TnpscTnpsc Current Affairs

14th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English

14th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 14th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

June Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. மாற்றுத்திறனாளிகள் தொடர்பான புதிய தேசிய கொள்கை வரைவை அறிமுகப்படுத்திய ஒன்றிய அமைச்சகம் எது?

அ. உள்துறை அமைச்சகம்

ஆ. சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சகம் 

இ. சட்டம் & நீதி அமைச்சகம்

ஈ. பெண்கள் & குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

  • சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய கொள்கை வரைவு குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டுள்ளது. இது இயலாமை தடுப்பு, கல்வி, சுகாதாரம், சமூக பாதுகாப்பு மற்றும் அணுகல் ஆகியவற்றில் இடையீட்டுகளை முன்மொழிகிறது. ஊட்டச்சத்துக் குறைபாடு, மருத்துவ அலட்சியம் மற்றும் பேரிடர்களால் ஏற்படும் குறைபாடுபோன்ற இயலாமைக்கான பிற காரணங்களிலும் இது கவனஞ்செலுத்துகிறது.

2. NeSDA அறிக்கையின்படி, தேசிய மின்னாளுகை சேவை வழங்கல் மதிப்பீட்டில் (NeSDA) உயரிய இடத்தைப் பெற்றுள்ள மாநிலம் எது?

அ. தெலுங்கானா

ஆ. கேரளா 

இ. ஒடிஸா

ஈ. குஜராத்

  • தேசிய மின்னாளுகை சேவை வழங்கல் மதிப்பீட்டின் (NeSDA) அறிக்கையின்படி, கேரள மாநிலம் அனைத்து மாநிலங்களுக்கிடையில் அதிக ஒட்டுமொத்த இணக்க மதிப்பெண்ணைப் பெற்றுள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீர், முதன்முறையாக மதிப்பிடப்பட்டுள்ளது. அது யூனியன் பிரதேசங்களுள் மிகவுயரிய இடத்தைப்பிடித்துள்ளது.
  • வடகிழக்கு மற்றும் மலைப்பாங்கான மாநிலங்களில் மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்கள் முன்னணி இடங்களில் உள்ளன. கடந்த 2019ஆம் ஆண்டைவிட 2021ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மதிப்பெண் அதிகரித்துள்ளது.

3. 2022–இல் மேற்கு மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெறும் மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. கோவா

ஆ. குஜராத்

இ. டாமன் & டையூ 

ஈ. மகாராஷ்டிரா

  • மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, COVID–19 தொற்றுநோய் காரணமாக ஈராண்டு இடைவெளிக்குப்பிறகு, டையூவில் மேற்கு மண்டல கவுன்சிலின் கூட்டத்திற்கு தலைமைதாங்கினார். மேற்கு மண்டல கவுன்சில் குஜராத், மகாராஷ்டிரா, கோவா மற்றும் தாத்ரா & நாகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கியது. மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம், 1956–இன் பகுதி–IIIமூலம் ஐந்து மண்டல கவுன்சில்கள் அமைக்கப்பட்டன. மற்ற கவுன்சில்கள் – வடக்கு மண்டல கவுன்சில், மத்திய மண்டல கவுன்சில், கிழக்கு மண்டல கவுன்சில் மற்றும் தெற்கு மண்டல கவுன்சில் ஆகும்.

4. 2022 – குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான உலக நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Universal Social Protection to End Child Labour 

ஆ. Rehabilitation and Restoration

இ. Importance of Education

ஈ. Commitment to End Child Labour

  • குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான உலக நாள் ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.12 அன்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. குழந்தைத் தொழிலில் ஈடுபடும் குழந்தைகளைத் தன்னலத்திற்காக பயன்படுத்திக் கொள்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நாளின் நோக்கமாகும். சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) 2002ஆம் ஆண்டில் குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான உலக நாளை அறிவித்தது. “Universal Social Protection to End Child Labour” என்பது இந்த ஆண்டுக்கான (2022) கருப்பொருளாகும்.

5. இந்திய கடற்படையால் அண்மையில் பணியிலமர்த்தப்பட்ட, ‘சந்தாயக்’ என்றால் என்ன?

அ. ஆய்வுக்கப்பல் 

ஆ. போர்க்கப்பல்

இ. விமானந்தாங்கிக் கப்பல்

ஈ. நீர்மூழ்கிக்கப்பல்

  • இந்திய கடற்படையானது கொல்கத்தாவில் வைத்து நான்கு பெரிய ஆய்வுக்கப்பல்களுள் முதலாவதான, ‘சந்தாயக்’ ஆய்வுக்கப்பலை பணியிலமர்த்தியது. இந்த ஆய்வுக்கப்பல்களின் முதன்மைப் பணியானது துறைமுகங்கள் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்வதாகும். கடல்சார் மற்றும் புவி இயற்பியல் தரவுகளைச் சேகரிப்பதற்கும், வழிசெலுத்தலைத் தீர்மானிப்பதற்கும் இக்கப்பல்கள் பயன்படுத்தப்படும். பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் கார்டன் ரீச் கப்பல் கட்டுநர்கள் மற்றும் பொறியாளர்கள் இடையே கடந்த 2018–இல் இந்த நான்கு ஆய்வுக்கப்பல்களை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

6. NADI–3 ஆசிய சங்கம் நதி மாநாடு நடைபெற்ற இடம் எது?

அ. கௌகாத்தி 

ஆ. இம்பால்

இ. அகர்தலா

ஈ. திமாபூர்

  • 2022 மே 28–29 ஆகிய தேதிகளில் கௌகாத்தியில் இரண்டு நாள் NADI–3 (வளர்ச்சி மற்றும் ஒன்றுக்கொன்று சார்ந்துள்ள இயற்கை கூட்டாளிகள்) ஆசிய சங்கம் நதி மாநாடு நடைபெற்றது. ‘ஆறு’ என்று பொருள்படும் ‘NADI’, உப பிராந்தியத்தின் கூட்டு நோக்கத்தைத் தெளிவுபடுத்துவதற்கும் செயல்படுத்துவதற்குமான ஒரு முன்னெடுப்பாகும். இது இமயமலையின் தெற்கே உள்ள பகுதியை கங்கை மற்றும் பிரம்மபுத்திரா முதல் மீகாங் வரையிலான நதி பள்ளத்தாக்குகளின் தொடர்ச்சியான சங்கமமாக அங்கீகரிக்கிறது.

7. பின்வருவோருள் பன்னாட்டு பனோரமா கோல்டன் விருதை வென்றவர் யார்?

அ. கேசப் மஹந்தா

ஆ. ஷௌனக் சென்

இ. K V இரகுபதி 

ஈ. இவருள் எவருமில்லை

  • திருப்பதியைச் சார்ந்த எழுத்தாளர் KV இரகுபதி, 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘The Mountain is Calling’ என்ற நூலுக்காக, ‘ஒயிட் பால்கன்’ பதிப்பகத்தால் வழங்கப்படும் சர்வதேச பனோரமா கோல்டன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப் –பட்டுள்ளார். திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் இருந்து ஓய்வுபெற்ற ஆங்கிலப் பேராசிரியரான K V இரகுபதி, கடந்த 1980–களிலிருந்து எழுதி வருகிறார்.

8. இனப்பெருக்க உரிமைகளுக்கான உலக பெண்கள் வலையமைப்பால் மே 28 அன்று கொண்டாடப்படுகிற நாள் எது?

அ. பெண்களின் உடல்நலத்திற்கான பன்னாட்டு நடவடிக்கை நாள் 

ஆ. பன்னாட்டு பெண்கள் இனப்பெருக்க உரிமைகள் நாள்

இ. பன்னாட்டு மக்கள்தொகை நாள்

ஈ. பன்னாட்டு பாலின சமத்துவ நாள்

  • பெண்களின் உடல்நலத்திற்கான பன்னாட்டு நடவடிக்கை நாளை ஒவ்வோர் ஆண்டும் மே.28 அன்று இனப் பெருக்க உரிமைகளுக்கான உலகளாவிய பெண்கள் வலையமைப்பு (WGNRR) கொண்டாடி வருகிறது. கடந்த 1987ஆம் ஆண்டு முதல் பல்வேறு பெண்கள் உடல்நல ஆதரவாளர்களும் அவர்களது சமூகங்களும் இந்தக் கொண்டாட்டத்திற்கு தலைமை தாங்கிவருகின்றனர். கோஸ்டாரிகாவில் நடந்த பன்னாட்டு பெண்கள் உடல்நலம் குறித்த சந்திப்பின்போது, இலத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் மகளிர் உடல்நல வலையமைப்பு, மே.28ஆம் தேதி பெண்களின் உடல்நலத்திற்கான பன்னாட்டு நடவடிக்கை நாளாகக் கொண்டாடுவதற்கு முன்மொழிந்தது.

9. நடப்பாண்டில் (2022) வரும் பன்னாட்டு ஐநா அமைதிகாப்போர் நாளுக்கான கருப்பொருள் என்ன?

அ. People. Peace. Progress. The Power of Partnerships 

ஆ. Honouring Peacekeeping

இ. Women, Peace and Security

ஈ. Risk of COVID–19 in peacekeeping

  • அமைதிகாக்கும் படையினரின் பங்களிப்புக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் மே.29 அன்று பன்னாட்டு ஐநா அமைதிகாப்போர் நாள் கொண்டாடப்படுகிறது. “People. Peace. Progress. The Power of Partnerships” என்பது நடப்பாண்டில் (2022) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும். பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஐ நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம், 1325 நிறைவேற்றப்பட்ட இருபத்திரண்டாமாண்டு நிறைவையும் நடப்பாண்டு (2022) குறிக்கிறது. கடந்த 1948ஆம் ஆண்டு முதல், தங்கள் சேவையின்போது உயிரிழந்த 3,900’க்கும் மேற்பட்ட ஐ நா அமைதிகாக்கும் படையினரை ஐநா அவை கௌரவித்து வருகிறது.

10. ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி சிறார்களுக்கான பன்னாட்டு நாள் (International Day of Innocent Children Victims of Aggression) கடைப்பிடிக்கப்படும் தேதி எது?

அ. ஜூன்.04 

ஆ. ஜூன்.05

இ. ஜூன்.06

ஈ. ஜூன்.07

  • ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி சிறார்களுக்கான பன்னாட்டு நாள் என்பது ஆண்டுதோறும் ஜூன்.4 அன்று ஐ நா அமைப்பால் நினைவுகூரப்படும் ஒரு நாளாகும். இது, 1982 ஆகஸ்ட்.19 முதல் ஆண்டுதோறும் நினைவுகூரப்பட்டு வருகிறது. உடல், மனம் மற்றும் உணர்ச்சி ரீதியான பாதிப்புகளுக்கு ஆளான உலகெங்கிலும் உள்ள சிறார்கள் அனுபவிக்கும் வலியை உணர்ந்துகொள்வதே இதன் நோக்கமாகும். இந்த நாள் சிறார்களின் உரிமைகளைக் காப்பதற்கான ஐநா’இன் உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

Newspaper, news icon - Free download on Iconfinder

Newspaper, news icon - Free download on Iconfinder

1. ஜூன்.16, 17 ஆகிய தேதிகளில் தர்மசாலாவில் நடைபெறவுள்ள முதலாவது தேசிய தலைமைச் செயலாளர்கள் மாநாட்டுக்கு பிரதமர் தலைமை வகிக்கிறார்

இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலா பிசிஏ மைதானத்தில் வரும் 16. 17 ஆகிய தேதிகளில் பிரதமர் திரு. நரேந்திர மோதி தலைமையில் முதலாவது தேசிய தலைமைச் செயலாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முக்கிய நடவடிக்கையாக மாநாடு நடைபெறும்.

15 முதல் 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ள தேசிய தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில், மத்திய அரசு அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் மற்றும் நிபுணர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் மாநிலங்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் அதிவேக நீடித்த பொருளாதார வளர்ச்சி குறித்து கவனம் செலுத்தப்படும். இந்தியா ஒரே குழு என்ற உணர்வுடன் நடைபெறும் மாநாடு, நீடித்த உயர் வளர்ச்சி, வேலைகள் உருவாக்கம், கல்வி, எளிதாக வாழுதல், வேளாண்மையில் தற்சார்பு ஆகியவற்றுக்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கான தளத்தை உருவாக்கும். பொதுவான வளர்ச்சியை செயல்படுத்துதல், மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கான திட்டம் ஆகியவற்றை இந்த மாநாடு மதிப்பீடு செய்யும்.

இந்த மாநாட்டுக்கான கருத்துப்படிவு மற்றும் நிகழ்ச்சிநிரல், கடந்த 6 மாதங்களாக 100 தடவைகளுக்குமேல் கூடி விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டில் 3 கருப்பொருட்கள் குறித்து விரிவான விவாதம் நடத்த அடையாளம் காணப்பட்டுள்ளன. (i) தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது; (ii) நகர்ப்புற நிர்வாகம், (iii) பயிர் மாற்றம் மற்றும் எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகை மற்றும் இதர வேளாண் பொருட்களில் தன்னிறைவை அடைதல். தேசிய கல்விக் கொள்கையின்கீழ், பள்ளி மற்றும் உயர்கல்வி குறித்து விரிவாக விவாதிக்கப்படும். ஒவ்வொரு தலைப்பின்கீழும், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் கடைபிடிக்கப்படும் சிறப்பான நடைமுறைகள் பரஸ்பரம் தெரிந்துகொள்வதற்காக விளக்கப்படும்.

முன்னேற விரும்பும் மாவட்டங்கள் குறித்த அமர்வு, இதுவரை எட்டப்பட்ட சாதனைகள், குறிப்பிட்ட மாவட்டங்களின் இளம் ஆட்சியர்கள் வழங்கிய தரவு அடிப்படையிலான நிர்வாகம் உள்ளிட்ட வெற்றிகரமான ஆய்வுகளுடன் விவாதிக்கும். 2047-க்கான ‘விடுதலையின் அமிர்தப் பெருவிழா’ வழிகாட்டுதல் திட்டம் குறித்த சிறப்பு அமர்வும் நடைபெறும். எளிதாக வர்த்தகம் புரிதல், திட்டங்களின் முழுமையான பலன்களை கடைசி மைல் வரையிலும் கொண்டு செல்வதை உறுதி செய்தல், பிரதமரின் விரைவு சக்தி மூலம் இந்தியாவின் உள்கட்டமைப்பை மாற்றியமைத்தல், ஒருங்கிணைந்த அரசு ஆன்லைன் பயிற்சியான கர்மயோகி இயக்கத்தை நடைமுறைப்படுத்துதல் ஆகிய நான்கு கூடுதல் கருப்பொருள்கள் குறித்தும் விவாதிக்கப்படும்.

மாநாட்டில் விவாதிக்கப்பட்ட பொருட்கள் குறித்து, உயர்மட்ட அளவில் விரிவான கருத்தொற்றுமையுடன் செயல்திட்டத்தை இறுதி செய்ய, மாநாட்டின் தொடர்ச்சியாக நடைபெறும், அனைத்து மாநில, யூனியன் பிரதேச முதலமைச்சர்கள், நிர்வாகிகள் கலந்துகொள்ளும் நித்தி ஆயோக்கின் நிர்வாகக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும்.

2. ஆயுதப்படைகளில் இளைஞர்களை பணியில் சேர்ப்பதற்கான, ‘‘அக்னிபத்’’ திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்

ஆயுதப்படைகளில் இந்திய இளைஞர்களை பணியமர்த்தும் கவர்ச்சிகரமான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ‘அக்னிபத்’ என்று அழைக்கப்படும் இந்தத்திட்டத்தின்கீழ் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்கள் ‘அக்னி வீரர்கள்’ என்று அழைக்கப்படுவார்கள். தேசபக்தியுடன், துடிப்புமிக்க இளைஞர்கள் இராணுவத்தில் நான்கு ஆண்டு காலத்திற்கு பணியாற்ற ‘‘அக்னிபத்’’ அனுமதிக்கும்.

ஆயுதப்படைகளில் இளைஞர்களை பணியமர்த்துவதற்காக இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சமுதாயத்தில் இருந்து சமகால தொழில்நுட்பப் போக்குகளுக்கு ஏற்ற வகையில் திறமைமிக்க இளைஞர்களை சீருடைப்பணிக்கு ஈர்க்க இது வாய்ப்புகளை வழங்கும். இளைஞர்களை படைகளில் சேர்ப்பதன்மூலம் வீரர்களின் சராசரி வயதை நான்கைந்து ஆண்டுகள் குறைக்க இது வகைசெய்யும். அரசு அறிமுகப்படுத்தியுள்ள மிகப்பெரிய பாதுகாப்புக் கொள்கை சீர்திருத்தமான இது, முப்படைகளிலும் மனிதவளக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் புதிய அத்தியாயத்தை உருவாக்கும். உடனடியாக அமலுக்கு வரும் இந்தக் கொள்கை முப்படைகளிலும் ஆள்சேர்ப்பை நிர்வகிக்கும்.

3. சென்னை IIT பேராசிரியருக்கு சர்வதேச விருது; தங்கப்பதக்கத்துடன் `2 கோடி பரிசு

சென்னை IIT பேராசிரியர் தலப்பில் பிரதீப்புக்கு, மதிப்புமிக்க ‘இளவரசர் சுல்தான்பின் அப்துல்அஜிஸ் தண்ணீருக்கான சர்வதேச விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு துறையிலும் நீர் தொடர்பான திருப்புமுனை கண்டுபிடிப்புக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. பேராசிரியர் பிரதீப்பின் குழுவினர், குடிநீரில் இருந்து ஆர்சனிக்கை விரைவாக அகற்றுவதற்கு, மலிவு விலையில் சிறிய அளவிலான பொருட்களை உருவாக்கி, சுற்றுச்சூழலுக்குகந்த தண்ணீரை வழங்கியது. அதற்காக இந்த விருதுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். இதன்மூலம் பேராசிரியர் பிரதீப் மற்றும் அவருடைய குழுவுக்கு விருதுடன் `2 கோடி ரொக்கப்பரிசு, தங்கப்பதக்கம், கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.

1. Which Union Ministry launched the new draft national policy on persons with disabilities (PwD)?

A. Ministry of Home Affairs

B. Ministry of Social Justice and Empowerment 

C. Ministry of Law and Justice

D. Ministry of Women and Child Development

  • The Social Justice and Empowerment Ministry has invited public feedback on the new draft national policy on persons with disabilities. It proposes interventions in disability prevention, education, healthcare, social security and accessibility. It also focussed on other causes of disability, such as malnourishment, medical negligence and impairment caused by disasters.

2. Which state ranked the highest in national e–governance service delivery assessment (NeSDA), as per NeSDA report?

A. Telangana

B. Kerala 

C. Odisha

D. Gujarat

  • According to the National e–governance service delivery assessment (NeSDA) report, Kerala had the highest overall compliance score amongst all states. Jammu and Kashmir, assessed for the first time, ranked the highest among Union Territories. Meghalaya and Nagaland are the leading state portals among the northeast and hilly states. The overall score of Tamil Nadu increased the most in 2021 compared to 2019.

3. Which state/UT is the venue of the meeting of the Western Zonal Council in 2022?

A. Goa

B. Gujarat

C. Daman & Diu 

D. Maharashtra

  • Union Home Minister Amit Shah chaired a meeting of the Western Zonal Council in Diu, after a gap of two years due to the coronavirus pandemic. The Western Zonal Council comprises the states of Gujarat, Maharashtra, Goa and Union Territory of Dadra and Nagar Haveli and Daman and Diu.
  • Five Zonal Councils were set up through Part–III of the States Re–organisation Act, 1956. Other Councils are Northern Zonal Council, Central Zonal Council, Eastern Zonal Council, and Southern Zonal Council.

4. What is the theme of the ‘World Day Against Child Labour 2022’?

A. Universal Social Protection to End Child Labour 

B. Rehabilitation and Restoration

C. Importance of Education

D. Commitment to End Child Labour

  • World Day Against Child Labour is marked every year on 12 June across the world. The day aims to raise awareness about the exploitation of children who are engaged in child labour. The International Labour Organization (ILO) declared the World Day Against Child Labour in the year 2002. The theme for this year is “Universal Social Protection to End Child Labour”.

5. What is ‘Sandhayak’, which was recently launched by the Indian Navy?

A. Survey vessel 

B. Frigate

C. Aircraft carrier

D. Submarine

  • The Indian Navy launched ‘Sandhayak’, the first of the four large survey vessels, in Kolkata. The primary role of these survey ships would be to conduct full–scale coastal and deep–water hydrographic survey of ports and harbours.
  • The ships would be deployed for collecting oceanographic and geophysical data and determination of navigational routes. The contract for building four survey ships was signed between the Defence Ministry and Garden Reach Shipbuilders and Engineers (GRSE) in 2018.

6. Where is the NADI–3 Asian Sangam River Conference held?

A. Guwahati 

B. Imphal

C. Agartala

D. Dimapur

  • The two–day NADI–3 (Natural Allies in Development and Interdependence) Asian Sangam River Conference was held in Guwahati from May 28–29, 2022.
  • NADI, which means river, is an initiative to clarify and activate the collective vision of the subregional. It recognizes the region south of the Himalayas as a contiguous confluence of river valleys from the Ganges and the Brahmaputra to the Mekong.

7. Who among the following won the International Panorama Golden Award?

A. Keshab Mahanta

B. Shaunak Sen

C. K V Raghupathi 

D. None of these

  • Tirupati–based writer K.V. Raghupati has been selected for the International Panorama Golden Award by White Falcon Publishing for his book, The Mountain is Calling, published in 2019. Raghupati, an English professor who retired from the Central University of Tamil Nadu, Tiruvarur, has been writing since the 1980s.

8. Which day is celebrated on May 28th by the Women’s Global Network for Reproductive Rights?

A. International Day of Action for Women’s Health 

B. International Day of Women’s reproductive rights

C. International Day of Population

D. International Day of Gender Equality

  • International Day of Action for Women’s Health is celebrated on May 28 every year by the Women’s Global Network for Reproductive Rights. Several women’s health advocates and their communities have been leading the celebration of the day since 1987. During the International Women’s Health Meeting in Costa Rica, Latin American and Caribbean Women’s Health Network (LACWHN) proposed to celebrate May 28 as International Day of Action for Women’s Health.

9. What is the theme of the International Day of United Nations Peacekeepers, 2022?

A. People. Peace. Progress. The Power of Partnerships 

B. Honouring Peacekeeping

C. Women, Peace and Security

D. Risk of COVID–19 in peacekeeping

  • The International Day of United Nations Peacekeepers is celebrated on 29 May every year, to pay tribute to the contribution of the peacekeepers. This year the theme of the International Day of United Nations Peacekeepers, 2022 is “People. Peace. Progress. The Power of Partnerships”.
  • This year also marks the 22nd anniversary of the adoption of UN Security Council Resolution 1325 on Women, Peace & Security. UN honours more than 3,900 UN peacekeepers who have lost their lives during their service, since 1948.

10. When is ‘International Day of Innocent Children Victims of Aggression’ observed?

A. June.04 

B. June.05

C. June.06

D. June.07

  • The United General Assembly decided to commemorate 4 June of each year as the ‘International Day of Innocent Children Victims of Aggression’. The objective of the day is to acknowledge the pain of the children across the world who are the victims of physical, mental and emotional abuse. UN had also ratified the Convention on the Rights of the Child.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!