TnpscTnpsc Current Affairs

13th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 13th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

June Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

 

1. ‘ஷாங்க்ரி–லா பேச்சுவார்த்தையை (ஆசிய பாதுகாப்பு உச்சிமாநாடு) நடத்தும் நாடு எது?

அ. சீனா

ஆ. சிங்கப்பூர் 

இ. மலேசியா

ஈ. ஐக்கிய அரபு அமீரகம்

 • COVID–19 தொற்றுநோய்க்கு ஈராண்டுகளுக்குப் பிறகு, பன்னாட்டு உத்திசார் ஆய்வுகளுக்கான நிறுவனம் (IISS) நடத்திய 19ஆவது ஷாங்க்ரி–லா பேச்சுவார்த்தை சிங்கப்பூரில் தொடங்கியது. ஆசியாவின் முக்கியமான பாதுகாப்பு உச்சிமாநாடுகளுள் ‘ஷாங்ரி–லா’ வருடாந்திர பேச்சுவார்த்தையும் ஒன்றாகும். பிராந்தியத்தின் மிக முக்கியமான பாதுகாப்பு சவால்கள்குறித்து அமைச்சர்கள் விவாதிக்கும் தனித்துவமான கூட்டம் இது. இது 2002–இல் சிங்கப்பூர் அரசாங்கத்தின் ஆதரவுடன் பிரிட்டிஷ் மதியுரையகமான IISS–ஆல் தொடங்கப்பட்டது. ‘ஷாங்ரி–லா’ பேச்சுவார்த்தை ஆனது அதிகாரப்பூர்வமாக ஆசிய பாதுகாப்பு உச்சிமாநாடு என்று அழைக்கப்படுகிறது.

2. ‘சுரக்ஷா–மித்ரா திட்டம்’ என்ற வாகன கண்காணிப்பு அமைப்பை அறிமுகப்படுத்திய இந்திய மாநிலம் எது?

அ. தெலுங்கானா

ஆ. கேரளா 

இ. ஒடிஸா

ஈ. குஜராத்

 • கேரள மாநில போக்குவரத்து அமைச்சகம், ‘சுரக்ஷா–மித்ரா திட்டம்’ என்ற பெயரில் வாகன கண்காணிப்பு அமைப்பை அறிமுகப்படுத்தியது. ஏதேனும் இடர் ஏற்பட்டால், உரிமையாளரின் கைபேசிக்கு அதுகுறித்து செய்தியை இவ்வமைப்பு அனுப்புகிறது. நிர்பயா திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், சாலைப் பயணத்தை பாதுகாப்பானதாக்கும் நோக்கில் அம்மாநிலத்தில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

3. இதுவரை வெளியிட்டதிலேயே நிலவின் மிக விரிவான நிலப்பொதியியல் வரைபடத்தை வெளியிட்ட நாடு எது?

அ. அமெரிக்கா

ஆ. ரஷ்யா

இ. சீனா 

ஈ. இஸ்ரேல்

 • நிலவின் மிக விரிவான நிலப்பொதியியல் வரைபடத்தை சீனா வெளியிட்டுள்ளது. அதில் நிலவின் பள்ளங்கள் மற்றும் கட்டமைப்புகள் பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அமெரிக்க நிலப்பொதியியல் ஆய்வானது 2020இல் NASA உடன் இணைந்து முழு சந்திர மேற்பரப்பையும் வரைபடமாக்கி வகைப்படுத்தியது. இருப்பினும், இந்த வரைபடம் அமெரிக்க வரைபடத்தைவிட சிறந்த விவரங்களை கொண்டுள்ளது. நிலவின் புதிய விரிவான நிலப்பொதியியல் வரைபடம் 1:2500000 என்ற அளவைக் கொண்டுள்ளது.

4. 2022–இல் சென்னையில் நடத்தப்படும் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் சின்னத்தின் பெயர் என்ன?

அ. வீரா

ஆ. தம்பி 

இ. அறிவு

ஈ. போதி

 • 44ஆவது FIDE செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இலச்சினை மற்றும் ‘தம்பி’ என்ற போட்டிச்சின்னத்தை மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார். தமிழில் ‘தம்பி’ என்றால் ‘இளவல்’ என்று பொருள். சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் நடக்கும் இந்தப் பன்னாட்டுப் போட்டியில், 186 நாடுகளைச்சேர்ந்த ஈராயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர்.

5. ‘தேசிய சுங்க மற்றும் GST அருங்காட்சியகமானது’ அண்மையில் எந்த மாநிலம்/UTஇல் திறக்கப்பட்டது?

அ. ஹரியானா

ஆ. கோவா 

இ. புது தில்லி

ஈ. மகாராஷ்டிரா

 • மத்திய நிதியமைச்சகத்தின் சார்பில் கொண்டாடப்படும் விடுதலையின் 75ஆவது ஆண்டுப் பெருவிழா சிறப்பு வாரத்தின் ஒருபகுதியாக, கோவாவில் ‘தரோஹர்’ என்னும் தேசிய சுங்க மற்றும் GST அருங்காட்சியகத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டுக்கு அர்ப்பணித்தார். பல நூற்றாண்டு பழமையான பாரம்பரிய கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டிருந்த கலைநுட்பம்கொண்ட ஒற்றைப் பாறையிலிருந்து தங்க மணலை அகற்றி தனித்துவமான முறையில் அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது.
 • கோவாவில் போர்த்துகீசிய ஆட்சியின்போது ‘அல்பண்டேகா’ என்று அழைக்கப்பட்ட இரண்டு மாடி ‘நீலக்கட்டிடம்’ பனாஜியில் உள்ள மண்டோவி ஆற்றின் கரையில் 400 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது.

6. புது தில்லியில் வைத்து இந்திய வர்த்தக வலைத்தளத்தை அறிமுகப்படுத்திய ஒன்றிய அமைச்சகம் எது?

அ. பெருநிறுவன விவகாரங்களுக்கான இணையமைச்சகம்

ஆ. வணிகம் மற்றும் தொழிற்துறைக்கான இணையமைச்சகம் 

இ. நிதிக்கான இணையமைச்சகம்

ஈ. MSME க்கான இணையமைச்சகம்

 • மத்திய வணிகம் மற்றும் தொழிற்துறை இணையமைச்சர் அனுப்ரியா படேல், 2022 மே.27 அன்று புது தில்லியில் வைத்து இந்திய வர்த்தக வலைத்தளத்தை அறிமுகஞ்செய்துவைத்தார். இந்திய ஏற்றுமதியாளர்கள் மற்றும் அயல் நாட்டு வாங்குவோர்க்கு ஒரு பன்னாட்டு வணிக மையமாக இந்த வலைத்தளம் செயல்படும்.
 • சிறு–நடுத்தர நிறுவன ஏற்றுமதியாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் உழவர்கள் தங்கள் தயாரிப்புகளுக்கான புதிய சந்தைகளை அடையாளங்கண்டு, உலகளவில் தங்கள் விற்பனையை அதிகரிக்க, வணிகத்திலிருந்தே வணிகத்திற்கான ஓர் எண்ம சந்தையாக இந்த வலைத்தளம் அமைந்துள்ளது.

7. R பிரக்ஞானந்தா என்பவருடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. மட்டைப்பந்து

ஆ. பில்லியர்ட்ஸ்

இ. செஸ் 

ஈ. டென்னிஸ்

 • 16 வயதான இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டர் R பிரக்ஞானந்தா, 2022 மே.27 அன்று மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் டூர் செசபிள் மாஸ்டர்ஸ் போட்டியின் இறுதிப்போட்டியில் சீனாவின் டிங் லிரனிடம் வீழ்ந்து வெளியேறினார். அவர் அரையிறுதி ஆட்டத்தில் அனிஷ் கிரியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

8. உலக பால் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. ஜூன்.01 

ஆ. ஜூன்.05

இ. ஜூன்.10

ஈ. ஜூன்.15

 • உலக பால் நாளானது கடந்த 2001ஆம் ஆண்டில் ஐநா அவையின் (FAO) உணவு மற்றும் வேளாண் அமைப்பால் நிறுவப்பட்டது. இது உலகின் உணவாக பாலின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதற்காகவும் பால்வளத்துறையை கொண்டாடுவதற்காகவும் கடைப்பிடிக்கப்படுகிறது. உலக பால் நாளைக் கொண்டாடும் வகையில் FAO ஆனது ‘பால் பேரணியைக் கொண்டாடவும் – Enjoy Dairy Rally’ஐ ஏற்பாடு செய்தது. ‘Dairy Net Zero’ என்பது நடப்பு (2022) ஆண்டில் வரும் உலக பால் நாளுக்கானக் கருப்பொருளாகும்.

9. உலக பசி நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. மே.28 

ஆ. மே.30

இ. ஜூன்.10

ஈ. ஜூன்.15

 • உலக பசி நாள் என்பது ‘தி ஹங்கர்’ திட்டத்தின் ஒரு முன்னெடுப்பாகும். இது நியூயார்க்கைச் சார்ந்த ஓர் அமைப்பு ஆகும். இது உலகின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படும் நிகழ்வுகளின்மூலம் உலகம் முழுவதும் பசியை முடிவுக்குக் கொண்டுவர உறுதிபூண்டுள்ளது. உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் மே.28 அன்று உலக பசி நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐநா அவையின் சமீபத்திய தரவுகளின்படி, 2015–க்குப்பிறகு பசியால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. “#YouthEndingHunger” என்பது நடப்பு (2022) ஆண்டில் வரும் உலக பசி நாளுக்கானக் கருப்பொருளாகும்.

10. உலக புகையிலை ஒழிப்பு நாள் விருது–2022–க்கு WHOஆல் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. ஜார்கண்ட் 

ஈ. பீகார்

 • புகையிலை நுகர்வைக் கட்டுப்படுத்துவதற்கான அதன் முயற்சிகளை அங்கீகரித்து, உலக சுகாதார அமைப்பு (WHO) உலக புகையிலை ஒழிப்பு நாள் (WNTD) விருது–2022–க்கு ஜார்க்கண்டைத் தேர்ந்தெடுத்துள்ளது. ஜார்கண்டின் தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டத்தின் (NTCP) மைய முகமை அதிகாரி லலித் இரஞ்சன் பதக், புது தில்லியில் உலக புகையிலை ஒழிப்பு நாளை முன்னிட்டு சுகாதாரத்துறையின் மாநில புகையிலை கட்டுப்பாட்டுப் பிரிவு இந்த விருதைப் பெறும் என்று தெரிவித்தார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

Newspaper, news icon - Free download on Iconfinder

Newspaper, news icon - Free download on Iconfinder

1. தேசிய அரசு இணைய சேவை மதிப்பீடு: தமிழ்நாடு முன்னேற்றம்

மத்திய அரசின் தேசிய அரசு இணைய சேவை மதிப்பீட்டில் தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது.

இதுதொடர்பாக ஒன்றிய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தேசிய அரசு இணைய சேவை மதிப்பீட்டில் 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு மிகச்சிறப்பாக முன்னேற்றமடைந்துள்ளது. தமிழ்நாடு அரசின் சேவை வலைதளங்கள் அனைத்து அம்சங்களிலும் 75 சதவீதத்துக்கும் அதிகமாக தரநிலையைப் பூர்த்தி செய்துள்ளன. அந்த வரிசையில் பஞ்சாப், இராஜஸ்தானும் இடம் பெற்றுள்ளன. இதுதவிர, ஆந்திர பிரதேசம், கேரளம், பஞ்சாப், கோவா, ஒடிசா அரசுகளின் சேவை வலைதளங்கள் 100 சதவீதம் தரநிலையை மேம்படுத்தியுள்ளன.

இந்த மதிப்பீட்டில் யூனியன் பிரதேசங்கள் வரிசையில் ஜம்மு-காஷ்மீர் முதலிடத்தில் உள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் வரிசையில் மேகாலயம், நாகாலாந்து முன்னணியில் உள்ளன.

1. Which country is the host of ‘Shangri–La Dialogue (Asia Security Summit)?

A. China

B. Singapore 

C. Malaysia

D. UAE

 • The 19th Shangri–La Dialogue, hosted by International Institute for Strategic Studies (IISS), commenced in Singapor, two years after the COVID–19 pandemic. The Shangri–La Annual Dialogue is one among the important Asia’s Defence Summits.
 • It’s a unique meeting where ministers debate the region’s most significant security challenges. It was launched in 2002 by the British think tank IISS with the support of the Singaporean government. The Shangri–La Dialogue is officially known as the Asia Security Summit.

2. Which Indian state launched the ‘Suraksha–Mitra project’ vehicle monitoring system?

A. Telangana

B. Kerala 

C. Odisha

D. Gujarat

 • Kerala State Transport Ministry launched a vehicle monitoring system named ‘Suraksha–Mitra project’. In case of any accident, the system sends distress messages to the owners’ mobile phones. The project was launched under the Nirbhaya scheme and has become operational in the State, to make road travel safer.

3. Which country has released the most detailed Geological map of the Moon so far?

A. USA

B. Russia

C. China 

D. Israel

 • China has released the most detailed Geological map of the Moon, which has details of craters and structures not charted before. The United States Geological Survey had mapped and classified the entire lunar surface in collaboration with NASA in 2020. However, this map registers finer details than the US Map. The new comprehensive geologic map of the moon has a scale of 1:2500000.

4. What is the name of mascot of 44th Chess Olympiad to be hosted by Chennai in 2022?

A. Veera

B. Thambi 

C. Arivu

D. Bodhi

 • Honourable Tamil Nadu Chief Minister MK Stalin unveiled the mascot and the logo named ‘Thambi’ for 44th FIDE Chess Olympiad. ‘Thambi’ in Tamil means younger brother. The international event will be held at Mamallapuram near Chennai and over two thousand players from 186 countries will take part in the event.

5. The ‘National Museum of Customs and GST’ was recently inaugurated in which state/UT?

A. Haryana

B. Goa 

C. New Delhi

D. Maharashtra

 • Union Finance Minister Nirmala Sitharaman inaugurated the National Museum of Customs and GST ‘Dharohar’ in Goa. It was inaugurated as part of the Azadi Ka Amrit Mahotsav Iconic week of the Ministry of Finance. The finance minister removed the golden sand from single piece of rock art installed at the heritage ‘Blue building’, which was earlier known as Alfandega, during the period of Portuguese rule in Goa. Dharohar Museum also houses a ‘GST Gallery’.

6. Which ministry launched the Indian Business Portal in New Delhi?

A. Ministry of State for Corporate Affairs

B. Ministry of State for Commerce and Industry 

C. Ministry of State for Finance

D. Ministry of State for MSME

 • Anupriya Patel, Minister of State for Commerce and Industry launched the Indian Business Portal in New Delhi on May 27, 2022. The portal will act as an international trade hub for Indian exporters and foreign buyers. The portal is a business–to–business digital marketplace to empower small–medium enterprises exporters, artisans and farmers to identify new markets for their products and increase their sales globally.

7. R Pragyanand is associated with which of the following sports?

A. Cricket

B. Billiards

C. Chess 

D. Tennis

 • 16–year–old Indian Chess Grandmaster R Pragyananda has ended the Meltwater Champions Chess Tour Chessable Masters tournament on May 27, 2022, after losing to China’s Ding Liren in the final. The Indian chess player entered the final after defeating Anish Giri in the semi–final match.

8. On which day is the ‘World Milk Day’ celebrated every year?

A. June.01 

B. June.05

C. June.10

D. June.15

 • World Milk Day was established by the (FAO) Food and Agriculture Organisation of the United Nations in the year 2001. It is celebrated to recognize the importance of milk as a global food and to celebrate the dairy sector. FAO organised the ‘Enjoy Dairy Rally’ to celebrate the World Milk Day. This year’s theme for the World Milk Day is “Dairy Net Zero”.

9. World Hunger Day is observed on which date?

A. May.28

 B. May.30

C. June.10

D. June.15

 • World Hunger Day is an initiative by The Hunger Project, which is a New York based organisation committed to end hunger across the world, through programmes in various parts of the world. It is celebrated on May 28 every year across the world. According to the United Nations’ recent data, the number of people suffering from hunger is rising continuously after 2015. This year’s theme for the World Hunger Day is #YouthEndingHunger.

10. Which Indian state has been selected by WHO for World No Tobacco Day Award–2022?

A. Tamil Nadu

B. Kerala

C. Jharkhand 

D. Bihar

 • Recognizing its efforts to control tobacco consumption, the World Health Organization (WHO) has selected Jharkhand for the World No Tobacco Day (WNTD) Award–2022. Jharkhand’s National Tobacco Control Program (NTCP) Nodal Officer Lalit Ranjan Pathak said on May 29 that the State Tobacco Control Cell of the Health Department would receive the award on the occasion of World No Tobacco Day in New Delhi.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button