Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

15th December 2020 Current Affairs in Tamil & English

15th December 2020 Current Affairs in Tamil & English

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

15th December 2020 Current Affairs in Tamil

நடப்பு நிகழ்வுகள்

1.எந்த நாடு அதன் ‘தரவு ஒலிப்படுத்துதல் – Data Sonification’ திட்டத்தின்கீழ், அண்டத்தின் முக்கியமான நிகழ்வுகளின் ஒலியை பிரித்தெடுத்துள்ளது?

அ. ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஆ. டென்மார்க்

இ. சுவீடன்

ஈ. ஜெர்மனி

  • பேச்சு அல்லாத தரவை ஒலியாக மொழிபெயர்ப்பதற்காக, ‘Data Sonification’ என்றவொரு திட்டத்தை NASA செயல்படுத்தி வருகிறது. அண்மையில், சந்திரா X கதிர் மையத்தைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள், அண்டத்தின் மூன்று முக்கிய நிகழ்வுகளைப்பயன்படுத்தினர். மேலும், ஒளியின் அதிர்வெண்களை வெவ்வேறு ஒலியின் சுருதிக்கு மொழிபெயர்த்துள்ளனர். நண்டுவடிவ நெபுலா, புல்லட் கிளஸ்டர் மற்றும் சூப்பர் நோவா ஆகிய மூன்றும் அம்முக்கிய நிகழ்வுகளாம்.

2.நானா அடோ டங்க்வா அகுபோ-அடோ என்பவர் கீழ்க்காணும் எந்த நாட்டின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்?

அ. நமீபியா

ஆ. கென்யா

இ. கானா

ஈ. துனிசியா

  • கானாவின் தற்போதைய அதிபராக இருக்கும் நானா அடோ டங்க்வா அகுபோ-அடோ, இரண்டாவது முறையாக அந்நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர், தனக்கு போட்டி வேட்பாளருக்கு நின்ற முன்னாள் அதிபர் ஜான் மகாமாவுக்கு (48%) எதிராக 51.2 சதவீத வாக்குகளைப் பெற்றார்.

3.எந்த நாகரிகத்தின் குடியிருப்புகளின் எச்சங்களில் கால்நடை இறைச்சி கண்டறியப்பட்டுள்ளது?

அ. மொகஞ்சதாரோ நாகரிகம்

ஆ. சிந்து சமவெளி நாகரிகம்

இ. கீழடி நாகரிகம்

ஈ. நைலாற்று நாகரிகம்

  • சமீபத்தில், சிந்து சமவெளி நாகரிகத்தின் குடியிருப்புகளின் எச்சங்களில் பன்றி, எருமை, செம்மறியாடு & ஆடு போன்ற கால்நடைகளின் இறைச்சிகள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள இந்நாகரிகத்தின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற குடியிருப்புகளில் காணப்பட்ட பீங்கான் பாத்திரங்களில் மேற்கொள்ளப்பட்ட கொழுப்புமீத பகுப்பாய்வில் இருந்து இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

4.தேசிய கவிஞர் ‘சுப்பிரமணிய பாரதி’ பிறந்த ஊர் எது?

அ. எட்டயபுரம்

ஆ. நாகலாபுரம்

இ. திருச்செந்தூர்

ஈ. கடலூர்

  • ‘மகாகவி’ சுப்பிரமணிய பாரதியார் அவர்கள் தூத்துக்குடியில் உள்ள எட்டயபுரம் என்ற ஊரில் பிறந்தார். அவர் ஒரு இந்திய விடுதலைப்போராளியும், இதழாளர் மற்றும் தமிழ் இலக்கியத்தின் முன்னோடியும் ஆவார். அவரை கெளரவிக்கும் வகையில், ‘பன்னாட்டு பாரதி விழா’வானது சென்னையில் வானவில் கலாசார மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • அவரது 138ஆம் பிறந்தநாள் 2020 டிச.11 அன்று அனுசரிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று எழுத்தாளர் சீனி விசுவநாதனுக்கு ‘பாரதி’ விருதை வழங்கினார்.

5.ஒவ்வோர் ஆண்டும் உலகளாவிய சுகாதார காப்பீடு நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. டிசம்பர் 11

ஆ. டிசம்பர் 12

இ. டிசம்பர் 13

ஈ. டிசம்பர் 14

  • ஒவ்வோர் ஆண்டும் டிச.12 அன்று உலக நலவாழ்வு அமைப்பால் உலகளாவிய நலவாழ்வுக் காப்பீடு நாளாக அனுசரிக்கப்படுகிறது. எந்தவொரு பண நெருக்கடியும் இல்லாமல் அனைத்து மக்களும் தரமான நலவாழ்வுச் சேவைகளைப் பெறுவதை இந்நாள் உறுதிசெய்கிறது. உலகளாவிய நலவாழ்வுக்காப்பீடை ஐநா அவையால் நீடித்த வளர்ச்சி இலக்குகளாக சேர்க்கப்பட்டுள்ளது. “Health for All: Protect Everyone” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.

6.உலகின் முதலாவது செயற்கைக்கோள் அடிப்படையிலான குறுகலான-IoT வலையமைப்பை உருவாக்கியுள்ள இந்திய தொலைத்தொடர்பு நிறுவனம் எது?

அ. ஜியோ

ஆ. BSNL

இ. ஏர்டெல்

ஈ. V!

  • இந்தியாவில் செயற்கைக்கோள் அடிப்படையிலான குறுகலான IoT நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தும் நோக்கோடு இந்திய அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL எந்திர இணைப்பு தீர்வுகள் நிறுவனமான ஸ்கைலோடெக் இந்தியாவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்தத் தீர்வு BSNL’இன் செயற்கைக்கோளை நிலப்புற உட்கட்டமைப்புடன் இணைக்கும்.
  • இது உலகின் முதல் செயற்கைக்கோள் அடிப்படையிலான குறுகலான-IoT நெட்வொர்க் ஆகும். IoT இணைப்பு ஏற்கனவே இந்திய இரயில்வே மற்றும் மீன்பிடி கப்பல்களில் சோதனை செய்யப்பட்டுள்ளது.

7.தேசிய தூய்மை கங்கை திட்டம் ஏற்பாடு செய்துள்ள தேசிய அளவிலான உச்சிமாநாட்டின் பெயர் என்ன?

அ. இந்தியா கங்கை உச்சிமாநாடு

ஆ. இந்திய நீர்தாக்க உச்சிமாநாடு

இ. கங்கா புத்துணர்ச்சி உச்சி மாநாடு

ஈ. தூய்மையான கங்கை உச்சிமாநாடு

  • ஐந்தாவது இந்திய நீர்தாக்க உச்சிமாநாடானது (India Water Impact Summit) அண்மையில் ஆர்த் கங்கா -நதி பாதுகாப்பு ஒத்திசைக்கப்பட்ட வளர்ச்சியை மையமாகக்கொண்டு தொடங்கப்பட்டது. ஆறுகள் மற்றும் நீர்நிலைகளின் விரிவான பகுப்பாய்வு மற்றும் முழுமையான மேலாண்மை என்பது இந்த உச்சி மாநாட்டின் கருப்பொருளாகும். இந்த உச்சிமாநாட்டை தேசிய தூய்மை கங்கை திட்டமும் கங்கை நதிப் படுகை மேலாண்மை மற்றும் ஆய்வுகள் மையமும் (Cகங்கா) ஏற்பாடு செய்துள்ளன.

8.ABTO பன்னாட்டு மாநாட்டை ஏற்பாடு செய்கிற மத்திய அமைச்சகம் எது?

அ. வெளிவிவகார அமைச்சகம்

ஆ. சுற்றுலா அமைச்சகம்

இ. கலாச்சார அமைச்சகம்

ஈ. உள்துறை அமைச்சகம்

  • ABTO (பெளத்த சுற்றுலா செயற்பாட்டாளர்கள் சங்கம்) பன்னாட்டு மாநாடு என்பது சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து ABTO’ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு ஆகும். ABTO என்பது இந்தியா மற்றும் வெளிநாட்டில் 1500’க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக்கொண்ட ஓர் அமைப்பாகும். இது, பீகார் மாநிலத்தில் உள்ள போத்கயாவில் 2018 முதல் ABTO மாநாடு மற்றும் பன்னாட்டு பெளத்த பயண சந்தை ஏற்பாடு செய்து வருகிறது.

9.இந்தியாவின் எந்தப் பரப்புரையை அண்மையில் உலக நலவாழ்வு அமைப்பு (WHO) பாராட்டியது?

அ. Fitness Ka Dose Aadha Ghanta Roz

ஆ. Fit Hai to Hit Hai

இ. Khelo India

ஈ. Run India Run

  • இந்தியாவின், ‘பிட்னஸ் கா டோஸ், ஆதா காந்தா ரோஸ்’ என்ற முயற்சியை உலக நலவாழ்வு அமைப்பு (WHO) சமீபத்தில் பாராட்டியுள்ளது. உடற்பயிற்சிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக்கொண்ட இந்தப் பரப்புரை, நாடு தழுவிய ‘கட்டுடல் இந்தியா’ இயக்கத்தின் ஒருபகுதியாக தொடங்கப்பட்டது.
  • ஒவ்வொரு நாளும் குறைந்தது 30 நிமிட உடற்பயிற்சி நடவடிக்கைகளை அனைத்து இந்தியர்களும் பின்பற்ற வேண்டும் என்று அது கேட்டுக்கொள்கிறது.

10. பன்னாட்டு மலைகள் நாள் கொண்டாடப்படும் தேதி எது?

அ. டிசம்பர் 11

ஆ. டிசம்பர் 12

இ. டிசம்பர் 13

ஈ. டிசம்பர் 14

  • மலைகளைப் பாதுகாப்பதையும், மலையகங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்து -வதையும், மலையின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதையும் நோக்கமாகக்கொண்டு ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர்.11 அன்று பன்னாட்டு மலைகள் நாள் கொண்டாடப்படுகிறது. “Mountain biodiversity” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.

15th December 2020 Current Affairs in English

1. Which country under its ‘Data Sonification’ program, extracted the sound of important phenomena of the universe?

[A] United States of America

[B] Denmark

[C] Sweden

[D] Germany

  • The NASA is implementing a program for “Data sonification”, which involves the use of non–speech data to be translated into sound. Recently, the Researchers at the Chandra X–ray center has used three important phenomenon of the universe and translated the frequencies of light into different pitches of sound. Crab Nebula, Bullet Cluster and Super nova are the three iconic images.

2. Nana Addo Dankwa Akufo–Addo has been re–elected as the President of which country?

[A] Namibia

[B] Kenya

[C] Ghana

[D] Tunisia

  • Nana Addo Dankwa Akufo–Addo who is the present President of Ghana has been re– elected as the President of the country for the second time. He has secured 51.2 percent of the vote as against his rival – the former President John Mahama, who secured 48% votes.

3. Cattle meat has been discovered in the remains of the settlements of which civilization?

[A] Mohenja – daro Civilization

[B] Indus Valley Civilization

[C] Keeladi Civilization

[D] Nile River Civilization

  • Recently, researchers have found the presence of animal products, such as the meat of pigs, cattle, buffalo, sheep and goat in the remains of Indus Valley Civilization. This has been conformed from the Lipid residue analysis of ceramic vessels found in the urban and rural settlements of the civilization in North and western part of India.

4. In which city was the national poet ‘Subramania Bharathi’ born?

[A] Ettayapuram

[B] Nagalapuram

[C] Tiruchendur

[D] Cuddalore

  • ‘Mahakavi’ Subramania Bharathiar was born in Ettayapuram, Thoothukudi. He was an Indian independence activist, journalist and a pioneer in Tamil Literature. International Bharati Festival is organized by the Vanavil Culture Centre in Chennai, Tamil Nadu, to honour the poet. His 138th birth anniversary was observed on December 11, 2020. Prime Minister Narendra Modi participated and presented the Bharati Award to the writer Seeni Viswanathan.

5. When is the Universal Health Coverage Day observed every year?

[A] December 11

[B] December 12

[C] December 13

[D] December 14

  • Every year December 12th is observed as the Universal Health Coverage (UHC) Day by the World Health Organisation. UHC ensures that all people get access to quality health services without any financial hardships. Universal health coverage has been inducted as Sustainable Development Goals (SDGs) by the United Nations. This years’ (2020) is “Health for All: Protect Everyone”

6. Which Indian telecom company has rolled out world’s first satellite–based narrowband–IoT network?

[A] Jio

[B] BSNL

[C] Airtel

[D] V!

  • Indian state–owned telecommunications company BSNL in partnership with machine connectivity solutions company Skylotech India, to launch a satellite–based narrowband IoT network in India. The solution will connect with the satellite ground infrastructure of BSNL. This is the world’s first satellite–based narrowband–IoT network. The IoT connectivity is already tested in Indian Railways and fishing vessels among others.

7. What is the name of the national–level summit organised by National Mission for Clean Ganga and cGanga?

[A] India Ganga Summit

[B] India Water Impact Summit

[C] Ganga Rejuvenation Summit

[D] Clean Ganga Summit

  • The 5th India Water Impact Summit (IWIS) has recently commenced with a focus on Arth Ganga – river conservation synchronised development. The theme of the summit is comprehensive analysis and holistic management of rivers and water bodies. It is being organised virtually by the National Mission for Clean Ganga (NMCG) and the Centre for Ganga River Basin Management and Studies (cGanga).

8. Which Union Ministry organises the ABTO International Convention?

[A] Ministry of External Affairs

[B] Ministry of Tourism

[C] Ministry of Culture

[D] Ministry of Home Affairs

  • The ABTO (Association of Buddhist Tour Operators) International Convention is an event organised by ABTO in partnership with the Ministry of Tourism. ABTO is a body consisting of over 1500 members in India and overseas. It has been organising the ABTO convention and International Buddhist Travel Mart (IBTM) since 2018, in Bodh Gaya in the state of Bihar.

9. Which campaign of India has been recently appreciated by the World Health Organisation (WHO)?

[A] Fitness Ka Dose Aadha Ghanta Roz

[B] Fit Hai to Hit Hai

[C] Khelo India

[D] Run India Run

  • The World Health Organisation (WHO) has recently appreciated India’s initiative of ‘Fitness Ka Dose, Aadha Ghanta Roz’. The campaign, which aims to promote physical activity, was launched as part of the nation–wide Fit India Movement. It urges all Indians to follow at least 30 minutes of fitness activities every day. This is on the lines with the WHO fitness campaign.

10. International Mountain Day is observed on which date?

[A] December 11

[B] December 12

[C] December 13

[D] December 14

  • The International Mountain Day is observed every year on December 11 to celebrate and bring awareness to the world’s mountain environments and the people and cultures that inhabit them. The 2020 theme is “Mountains biodiversity”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!