Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

13th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English

13th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 13th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

May Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. அண்மையில் மாட்ரிட் ஓப்பன் பட்டத்தை வென்ற கார்லோஸ் அல்கராஸ் சார்ந்த நாடு எது?

அ. பிரான்ஸ்

ஆ. ஸ்பெயின் 

இ. சுவிச்சர்லாந்து

ஈ. ரஷ்யா

  • 19 வயதான ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ், மாட்ரிட் ஓப்பன் உட்பட 2 ‘மாஸ்டர்ஸ் 1000’ பட்டங்களைப் பெற்றுள்ளார். முந்தைய சுற்றுகளில் ரஃபேல் நடால் மற்றும் நோவக் ஜோகோவிச் ஆகியோரை வீழ்த்திய அல்கராஸ், மாட்ரிட் ஓப்பன் இறுதிப்போட்டியில் நடப்புச் சாம்பியனான அலெக்சாண்டர் ஸ்வெரேவை வீழ்த்தினார். ஏப்ரல் மாதம் மியாமி ஓப்பனில் வென்றது உட்பட இந்த ஆண்டில் இது அவரது நான்காவது பட்டமாகும்.
  • 2007இல் டேவிட் நல்பாண்டியனுக்குப் பிறகு, ஒரே ‘மாஸ்டர்ஸ் 1000’ நிகழ்வில் மூன்று முதல் நான்கு வீரர்களைத் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமைக்குரியவராகவும் அவர் ஆனார்.

2. நாட்டிலேயே அரசுப்பள்ளிகளில் காலை உணவு வழங்கும் முதல் மாநிலம் எது?

அ. தமிழ்நாடு 

ஆ. பஞ்சாப்

இ. கேரளா

ஈ. மேற்கு வங்காளம்

  • அரசுப்பள்ளிகளில் மதிய உணவுடன் காலைச் சிற்றுண்டியும் வழங்கும் நாட்டின் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. மாநிலத்தில் 1-5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்தார். மாநிலத்தில் உள்ள ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகள் குறித்த அரசின் பொது சுகாதார ஆய்வின் அடிப்படையில் இச்சிறப்பு ஊட்டச்சத்துத் திட்டம் உள்ளது. மதிய உணவுத்திட்டத்தில் தமிழ்நாடு, இந்தியாவுக்கே முன்னோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

3. $100 பில்லியன் டாலர் ஆண்டு வருவாயைத் தாண்டிய முதல் இந்திய நிறுவனம் எது?

அ. அதானி தொழிற்சாலைகள்

ஆ. ரிலையன்ஸ் தொழிற்சாலைகள் 

இ. TATA தொழிற்சாலைகள்

ஈ. பியூச்சர் நிறுவனங்கள்

  • முகேஷ் அம்பானியின் ரிலையன்சு தொழிற்சாலைகள் நிறுவனம், $100 பில்லியன் டாலர் வருடாந்திர வருவாயைத் தாண்டிய முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றது. 2021-22 நிதியாண்டில், ரிலையன்ஸ் `7.92 இலட்சம் கோடி ($102 பில்லியன்) வருவாயில் `60,705 கோடி நிகர இலாபம் ஈட்டியுள்ளது. அதிக எண்ணெய் சுத்திகரிப்பு, தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் சேவைகளின் வளர்ச்சி மற்றும் வலுவான சில்லறை வணிகம் ஆகியவற்றின் காரணமாக வருவாய் அதிகரித்தது. அகலக்கற்றை சந்தாதாரர்களின் உயர்வு, ஆன்லைன் சில்லறை விற்பனை மற்றும் புதிய எரிசக்தி முதலீடு ஆகியவையும் இந்த வருவாய் உயர்வுக்குக் காரணமாகும்.

4. LIC-இன் 3.5% பங்குகளை விற்பதன்மூலம், அரசு திரட்டும் மொத்தத் தொகையின் அளவு எவ்வளவு?

அ. ரூ.64,000 கோடி

ஆ. ரூ.45,000 கோடி

இ. ரூ.36,000 கோடி

ஈ. ரூ.21,000 கோடி 

  • ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) வழங்கும் இந்தியாவின் மிகப்பெரிய பொதுப்பங்கீடு வழங்கலின் (IPO) அனைத்து வகைகளின் கீழும் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. காப்பீட்டுதாரர்களுக்கான பகுதி 6.11 மடங்கும், ஊழியர்களுக்கான பகுதி 4.39 மடங்கும், சில்லறை முதலீட்டாளர்களுக்கான பகுதி 1.99 மடங்கும், நிறுவனமற்ற முதலீட்டாளர்களுக்கான பகுதி 2.91 மடங்கும், தகுதிவாய்ந்த நிறுவன வாங்குபவர்களுக்கான பகுதி (QIB) 2.83 மடங்கும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் முன்னணி காப்பீட்டு நிறுவனத்தில் 3.5 சதவீத பங்குகளை விற்பதன்மூலம் அரசாங்கம் `21,000 கோடியை திரட்டும். இது அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அசல் இலக்கில் மூன்றில் ஒருபங்கு மட்டுமே.

5. NATO சைபர் பாதுகாப்பு குழுவில் இணைந்த முதல் ஆசிய நாடு எது?

அ. இந்தியா

ஆ. தென் கொரியா 

இ. இலங்கை

ஈ. வங்காளதேசம்

  • தென் கொரியாவின் தேசிய புலனாய்வு சேவை NATOஇன் இணையவெளிப் பாதுகாப்பு குழுவில் இணைந்த முதல் ஆசிய நாடாகும். தென் கொரியாவானது சீன மற்றும் வட கொரியாவின் சைபர் அச்சுறுத்தல்களுக்கு உட்பட்டுள்ளது. NATOஇன் Cooperative Cyber Defence Centre of Excellence (CCDCOE)-க்கு பங்களிக்கும் பங்கேற்பாளராக NIS ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இது, கடந்த 2008-இல் எஸ்டோனியாவில் நிறுவப்பட்ட இணையவெளிப் பாதுகாப்பு மையமாக இருந்தது. அது இணையவெளிப்பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் பயிற்சிகளில் கவனஞ்செலுத்துகிறது.

6. சமீப செய்திகளில் இடம்பெற்ற பல்லுயிர் ஈரநிலமான சாவா ஏரி அமைந்துள்ள நாடு எது?

அ. இந்தியா

ஆ. இலங்கை

இ. ஈராக் 

ஈ. ஆப்கானிஸ்தான்

  • ஈராக்கின் சமாவா நகரத்துக்கு அருகில் அமைந்துள்ள சாவா ஏரி, மனித செயல்பாடு மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக அழிந்துவிட்டது. ஐந்து சதுர கிலோமீட்டர் பரப்பளவுகொண்ட இவ்வேரி 2014 முதல் வறண்டு வருகிறது. இதற்கு காலநிலை மாற்றமும் வெப்பநிலை அதிகரிப்பும் காரணமாகும். இந்தப் பகுதியில் வேளாண்மைக்காக சட்ட விரோதமாகத் தோண்டப்பட்ட ஆயிரம் கேணிகளும் ஏரிக்கருகே கட்டப்பட்ட சிமெண்ட் & உப்பு தொழிற்சாலைகளும் குறிப்பிடத்தக்க அளவு ஏரி நீரை அங்கிருந்து வெளியேற்றியுள்ளன.

7. நடப்பு 2022ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க இராயல் தங்கப்பதக்கமானது கீழ்காணும் எந்த இந்திய கட்டடக் கலைஞருக்கு வழங்கப்பட்டுள்ளது?

அ. பாலகிருஷ்ண தோஷி 

ஆ. ஷீலா ஸ்ரீ பிரகாஷ்

இ. பிருந்தா சோமயா

ஈ. ஹபீஸ் காண்ட்ராக்டர்

  • இராயல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிரிட்டிஷ் ஆர்கிடெக்ட்ஸ் (RIBA) வழங்கும் உலகின் மிகவுயரிய கட்டடக்கலை விருதுகளுள் ஒன்றான மதிப்புமிக்க இராயல் தங்கப்பதக்கம், நடப்பு 2022ஆம் ஆண்டில் பழம்பெரும் கட்டடக் கலைஞர் பாலகிருஷ்ணா தோஷிக்கு வழங்கப்பட்டுள்ளது. 94 வயதான அவர், இவ்விருதைப் பெறும் ஒரே இந்தியர் ஆவார். “கட்டடக்கலைக்கான நோபல் பரிசு” என்று குறிப்பிடப்படும் ‘இராயல் தங்கப்பதக்கம்’ மற்றும் ‘பிரிட்ஸ்கர் கட்டடக்கலை பரிசு’ என இரண்டையும் பெற்ற முதல் நபர் இவராவார்.

8. யூன் சுக்-யோல் என்பவர் பின்வரும் எந்த நாட்டின் புதிய அதிபராவார்?

அ. தென் கொரியா 

ஆ. பிலிப்பைன்ஸ்

இ. வியட்நாம்

ஈ. தாய்லாந்து

  • தென் கொரியாவின் புதிய அதிபரான யூன் சுக்-யோல் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். வழக்கறிஞரான அவர், முன்னாள் அதிபர் பார்க் கியூன்-ஹை அதிகார துஷ்பிரயோகம் செய்ததற்காக அவருக்கு தண்டனை வாங்கித்தருவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார். நாட்டின் சில உயர்மட்ட ஊழல்கள் மீதான விசாரணையை அடுத்து அவர் மக்களின் கவனத்தைப் பெற்றார்.

9. ‘டிரோன்கள் பற்றிய எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டுடியோ’ கீழ்காணும் எந்த நிறுவனத்தில் தொடங்கப்பட்டுள்ளது?

அ. DRDO

ஆ. ISRO

இ. NITI ஆயோக் 

ஈ. நியூ ஸ்பேஸ் இந்தியா

  • பொது சேவைகளில் ஒருங்கிணைந்த சூழலை மேம்படுத்த, டிரோன்களை பயன்படுத்தும் NITI ஆயோக்கின் பயன்பாடு மற்றும் பயிற்சி ஸ்டுடியோவை மத்திய சிவில் விமானப்போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கிவைத்தார். அப்போது, NITI ஆயோக் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்துடன் இணைந்து நடத்தும் ‘Drones for Social Impact Competition’ மற்றும் ‘Robotics Workshop and Competition’ என்ற இரண்டு சவால்களையும் மத்திய அமைச்சர் அறிமுகப்படுத்தினார்.

10. ஆண்டுதோறும், ‘சர்வதேச தாவர நல நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. மே.10

ஆ. மே.12 

இ. மே.14

ஈ. மே.15

  • தாவர நலத்தைப் பாதுகாப்பதில் உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஐநா அவை மே.12-ஐ சர்வதேச தாவர நல நாளாக நியமித்தது. ஐநா அவையின் கூற்றுப்படி, தாவர நலத்தைப் பாதுகாப்பது பசியை ஒழிக்கவும், வறுமையைக்குறைக்கவும், பல்லுயிர் மற்றும் சூழலைப் பாதுகாக்கவும், பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவும். நாம் உண்ணும் உணவில் 80% மற்றும் நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜனில் 98% தாவரங்களிடமிருந்து பெறப்படுகிறது. ஆண்டுதோறும் தாவர பூச்சிகள் மற்றும் நோய்களால் 40% உணவுப்பயிர்கள் இழக்கப்படுகின்றன.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

Newspaper, news icon - Free download on Iconfinder

Newspaper, news icon - Free download on Iconfinder

1. தலைமைத் தேர்தலாணையராக இராஜீவ் குமார் நியமனம்

நாட்டின் புதிய தலைமைத் தேர்தலாணையராக இராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வரும் 15ஆம் தேதி தலைமைத் தேர்தலாணையராக பதவியேற்கவுள்ளார்.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக தற்போது இருந்து வரும் சுஷில் சந்திராவின் பதவிக்காலம் வரும் 14ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக தற்போது மூத்த தேர்தல் ஆணையராக இருக்கும் இராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார். இதை சட்ட அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2. மாபெரும் கருந்துளையின் முதல் புகைப்படம் வெளியீடு

நமது பால்வெளி மண்டலத்தில் காணப்படும் மாபெரும் கருந்துளையின் (பிளாக் ஹோல்) முதல் புகைப்படத்தை வானியலாளர்கள் வெளியிட்டுள்ளனர். சூரியனைவிட 40 லட்சம் மடங்கு பெரிதாக இந்தக் கருந்துளை உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, ‘தி அஸ்ட்ரோபிசிக்கல் ஜர்னல் லெட்டர்ஸ்’ என்ற அறிவியல் இதழில் வெளியான ஆய்வறிக்கையில், நமது பால்வெளி மண்டலத்தின் மையப் பகுதியில் என்ன நடக்கிறது என்பது பற்றிய நமது புரிதலை மேம்படுத்தவும், கருந்துளைகள் எவ்வாறு அவற்றின் சுற்றுப்புறத்துடன் தொடர்புகொள்கின்றன என்பது பற்றிய புதிய நுண் அறிவையும் இந்தக் கண்டுபிடிப்பு வழங்குகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கருந்துளைக்கு ‘ஸாஜிட்டேரியஸ்-ஏ’ (SGR-A) எனப்பெயரிடப்பட்டுள்ளது. உலகளாவிய ஆராய்ச்சிக் குழு இணைந்து, உலகம் முழுவதுமுள்ள வானொலி தொலைநோக்கிகளின் தரவுகளின் அடிப்படையில் இந்தக் கருந் துளையின் புகைப்படத்தை உருவாக்கியுள்ளன. ஓர் இருண்ட மையத்தைச் சுற்றி சிவப்பு, மஞ்சள், வெள்ளை நிறங்களின் தெளிவற்ற ஒளிரும் வடிவத்தை இந்தப் புகைப்படம் காட்டுகிறது. நட்சத்திரங்கள் செயலிழக்கும்போது கருந்துளைகளாக உருமாறுகின்றன. இதன் ஈர்ப்புவிசை மிகவதிகமாகும். ஒளி உட்பட எதுவும் கருந்துளையிலிருந்து தப்பமுடியாது.

1. Carlos Alcaraz, who won the Madrid Open title recently, is from which country?

A. France

B. Spain 

C. Switzerland

D. Russia

  • The 19–year–old Spaniard Carlos Alcaraz has become a sensation in Tennis after his two Masters 1000 titles, including the Madrid Open. Alcaraz beat defending champion Alexander Zverev in the Madrid Open final, after beating Rafael Nadal and Novak Djokovic in previous rounds. It is his fourth title of the year including victory at the Miami Open in April. He became the first player since David Nalbandian in 2007 to defeat three top–four players at a single Masters 1000 event.

2. Which is the first state in the country to offer breakfast in government schools?

A. Tamil Nadu 

B. Punjab

C. Kerala

D. West Bengal

  • Tamil Nadu has become the first state in the country to offer breakfast in government schools, along with the mid–day meal. Chief Minister MK Stalin announced the breakfast scheme for students studying in classes 1 to 5 in the state. The special nutritional scheme is based on a public health study by the government on the malnourished children in the state. Tamil Nadu was also a pioneer of the midday meal scheme.

3. Which is the first Indian company to cross USD 100 billion annual revenue?

A. Adani Industries

B. Reliance Industries 

C. TATA Industries

D. Future Enterprises

  • Mukesh Ambani’s Reliance Industries Ltd first became the first Indian company to cross USD 100 billion annual revenue. For the fiscal 2021–22, Reliance reported a net profit of ₹60,705 crore on a revenue of ₹7.92 lakh crore (USD 102 billion). The earnings rose due to the high oil refining margins, growth in telecom and digital services and strong retail business. Rise in broadband subscribers, online retail and new energy investment are also the reasons for rise in earnings.

4. By selling a 3.5 per cent stake in LIC, what is the total amount to be raised by the Government?

A. Rs 64000 Crore

B. Rs 45000 Crore

C. Rs 36000 Crore

D. Rs 21000 Crore 

  • India’s biggest–ever initial public offering (IPO), by Life Insurance Corp (LIC) has been fully booked under all categories. The portion set for policy holders was booked 6.11 times, employees by 4.39 times, retail investors by 1.99 times, non–institutional investors by 2.91 times and qualified institutional buyers (QIB) by 2.83 times.
  • The government will raise ₹ 21,000 crore from selling a 3.5 per cent stake in the country’s top insurer. This is only a third of the original target fixed by the government.

5. Which is the first Asian country to join NATO’s cyber defence group?

A. India

B. South Korea 

C. Sri Lanka

D. Bangladesh

  • South Korea’s National Intelligence Service became the first in Asia to join NATO’s cyber defence group. South Korea has been under Cyber–threats from China and North Korea. NIS was accepted as a contributing participant for NATO’s Cooperative Cyber Defence Centre of Excellence (CCDCOE). It was a cyber defence hub founded in Estonia, in 2008 and is focused on cyber–security research, training, and exercises.

6. The Sawa Lake, a biodiverse wetland seen in the news, is located in which country?

A. India

B. Sri Lanka

C. Iraq 

D. Afghanistan

  • The Sawa Lake, a biodiverse wetland situated near the city of Samawa, Iraq has disappeared mainly due to human activity and climate change. The five–square–kilometre lake has been drying up since 2014 and causes have been climate change and rising temperatures. Over 1000 wells illegally dug for agriculture in the region and cement and salt factories constructed near–by the lake have drained significant amounts of water.

7. Which Indian architect has been conferred the prestigious Royal Gold Medal 2022?

A. Balkrishna Doshi 

B. Sheila Sri Prakash

C. Brinda Somaya

D. Hafeez Contractor

  • Veteran architect Balkrishna Doshi was conferred the prestigious Royal Gold Medal 2022, one of the world’s highest honours for architecture, awarded by the Royal Institute of British Architects (RIBA). The 94–year–old architect is the only one from India. He is also the first to receive both the Royal Gold Medal and the Pritzker Architecture Prize, referred to as the Nobel Prize of architecture.

8. ‘Yoon Suk–yeol’ is the new President of which country?

A. South Korea 

B. Philippines

C. Vietnam

D. Thailand

  • South Korea’s new President Yoon Suk–yeol has recently won the Presidential Elections by the narrowest margin ever. He was a Prosecutor and played a significant role in convicting former president Park Geun–hye for abuse of power. He gained public attention after his investigations into some of the country’s high–profile corruption scandals.

9. ‘Experience Studio on Drones’, has been launched at which institution?

A. DRDO

B. ISRO

C. NITI Aayog 

D. New Space India

  • Union Minister of Civil Aviation Jyotiraditya Scindia launched an Experience Studio on Drones at NITI Aayog, to promote innovation and adoption of drones for public services. The Union Minister also announced the launch of two challenges, which will be held by NITI Aayog in collaboration with the Ministry of Civil Aviation: ‘Drones for Social Impact Competition’ and ‘Robotics Workshop and Competition’.

10. When is the ‘International Day of Plant Health (IDPH)’ observed every year?

A. May.10

B. May.12 

C. May.14

D. May.15

  • The United Nations designated 12 May the International Day of Plant Health (IDPH) to raise global awareness on protecting the plant health. As per the UN, protecting plant health can help end hunger, reduce poverty, protect biodiversity and the environment, and boost economic development. Plants make up 80% of the food we eat and 98% of the oxygen we breathe. Up to 40% of food crops are lost due to plant pests and diseases every year.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!