2016.

6. What is the rank of India in the Global Cybersecurity Index 2020?

A) 35

B) 25

C) 16

D) 10

  • Global Cybersecurity Index (GCI) 2020 has been launched by the International Telecommunication Union (ITU), a UN body. India has entered the top–10 list for the first time. It has moved up 37 places to be placed in the 10th best country in the world on key cyber–safety parameters. The US topped the index, followed by the UK and Saudi Arabia at the second position, and Estonia at third in the index.

7. Which Department released the national space transportation policy?

A) Department of Space

B) Department of Information Technology

C) Department of Communication

D) Department of Logistics

  • The Department of Space, Government of India has recently come out with the draft space transportation policy, under which it has encouraged private participation in space technology. The policy also lays special emphasis on Research and Development in green fuel, robotic space exploration and reusable rockets.

8. When was the GST system of taxation implemented in India?

A) 2019 June 01

B) 2018 July 01

C) 2017 July 01

D) 2018 August 15

  • July 1st 2021 marks the 4th anniversary of the Goods and Services Tax (GST), which was implemented on the same date in 2017. This date has been designated by the Central Government as GST DAY.
  • This year, the Union Finance Ministry has proposed to issue certificates of appreciation to 54,000 GST payers for timely filing of returns to mark the GST Day.

9. The Communist Party of which country has celebrated its 100th foundation year recently?

A) India

B) China

C) Japan

D) Taiwan

  • China’s Communist Party has marked the 100th year of its inception recently. This was celebrated in a huge way at the country’s Tiananmen Square. To mark this event, a 100–gun salute was made. Speaking at the occasion, the China’s leader Xi Jinping addressed that the party was the only force capable of ensuring the country’s rise.

10. Which international organisation has released the report titled ‘COVID–19 and Tourism’?

A) IMF

B) UNCTAD

C) WHO

D) UNESCO

  • The United Nation’s trade and development body, UNCTAD (United Nations Conference on Trade and Development) has recently released a report ‘COVID–19 and Tourism’.
  • As per the report, the world’s tourism sector could lose at least USD 1.2 trillion or 1.5% of the global gross domestic product (GDP). If the break in international tourism lasts for 8 months, the loss could rise to USD 2.2 trillion or 2.8% of the global GDP.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!