Tnpsc

14th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

14th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 14th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

July Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

14th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. ஆண்டுதோறும் தேசிய மருத்துவர்கள் நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) ஜூலை.01

ஆ) ஜூலை.05

இ) ஜூலை.10

ஈ) ஜூலை.15

  • ஆண்டுதோறும் ஜூலை.1 அன்று இந்திய மருத்துவ சங்கத்தால் இந்திய ஒன்றியத்தில் தேசிய மருத்துவர் நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • வங்கதேசத்தின் முன்னாள் முதலமைச்சராக இருந்த மருத்துவர் பிதன் சந்திர ராயின் நினைவாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. அவர் ஒரு மருத்துவராக பணியாற்றியதன்மூலம் மனிதகுலத்திற்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளார்.

2. தேசிய சமூக வானொலி விருதுகளை நிறுவிய அமைச்சகம் எது?

அ) தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

ஆ) எரிசக்தி அமைச்சகம்

இ) உள்துறை அமைச்சகம்

ஈ) பாதுகாப்பு அமைச்சகம்

  • சமூக வானொலி நிலையங்கள் இடையே ஆரோக்கியமான போட்டியை ஊக்குவிப்பதற்காக தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் 2011-12ஆம் ஆண்டில் தேசிய சமூக வானொலி விருதுகளை நிறுவியது. நடப்பாண்டு (2021) விருதுகளில், சமுதாய வானொலி நிலையமான ரேடியோ விஷ்வாஸ் இரண்டு விருதுகளை வென்றது.
  • நிலைத்தன்மை மாதிரி விருதுகள் பிரிவில் முதல் பரிசையும், மையக்கரு சார்ந்த விருதுகள் பிரிவில் 2ஆவது பரிசையும் COVID-19 காலத்தில் ஒலிபரப்பான ‘அனைவருக்கும் கல்வி’ என்னும் நிகழ்ச்சிக்காக ரேடியோ விஷ்வாஸ் 90.8 விருதுப்பெற்றது. ரிம்ஜிம் ரேடியோ 90.4 (பீகார்) – புதுமையான சமூக ஈடுபாடு என்னும் பிரிவில் முதல் பரிசை வென்றது. உள்ளூர் கலாச்சாரத்தை மேம்படுத்தியமைக்காக ரேடியோ குஞ்சன் (ஒடிஸா) முதல் பரிசை வென்றது. ரேடியோ மட்டோலி (கேரளா) – கருப் பொருள்சார் பிரிவில் முதல் பரிசை வென்றது.

3. ‘சீ பிரேக்கர்’ என்ற பெயரில் தனித்தியங்கும் திறனுடன் நீண்ட தூரம் செல்லும் ஏவுகணை அமைப்பை ஏவிய நாடு எது?

அ) இஸ்ரேல்

ஆ) ஜப்பான்

இ) சீனா

ஈ) அமெரிக்கா

  • இஸ்ரேலின் பாதுகாப்பு நிறுவனமான ரபேல் அதிநவீன பாதுகாப்பு அமைப்புகள், தனித்தியங்கும் திறனுடன் கூடிய நீண்ட தூரம் செல்லும் ஏவுகணை அமைப்பான சீ பிரேக்கரின் 5ஆம் தலைமுறை வடிவத்தை அறிமுகம் செய்துள்ளது. இது அதிக மதிப்புள்ள கடல்சார் மற்றும் நிலம் சார் இலக்குகளை தாக்கும். நிலம் மற்றும் கப்பலின் மேற்பரப்பிலிருந்து ஏவும் இதன் வீச்சு 300 கிமீ ஆக உள்ளது.

4. ‘இடையீட்டாளர் வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைக் குறியீட்டை’ அறிவித்த நாடு எது?

அ) பிரான்ஸ்

ஆ) சீனா

இ) இந்தியா

ஈ) ஆஸ்திரேலியா

  • ‘இடையீட்டாளர் வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைக் குறியீட்டை’ இந்தியா அறிவித்தது. அது, 2021.மே முதல் நடைமுறைக்கு வந்தது. அந்த விதிகளின்படி, அனைத்து குறிப்பிடத்தக்க சமூக ஊடக இடையீட்டாளர்களும் புகார்கள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு விவரங்கள் குறித்த மாதாந்திர அறிக்கைகளை வெளியிட வேண்டியிருந்தது. அண்மையில் பேஸ்புக், மே.15 முதல் ஜூன்.15 வரையிலான காலப்பகுதிக்குரிய தனது முதல் மாதாந்திர அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி, பேஸ்புக், சுமார் 30 மில்லியன் உள்ளடக்கங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது.

5. விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்காக மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், ஆலை உரிமையாளர்கள் மற்றும் எந்தப் பொருளின் இறக்குமதியாளர்கள் மீது நடுவணரசு இருப்பு வைப்பதற்கான வரம்புகளை விதித்தது?

அ) அரிசி

ஆ) பருப்பு வகைகள்

இ) காய்கறிகள்

ஈ) கரும்பு

  • குறிப்பிட்ட உணவுப்பொருட்கள் (திருத்த) உத்தரவு 2021 மீதான இருப்பு வரம்புகள் மற்றும் இயக்க கட்டுப்பாடுகளை நடுவணரசு நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது. இவ்வுத்தரவின்படி, மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், ஆலை உரிமையாளர்கள் மற்றும் பருப்பு வகைகளை இறக்குமதி செய்பவர்களுக்கு இருப்பு வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளன.
  • அக்.31 வரை, அனைத்து மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்களுக்கும் பயித்தம் பருப்பு தவிர அனைத்து பருப்பு வகைகளையும் இருப்பு வைப்பதற்கான வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பருப்புவகைகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

6. இந்தியாவின் முதல் மத்திய மருந்து ஆய்வகம் நிறுவப்பட்டுள்ள மாநிலம் எது?

அ) கர்நாடகா

ஆ) உத்தர பிரதேசம்

இ) இமாச்சல பிரதேசம்

ஈ) மகாராஷ்டிரா

  • மத்திய மருந்து ஆய்வகம், கசௌலி என்பது மனித பயன்பாட்டிற்கான நோய்த்தடுப்பு மருந்துகளை (தடுப்பூசிகள் மற்றும் எதிர் ஊனீர்) பரிசோதிப்பதற்கான தேசிய கட்டுப்பாட்டு ஆய்வகமாகும். அண்மையில், தன்னாட்சி ஆராய்ச்சி நிறுவனங்களான புனேயில் உள்ள தேசிய செல் அறிவியல் மையத்தில் ஓர் ஆய்வகத்தையும், ஹைதராபாத்தில் உள்ள தேசிய விலங்கு உயிரித் தொழில்நுட்பவியல் ஓர் ஆய்வகம் என இரு நடுவணரசு ஆய்வகங்களை நடுவணரசு அமைத்துள்ளது.

7. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற பஞ்சுமுலி ஏரி அமைந்துள்ள மாநிலம் எது?

அ) கேரளா

ஆ) பஞ்சாப்

இ) குஜராத்

ஈ) ஹரியானா

  • குஜராத்தின் கெவாடியாவில் உள்ள சர்தர் வல்லபாய் படேல் ‘ஒற்றுமை சிலை’ அருகே அமைந்துள்ளது பஞ்சுமுலி ஏரி. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக கடந்த இரண்டு ஆண்டுகளில் 194 முதலைகள் இந்த ஏரியிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் இது சமீப செய்திகளில் இடம்பெற்றது. அதிகாரிகளின் கூற்றுப்படி, 2019-20ஆம் ஆண்டில் 143 முதலைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன, 51 முதலைகள் 2020-21’இல் இரு மீட்பு மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.

8. இந்தியாவின் மன்னா படேலுடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ) துப்பாக்கிச்சுடுதல்

ஆ) சீருடற்பயிற்சி

இ) வில்வித்தை

ஈ) நீச்சல்

  • ‘பொதுமை ஒதுக்கீடு’மூலம் டோக்கியோ 2020 ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் இந்திய நீச்சல் வீராங்கனை என்ற பெருமையை 2 ஜூலை 2021 அன்று மானா படேல் வரலாறு படைத்தார். ‘பொதுமை ஒதுக்கீடு’ ஆனது ஒரு நாட்டிலிருந்து ஓர் ஆண் மற்றும் ஒரு பெண்போட்டியாளரை ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதிக்கிறது. 21 வயதான மானா படேல், இம்மாத கோடைகால ஒலிம்பிக்கிற்கான இந்தியாவின் நீச்சல் அணியில், சஜன் பிரகாஷ் மற்றும் ஸ்ரீஹரி நடராஜன் ஆகியோருடன் இணைவார்.

9. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற இராம்பால் மின் நிலையம் அமைந்துள்ள நாடு எது?

அ) வங்காளதேசம்

ஆ) பாகிஸ்தான்

இ) நேபாளம்

ஈ) கென்யா

  • இராம்பால் மின் நிலையமானது 1320 மெகாவாட் மின்னுற்பத்தித்திறன் கொண்ட நிலக்கரி அடிப்படையிலான மின்னுற்பத்தி நிலையமாகும். இது தற்போது வங்காளதேசத்தின் குல்னாவில் உள்ள பாகர்ஹாட் மாவட்டத்தின் இராம்பால் உபசிலாவில் கட்டுமான நிலையில் உள்ளது. இது அந்நாட்டின் மிகப்பெரிய மின்னுற்பத்தி நிலையமாக இருக்கும். இதனை BIFPCL (Bangladesh India Friendship Power Company Limited) அமைத்து வருகிறது.

10. 2021 ஜூலை.1 அன்று வான்படைப்பணியாளர்களின் புதிய துணைத்தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டவர் யார்?

அ) ஏர் மார்ஷல் பாலபத்ர இராதா கிருஷ்ணா

ஆ) ஏர் மார்ஷல் விவேக் ராம் சௌதாரி

இ) ஏர் மார்ஷல் ஹர்ஜித் சிங் அரோரா

ஈ) ஏர் மார்ஷல் குருச்சரண் சிங் பேடி

  • வான்படைத்தளபதியான விவேக் ராம் சௌதாரி, 2021 ஜூலை.1 அன்று வான்படைப்பணியாளர்களின் துணைத்தலைவராக பொறுப்பேற்றார். 1982 டிசம்பர் 29 அன்று விமானப்படையின் போர்படைப்பிரிவில் அவர் நியமிக்கப்பட்டார். பல்வேறு வகையான போர் & பயிற்சி வானூர்திகளில் 3800 மணிநேரத்திற்கும் மேல் அவர் பறந்துள்ளார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தமிழ்நாட்டில் வளர்ச்சிப் பணிகளுக்கு `40 ஆயிரம் கோடி கடனுதவி

நபார்டு வங்கி நடப்பு நிதியாண்டில், தமிழக வளர்ச்சிப் பணிகளுக்காக, `40 ஆயிரம் கோடி கடனுதவி வழங்க உள்ளதாக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ இறையன்பு இஆப தெரிவித்தார். தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியின் (நபார்டு வங்கி) 40ஆவது நிறுவன தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ இறையன்பு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அவர் காணொலி மூலமாக உரையாற்றிய போது, நபார்டு வங்கி 2020-21ஆம் ஆண்டு நிதியாண்டில், தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு `27,135 கோடிகடனுதவி வழங்கியது. நடப்பு நிதியாண்டில் `40 ஆயிரம் கோடி வழங்க உள்ளது என்றார் அவர்.

2. தமிழக பல்கலை – ஆஸ்திரேலியா இடையே 83 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: அமைச்சர் க பொன்முடி

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் – ஆஸ்திரேலியா இடையே 83 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் க பொன்முடி தெரிவித்தார்.

3. நேபாள பிரதமராக ஷேர் பகதூர் தாபா பதவியேற்பு

நேபாள பிரதமராக 5ஆம் முறையாக ஷேர் பகதூர் தாபா பதவியேற்றுக் கொண்டார். இதன்மூலம் ஐந்தாம் முறையாக பிரதமரானவர் என்ற சாதனையை அவர் படைத்தார். முன்னாள் பிரதமர் கே பி சர்மா ஓலியின் பரிந்துரையை ஏற்று கீழவையை அதிபர் வித்யாதேவி பண்டாரி கலைத்தது செல்லாது எனவும், ஜூலை 13’க்குள் புதிய பிரதமராக நேபாள காங்கிரஸ் தலைவர் ஷேர் பகதூர் தாபா பதவியேற்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

4. 10ஆவது பி-8ஐ போர் விமானம் இந்தியா வருகை

நீர்மூழ்கிக் கப்பலைத் தாக்கி அழிக்கவல்ல 10ஆவது பி-8ஐ போர் விமானம் அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்தது.

அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து 8 பி-8ஐ போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு கடந்த 2009ஆம் ஆண்டில் ஒப்பந்தம் மேற்கொண்டது. அதையடுத்து, கூடுதலாக 4 போர் விமானங்களை வாங்க கடந்த 2016’இல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

முதல் பி-8ஐ போர் விமானம் கடந்த 2013’இல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. அப்போதிலிருந்து 30,000 மணி நேரத்துக்கு அதிகமாக அந்தப் போர் விமானங்கள் பறந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்திய கடற்பகுதியைக் கண்காணிப்பதில் பி-8ஐ விமானங்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. அந்தப் போர் விமானங்கள் நீர்மூழ்கிக் கப்பலைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டவையாகும். 9ஆவது பி-8ஐ போர் விமானம் கடந்த ஆண்டு நவம்பரில் இந்தியாவுக்கு வந்தது. தற்போது 10ஆவது போர் விமானம் வந்தடைந்துள்ளது.

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த 2016ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2ஆவது போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடல் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிப்பதோடு மட்டுமல்லாமல், பேரிடர் மீட்புப் பணிகளிலும் பி-8ஐ போர் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. போர் விமானங்களை இயக்குவதில் இந்திய கடற்படையினருக்கு போயிங் நிறுவனமே பயிற்சியளித்து வருகிறது.

அப்போர் விமானங்களுக்குத் தேவையான உபகரணங்கள், பராமரிப்பு சேவைகள் உள்ளிட்டவற்றையும் அந்நிறுவனமே வழங்கி வருகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

5. பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டம்: 15.30 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் விநியோகம்

பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்ட 4ஆம் கட்டத்தின் கீழ் இதுவரை தமிழகம் உள்பட 31 மாநிலங்களுக்கு 15.30 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக நடுவணரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய உணவுத் துறை அமைச்சம் வெளியிட்ட அறிக்கையில், “கரோனா தொற்று காலத்தில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இலவசமாக உணவு தானியங்கள் வழங்குவதற்கு பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தை கடந்த ஆண்டு மத்திய அரசு தொடங்கியது.

இந்தத் திட்டத்தின் நான்காம் கட்டம் இவ்வாண்டு நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டத்தின் கீழ் விநியோகிக்க 198.79 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதில் கடந்த 12-ஆம் தேதி வரை தமிழகம் உள்பட 31 மாநிலங்களுக்கு 15.30 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மே மாதம் முதல் நவம்பர் மாதம் வரை மாதந்தோறும் 5 கிலோ உணவு தானியங்களை 80 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு இலவசமாக வழங்க மத்திய அரசு `93,869 கோடி செலவிடவுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6. உலக பாட்மிண்டன்: 2026-இல் இந்தியா நடத்துகிறது

2026-ஆம் ஆண்டு உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியை இந்தியா நடத்தும் என உலக பாட்மிண்டன் சம்மேளனம் அறிவித்தது.

முன்னதாக, 2023-இல் சுதிர்மான் கோப்பை போட்டியை இந்தியா ஒருங்கிணைக்க இருந்த நிலையில், அப்போட்டியை ஒருங்கிணைக்கும் பொறுப்பை சீனாவிடம் ஒப்படைத்தது உலக பாட்மிண்டன் சம்மேளனம். நடப்பாண்டில் சீனாவில் நடைபெற இருந்த சுதிர்மான் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக தற்போது பின்லாந்தில் நடைபெறவுள்ளது. உலக சாம்பியன்ஷிப் போட்டியை இந்தியா நடத்துவது இது 2ஆவது முறையாகும். முன்னதாக 2009’இல் ஹைதராபாதில் அந்தப்போட்டியை இந்தியா ஒருங்கிணைத்துள்ளது.

7. ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ் நடுவராக தகுதிபெற்ற முதல் இந்தியர் தீபக் காப்ரா

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டுக்கான நடுவராக இந்தியாவைச் சேர்ந்த தீபக் காப்ரா (33) தேர்வு செய்யப்பட்டுள்ளார். இத்தகைய பெருமையைப் பெறும் முதல் இந்தியர் அவராவார். டோக்கியோ ஒலிம்பிக்கில் வரும் 23ஆம் தேதி முதல் நடைபெறும் ஆடவருக்கான ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் நடுவராக அவர் செயல்பட இருக்கிறார்.

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த தீபக் தனது 12ஆவது வயதில் ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாடத் தொடங்கியுள்ளார். அப்போது குஜராத் மாநிலம், சூரத்தில் இருந்த அவருக்கு, பயிற்சிக்கான போதிய வசதிகள் கிடைக்கவில்லை. இருப்பினும் முயற்சித்து 2007’இல் அஸ்ஸாமில் நடைபெற்ற தேசிய அளவிலான விளையாட்டில் பங்கேற்றார். 2005 முதல் 2009 வரை குஜராத் மாநில சாம்பியனாக இருந்துள்ளார்.

1. When is the National Doctor’s Day observed every year in India?

A) July.01

B) July.05

C) July.10

D) July.15

  • Every year, 1st July is observed as the National Doctor’s Day in India by the Indian Medical Association. This day is celebrated in memory of Dr Bidhan Chandra Roy, who was the former Chief Minister of Bengal, who has made enormous contribution to mankind by his service as a doctor.

2. Which Ministry instituted National Community Radio Awards?

A) Ministry of Information and Broadcasting

B) Ministry of Power

C) Ministry of Home Affairs

D) Ministry of Defense

  • Ministry of Information and Broadcasting had instituted National Community Radio (CR) Awards in the year 2011–12 to encourage healthy competition amongst Community Radio Stations (CRSs).
  • In this year’s awards, Radio Vishwas (Maharashtra) won first prize in Sustainability Model. Rimjhim Radio 90.4 FM (Bihar) won first prize in Innovative community Engagement. Radio Gunjan (Odisha) won First prize in Promoting Local Culture. Radio Mattoli (Kerala) won first prize in Thematic Category.

3. Which country launched autonomous long range missile system named ‘Sea Braker’?

A) Israel

B) Japan

C) China

D) USA

  • Israel’s Defence major Rafael Advanced Defense Systems launched Sea Breaker, a 5th generation long range, autonomous, precision–guided missile system. It is a naval and artillery unit force–multiplier, which can hit high–value maritime and land targets. It has ranges of up to 300 km, can be fired both from land and surface ships.

4. Which country announced the ‘Intermediary Guidelines and Digital Media Ethics Code’?

A) France

B) China

C) India

D) Australia

  • India announced the ‘Intermediary Guidelines and Digital Media Ethics Code’ and it came into force from May 2021. As per the rules, all significant social media intermediaries had to publish monthly reports on the details of complaints, actions taken and monitoring details.
  • Facebook recently launched its first monthly report for the period between May 15 and June 15. As per the report, Facebook took action against about 30 million pieces of content.

5. The Central Government imposed stock limits on wholesalers, retailers, millers and importers of which commodity, to control price rise?

A) Rice

B) Pulses

C) Vegetables

D) Sugar Cane

  • The Central Government has brought into effect Stock Limits and Movement Restrictions on Specified Foodstuffs (Amendment) Order 2021. As per the order, stock limits have been imposed on wholesalers, retailers, millers and importers of pulses.
  • Stock limits are prescribed for all pulses except Moong Daal until October 31, for all states and UTs. This decision was taken amidst the continuous rise in the prices of pulses.

6. In which state, India’s first Central Drug Laboratory was established?

A) Karnataka

B) Uttar Pradesh

C) Himachal Pradesh

D) Maharashtra

  • Central Drugs Laboratory (CDL), Kasauli is the National Control Laboratory for testing of Immunobiologicals (vaccines and antisera) meant for human use.
  • Recently, the Union Government has set up two laboratories including one at Autonomous Research Institutes National Centre for Cell Science (NCCS), Pune, and another at National Institute of Animal Biotechnology (NIAB) Hyderabad as Central Drug Laboratory (CDL).

7. Panchmuli lake, which was making news recently, is located in which state?

A) Kerala

B) Punjab

C) Gujarat

D) Haryana

  • Panchmuli lake, situated near the Sardar Vallabhbhai Patel ‘Statue of Unity’ in Kevadia, Gujarat. It was seen in the news because as many as 194 crocodiles have been relocated from the lake in the last two years for the safety of tourists.
  • As per the officials, 143 crocodiles were relocated in 2019–20 and 51 crocodiles were shifted to two rescue centres in 2020–21.

8. India’s Manna Patel is associated with which sports?

A) Shooting

B) Gymnastics

C) Archery

D) Swimming

  • Maana Patel made history on July 2, 2021 as she became the first Indian female swimmer to qualify for the Tokyo 2020 Olympics through the ‘Universality quota’. Maana Patel, 21, will join Sajan Prakash and Srihari Natarajan in India’s swimming squad for this month’s Summer Olympics.

9. The Rampal Power Station, that was making up news recently, was located in which country?

A) Bangladesh

B) Pakistan

C) Nepal

D) Kenya

  • The Rampal Power Station is a 1320–megawatt coal–fired power station currently under construction at Rampal Upazila of Bagerhat District in Khulna, Bangladesh.
  • It will be the country’s largest power plant. It is being setup by BIFPCL (Bangladesh India Friendship Power Company Limited).

10. Who has taken over as new Vice Chief of the Air Staff on July 1, 2021?

A) Air Marshal Balabhadra Radha Krishna

B) Air Marshal Vivek Ram Chaudhari

C) Air Marshal Harjit Singh Arora

D) Air Marshal Gurucharan Singh Bedi

  • Air Marshal Vivek Ram Chaudhari took over as Vice Chief of the Air Staff on July 1, 2021. He was commissioned into the fighter stream of the Air Force on December 29, 1982, and has a flying experience of more than 3800 hrs on a wide variety of fighter and trainer aircrafts.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!