Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

15th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English

15th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 15th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

June Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ‘இந்திய இரயில்வேக்கான புதுமைக் கொள்கையின்’படி, கண்டுபிடிப்பாளர்களுக்கு வழங்கப்படும் மானியத்தின் அதிகபட்ச வரம்பு என்ன?

அ. ரூ.10 இலட்சம்

ஆ. ரூ.25 இலட்சம்

இ. ரூ.50 இலட்சம்

ஈ. ரூ 1.5 கோடி 

  • துளிர்–நிறுவல்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில், இரயில்வே அமைச்சர் அசுவினி வைஷ்ணவ், ‘இந்திய இரயில்வேக்கான புதுமைக் கொள்கை’யை அறிமுகப்படுத்தினார். ‘இரயில்வேக்கான துளிர்–நிறுவல்கள்’ என்றும் குறிப்பிடப்படும் இந்தக் கொள்கையானது சமப்பகிர்வு அடிப்படையில் கண்டுபிடிப்பாளர்களுக்கு `1.5 கோடி நிதியைப் பகிர்ந்தளிக்கும்.

2. 2021 – கேலோ இந்தியா யூத் கேம்ஸில் முதலிடத்தைப் பிடித்துள்ள மாநிலம் எது?

அ. தெலுங்கானா

ஆ. ஹரியானா 

இ. ஒடிஸா

ஈ. குஜராத்

  • 2021 – கேலோ இந்தியா யூத் கேம்ஸின் நான்காவது பதிப்பு பஞ்ச்குலாவில் நிறைவடைந்தது. இந்தப் போட்டிகளை நடத்திய ஹரியானா மாநிலம் 52 தங்கம், 39 வெள்ளி மற்றும் 46 வெண்கலப்பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. மகாராஷ்டிராவும், கர்நாடகாவும் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன. கேலோ இந்தியா யூத் கேம்ஸின் நான்காவது பதிப்பில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து விளையாட்டு வீரர்கள் 25 வெவ்வேறு விளையாட்டுகளில் போட்டியிட்டனர்.

3. Farmer Registration & Unified Beneficiary Information System’ (FRUITS) என்ற மென்பொருளை அறிமுகப்படுத்திய மாநிலம் / UT எது?

அ. கோவா

ஆ. குஜராத்

இ. டாமன் & டையூ

ஈ. கர்நாடகா 

  • கர்நாடக மாநில அரசு பல்வேறு அரசுத்திட்டங்களின்கீழ் வழங்கப்படும் பலன்களை உழவர்கள் எளிதாகப் பெறுவதற்காக, ஆதார் அடிப்படையிலான, ஒற்றைச் சாளர பதிவுக்கான மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘Farmer Registration & Unified Beneficiary Information System’ (FRUITS) என்ற அம்மென்பொருள் ஆதார் அட்டை மற்றும் கர்நாடகாவின் பூமி எண்ம மயமாக்கப்பட்ட நிலப்பதிவு முறையைப் பயன்படுத்தி ஒற்றைப் பதிவுக்கு உதவுகிறது. உழவு, தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு, வருவாய், உணவு, சிவில் சப்ளைஸ் மற்றும் மீன்வளம் ஆகிய மாநிலத்துறைகள் இந்த முன்னெடுப்பின்கீழ் வருகின்றன.

4. அண்மையில் தொடங்கப்பட்ட, ‘அக்னிபத்’ திட்டம், எந்தத் துறையின் சீர்திருத்தங்களுடன் தொடர்புடையது?

அ. காவல்துறை

ஆ. இராணுவம் 

இ. குடிமைப் பணிகள்

ஈ. பழங்குடியினர் நலன்

  • இந்திய இராணுவம், இந்திய கடற்படை மற்றும் இந்திய விமானப்படை ஆகியவற்றில் வீரர்கள், மாலுமிகள் மற்றும் வான்படை வீரர்களைச் சேர்ப்பதற்காக பாதுகாப்பு அமைச்சகம், ‘அக்னிபத்’ என்ற பெரும் பாதுகாப்புக் கொள்கை சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின்கீழ் குறுகியகால ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படும் பணியாளர்கள் ‘அக்னிவீரர்கள்’ என்று அழைக்கப்படுவார்கள்.

5. ஆசியாவின் மிகப்பெரிய உவர் நீர் தடாகம் அமைந்துள்ள இந்திய மாநிலம்/UT எது?

அ. ஒடிஸா 

ஆ. ஜம்மு காஷ்மீர்

இ. ஹிமாச்சல பிரதேசம்

ஈ. சிக்கிம்

  • ஒடிஸா மாநிலத்தில் அமைந்துள்ள, ‘சிலிகா ஏரி’ ஆசியாவின் மிகப்பெரிய உவர்நீர் தடாகம் ஆகும். தி ஃபிஷிங் கேட் திட்டத்துடன் இணைந்து சிலிகா மேம்பாட்டு ஆணையம் நடத்திய கணக்கெடுப்பின்படி, ஏரியில் 176 மீன்பிடிப் பூனைகள் உள்ளன. இதுவே, 2010ஆம் ஆண்டு தொடங்கி தற்போது இந்தியாவில் மேற்கு வங்கம் மற்றும் ஒடிஸா ஆகிய இரண்டு மாநிலங்களில் நடைபெற்றுவரும் மீன்பிடி பூனைகள்பற்றிய உலகின் மிகநீண்ட ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்புத் திட்டமாகும். மேற்கு வங்கம், 2012–இல் மீன்பிடிப் பூனைகளை மாநில விலங்காக அறிவித்தது மற்றும் மீன்பிடிப்பூனையானது 2020–இல் சிலிகா ஏரியின் தூதராக அறிவிக்கப்பட்டது.

6. 2022 – மும்பை சர்வதேச திரைப்பட விழாவில், ‘Dr V சாந்தாராம் வாழ்நாள் சாதனையாளர் விருது’ யாருக்கு வழங்கப்பட்டது?

அ. ஹேமா மாலினி

ஆ. ஆஷா பரேக்

இ. சஞ்சித் நார்வேகர் 

ஈ. குல்சார்

  • ஆவணப்படம், குறும்படங்கள் மற்றும் அனிமேஷன் படங்களுக்கான மும்பை சர்வதேச திரைப்பட விழாவின் 17ஆம் பதிப்பு (MIFF–2022) சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது. மத்திய வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் திரைப்படப்பிரிவு ஏற்பாடு செய்த ஏழு நாள் விழாவைத் தொடங்கி வைத்தார். ‘Dr V சாந்தாராம் வாழ்நாள் சாதனையாளர் விருது’ மூத்த ஆவணப்பட தயாரிப்பாளரும் எழுத்தாளருமான சஞ்சித் நர்வேகருக்கு திரைப்பட வரலாறு & ஆவணப்பட இயக்கத்திற்கான அவரது பங்களிப்பிற்காக வழங்கப்பட்டது.

7. சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் இயக்குநர்கள் குழுவின் தலைவராகவும் வாக்களிக்கும் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர் யார்?

அ. மேரி கோம்

ஆ. லோவ்லினா போர்கோஹைன் 

இ. நிகத் ஜரீன்

ஈ. ஜமுனா போரோ

  • ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற லோவ்லினா போர்கோஹைன், தடகளக் குழுவின் இயக்குநர்கள் குழுவின் தலைவராகவும், வாக்களிக்கும் உறுப்பினராகவும் தேர்வுசெய்யப்பட்டுள்ளார் என சர்வதேச குத்துச்சண்டை சங்கம் (IBA) தெரிவித்துள்ளது. இந்திய குத்துச்சண்டை வீரர் சிவ தாபாவும் IBA உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

8. இந்திய புவியியல் ஆய்வு மையம் நடத்திய ஆய்வின்படி, கீழ்காணும் எந்த மாநிலத்தில் 222.88 மில்லியன் டன் தங்கம் இருப்பு உள்ளது?

அ. கர்நாடகா

. பீகார் 

இ. கேரளா

ஈ. மத்திய பிரதேசம்

  • இந்திய புவியியல் ஆய்வுமையம் நடத்திய ஆய்வின்படி, பீகார் மாநிலத்தில் 27.6 டன் கனிமவளங்கொண்ட தாது உட்பட சுமார் 222.88 மில்லியன் டன் தங்கம் இருப்பு உள்ளது. GSI மற்றும் தேசிய கனிம வளர்ச்சிக்கழகத்துடன் ஆலோசனை நடத்திய பீகார் மாநில அரசு, இந்தியாவின் மிகப்பெரிய தங்க இருப்பு என்று கூறப்படும் அவ்விருப்புப் பகுதியை ஆய்வுசெய்ய அனுமதி வழங்க முடிவுசெய்துள்ளது.

9. ரிசர்வ் வங்கியால் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வின்படி, பெரும்பாலானோரால் மிகவும் விரும்பப்படும் பணத்தாள் எது?

அ. ரூ.100 

ஆ. ரூ.200

இ. ரூ.500

ஈ. ரூ.2000

  • இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) வங்கிப்பணத்தாள் கணக்கெடுப்பின்படி, இந்திய மக்களால் `100 மதிப்புள்ள ரூபாய் தாள்கள் அதிகம் விரும்பப்படுகின்றன. அதே சமயம் `2,000 மதிப்புள்ள ரூபாய் தாள்கள் மிகச் சொற்பமாகவே மக்களால் விரும்பப்படுகின்றன. நுகர்வோர் அளவில் பணத்திற்கான தேவை மற்றும் மதிப்பின் விருப்பத்தேர்வுகளை மதிப்பிடுவதற்காக இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. பதிலளித்த 10இல் 7 பேராவது புதிய ரூபாய் நோட்டுகளில் திருப்தி அடைந்துள்ளனர். பதிலளித்தவர்களில் சுமார் 3% பேருக்கு பணத்தாளின் பாதுகாப்பு அம்சம்பற்றி எதுவும் தெரியாது.

10. 2022 – சர்வதேச யோகா நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Yoga for Humanity 

ஆ. Yoga and Science

இ. Yoga for Heart

ஈ. Yoga for Life

  • ஜூன்.21ஆம் தேதி இந்தியாவிலும் உலகெங்கிலும் ஏற்பாடு செய்யப்படும் எட்டாவது சர்வதேச யோகா நாளின் கருப் பொருளாக, “Yoga for Humanity” என்று AYUSH அமைச்சகம் அறிவித்துள்ளது. சர்வதேச யோகா நாளின் முதன்மை நிகழ்வு கர்நாடக மாநிலம் மைசூருவில் நடைபெற்றது. பல்வேறு நாடுகளில் இருந்து சூரியனின் இயக்கத்துடன் யோகாசனம் செய்யும் மக்களின் பங்கேற்பை வெளிப்படுத்த, “கார்டியன் ரிங்” என்ற திட்டம் மேற்கொள்ளப்படும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. மொத்த விலை பணவீக்கம் 15.88%-ஆக அதிகரிப்பு

மொத்த விற்பனை விலை அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்கம் கடந்த மே மாதத்தில் 15.88 சதவீதமாக வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த மே மாதத்தில் வெப்ப அலை காரணமாக காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை அதிகரித்தது. மேலும், கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்து காணப்பட்டது. அதன்விளைவாக, அந்த மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் வரலாறு காணாத அளவில் 15.88 சதவீதத்தை எட்டியது. தொடர்ந்து மூன்று மாதங்களாக இப்பணவீக்கம் உச்சத்தில் இருந்து வருகிறது. மேலும், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இப்பணவீக்கம் தொடர்ந்து 14-ஆவது முறையாக இரட்டை இலக்கத்தில் உள்ளது.

முந்தைய ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது மே மாதத்தில், மினரல் ஆயில், கச்சா பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, உணவுப் பொருள்கள், அடிப்படை உலோகம், உணவுசாரா பொருள்கள், இரசாயனம் உள்ளிட்டவற்றின் விலை கணிசமாக அதிகரித்ததே பணவீக்கம் வரலாற்று உச்சத்தை தொட்டதற்கு முக்கிய காரணம். இந்தப் பணவீக்கம் நடப்பாண்டு ஏப்ரலில் 15.08 சதவீதமாகவும், கடந்தாண்டு மே மாதத்தில் 13.11 சதவீதமாகவும் இருந்தது என வணிக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2. தேசிய தடகளம்: தமிழ்நாடு ஒட்டுமொத்த சாம்பியன்

சென்னையில் நடைபெற்ற 61-ஆவது தேசிய தடகளப் போட்டியில் தமிழ்நாடு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஹரியானா, உத்தர பிரதேசம் முறையே அடுத்த இரு இடங்களைப் பிடித்தன.

மும்முறை தாண்டுதல்: சென்னை ஜவாஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியின் இறுதி நாளான செவ்வாய்க்கிழமை ஆடவர் மும்முறை தாண்டுதலில் தமிழ்நாட்டு வீரர் பிரவீன் சித்ரவேல் 17.18 மீ தூரம் தாண்டி புதிய போட்டி சாதனையுடன் ஒரேகான் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கும் தகுதி பெற்றார். கேரளத்தின் அப்துல்லா 17.14 மீ, எல்டோஸ் பால் 16.81 மீ தூரம் தாண்டி வெள்ளி, வெண்கலம் வென்றனர்.

200 மீ ஓட்டம்: மகளிர் பிரிவில் தமிழ்நாட்டு வீராங்கனை தனலட்சுமி 23.27 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கம் வென்றார். 100 மீ ஓட்டத்தில் தங்கம் வென்ற ஹிமாதாஸை பின்னுக்கு தள்ளினார் தனலட்சுமி. அஸ்ஸாமின் ஹிமாதாஸ் 23.29 விநாடிகளிலும், மகாராஷ்டிரத்தின் ஐஸ்வர்யா கைலாஷ் 23.72 விநாடிகளிலும் வந்து முறையே அடுத்த இரு இடங்களைப் பிடித்தனர். ஆடவர் பிரிவில் அஸ்ஸாம் வீரர் அமலன் போரோகைன் 21.00 விநாடிகளில் இலக்கை அடைந்து தங்கம் வென்றார். இவர் 100 மீ ஓட்டத்திலும் தங்கம் வென்றிருந்தார். கர்நாடகத்தின் அபின் தேவதிகா, மகாராஷ்டிரத்தின் இராகுல் இரமேஷ் முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனர்.

400 மீ தடை தாண்டுதல்: மகளிர் பிரிவில் தமிழ்நாட்டின் வித்யா இராம்ராஜ் 57.08 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கம் வென்றார். கேரளத்தின் அனு (58.99), ஆரத்தி (59.26) வெள்ளி, வெண்கலம் வென்றனர். ஆடவர் பிரிவில் கேரளத்தின் ஜபீர் பள்ளியாலில் 49.76 விநாடிகளில் இலக்கை அடைந்து முதலிடம் பிடித்தார். தமிழகத்தின் சந்தோஷ்குமார் (50.16), குஜராத்தின் தவால் மகேஷ் (50.55) வெள்ளி, வெண்கலம் வென்றனர்.

5000 மீ ஓட்டம்: மகளிர் பிரிவில் மகாராஷ்டிரத்தின் சஞ்சீவனி பாபுராவ் 16:11.46 நிமிஷத்தில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கம் வென்றார். ஷரதா ரஜினி (குஜராத்), சீமா (ஹிமாச்சலம்) முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனர். ஆடவர் பிரிவில் தில்லியின் ஹரேந்திர குமார் 14.01:50 நிமிஷத்தில் இலக்கை அடைந்து முதலிடம் பிடித்தார். இராஜஸ்தானின் அமித் ஜாங்கிர் வெள்ளியும், தர்மேந்தர் வெண்கலமும் பெற்றனர்.

சுத்தியெறிதல்: ஆடவர் பிரிவில் இராஜஸ்தானின் நீரஜ்குமார் 65.52 மீ தூரம் எறிந்து தங்கம் வென்றார். உத்தர பிரதேசத்தின் ஹர்வேந்திர சிங், பஞ்சாபின் தம்நீத் சிங் அடுத்த இரு இடங்களைப் பிடித்தனர். மகளிர் பிரிவில் இராஜஸ்தானின் மஞ்சுபாலா (64.19 மீ), உத்தர பிரதேசத்தின் சரிதா சிங் (62.20 மீ), ஹரியானாவின் ரேணு (59.83 மீ) முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றனர்.

4-400 மீ தொடரோட்டம்: மகளிர் பிரிவில் சுமி, படேரி, நிஷா, சிம்மி ஆகியோர்கொண்ட ஹரியானா அணி முதலிடமும் (3:41.90 நிமிஷம்), சுமதி, ஒலிம்பா, ரோஷினி, சுபா ஆகியோர் அடங்கிய தமிழ்நாட்டு அணி 2ஆம் இடமும் (3:42.39), ஜஸ்மிலா, சயானா, லிங்கெட், ஆரத்தி ஆகியோர்கொண்ட கேரள அணி 3ஆமிடமும் (3:42.92) பிடித்தன. ஆடவர் பிரிவில் முகமது அஜ்மல், நாகநாதன் பாண்டி, மிஜோ சாக்கோ, ஆரோக்கிய ராஜிவ் அடங்கிய இந்தியா ஏ அணி, அருணா, தேஷன், லக்ஷன், நிகி அடங்கிய இலங்கை ஜே அணி, சித்தாப்பா, அபின், லக்ஷ்மண், நிஹால் அடங்கிய கர்நாடக அணி முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றன.

நீளம் தாண்டுதல்: மகளிர் பிரிவில் கர்நாடகத்தின் ஐஸ்வர்யா 6.60 மீ தூரம் குதித்து தங்கம் வென்றார். கேரளத்தின் ஆன்சி சோஜன் 6.49 மீ, ஸ்ருதி லட்சுமி 6.35 மீ தூரம் குதித்து வெள்ளி, வெண்கலம் வென்றனர்.

1. As per the ‘Innovation Policy for Indian Railways’, what is the maximum limit of grant provided to innovators?

A. Rs 10 lakh

B. Rs 25 lakh

C. Rs 50 lakhs

D. Rs 1.5 Crore 

  • Minister of Railways Ashwini Vaishnaw has launched ‘Innovation Policy for Indian Railways’, to encourage participation of start–ups. Also referred as ‘Start–Ups for Railways’, the policy seeks to provide up to Rs. 1.5 Crore to innovators on equal sharing basis.

2. Which state has clinched the top position in the Khelo India Youth Games 2021?

A. Telangana

B. Haryana 

C. Odisha

D. Gujarat

  • The fourth edition of Khelo India Youth Games 2021 concluded in Panchkula and the hosts Haryana grabbed the top position in the medal tally with 52 gold, 39 silver and 46 bronze medals. Maharashtra and Karnataka were at the second and third places respectively. The fourth edition of the Khelo India Youth Games saw participation of athletes from over 36 states and Union Territories competing in 25 different sports.

3. Which state/UT launched ‘Farmer Registration & Unified Beneficiary Information System’ (FRUITS) software?

A. Goa

B. Gujarat

C. Daman & Diu

D. Karnataka 

  • Karnataka government has launched software for Aadhar–based, single–window registration for the schemes, to provide easy access to farmers to benefits distributed under various government schemes. The ‘Farmer Registration & Unified Beneficiary Information System’ (FRUITS) software facilitates single registration using an Aadhar card and Karnataka’s Bhoomi digitised land record system. The state departments of agriculture, horticulture, animal husbandry, revenue, food, civil supplies and fisheries are covered under the initiative.

4. ‘Agnipath’ scheme which was launched recently, is associated with reforms in which field?

A. Police

B. Defence 

C. Civil Service

D. Tribal Welfare

  • The Ministry of Defence launched ‘Agnipath’ a major defence policy reform for recruitment of soldiers, sailors and airmen into the Indian Army, Indian Navy and Indian Air Force. The personnel recruited under the scheme on short–term contractual basis will be called Agniveers.

5. Asia’s largest brackish water lagoon is located in which Indian state/UT?

A. Odisha 

B. Jammu and Kashmir

C. Himachal Pradesh

D. Sikkim

  • The Chilika Lake, located in Odisha is Asia’s largest brackish water lagoon. According to a census conducted by Chilika Development Authority (CDA) in collaboration with The Fishing Cat Project (TFCP), the lake has 176 fishing cats.
  • This is the world’s longest–running research and conservation project on fishing cats, which began in 2010 and is currently underway in two states in India: West Bengal and Odisha. West Bengal declared fishing cats the state animal in 2012 and the fishing cat was announced as Chilika Lake’s ambassador in 2020.

6. Who was selected for the ‘Dr V Shantaram Lifetime Achievement Award’ in the Mumbai International Film Festival 2022?

A. Hema Malini

B. Asha Parekh

C. Sanjit Narwekar 

D. Gulzar

  • The 17th edition of the Mumbai International Film Festival for Documentary, Short Fiction, and Animation films (MIFF–2022) was recently held in Mumbai. Union Minister of Commerce & Industry Piyush Goyal inaugurated the seven–day festival organized by Films Division of Ministry of Information & Broadcasting. Dr. V Shantaram Lifetime Achievement Award was conferred upon veteran documentary film maker and author Sanjit Narwekar, for his contribution to film history and documentary film movement.

7. Which Indian has been elected as the chair and a voting member on the Board of Directors for the International Boxing Association (IBA)?

A. Mary Kom

B. Lovlina Borgohain 

C. Nikhat Zareen

D. Jamuna Boro

  • Olympics bronze medallist Lovlina Borgohain has been elected as the chair and a voting member on the Board of Directors for the Athletes’ Committee, as per the the International Boxing Association (IBA) Indian boxer Shiva Thapa has also been elected as a member of the IBA Athletes Committee.

8. As per a survey by the Geological Survey of India, which state has unexplored gold reserve of around 222.88 million tonnes?

A. Karnataka

B. Bihar 

C. Kerala

D. Madhya Pradesh

  • As per a survey by the Geological Survey of India (GSI), gold reserves of around 222.88 million tonnes including 27.6 tonnes of mineral–rich ore are present in the state of Bihar. The state government in consultation with GSI, National Mineral Development Corporation (NMDC), and has decided to give permission for the exploration of the reserve, which is claimed to be India’s largest gold reserve.

9. As per a recent survey conducted by the RBI, which was the most preferred denomination in bank notes?

A. Rs.100 

B. Rs.200

C. Rs.500

D. Rs.2000

  • As per Reserve Bank of India’s (RBI) bank note survey, Rs 100 denomination banknotes are preferred the most by the people of India, while Rs 2,000 are least preferred. The survey has been conducted to assess demand for cash and denomination preferences at the consumer level. At least 7 out of 10 respondents were satisfied with the new series of banknotes. Around 3 per cent of the respondents were not aware of any banknote security feature.

10. What is the theme of International Day of Yoga – 2022?

A. Yoga for Humanity 

B. Yoga and Science

C. Yoga for Heart

D. Yoga for Life

  • The Ministry of Ayush has announced “Yoga for Humanity” as the theme of the eighth International Day of Yoga (IDY) to be organised in India and across the globe on June 21. The main event of the International Day of Yoga 2022 demonstration will be held at the city of Mysuru in Karnataka. A programme named “Guardian Ring”, to showcase the participation of people performing Yoga along with the movement of the sun from different countries will be undertaken.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!