TnpscTnpsc Current Affairs

14th & 15th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English

14th & 15th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 14th & 15th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

May Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. 2022-2024-க்கான ஆசிய தேர்தல் அதிகாரிகளின் சங்கத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாடு எது?

அ. ரஷ்யா

ஆ. அமெரிக்கா

இ. இந்தியா 

ஈ. சீனா

 • 2022-2024-க்கு இடைப்பட்ட ஆண்டிற்கான ஆசிய தேர்தல் அதிகாரிகளின் சங்கத்தின் (AAEA) புதிய தலைவராக இந்தியா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்குமுன் பிலிப்பைன்ஸ் AAEA-இன் தலைவராக இருந்தது. தற்போது, 20 ஆசிய தேர்தல் மேலாண்மை அமைப்புகள் AAEA-இன் உறுப்பினர்களாக உள்ளன. இந்திய தேர்தல் ஆணையமானது AAEA-இன் நிறுவன உறுப்பினராகும். உருசியா, உஸ்பெகிஸ்தான், இலங்கை, மாலத்தீவுகள், தைவான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவை இதன் புதிய உறுப்பினர்களாகும்.

2. கட்டலின் நோவக் என்பார் கீழ்காணும் எந்த நாட்டின் முதல் பெண் மற்றும் இளவயது அதிபராக அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்?

அ. பின்லாந்து

ஆ. ருமேனியா

இ. ஹங்கேரி 

ஈ. போலந்து

 • ஹங்கேரியின் முதல் பெண் அதிபராக கட்டலின் நோவாக்கை ஹங்கேரிய நாடாளுமன்றம் தேர்வுசெய்துள்ளது. 44 வயதான அவர் ஹங்கேரியின் மிகவும் இளவயது அரச தலைவர் ஆவார். நோவக், சமீபத்தில் குடும்பக் கொள்கை அமைச்சராகப் பணியாற்றியவராவார். இளம் இணையர்கள் அதிக குழந்தைகளைப் பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட வரிச்சலுகைகள் மற்றும் கையேடுகள் உள்ளிட்ட அரசாங்கக் கொள்கைகளுக்காக அவர் பிரபலமாக அறியப்பட்டார்.

3. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘தக்காளி காய்ச்சல்’ சார்ந்த மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளம் 

இ. கர்நாடகா

ஈ. ஒடிஸா

 • அண்மையில் கேரள மாநிலத்தில் பரவிவரும், ‘தக்காளி காய்ச்சல்’ பரவியதை அடுத்து, அண்டை மாநிலங்களில் அந்நோய்ப்பரவாமல் தடுக்க கண்காணிப்பு பணியில் தீவிரங்காட்டி வருகின்றனர். ‘தக்காளி காய்ச்சல்’ என்பது ஓர் அரியவகை தீநுண்ம நோயாகும்; இது காய்ச்சல், தோலில் எரிச்சல், தடிப்புகள் மற்றும் நீரிழப்பு ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. இது 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளைப்பாதிக்கிறது. பெரிய சிவப்புநிற கொப்புளங்களை இந்நோய் ஏற்படுத்துவதால் அதற்கு இப்பெயர் வாய்க்கப்பெற்றது. குறிப்பிட்ட மருந்து என எதுவும் இந்நோய்க்குக் கிடையாது. இது மற்ற காய்ச்சல் வகைகளைப் போலவே தொற்றுந்தன்மை கொண்டதால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை தனிமைப்படுத்துவது கட்டாயமாகிறது.

4. 2022ஆம் ஆண்டுக்கான ‘டெம்பிள்டன்’ பரிசைப் பெற்றவர் யார்?

அ. ரோஜர் பென்ரோஸ்

ஆ. ஜேம்ஸ் பீபிள்ஸ்

இ. ஆர்தர் அஷ்கின்

ஈ. பிராங்க் வில்செக் 

 • நோபல் பரிசாளரான கோட்பாட்டு இயற்பியலாளரும் எழுத்தாளருமான பிராங்க் வில்செக், இந்த ஆண்டின் (2022) மதிப்புமிக்க, ‘டெம்பிள்டன்’ பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார். இந்த விருது 1972-இல் மறைந்த கொடையாளி சர் ஜான் டெம்பிள்டனால் நிறுவப்பட்டது. அறிவியல் மற்றும் ஆன்மீகத்தின் இணைவைக்குறிக்கும் நபர்களுக்கு இது வழங்கப்படுகிறது. ஜேன் குடால், அன்னை தெரசா, தலாய் லாமா மற்றும் பேராயர் டெஸ்மண்ட் டுட்டு ஆகியோர் இதற்குமுன் இவ்விருதைப் பெற்றுள்ளனர்.

5. எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 2022 ஏப்ரலில் மிகவுயர்ந்த புள்ளியை எட்டிய இந்தியாவின் சில்லறை பணவீக்க சதவீதம் என்ன?

அ. 8.01%

ஆ. 7.85%

இ. 7.79% 

ஈ. 7.50%

 • 2022 ஏப்ரலில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 7.79 சதவீதமாக உயர்ந்தது. எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் உந்தப்பட்டு, கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த உச்சத்தை அது எட்டியுள்ளது. இதற்கு முன் அதிகபட்சமாக 2014 மேயில் 8.33 சதவீதமாக அது இருந்தது. மார்ச் மாதத்தில் 6.95 சதவீத பணவீக்கம் பதிவாகியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் சில்லறை பணவீக்கத்திற்கான அதிகபட்ச சகிப்புத்தன்மை வரம்பு 6% ஆகும்.

6. PMFBY மற்றும் KCC-க்கான தொழில்நுட்ப ஆதரவுக்காக, மத்திய உழவு அமைச்சகம், எந்த நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?

அ. FAO

ஆ. UNDP 

இ. IMF

ஈ. WMO

 • இந்திய அரசின் உழவு மற்றும் உழவர்கள்நல அமைச்சமும் ஐநா வளர்ச்சித் திட்டமும் (UNDP) அண்மையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, பிரதமர் பசல் பீமா யோஜனா (PMFBY) திட்டம் மற்றும் கிசான் கடனட்டை – மாற்றியமைக்கப்பட்ட வட்டி மானியத் திட்டத்திற்கு UNDP தொழில்நுட்ப ஆதரவை வழங்கும். UNDP ஆனது கடந்த நான்காண்டுகளாக தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருகிறது.

7. ‘BHARAT TAP’ திட்டத்தை அறிமுகப்படுத்திய மத்திய அமைச்சகம் எது?

அ. ஜல் சக்தி அமைச்சகம்

ஆ. வீட்டுவசதி & நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் 

இ. வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம்

ஈ. MSME அமைச்சகம்

 • மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சர் ஹர்தீப் S பூரி, ‘பிளம்பெக்ஸ் இந்தியா’ என்ற கண்காட்சியில் ‘BHARAT TAP’ என்ற முன்னெடுப்பைத் தொடங்கினார். ‘BHARAT TAP’ என்ற இந்த முன்முயற்சி மூலம் நீர்நுகர்வு கணிசமாகக் குறைக்கப்படும். ஆண்டுக்கு 500 கோடி லிட்டர் தண்ணீரைச்சேமிக்கும், ‘நிர்மல் ஜல் பிரயாஸ்’ திட்டத்தையும் பூரி அப்போது அறிமுகப்படுத்தினார்.

8. ‘YUVA (இளையோர்) சுற்றுலா மன்றங்கள்’ அமைப்பதாக அறிவித்துள்ள நிறுவனம் எது?

அ. CBSE 

ஆ. UGC

இ. ISRO

ஈ. NITI ஆயோக்

 • மத்திய இடைநிலைக் கல்வி வாரியமானது (CBSE) அனைத்து CBSE இணைப்புப் பள்ளிகளுக்கும், இளையோர் சுற்றுலா மன்றங்களை உருவாக்குவது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. மத்திய சுற்றுலா அமைச்சகம், ‘விடுதலையின் அமுதப்பெருவிழா’ கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக, ‘இளையோர் சுற்றுலா மன்றங்களை’த் தொடங்கியுள்ளது. இந்திய சுற்றுலாவின் இளந்தூதர்களை வளர்ப்பதையும் மேம்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. அவர்கள் இந்திய சுற்றுலாபற்றி அறிந்துகொள்ளவும், நமது வளமான கலாச்சார பாரம்பரியத்தைப் புரிந்துகொள்ளவும் மற்றும் சுற்றுலா மீதான ஆர்வத்தை வளர்க்கவும் இது உதவும்.

9. ‘காமன்வெல்த் பாயின்ட்ஸ் ஆஃப் லைட்’ விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கிஷோர் குமார் தாஸ் சார்ந்த நாடு எது?

அ. இந்தியா

ஆ. இலங்கை

இ. வங்காளதேசம் 

ஈ. நேபாளம்

 • சிறந்த தனிப்பட்ட தன்னார்வலர்களை அங்கீகரிக்கும், ‘காமன்வெல்த் பாயின்ட்ஸ் ஆஃப் லைட்’ விருதுக்கு, ‘வித்யானந்தோ’ என்ற கல்வித் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர், வங்கதேசத்தைச் சார்ந்த கிஷோர் குமார் தாஸ் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். விளிம்புநிலை பின்னணியில் உள்ள குழந்தைகளுக்கு கல்விக்கான அணுகலை வளர்த்தெடுப்பதில் அவராற்றிய சிறப்பான பணிக்காக அவர் இவ்விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று பிரிட்டிஷ் உயராணையரகம் தெரிவித்துள்ளது. கிஷோர் தாஸ், கடந்த 2013ஆம் ஆண்டில் ‘பித்யானந்தோ’வை அமைத்தார்; இது பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு இலவசக்கல்வி மற்றும் உணவுத்திட்டத்தை வழங்கும் 5 தொடக்கப்பள்ளிகளை நடத்தி வருகிறது.

10. எந்த ஆங்கில ஆசிரியரின் நினைவாக, ஐநா, ஆங்கில மொழி நாளை ஏப்.23 அன்று கொண்டாடுகிறது?

அ. வால்ட் விட்மேன்

ஆ. வில்லியம் ஷேக்ஸ்பியர் 

இ. R W எமர்சன்

ஈ. இராபர்ட் பிரோஸ்ட்

 • ஆங்கில நாடக ஆசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியரின் நினைவாக, அவரது பிறந்த நாள் மற்றும் இறந்த நாள் ஆகிய இரண்டையும் குறிக்கும் வகையில், ஐநா அவை ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல்.23 அன்று ஆங்கில மொழி நாளைக் கொண்டாடுகிறது. பன்மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதற்காக, ஐநா தனது ஆறு அதிகாரப்பூர்வ மொழிகள் ஒவ்வொன்றிற்கும் மொழி நாளைக் கடைப்பிடிக்கிறது. சுபானிய எழுத்தாளர் மிகுவல் டி செர்வாண்டஸ் சாவேத்ராவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஐநா, சுபானிய மொழி நாளையும் ஏப்ரல்.23 அன்று அனுசரிக்கிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

Newspaper, news icon - Free download on Iconfinder

Newspaper, news icon - Free download on Iconfinder

1. இந்தியாவின் 25ஆவது தலைமைத் தேர்தல் ஆணையராக இராஜீவ் குமார் பொறுப்பேற்றார்

மே 12 தேதியிட்ட இந்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் அரசிதழ் அறிவிப்பின்படி, புது தில்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இராஜீவ் குமார் இன்று இந்தியாவின் 25ஆவது தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

2. திரிபுராவின் புதிய முதல்வர் மாணிக் சாஹா

திரிபுரா மாநிலத்தின் புதிய முதல்வராக மாணிக் சாஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிய முதல்வரான மாணிக் சாஹா தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். விரைவிலேயே, அவர் தனது மாநிலங்களவை எம் பி பதவியை விலக்கிவிட்டு திரிபுராவில் ஏதாவது தொகுதி ஒன்றில் போட்டியிடலாம் எனக் கூறப்படுகிறது. வடகிழக்கு மாநிலமான திரிபுராவில், அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3. கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை

உள்நாட்டில் விலை அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தத் தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் சில்லறைப் பணவீக்கத்தின் மதிப்பு கடந்த ஏப்ரலில் 8 ஆண்டுகள் காணாத அளவுக்கு 7.79 சதவீதமாக அதிகரித்தது. முக்கியமாக, உணவுப் பொருள்களின் பணவீக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. கச்சா எண்ணெய் விலை உயர்வும் ஒட்டுமொத்த பணவீக்க மதிப்பு உயர்ந்ததற்கு மற்றொரு காரணமாக அமைந்தது. இதனிடையே, பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக இந்திய ரிசர்வ் வங்கி, வட்டி விகிதங்களை அண்மையில் உயர்த்தியது. இந்நிலையில், உணவுப்பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசும் தொடங்கியுள்ளது.

இதுதொடர்பாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் வெளியிட்ட அறிக்கையில், “கோதுமை ஏற்றுமதிக்கு உடனடியாகத் தடை விதிக்கப்படுகிறது. எனினும், அறிவிக்கை வெளியிடப்படுவதற்கு முன்பு வரை ஏற்றுமதி செய்ய அனுமதி பெற்றிருந்தோர், கோதுமையை அனுப்பலாம். உணவுப் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு வெளிநாடுகள் கோரிக்கைவிடுக்கும்பட்சத்தில், மத்திய அரசு அனுமதி அளித்தால் அந்நாடுகளுக்கு கோதுமையை ஏற்றுமதி செய்யலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் 1 கோடி டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், இதுவரை 9,63,000 டன் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கோதுமை ஏற்றுமதிக்காக மொராக்கோ, துனிசியா, இந்தோனேசியா, பிலிப்பின்ஸ், தாய்லாந்து, வியத்நாம், லெபனான் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்நிலையில், உள்நாட்டு நிலைமையைக் கருத்தில்கொண்டு கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதே வேளையில், வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை DGFT நீக்கியுள்ளது.

1. Which country has been elected as the new Chair of the Association of Asian Election Authorities (AAEA) for 2022–2024?

A. Russia

B. USA

C. India 

D. China

 • India has been unanimously elected as the new Chair of the Association of Asian Election Authorities (AAEA) for 2022–2024. Commission on Elections, Philippines was the previous chair of AAEA. Currently, 20 Asian Election Management Bodies (EMB) are members of AAEA and Election Commission of India (ECI) is a founder member of the EMB of AAEA. New members include Russia, Uzbekistan, Sri Lanka, Maldives, Taiwan, and the Philippines.

2. ‘Katalin Novak’ was elected recently as the first female and youngest President of which country?

A. Finland

B. Romania

C. Hungary 

D. Poland

 • The Hungarian Parliament has elected Katalin Novak as the country’s first–ever female president. The 44–year–old Minister is also Hungary’s youngest–ever head of state. Novak, who recently served as a minister for family policy. She was known for the government policies including tax breaks and handouts designed to encourage young families to have more children.

3. ‘Tomato Flu’, which was seen in the news recently, is endemic to which state?

A. Tamil Nadu

B. Kerala 

C. Karnataka

D. Odisha

 • After the recent outbreak of ‘Tomato flu’, which was endemic to Kerala, the neighbouring states are ramping up surveillance to prevent the disease. The tomato flu is a rare viral disease, which causes fever, skin irritation, rashes and dehydration. It affects children below five years of age and gets its name from the large red–coloured blisters it causes. There is no specific drug and the infected children are to be isolated, as it is contagious like other flu types.

4. Who is the recipient of the 2022 Templeton Prize?

A. Roger Penrose

B. James Peebles

C. Arthur Ashkin

D. Frank Wilczek 

 • Frank Wilczek, the Nobel Prize–winning theoretical physicist and author was honoured with this year’s prestigious Templeton Prize. The Award was established in 1972 by the late philanthropist Sir John Templeton. It is awarded to individuals whose life’s work symbolises a fusion of science and spirituality. Previous winners include Jane Goodall, Mother Teresa, the Dalai Lama and Archbishop Desmond Tutu.

5. What is India’s retail inflation in April 2022, as it touched its highest point in eight years?

A. 8.01 %

B. 7.85 %

C. 7.79 % 

D. 7.50 %

 • India’s retail inflation in April 2022 surged to 7.79 per cent in April, largely driven by rising fuel and food prices, touching its highest point in last eight years. The previous high was recorded at 8.33 per cent in May 2014. 6.95 per cent inflation is recorded in the month of March. Reserve Bank of India’s (RBI’s) upper tolerance limit for retail inflation is 6 %.

6. Agriculture Ministry signed a MoU with which organisation for technical support towards PMFBY and KCC?

A. FAO

B. UNDP 

C. IMF

D. WMO

 • The Ministry of Agriculture & Farmers Welfare (MoA&FW), Government of India and the United Nations Development Programme (UNDP) have recently signed a Memorandum of Understanding (MoU). As per the MoU, UNDP will provide technical support towards the Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY) scheme & Kisan Credit Card – Modified Interest Subvention Scheme. UNDP has been providing technical assistance for the last 4 years.

7. Which Union Ministry launched ‘BHARAT TAP’ initiative?

A. Ministry of Jal Shakti

B. Ministry of Housing and Urban Affairs 

C. Ministry of Agriculture & Farmers Welfare

D. Ministry of MSME

 • Minister for Housing and Urban Affairs Hardeep S Puri launched the BHARAT TAP initiative at the ‘Plumbex India’ exhibition. BHARAT TAP initiative will reduce water consumption at source considerably. The Puri also launched ‘Nirmal Jal Prayas’ initiative which will work for saving of 500 crore litres of water per year.

8. Which institution has announced to set up ‘YUVA Tourism Clubs’?

A. CBSE

B. UGC

C. ISRO

D. NITI Aayog

 • The Central Board of Secondary Education (CBSE) has issued instructions to all CBSE affiliated schools regarding formation of Yuva Tourism Clubs. The Ministry of Tourism has initiated ‘YUVA Tourism Clubs’ as part of the ‘Azadi ka Amrit Mahotsav’ celebrations. It aims to nurture and develop young ambassadors of Indian tourism who would become aware of tourism possibilities in India, understand our rich cultural heritage and develop passion for tourism.

9. Kishore Kumar Das, who has been chosen for ‘Commonwealth Points of Light Award’, is from which country?

A. India

B. Sri Lanka

C. Bangladesh 

D. Nepal

 • The founder of educational charity ‘Bidyanando’, Kishore Kumar Das from Bangladesh has been chosen for the Commonwealth Points of Light Award, which recognises outstanding individual volunteers. He has been selected for his exceptional work in improving access to education for children from marginalised backgrounds, said the British High Commission. Kishore Das setup Bidyanando in 2013, which runs five primary schools which provide free education and meal programme for vulnerable.

10. The UN celebrates English Language Day on April 23 in honour of which English Author?

A. Walt Whitman

B. William Shakespeare 

C. R W Emerson

D. Robert Frost

 • The United Nations (UN) celebrates English Language Day on April 23 every year, in honour of English playwright William Shakespeare as the date marks both his birthday and day of death.
 • The UN observes language days for each of its six official languages, to celebrate multilingualism and cultural diversity. UN Spanish Language Day is also observed on 23 April, to pay tribute to Spanish writer Miguel de Cervantes Saavedra.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Adblock Detected

Turnoff the Ad Blocker to view the content