Tnpsc

14th September 2021 Tnpsc Current Affairs in Tamil & English

14th September 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 14th September 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

September Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. SBI’இன் முன்னாள் தலைவர் ரஜினிஷ் குமாரை பொருளாதார ஆலோசகராக நியமித்த மாநிலம் எது?

அ) மேற்கு வங்கம்

ஆ) ஒடிஸா

இ) ஆந்திர பிரதேசம் 

ஈ) அஸ்ஸாம்

  • ஆந்திர பிரதேச மாநில அரசு தனது பொருளாதார ஆலோசகராக SBI’இன் முன்னாள் தலைவர் ரஜினிஷ் குமாரை நியமித்துள்ளது. அமைச்சரவை அந்தஸ்திலான இப்பதவியினை ஈராண்டுகாலம் அவர் வகிப்பார்.

2. ‘பிஸினஸ் பிளாஸ்டர்ஸ்’ திட்டத்தைத் தொடங்கியுள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?

அ) சிக்கிம்

ஆ) தில்லி 

இ) கர்நாடகா

ஈ) மகாராஷ்டிரா

  • தில்லியின் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, 2021 செப்.7 அன்று ‘பிசினஸ் பிளாஸ்டர்ஸ்’ திட்டத்தைத் தொடங்கிவைத்தார். இந்தத் திட்டம், பள்ளி அளவில் இளம் தொழில்முனைவோரை உருவாக்குவதை நோக்கமாகக்கொண்டதாகும். இந்தத் திட்டம் அனைத்து தில்லி அரசுப் பள்ளிகளிலும் “தொழில் முனைவோர் மனநிலை பாடத்திட்டத்தின்” கீழ் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின்கீழ், 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்கள் தங்கள் தொழிலைத் தொடங்குவதற்கு `2,000 தொடக்கப்பணம் வழங்கப்படும்.

3. ‘புஜுர்கோன் கி பாத் – தேஷ் கே சாத்’ திட்டத்தைத் தொடங்கி உள்ள அமைச்சகம் எது?

அ) பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

ஆ) கலாச்சார அமைச்சகம் 

இ) சுற்றுலா அமைச்சகம்

ஈ) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

  • நடுவண் கலாச்சாரத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி கங்காபுரம், ‘புஜுர்கோன் கி பாத் – தேஷ் கே சாத்’ திட்டத்தை மத்திய கலாச்சாரத் துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலுடன் இணைந்து புது தில்லியின் IGNCA’இல் தொடங்கிவைத்தார். இந்தத்திட்டம் இளையோர் மற்றும் விடுதலைக்கு முன்பு இந்தியாவில் சுமார் 18 ஆண்டுகள் வாழ்ந்த 95 வயது (அ) அதற்கு மேற்பட்ட வயதுடைய நபர்களுக்கிடையேயான தொடர்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

4. நாடாளுமன்ற அவைத்தலைவர்களின் 5ஆவது உலக மாநாடு நடைபெறும் நகரம் எது?

அ) பாரிஸ்

ஆ) புது தில்லி

இ) பெய்ஜிங்

ஈ) வியன்னா 

  • செப்.7-8 ஆகிய தேதிகளில் வியன்னாவில் நாடாளுமன்ற அவைத் தலைவர்களின் ஐந்தாவது உலக மாநாடு நடைபெறுகிறது. ஆஸ்திரிய நாடாளுமன்றம், நாடாளுமன்றங்களுக்கிடையேயான ஒன்றியம் & ஐநா அவையால் நடத்தப்படும் மாநாட்டில் பங்கேற்பதற்காக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வியன்னா சென்றடைந்தார்.
  • நாடாளுமன்ற பரிமாணத்தை வலுப்படுத்தும் நோக்கத்துடன் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இம்மாநாடு தவறாமல் நடத்தப்படுகிறது.

5. சமீபத்தில், F1 டச்சு கிராண்ட் பிரிக்ஸை வென்றது யார்?

அ) லூயிஸ் ஹாமில்டன்

ஆ) மேக்ஸ் வெர்ஸ்டாபென் 

இ) சார்லஸ் லெக்லெர்க்

ஈ) ஜார்ஜ் ரஸ்ஸல்

  • செப்.5, 2021 அன்று நெதர்லாந்தின் சாண்ட்வார்ட்டில் நடந்த F1 டச்சு கிராண்ட் பிரிக்ஸில் ரெட் புல் பந்தய ஓட்டுநர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் வென்றார். மெர்சிடிஸ் பந்தய ஓட்டுநர்கள் லூயிஸ் ஹாமில்டன் மற்றும் வால்டெரி பொட்டாஸ் ஆகியோர் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்தனர்.

6. உச்ச தணிக்கை நிறுவனங்களின் ஆசிய அமைப்பின் (ASOSAI) அவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

அ) ஹூ காய்

ஆ) மிட்சுகிகோ கவாடோ

இ) G C முர்மு 

ஈ) சென் சூ

  • 2024-2027ஆம் ஆண்டு வரை உச்ச தணிக்கை நிறுவனங்களின் ஆசிய அமைப்பின் (ASOSAI) அவையின் தலைவராக இந்தியாவின் கம்ப்ரோலர் & ஆடிட்டர் ஜெனரல் GC முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2024’இல் ASOSAI’இன் 16ஆவது அவையை நடத்தவுள்ளார்.

7. ‘ஆத்ம நிர்பார் கிரிஷி யோஜனா’ மற்றும் ‘ஆத்ம நிர்பார் பக்வானி யோஜனா’ திட்டங்களைத் தொடங்கியுள்ள மாநிலம் எது?

அ) சிக்கிம்

ஆ) அருணாச்சல பிரதேசம் 

இ) இமாச்சல பிரதேசம

ஈ) அஸ்ஸாம்

  • அருணாச்சல பிரதேச மாநில அரசானது ஆத்ம நிர்பார் கிரிஷி யோஜனா மற்றும் ஆத்ம நிர்பார் பக்வானி யோஜனா ஆகிய இரண்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆத்ம நிர்பார் கிரிஷி யோஜனா ஒரு வேளாண் துறை திட்டமாகும். ஆத்ம நிர்பார் பக்வானி யோஜனா என்பது ஒரு தோட்டக்கலைத் திட்டமாகும். இந்த இரண்டு திட்டங்களுக்கும் சேர்த்து தலா `60 கோடி என மொத்தம் 120 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

8. G20’க்கான இந்தியாவின் ஷெர்பாவாக நியமிக்கப்பட்டவர் யார்?

அ) பியூஷ் கோயல் 

ஆ) அஷ்வினி வைஷ்ணவ்

இ) மன்சுக் மாண்டவியா

ஈ) சுப்ரமணியம் ஜெய்சங்கர்

  • வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல், G20’க்கான இந்தியாவின் செர்பாவாக நியமிக்கப்பட்டுள்ளார். G20 என்பது உலகின் முக்கிய பொருளாதாரங்களை ஒன்றிணைக்கும் ஒரு செல்வாக்குமிக்க குழுவாகும். அடுத்த G20 உச்சிமாநாடு இத்தாலிய தலைமையின்கீழ், அக்.30-31, 2021 வரை நடைபெறவுள்ளது. இந்தியா, டிசம்பர்.1, 2022 முதல் G20 தலைமையை ஏற்று, முதல்முறையாக 2023’இல் G20 தலைவர்களின் உச்சிமாநாட்டையும் நடத்தும்.

9. பின்வரும் எம்மாநிலத்தின் தேசிய நெடுஞ்சாலையில், அவசரகால தரையிறங்கும் வசதியை நடுவண் பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்?

அ) உத்தர பிரதேசம்

ஆ) இமாச்சல பிரதேசம்

இ) இராஜஸ்தான் 

ஈ) குஜராத்

  • இந்திய வான்படைக்கான அவசரகால தரையிறங்கும் வசதியை இராஜ -ஸ்தானில் உள்ள பார்மருக்கு அருகில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலை 925A’இன் சட்டா-காந்தவ் தடத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். இந்திய வான் படையின் விமானங்களை அவசரமாக தரையிறக்க தேசிய நெடுஞ்சாலை பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறை.

10. எந்த மாநிலத்தின் நீர்வழங்கல் உட்கட்டமைப்பை மேம்படுத்து -வதற்காக இந்திய அரசும் ஆசிய வளர்ச்சி வங்கியும் $112 மில்லியன் மதிப்பிலான கடனொப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன?

அ) பீகார்

ஆ) இராஜஸ்தான்

இ) மேற்கு வங்கம்

ஈ) ஜார்க்கண்ட் 

  • ஜார்க்கண்ட் மாநிலத்தில் நீர்வழங்கல் உட்கட்டமைப்பை மேம்படுத்துவ -தற்காக இந்திய அரசும் ஆசிய வளர்ச்சி வங்கியும் $112 மில்லியன் மதிப்பிலான கடனொப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. ஜார்க்கண்ட் மாநிலத்தின் 4 நகரங்களில் சேவை விநியோகத்தை மேம்படுத்துவதற் -காக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் திறன்களை இந்தக் கடன் வலுப்படுத்தும்.
  • இது இராஞ்சி மற்றும் ஜும்ரி தெலையா, ஹுசைனாபாத் மற்றும் மேதினி நகர் ஆகிய 3 நகரங்களில் தொடர்ச்சியான, சுத்திகரிக்கப்பட்ட குழாய் நீர் விநியோகத்தை உறுதிசெய்யும். இந்த நகரங்கள் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பின்தங்கிய பகுதிகளில் அமைந்துள்ளன.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தேசிய கல்வி நிறுவனங்கள் தரவரிசை: சவீதா பல் மருத்துவக் கல்லூரி மூன்றாமிடம்

தேசிய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் (என்ஐஆா்எஃப்) பல் மருத்துவப் பிரிவில் சென்னை அருகில் உள்ள சவீதா பல் மருத்துவக் கல்லூரி மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய நிறுவனத் தரவரிசைக் கட்டமைப்பு (என்ஐஆா்எஃப்) ஆண்டுதோறும் சிறந்த பல்கலைக்கழகம், கல்லூரிகளின் தேசிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நிகழாண்டுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.

இதில் சென்னை அருகில் உள்ள சவீதா பல் மருத்துவக் கல்லூரி, சவீதா சட்டக் கல்லூரி ஆகியவை மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளன. மேலும் தேசிய அளவில் சவீதா பல் மருத்துவக் கல்லூரி 78.33 மதிப்பெண்களுடன் 3-ஆவது இடத்தையும், சவீதா சட்டக் கல்லூரி 55.19 மதிப்பெண்களுடன் 13-ஆவது இடத்தையும் பெற்றுள்ளன. ஒட்டுமொத்தமாக சவீதா நிகா் நிலைப் பல்கலைக்கழகம் தேசிய அளவில் 29-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

2. செப்டம்பரில் கோவேக்ஸின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு

இந்த மாதம் கோவேக்ஸின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கோவிஷீல்ட், கோவேக்ஸின், ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசிகளை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. அதேவேளையில் அமெரிக்காவின் ஃபைஸா், ஜான்சன் & ஜான்சன், மாடா்னா, சீனாவின் சைனோஃபாா்ம், பிரிட்டனின் கோவிஷீல்டு தடுப்பூசிகளை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த அனுமதியளித்துள்ள உலக சுகாதார அமைப்பு, இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய கோவேக்ஸின் தடுப்பூசிக்கு மட்டும் ஒப்புதல் அளிக்கவில்லை.

அந்தத் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கத் தேவையான ஆவணங்களை உலக சுகாதார அமைப்பிடம் பாரத் பயோடெக் நிறுவனம் வழங்கியுள்ளதாக கடந்த ஜூலை மாதம் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் கோவேக்ஸின் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு இந்த மாதம் உலக சுகாதார அமைப்பு அனுமதி அளிக்க வாய்ப்புள்ளது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

3. செப்.24-இல் க்வாட் கூட்டம்: பிரதமா் மோடி அமெரிக்கா பயணம்

க்வாட் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கும் கூட்டம் அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் வரும் 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி பிரதமா் நரேந்திர மோடி அமெரிக்கா பயணிக்கவுள்ளாா். க்வாட் கூட்டமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் முதல்முறையாக வரும் 24-ஆம் தேதி க்வாட் தலைவா்களின் கூட்டம் நடைபெறவுள்ளது. அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் இந்திய பிரதமா் மோடி, ஆஸ்திரேலிய பிரதமா் ஸ்காட் மோரிஸன், ஜப்பான் பிரதமா் யோஷிஹிடே சுகா ஆகியோா் கலந்துகொள்கின்றனா்.

க்வாட் கூட்டமைப்பிலுள்ள நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவது, கரோனா தொற்று போன்ற பிரச்னைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது, பருவநிலை மாற்றம், கட்டுப்பாடற்ற இந்தோ-பசிபிக் பிராந்தியம், புதிய தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவை தொடா்பாக கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று வெள்ளை மாளிகை ஊடகப் பிரிவு செயலா் ஜென் சாகி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை காணொலி வழியாக நடைபெற்ற இந்தக் கூட்டம் இம்முறை நேரில் நடைபெறவுள்ளதால் அதில் பங்கேற்க பிரதமா் மோடி அமெரிக்கா செல்லவுள்ளது உறுதியாகியுள்ளது.

4. தமிழ்ப் பல்கலை.யின் திறனாய்வு செம்மல் விருதுக்கு க. பஞ்சாங்கம் தோ்வு

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ந. சுப்புரெட்டியாா் நூற்றாண்டு அறக்கட்டளை சாா்பில் வழங்கப்படும் திறனாய்வுச் செம்மல் விருதுக்கு க. பஞ்சாங்கம் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ள பேராசிரியா் ந. சுப்புரெட்டியாா் நூற்றாண்டு அறக்கட்டளை சாா்பில் திறனாய்வுச் செம்மல் விருது நிகழாண்டு முதல் வழங்கப்படவுள்ளது.

இவ்விருதுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள், பரிந்துரைகள் பெறப்பட்டன. இதில் 2021ஆம் ஆண்டுக்கான திறனாய்வுச் செம்மல் விருதுக்குத் தமிழின் முன்னோடி இலக்கியத் திறனாய்வாளரான புதுச்சேரியைச் சோ்ந்த பேராசிரியா் க. பஞ்சாங்கம் ஒருமனதாகத் தோ்வுக் குழுவால் தோ்ந்தெடுக்கப்பட்டாா். இதற்கான பரிசு வழங்கும் நிகழ்வு செப்டம்பா் 27 ஆம் தேதி தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும். இதில், விருதுடன் ரூ. 25,000 தொகையும், சான்றிதழும் வழங்கப்படும்.

1. Which state has appointed former SBI Chairperson Rajnish Kumar as its economic advisor?

A) West Bengal

B) Odisha

C) Andhra Pradesh 

D) Assam

  • The Andhra Pradesh government has appointed Rajnish Kumar as its economic advisor. A former SBI chairman, Rajnish Kumar’s tenure in the cabinet rank position is for two years.

2. Which State/UT has launched the ‘Business Blasters’ programme?

A) Sikkim

B) Delhi 

C) Karnataka

D) Maharashtra

  • Deputy Chief Minister of Delhi, Manish Sisodia, launched the ‘Business Blasters’ programme on September 7, 2021. This programme aims at developing young entrepreneurs at the school–level by providing students seed money to start a business.
  • The programme will be implemented in all Delhi government schools under the “Entrepreneurship Mindset Curriculum (EMC)”. Under the programme, class 11 and 12 students will be provided seed money of Rs 2,000 to start their business.

3. Which ministry has launched ‘Bujurgon ki Baat–Desh Ke Saath’ programme?

A) Ministry of Women and Child Development

B) Ministry of Culture 

C) Ministry of Tourism

D) Ministry of Housing and Urban Affairs

  • Union Minister of Culture Kishan Reddy Gangapuram has launched the program ‘Bujurgon ki Baat–Desh Ke Saath’ with Union MoS for Culture Arjun Ram Meghwal, at IGNCA, New Delhi.
  • The programme aims at enhancing the interaction between the youth and the elder persons who are 95 years and above and thus have spent around 18 years in India before independence.

4. Which city is the venue of the 5th World Conference of Speakers of Parliament?

A) Paris

B) New Delhi

C) Beijing

D) Vienna 

  • 5th World Conference of Speakers of Parliament is being held in Vienna on Sept 7th and 8th. Lok Sabha Speaker Om Birla reached Vienna to attend the 5th World Conference of Speakers of Parliament by the Austrian Parliament, Inter–Parliamentary Union and the United Nations.
  • The World Conference of Speakers of Parliament is held regularly every five years with the goal to reinforce the Parliamentary dimension of global governance.

5. Recently, who won the Formula One Dutch Grand Prix?

A) Lewis Hamilton

B) Max Verstappen 

C) Charles Leclerc

D) George Russell

  • Max Verstappen won the F1 Dutch Grand Prix for Red Bull on September 5, 2021 at Zandvoort, Netherlands followed by Mercedes drivers Lewis Hamilton and Valtteri Bottas in second and third places respectively.

6. Who has been elected as the Chairman of the Assembly of Asian Organisation of Supreme Audit Institutions (ASOSAI)?

A) Hou Kai

B) Mitsuhiko Kawado

C) GC Murmu 

D) Chen Chu

  • The Comptroller and Auditor General of India GC Murmu has been elected as the Chairman of the Assembly of Asian Organisation of Supreme Audit Institutions (ASOSAI) from 2024–2027 with India set to host the 16th Assembly of ASOSAI in 2024.

7. ‘Atma Nirbhar Krishi Yojna’ and ‘Atma Nirbhar Bagwani Yojna’ schemes have been launched by which state?

A) Sikkim

B) Arunachal Pradesh 

C) Himachal Pradesh

D) Assam

  • The state government of Arunachal Pradesh has launched 2 schemes named Atma Nirbhar Krishi Yojna and Atma Nirbhar Bagwani Yojna. AtmaNirbhar Krishi Yojna is an agri sector scheme while Atma Nirbhar Bagwani Yojna is a horticulture scheme. The government has allocated a total sum of Rs. 120 crores for these two schemes, Rs.60 crores for each of the schemes.

8. Who has been appointed as India’s Sherpa for G20?

A) Piyush Goyal 

B) Ashwini Vaishnaw

C) Mansukh Mandaviya

D) Subrahmanyam Jaishankar

  • Commerce and Industry Minister, Piyush Goyal, has been appointed as India’s Sherpa for G20. G20 is an influential grouping which brings together the major economies of world. Next G20 Summit is scheduled to take place from October 30 to 31, 2021 under Italian Presidency. India will hold the G20 Presidency from December 1, 2022 and will also convene G20 Leaders’ Summit in 2023 for the first time.

9. In which state’s national highway, an emergency landing facility has been inaugurated by Defence Minister Rajnath Singh?

A) Uttar Pradesh

B) Himachal Pradesh

C) Rajasthan 

D) Gujarat

  • Union Defence Minister, Rajnath Singh and Union Highways Minister, Nitin Gadkari inaugurated the Emergency Landing Facility on a National Highway in Rajasthan. This emergency landing facility has been constructed on the Satta–Gandhav stretch of National Highway (NH) 925A in Barmer, Rajasthan. This is the first time a National Highway will be used for emergency landing of IAF aircraft.

10. Government of India and Asian Development Bank has signed a $112 million loan in order to develop water supply infrastructure in which state?

A) Bihar

B) Rajasthan

C) West Bengal

D) Jharkhand 

  • Government of India and Asian Development Bank (ADB) has signed a $112 million loan in order to develop water supply infrastructure in the state of Jharkhand.
  • The loan will also strengthen capacities of urban local bodies (ULBs) in order to improve service delivery in four towns of Jharkhand. It will ensure continuous, treated piped water supply in Ranchi and other three towns namely Jhumri Telaiya, Hussainabad, and Medininagar. These towns are located in economically and socially backward areas.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!