Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

14th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

14th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 14th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

June Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

14th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற பண்டிட் தீனதயாள் ஆற்றல் பல்கலைக்கழகம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ) மகாராஷ்டிரா

ஆ) குஜராத்

இ) உத்தர பிரதேசம்

ஈ) கர்நாடகா

  • குஜராத் மாநில அரசானது மாநிலத்தின் ஏழு தனியார் பல்கலைக்கழகங்களுக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்க முடிவுசெய்துள்ளது. நிர்மா பல்க
    -லைக்கழகம், CEPT பல்கலைக்கழகம், பண்டிட் தீனதயாள் ஆற்றல் பல்கலைக்கழகம், DAIICT, ஆமதாபாத் பல்கலைக்கழகம், சரோட்டர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் மார்வாடி பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஏழு பல்கலைக்கழகங்களுக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்க குஜராத் மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி கொள்கை அடிப்படையில் ஒப்புதல் அளித்தார்.

2. சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘Canadarm2’ என்றால் என்ன?

அ) COVID தடுப்பு மருந்து

ஆ) உள்நாட்டு வான் போக்குவரத்து திட்டம்

இ) பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் எந்திரக்கை

ஈ) கஞ்சா ஒழிப்புத் திட்டம்

  • சமீபத்தில், ‘Canadarm2’ என அழைக்கப்படும் ISS’இன் எந்திரக்கையின் ஒருபகுதியை விண்வெளி குப்பைகள் தாக்கி சேதப்படுத்தின. கையின் செயல்பாடுகள், சேதத்தால் பாதிக்கப்படாது என்பதை வானியலாளர்கள் உறுதிப்படுத்தினர். விண்வெளி நிலைய தொலைநிலை கையாளுதல் அமைப்பான ‘Canadarm2’, நிலையத்திற்கு வெளியே பொருட்களை நக -ர்த்தவும், நிலையத்தில் பணிகளை சரிசெய்யவும் பயன்படுகிறது.

3. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘செஞ்சுற்றுலா’ என்பதுடன் தொடர்புடைய நாடு எது?

அ) இந்தோனேசியா

ஆ) இந்தியா

இ) சீனா

ஈ) இலங்கை

  • கம்யூனிஸ்ட் கட்சிசார்ந்த வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை மேம்படுத்துவதற்காக, சீனா, 2004ஆம் ஆண்டில் ‘செஞ்சுற்றுலா’வை அறிமுகப்படுத்தியது. இது நாட்டில் சுற்றுலாவோடு இணைந்து உள்ளூர் வணிகங்களை மேம்படுத்துவதையும் நோக்கமாகக்கொண்டது. அண்மையில், ‘செஞ்சுற்றுலா’வின்கீழ் உள்ள இடங்கள் அதிக எண்ணிக்கையிலான பயணிகளுடன் சாதனைபடைத்தது.
  • 1921ஆம் ஆண்டில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் தேசிய காங்கிரஸ் நடைபெற்ற நன்ஹூ ஏரி மற்றும் மாவோ சேதுங்கின் பிறப்பிடமான ஷோஷன் ஆகியவை அடங்கும்.

4. அண்மையில் 7 மநேர விண்வெளி நடைபயணத்தை நிகழ்த்திய ஒலெக் நோவிட்ஸ்கி மற்றும் பியோட்ர் டுப்ரோவ் ஆகியோர் சார்ந்த நாடு எது?

அ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஆ) ரஷ்யா

இ) இஸ்ரேல்

ஈ) பிரான்ஸ்

  • ஓலெக் நோவிட்ஸ்கி மற்றும் பியோட்ர் டுப்ரோவ் ஆகிய இரண்டு ரஷ்ய விண்வெளி வீரர்கள், பன்னாட்டு விண்வெளி நிலையத்திலிருந்து 7 மநேர விண்வெளியில் நடைபயணத்தில் ஒரு புதிய ரஷ்ய தொகுதிக்கு வந்து சேரந்தனர்.
  • ஏப்ரலில் விண்வெளி நிலையத்திற்கு வந்த இவ்விரு விண்வெளி வீரர்களுக்கும் இது முதல் விண்வெளிப்பயணமகும். புதிய நௌகா (அறிவியல்) பல்நோக்கு ஆய்வக தொகுதி வருவதற்கு முன்பு, பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு வெளியே பழைய மின்கலங்களை மாற்றுவது உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகளை அவர்கள் மேற்கொள்வர்.

5. மதுரா மற்றும் பானஸ்கந்தா ஆகியவற்றை எந்தத் துறையில் ஏற்றுமதி மேம்பாட்டுக்கான தொகுதிகளாக APEDA இனங்கண்டுள் -ளது?

அ) ஜவுளி

ஆ) பால்

இ) பருத்தி

ஈ) பழங்கள்

  • வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டாணையமானது (APEDA) பால்பொருட்களின் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்காக ஒரு ஏற்றுமதி ஊக்குவிப்பு மன்றத்தை அமைத்து உள்ளது. இத்துறையிலுள்ள பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வுகாண்பதும் இதன் நோக்கமாகும். பால் வர்த்தகத்தை அபிவிருத்தி செய்வதற்காக உத்தர பிரதேச மாநிலத்தில் மதுரா மற்றும் குஜராத்தில் பானஸ்காந்தா ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு இந்த ஆணையம் அங்கீகரித்துள்ளது.
  • இத்தொகுதிகளில் உள்ள உழவர்கள் மற்றும் சிறு பால் வணிகர்களுக்கு ஏற்றுமதியில் திறனை வளர்ப்பதற்கு பயிற்சியும் உதவியும் வழங்கப்படும்.

6. CSIR-NCL ஆனது பின்வரும் எந்த மருத்துவ முறையைப் பயன்படுத்தி, தண்ணீரைக் கிருமிநீக்கம் செய்ய, ‘SWASTIIK’ என்ற தொழில்நுட்பத்தை உருவாக்கியது?

அ) சித்த மருத்துவம்

ஆ) ஆயுர்வேதம்

இ) ஹோமியோபதி

ஈ) சோவா-ரிக்பா

  • புனேவில் உள்ள CSIR-தேசிய வேதியியல் ஆய்வகமானது (CSIR-NCL) இயற்கை எண்ணெய்களைப் பயன்படுத்தி தண்ணீரைக் கிருமிநீக்கம் செய்வதற்காக, ‘SWASTIIK’ என்ற தொழினுட்பத்தை உருவாக்கியுள்ளது.
  • அறிவியல் & தொழில்நுட்பத் துறையின் தொழில்நுட்ப முன்முயற்சியின் ஆதரவுடன், இத்தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
  • அழுத்தக்குறைப்பின் (குழிவுறுதல்) மூலமாக ஒரு திரவத்தை கொதிக்கச் செய்து, பின்னர் கிருமிநீக்கம் செய்வதற்கு, நுண்ணுயிர்க்கொல்லி பண்புகளைக் கொண்ட இயற்கை எண்ணெய்களை இது பயன்படுத்துகிறது.

7. நிலையாக வளர்ச்சியுறும் அமைப்பு (Standard Developing Organiz -ation) என அறிவிக்கப்பட்ட இந்தியாவின் முதல் நிறுவனம் எது?

அ) RDSO

ஆ) IRCTC

இ) DRDO

ஈ) RITES

  • இந்திய இரயில்வேயின்கீழ் செயல்படும் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலைகள் அமைப்பானது (RDSO) சமீபத்தில் நிலையாக வளர்ச்சியுறும் அமைப்பு என அறிவிக்கப்பட்ட நாட்டின் முதல் நிறுவனமாக மாறியுள்ளது. அரசாங்கத்தின் “ஒரு நாடு ஒரு தரம்” என்ற இலக்கை அடைவதற்காக, ‘SDOஐ அங்கீகரித்தல்’ என்ற திட்டத்தை இந்திய தரநிர்ணய அமைப்பு (BIS) அறிமுகப்படுத்தியது.

8. PMGKP’இல் உள்ள புதிய முறையின்படி, காப்பீட்டு நிறுவனங்கள் ____சான்றிதழின் அடிப்படையில் இழப்பீடுகளுக்கு ஒப்புதலளித்து தீர்வு காணலாம்.

அ) உள்துறை அமைச்சகம்

ஆ) மாவட்ட ஆட்சியர்

இ) தலைமைப் பதிவாளர்

ஈ) மாவட்ட நீதிமன்றம்

  • COVID-19 தொற்றுடன் போராடும் சுகாதார ஊழியர்களுக்கான பிரதமர் கரீப் கல்யாண் தொகுப்பு (PMGKP) காப்பீட்டு திட்டம், அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் `50 லட்சம் என்ற காப்பீடு வரம்புடன் தொடங்கப்பட்ட திட்டமாகும். சமீபத்தில், இழப்பீடு கோருவோரை அங்கீகரிப்பதற்கான புதிய அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இழப்பீடுகோரல் திட்டத்தின் நடைமுறைக்கு இணங்க மாவட்ட ஆட்சியர் சான்றளிப்பார்.
  • மேலும் இந்தச் சான்றிதழின் அடிப்படையில், காப்பீட்டு நிறுவனம், 48 மணி நேரத்திற்குள்ளாக இழப்பீட்டிற்கு ஒப்புதல் அளித்து தீர்வு காணும்.

9. பன்னாட்டு நைட்ரஜன் முன்முயற்சி – 2021’ஐ நடத்திய நாடு எது?

அ) பிரான்ஸ்

ஆ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

இ) ஜெர்மனி

ஈ) ஆஸ்திரேலியா

  • பன்னாட்டு நைட்ரஜன் முன்முயற்சியை ஜெர்மனியின் பெடரல் சுற்றுச் சூழல் முகமை (Umweltbundesamt–UBA) நடத்தியுள்ளது. ஐநா அவையி -ன் நீடித்த வளர்ச்சி இலக்குகள், மூன்றாண்டுக்கு ஒருமுறை நடக்கும் எட்டாவது பன்னாட்டு நைட்ரஜன் முன்முயற்சி மாநாட்டின் முக்கிய கருப் பொருளாக இருந்தது. இது, 2021 மே.31 முதல் ஜூன்.3 வரை மெய்நிகர் முறையில் நடைபெற்றது.

10. நடுவணரசால் மாநிலங்களவைக்கு பரிந்துரைக்கப்பட்ட மகேஷ் ஜெத்மலானியின் தொழில் என்ன?

அ) மருத்துவர்

ஆ) வழக்குரைஞர்

இ) அறிவியலாளர்

ஈ) வங்கியாளர்

  • புகழ்பெற்ற வழக்குரைஞரான மகேஷ் ஜெத்மலானி, சமீபத்தில், நடுவண் அரசால் மாநிலங்களவைக்கு பரிந்துரைக்கப்பட்டார். மேலும், முன்னாள் பத்திரிகையாளர் சுவபன் தாஸ்குப்தாவும் மாநிலங்களவைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ரகுநாத் மோகபத்ராவின் மறைவின் காரணமாக ஏற்பட்ட காலியிடங்களை நிரப்பும் பொருட்டு மகேஷ் ஜெத்மலானி மாநிலங்களவைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இஸ்ரேல் புதிய பிரதமராக பென்னட் பதவியேற்பு: நெதன்யாகு ஆட்சி முடிவுக்கு வந்தது

இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட் பதவியேற்றுக்கொண்டார். 2009ஆம் ஆண்டிலிருந்து இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு பதவிவகித்தார். பெஞ்சமின் நெதன்யாகு மீது ஊழல், மோசடி மற்றும் நம்பிக்கை மோசடி புகார்கள் கடந்த சில ஆண்டுகளாக எழுந்து வந்தன. அங்கு இரண்டு ஆண்டுகளாக 4 முறை நாடாளுமன்ற தேர்தல் நடந்தும் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை.

கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி நடந்த தேர்தலில், மொத்தம் உள்ள 120 இடங்களில் பெஞ்சமின் நெதன்யாகு கட்சி 54 இடங்களைப் பிடித்தது. தனிப்பெரும் கட்சியாக வந்தபோதும் அவரால் கூட்டணி அரசு அமைக்க முடியவில்லை. இதனால் இழுபறி நிலைமை நீடித்தது. அங்கு எட்டு எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து கூட்டணி அமைத்தன. இஸ்ரேலில் அரபு கட்சி தலைமையில் எட்டு அரசியல் கட்சிகள் கூட்டாக இணைந்து நெதன்யாகுவின் ஆட்சிக்குத் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளன.

இக்கூட்டணிக்கட்சிகள் சுழற்சி முறையில் பிரதமர் பதவியைப் பகிர்ந்து கொள்ளவுள்ளன. இதன்படி வலதுசாரி கட்சியான யாமினா கட்சியின் தலைவர் நப்தாலி பென்னட் பிரதமராகப் பதவியேற்பார் என்றும் அறிவிக் -கப்பட்டது. இதன்மூலம் பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து இஸ்ரேல் நாடாளும -ன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் யமினா கட்சி தலைவர் நப்தாலி பெனட் வெற்றிபெற்றார். இதையடுத்து, இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட் பதவியேற்றுக்கொண்டார்.

இஸ்ரேல்: சில தகவல்கள்

தலைநகரம்: ஜெருசலம்

அலுவல் மொழி: ஹீப்ரூ

நாணயம்: இஸ்ரேலிய சேக்கல்

2. பிரெஞ்சு ஓப்பன்: ஜோகோவிச் சாம்பியன்

பிரெஞ்சு ஓப்பன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் செர்பியாவின் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். பிரெஞ்சு ஓப்பன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதியாட்டம் பாரீஸ் நகரத்தில் நடைபெற்றது. இதில் உலகின் முதல் நிலை வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஐந்தாம் நிலை வீரரான கிரீஸ் நாட்டைச் சிட்ஸிபாஸை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் 6-7, 2-6, 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் சிட்ஸிபாஸை வீழ்த்தி வாகை சூடினார் ஜோகோவிச். இது ஜோகோவிச் வெல்லும் 19ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். ரோஜர் பெடரர், ரஃபேல் நடால் தலா 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று முதலிடத்தில் உள்ளனர்.

3. ஜூன்.14 – உலக குருதிக்கொடை நாள்

கருப்பொருள்: Give Blood and Keep the World Beating.

1. Pandit Deendayal Energy University, that was in news recently, is in which state?

A) Maharashtra

B) Gujarat

C) Uttar Pradesh

D) Karnataka

  • The Gujarat government has decided to grant Centre of Excellence (CoE) status to seven private universities in the state. The Chief Minister Vijay Rupani gave in–principle approval to grant CoE status to seven universities including Nirma University, CEPT University, Pandit Deendayal Energy University, DAIICT, Ahmedabad University, Charotar University of Science and Technology and Marwadi University.

2. What is Canadarm2, which was making news recently?

A) COVID Vaccine

B) Civil Aviation Project

C) Robotic Arm of International Space Station

D) No Cannabis Project

  • Recently, a piece of space debris hit and damaged a part of the ISS’s robotic arm, called as Canadarm2. The astronomers confirmed that the arm’s functions will not be impacted by the damage. Canadarm2, the Space Station Remote Manipulator System (SSRMS), is used to move objects outside the station and to help in repairing works in the station.

3. ‘Red Tourism’, which was seen in the news, is associated with which country?

A) Indonesia

B) India

C) China

D) Sri Lanka

  • China launched ‘Red Tourism’ in the year 2004 to promote locations with historical and cultural significance to the history of the Communist Party. It also aimed at promoting tourism and local businesses in the country. Recently, there has been a record high footfall in the historic places under the Red Tourism.
  • Some of them include Nanhu Lake, where the First National Congress of the Chinese Communist Party was held in 1921, and Mao Zedong’s birthplace Shaoshan.

4. Oleg Novitsky and Pyotr Dubrov, who performed a 7–hour spacewalk recently, are from which country?

A) USA

B) Russia

C) Israel

D) France

  • Two Russian cosmonauts named Oleg Novitsky and Pyotr Dubrov ventured out of the International Space Station on a 7–hour spacewalk to prepare for the arrival of a new Russian module. It’s the first spacewalk for both the cosmonauts, who arrived at the space station in April. They conducted technical works including replacing the old batteries outside the International Space Station, before the arrival of the new Nauka (Science) multipurpose laboratory module.

5. APEDA identified Mathura and Banaskantha as clusters for export development in which sector?

A) Textile

B) Dairy

C) Cotton

D) Fruits

  • The Agricultural and Processed Food Products Export Development Authority (APEDA) has set up an Export Promotion Forum (EPF) to promote exports of dairy products. It also aims to address various issues in the sector. The authority has recognized two clusters: Mathura in Uttar Pradesh and Banaskantha in Gujarat, to develop dairy merchandise. Farmers and small dairy owners in these clusters shall be given coaching and aid in capability building in exports.

6. CSIR–NCL developed a technology called ‘SWASTIIK’, to disinfect water using which medicinal system?

A) Siddha

B) Ayurveda

C) Homeopathy

D) Sowa–Rigpa

  • CSIR–National Chemical Laboratory (CSIR–NCL) Pune has developed a hybrid technology called “SWASTIIK”, for disinfecting water by using natural oils.
  • With support from the Water Technology Initiative of the department of science and technology, the team has developed the technology. It involves boiling of a liquid as a result of pressure reduction (cavitation) and also uses natural oils having antimicrobial properties, to disinfect.

7. Which is India’s first institution to be declared as Standard Developing Organization (SDO)?

A) RDSO

B) IRCTC

C) DRDO

D) RITES

  • The Research Design & Standards Organization (RDSO), which functions under the Indian Railways has recently become the country’s first institution to be declared as Standard Developing Organization (SDO). Bureau of Indian Standards (BIS) launched the scheme of ‘Recognition of SDO’, to attain the “One Nation One Standard” of the Government.

8. As per the new system in PMGKP, the Insurance companies will approve and settle the claims based on the certificate of ___

A) Home Ministry

B) District Collector

C) Registrar General

D) District Court

  • Pradhan Mantri Garib Kalyan Package (PMGKP) Insurance Scheme for Health Workers Fighting COVID–19 was launched to provide personal accident cover of Rs. 50 lakhs to all healthcare providers.
  • Recently, a new system for approval of claims has been introduced. The District Collector will certify that the claim is in accordance with SoP of the Scheme and on the basis of this certificate, Insurance Company will approve and settle the claims within a period of 48 hrs.

9. Which country’s environmental agency hosted the International Nitrogen Initiative (INI) 2021?

A) France

B) USA

C) Germany

D) Australia

  • International Nitrogen Initiative (INI) is being hosted by the Germany’s Federal Environment Agency (Umweltbundesamt–UBA). The United Nations (UN) Sustainable Development Goals (SDGs) are the main focus of the eighth triennial conference of the International Nitrogen Initiative (INI). It is being held virtually from May 31–June 3, 2021.

10. What is the profession of Mahesh Jethmalani, who has been nominated to Rajya Sabha by the Union Government?

A) Doctor

B) Advocate

C) Scientist

D) Banker

  • Mahesh Jethmalani, who is a noted advocate has been recently nominated by the Union Government to the Rajya Sabha. Additionally, former journalist Swapan Dasgupta has also been nominated to the upper house. Mahesh Jethmalani has been nominated to Rajya Sabha to fill the vacancy of seat due to the demise of Raghunath Mohapatra.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!