TnpscTnpsc Current Affairs

13th & 14th November 2021 Tnpsc Current Affairs in Tamil & English

13th & 14th November 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 13th & 14th November 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

November Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ‘போர் மற்றும் ஆயுத மோதலில் சுற்றுச்சூழலைச் சுரண்டுவதைத் தடுப்பதற்கான பன்னாட்டு நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) நவம்பர் 4

ஆ) நவம்பர் 6 

இ) நவம்பர் 8

ஈ) நவம்பர் 10

  • 2001ஆம் ஆண்டில், ஐநா பொதுச்சபை ஒவ்வோர் ஆண்டும் நவ.6ஆம் தேதியை ‘போர் மற்றும் ஆயுதமோதலில் சுற்றுச்சூழலை சுரண்டுவதை தடுப்பதற்கான பன்னாட்டு நாளாக’ அறிவித்தது. ஐநா சுற்றுச்சூழல் பேரவை, 2016’இல் ஒரு தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது; அது ஆயுத மோதலின் நிகழ்தகவைக் குறைப்பதில் ஆரோக்கியமான சூழல் முக்கிய பங்கு வகிக்கிறது என்று அறிவித்தது. சுற்றுச்சூழலில் மோதல்கள் மற்றும் போர்களின் விளைவுகளைக் குறைப்பதே இதன் நோக்கமாகும்.

2. முதன்முதலில் ‘ஸ்டார் காலேஜ் மென்டர்சிப் திட்டத்தை’ அறிவித்த மத்திய அமைச்சகம் எது?

அ) கல்வி அமைச்சகம்

ஆ) மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

இ) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் 

ஈ) திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்

  • இந்திய விடுதலையின் 75ஆவது ஆண்டை முன்னிட்டு இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான முதல் வழிகாட்டல் திட்டத்தை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தொடங்கியது.
  • ‘DBT-ஸ்டார் காலேஜ் மென்டர்ஷிப் புரோகிராம்’ என்று பெயரிடப்பட்ட இது, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழுள்ள உயிரித் தொழில்நுட்பத்துறையின் (DBT) ஆதரவுடன் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு ‘நட்சத்திரக்கல்லூரி’யை தேர்ந்தெடுப்பதை நோக்க -மாகக் கொண்டுள்ளது. இது ஒவ்வொரு மாதமும் பயிலரங்குகள் மற்றும் கூட்டங்களை ஏற்பாடு செய்வதையும், குறிப்பாக கிராமப்புறங்களில் கல்லூரிகளை நடத்துவது மற்றும் அரசுப் பள்ளிகளுடன் தொடர்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

3. இந்தியாவின் 27ஆம் மாநிலமாக நவ.9 அன்று உருவாக்கப்பட்ட மாநிலம் எது?

அ) ஜார்க்கண்ட்

ஆ) உத்தரகாண்ட் 

இ) சத்தீஸ்கர்

ஈ) தெலுங்கானா

  • இந்தியாவின் 27ஆவது மாநிலம் உருவானதைக் கொண்டாடும் வகை -யில் ஆண்டுதோறும் நவ.9ஆம் தேதி உத்தரகாண்ட் நிறுவன நாள் அனுசரிக்கப்படுகிறது. உத்தரபிரதேச மாநிலத்தின் வடமேற்குப்பகுதியில் இருந்தும், இமயமலைத் தொடரின் ஒருபகுதியிலிருந்தும் பல மாவட்டங் -களை இணைத்து கடந்த 2000ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது. இது முன்னர் உத்தராஞ்சல் என்று அழைக்கப்பட்டது. 2007ஆம் ஆண்டில் உத்தரகாண்ட் என மறுபெயரிடப்பட்டது.

4. எந்தத் தலைவரின் நினைவாக நவ.11ஆம் தேதி தேசிய கல்வி நாள் அனுசரிக்கப்படுகிறது?

அ) APJ அப்துல் கலாம்

ஆ) வல்லபாய் படேல்

இ) அன்னை தெரசா

ஈ) மௌலானா அபுல் கலாம் ஆசாத் 

  • ஒவ்வோர் ஆண்டும், மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், இந்தியாவில் நவம்பர்.11ஆம் தேதி தேசிய கல்வி நாளாக அனுசரிக்கப்படுகிறது. அவர் சுதந்திரப் போராட்ட வீரரும், சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரும் ஆவார். அவர் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில்தான் UGC, AICTE, கரக்பூர் உயர்கல்வி நிறுவனம் போன்றவை நிறுவப்பட்டன.

5. ‘ஒனகே ஒபவ்வா ஜெயந்தி’யைக் கொண்டாடுகிற மாநிலம் எது?

அ) கர்நாடகா 

ஆ) ஒடிஸா

இ) மேற்கு வங்கம்

ஈ) பஞ்சாப்

  • இந்த ஆண்டு முதல் நவம்பர் 11ஆம் தேதி ‘ஒனகே ஒபவ்வா ஜெயந்தி’ கொண்டாட கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 18ஆம் நூற்றாண்டில் சித்ரதுர்காவில் ஹைதர் அலியின் படைகளுக்கு எதிராகப் போரிட்ட புகழ்பெற்ற பெண்-சிப்பாய்தான் ஒனகே ஒபவ்வா. அவரின் பிறந்தநாளை ஆண்டுதோறும் கொண்டாட கன்னட கலாசாரத்துறை முன்மொழிந்தது.

6. இந்தியாவில் உள்ள வானூர்தி நிலையங்கள் எந்தச் சட்டத்தின் விதிமுறைகளின்படி “முதன்மை வானூர்தி நிலையங்கள்” என்று அறிவிக்கப்படுகின்றன?

அ) இந்திய வானூர்தி நிலைய ஆணையச் சட்டம்

ஆ) வானூர்தி நிலைய ஒழுங்குமுறை சட்டம்

இ) சிவில் வானூர்தி போக்குவரத்து சட்டம்

ஈ) வானூர்தி நிலைய பொருளாதார ஒழுங்குமுறை ஆணைய சட்டம் 

  • வானூர்தி நிலைய பொருளாதார ஒழுங்குமுறை ஆணையச் சட்டம், 2008’இன்கீழ், மகராஷ்டிராவில் உள்ள ஷீரடி வானூர்தி நிலையத்தை ஒரு பெரிய வானூர்தி நிலையமாக இந்திய அரசு அறிவித்துள்ளது. சட்டத்தின் 13ஆவது பிரிவின்கீழ், வானூர்தி நிலையப் பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம் (AERA) வானூர்தி சேவைகள் தொடர்பான கட்டணத்தை நிர்ணயிக்கும்.

7. எந்த விண்வெளி முகமையின் ஏவுகலம், விண்வெளிக்கு சென்ற 600ஆவது நபரைத் தாங்கி சென்றது?

அ) ஜாக்ஸா

ஆ) ESA

இ) இஸ்ரோ

ஈ) ஸ்பேஸ் எக்ஸ் 

  • அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் அதன் விண்கலமான குரூ டிராகன் என்டூரன்ஸில் 4 விண்வெளி வீரர்களை பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு தாங்கிசென்றது. கடந்த 60 ஆண்டுகளில் விண்வெளியை அடைந்த 600ஆம் நபரும் இதிலடக்கம்.
  • ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் 9 ஏவுகலத்தைப் பயன்படுத்தி இவ்விண்கலம் ஏவப்பட்டது. ஸ்பேஸ் எக்ஸின் தலைமையகம் கலிபோர்னியாவின் ஹாவ்தோர்னில் அமைந்துள்ளது. கடந்த 2002ஆம் ஆண்டில் எலோன் மஸ்க் என்பவரால் இது நிறுவப்பட்டது.

8. இராஜ்யசபாவின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார்?

அ) PC மோடி 

ஆ) சஞ்சய் ஜெய்ஸ்வால்

இ) அமித் ஷா

ஈ) ராஜ்நாத் சிங்

  • மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் முன்னாள் தலைவரும், இந்திய வருவாய் சேவை அதிகாரியுமான PC மோடி, மாநிலங்களவையின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐ ஆர் எஸ் அதிகாரி ஒருவர் பொதுச்செயலாளராக நியமிக்கப்படுவதால், பாரம்பரியமாக ஐ ஏ எஸ் அதிகாரிகள் பதவி வகித்து வந்த இந்தப் பதவி அரிதான நியமனங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

9. உயிரியல் ரீதியாக இறந்ததாக அறிவிக்கப்பட்ட உலகின் எந்தப் புகழ்பெற்ற ஆற்றில் கடல் குதிரைகள், விலாங்குகள், கடல் நாய்கள் மற்றும் சுறாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன?

அ) கங்கை

ஆ) யமுனை

இ) நைல்

ஈ) தேம்ஸ் 

  • கடல் குதிரைகள், ஈல்கள், கடல் நாய்கள் மற்றும் சுறாக்கள் போன்ற எதுவும் இல்லாத காரணத்தால், இலண்டனில் உள்ள தேம்ஸ் ஆறு, ஒரு காலத்தில் “உயிரியல் ரீதியாக இறந்ததாக” அறிவிக்கப்பட்டது.
  • இலண்டனின் விலங்கியல் சங்கம் நடத்திய ஆய்வில், முவ்வகையான சுறாக்கள் காணப்பட்டதாகவும், 115 வகையான மீன்கள் மற்றும் வனவுயி -ரிகள் காணப்பட்டதாகவும் கூறியது.

10. ‘ரெசாங் லா’ என்ற மலைப்பாதை அமைந்துள்ள இடம் எது?

அ) லடாக் 

ஆ) ஜம்மு காஷ்மீர்

இ) உத்தரகாண்ட்

ஈ) அருணாச்சல பிரதேசம்

  • ரெசாங் லா, கிழக்கு லடாக்கில் அமைந்துள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் உள்ள ஒரு மலைப்பாதையாகும். 1962ஆம் ஆண்டு நடந்த போரின் ஒருபகுதியாக, இந்திய இராணுவத்தின் குமாவோன் படைப் பிரிவின் 13 துருப்புக்கள் 16,000 அடி உயரத்தில் சீன இராணுவத்தை தோற்கடித்த ரெசாங் லா போருக்காக இது அறியப்படுகிறது. போரின் நினைவாக ரெசாங் லாவில் புதுப்பிக்கப்பட்ட போர் நினைவிடத்தை பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங் திறந்து வைக்கவுள்ளார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. டாக்டர் சுதா சேஷய்யனுக்கு பிரிட்டனின் கவுரவ பட்டம்

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர் சுதா சேஷய்யனுக்கு, பிரிட்டனின், ‘ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்ஸ் ஆப் எடின்பரோ’ சார்பில் கவுரவ பட்டம் வழங்கப்பட்டது.

உலகிலேயே அறுவை சிகிச்சை மருத்துவ கல்லுாரிகளில் தொன்மையானதாகவும், முதன்மையானதாகவும், ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்ஸ் கருதப்படுகிறது. 500 ஆண்டுகள் பழமையான அக்கல்லுாரி, ‘பெலோஷிப் ஆப் ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்ஸ்’ என்ற எப்.ஆர்.சி.எஸ்., பட்டத்தை, தகுதியானவர்களுக்கு வழங்குகிறது.

இதில், மருத்துவ துறையில் ஆற்றிவரும் பணிகள், ஆராய்ச்சி நடவடிக்கைகள், புதிய பங்களிப்புகள் மற்றும் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில், ‘பெலோஷில் அட் ஹொமினேம்’ என்ற கவுரவ பட்டத்தை, ராயல் கல்லுாரியே விருப்பப்பட்டு தகுதியானவர்களுக்கு அளிக்கும்.அந்த வகையில், இம்முறை கவுரவ பட்டத்துக்கு, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யனின் பெயர் முன்மொழியப்பட்டது.

இதை ராயல் கல்லுாரியின் எப்.ஆர்.சி.எஸ்., தேர்வு குழுவின் கவுன்சில் உறுப்பினர்கள் ஒருமனதாக ஏற்றனர்.இதற்கு முன், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தராக இருந்த கேப்டன் ராஜாவுக்கு இந்த கவுவரம் கிடைத்தது. அதன்பின், தற்போது சுதா சேஷய்யனுக்கு அப்பட்டம் கிடைத்துள்ளது.

இந்த கவுரவ பட்டம், பிரிட்டனில் அவருக்கு அளிக்கப்பட்டது. பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்திராக பங்கேற்று, சுதாசேஷய்யன் தலைமை உரையாற்றினார். இந்தியாவில் இருந்து எந்த பெண்ணுக்கும் கிடைக்காத, இந்த கவுரவம் சுதா சேஷய்யனுக்கு கிடைத்துள்ளது.

2. கோவேக்ஸின் தடுப்பூசியின் செயல்திறன் 77.8%

கரோனா தொற்றுக்கு எதிராக கோவேக்ஸின் தடுப்பூசி 77.8 சதவீத செயல்திறன் கொண்டுள்ளதாக லான்செட் மருத்துவ இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுக்கு எதிராக முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசி கோவேக்ஸின். ஹைதராபாதைச் சோ்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் அத்தடுப்பூசியைத் தயாரித்தது. அத்தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு அண்மையில் ஒப்புதல் வழங்கியது.

இந்நிலையில், கோவேக்ஸின் தடுப்பூசியின் 3-ஆம் கட்ட ஆய்வு தொடா்பான இடைக்கால முடிவுகள் ‘தி லான்செட்’ மருத்துவ இதழில் வெளியிடப்பட்டன. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கரோனா தொற்றுக்கு எதிரான நோய்எதிா்பொருளை கோவேக்ஸின் தடுப்பூசி தீவிர பக்கவிளைவுகள் ஏதுமின்றி உருவாக்குகிறது. அத்தடுப்பூசியை செலுத்திக் கொண்டு பரிசோதனையில் பங்கேற்றவா்கள் எவருக்கும் தீவிர பக்கவிளைவுகள் ஏற்படவில்லை. தலைவலி, காய்ச்சல், தடுப்பூசி செலுத்திய இடத்தில் வலி உள்ளிட்ட சிறிய அளவிலான பக்கவிளைவுகள் மட்டுமே ஏற்பட்டன.

பரிசோதனையில் பங்கேற்ற எவரும் உயிரிழக்கவில்லை. கடந்த ஆண்டு நவம்பா் 16-ஆம் தேதி முதல் கடந்த மே 17-ஆம் தேதி வரை இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. கரோனா தொற்றுக்கு எதிராக கோவேக்ஸின் தடுப்பூசி 77.8 சதவீத செயல்திறன் கொண்டுள்ளது. அதாவது, நூற்றில் சுமாா் 78 பேருக்கு தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு கரோனா தொற்று பாதிப்பு ஏற்படவில்லை.

தொடா் ஆய்வுகள்: இந்த ஆய்வு முடிவுகள் ஆரம்பநிலையைச் சோ்ந்தவை. கரோனா தொற்றின் தீவிர பாதிப்பு, மருத்துவமனையில் சிகிச்சை பெறத் தேவையில்லாத வகையிலான பாதுகாப்பு ஆகியவை குறித்து தொடா்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

60 வயதைக் கடந்த 2,750 பேரிடமும், இதய நோய், நீரிழிவு, உடல் பருமன் உள்ளிட்ட இணைநோய் கொண்ட 5,724 பேரிடமும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள 25 மருத்துவமனைகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

பெரிய மாற்றமில்லை: தடுப்பூசியின் 2-ஆம் தவணை செலுத்திய ஒரு மாதத்துக்குப் பிறகு உடலில் வலுவான நோய்எதிா்பொருள் உருவாகிறது. ஆல்ஃபா வகை கரோனா தொற்றுக்கு எதிராக கோவேக்ஸின் தடுப்பூசியின் செயல்திறன் குறையவில்லை. டெல்டா, காமா வகை கரோனா தொற்றுக்கு எதிராக செயல்திறன் சற்று குறைவாக (65 சதவீதம்) உள்ளது.

வெவ்வேறு வயதினருக்கிடையே நோய்எதிா்பொருள் உருவாவதில் பெரிய அளவிலான மாற்றங்கள் காணப்படவில்லை என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகத் தரத்திலானது: ஆய்வு முடிவு தொடா்பாக பாரத் பயோடெக் தலைவா் கிருஷ்ணா எல்லா வெளியிட்ட அறிக்கையில், ‘கோவேக்ஸின் தடுப்பூசி உலகத் தரம் வாய்ந்ததாக உள்ளதை லான்செட் ஆய்விதழ் உறுதி செய்துள்ளது. கோவேக்ஸின் தடுப்பூசியின் ஆய்வுகள், இதுவரை முக்கியத்துவம் வாய்ந்த 10 மருத்துவ இதழ்களில் வெளியாகியுள்ளன’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

3. இளைஞரை மீட்ட காவல் ஆய்வாளருக்கு முதல்வா், நீதிபதி பாராட்டு

இளைஞரை தோளில் சுமந்து மருத்துவமனையில் அனுமதித்த பெண் காவல் ஆய்வாளா் ராஜேஸ்வரியை நேரில் அழைத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டி வெள்ளிக்கிழமை சான்றிதழ் வழங்கினாா்.

நீதிபதி பாராட்டு: காவல் ஆய்வாளா் ராஜேஸ்வரியை சென்னை உயா்நீதிமன்றத்துக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ்

அழைத்து அவரின் செயலைப் பாராட்டினாா். மேலும், நீதிபதி தனது பாராட்டு கடிதத்தையும் ஆய்வாளரிடம் வழங்கினாா்.

முதல்வா் ஸ்டாலின் அளித்த சான்றிதழில் கூறியிருப்பதாவது: இது மக்களின் நலன் காக்கும் அரசு என்ற எண்ணத்தை மனதில் பதிய வைத்து, அரசு நிா்வாகத்தைச் சோ்ந்த ஒவ்வொருவரும் அா்ப்பணிப்புடன் செயலாற்றி வரும் நிலையில், அதற்கு மகுடம் சூட்டுவது போன்று பருவமழைக் காலத்துப் பேரிடா் நேரத்தில் மனித உயிா் காக்கச் செயல்பட்ட மகத்தான பணிக்கு எனது மனமாா்ந்த பாராட்டுகள்; வாழ்த்துகள். சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில் சுயநினைவின்றிக் கிடந்த உதயா என்ற இளைஞரை மீட்டு தோளில் சுமந்து பின்னா் ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளீா்கள். தங்களது அா்ப்பணிப்பு மிக்க கடமையுணா்வும், சீருடைப் பணியாளா்களுக்குரிய ஈர இதயத்தின் வெளிப்பாடும் போற்றுதலுக்கு உரியவை.

தடகளப் போட்டிகளில் சிறந்த வீராங்கனையாக சாதனைகள் பல புரிந்து, 1992 கும்பகோணம் மகாமகத்தில் ஏற்பட்ட நெரிசலின்போது தாங்கள் ஆற்றிய பணி எப்போதும் நினைவுகூரத்தக்கது. காவல் பணியில் எளிய மக்களின் துயா் துடைக்கும் கரங்களாக தங்களுடைய செயல்பாடு பலமுறை அமைந்துள்ளது. தங்களது மனிதாபிமான செயல்பாடு,

தங்களைப் போன்ற மனிதாபிமானம் கொண்ட தமிழ்நாடு காவல் துறையினா் அனைவருக்கும் பெருமை சோ்க்கும் வகையில் அமைந்துள்ளது.

காவல் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்வா் என்ற முறையிலும், மழைக்காலப் பேரிடா் நேரத்தில் தொடா்ச்சியாகப் பொதுமக்களை நேரில் சந்தித்து அவா்களின் தேவைகளைக் கேட்டறிந்தவன் என்ற முறையிலும் தங்களது மனிதாபிமானமிக்க உயிா்க் காப்புப் பணிக்கு எனது மனப்பூா்வமான வாழ்த்துகள்.

காவல் துறை உங்கள் நண்பன் என்பதற்கேற்ப கம்பீரமாகவும், கருணை உள்ளத்துடனும் தாங்கள் மேற்கொண்ட பணி, காவல் துறையில் உள்ள அனைவருக்கும் பெருமையையும் ஊக்கத்தையும் அளிக்கக் கூடியது. தங்களது சேவைக்கு வாழ்த்துகள். சட்டத்தையும், மக்களையும் காக்கின்ற பணி தொடரட்டும் என வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளாா்.

இளைஞா் சாவு: சென்னை டி.பி.சத்திரத்தில் பெண் காவல் ஆய்வாளா் தோளில் சுமந்து மீட்ட இளைஞா், மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

சென்னை டி.பி. சத்திரம் காவல் நிலைய ஆய்வாளா் ராஜேஸ்வரி. கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் இளைஞா் ஒருவா் மரக்கிளை ஒடிந்து விழுந்து சடலமாக கிடக்கிறாா் என ராஜேஸ்வரிக்குத் தகவல் கிடைத்தது. அங்கு சென்ற ராஜேஸ்வரி, கல்லறைகளுக்கு நடுவே அசைவற்றுக் கிடந்த இளைஞருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தபோது, அவருக்கு உயிா் இருப்பது தெரியவந்தது.

இதைப் பாா்த்த ராஜேஸ்வரி, சற்றும் தாமதிக்காமல் இளைஞரை தனது தோளில் தூக்கிச் சென்று அந்த வழியாக வந்த ஆட்டோவில் ஏற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். போலீஸாரின் விசாரணையில், மயங்கிக் கிடந்தவா் சென்னை ஷெனாய் நகரைச் சோ்ந்த உதயா (25) என்பதும், அந்தக் கல்லறைத் தோட்டத்தில் தங்கியிருந்து வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

போலீஸாரால் மீட்கப்பட்ட உதயாவுக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சூழ்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த உதயா, வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

நீதிபதி பாராட்டு: ஆய்வாளா் ராஜேஸ்வரியை சென்னை உயா்நீதிமன்றத்துக்கு அழைத்து நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், அவரது செயலைப் பாராட்டினாா். மேலும், நீதிபதி தனது பாராட்டு கடிதத்தையும் ஆய்வாளரிடம் வழங்கினாா்.

4. திருப்பதியில் தலவிருட்சமாக சம்பங்கி மரம் தேர்வு: தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயில் தல விருட்சமாக சம்பங்கி மரத்தை தேர்வு செய்து தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி தேவஸ்தானம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஏழுமலையானுக்கு நடத்தப்படும் அனைத்து விதமான பூஜைகளில் பயன்படுத்தப்படும் மலர்களின் அடிப்படையில் சம்பங்கி மரம் ஏழுமலையான் கோயில் தலவிருட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேவஸ்தான செயல் அதிகாரி ஜவகர் உத்தரவின்படி புராணங்களில் கூறப்பட்டுள்ள பல்வேறு வகையான மலர் செடிகளைக் கொண்ட பூந்தோட்டம் திருமலையில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அவற்றில் ஏழுமலையானுக்கு தினமும் நடத்தப்படும் பூஜைகளில் சம்பங்கி குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்று வருகிறது.

பவிஷ்யோத்ர புராணம் 13வது பாகம் 33 மற்றும் 34வது சுலோகங்களில் அப்போதைய அரசர் தொண்டமான் சக்கரவர்த்தியிடம் தனக்கான கோயிலை கட்டும்போது கட்டுமானத்திற்காக தேர்வு செய்யப்பட்ட பகுதியில் இருக்கும் சம்பங்கி தோட்டத்தை அகற்ற வேண்டாம் என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழுமலையான் கோயலில் உள்ள ஒருபகுதி தற்போதும் சம்பங்கி பிரகாரம் என்று அழைக்கப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் சம்பங்கி மரம் ஏழுமலையானின் தலவிருட்சமாக தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

5. ‘முதல்வரின் முகவரி’ : தமிழக அரசு அரசாணை வெளியீடு

முதல்-அமைச்சரின் குறைதீர்ப்பு துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு, முதல்வரின் முகவரி என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர், முதல்-அமைச்சர் உதவி மையம், குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு ஒருங்கிணைப்பு ஆகிய துறைகள் ஒன்றிணைந்து ‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் முதல்வரின் முகவரி என்ற புதிய துறை சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. முதல்வரின் முகவரி துறையில் மனுக்கல் தீர்வுக்காண ஒற்றை இணையதள முகப்பு பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தலைமைச் செயலாளா் இறையன்பு வெளியிட்ட அரசாணையில், முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, முதல்-அமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீா்ப்பு மேலாண்மை அமைப்பு (ஐஐபிஜிசிஎம்எஸ்), உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறை ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு, ‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறை உருவாக்கப்படுகிறது.

முதல்-அமைச்சர் முகவரி துறையின் மனுக்களுக்குத் தீா்வு காண முதல்வரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீா்ப்பு மேலாண்மை அமைப்பின் உதவி எண் மாநிலம் முழுவதும் ஒற்றை இணையதள முகப்பாகப் பயன்படுத்தப்படும். இது முதல்வரின் முகவரி துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும். உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறையின் சிறப்பு அலுவலா் ஷில்பா பிரபாகா் சதிஷ், முதல்வரின் முகவரி துறையின் சிறப்பு அலுவலராக நியமிக்கப்படுகிறாா்” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

6. ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் பெருநகர வெள்ள இடர் தணிப்பு, மேலாண்மைக்கான குழு: தமிழக அரசு ஆணை பிறப்பித்தது

சென்னை பெருநகர வெள்ள இடர் தணிப்பு மற்றும் மேலாண்மைக்கான அறிவுரைக் குழுவை, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வெ.திருப்புகழ் தலைமையில் அமைத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

இந்த அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றும்போது, ‘‘சென்னையில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளைக் குறைக்கும் வகையில், வெள்ள கட்டுப்பாடு நடவடிக்கைகள் மற்றும் மழைநீர் கால்வாய்களை வடிவமைத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்வதற்காக சுற்றுச்சூழல், நகர்ப்புற திட்டமிடல், பேரிடர் மேலாண்மை வல்லுநர்கள் அடங்கிய சென்னை பெருநகர வெள்ள மேலாண்மை குழு அமைக்கப்படும்’’ என்று அறிவித்தார்.

இதையடுத்து, மாநகராட்சி ஆணையர் அரசுக்கு அனுப்பிய கடிதத்தில், ‘`கடற்கரை நகரமான சென்னை, புயல் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களால் அதிக அளவில் பாதிக்கப்படும் பகுதியாகவும், மிகுந்த ஈரம் மற்றும் வறட்சியான பருவநிலை கொண்ட பகுதியாகவும் உள்ளது. மேலும், சென்னையின் பெரும்பாலான பகுதிகள் கடல்மட்டத்தில் இருந்து 2 மீட்டர் உயரமாகவும், சில பகுதிகள் கடல் மட்டத்தைவிட தாழ்வானதாகவும் உள்ளன. சென்னையைச் சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 2,500 ஏரிகள், குளங்கள் உள்ளன.

இங்கிருந்து வெளியேறும் நீர் முழுவதும் அடையாறு, கூவம், கோவளம், கொசஸ்தலை ஆறுகள்வழியாகச் செல்கிறது. இதனால்,மழைக்காலங்களில் தண்ணீரால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரிக்கின்றன. எனவே, ஆளுநர் அறிவித்தபடி குழுவை அமைக்க வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தார்.

இதன் முதல்கட்டமாக கடந்த செப்.14-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில். மாநகராட்சி ஆணையர், சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர், சுற்றுச்சூழல் துறை இயக்குநர் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கொள்கை மற்றும்திட்டப் பிரிவு கூடுதல் செயலராக இருந்த, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வெ.திருப்புகழ் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில், சென்னை மாநகரில் வெள்ளப் பாதிப்பு தடுப்பு மற்றும் மேலாண்மை தொடர்பான பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன. கூட்டத்தைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி ஆணையர் அனுப்பிய பரிந்துரையின் அடிப்படையில் `சென்னை பெருநகர வெள்ள இடர் தணிப்பு மற்றும் மேலாண்மைக்கான அறிவுரைக் குழுவை’ தமிழக அரசு அமைத்துள்ளது.

இடம்பெற்றுள்ள அதிகாரிகள்

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வெ.திருப்புகழ் தலைமையிலான இக்குழுவில், டெல்லி நகர் மற்றும் ஊரமைப்பு நிறுவன தலைமை திட்டஅலுவலர், காலநிலை பின்னடைவு பயிற்சி உலக வள நிறுவன இயக்குநர் நம்பி அப்பாதுரை, சென்னை வளர்ச்சி கல்வி நிறுவனப் பேராசிரியர் ஜானகிராமன், மும்பை ஐஐடிகட்டுமானப் பொறியியல் துறை பேராசிரியர் கபில் குப்தா, சென்னை அண்ணா பல்கலைக்கழக மனித குடியமர்வு மைய இயக்குநர் பிரதீப்மோசஸ், ஐதராபாத்தில் உள்ள தேசிய ரிமோட் சென்சிங் துறையின் பிரதிநிதி, அண்ணா பல்கலைக்கழக ரிமேட் சென்சிங் நிறுவனப் பேராசிரியர் திருமலைவாசன், ஐஐடி கட்டுமானப் பொறியியல் துறை தலைவர் பாலாஜி நரசிம்மன், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும தலைமை திட்ட அதிகாரி, சென்னை மண்டல நீர்வளத் துறைதலைமைப் பொறியாளர், நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர், சுற்றுச்சூழல் துறை இயக்குநர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

சென்னை மாநகராட்சியின் மழைநீர் வடிகால் துறை தலைமைப் பொறியாளர் இக்குழுவின் உறுப்பினர்-செயலராக இருப்பார். இந்த குழு, சென்னையில் வெள்ளப் பாதிப்பை குறைப்பதற்கான ஆலோசனைகளை வழங்கும்.

இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலரின் சகோதரர்

குஜராத் மாநிலப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான வெ.திருப்புகழ், தமிழக தலைமைச் செயலர் வெ.இறையன்புவின் மூத்த சகோதரர். குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோதும், அவர் பிரதமரானபோதும் திருப்புகழ் அவரின் கீழ் பணியாற்றினார். மேலும், பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் இருந்தபோது, தமிழகத்தில் புயல் பாதிப்பு மற்றும் வறட்சிப் பாதிப்புகளை பார்வையிடும் குழுவின் தலைவராக தமிழகத்துக்கு வந்தவர் என்பது குறிப் பிடத்தக்கது.

7. 5 முக்கிய சேவைகளின் அடிப்படையில் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது திருப்பதி தேவஸ்தானம்

‘வேர்ல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ நிறுவனம் லண்டனை தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்தப் புத்தகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இடம்பெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர்சந்தோஷ் சுக்லா சார்பில், அதன் துணைச் செயலாளர் உல்லா ஜிஇதற்கான சான்றிதழை திருமலையில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டியிடம் நேற்று வழங்கினார்.

திருமலை திருப்பதியில் அதிகமானோர் தலை முடி காணிக்கை செலுத்துவது, அதிக லட்டு பிரசாதம் விநியோகம், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு இலவசமாக அன்ன பிரசாதம் வழங்கல்,பக்தர்களுக்காக நெருக்கடி இல்லாத வரிசைகளை ஏற்பாடு செய்தது, திருப்பதியிலிருந்து திருமலைக்கு அமைக்கப்பட்டிருக்கும் நடைபாதை மற்றும் பக்தர்களுக்கு செய்யும் சேவை ஆகியவற்றால் தேவஸ்தானம், இந்த சாதனை புத்தகத்தில் இடம்பெற்றதாக துணைசெயலர் உல்லா ஜி தெரிவித் தார்.

இவையெல்லாம் தேவஸ்தான ஊழியர்களின் கடின உழைப்பால் சாத்தியமானது என அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி தெரிவித்தார்.

8. நீரஜ் சோப்ரா, ரவி குமாா், லவ்லினா, பி.ஆா். ஸ்ரீஜேஷ் உள்ளிட்டோருக்கு தேசிய விளையாட்டு விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் தேசிய விளையாட்டு விருதுகளை வீரர், வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவித்தார்.

தேசிய விளையாட்டு விருதுகள் ஒவ்வொருஆண்டும் விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களை அங்கீகரித்து வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்றது.

இதில் நீரஜ் சோப்ரா (தடகளம்), ரவி குமார் (மல்யுத்தம்), லவ்லினா போர்கோஹெய்ன் (குத்துச்சண்டை), பி.ஆர்.ஸ்ரீஜேஷ் (ஹாக்கி), அவனி லெகாரா (பாரா துப்பாக்கி சுடுதல்), சுமித் அன்டில் (பாரா தடகளம்), பிரமோத் பகத் (பாரா பாட்மிண்டன்), கிருஷ்ணா நாகர் (பாரா பாட்மிண்டன்), மணீஷ் நர்வால் (பாரா துப்பாக்கி சுடுதல்), மிதாலி ராஜ் (கிரிக்கெட்), சுனில் சேத்ரி (கால்பந்து), மன்பிரீத் சிங் (ஹாக்கி)ஆகிய 12 பேருக்கு தயான்சந்த் கேல் ரத்னா விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்வழங்கினார்.

விழாவில் அர்பிந்தர் சிங் (தடகளம்), சிம்ரன்ஜித் கவுர் (குத்துச்சண்டை), ஷிகர் தவன் (கிரிக்கெட்), சி.ஏ.பவானி தேவி (வாள்வீச்சு), மோனிகா(ஹாக்கி), வந்தனா கட்டாரியா (ஹாக்கி), சந்தீப் நர்வால் (கபடி), ஹிமானி உத்தம் (மல்லர் கம்பம்), அபிஷேக் வர்மா (துப்பாக்கி சுடுதல்), அங்கிதா ரெய்னா (டென்னிஸ்), தீபக்புனியா (மல்யுத்தம்), தில்பிரீத் சிங், ஹர்மன்பிரீத் சிங், ரூபிந்தர் பால் சிங், சுரேந்தர் குமார், அமித் ரோஹிதாஸ், வீரேந்திர லக்ரா, சுமித், நீலகண்ட சர்மா, ஹார்திக் சிங், விவேக் சாகா் பிரசாத், குர்ஜந்த் சிங், மன்தீப் சிங், ஷம்ஷேர் சிங், லலித் குமாா் உபாத்யாய் (ஹாக்கி), வருண் குமாா், சிம்ரன்ஜித் சிங் (ஹாக்கி), யோகேஷ் கதுனியா (பாரா தடகளம்), நிஷாத் குமார் (பாரா தடகளம்), பிரவீன் குமாா் (பாராதடகளம்), சுஹாஸ் யதிராஜ் (பாரா பாட்மிண்டன்), சிங்கராஜ் அதானா (பாரா துப்பாக்கி சுடுதல்), பவினா படேல் (பாரா டேபிள் டென்னிஸ்), ஹர்விந்தர் சிங் (பாரா வில்வித்தை), சரத் குமாா் (பாரா தடகளம்) உள்ளிட்ட 35 பேருக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.

வாழ்நாள் பிரிவில் துரோணாச்சார்யா விருது டி.பி.உஷப், சர்கார் தல்வார், சர்பால் சிங், அஷன் குமார், தபன் குமார் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

வழக்கமான பிரிவில் துரோணாச்சார்யா விருது ராதாகிருஷ்ணன் நாயர் பி, சந்தியா குருங், ப்ரீதம் சிவாச், ஜெய் பிரகாஷ் நௌடியல் மற்றும் சுப்பிரமணியன் ராமன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருது லேகா கே.சி., அபிஜீத் குந்த்தே, டேவிந்தர் சிங் கார்ச்சா, விகாஸ் குமார் மற்றும் சஜ்ஜன் சிங் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. பஞ்சாப் பல்கலைக்கழகம் (சண்டிகர்) 2021-ம்ஆண்டுக்கான மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோப்பையை பெற்றது.

9. ‘டெலி-லா’ செயலி: கிரண் ரிஜிஜு அறிமுகப்படுத்தினாா்

மக்களுக்கான ‘டெலி-லா’ கைப்பேசி செயலியை மத்திய சட்டம்- நீதித் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு சனிக்கிழமை அறிமுகப்படுத்தினாா்.

தில்லியில் நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

‘எண்ம இந்தியா’ என்ற பிரதமரின் தொலைநோக்குப் பாா்வை மூலம் புதிய இந்தியா உருவாகிறது. எண்ம இந்தியா திட்டத்தின் கீழ் டெலி-லா செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இது வழக்கு விசாரணைக்கு முந்தைய செயல்முறையை வலுப்படுத்துவதற்கான தளமாகும். இந்திய விடுதலையின் ‘அம்ருத் மஹோத்ஸவம்’ கொண்டாடும் இவ்வேளையில், பொது மக்கள் சுயசாா்புடையவா்களாகவும், நீதியை எளிதில் அணுகக் கூடியவா்களாகவும் இருக்கும் வகையில் ஒன்றிணைய வேண்டும்.

இந்தியாவின் 75 ஆண்டுகால சுதந்திர கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய 75,000 கிராம ஊராட்சிகளில் டெலி-லா செயலி விரிவாக்கம் செய்யப்படும்.

வழக்கறிஞா்கள் டெலி-லா இயக்கத்தில் சோ்ந்து சட்ட உதவி சேவைகளுக்கான சட்ட வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் சட்டம் – நீதித்துறை இணை அமைச்சா் எஸ்.பி.சிங் பகேல் கலந்து கொண்டாா்.

10. பருவநிலை மாற்ற மாநாடு இறுதி அறிக்கை: நாடுகளிடையே தொடா் பேச்சுவாா்த்தை

பருவநிலை மாற்ற மாநாடு தொடா்பான இறுதி அறிக்கையைத் தயாரிக்கும் விவகாரத்தில் நாடுகளிடையே தொடா் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.

ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் 26-ஆவது பருவநிலை மாற்ற மாநாடு நடைபெற்றது. இரு வாரங்களாக நடைபெற்ற மாநாடு கடந்த 12-ஆம் தேதி நிறைவடைந்தது. எனினும், மாநாட்டின் இறுதி அறிக்கையைத் தயாரிப்பது தொடா்பான பேச்சுவாா்த்தை தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

ஐ.நா.வின் அனைத்து உறுப்பு நாடுகளும் வரைவு அறிக்கையில் இடம்பெற்றுள்ள அனைத்து விவகாரங்களுக்கும் ஒப்புதல் அளித்தால் மட்டுமே அந்த அறிக்கை இறுதி வடிவம் பெறும். அறிக்கையை இறுதி செய்வது தொடா்பான பேச்சுவாா்த்தை கிளாஸ்கோ நகரில் சனிக்கிழமை நடைபெற்றது.

அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் அந்தப் பேச்சுவாா்த்தையில் கலந்து கொண்டனா். நிலக்கரி அடிப்படையிலான எரிசக்தி உற்பத்தியை நிரந்தரமாக நிறுத்துவதற்கான இலக்கை நிா்ணயிப்பது குறித்து பேச்சுவாா்த்தையில் விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மரபுசாா் எரிசக்திக்கு நாடுகள் படிப்படியாக முடிவுகட்ட வேண்டும் என்று வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்காக, வளா்ச்சியடைந்த நாடுகள் மற்ற நாடுகளுக்கு நிதியளித்து உதவ வேண்டும் என்று வரைவு அறிக்கையில் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளது. எனினும், இந்த விவகாரத்தில் அனைத்து நாடுகளிடையேயும் கருத்தொற்றுமை ஏற்படவில்லை.

பாரீஸ் ஒப்பந்தத்தின்படி வெப்பநிலை உயா்வை 2100-க்குள் 1.5 டிகிரி செல்சியஸுக்குக் கீழ் கட்டுப்படுத்த வேண்டுமெனில், கரியமில வாயு வெளியேற்றத்தை 2010-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 45 சதவீதத்தை 2030-க்குள் குறைக்க வேண்டுமென அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ஏழை நாடுகளும், வளா்ந்து வரும் நாடுகளும் வளா்ச்சியடைந்த நாடுகளிடமிருந்து நிதியுதவியைக் கோரியுள்ளன. இந்த விவகாரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உடன்படாததால் ஒருமித்த கருத்து இன்னும் எட்டப்படவில்லை.

இறுதி அறிக்கையைத் தயாா்செய்வது தொடா்பான பேச்சுவாா்த்தைகள் தொடா்ந்து நடைபெற்று வரும் நிலையில், வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விவகாரங்கள் பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்குப் போதுமானதாக இல்லை என சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா். இன்னும் உறுதியான நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் மேற்கொள்ள வேண்டுமென அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

11. குரூஸ் பர்னாந்தீஸ்க்கு மணிமண்டபம் :

`தூத்துக்குடி மாநகர மக்களின் தந்தை’ என்று அழைக்கப்படும் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ்க்கு மணிமண்டபம் அமைக்கப்படும்’ என்று, தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாநகர மக்களின் நலன் காக்க தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ். ஏறத்தாழ 30 ஆண்டுகள் நகர்மன்ற உறுப்பினராகவும், 5 முறை நகர்மன்ற தலைவராகவும் இருந்த காலத்தில் ஜாதிமத பேதமின்றி தூத்துக்குடி மக்களின் அடிப்படைக்கல்வி மேம்பாடு, குடிசை வீடுகள் மேம்பாடு, தீண்டாமை எதிர்ப்பு, கூட்டுறவு வங்கிக்கடனுதவி, சுகாதார மையங்கள், சனிக்கிழமைச் சந்தை, அங்காடிகள், பொதுவான கல்லறைத் தோட்டம் என பல திட்டங்களை செயல்படுத்தி சாதனை படைத்தார். குறிப்பாக 1927-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் மிகக் கடுமையான குடிநீர் பஞ்சத்தில் சிக்கித் தவித்த போது, மிகுந்த தொலைநோக்குப் பார்வையுடன் நெல்லை தாமிரபரணி ஆற்றில் இருந்து குழாய் மூலம் நீர் கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்தி வெற்றி கண்டார். தன்னலமற்ற தனது தியாகத்தால் அம்மாவட்ட மக்களின் மனங்களில் இன்றும் உயர்ந்து நிற்கும் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸின் நினைவினை போற்றிடும் வகையில், அவரின் பிறந்த நாளை நவம்பர் 15-ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

திமுக அரசு பொறுப்பேற்றதும் ராவ் பகதூர் பர்னாந்தீஸ்க்கு நினைவு மண்டபம் கட்டப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதற்கிணங்க, அவருடைய பிறந்த நாளில் அவரின் புகழுக்கு மென்மேலும் பெருமை சேர்க்கும் வகையில், தூத்துக்குடியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக அரசின்சார்பில் அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

12. 163 நாடுகள் ஆதரித்து ஓட்டு உலக சட்ட ஆணையம் உறுப்பினர் தேர்தலில் கொடி நாட்டிய இந்தியா: சீனாவை பின்னுக்கு தள்ளி வெற்றி

ஐநா.வின் சர்வதேச சட்ட ஆணையம் 1947ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. சர்வதேச சட்டங்கள் மற்றும் அதன் விதி தொகுப்புகளை மேம்படுத்தி, பரிந்துரை வழங்குவதும், ஊக்குவிப்பதும் இதன் முக்கிய பணியாகும். இதன் உறுப்பினர் பதவிக்கு எப்போதும் கடும் போட்டி நிலவும். இந்நிலையில், இந்த ஆணையத்தின் உறுப்பினர் பதவிக்கு இந்தியாவின் ராஷ்டிரிய ரக்ஷா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தரும், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழுவின் உறுப்பினருமான பிமல் படேல் தேர்வாகி உள்ளார். ஐநா.வின் மொத்தமுள்ள 192 உறுப்பினர் நாடுகள் வாக்களித்த இந்த தேர்தலில், சீனா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட ஆசியா-பசிபிக் குழுவில் இடம் பெற்றுள்ள 11 நாடுகள், 8 இடங்களை குறி வைத்து போட்டியிட்டன.

இதனால், கடும் போட்டிய நிலவிய நிலையில், பிமல் படேல் 163 வாக்குகளைப் பெற்று தேர்வு செய்யப்பட்டார். இவர் அடுத்தாண்டு ஜனவரி 1ம் தேதி பொறுப்பேற்பார். இவரது பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும். படேலை தொடர்ந்து தாய்லாந்து 162, ஜப்பான் 154, வியட்நாம் 145, சீனா 142 வாக்குகள் பெற்றன. இதற்கு முன்பு, பிமல் படேல் நெதர்லாந்தின் ஹேக் நகரில் செயல்படும் ஐநா.வின் இளைஞர்கள் மற்றும் ரசாயன ஆயுதங்கள் தடை அமைப்பில் 15 ஆண்டுகளாக பணியாற்றி உள்ளார். சர்வதேச சட்ட ஆணையத்தின் உறுப்பினராக பிமல் படேல் தேர்வானதற்கு ஐநா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் டிஎஸ். திருமூர்த்தி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பலம் சேர்க்கும்

* ஆசியா-பசிபிக் பகுதியில் தென் சீன கடல் உள்ளிட்ட பகுதிகளில் சீனா சட்ட விரோதமாக ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் நிலையில், சர்வதேச சட்ட ஆணையத்துக்கு பிமல் படேல் தேர்வாகி இருப்பது, இந்தியாவுக்கு பலம் சேர்த்துள்ளது.

* சர்வதேச சட்ட ஆணையத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 34. இதற்கு தேர்வு செய்யப்படுபவர்கள், சர்வதேச சட்டத்தில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்.

* ஒவ்வொரு நாட்டு அரசினால் அங்கீகரிக்கப்பட்ட நபர்களே, ஐநா.வில் நடக்கும் சர்வதேச சட்ட ஆணைய உறுப்பினர் தேர்தலில் போட்டியிட முடியும்.

1. When is the ‘International Day for Preventing the Exploitation of the Environment in War and Armed Conflict’ observed every year?

A) November 4

B) November 6 

C) November 8

D) November 10

  • In the year 2001, the UN General Assembly declared 6 November of each year as the International Day for Preventing the Exploitation of the Environment in War and Armed Conflict.
  • The United Nations Environment Assembly also adopted a resolution in 2016 which proclaimed that a healthy environment plays a significant role in reducing the probability of an armed conflict. The aim is to minimize the consequences of conflict and wars on the environment.

2. Which Union Ministry announced the first–ever ‘Star College Mentorship Programme’?

A) Ministry of Education

B) Ministry of Electronics and IT

C) Ministry of Science and Technology 

D) Ministry of Skill Development and Entrepreneurship

  • Ministry of Science and Technology launched the first–ever mentorship programme for young innovators to mark the 75th year of India’s independence.
  • Named the ‘DBT–Star College Mentorship Programme’, it aims for a ‘Star College’ in every district of the country supported by the Department of Biotechnology (DBT), under the science and technology ministry. It also aims to organise workshops and meetings every month, handhold colleges particularly in the rural areas and outreach activities with government schools.

3. Which state was formed on Nov.9 as the 27th state of India?

A) Jharkhand

B) Uttarakhand 

C) Chhattisgarh

D) Telangana

  • Uttarakhand Foundation Day is observed annually on November 9 to celebrate the formation of the 27th state of India. Uttarakhand was formed in the year 2000 after joining several districts from the North–western part of Uttar Pradesh and a portion of the Himalayan Mountain range. It was earlier known as Uttaranchal and was renamed Uttarakhand in the year 2007.

4. Every year, National Education Day is observed on 11th November, to commemorate which leader?

A) APJ Abdul Kalam

B) Vallabhbhai Patel

C) Mother Teresa

D) Maulana Abul Kalam Azad 

  • Every year, 11th November is observed in India as National Education Day, to commemorate the Birth anniversary of Maulana Abul Kalam Azad. He was a freedom fighter and the first education minister of independent India. It was during his tenure as education minister, UGC, AICTE, Kharagpur Institute of higher education etc were established.

5. Which state celebrates ‘Onake Obavva Jayanti’?

A) Karnataka 

B) Odisha

C) West Bengal

D) Punjab

  • The Karnataka government has approved a celebration of ‘Onake Obavva Jayanti’ on the 11th of November from this year. She was a famous woman–soldier who had fought against the forces of Hyder Ali in Chitradurga in the 18th century.
  • The Kannada and Culture Department had proposed celebrating the birth anniversary of Onake Obavva every year.

6. Airports in India are declared as “Major Airports” as per the regulations of which Act?

A) Airports Authority of India Act

B) Airports Regulation Act

C) Civil Aviation Act

D) Airports Economic Regulatory Authority Act 

  • The Government of India has declared Shirdi airport in Maharashtra as a major airport, under the Airports Economic Regulatory Authority Act, 2008. Under Section 13 of the Act, the Airports Economic Regulatory Authority (AERA) would determine the tariff related to aeronautical services rendered at major airports.

7. The rocket of which space agency has carried the 600th person to space?

A) JAXA

B) ESA

C) ISRO

D) Space X 

  • American private space agency Space X has launched its spacecraft named Crew Dragon Endurance, carrying four astronauts into orbit to the International Space Station. This includes the 600th person to reach space in 60 years. The spaceship was launched using SpaceX Falcon 9 rocket. Space X is headquartered in Hawthorne, California and was founded in 2002 by Elon Musk.

8. Who has been appointed as the Secretary General of Rajya Sabha?

A) PC Mody 

B) Sanjay Jaiswal

C) Amit Shah

D) Rajnath Singh

  • PC Mody, the former chairman of the Central Board of Direct Taxes and an Indian Revenue Service (IRS) officer has been appointed as the Rajya Sabha’s secretary general. This is one of the rare appointments, since an IRS officer is being appointed as the Secretary General, a position which has been traditionally occupied by IAS officers.

9. Seahorses, eels, seals and sharks have been found in which famous river of the world, which was declared biologically dead?

A) Ganga

B) Yamuna

C) Nile

D) Thames 

  • The Thames River of London, which was once declared to be “Biologically Dead” is not found to have Seahorses, eels, seals and sharks. This inhibition by aquatic life has been confirmed in a survey conducted by the Zoological Society of London, which stated that 3 kinds of sharks were seen and 115 species of fish and wildlife were observed.

10. Where is the ‘Rezang La’ mountain pass situated?

A) Ladakh 

B) Jammu and Kashmir

C) Uttarakhand

D) Arunachal Pradesh

  • The Rezang La, is a mountain pass on the Line of Actual Control, situated in Eastern Ladakh. This is known for the Battle of Rezang La, as a part of 1962 war in which 13 troops of the Indian Army’s Kumaon Regiment defeated several waves of the Chinese Army at a height of over 16,000 feet. Defence Minister Rajnath Singh is set to inaugurate the revamped war memorial at Rezang La in memory of the battle.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!