Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

14th & 15th January 2021 Tnpsc Current Affairs in Tamil & English

14th & 15th January 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 14th & 15th January 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

14th & 15th January 2021 Tnpsc Current Affairs in Tamil

1. ‘STEM’ கல்வியை மேம்படுத்துவதற்காக, நாடு முழுவதுமுள்ள 100 அடல் டிங்கரிங் ஆய்வகங்களை பயன்படுத்தவுள்ள அமைப்பு எது?

அ) DRDO

ஆ) ISRO

இ) BARC

ஈ) இந்திய வான்படை

  • நாடு முழுவதும் STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்), விண்வெளி கல்வி மற்றும் விண்வெளி தொழில்நுட்பம் சம்பந்தமான புதுமைகளை பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் வகையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISRO, 100 அடல் ஆய்வகங்களைப் பயன்படுத்த இருப்பதாக அடல் புத்தாக்க இயக்கம், NITI ஆயோக், ISRO ஆகியவை அறிவித்துள்ளன.

2. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘பாரம்பரிய நிலைமாற்று குழு’வானது, கீழ்க்காணும் எந்த மத்திய அமைச்சகத்தின் அதிகாரியின் தலைமையில் உள்ளது?

அ) உள்துறை அமைச்சகம்

ஆ) வீட்டுவசதி & நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

இ) கலாச்சார அமைச்சகம்

ஈ) சுற்றுலா அமைச்சகம்

  • ‘பாரம்பரிய நிலைமாற்று குழு’வானது (Heritage Conversation Committee – HCC) மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் தலைமையில் உள்ளது.
  • புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கான நடுவணரசின் முன்மொழிவை இக் குழு அண்மையில் அனுமதித்துள்ளது. மத்திய விஸ்டா திட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்ததுடன், திட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு HCC’இன் ஒப்புதல் கட்டாயம் எனக்கூறியது. இக்குழுவில் பிற துறைகளைச் சார்ந்த அதிகாரிகளும் உள்ளனர்.

3. இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் எத்தனை சதவீதம் பாதுகா -க்கப்பட்ட பகுதிகளாக உள்ளன?

அ) 2.5%

ஆ) 5%

இ) 7.5%

ஈ) 10%

  • மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், 146 தேசிய பூங்கா மற்றும் வனவுயிரி சரணாலயங்கள் மற்றும் நாட்டின் உயிரியல் பூங்காக்களின் மேலாண்மை செயல்திறன் மதிப்பீட்டை வெளியிட்டார்.
  • தற்போது, இந்தியாவில் 903 பாதுகாக்கப்பட்ட பகுதிகள் உள்ளன. அது, நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 5% ஆகும். ஒவ்வோர் ஆண்டும் 10 சிறந்த தேசிய பூங்காக்கள், 5 கடலோர மற்றும் கடல் பூங்காக்கள் மற்றும் நாட்டின் முதல் 5 உயிரியல் பூங்காக்கள் தரவரிசைப்படுத்தப் -பட்டு அவற்றுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

4. ‘Sea Vigil – 21’ என்பது பின்வரும் எந்த நாட்டால் நடத்தப்படும் பாதுகாப்புப் பயிற்சியாகும்?

அ) இந்தியா

ஆ) இலங்கை

இ) சீனா

ஈ) ஐக்கியப் பேரரசு

  • ஈராண்டுக்கு ஒருமுறை நிகழும் நாடு தழுவிய கடலோரப் பாதுகாப்பு பயிற்சியான ‘கடல் கண்காணிப்பு – 21’, 2021 ஜன.12 & 13 ஆகிய தேதிகளில் நடந்தது. 2019 ஜனவரியில் தொடங்கப்பட்ட இந்தப்பயிற்சி, 7516 கி.மீ நீளமுள்ள ஒட்டுமொத்த கடற்கரைப் பகுதியிலும், இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திலும் நடத்தப்படும்.
  • அனைத்து பதிமூன்று கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் இதில் ஈடுபடும். கடல்சார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை மேம்படுத்துவதை இந்த பயிற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

5. கோவாவில் நடக்கும் 51ஆவது பன்னாட்டு திரைப்பட விழாவில் சிறப்பு கவனம் பெறும் நாடு எது?

அ) பிரான்ஸ்

ஆ) இரஷ்யா

இ) வங்காளதேசம்

ஈ) இலங்கை

  • 2021 ஜன.16-24 வரை திட்டமிடப்பட்டுள்ள இந்தியாவின் 51ஆவது பன்னாட்டு திரைப்பட விழாவில், வங்கதேசம் சிறப்பு கவனம் பெறும் நாடாக உள்ளது. திரைத்துறைக்கான அந்நாட்டின் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக, 4 வங்கதேச திரைப்படங்கள் சிறப்பு கவனப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன.
  • 51ஆவது இந்திய பன்னாட்டு திரைப்பட விழா, 2020’க்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய திரைப்படங்களின் பட்டியலில் தமிழ் திரைப் படங்களான அசுரன் மற்றும் தேன் இடம்பெற்றுள்ளன என்பது கவனிக்கத்தக்கது.

6. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சீர்திருத்தங்களை நிறைவு செய்த முதலாவது வடகிழக்கு மாநிலமும், கூடுதல் கடன் பெறுவதற்கு ஒப்புதல் பெற்ற மாநிலமும் எது?

அ) நாகாலாந்து

ஆ) அருணாச்சல பிரதேசம்

இ) மணிப்பூர்

ஈ) திரிபுரா

  • மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத்துறை, கடந்த 2020 மே 17 அன்று அறிவித்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புச் சீர்திருத்தங்களை, மணிப்பூர் நான்காவது மாநிலமாக அமல்படுத்தியுள்ளது. இதையடுத்து, இந்த மாநிலம் திறந்தவெளிச் சந்தைக் கடன் முறை மூலம், `75 கோடி கடனைக் கூடுதலாகப் பெற தகுதிபெற்றுள்ளது.
  • ஏற்கனவே இந்தச் சீர்திருத்தங்களை நிறைவேற்றியுள்ள ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களுடன் மணிப்பூர் தற்போது இணைந்துள்ளது.

7. “புதுப்பிக்கப்பட்ட பெண்கள் தொழில்முனைவு தளத்தை” தொடங்குவதற்காக, எந்த மின்னணு-வணிக நிறுவனத்துடன் NITI ஆயோக் கூட்டிணைந்துள்ளது?

அ) அமேசான்

ஆ) பிளிப்கார்ட்

இ) மிந்த்ரா

ஈ) ஸ்னாப்டீல்

  • “புதுப்பிக்கப்பட்ட பெண்கள் தொழில்முனைவு தளத்தைத் தொடங்க, NITIT ஆயோக், பிளிப்கார்ட்டுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்தியாவில் பெண் தொழில்முனைவோருக்கு சமூக அனுபவத்தை மேம்படுத்தும் முயற்சியாக இது கருதப்படுகிறது. இத்தளம், இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த பெண்களை ஒன்றிணைத்து, அவர்களின் தொழில்முனைவு எண்ணங்களை உணர்ந்துகொள்ளும்.

8. நிதி நிலைத்தன்மை அறிக்கையை வெளியிடுகிற அமைப்பு எது?

அ) உலக வங்கி

ஆ) IMF

இ) இந்திய ரிசர்வ் வங்கி

ஈ) ஆசிய வளர்ச்சி வங்கி

  • இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள நிதி நிலைத்தன்மை அறிக்கை, ஆனது, 2020 செப்டம்பர் மாதத்தில் 7.5% ஆக இருந்த இந்தியாவில் உள்ள வங்கிகளின் மொத்த செயல்படாத சொத்துக்கள், 2021 செப்டம்பர் மாதத்திற்குள் 13.5% ஆக உயரலாம் எனக்கணித்துள்ளது. கடும் நிதி அழுத்த சூழ்நிலையில், இந்தச்சதவீதம் 14.8% ஆக மோசமடையக்கூடும்.

9. ஆயுதப்படை படைவீரர்கள் நாள் கொண்டாடப்படும் தேதி எது?

அ) ஜனவரி 11

ஆ) ஜனவரி 12

இ) ஜனவரி 13

ஈ) ஜனவரி 14

  • முதல் இந்திய இராணுவத் தளபதி K M கரியப்பாவின் ஓய்வுத்தேதியை நினைவுகூரும் வகையில், 2017’இல் நிறுவப்பட்டதிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் ஜன.14 அன்று ‘ஆயுதப்படை படைவீரர்கள் நாள்’ கொண்டாட -ப்பட்டு வருகிறது. K M கரியப்பா, 1949 முதல் 1953 வரை இந்திய இராணுவத்தின் தளபதியாக பணியாற்றினார்.

10. ஒவ்வோர் ஆண்டும், இந்தியா முழுவதும், ‘இராணுவ நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?

அ) ஜனவரி 12

ஆ) ஜனவரி 13

இ) ஜனவரி 14

ஈ) ஜனவரி 15

  • ஒவ்வோர் ஆண்டும் ஜன.15ஆம் தேதியன்று, ‘இராணுவ நாள்’ நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 73ஆவது ‘இராணுவ நாள்’ அண்மையில் 2021 ஜன.15 அன்று அனுசரிக்கப்பட்டது.
  • 1949 ஜன.15 அன்று, ஜெனரல் K M கரியப்பா, விடுதலைக்குப்பிறகான இந்திய இராணுவத்தின் முதல் தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றார். அந்நாள் ஒவ்வோர் ஆண்டும் ‘இராணுவ நாளாக’ நினைவுகூரப்படுகிறது.

1. Which organisation is to adopt 100 Atal Tinkering Labs across the country, to promote ‘STEM’ Education?

A) DRDO

B) ISRO

C) BARC

D) Indian Air Force

  • Atal Innovation Mission of NITI Aayog and Indian Space Research Organization (ISRO) jointly announced that ISRO will adopt 100 Atal Tinkering Labs across the country.
  • This step aims to provide mentorship, promote education in the field of Science, Technology, Engineering and Mathematics (STEM) and Space Education among the young students of the country.

2. ‘The Heritage Conversation Committee’, which was in the news recently, is headed by the official of which Union Ministry?

A) Ministry of Home Affairs

B) Ministry of Housing and Urban Affairs

C) Ministry of Culture

D) Ministry of Tourism

  • ‘The Heritage Conversation Committee’ (HCC) is headed by the Additional Secretary of the Union Ministry of Housing and Urban Affairs. The Committee has recently cleared the proposal of the Central Government for the new Parliament building.
  • The Supreme Court approved the Central Vista project and mandated the clearance from HCC for developing the project. The Committee also includes officials from other departments.

3. What percent of the total geographic area of India is occupied by the Protected Areas?

A) 2.5%

B) 5%

C) 7.5%

D) 10%

  • Union Minister for Environment, Forest and Climate Change Prakash Javadekar released Management Effectiveness Evaluation (MEE) of 146 National Park and Wildlife Sanctuaries as well as that of the zoos in the Country. At present, India has 903 Protected Areas, which covers about 5% of the total geographic area of the country.
  • 10 best National Parks, 5 coastal and Marine parks and top five Zoos in the country will be ranked and awarded every year.

4. ‘Sea Vigil–21’ is a Defence Exercise undertaken by which country?

A) India

B) Sri Lanka

C) China

D) United Kingdom

  • The Indian Navy is undertaking a two–day military exercise, also claimed to be India’s largest coastal defence drill. The exercise is to cover India’s coastline spanning over 7500 kilometers, involving 13 coastal States and Union Territories. The second edition of the exercise aims to enhance maritime security and surveillance.

5. Which is to be the country in focus at the 51st International Film Festival of India (IFFI) in Goa?

A) France

B) Russia

C) Bangladesh

D) Sri Lanka

  • Bangladesh is to be the focus country at the 51st International Film Festival of India (IFFI), scheduled from January 16 to 24, this year. Four films from Bangladesh have been included in the focus section, to recognise the cinematic contribution of the country. It is noteworthy that the 51st Indian International Film Festival has included Tamil films Asuran and Then in the list of Indian films selected for 2020.

6. Which is the first North–Eastern state to complete urban local bodies reforms and was approved for additional borrowing?

A) Nagaland

B) Arunachal Pradesh

C) Manipur

D) Tripura

  • Manipur has become the fourth State in the country to complete urban local bodies reforms. It is also the first North–Eastern state, joining the list of three states namely Andhra Pradesh, Madhya Pradesh and Telangana.
  • In response, the state also received the Union Finance Ministry’s approval to mobilise additional financial resources of Rs 75 crore through open market borrowings.

7. NITI Aayog has partnered with which e–commerce major to launch “revamped Women Entrepreneurship Platform”?

A) Amazon

B) Flipkart

E) Myntra

D) Snapdeal

  • The nation’s premier think tank NITI Aayog has partnered with e commerce major Flipkart, to launch the revamped Women Entrepreneurship Platform. This is seen as an effort to enhance the community experience for women entrepreneurs in India.
  • This portal brings together women from different parts of India to realize their entrepreneurial aspirations.

8. The Financial Stability Report (FSR) is released by which organisation?

A) World Bank

B) IMF

C) Reserve Bank of India

D) Asian Development Bank

  • The Financial Stability Report (FSR) released by Reserve Bank of India has predicted that gross non–performing assets of Banks in India, may rise to 13.5% by September 2021 from the level of 7.5% in September 2020. The report has also stated that in case of a severe stress scenario, the Gross NPA may further worsen to 14.8%.

9. On which date, ‘Armed Forces Veterans Day’ celebrated across India?

A) January 11

B) January 12

C) January 13

D) January 14

  • The Armed Forces Veterans Day is celebrated on January 14 every year and was instituted in the year 2017, to commemorate the retirement date of the first Indian Chief of Army Staff, K M Cariappa. He served as the Chief of Army Staff from 1949 to 1953.

10. When is the Army Day celebrated across India, every year?

A) January 12

B) January 13

C) January 14

D) January 15

  • Army Day is celebrated every year on January 15, across the country to honour the contributions made by the soldiers to the country. The 73rd Army day was recently observed on January 15, 2021. On January 15, 1949, General KM Carriappa became the first Commander–in–Chief of Indian Army after Independence. This day is being commemorated every year as Army Day.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!