Tnpsc

15th February 2020 Current Affairs in Tamil & English

15th February 2020 Current Affairs in Tamil & English

15th February 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

15th February 2020 Current Affairs in Tamil

15th February 2020 Current Affairs in English

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. ‘நடமாடும் தேனீப்பண்ணை’ என்பது இந்தியாவின் எந்தச் சட்டபூர்வ அமைப்பின் முன்முயற்சியாகும்?

அ. தேசிய மகளிர் ஆணையம்

ஆ. தேசிய சிறுபான்மையினர் ஆணையம்

இ. தேசிய பசுமை தீர்ப்பாயம்

ஈ. கதர் கிராமத் தொழில் வாரியம்

  • தேனீக்கள் வளர்ப்பை ஊக்குவிக்கும் விதமாகவும், தேனீக்களை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு எடுத்துச்செல்லும் வகையிலும் கதர் கிராமத் தொழில் வாரியத்தால் வடிவமைத்து உருவாக்கப்பட்டுள்ள ‘நடமாடும் தேனீ வளர்ப்பகத்தை’, மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறை அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கிவைத்தார். கதர் கிராமத் தொழில் வாரியத்தால் கடந்த 2017இல் தொடங்கப்பட்ட தேசிய தேனீ இயக்கத்தின் ஒருபகுதியாக இது தொடங்கப்பட்டுள்ளது.

2. “பியார் கா பெளதா” (அன்பின் தாவரங்கள்) என்பது மரங்கள் நடவு செய்வதை ஊக்குவிக்கும் எந்த மாநிலத்தின் பரப்புரையாகும்?

அ. மத்திய பிரதேசம்

ஆ. அருணாச்சல பிரதேசம்

இ. சிக்கிம்

ஈ. பீகார்

  • பீகார் மாநில அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையானது அம்மாநிலத்தில் மரங்களை நடவு செய்வதை ஊக்குவிக்கும் பரப்புரையை முன்னெடுத்துள்ளது. இந்தப் பரப்புரை, காதலர் தினத்திற்கு முன்னதாக தொடங்கப்பட்டது. அன்பின் வெளிப்பாடாக, தங்கள் மனதுக்கு நெருக்கமானவர்களுக்கு ஒரு மரக்கன்றை பரிசாக வழங்கவும், அவற்றைப் பராமரிக்கவும் இந்தப் பரப்புரை கேட்டுக்கொண்டது. சூழல் விழிப்புணர்வை உருவாக்குவதன்மூலம் மாநிலத்தை பசுமையாக்குவதே இதன் நோக்கமாகும்.

3.எந்த இந்திய விமான நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக இராஜீவ் பன்சால் நியமிக்கப்பட்டுள்ளார்?

அ. இண்டிகோ

ஆ. ஏர் இந்தியா

இ. ஸ்பைஸ்ஜெட்

ஈ. விஸ்தாரா

  • ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் & மேலாண்மை இயக்குநராக இராஜீவ் பன்சால் இரண்டாவது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏர் இந்தியா தலைவராக அஷ்வனி லோஹனி சுமார் ஒன்றரை ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில், தற்போது அப்பதவிக்கு ராஜீவ் பன்சால் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • 1988ஆம் ஆண்டு நாகாலாந்து பிரிவு IAS அதிகாரியான இராஜீவ் பன்சால், தற்போது பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கூடுதல் செயலர் பொறுப்பில் இருந்துவருகிறார்.

4.இந்திய கடற்படையின் INS ஜமுனா, இந்தியாவின் எந்த அண்டைநாட்டில், நீரியல் ஆய்வுகளை (Hydrographic Surveys) நடத்தவுள்ளது?

அ. இலங்கை

ஆ. வங்கதேசம்

இ. மியான்மர்

ஈ. நேபாளம்

  • இந்திய கடற்படையின் நீரியல் ஆய்வு கப்பலான INS ஜமுனா, அடுத்த 2 மாதங்களுக்கு, இலங்கையில் விரிவான நீரியல் ஆய்வுகளை நடத்தவுள்ளது. இது தொடர்பாக, இக்கப்பல் இலங்கையின் கொழும்புக்கு சென்றடைந்தது. இரு மாதகால ஆய்வின்போது, பல்வேறு கரையோர ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. நீரியல் ஆய்வின்போது, இலங்கை கடற்படை வீரர்களுக்கு பயிற்சியளிக்கப்படும். இலங்கை மாலுமிகளுக்கான துறைமுக பயிற்சி திட்டமும் இதன்போது ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

5.அண்மையில், இந்தியாவின் புதிய நிதிச்செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார்?

அ. ராஜீவ் குமார்

ஆ. அஜய் நாராயண் ஜா

இ. தேவாசிஷ் பாண்டா

ஈ. கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன்

  • தற்போது, நிதியியல் சேவைகள் துறையின் சிறப்புச்செயலாளராக பணியாற்றிவரும் தேவாசிஷ் பாண்டாவை, நாட்டின் புதிய நிதித்துறைச்செயலாளராக மத்திய நிதியமைச்சகம் நியமித்துள்ளது. பணியாளர் அமைச்சகத்தின் உத்தரவின்படி, தற்போதைய செயலாளர் இராஜீவ் குமாருக்குப் பதிலாக, அடுத்த நிதிச்செயலாளராக 1978ஆம் ஆண்டுத்தொகுதியைச் சேர்ந்த IAS அதிகாரி தேவாசிஷை நியமிக்க அமைச்சரவையின் நியமனக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

6.சமீபத்தில், ‘2019ஆம் ஆண்டின் சிறந்த வீரர்’ என சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பால் அறிவிக்கப்பட்ட இந்திய வீரர் யார்?

அ. மன்பிரீத் சிங்

ஆ. மந்தீப் சிங்

இ. ஸ்ரீஜேஷ்

ஈ. ஹர்மன்பிரீத் சிங்

  • இந்திய ஆடவர் அணியின் தலைவர் மன்பிரீத் சிங்கை, அண்மையில், ‘2019ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரர்’ எனச் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (FIH) அறிவித்தது. கடந்த 1999இல் நிறுவப்பட்டதிலிருந்து இம்மதிப்புமிக்க விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை மன்பிரீத் சிங் பெற்றுள்ளார்.

7.ரிஷி சுனக், அண்மையில் எந்த நாட்டின் முதல் இந்திய வம்சாவளி நிதியமைச்சராக ஆனார்?

அ. ஐக்கிய அமெரிக்க நாடுகள் (USA)

ஆ. ஐக்கிய பேரரசு (UK)

இ. நியூசிலாந்து

ஈ. ஜப்பான்

  • இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக் (39), பிரிட்டனின் புதிய நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். பாகிஸ்தானைப் பூர்விகமாகக்கொண்ட சாஜித் ஜாவித், நிதியமைச் -சர் பதவியிலிருந்து விலகியதைத்தொடர்ந்து, ரிஷி சுனக் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

8.அண்மையில் காலமான ராஜீந்தர் கே பச்சாரி, எந்த இந்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனராவார்?

அ. எரிசக்தி வள நிறுவனம் (TERI)

ஆ. அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம்

இ. அகர்கர் ஆராய்ச்சி நிறுவனம்

ஈ. தாவர மரபணு ஆராய்ச்சி நிறுவனம்

  • சமீபத்தில் காலமான ராஜீந்தர் கே பச்சாரி, புது தில்லியில் அமைந்துள்ள எரிசக்தி வள நிறுவனத்தின் (TERI) நிறுவனரும் தலைமை நிர்வாகியாகவும் இருந்தார். உலக வானிலை அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தால் நிறுவப்பட்ட காலநிலை மாற்றம் தொடர்பான பன்னாட்டு அரசுகளுக்கு இடையேயான குழுமத்தின் (IPCC) தலைவராக அவர் 2002இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் அமெரிக்க துணைத்தலைவர் அல் கோருடன், IPCC சார்பாக 2007ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை அவர் பெற்றார்.

9. 2020ஆம் ஆண்டு நிலவரப்படி, ஆசியாவிலேயே இரண்டாவது மதிப்புமிக்க தொலைத்தொடர்பு சேவை வழங்குநராக உள்ள இந்திய தொலைத்தொடர்பு சேவை வழங்கு நிறுவனம் எது?

அ. ஜியோ

ஆ. பாரதி ஏர்டெல்

இ. வோடபோன் ஐடியா

ஈ. பி எஸ் என் எல்

  • புளூம்பெர்க்கின் தரவுகளின்படி, ஆசியாவில் வளர்ந்துவரும் சந்தைகளில், பாரதி ஏர்டெல் இரண்டாவது மிகவும் மதிப்புமிக்க தொலைத்தொடர்பு சேவை வழங்குநராக மாறியுள்ளது. இது, ‘சீனா மொபைல்’ என்னும் சீனாவின் தொலைத்தொடர்பு சேவை வழங்குநரை அடுத்துள்ளது. பாரதி ஏர்டெல் தற்போது சுமார் $41 பில்லியன் டாலர் சந்தை மூலதனத்தைக்கொண்டுள்ளது.
  • $175 பில்லியன் டாலர் மூலதனத்துடன் ஆசியாவின் சிறந்த சீனாவின் தொலைத்தொடர்பு சேவை வழங்குநராக சீனா மொபைல் உள்ளது. உலகளாவிய சந்தையில், ஏர்டெல், பதினோராவது மிகப்பெரிய சந்தை மூலதனத்தைக்கொண்டுள்ளது. AT&T மற்றும் வெரிசோன் கம்யூனிகேஷன்ஸ் உலகளவில் முதல் இருவிடங்களைப் பெறுகின்றன. அதைத்தொடர்ந்து, ‘சீனா மொபைல்’ நிறுவனம் உள்ளது.

10.புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட CRPF பணியாளர்களின் நினைவுச்சின்னம் திறக்கப்பட்டுள்ள லெத்போரா, எந்த மாநிலத்தில் அல்லது யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ளது?

அ. புது தில்லி

ஆ. ஜம்மு மற்றும் காஷ்மீர்

இ. பஞ்சாப்

ஈ. உத்தரகண்ட்

  • புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட 40 CRPF பணியாளர்களின் நினைவுச்சின்னம் அண்மையில் புல்வாமாவில் அமைந்துள்ள லெத்போரா முகாமில் திறக்கப்பட்டது. கடந்த ஆண்டு (2019) புல்வாமாவில் நுழைந்த தற்கொலைப்படையைச் சேர்ந்தவனால், நாற்பது மத்திய சேமக்காவல் படை (CRPF) வீரர்கள் கொல்லப்பட்டனர். புதிதாக திறக்கப்பட்ட இந்த நினைவுச்சின்னத்தில் 40 CRPF பணியாளர்களின் பெயர்களும் அவர்களின் படங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!