Tnpsc

14th & 15th October 2020 Current Affairs in Tamil & English

14th & 15th October 2020 Current Affairs in Tamil & English

14th & 15th October 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

14th & 15th October 2020 Tnpsc Current Affairs in Tamil

14th & 15th October 2020 Tnpsc Current Affairs in English

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. தேசிய தூய்மை கங்கை திட்டமானது இந்திய வனவுயிரி நிறுவனத்துடன் இணைந்து எந்த வனவுயிரி தொடர்பான திட்டத்தைத் தொடங்கியுள்ளது?

அ. வங்கப்புலி

ஆ. ஓங்கில்

இ. கடலாமை

ஈ. கடற்குதிரை

  • தேசிய தூய்மை கங்கை திட்டமானது இந்திய வனவுயிரி நிறுவனம் & வனத்துறை ஆகியவற்றுடன் இணைந்து ‘எனது கங்கை எனது ஓங்கில்’ என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது. 2020 அக்.5 அன்று அனுசரிக்கப்பட்ட, கங்கையாற்றில் வாழும் ஓங்கில்கள் நாளை முன்னிட்டு இது தொடங்கப்பட்டது. கங்கையாற்றின் குறுக்கே பல்வேறு இடங்களில் ஓங்கில்கள் சார்ந்த சூழல் சுற்றுலா திட்டமும் தொடங் -கப்பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ், கங்கை ஓங்கில்களின் எண்ணிக்கை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு விழிப்புணர்வு பரப்புரைகள் நடத்தப்படும்.

2.புதிய வேளாண் தொழினுட்பத்தை விளம்பரப்படுத்துவதற்காக, எந்நிறுவனத்துடன் இந்திய உழவர்கள் உர கூட்டுறவு நிறுவனம் (IFFCO) கூட்டிணைந்துள்ளது?

அ. பிரஸார் பாரதி

ஆ. பத்திரிகை தகவல் அலுவலகம்

இ. இந்திய பத்திரிகை அறக்கட்டளை

ஈ. ANI செய்தி முகமை

  • புதிய வேளாண் தொழில்நுட்பங்கள் & புத்தாக்கங்களை ஊக்குவிக்கவும், அவை குறித்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பவும், இந்திய உழவர்கள் உர கூட்டுறவு நிறுவனம் (IFFCO) மற்றும் பிரஸார் பாரதி ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின்படி, வேளாண்துறையில் பயன்படுத்தப்பட்டு வரும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை பற்றிய நிகழ்ச்சிகள், உழவர்களின் நலனுக்காக எளிய மொழி நடையில் 30 நிமிட தொடராக தூர்தர்ஷன் கிஸான் தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பாகும்.

3.எந்தப் பொதுத்துறை வங்கியின் தலைவராக தினேஷ்குமார் காரா நியமிக்கப்பட்டுள்ளார்?

அ. பாரத வங்கி

ஆ. பஞ்சாப் தேசிய வங்கி

இ. யூனியன் பாங்க் ஆப் இந்தியா

ஈ. கனரா வங்கி

  • தினேஷ் குமார் காராவை பாரத வங்கியின் (SBI) தலைவராக நடுவணரசு நியமித்துள்ளது. 2020 அக்.7 முதல் மூன்றாண்டு காலத்திற்கு அவர் SBI வங்கியின் தலைவராக பொறுப்பு வகிப்பார் என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
  • தற்போது பாரத வங்கியின் தலைவராக உள்ள இரஜ்னிஷ் குமாரின் மூன்றாண்டுகால பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து தினேஷ்குமார் காரா புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 2016 ஆகஸ்ட் முதல் SBI’இன் நிர்வாக இயக்குநராக தினேஷ்குமார் காரா பணியாற்றிவந்தார்.

4.சென்னையில் வெள்ளோட்டம் பார்க்கப்பட்ட, இந்தியக் கடலோரக் காவல்படையின் ஏழாவது ரோந்துக் கப்பலின் பெயரென்ன?

அ. விக்ரஹா

ஆ. விராத்

இ. வராஹா

ஈ. வீர்

  • சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள L&T கப்பல்கட்டுந்தளத்தால் கட்டப்பட்ட ‘விக்ரகா’ எனப்பெயரிடப்பட்ட கடலோரக் காவல்படைக்கான புதிய ரோந்துக்கப்பலின் வெள்ளோட்டம் முறையாக தொடங்கிவைக்கப்பட்டது.
  • கடந்த 2015’ஆம் ஆண்டு ஏழு ரோந்துக்கப்பல்கள் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை L&T நிறுவனத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் வழங்கியது. இதில் ‘விக்ரம்’, ‘வீர்’, ‘விஜயா’, ‘வராஹா’, ‘விராத்’, ‘வஜ்ரா’ ஆகிய ஆறு ரோந்துக்கப்பல்கள் ஏற்கனவே கடலோரக் காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டு பணியில் ஈடுபடு -த்தப்பட்டு வருகின்றன. இவ்வரிசையில், ‘விக்ரஹா’ 7ஆவதும் கடைசியுமாகும். ரோந்துக்கப்பல்களின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தை ஒரு தனியார் துறை கப்பல்கட்டுந்தளம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.

5.இந்தியாவில், எந்த மாதத்தில், ‘வனவுயிரி வாரம்’ கொண்டாடப்படுகிறது?

அ. செப்டம்பர்

ஆ. அக்டோபர்

இ. நவம்பர்

ஈ. டிசம்பர்

  • வனவுயிரிகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்குமாக ஒவ்வோர் ஆண்டும் அக்.1 முதல் 8 வரை இந்தியாவில், ‘வனவுயிரி வாரம்’ கொண்டாடப்படுகிறது. விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் உடனடி நடவடிக்கைகள் மூலம் வனவுயிரிகளின் வாழ்வை பாதுகாப்பதற்குமாக, 1952ஆம் ஆண்டில் வனவுயுரி வாரம் கருத்துருவாக்கம் செய்யப்பட்டது. நடப்பாண்டு, இந்திய வனவுயிரி நிறுவனம், இதுதொடர்பாக இணையவழிக் கருத்தரங்கத் தொடரை ஏற்பாடு செய்து வருகிறது.

6.வாங்குபவர்-விற்பவர் வலையமைப்பை மேம்படுத்துவதற்காக, ‘கிஸான் ரத்’ திறன்பேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசு எது?

அ. கர்நாடகா

ஆ. அஸ்ஸாம்

இ. மேகாலயா

ஈ. குஜராத்

  • வேளாண் பொருட்களை குறித்த நேரத்தில் விற்பனை செய்வதற்காக அஸ்ஸாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால், ‘கிஸான் ரத்’ என்ற திறன்பேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்தச் செயலி தேசிய தகவல் மையத்தால் வடிவமைக்கப்பட்டு தொழில்நுட்ப ரீதியாக பராமரிக்கப்பட்டு வருகிறது. வலுவான வாங்குபவர்-விற்பவர் வலையமைப்பை நிறுவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. அஸ்ஸாம் வேளாண்-வணிக மற்றும் கிராமிய உருமாற்றம் திட்டம் (APART) இதனை வெளியிடும்.

7. வரும் நவம்பர்.17 அன்று மெய்நிகராக நடைபெறவிருக்கும் 12ஆவது BRICS உச்சிமாநாடு, முதலில் எந்த நகரத்தில் நடைபெறவிருந்தது?

அ. பெய்ஜிங்

ஆ. புனித பீட்டர்ஸ்பர்க்

இ. மாஸ்கோ

ஈ. புது தில்லி

  • பிரேசில் (B) – இரஷ்யா (R) – இந்தியா (I) – சீனா (C) – தென்னாப்பிரிக்கா (S) – (BRICS) நாடுகளின் 12ஆவது உச்சிமாநாடு, வரும் நவம்பர் 17 அன்று மெய்நிகராக நடைபெறவுள்ளது. மே மாதம் லடாக்கில் நிகழ்ந்த எல்லை மோதலுக்குப் பின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இணையும் முதல் மெய்நிகர் பலதரப்பு கூட்டமாக இது அமைக்கப்பட்டுள்ளது.
  • “BRICS Partnership for Global Stability, Shared Security and Innovative Growth – உலகளாவிய நிலைத் தன்மை, பகிரப்பட்ட பாதுகாப்பு மற்றும் புத்தாக்க வளர்ச்சிக்கான BRICS கூட்டாண்மை” என்பது நடப்பாண்டு (2020) கூட்டத்தின் கருப்பொருளாகும்.

8.உலக வர்த்தக அமைப்பின் (WTO) கூற்றுப்படி, நடப்பாண்டில் (2020) உலக வணிகத்தின் வளர்ச்சி விகிதம் என்ன?

அ. -1.2 %

ஆ. -5.2 %

இ. -9.2 %

ஈ. -13.2 %

  • உலக வர்த்தக அமைப்பின் (WTO) திருத்தப்பட்ட வர்த்தக முன்கணிப்பின்படி, நடப்பாண்டில் (2020) உலக வணிகம், 9.2 சதவிகிதம் வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், 2021ஆம் ஆண்டில், உலகம், 7.2% உயர்வை பதிவுசெய்யும் என WTO மதிப்பிட்டுள்ளது. முன்னதாக ஏப்ரல் மாதத்தில், உலக வர்த்தகத்தின் அளவு 2020ஆம் ஆண்டில் 13 சதவிகிதத்திற்கும் 32 சதவிகிதத்திற்கும் இடையில் வீழ்ச்சியடையும் என்று உலக வர்த்தக அமைப்பு கணித்திருந்தது.

9.கீழ்க்கண்ட எந்த வேதியியல் துறையில் பணியாற்றியதற்காக வேதியியலுக்கான நடப்பாண்டு (2020) நோபல் பரிசு இரண்டு அறிவியலாளர்களுக்கு பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது?

அ. மரபணு திருத்தியமைத்தல்

ஆ. உயிரி – வேதியியல்

இ. மின் வேதியியல்

ஈ. குவாண்டம் வேதியியல்

  • வேதியியல் துறைக்கான நடப்பாண்டு (2020) நோபல் பரிசு இம்மானுவேல் சார்பென்டியர் மற்றும் ஜெனிபர் A டெளட்னா ஆகிய இரு பெண் அறிவியலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக இராயல் சுவீட அறிவியல் கழகம் அறிவித்துள்ளது. மரபணுவைத் திருத்தியமைப்பதற்கான வழிமுறையைக் கண்டறிந்ததற்காக அவர்களுக்கு இந்தப் பரிசு வழங்கப்படுகிறது.
  • இவர்கள் இருவரும் பாக்டீரியத்தின் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆய்வுசெய்தபோது, ஒரு மூலக்கூறு கருவியைக் கண்டறிந்தனர். அது, மரபணுவில் துல்லியமான கீறல்களை மேற்கொள்ள உதவுகிறது. மரபணு தொழில்நுட்பத்தின் கூர்மையான கருவிகளுள் ஒன்றான CRISPR / Cas9 மரபணு கத்தரிக் கோலை பயன்படுத்தி, விலங்குகள், தாவரங்கள் & நுண்ணுயிரிகளின் மரபணுவை மிகத்துல்லியமாக மாற்றவியலும்.

10. 5G ரேடியோ மற்றும் போக்குவரத்து தீர்வுகளை வழங்குவதற்காக எரிக்சனுடன் கூட்டிணைந்துள்ள இந்திய நிறுவனம் எது?

அ. ஜியோ

ஆ. ஏர்டெல்

இ. வோடபோன்

ஈ. ஐடியா

  • இந்திய தொலைத் தொடர்பு சேவை வழங்குநரான பாரதி ஏர்டெல், 5G ரேடியோ வலையமைப்பை உருவாக்குவதற்கான எரிக்சன் நிறுவனத்துடனான ஒப்பந்த காலத்தை நீட்டித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐந்தாம் தலைமுறைக்கேற்ற எரிக்சன் ரேடியோ அமைப்பு தயாரிப்புகள் அனைத்தும் ஏர்டெல் வாடிக்கையாளர்களின் இணைய அனுபவத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் அதிக திறன்பேசி பயன்பாடு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. The National Mission for Clean Ganga has launched a campaign related to which animal, along with the Wildlife Institute of India?

[A] Bengal Tiger

[B] Dolphin

[C] Turtle

[D] Sea horse

  • The National Mission for Clean Ganga along with Wildlife Institute of India and the Forest Department launched the ‘My Ganga My Dolphin’ campaign. This has been launched on the occasion of Ganga River Dolphin Day observed on October 5, 2020. A Dolphin–based ecotourism programme was also launched at various sites along the Ganga River. Under the campaign, Dolphin Census will be conducted and awareness campaigns would be held.

2. Indian Farmers Fertilizer Cooperative Limited (IFFCO) has partnered with which organization to promote new agricultural technology?

[A] Prasar Bharati

[B] Press Information Bureau

[C] Press Trust of India

[D] ANI News Agency

  • Indian Farmers Fertilizer Cooperative Limited (IFFCO) has partnered with Prasar Bharati to promote new agricultural technology and innovations. As per the agreement, DD Kisan channel will broadcast various innovative techniques adopted in agriculture and the innovations of IFFCO through 30 minutes program series.

3. Dinesh Kumar Khara has been appointed as the Chairman of which public sector bank?

[A] State Bank of India

[B] Punjab National Bank

[C] Union Bank of India

[D] Canara Bank

  • The Union Government has appointed Dinesh Kumar Khara as Chairman of State Bank of India for three years from 7 October. According to a notification issued by the Finance Ministry, Khara will replace SBI Chairman Rajnish Kumar, whose three–year term is ending on October 7. Khara was serving as the Managing Director of SBI since August 2016.

4. What is the name of the 7th Indian Coast Guard Offshore Patrol Vessel that was commissioned in Chennai?

[A] Vigraha

[B] Viraat

[C] Varaha

[D] Veer

  • The seventh offshore patrol vessel of the Indian Coast Guard (ICG), ‘Vigraha’ was formally commissioned at Kattupalli port, Chennai. The vessel was built by Larsen and Toubro and is the last in the series of seven offshore patrol vessels contracted to the company by the Ministry of Defence in 2015. This is the first time a private sector shipyard has undertaken the design and construction of OPV class of ships.

5. In which month is the Wildlife Week celebrated in India?

[A] September

[B] October

[C] November

[D] December

  • Wildlife Week is celebrated every year in India between October 1 and 8, to promote and preserve the wild lives. Wildlife Week was conceptualized in the year 1952 to create awareness and safe guard the lives of wildlife through critical action. This year, the Wildlife Institute of India is organising a series of webinar in this regard.

6. Which state Government launched the Kisan Rath Mobile App to promote buyer–seller network?

[A] Karnataka

[B] Assam

[C] Gujarat

[D] Meghalaya

  • The Chief Minister of Assam Sarbananda Sonowal launched the Kisan Rath Mobile App, to facilitate timely sale of agricultural products. The app is designed and technically maintained by the National Informatics Centre (NIC) and aims to establish a robust buyer–seller network. The app will be released by the Assam Agribusiness and Rural Transformation Project (APART).

7. The 12th BRICS Summit which is scheduled to be held on November 17 virtually, was originally to e held in which city?

[A] Beijing

[B] St. Petersburg

[C] Moscow

[D] New Delhi

  • The 12th summit of the Brazil–Russia–India–China–South Africa (BRICS) countries is to be held virtually held on November 17 via video conference. This is set to be the first virtual multilateral meeting to be joined by Indian Prime Minister Narendra Modi and Chinese President Xi Jinping since the border standoff in Ladakh in May. The theme for the meeting will be “BRICS partnership for global stability, shared security and innovative growth”.

8. As per the World Trade Organization (WTO), what is the growth of world merchandise trade in the year 2020?

[A] –1.2%

[B] –5.2%

[C] –9.2%

[D] –13.2%

  • According to the World Trade Organization’s (WTO) revised trade forecast, the World merchandise trade is expected to fall by 9.2 percent in 2020. However, the WTO also estimated that the world will record a 7.2 percent rise in the year 2021. Earlier in the month of April, WTO had predicted that the volume of world merchandise trade would decline between 13 percent and 32 percent for 2020.

9. The 2020 Nobel Prize in Chemistry has been awarded to two scientists for which field of Chemistry?

[A] Genome Editing

[B] Bio–Chemistry

[C] Electro–Chemistry

[D] Quantum Chemistry

  • The Royal Swedish Academy of Sciences awarded the 2020 Nobel Prize in Chemistry to Emmanuelle Charpentier and Jennifer A. Doudna for development of a method for genome editing. The two scientists have discovered one of gene technology’s sharpest toolsnamed the CRISPR/Cas9 genetic scissors, using which the DNA of animals, plants, and microorganisms can be changed precisely. Charpentier and Doudna became the sixth and seventh women to win a Nobel for chemistry.

10. Which Indian company has partnered with Ericsson to deploy 5G radio and transport solutions?

[A] Jio

[B] Airtel

[C] Vodafone

[D] Idea

  • Indian Telecom operator Bharti Airtel has extended its contract with Ericsson for deployment of 5G–ready radio and transport solutions. The Made–in–India 5G–ready Ericsson Radio System products are expected to enhance the network capacity and customer experience. India has the highest usage of smartphone per month.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!