Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

14th September 2020 Current Affairs in Tamil & English

14th September 2020 Current Affairs in Tamil & English

14th September 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

14th September Tamil Current Affairs 2020

14th September English Current Affairs 2020

 

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1.எந்த நாட்டிலிருந்து வைட்டமின் C இறக்குமதி செய்வது தொடர்பாக, இந்தியா, இறக்குமதி மிகு குவிப்பு எதிர்ப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது?

அ. ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஆ. சீனா

இ. இரஷ்யா

ஈ. பிரேசில்

  • வர்த்தக தீர்வுகள் தலைமை இயக்குநரகம் (DGTR) அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியா, அண்மையில், சீனாவிலிருந்து வைட்டமின் C இறக்குமதி செய்வது தொடர்பாக, இறக்குமதி மிகு குவிப்பு எதிர்ப்பு (anti-dumping) விசாரணையைத் தொடங்கியுள்ளது. முன்னதாக, பஜாஜ் ஹெல்த் கேர் நிறுவனமானது அதன் சந்தைப்பங்கு, இலாபங்கள் மற்றும் உள்நாட்டு தொழிற்துறைக்கு இந்த இறக்குமதி மிகுகுவிப்பு, மிகுசேதம் ஏற்படுத்துவதாக DGTR’க்கு புகாரளித்தது. மருந்து நிறுவனங்களால், பேரளவில் இந்த வைட்டமின் சி பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

2.இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் தலைவர் யார்?

அ. பிரதமர்

ஆ. குடியரசுத்தலைவர்

இ. குடியரசுத்துணைத்தலைவர்

ஈ. பணியாளர் அமைச்சர்

  • இந்திய பொது நிர்வாக நிறுவனம் என்பது மத்திய பணியாளர் அமைச்சகத்தின்கீழ் இயங்கிவரும் ஒரு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அமைப்பாகும். குடியரசுத்துணைத்தலைவர் வெங்கையா, இதன் பதவிவழித் தலைவராவார். மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீ அர்ஜுன் முண்டா தலைமையில், மெய்நிகராக, பழங்குடியின நலத்துறை அமைச்சகமும் இந்திய பொதுநிர்வாக நிறுவனமும் இணைந்து அண்மையில் நடைபெற்ற இரண்டு நாள், “தேசிய பழங்குடி ஆராய்ச்சி மாநாட்டை” நடத்தின.

3.முதன்முறையாக மெய்நிகராக நடந்த விருதுவழங்கும் விழாவில், எத்தனை ஆசிரியப்பெருமக்களுக்கு, இந்தியக் குடியரசுத்தலைவர், தேசிய விருதை வழங்கினார்?

அ. 17

ஆ. 27

இ. 37

ஈ. 47

  • சர்வபள்ளி இராதாகிருட்டிணனின் பிறந்தநாளைக்கொண்டாடும் ஆசிரியர் நாளன்று, இந்தியக்குடியர -சுத்தலைவர் இராம்நாத் கோவிந்த், ஆசிரியப்பெருமக்களுக்கு தேசிய விருதை வழங்கினார்.
  • கல்வியை மேம்படுத்துவதில் தன்னலமற்ற பங்களிப்பு செய்தமைக்காக, நாடு முழுவதிலும் இருந்து 47 ஆசிரியப்பெருமக்களுக்கு, மதிப்புமிக்க இவ்விருது வழங்கப்பட்டது. விருது பெற்றோருள் சுமார் 40 சதவீதத்தினர் பெண்களாவர். மேலும், முதன்முறையாக, இவ்விழா, மெய்நிகராக நடந்தேறியது.

4. “From Insights to Action: Gender Equality in the wake of COVID-19” என்ற அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

அ. ஐநா பெண்கள் அமைப்பு

ஆ. உலக வங்கி

இ. பன்னாட்டுச் செலவாணி நிதியம்

ஈ. உலக பொருளாதார மன்றம்

  • ஐநா பெண்கள் அமைப்பானது ஐநா வளர்ச்சித்திட்டத்துடன் இணைந்து, “From Insights to Action: Gender Equality in the wake of COVID-19” என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. 2021ஆம் ஆண்டளவில், COVID-19 கொள்ளைநோயானது பெண்களைப்பெரிதும் பாதிக்கும் என்றும் மேலும் 47 மில்லியன் பெண்கள் மற்றும் சிறுமிகளை அது தீவிர வறுமையில் தள்ளும் என்றும் அந்த அறிக்கை எடுத்துக்கூறியுள்ளது. தெற்காசியாவில் பாலின வறுமை இடைவெளி மோசமடையும் என்றும் தெற்கு ஆசியாவிலும் துணை சகாரா ஆப்பிரிக்காவிலும் வறுமை மோசமடையும் என்றும் இது எச்சரித்துள்ளது.

5.பணப்பரிவர்த்தனை சம்பந்தப்பட்ட இணையவழி விளையாட்டுகளுக்கு தடைவிதிக்கும் மசோதாவுக்கு, ஒப்புதல் அளித்துள்ள மாநில அரசு எது?

அ. தமிழ்நாடு

ஆ. ஆந்திர பிரதேசம்

இ. தெலுங்கானா

ஈ. கர்நாடகா

  • பணப்பரிவர்த்தனைகளை உள்ளடக்கிய இணையவழி விளையாட்டுகளுக்குத் தடை விதிப்பதற்காக, ஆந்திர பிரதேச மாநில விளையாட்டுச் சட்டம், 1974’ஐ திருத்துவதற்கு ஆந்திர மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முன்மொழியப்பட்ட இந்தத் திருத்தத்தின்படி, ரம்மி மற்றும் போக்கர் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடுவோருக்கு 6 மாத சிறைத்தண்டனையும், விளையாட்டுகளை ஏற்பாடு செய்பவர்களுக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்படும். பணப்பரிவர்த்தனைகளை உள்ளட -க்கிய இணையவழி விளையாட்டுத்தொழிலானது ஆண்டுதோறும் 30% அளவுக்கு வளர்கிறது.

6.இந்திய தானியங்கி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (SIAM) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

அ. கெனிச்சி அயுகாவா

ஆ. சுங் மோங்–கூ

இ. கியூன்டர் புச்செக்

ஈ. காகு நக்கனிஷி

  • இந்திய தானியங்கி உற்பத்தியாளர்கள் சங்கம் அதன் புதிய தலைவராக கெனிச்சி அயுகாவாவைத் தேர்ந்தெடுத்துள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு முதல் மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும், தலைமைச் செயல் அதிகாரியாகவும் அவர் பணியாற்றி வருகிறார். முன்னதாக, SIAM’இன் துணைத்தலைவராக பணியாற்றிய அவர், இராஜன் வதேராவைத் தொடர்ந்து இப்பதவிக்கு வரவுள்ளார். அசோக் லேலண்டின் விபின் சோந்தி, துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

7.கூடுதலாக 3053 ஹெக்டேர் பரப்புக்கு விரிவாக்கம் செய்யப்படவுள்ள இந்தியத்தேசியப்பூங்கா எது?

அ. காசிரங்கா தேசியப்பூங்கா

ஆ. ராந்தம்போர் தேசியப்பூங்கா

இ. அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப்பூங்கா

ஈ. கிர் தேசியப்பூங்கா

  • ஆசிய ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களின் வாழ்விடமான அஸ்ஸாம் மாநிலத்தில் அமைந்துள்ள காசிரங்கா தேசியப்பூங்கா, கூடுதலாக 3053 ஹெக்டேர் பரப்புக்கு விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இந்தத் தேசியப்பூங்காவிற்கு ஏழாம், எட்டாம் மற்றும் ஒன்பதாம் தலங்களை சேர்க்க ஒப்புதல் அளிக்கும் அறிவிப்பை அஸ்ஸாம் மாநில அரசு வெளியிட்டுள்ளது. இந்தக் கூடுதல் பகுதிகளுள், ஆக்கிரமிப்புக்கு உள்ளாகக்கூடிய ஆற்றிடைத்தீவுப்பகுதிகளும் அடங்கும்.

8.இரயில்வே வளாகங்களில் இரப்பது தொடர்பாக, எச்சட்டத்தைத் திருத்துதற்கு, இரயில்வே அமைச்சகம் முன்மொழிந்துள்ளது?

அ. இரயில்வே சட்டம்

ஆ. இரத்தல் தடுப்பு சட்டம்

இ. இந்திய தண்டனைச் சட்டம்

ஈ. போக்குவரத்துச்சட்டம்

  • இரயில்வே சட்டம், 1989’இன் 144ஆவது பிரிவில் திருத்தம் மேற்கொள்வதற்கு இரயில்வே அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. இச்சட்டத்தின் தற்போதைய விதியின்படி, இரயில்கள் & இரயில் நிலையங்களில் இரத்தல் என்பது ஒரு குற்றமாகும். மேலும், இது ஓராண்டு சிறைத்தண்டனை அல்லது `2000/- அபராதத்திற்கும் வழிவகுக்கிறது. இரயில்கள் மற்றும் இரயில்வே வளாகங்கள் உள்ளிட்ட இரயில்வே சொத்துக்களில் இரக்க அனுமதிக்கப்படாது என்று கூறி இந்தப்பிரிவு மாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது.

9. SVAYEM என்ற சுயவேலைவாய்ப்பு திட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ள மாநிலம் எது?

அ. மகாராஷ்டிரா

ஆ. தெலுங்கானா

இ. அஸ்ஸாம்

ஈ. பீகார்

  • அஸ்ஸாம் மாநில அரசானது அம்மாநிலத்தைச் சார்ந்த இரண்டு இலட்சம் இளையோர்க்கு, சுயதொழில் வாய்ப்பினை வழங்குவதை நோக்கமாகக்கொண்ட, “SVAYEM” என்ற பழைய திட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளது. Swami Vivekananda Assam Youth Empowerment என்பதன் சுருக்கந்தான் SVAYEM. இந்தத் திட்டம், தேர்ந்தெடுக்கப்பட்ட இளையோர்க்கு அவர்களின் தொழிலைத் தொடங்குவதற்காக `50,000 நிதியை தொடக்க மூலதனமாக வழங்கும். இத்திட்டத்தின் மொத்த செலவினம் `1000 கோடி.

10.அண்மையில் நடைபெற்ற 48ஆவது ஆண்டு உலக ஓப்பன் செஸ் போட்டியில் வென்றவர் யார்?

அ. P இனியன்

ஆ. ஸ்வயம்ஸ் மிஸ்ரா

இ. P கார்த்திகேயன்

ஈ. கார்த்திக் வெங்கடராமன்

  • அண்மையில் நடத்தப்பட்ட 48ஆவது ஆண்டு உலக ஓப்பன் செஸ் போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் P இனியன் வெற்றிபெற்றார். COVID-19 தொற்றுநோய் காரணமாக இந்தப்போட்டி ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட இந்த நிகழ்வில், 16 நாடுகளைச் சார்ந்த 122 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

1. India has initiated an anti–dumping investigation on imports of Vitamin C from which country?

[A] United States of America

[B] China

[C] Australia

[D] Russia

  • India has recently initiated an anti–dumping investigation on imports of Vitamin C from China, as per the recent statement from the Directorate General of Trade Remedies (DGTR). Earlier, Bajaj Healthcare filed a complaint to DGTR that dumping is leading to a decline in its market share, profits and causing damage to the domestic industry. Vitamin–C is mainly used by the pharmaceutical companies.

2. Who is the President of the Indian Institute of Public Administration (IIPA)?

[A] Prime Minister

[B] President

[C] Vice–President

[D] Minister of Personnel

  • The Indian Institute of Public Administration is a Research and training organization under the Union Ministry of Personnel. Vice President Venkaiah Naidu is the ex–officio President of IIPA. The Ministry of Tribal Affairs (MoTA) and Indian Institute of Public Administration (IIPA) has recently organized a two–day ‘National Tribal Research Conclave’ through virtual platform chaired by the Union Minister of Tribal Affairs Shri Arjun Munda.

3. The President of India has conferred the National Award to how many teachers in a first virtual ceremony?

[A] 17

[B] 27

[C] 37

[D] 47

  • The President of India Ram Nath Kovind has conferred the National Award to teachers on the occasion of Teachers’ Day, which is celebrated on the birth anniversary of Sarvapalli Radhakrishnan.
  • As many as 47 educators across the country were conferred with the prestigious award for their selfless contribution for promoting education. Around 40 percent of the winners were women and this is the first time the event is held virtually.

4. Which organisation released a report titled “From Insights to Action: Gender Equality in the wake of COVID–19”?

[A] UN Women

[B] World Bank

[C] International Monetary Fund

[D] World Economic Forum

  • The UN Women released a report titled “From Insights to Action: Gender Equality in the wake of COVID–19”, along with UN Development Programme (UNDP). The report highlighted that the COVID–19 pandemic will immensely affect women and push 47 million more women and girls into extreme poverty by the year 2021. It also warned that the gender poverty gap will worsen in South Asia and poverty in South Asia and sub–Saharan Africa.

5. Which Indian state has approved a bill to ban online games involving money transactions?

[A] Tamil Nadu

[B] Andhra Pradesh

[C] Telangana

[D] Karnataka

  • The Andhra Pradesh cabinet has approved a proposal to amend Andhra Pradesh Gaming Act, 1974, to ban online games that involve money transactions. As per the proposed amendment, six months imprisonment will be awarded for those playing such games including rummy and poker and one–year jail term for those organising the games. Online real money gaming (RMG) industry is growing at 30 percent annually.

6. Who has appointed as the new President of the Society of Indian Automobile Manufacturers (SIAM)?

[A] Kenichi Ayukawa

[B] Chung Mong–koo

[C] Guenter Butschek

[D] Gaku Nakanishi

  • The Society of Indian Automobile Manufacturers (SIAM) has elected Kenichi Ayukawa as its new President. He has been the Managing Director and Chief Executive Officer of Maruti Suzuki India since 2013. He earlier served as the Vice President of SIAM and is succeeding Rajan Wadhera. Vipin Sondhi of Ashok Leyland is elected as the Vice President.

7. Which national park in India has added 3053 hectares into its ambit?

[A] Kaziranga National Park

[B] Ranthambore National Park

[C] Silent Valley National Park

[D] Gir National Park

  • The Kaziranga National Park in Assam, which is home to the Asiatic one–horned rhinos, is to be expanded by 3,053 hectares. The Government of Assam has issued a notification approving 7th, 8th and 9th addition to the National Park. These additional areas include encroachment–evicted areas at riverine islands that were vulnerable to encroachment.

8. Railway Ministry has proposed to amend which legislation pertaining to begging in railway properties?

[A] Railways Act

[B] Prevention of Begging Act

[C] Indian Penal Code

[D] Transport Act

  • The Railway Ministry has proposed to amend Sec 144 of Railways Act 1989. As per the present provision in the act, begging in Railway property is an offence and makes it liable for imprisonment or a fine of Rs.2000/–. The section is proposed to be changed by stating that begging will not be allowed in properties of Railways including Trains and Railway premises.

9. Which state has re launched a self–employment scheme named ‘SVAYEM’?

[A] Maharashtra

[B] Telangana

[C] Assam

[D] Bihar

  • The Government of Assam has re–launched an old scheme named “SVAYEM” which aims to provide self–employment to 2 lakh youth in the state.
  • SVAYEM stands for Swami Vivekananda Assam Youth Empowerment. The scheme would provide Rs.50,000 as seed capital to selected youth, to commence their business. The total outlay of the scheme is Rs.1000 crore.

10. Who has recently won the 48th annual world open chess tournament?

[A] P Iniyan

[B] Swayams Mishra

[C] P Karthikeyan

[D] Karthik Venkataraman

  • Indian young Grand Master P Iniyan won the 48th annual world open chess tournament conducted recently. This tournament was conducted in an online format due to the COVID–19 pandemic. The event was conducted in 3 rounds where in 122 participants of 16 countries participated.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!