Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

14th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

14th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 14th September 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

September Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

14th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. அலுவல்பூர்வ தரவுகளின்படி, இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் இருந்த சில்லறை பணவீக்க சதவீதம் என்ன?

அ. 6.5%

ஆ. 7.0%

இ. 7.5%

ஈ. 8.0%

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. 7.0%

  • இந்தியாவின் சில்லறை பணவீக்கம் கடந்த ஜூலை மாதத்தில் 6.71%ஆக இருந்து; அது ஆகஸ்ட் மாதத்தில் 7%ஆக உயர்ந்துள்ளது. நுகர்வோர் விலைக்குறியீட்டு அடிப்படையிலான பணவீக்கம் தொடர்ச்சியாக எட்டாவது மாதமாக ரிசர்வ் வங்கியின் இலக்கு அளவான 6%ஐவிட அதிகமாக உயர்ந்துள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெளியிட்ட தொழிற்துறை உற்பத்தி குறியீட்டு (IIP) தரவுகளின்படி, 2022 ஜூலையில் இந்தியாவின் தொழிற்துறை உற்பத்தி 2.4% உயர்ந்துள்ளது; அதே வேளையில், IIP, 2021 ஜூலையில் 11.5% வளர்ந்தது. உணவுப் பணவீக்கம் போன்ற அத்தியாவசியப் பயிர்களின் விலைகள் உயர்ந்தன. கோதுமை, அரிசி மற்றும் பருப்பு வகைகள் அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டன.

2. FAO மற்றும் உலக உணவுத்திட்டமானது இந்தியாவின் எந்த அண்டை நாட்டில் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை ஏற்படும் என அதனை எச்சரித்தது?

அ. மியான்மர்

ஆ. இலங்கை

இ. நேபாளம்

ஈ. ஆப்கானிஸ்தான்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. இலங்கை

  • உணவு மற்றும் உழவு அமைப்பும் (FAO) உலக உணவுத்திட்டமும் (WFP) தனது புதிய அறிக்கையில் இலங்கையில் சுமார் 6.3 மில்லியன் மக்கள் மிதம் முதல் கடுமையான உணவுப்பாதுகாப்பின்மையை எதிர்கொள்ளப்போவதாக எச்சரித்துள்ளன. பயிர் மற்றும் உணவுப் பாதுகாப்பு மதிப்பீட்டு பணி (CFSAM) அறிக்கை, போதுமான உயிர்காக்கும் உதவி & வாழ்வாதார ஆதரவு வழங்கப்படாவிட்டால், அவர்களின் நிலைமை மோசமாகிவிடும் என எச்சரித்துள்ளது.

3. நமீபியாவிலிருந்து கொண்டுவரப்படும் சிவிங்கிப்புலிகளை, கீழ்க்காணும் எந்தத் தேசியப்பூங்காவில் விடுவதற்கு இந்திய அரசு திட்டமிட்டுள்ளது?

அ. குனோ பால்பூர் தேசியப்பூங்கா

ஆ. ஜிம் கார்பெட் தேசியப்பூங்கா

இ. இராந்தம்பூர் தேசியப்பூங்கா

ஈ. கசிரங்கா தேசியப்பூங்கா

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. குனோ பால்பூர் தேசியப்பூங்கா

  • மத்திய பிரதேசத்தின் குனோ பால்பூர் தேசியப்பூங்காவில் தென்னாப்பிரிக்காவின் நமீபியாவிலிருந்து கொண்டு வரப்படும் சிவிங்கிப்புலிகளை விடுவதற்கு இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தச் சிவிங்கிப்புலிகள் குனோ பால்பூர் தேசியப்பூங்காவிற்கு வருகைதந்த பிறகு, அவை தனிமைப்படுத்தப்பட்ட அடைப்பு வலைக்குள் சிறுகாலம் தங்க வைக்கப்பட்டு, பின்னர் வழக்கமான வாழ்விடத்திற்கு மாற்றப்படும். கடந்த 1952இல் இந்தியாவிலிருந்த கடைசி சிவிங்கிப்புலியும் இறந்தது. கடந்த 2009ஆம் ஆண்டில், ‘இந்தியாவில் ஆப்பிரிக்க சிவிங்கிப்புலி அறிமுகத் திட்டம்’ தொடங்கப்பட்டது.

4. உலகளவில் 50 மில்லியன் மக்கள், ‘நவீன அடிமைத்தனத்தில்’ சிக்கித் தவிக்கின்றனர் என்று எந்த அமைப்பு தனது அறிக்கையில் கூறியுள்ளது?

அ. FAO

ஆ. IMF

இ. ILO

ஈ. WEF

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. ILO

  • ஐக்கிய நாடுகள் அவையின் பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு (ILO) அறிக்கையொன்றை வெளியிட்டது. அதில், உலகம் முழுவதும் 50 மில்லியன் மக்கள், ‘நவீன அடிமைத்தனத்தில்’ சிக்கித் தவிக்கின்றனர் எனக் கூறப்பட்டு உள்ளது. கட்டாய உழைப்பு அல்லது கட்டாயத்திருமணம் மற்றும் பிற நெருக்கடிகளில் சிக்கித்தவிக்கும் மக்களின் எண்ணிக்கை அண்மைய ஆண்டுகளில் ஐந்தில் ஒரு பங்காக உயர்ந்து ஒரே நாளில் சுமார் 50 மில்லியனாக அதிகரித்துள்ளது. வாக் ஃப்ரீ அறக்கட்டளையுடன் இணைந்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

5. 2018–19இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், அரசின் சுகாதார செலவினத்தின் பங்கு எவ்வளவு?

அ. 0.85%

ஆ. 1.01%

இ. 1.28%

ஈ. 2.0%

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. 1.28%

  • 2018–19ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் தேசிய சுகாதார கணக்குகளின் மதிப்பீடுகளின்படி, நாட்டின் மொத்த GDP–இல் அரசாங்க சுகாதார செலவினங்களின் பங்கில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 2013–14இல் 1.15%ஆக இருந்த பங்கு 2018–19இல் 1.28%ஆக அதிகரித்துள்ளது. 2017–18இல் இது 1.35%ஆக இருந்தது. 2018–19ஆம் ஆண்டில் மொத்த சுகாதார செலவினத்தில் அரசின் சுகாதார செலவினத்தின் பங்கு 40.6%ஆக அதிகரித்துள்ளது.

6. குஷியாரா ஆற்றின் இடைநிலை நீர் தொடர்பாக, கீழ்க்காணும் எந்த நாட்டுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது?

அ. வங்காளதேசம்

ஆ. நேபாளம்

இ. மியான்மர்

ஈ. பாகிஸ்தான்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. வங்காளதேசம்

  • இந்தியாவும் வங்காளதேசமும் புது தில்லியில் வைத்து கூட்டாறுகள் ஆணையத்தின் கூட்டத்தை நடத்தின; அதன் சமயம் குஷியாரா ஆற்றின் இடைநிலை நீர் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இரு நாடுகளும் இறுதிசெய்தன. நடுவண் ஜல்சக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 12 ஆண்டு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இச்சந்திப்பு நடைபெற்றது. திரிபுராவின் சப்ரூம் நகரத்தின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஃபெனி ஆற்றில் நீர் உட்கொள்ளும் பரப்பின் வடிவமைப்பு மற்றும் இருப்பிடம் இறுதிசெய்யப்பட்டதை இருதரப்பினரும் வரவேற்றனர்.

7. ஒரு புறக்கோளின் வளிமண்டலத்தில் கரியமிலவாயுவைக் கண்டறிந்துள்ள நாடு எது?

அ. சீனா

ஆ. அமெரிக்கா

இ. ஆஸ்திரேலியா

ஈ. இஸ்ரேல்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. அமெரிக்கா

  • ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மற்றொரு சூரிய குடும்பத்தில் உள்ள ஒரு கோளின் வளிமண்டலத்தில் கரியமில வாயுவைக் கண்டறிந்துள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு புதிய தொலைநோக்கியிலிருந்து வெளியிடப்பட்ட முதல் விரிவான அறிவியல் முடிவை குறிக்கிறது. பூமியைப்போன்ற சிறிய, பாறைக்கோள்களின் வளிமண்டலத்தில் பைங்குடில் வாயுக்களைக் கண்டுபிடிப்பதற்கான புதிய சாத்தியக்கூறுகளையும் இது எடுத்துக்காட்டுகிறது.

8. மதிப்புமிக்க டைமண்ட் லீக் மீட் பட்டத்தை வென்ற முதல் இந்திய விளையாட்டு வீரர் / வீராங்கனை யார்?

அ. P V சிந்து

ஆ. தனலட்சுமி

இ. நீரஜ் சோப்ரா

ஈ. ஹிமா தாஸ்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. நீரஜ் சோப்ரா

  • டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, லொசேன் டைமண்ட் லீக்கில் ஈட்டியெறிதல் போட்டியில் வெற்றிபெற்றார். 89.08 மீட்டர் தூரம் ஈட்டியெறிந்து, மதிப்புமிக்க டைமண்ட் லீக் மீட் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார். லீக் என்பது உயரடுக்கு தடகளப் போட்டிகளின் வருடாந்திர தொடர் நிகழ்வு ஆகும். நீரஜ், சுவிச்சர்லாந்தில் நடக்கும் டைமண்ட் லீக் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றதோடு, 2023 உலக சாம்பியன்ஷிப்பிற்கும் தகுதிபெற்றுள்ளார்.

9. வியாஸ் சம்மான் விருது பெற்ற Dr அஸ்கர் வஜாஹத் சார்ந்த மொழி எது?

அ. உருது

ஆ. ஹிந்தி

இ. கன்னடம்

ஈ. குஜராத்தி

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஹிந்தி

  • 31ஆவது வியாஸ் சம்மான் விருது ஹிந்தி எழுத்தாளர் டாக்டர் அஸ்கர் வஜாஹத்துக்கு புது தில்லியில் வழங்கப்பட்டது. முகலாயப்பேரரசர் அக்பர் மற்றும் கவிஞர் துளசிதாஸ் ஆகியோரை மையமாகக்கொண்ட, ‘மகாபலி’ நாடகத்திற்காக அவர் இம்மதிப்புமிக்க விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வியாஸ் சம்மான் என்பது KK பிர்லா அறக்கட்டளையால், கடந்த 10 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட, இந்தியக் குடிமகன் ஒருவரால் ஹிந்தி மொழியில் எழுதப்பட்ட சிறந்த இலக்கியப்பணிக்காக வழங்கப்படுகிற ஒரு விருதாகும்.

10. ‘வஜ்ர பிரஹார்’ என்பது இந்தியாவிற்கும் எந்நாட்டிற்கும் இடையே நடைபெறும் ஒரு இராணுவப் பயிற்சியாகும்?

அ. பிரான்ஸ்

ஆ. ஜப்பான்

இ. அமெரிக்கா

ஈ. ஆஸ்திரேலியா

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. அமெரிக்கா

  • இந்தியா–அமெரிக்காவின் சிறப்புப்படைகள் பங்கேற்கும், ‘2022 – வஜ்ர பிரஹார்’ பயிற்சியின் பதிமூன்றாவது பதிப்பு ஹிமாச்சலப்பிரதேசத்தில் உள்ள பக்லோவில் நடத்தப்பட்டது. இந்தப் பயிற்சியில் வான்வழிப் பயிற்சி செயல்பாடுகள், சிறப்பு நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பயிற்சிகள் நடத்தப்பட்டன. இந்த ஆண்டு (2022) பயிற்சி இந்தியா மற்றும் அமெரிக்காவால் மாற்றி மாற்றி நடத்தப்படுகிறது. இதன் 12ஆவது பதிப்பு, கடந்த 2021 இல் வாஷிங்டனில் (US) நடத்தப்பட்டது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. முப்படைத் தளபதிகளின் 36ஆவது மாநாடு – தெற்கு போர்ட் பிளேரில் நடைபெற்றது

முப்படைத் தளபதிகளின் 36ஆவது மாநாடு, 2022 செப்டம்பர்.12,13 ஆகிய தேதிகளில் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் நடந்தது. இந்தியப்பெருங்கடல் பகுதியில் புவியியல் சார்ந்த சாத்தியக்கூறுகள் மற்றும் உட்கட்டமைப்பு, முப்படைகளின் பிராந்திய நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல், முப்படைகளின் வளர்ச்சியை அதிகரிப்பதற்கான வழிகள் மற்றும் முப்படைகளின் தயார் நிலை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்த மாநாடு, இந்தியாவின் கடல்சார் சேவை, ஒருங்கிணைந்த சேவை, திறன்களின் கூட்டு வலிமையை அதிகரித்தல் உள்ளிட்டவற்றை நோக்கமாகக்கொண்டது. மேலும், தற்கால பாதுகாப்பு முன்னுதாரணங்களை நிவர்த்தி செய்வதில் கவனம் செலுத்தியது. மேலும், போர்த்திறனை மேம்படுத்துவதற்கும், செல்பாடுகளை மிகவும் பயனுள்ளதாக, திறமையாக மாற்றுவதற்கான வழிகள் குறித்தும் ஆய்வுசெய்தது.

2. ககன்யான் திட்டம்: நிகழாண்டில் முதலாவது சோதனை விண்கலம் – ஜிதேந்திர சிங்

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஒருபகுதியாக முதலாவது சோதனை விண்கலம் நிகழாண்டு விண்வெளிக்கு செலுத்தப்படும் என்றார் நடுவண் அமைச்சர் ஜிதேந்திர சிங்.

இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ககன்யான் விண்கலத்தை நாட்டின் 75ஆவது விடுதலை நாள் விழா ஆண்டான 2022ஆம் ஆண்டிலேயே விண்வெளிக்கு செலுத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால், இந்தியாவிலும் ரஷியாவிலும் பயிற்சிபெற்றுவந்த விண்வெளி வீரர்கள் COVID தொற்றால் பாதிக்கப்பட நேர்ந்ததால், இந்தத்திட்டம் தாமதமாகிறது. வரும் 2024-இல் ககன்யான் விண்கலம் விண்வெளிக்கு செலுத்தப்படும்.

இதையொட்டி முதலாவது சோதனை விண்கலம் நிகழாண்டு விண்வெளிக்குச் செலுத்தப்படவுள்ளது. அதனை அடுத்தாண்டு விண்வெளிக்கு அனுப்பப்படவுள்ள, ‘வியோம் மித்ரா’ என்ற பெண்ணுருவம்கொண்ட ரோபோ கண்காணிக்கும். ககன்யான் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக நான்கு விமானிகளை இந்திய விமானப்படை அடையாளம் கண்டுள்ளது. அவர்களுக்கு ரஷியாவில் அடிப்படை பயிற்சியளிக்கப்பட்டது. விண்வெளியின் சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும் சோதனை விண்கலத்தின் செயல்பாடுகளைக் கருத்தில்கொண்டு, 2024இல் புவியின் சுற்றுவட்டப்பாதைக்கு 2 விண்வெளி வீரர்களை இஸ்ரோ அனுப்பிவைக்கும் என்றார் ஜிதேந்திர சிங்.

கடந்த 2018 சுதந்திர தின உரையின்போது விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் `10,000 கோடி மதிப்பிலான ககன்யான் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். நிலவுக்கு சந்திரயான்-3 விண்கலத்தை அடுத்த ஆண்டில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

3. சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எம் துரைசாமி பொறுப்பேற்பு

சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எம் துரைசாமி செப்.13 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவிவகித்த வந்த முனீஸ்வர்நாத் பண்டாரி செப்.12 அன்று ஓய்வுபெற்றார். இதைத்தொடர்ந்து, உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான எம் துரைசாமியை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து நடுவணரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எம் துரைசாமி செப்.13 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். வரும் செப்.21-ஆம் தேதியுடன் நீதிபதி எம் துரைசாமி ஓய்வுபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

14th September 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. What is the retail inflation in August in India, as per the official data?

A. 6.5%

B. 7.0%

C. 7.5%

D. 8.0%

Answer & Explanation

Answer: B. 7.0%

  • India’s retail inflation rose to 7% in August from 6.71% in July due to higher food prices. The consumer price index–based inflation is above the RBI’s target level of 6% for the eighth month in a row. As per the Index of Industrial Production (IIP) data released by the National Statistical Office (NSO), India’s industrial production rose 2.4% in July, while the IIP had grown 11.5% in July 2021. Food inflation soared as prices of essential crops like wheat, rice and pulses were driven higher.

2. FAO and World Food Program warned recently about acute food insecurity in which neighbouring country of India?

A. Myanmar

B. Sri Lanka

C. Nepal

D. Afghanistan

Answer & Explanation

Answer: B. Sri Lanka

  • The Food and Agriculture Organization (FAO) and the World Food Programme (WFP) warned in a new report that around 6.3 million people in Sri Lanka are facing moderate to severe acute food insecurity. Crop and Food Security Assessment Mission (CFSAM) report also warned that their situation is expected to worsen if adequate life–saving assistance and livelihood support is not provided.

3. India is set to reintroduce Cheetahs from Namibia in which National Park?

A. Kuno Palpur National Park

B. Jim Corbett National Park

C. Ranthambore National Park

D. Kaziranga National Park

Answer & Explanation

Answer: A. Kuno Palpur National Park

  • India is set to re–introduce Cheetahs from South Africa’s Namibia in Madhya Pradesh’s Kuno Palpur National Park. After the Cheetahs arrive in the National Park, they will stay in smaller enclosures during the quarantine phase before being shifted to the bigger ones. Cheetahs went extinct in India in 1952 and the ‘African Cheetah Introduction Project in India’ was started in 2009.

4. Which organisation in its report stated that 50 million people worldwide are stuck in ‘modern slavery’?

A. FAO

B. IMF

C. ILO

D. WEF

Answer & Explanation

Answer: C. ILO

  • The United Nations’ International Labour Organization (ILO) released a report, in which it stated that 50 million people worldwide are stuck in ‘modern slavery’. The number of people trapped in forced labour or forced marriage and other crises has rose by one fifth in recent years to about 50 million on a single day. The study was conducted along with the Walk Free Foundation.

5. What is the share of government health expenditure in GDP in 2018–19?

A. 0.85 %

B. 1.01 %

C. 1.28 %

D. 2.0 %

Answer & Explanation

Answer: C. 1.28 %

  • As per the findings of the National Health Accounts (NHA) Estimates for India for 2018–19, there has been an increase in the share of government health expenditure in the total GDP of the country. The share has increased from 1.15% in 2013–14 to 1.28% in 2018–19. In 2017–18, it was at 1.35 %. The share of Government Health Expenditure in Total Health Expenditure has also increased in 2018–19 at 40.6%.

6. India signed a MoU with which country on interim water of the Kushiyara River?

A. Bangladesh

B. Nepal

C. Myanmar

D. Pakistan

Answer & Explanation

Answer: A. Bangladesh

  • India and Bangladesh held the meeting of the Joint Rivers Commission (JRC) in New Delhi where the countries finalised MoU on interim water of the Kushiyara River. The meeting was held after 12 years of long gap, according to a statement released by Ministry of Jal Shakti. Both sides welcomed the finalization of the design and location of water intake point on the Feni River to meet the drinking water needs of Tripura’s Sabroom town.

7. Which country has spotted Carbon di oxide in the atmosphere of an exo–planet?

A. China

B. USA

C. Australia

D. Israel

Answer & Explanation

Answer: B. USA

  • The James Webb Space Telescope has spotted carbon dioxide in the atmosphere of a planet in another solar system. The finding marks the first detailed scientific result published from the new telescope. It also shows new possibilities of finding the same greenhouse gas in the atmospheres of smaller, rockier planets that are similar to the Earth.

8. Who is the first Indian sportsperson to clinch the prestigious Diamond League Meet title?

A. P V Sindhu

B. Dhanalakshmi

C. Neeraj Chopra

D. Hima Das

Answer & Explanation

Answer: C. Neeraj Chopra

  • Tokyo Olympics Gold medallist Neeraj Chopra has won the javelin throw competition at the Lausanne Diamond League. With the best throw of 89.08 metre, Neeraj became the first Indian to clinch the prestigious Diamond League Meet title. The League is an annual series of elite track and field athletic competitions. Neeraj has been qualified for the Diamond League Finals at Switzerland and also qualified for the 2023 World Championships.

9. Dr. Asghar Wajahat, who was conferred with the Vyas Samman Award, is a writer of which language?

A. Urdu

B. Hindi

C. Kannada

D. Gujarati

Answer & Explanation

Answer: B. Hindi

  • The 31st Vyas Samman Award was conferred to Hindi writer Dr. Asghar Wajahat in New Delhi. He has been chosen for the prestigious award for his play Mahabali focused on Mughal emperor Akbar and poet Tulsidas. The Vyas Samman is given by K K Birla Foundation for outstanding literary work in Hindi authored by an Indian citizen published during the last 10 years.

10. ‘Vajra Prahar 2022’ is a Defence Exercise held between India and which country?

A. France

B. Japan

C. USA

D. Australia

Answer & Explanation

Answer: C. USA

  • The 13th edition of the India–US Joint Special Forces Exercise Vajra Prahar 2022 was carried out at Bakloh in Himachal Pradesh. The exercise includes training in Air Borne Operations, Special Operations and Counter Terrorism operations. This annual exercise is hosted alternatively between India and the United States. The 12th edition was conducted at Washington (US) in 2021.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!