Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

13th October 2020 Current Affairs in Tamil & English

13th October 2020 Current Affairs in Tamil & English

13th October 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

13th October 2020 Tnpsc Current Affairs in Tamil

13th October 2020 Tnpsc Current Affairs in English

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. ‘இந்தியா P V எட்ஜ் 2020’ என்ற பன்னாட்டு கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்த நடுவணமைச்சகம் எது?

அ. எரிசக்தி அமைச்சகம்

ஆ. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

இ. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

ஈ. தகவல் தொடர்பு அமைச்சகம்

  • இந்தியாவில் அதிநவீன சூரிய மின்னாற்றல் தகடுகள் உற்பத்தியை ஊக்குவிக்க, ‘இந்தியா P V எட்ஜ் 2020’ என்ற தலைப்பில் உலகளாவிய இணைய கருத்தரங்குக்கு NITI ஆயோக், புதிய மற்றும் புதுப்பிக் -கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மற்றும் இன்வெஸ்ட் இந்தியா ஆகிய அமைப்புகள் ஏற்பாடு செய்தன.
  • ‘தொகுதிகள் மற்றும் உற்பத்தி உபகரணங்கள்’ மற்றும் ‘விநியோக சங்கிலி’ ஆகியவை பற்றிய முழுமையான அமர்வு மற்றும் அடுத்தடுத்த அமர்வுகள் இக்கருத்தரங்கில் நடைபெற்றன. இந்தியாவின் பிரபல நிறுவனங்களின், 60 தலைமைச் செயல் அதிகாரிகள், இந்தக்கருத்தரங்கில் காணொலிக்காட்சி வழியில் பங்கேற்றனர்.

2. ‘CORPAT’ என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையிலான இராணுவப் பயிற்சியாகும்?

அ. ஜப்பான்

ஆ. இலங்கை

இ. வங்கதேசம்

ஈ. பிரான்ஸ்

  • பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அண்மைய செய்திக்குறிப்பில், ‘பாங்கோசாகர்’ மற்றும் Coordinated Patrol (CORPAT) ஆகிய இரண்டு பயிற்சிகள் அக்டோபர் முதல் வாரத்தில் இந்தியாவிற்கும் வங்கதேசத்துக்கும் இடையில் நடைபெறும். சர்வதேச கடலெல்லைப்பகுதியில் சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளை தடுக்கும் ரோந்துப்பணியில் இருநாட்டு கடற்படைகளும் இணைந்து செயல்பட இக் கூட்டு ரோந்துப்பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. பிரதமரின் SAGAR (Security and Growth for All in the Region) முன்னெடுப்பின் ஒருபகுதியாக இந்தப் பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.

3.இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் தலைவர் யார்?

அ. பிரதமர்

ஆ. குடியரசுத்தலைவர்

இ. குடியரசுத்துணைத்தலைவர்

ஈ. பணியாளர் நலத்துறை அமைச்சர்

  • இந்திய பொது நிர்வாக நிறுவனம் (IIPA) என்பது மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கிவரும் ஓர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அமைப்பாகும். குடியரசுத்துணைத்தலைவர் வெங்கையா, IIPA’இன் பதவிவழித் தலைவராக உள்ளார்.மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீ அர்ஜுன் முண்டா தலைமையில், பழங்குடியினர் நலத்துறை அமைச்சகமும் இந்திய பொது நிர்வாக நிறுவனமும் இணைந்து அண்மையில் “தேசிய பழங்குடியினர் ஆராய்ச்சி மாநாட்டை” ஏற்பாடுசெய்தன. இரு நாட்கள் நடைபெற்ற இம்மாநாடு மெய்நிகர் முறையில் நடந்தேறியது.

4.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற V S காயதோன்டி சார்ந்தது எது?

அ. விளையாட்டு

ஆ. கண்ணுள் வினைஞர்

இ. வழக்குரைஞர்

ஈ. அரசியல்வாதி

  • மும்பை ஏலக்கூடமான புந்தோலில் நடைபெற்ற ஏலத்தில், `32 கோடிக்கு விலைபோனதை அடுத்து, VS காயதோன்டியின் அவ்வோவியம், ஓர் இந்திய கலைஞரின் மிகவும் விலையுயர்ந்த கலைப்படைப்பு ஆக மாறியுள்ளது. கடந்த 1974ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட அப்பெயரிடப்படாத எண்ணெய் வண்ண ஓவியத்தை பன்னாட்டு வாங்குபவர் ஒருவர் வாங்கியுள்ளார். இதன்மூலம் VS காயதோன்டியின் மற்றொரு கலைப்படைப்பு, 2015ஆம் ஆண்டில் நிகழ்த்திய `29.3 கோடி சாதனையை இது முறியடித்தது.

5.நடப்பாண்டில் (2020) கடற்படை பதவியேற்பு விழாவை நடத்திய நகரம் எது?

அ. திருவனந்தபுரம்

ஆ. விசாகப்பட்டிணம்

இ. கொச்சின்

ஈ. சென்னை

  • நடப்பாண்டு (2020) கடற்படை பதவியேற்பு விழா, விசாகப்பட்டிணத்தில் நடத்தப்பட்டுள்ளது. விழாவின் போது, நடப்பாண்டு குடியரசு நாளன்று அறிவிக்கப்பட்ட வீரதீரச் செயல் புரிந்தோருக்கான விருதுகள் வழங்கப்பட்டன. கடற்படைத் துணைத்தலைவர் அதுல் குமார் ஜெயின், கடந்த ஆண்டு (2019) சிறப்பாக செயல்பட்ட புகழ்பெற்ற கடற்படை அலகுகளுக்கு, சிறப்புப் பாராட்டுப் பத்திரங்களை வழங்கினார்.

6.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘PARAM சித்தி – AI’ என்றால் என்ன?

அ. மீத்திறன் கணினி

ஆ. எந்திர மனிதன்

இ. ஆளில்லா வானூர்தி

ஈ. ஏவுகணை

  • நவீன கணித்திறன் வளர்ச்சி மையமானது (C-DAC) இந்தியாவின் மிகப்பெரிய HPC-AI மீத்திறன் கணினியான, ‘பரம் சித்தி – AI’ஐ அமைக்கவுள்ளது. இந்த முயற்சிக்கு CDAC அறிவியலாளர் மற்றும் திட்ட இயக்குநர் அபிஷேக் தாஸ் தலைமைதாங்கினார். இதற்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் இரவிசங்கர் பிரசாத் ஒப்புதல் அளித்துள்ளார்.
  • இந்த மீத்திறன் கணினியில் (super-computer), 210 AI பெட்டாபிளாப்கள் இருக்கும்; இது NVIDIA DGX சூப்பர்POD கட்டமைப்பினை அடிப்படையாகக்கொண்டு இருக்கும்.

7.ஓர் அண்மைய ஆய்வின்படி, எந்தக் காடு, வனத்திலிருந்து சவானா புல்வெளியாக மாறும் அபாயத்தில் உள்ளது என்று கூறப்படுகிறது?

அ. சோலைக்காடுகள், மேற்குத்தொடர்ச்சி மலை

ஆ. அமேசான் மழைக்காடுகள்

இ. காங்கோ மழைக்காடுகள்

ஈ. சதுப்புநிலக்காடுகள், பிச்சாவரம்

  • நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஓர் அண்மைய ஆய்வில், வெப்பமண்டல மழைக் காடுகளின் நெகிழ்திறன் 2 கூடுதல் தீவிர சூழ்நிலைகளின்கீழ் ஆராயப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்படி, அமேசானில் மழைப்பொழிவின் அளவு மிகவும் குறைந்துள்ளது; இதன் காரணமாக நாற்பது சதவீதம் வரையிலான வனப்பரப்புகள் சவானா புல்வெளிப்பரப்பாக மாறும் அபாயத்தில் உள்ளன. புதைப்படிவ எரிபொருட்களை எரிப்பதால் ஏற்படும் தாக்கத்தையும் இந்த ஆய்வு உருவகப்படுத்தியுள்ளது.

8.தனது வணிக மென்பொருள் தொகுப்புக்கு ‘Workspace’ என மறுபெயரிட்டுள்ள தொழினுட்ப நிறுவனம் எது?

அ. மைக்ரோசாப்ட்

ஆ. கூகுள்

இ. IBM

ஈ. சோஹோ

  • கூகிள் தனது வணிக கருவிகளின் தொகுப்புக்கு, ‘Google Workspace’ என மறுபெயரிட்டுள்ளது. மின் -அஞ்சல் மற்றும் ஆவணத்திருத்தம் உள்ளிட்ட இந்தத்தொகுப்பு முன்னர் ‘G Suite brand’ என்ற பெயரில் அறியப்பட்டது. 2016ஆம் ஆண்டில் இது அறிமுகப்படுத்தப்பட்டது. சக ஊழியர்களுடன் காணொளிவழி அரட்டையை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட சில புதிய அம்சங்களையும் கூகிள் அறிமுகம் செய்துள்ளது.

9.சூரிய ஆற்றல் துறையில் புத்தாக்கம் குறித்த டிஜிட்டல் மாநாட்டை, இந்தியா, எந்நாட்டோடு இணைந்து நடத்தவுள்ளது?

அ. பிரான்ஸ்

ஆ. ஜெர்மனி

இ. இஸ்ரேல்

ஈ. ஐக்கியப் பேரரசு

  • தொழில்நுட்ப ஒத்துழைப்பில் சிறப்பு கவனஞ்செலுத்தி COVID-19 வைரசுக்கு எதிரான போராட்டத்தில் இருதரப்பு ஒத்துழைப்பை முன்னெடுக்க, இந்தியாவும் இஸ்ரேலும் ஒப்புக்கொண்டுள்ளன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி & இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருக்கு இடையிலான தொலைபேசி உரையாடலின்போது, சூரிய ஆற்றல் துறையில் புத்தாக்கம் குறித்த டிஜிட்டல் மாநாட்டை நடத்த இரு தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.

10. ‘டிஜிட்டல் சேவா சேது திட்டத்தை’ அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசு எது?

அ. மத்திய பிரதேசம்

ஆ. குஜராத்

இ. அஸ்ஸாம்

ஈ. உத்தரகண்ட்

  • குஜராத் மாநில அரசானது அண்மையில் மாநிலத்தின் கிராமப்புறங்களுக்காக, ‘டிஜிட்டல் சேவா சேது திட்டத்தை’ அறிமுகப்படுத்தியது. இந்தத்திட்டத்தின்கீழ், குடிமக்களுக்கு பஞ்சாயத்து மட்டத்தில் பல்வேறு பொதுநலச்சேவைகளுக்கான இணைய அணுகல் கிடைக்கப்பெறும்.
  • கிராமப் பஞ்சாயத்துகளை கண்ணாடியிழை வலையமைப்பின்மூலம் இணைப்பதை நோக்கமாகக் கொண்ட, ‘பாரத் நெட் திட்டத்தின்’கீழ் இந்த, ‘டிஜிட்டல் சேவா சேது’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்

  • மத்திய அரசின் இ-சஞ்சீவினி திட்டத்தில் மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவதில் தேசிய அளவில் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம் இரண்டாமிடத்தில் உள்ளது. இந்தச்சேவையை அதிகம் பயன்படுத்திய மாநிலங்களுள் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. பொதுமக்கள் அலைபேசிமூலம் மருத்துவர்களைத் தொடர்புகொண்டு நோய்களுக்கான மருந்து, மாத்திரைகள் பரிந்துரைச்சீட்டு பெறும் வகையில் இ- சஞ்சீவினி என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த ஏப்ரல்.13 அன்று அறிமுகப்படுத்தியது.

1. The Global symposium ‘India PV EDGE 2020’ is organised by which Union Ministry?

[A] Ministry of Power

[B] Ministry of New and Renewable Energy

[C] Ministry of Electronics and Information Technology

[D] Ministry of Communication

  • Ministry of New and Renewable Energy, NITI Aayog along with Invest India are organising a virtual global symposium ‘India PV EDGE 2020’. The symposium includes sessions on ‘Modules and Production Equipment’ and ‘Supply Chain’ among others. Around 60 top Indian and global CEOs are expected to attend the event virtually.

2. ‘CORPAT’ is a Military Exercise between India and which country?

[A] Japan

[B] Sri Lanka

[C] Bangladesh

[D] France

  • As per the recent press release issued by the Ministry of Defence, two exercises namely Bongosagar and Coordinated Patrol (CORPAT) will be held between India and Bangladesh in October first week. Under the India Bangladesh Coordinated Patrol (CORPAT) exercise, both navies will undertake joint patrolling along the International Maritime Boundary Line (IMBL). The exercises are held as part of Prime Minister’s SAGAR (Security and Growth for All in the Region) initiative.

3. Who is the President of the Indian Institute of Public Administration (IIPA)?

[A] Prime Minister

[B] President

[C] Vice–President

[D] Minister of Personnel

  • The Indian Institute of Public Administration is a Research and training organization under the Union Ministry of Personnel. Vice President Venkaiah Naidu is the ex–officio President of IIPA. The Ministry of Tribal Affairs & Indian Institute of Public Administration (IIPA) has recently organized a two–day ‘National Tribal Research Conclave’ through virtual platform chaired by the Union Minister of Tribal Affairs Shri Arjun Munda.

4. V.S. Gaitonde, who was seen in news recently, is associated with which profession?

[A] Sportsperson

[B] Artist

[C] Lawyer

[D] Politician

  • A painting of V.S. Gaitonde has become the most expensive work of art by an Indian artist, as it has fetched Rs 32 Crore at an auction held at Mumbai auction house Pundole. The untitled oil–on–canvas painting was created in the year 1974 and was bought by an unnamed international buyer. This sale breaks the record held by another art work of V.S. Gaitonde that fetched Rs 29.3 crore in the year 2015.

5. Which city played host to the Naval Investiture Ceremony 2020?

[A] Goa

[B] Vishakhapatnam

[C] Cochin

[D] Chennai

  • The Naval Investiture Ceremony of this year has been conducted at Visakhapatnam. During the ceremony, the Gallantry and non–Gallantry Awards announced on the Republic Day this year were conferred. The Vice Admiral Atul Kumar Jain also presented Unit citations to distinguished Naval units which have performed well during the past year.

6. What is ‘PARAM Siddhi – AI’, that was seen in news recently?

[A] Super Computer

[B] Robot

[C] Drone

[D] Missile

  • The Centre for Development of Advanced Computing (C–DAC) is set to commission India’s largest HPC–AI supercomputer, ‘PARAM Siddhi – AI’. The initiative has been led by Scientist and Program Director at CDAC Abhishek Das. The same has been approved by the Union Minister of Electronics and IT Ravi Shankar Prasad. The supercomputer will have 210 AI Petaflops and will be based on NVIDIA DGX SuperPOD reference architecture.

7. Which forest is said to be in a risk of changing from Forest to Savanna, as per a recent study?

[A] Sholas, Western Ghats

[B] Amazon Rainforests

[C] Congo Rainforests

[D] Mangrove Forests, Pichavaram

  • In a recent study published in the journal Nature Communications, the resilience of tropical rainforests under two additional extreme scenarios is explored. As per the study, rainfall in the Amazon is very low that up to 40% of the forest is at a risk of changing into a savanna–like environment, with fewer trees and biodiversity. The study also simulated the effect of emissions from burning fossil fuels between now and the end of the century.

8. Which technology company has renamed its business software package as ‘Workspace’?

[A] Microsoft

[B] Google

[C] IBM

[D] Zoho

  • Technology Major Google has recently announced Google Workspace as the new name for its package of business tools. The package including email and document editing was earlier known by the G Suite brand, which was introduced in 2016. Google has also launched some new features including integration of video chat with co–workers among others.

9. India is to hold a Digital conference on innovation in the field of Solar energy, along with which country?

[A] France

[B] Germany

[C] Israel

[D] United Kingdom

  • India and Israel have agreed to advance bilateral cooperation in the fight against the coronavirus with special focus on technological cooperation. During the telephonic conversation between Indian Prime Minister Narendra Modi and his Israeli counterpart Benjamin Netanyahu, the leaders agreed to hold a digital conference on innovation in the field of solar energy.

10. Which state government has launched ‘Digital Seva Setu Programme’?

[A] Madhya Pradesh

[B] Gujarat

[C] Assam

[D] Uttarakhand

  • The State Government of Gujarat has recently launched Digital Seva Setu Programme for the rural areas of the state. Under this programme, the citizens will be provided access to various public welfare services at the Panchayat level. This Digital Seva Setu has been initiated under the Bharat Net Project that aims to connect the Village Panchayats through fibre network.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!