Tnpsc

15th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

15th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 15th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

June Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

15th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1.சமீபசெய்திகளில் இடம்பெற்ற SATAT திட்டத்துடன் தொடர்புடைய துறை எது?

அ) கிராமப்புற மின்மயமாக்கல்

ஆ) மலிவு விலை போக்குவரத்து

இ) LPG மானியம்

ஈ) MSME’இல் முதலீடு

  • இந்தியாவில் எண்ணெய் துறை பொதுத்துறை நிறுவனங்கள், அதாவது இந்தியன் ஆயில், HPCL, BPCL, GAIL மற்றும் IGL ஆகியவை SATAT திட்டத்தை மேம்படுத்துவதற்கான ஓர் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை மேற் கொண்டுள்ளன.
  • Sustainable Alternative Towards Affordable Transportation (கட்டுப்படியா -கக்கூடிய போக்குவரத்தை நோக்கிய நிலையான மாற்று) என்பதன் சுருக்கந்தான் SATAT. இது அழுத்தப்பட்ட உயிரிவாயு உற்பத்தி ஆலைக -ளை அமைத்து, சந்தையில் அழுத்தப்பட்ட உயிரிவாயு கிடைப்பை உறுதிசெய்வதற்காக 01.10.2018 அன்று தொடங்கப்பட்டது.

2. ஐநா அமைப்பால் உலக பெற்றோர் நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) ஜூன்.01

ஆ) ஜூன்.05

இ) ஜூன்.10

ஈ) ஜூன்.15

  • ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.1 அன்று ஐக்கிய நாடுகள் அவையால் உலக பெற்றோர் நாள் அனுசரிக்கப்படுகிறது. இதுதொடர்பான தீர்மானம், ஐநா பொது அவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. முதன்முறையாக 2012ஆம் ஆண்டில் உலக பெற்றோர் நாள் அனுசரிக்கப்பட்டது. பெற்றோருத்துவத்தையும் அதன் தன்னலமற்ற அர்ப்பணிப்பையும் கொண்டாட இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

3. WHOஆல் ஒப்புதல் வழங்கப்பட்ட சினோவாக் என்ற COVID-19 தடுப்பூசியை உருவாக்கிய நாடு எது?

அ) இந்தோனேசியா

ஆ) இந்தியா

இ) சீனா

ஈ) இலங்கை

  • சீனாவின் சினோவாக் பயோடெக் லிமிடெட் உருவாக்கிய சினோவாக் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பின் அவசரகால பயன்பாட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசியை 18 வயது மற்றும் அதற்கு மேற்ப -ட்டவர்கள் பயன்படுத்த WHO பரிந்துரைத்துள்ளது. 2-4 வார இடை வெளியுடன் 2 டோஸ்களாக இத்தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம்.

4. ILO மதிப்பீடுகளின்படி, வரும் 2022ஆம் ஆண்டில் உலகளாவிய வேலையின்மை விகிதம் என்னவாக இருக்கும்?

அ) 1%

ஆ) 3%

இ) 5.7%

ஈ) 10.4%

  • உலகளாவிய வேலையின்மை விகிதமானது வரும் 2022ஆம் ஆண்டில், 5.7 சதவிகிதமாக இருக்கும் என பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு (ILO) மதிப்பிடப்பட்டுள்ளது. உலகெங்கிலும் கிட்டத்தட்ட 205 மில்லியன் பேர் பணியற்றோராக இருப்பார்கள் என ILO மதிப்பிட்டுள்ளது. இது, 2019ஆம் ஆண்டின் 187 மில்லியன் எண்ணிக்கையைவிட அதிகமாக உள்ளது. மேலும் 108 மில்லியன் பணியாளர்கள் ஏழைகள் அல்லது வறியவர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக ILO தெரிவித்துள்ளது.

5. WHO நிர்வாகக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள Dr பேட்ரிக் அமோத் சார்ந்த நாடு எது?

அ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஆ) கென்யா

இ) நியூசிலாந்து

ஈ) பிரேஸில்

  • இந்திய ஒன்றிய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், ஜூன்.02 அன்று உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழுவின் தலைவராக தனது பதவிக்காலத்தை நிறைவுசெய்தார். உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக்குழுவின் 149ஆவது அமர்வின்போது, கென்யாவின் சுகாதார அமைச்சகத்தின் சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் பேட்ரிக் அமோத் நிர்வாகக் குழுவின் தலைவராக அறிவிக்கப்பட்டு நியமிக்கப்பட்டார்.

6. அதிக மகசூல் தரக்கூடிய விதைகளை, உழவர்களுக்கு விநியோ -கிக்கும் அரசாங்க திட்டத்தின் பெயரென்ன?

அ) Seed Minikit Programme

ஆ) HYV Seeds Programme

இ) Seeds Distribution Programme

ஈ) Seeds to Farmers Programme

  • மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விதை சிறு தொகுப்பு திட்டத்தை, உழவர்களுக்கு அதிக மகசூல் தரும் விதைகளின் தொகுப்பி னை விநியோகித்து தொடங்கிவைத்தார். இது, உழவர்களுக்கு புதிய வகை விதைகளை அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக்கொண்டுள்ளது. இந்த சிறு தொகுப்புகளை தேசிய விதை கழகம், NAFED மற்றும் குஜராத் மாநில விதை கழகம் வழங்குகின்றன.
  • தேசிய உணவுப்பாதுகாப்பு திட்டத்தின்மூலம் ஒன்றிய அரசால் முழுமை -யாக இந்தத் திட்டத்திற்கு நிதியளிக்கப்படுகின்றது.

7. தேசிய மனிதவுரிமைகள் ஆணையத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

அ) அருண் மிஸ்ரா

ஆ) A K சிக்ரி

இ) மார்க்கண்டேய கட்ஜூ

ஈ) ரஞ்சன் கோகோய்

  • தேசிய மனிதவுரிமைகள் ஆணையத்தின் புதிய தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் அருண் மிஸ்ரா பொறுப்பேற்றார். 2019ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மனிதவுரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் திருத்தத்திற்குப் பின்னர், NHRC தலைமைப் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் இந்தியத் தலைமை நீதியரசரல்லாத ஒருவர் மிஸ்ரா ஆவார். முன்னாள் தலைவரான நீதியரசர் H L தட்டுவின் பதவிக்காலம் கடந்த டிசம்பருடன் நிறைவடைந்தது. இந்த ஆணையத்தில் மேலும் இரண்டு உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

8. NITI ஆயோக்கின் நீடித்த வளர்ச்சி இலக்குகள் (SDG) குறியீட்டில் முதலிடம் வகிக்கும் இந்திய மாநில அரசு எது?

அ) தமிழ்நாடு

ஆ) கேரளா

இ) இராஜஸ்தான்

ஈ) அஸ்ஸாம்

  • நடப்பாண்டில் (2021) வெளியிடப்பட்ட NITI ஆயோக்கின் நீடித்த வளர்ச்சி இலக்குகள் (SDG) குறியீட்டில் கேரளா முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டது. SDGகளில், 2019ஆம் ஆண்டில் 60ஆக இருந்த இந்தியாவின் ஒட்டுமொத்த மதிப்பெண், 2021ஆம் ஆண்டில் 66ஆக அதிகரித்துள்ளது.
  • ஆண்டுதோறும் வெளியிடப்படுகிற இக்குறியீடு சமூகம், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் அளவுருக்களில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்கிறது. ஹிமாச்சல பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப்பிடித்தன. பீகார் மாநிலம், இக்குறியீட்டின் கடைசி இடத்தில் உள்ளது.

9. சமீபத்தில், பெஞ்சியுன்-4B என்ற புதிய தலைமுறை வானிலை செயற்கைக்கோளை ஏவிய நாடு எது?

அ) ஜப்பான்

ஆ) சீனா

இ) இஸ்ரேல்

ஈ) ஐக்கிய அரபு அமீரகம்

  • அண்மையில் சீனா, பெஞ்சியுன்-4B (FY-4B) என்ற புதிய தலைமுறை வானிலை செயற்கைக்கோளை வெற்றிகரமாக அதன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது. பெஞ்சியுன்-4B செயற்கைக்கோள், லாங் மார்ச் 3B என்ற ஏவுகணைமூலம் புவிசுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
  • அது பெஞ்சியுன் செயற்கைக்கோள்களின் வலையமைப்பில் இணைந்த -து. பெஞ்சியுன் தொடரின் முதல், தாழ்நிலை புவிசுற்றுப்பாதை செயற்கைக்கோள் சோதனை இயந்திரமான FY-1A, 1988’இல் ஏவப்பட்டது.

10. ஐநா நீடித்த போக்குவரத்து மாநாடு-2021’ஐ நடத்துகிற நாடு எது?

அ) இந்தியா

ஆ) சீனா

இ) ஜப்பான்

ஈ) ஆஸ்திரேலியா

  • ஐநா நீடித்த போக்குவரத்து மாநாடு – 2021 ஆனது அக்.14-16 வரை சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது. நீடித்த வளர்ச்சி இலக்குகள் மற்றும் காலநிலைமாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தை அடைய, நீடித்த போக்குவரத்தை ஊக்குவிப்பதே இம்மாநாட்டின் நோக்கமாகும்.
  • மிதிவண்டிகளின் நீண்ட ஆயுள், பல்திசையியக்கத்திறம் மற்றும் சுற்றுச் சூழல் தோழமைத்தன்மையை அங்கீகரிப்பதற்காக, ஐநா பொது அவை ஆனது ஜூன்.3’ஐ உலக மிதிவண்டி நாளாக அறிவித்தது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. பருவநிலை மாற்றம்: கடந்த 200 ஆண்டுகளில் இந்தியாவின் தாக்கம் 3 சதவீதம்தான்: பிரகாஷ் ஜாவடேகர்

பருவநிலை மாற்றத்தில் இந்தியாவின் தாக்கம் 3 சதவீதம்தான் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார். சுற்றுச்சூழல் குறித்து நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் காணொலி வழியாக அவர் பேசியதாவது: கடந்த 200 ஆண்டுகளில் பருவநிலை மாற்றம் அடைந்ததில் இந்தியாவின் பங்கு 3 சதவீதம்தான். பருவநிலை மாற்றத்தில் குறைந்த தாக்கத்தை ஏற்படுத்திய நாடுகளில் இந்தியாவும் ஒன்று என அவர் கூறினார்.

2. இந்தியாவில் கண்டறியப்பட்டிருக்கும் புதிய ‘டெல்டா-பிளஸ்’ வகை கரோனா தீநுண்மி

இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்டு வேகமாகப் பரவி வந்த டெல்டா (பி.1.617.2) வகை தீநுண்மி இப்போது டெல்டா-பிளஸ் (ஏஒய்.1) வகையாக உருமாற்றம் பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் புதிய உருமாறிய வகை கரோனா தாக்கம் இப்போது குறைந்த அளவில் இருப்பதால், இதனால் இந்தியாவில் இப்போதைக்கு ஆபத்தில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா தீநுண்மிகளான கப்பா (பி.1.617.1) டெல்டா ஆகியவற்றின் பரவல் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் அதிகரித்து காணப்பட்டது. இதனால், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். குறிப்பாக, டெல்டாவகை உருமாறிய கரோனா தீநுண்மியின் பரவல் அதிக அளவில் காணப்பட்டது என்று மத்திய அரசு சார்பில் அமைக்கப்பட்ட 10 தேசிய ஆய்வகங்களை உள்ளடக்கிய ஆய்வுக் குழு தெரிவித்தது.

இந்த நிலையில், இந்த அதிக பரவல் வீரியம் கொண்ட டெல்டா வகை தீநுண்மி இப்போது டெல்டா-பிளஸ் வகையாக உருமாற்றம் பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்லது. இதுகுறித்து சிஎஸ்ஐஆர் மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியயல் ஆய்வு நிறுவன மருத்துவ அறிவியல் விஞ்ஞானி வினோத் ஸ்கேரியா தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது-

டெல்டா வகை தீநுண்மியிலிருந்து புதிய உருமாறிய வகை உருவாகியி -ருக்கிறது. அது கே417என் உருமாறிய டெல்டா-பிளஸ் தீநுண்மி பி.1.617.2.1 அல்லது ஏஒய்.1 என வகைப்படுத்தப்பட்டுள்ளது. சார்ஸ்-கொவைட்2 ஸ்பைக் புரதத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த உருமாறிய தீநுண்மி, மனித உடலுக்குள் நுழைந்து திசுக்களை சேதப்படுத்துகின்ற -ன. இலண்டன் சுகாதரத் துறை வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த டெல்டா-பிளஸ் வகை தீநுண்மி கடந்த ஜூன்.7-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி இந்தியாவில் அதிக அளவில் பரவவில்லை. பெரும்பாலும் ஐரோப்பா, ஆசியா மற்றும் அமெரிக்கா பகுதிகளிலேயே இந்த வகை உருமாற்றம் காணப்படுகிறது.

இந்த டெல்டா-பிளஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அண்மையில் அவசரக்கால பயன்பாட்டுக்கு அனுமதியளித்த கேசிரிவிமாப் மற்றும் இம்டெவிமாப் ஆகிய மருந்துகள் நல்ல பலனளிக்கும் என்பதை மருத்துவ ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த மருந்து ஒரு டோஸ் `59,750 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

3. ஜூன்.15 – முதியோர் கொடுமை விழிப்புணர்வு ஊட்டும் நாள் (World Elder Abuse Awareness Day)

கருப்பொருள்: “Access to Justice”.

4. சேதி தெரியுமா?

ஜூன்.5: கரோனா காரணமாக +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.

ஜூன்.5: உலகின் இரண்டாம் நிலை டென்னிஸ் வீராங்கனை யான ஜப்பானின் நவோமி ஒசாகா பிரெஞ்சு ஓபன் போட்டித் தொடரிலிருந்து மனநலப் பிரச்சனைகள் காரணமாக இடையிலேயே விலகினார்.

ஜூன்.5: தேசிய மனிதவுரிமைகள் ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா பொறுப்பேற்றார்.

ஜூன்.6: ஆசிரியர் தகுதித்தேர்வின் (TET) சான்றிதழ் இனி வாழ்நாள் முழுவதும் செல்லும் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்தது.

ஜூன்.6: எட்டு அணிகள் பங்கேற்கும் ICC சாம்பியன்ஸ் டிராபி 2025 முதல் மீண்டும் தொடங்கும் என்றும் 50 ஓவர் உலகக் கோப்பையில் 14 அணிகளும், T20 உலகக்கோப்பையில் 20 அணிகளும் பங்கேற்கும் என்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்தது.

ஜூன்.7: நாவல் கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியைத் தயாரிக்க சீரம் நிறுவனத்துக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

ஜூன்.8: தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை அலுவலகக்கோப்புகள், கோவில் சொத்துகள் ஆகியவற்றை டிஜிட்டல் மயப்படுத்தும் பணிகள் தொடங்கின.

ஜூன்.8: மத்திய அரசு வெளியிட்ட எத்தனால் கொள்கையில், 2025ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20% எத்தனாலைக் கலந்து விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன்.9: எண்பது கோடி மக்களுக்கு நவம்பர் மாதம் வரை ரேஷன் கடைகளில் உணவு தானியம் இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

1. SATAT Scheme, which was making news recently, is associated with which sector?

A) Rural Electrification

B) Affordable Transportation

C) LPG Subsidy

D) Investment in MSME

  • Oil sector PSUs in India namely Indian Oil, HPCL, BPCL, GAIL and IGL have come together into a Cooperation Agreement for promotion and development of SATAT Scheme.
  • SATAT stands for Sustainable Alternative Towards Affordable Transportation, which was launched on 01.10.2018 to set up Compressed Biogas production plants and make CBG available in the market.

2. When is the Global Day of Parents observed by the UN?

A) June 01

B) June 05

C) June 10

D) June 15

  • Every year, the United Nations observes 1st June as the Global Day of Parents. A resolution in this regard was adopted by the United Nations General Assembly and the first–ever Global Day of Parents was observed in the year 2012. This day is observed to celebrate parenthood and its selfless commitment.

3. The COVID–19 vaccine – Sinovac, which has been granted approval by WHO, is developed by which country?

A) Indonesia

B) India

C) China

D) Sri Lanka

  • Sinovac vaccine developed by China’s Sinovac Biotech Ltd has been granted emergency use approval by the World Health Organisation. WHO has recommended the vaccine to be used by people who are 18 years and above. The vaccine needs to be administered in two doses with a gap of two to four weeks.

4. What would be the rate of global unemployment in the year 2022, as per ILO estimates?

A) 1%

B) 3%

C) 5.7%

D) 10.4%

  • The rate of global unemployment in the year 2022 is estimated to be 5.7% by the International Labour Organisation (ILO). ILO has estimated that nearly 205 million unemployed people would exist around the world, which is higher than the 2019 level of 187 million. Further the ILO has stated that 108 million more number of workers have been categorized as poor or extremely poor.

5. Dr Patrick Amoth, who has been appointed as the Chair of WHO Executive Board, is from which country?

A) USA

B) Kenya

C) New Zealand

D) Brazil

  • India’s Union Health Minister Dr Harsh Vardhan completed his tenure as Chairman of WHO Executive Board on June 02. During the 149th session of the WHO Executive board, Harsh Vardhan announced that Dr Patrick Amoth, Acting Director–General for Health, Ministry of Health of Kenya has been appointed as the Chair of WHO Executive Board.

6. What is the name of the programme, in which the Government distributes kits of higher yielding varieties of seeds to farmers?

A) Seed Minikit Programme

B) HYV Seeds Programme

C) Seed Distribution Programme

D) Seeds to Farmers Programme

  • The Union Agriculture Minister Narendra Singh Tomar launched the Seed Minikit Programme by distributing kits of higher yielding varieties of seeds to farmers.
  • It aims to introduce new varieties of seeds to the farmers and helps in increasing the seed replacement rate. The mini kits are being provided by the National Seeds Corporation (NCS), NAFED and Gujarat State Seeds Corporation and wholly funded by the Union through the National Food Security Mission.

7. Who has been appointed as the new Chairperson of the National Human Rights Commission?

A) Arun Mishra

B) AK Sikri

C) Markandey Katju

D) Ranjan Gogoi

  • Former Supreme Court Judge Justice Arun Mishra took charge as the new Chairperson of the National Human Rights Commission. Justice Mishra is the first non–CJI to be appointed to the NHRC chief post since the amendment of the Protection of Human Rights Act in 2019.
  • Former Chairperson Justice H L Dattu completed his tenure in December last year. Two other members were also appointed in the Commission.

8. Which Indian state topped the NITI Aayog’s Sustainable Development Goals (SDG) Index?

A) Tamil Nadu

B) Kerala

C) Rajasthan

D) Assam

  • Kerala retained the top spot in the Niti Aayog’s Sustainable Development Goals (SDG) Index released in the year 2021.
  • India’s overall score across SDGs improved by six points, from 60 in 2019 to 66 in 2021. The annual index evaluates the progress of states and UTs on social, economic and environmental criteria. Himachal Pradesh and Tamil Nadu grabbed the second and third spots respectively while Bihar is placed at the last place in the index.

9. Fengyun–4B, the New–Gen Meteorological Satellite, has been recently launched by which country?

A) Japan

B) China

C) Israel

D) UAE

  • China recently launched into orbit a new–generation weather satellite named Fengyun–4B (FY– 4B) successfully. The Fengyun–4B satellite was launched aboard a Long March 3B rocket into the geostationary orbit, to join the network of Fengyun satellites. The first of the Fengyun series, a low–Earth orbit satellite testing machine – FY–1A, was launched in 1988.

10. Which country is to play host to the UN Sustainable Transport Conference 2021?

A) India

B) China

C) Japan

D) Australia

  • The UN Sustainable Transport Conference is to be held from 14 to 16 October 2021 in Beijing, China. The Conference aims to encourage sustainable transport to achieve the Sustainable Development Goals and the Paris Agreement on climate change. To acknowledge the longevity, versatility and environmental sustainability of bicycles, the UN General Assembly declared 3 June as World Bicycle Day.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!