Tnpsc

15th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

15th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 15th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

March Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

15th March 2021 Tnpsc Current Affairs in Tamil

1. சிறப்பு பெண்கள் மொகல்லா கிளினிக்குகளைத் தொடங்குவதாக அறிவித்துள்ள இந்திய மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?

அ) உத்தர பிரதேசம்

ஆ) புது தில்லி

இ) பீகார்

ஈ) குஜராத்

 • அடுத்த நிதியாண்டில் நகரம் முழுவதும் சிறப்பு பெண்கள் மொஹல்லா கிளினிக்குகள் திறக்கப்படும் என்று தில்லி அரசு சமீபத்தில் அறிவித்தது. 2021-22ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் வருடாந்த வரவுசெலவுத் திட்டத்தை முன்வைக்கும்போது, துணை முதலமைச்சரும் நிதியமைச்ச -ருமான மனீஷ் சிசோடியா இந்தத் திட்டத்தை அறிவித்தார்.
 • இது, பெண்களுக்கு, வீட்டிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில், இலவச மகளிர் மருத்துவ மற்றும் பிற மருத்துவ சேவைகளை வழங்கும்.

2. பின்வரும் எந்தத்துறை, தனது அதிகாரிகளுக்காக ஆன்லைனில் 5G சான்றிதழுடன் கூடிய படிப்பைத் தொடங்கியுள்ளது?

அ) நிதியியல் சேவைகள் துறை

ஆ) தொலைத்தொடர்பு துறை

இ) மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை

ஈ) தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை

 • தொலைத்தொடர்புத்துறை தனது அதிகாரிகளுக்காக ஆன்லைன் 5G சான்றிதழுடன்கூடிய படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
 • இந்தத் துறையின் பயிற்சிப்பிரிவான கொள்கை ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் பயிற்சிக்கான தேசிய தொலைத்தொடர்பு நிறுவனம் நடத்தும் 12 வார ஆன்லைன் பாடத்திட்டத்தைத் தொடங்குவதன்மூலம், 5G வல்லுந -ர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களைக்கொண்ட ஓர் உள்ளுறை குழுமத்தை உருவாக்குவது இந்தத் துறையின் நோக்கமாகும்.

3. பொருளாதார விவகார துறையுடன் இணைந்து சொத்து பணமாக் -குதல் குறித்த தேசிய அளவிலான மெய்நிகர் பயிலரங்கை ஏற்பாடு செய்த நிறுவனம் எது?

அ) NITI ஆயோக்

ஆ) TERI

இ) FICCI

ஈ) ASSOCHAM

 • NITI ஆயோக், பொருளாதார விவகாரங்கள் துறையுடன் இணைந்து, சொத்தை பணமாக்குதல் குறித்த தேசிய அளவிலான மெய்நிகர் பயிலரங் -கை ஏற்பாடு செய்தது. இந்தச் செயலமர்வுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமைதாங்கினார். இதில், மாநிலங்களின் தலைமைச்செயலர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

4. சொத்து மீட்டமைப்பு இந்தியா லிமிடெட் (ARCIL)’இன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

அ) A K பல்லா

ஆ) பல்லவ் மொகபத்ரா

இ) G C முர்மு

ஈ) R K மாத்தூர்

 • சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் தலைமைச்செயலதிகாரி பல்லவ் மொகபத்ரா, சொத்து மீட்டமைப்பு இந்தியா லிட்’இன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ARCIL என்பது இந்தியாவின் பழைமையான சொத்து புனரமைப்பு நிறுவனமாகும்; இது, 2002’இல் நிறுவப்பட்டது.
 • பல்லவ் மொகபத்ராவுக்கு முன்பு, தலைமைச்செயலதிகாரியாக விநாயக் பாகுகுணா அப்பொறுப்பினை வகித்து வந்தார்.

5. ஐநா அவையின் புற-தணிக்கையாளர் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய ஆளுமை யார்?

அ) A K பல்லா

ஆ) பல்லவ் மொகபத்ரா

இ) G C முர்மு

ஈ) R K மாத்தூர்

 • இந்தியாவின் தலைமைக் கணக்கு தணிக்கை அதிகாரி கிரிஷ் சந்திர முர்மு, 2021ஆம் ஆண்டிற்கான ஐநா அவையின் புற-தணிக்கையாளர் -கள் குழுவின் தலைவராக தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழுவில் இந்தியா, ஜெர்மனி, சீனா, ஐக்கியப் பேரரசு, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, இத்தாலி, இந்தோனேசியா, இரஷ்யா உள்ளிட்ட நாடுகள் உள்ளன. ஐநா பொது அவையானது, 1959’இல் ஐநா அமைப்பின் தனிப்பட்ட புற-தணிக்கையாளர்களுடன் இணைந்து புற- தணிக்கையாளர்களின் குழுவை நிறுவியது.

6. அண்மையில் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்ட மூன்றாவது ‘ஸ்கார்பீன்’ இரக நீர்மூழ்கிக்கப்பலின் பெயர் என்ன?

அ) INS கனகலதா

ஆ) INS சென்னை

இ) INS கொல்கத்தா

ஈ) INS கரஞ்ச்

 • இந்திய கடற்படை தனது கடற்படையில், ‘INS கரஞ்ச்’ – மூன்றாவது ‘ஸ்கார்பீன்’ இரக நீர்மூழ்கிக்கப்பலை பணியில் சேர்த்துள்ளது. இது, மசகன் கப்பல் கட்டும் நிறுவனத்தால் அதன் ‘திட்டம்–75’இன்கீழ் கட்டப்ப -ட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ், 6 ‘ஸ்கார்பீன்’ இரக நீர்மூழ்கிக்கப்பல்கள் பிரான்ஸ் தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ளன.

7. இந்திய விடுதலையின் எழுபத்தைந்தாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் கொண்டாட்டங்களுக்கு என்ன பெயர் சூட்டப்பட்டுள்ளது?

அ) ஆதி மகோத்ஸவம்

ஆ) விடுதலைப்பெருவிழா

இ) சுதந்திர இந்தியா

ஈ) அம்ரித் மகோத்ஸவம்

 • இந்திய விடுதலையின் எழுபத்தைந்தாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் ‘அம்ரித் மகோத்ஸவத்தின்’ ஒருபகுதியாக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
 • விடுதலையின் 75ஆம் ஆண்டை நினைவுகூரும் இந்த அம்ரித் திருவிழா, நாட்டின் 75 இடங்களில், 75 வாரங்களுக்கு கொண்டாடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

8. NASA’இன் கூற்றுப்படி, பூமியில் உள்ள எந்த ஏரி, செவ்வாய்க் கோளின் ஜெசெரோ பள்ளத்தை ஒத்திருக்கிறது?

அ) பழவேற்காடு ஏரி

ஆ) சால்தா ஏரி

இ) வேம்பநாடு ஏரி

ஈ) விக்டோரியா ஏரி

 • NASA’இன் ஓர் அண்மைய வெளியீட்டின்படி, துருக்கிய ஏரி சால்தாவில் காணப்படும் பாறை மற்றும் கனிம இருப்புகள் செவ்வாய்க்கோளின் ஜெசெரோ பள்ளத்துடன் மிகவும் ஒத்துள்ளது.
 • சமீபத்தில், NASA’இன் பெர்சிவரன்ஸ் விண்கலம், செவ்வாய்க்கோளின் ஜெசெரோ பள்ளத்தில் தரையிறங்கியது. அந்தப்பள்ளம் ஒரு காலத்தில் நீரால் நிரம்பியிருந்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது.

9. உலக நுகர்வோர் உரிமைகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ) பிப்ரவரி 12

ஆ) மார்ச் 15

இ) ஜனவரி 16

ஈ) ஏப்ரல் 9

 • நுகர்வோர் உரிமைகளை மேம்படுத்துவதற்கும், நுகர்வோர், நேர்மைய -ற்ற வர்த்தகர்களிடமிருந்து பாதுகாக்கப்படுவதையும் அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்குமாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.15 அன்று உலக நுகர்வோர் உரிமைகள் நாள் அனுசரிக்கப்படுகிறது. “Tackle plastic pollution” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும்.

10. தொலைத்தொடர்பு உரிம விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட்ட சமீப திருத்தத்தின்படி, நெட்வொர்க்குகளை மேம்படுத்துவதற்கென நியமிக்கப்பட்டுள்ள ஆணையம் எது?

அ) தொலைத்தொடர்புத்துறை செயலாளர்

ஆ) தேசிய இணையவெளி பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர்

இ)  தொலைத்தொடர்பு அமைச்சர்

ஈ) பிரதமர்

 • மத்திய அரசானது அண்மையில் தொலைத்தொடர்பு உரிம விதிமுறைக -ளை திருத்தியது. அது நம்பகமற்ற மூலங்களிலிருந்து பிணைய உபகர -ணங்கள் நிறுவப்படுவதைக் கட்டுப்படுத்த உதவும். திருத்தங்களின்படி, தற்போதுள்ள நெட்வொர்க்குகளை மேம்படுத்துவதற்கு, தொலைதொடர்பு இயக்கிகள் தேசிய இணையவெளி பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளரிடம் (NCSC) இருந்து அனுமதிபெறவேண்டும்.
 • தொலைத்தொடர்பு உபகரணங்களை வாங்குவதற்கான நிபந்தனைக
  -ளை விதிக்கக்கூடிய ஆணையமாக NCSC இருக்கும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. மாம்பழம் உற்பத்தி 4% அதிகரிக்கும்

மாம்பழ உற்பத்தி நடப்பு பயிர் பருவத்தில் 4.24 சதவீதம் அதிகரிக்கும் என மத்திய வேளாண் அமைச்சகம் தனது அண்மைய புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைச்சகம் மேலும் கூறியுள்ளதாவது: ‘பழங்களின் அரசன்’ என்று வர்ணிக்கப்படும் ‘மாம்பழத்தின்’ உற்பத்தி நடப்பு 2020-21 பயிர் பருவத்தில் 2.11 கோடி டன்னாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது, 2019-20’ஆம் ஆண்டு உற்பத்தியான 2.02 கோடி டன்னுடன் ஒப்பிடுகையில் 4.24% அதிகமாகும்.

கோடைகால பழங்களான தர்பூசணி மற்றும் முலாம்பழம் ஆகியவற்றின் விளைச்சல் கடந்தாண்டைக் காட்டிலும் நடப்பாண்டில் குறைவாக இருக்கும் என்று தோட்டக்கலை துறை பயிர்களுக்கான முதல் கட்ட மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முலாம்பழம் விளைச்சல் நடப்பாண்டில் 13.60 இலட்சம் டன்னிலிருந்து 13 இலட்சம் டன்னாகவும், தர்பூசணி உற்பத்தி 31.5 லட்சம் டன்னிலிருந்து 31.20 லட்சம் டன்னாகவும் குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், வாழைப்பழ உற்பத்தி 2020-21 பயிர் பருவத்தில் 3.26 கோடி டன்னிலிருந்து 3.37 கோடி டன்னாக இருக்கும். நாட்டில் ஒட்டுமொத்த பழவகைகளின் உற்பத்தி நடப்பாண்டில் 10.2 கோடி டன்னிலிருந்து 10.32 கோடி டன்னாக அதிகரிக்கும் என வேளாண் அமைச்சகம் புள்ளிவிவர மதிப்பீட்டில் தெரிவித்துள்ளது.

2. உயர்வளிமண்டல ஆய்வுக்காக ISRO’இன் ‘சவுண்டிங் இராக்கெட்’: வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

உயர்வளிமண்டல பரப்பில் நிலவும் காற்று மற்றும் பிளாஸ்மா அயனிகள் தொடர்பான ஆய்வுக்காக ISRO சார்பில் ‘சவுண்டிங் இராக்கெட்’ ஏவப்பட்டது. ககன்யான், சந்திரயான் 3 உட்பட பல்வேறு ஆய்வுத்திட்டங்க -ளை இந்திய விண்வெளி ஆய்வுமையம் (ISRO) தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. வணிகரீதியாக வெளிநாடுகளின் செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, சிறியரக ஆய்வு சாதனங்களை புவியின் தாழ்வட்டசுற்றுப்பாதையில் நிலைநிறுத்தவும், வளிமண்டலம் தொடர்பான விண்வெளி ஆய்வுக்கும் ‘சவுண்டிங் இராக்கெ -ட்கள்’ பயன்படுத்தப்படுகின்றன.

ISRO’இடம் RH-200, RH-300, RH-560 என மூன்றுவிதமான சவுண்டிங் இராக்கெட்கள் உள்ளன. இது இருநிலைகளைக் கொண்டது. இவற்றின் மூலம் 100 கிலோ வரையிலான ஆய்வுக்கருவிகளை அதிகபட்சம் 475 கிமீ தூரங்கொண்ட புவியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தமுடியும். அதன்படி, கடந்த 1965ஆம் ஆண்டு முதல் இதுவரை ISRO சார்பில் 100’க்கும் மேற்பட்ட ‘சவுண்டிங் ராக்கெட்கள்’ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.

RH 560 இரக இராக்கெட்:

அந்த வரிசையில், ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ISRO சார்பில் RH 560 இரக சவுண்டிங் இராக்கெட் கடந்த 12ஆம் தேதி வெற்றிகரமாக ஏவப்பட்டது. புவி பரப்புக்கு மேலுள்ள உயர்வளிமண் -டலத்தில் வீசக்கூடிய காற்று, பிளாஸ்மா அயனிகளின் செயல்பாடு ஆகிய -வற்றில் நிலவும் மாற்றங்கள் தொடர்பான ஆய்வுக்காக இந்த இராக்கெட் அனுப்பப்பட்டுள்ளது.

3. விஜய் ஹசாரே கோப்பை: நான்காவது முறையாக மும்பை அணி சாம்பியன்

தில்லியில் நடந்த விஜய் ஹசாரே கோப்பையின் இறுதி ஆட்டத்தில் உத்தர பிரதேச அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வென்று நான்காவது முறையாக மும்பை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. முதலில் பேட்டிங்செய்த உத்தர பிரதேச அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் சேர்த்தது. 313 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 41.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

மும்பை அணித்தரப்பில் ஆபாரமாக ஆடி சதம் அடித்து 108 ரன்களுடன் (18 பவுண்டரிகள்) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆதித்யா தாரே ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார். இந்த விஜய் ஹசாரே கோப்பைத் தொடரில் பிரித்வி ஷா மொத்தம் 827 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு தொடரில் அதிகபட்சமான ரன்களை விளாசிய முதல் வீரர் எனும் பெருமையையும் பிரித்வி ஷா பெற்றார்.

1. Which Indian state/UT has announced to launch special women mohalla clinics?

A) Uttar Pradesh

B) New Delhi

C) Bihar

D) Gujarat

 • The Delhi government recently announced that special women mohalla clinics will be opened across the city in the next financial year. While presenting the government’s annual budget for year 2021–22, Deputy CM and Finance Minister Manish Sisodia announced the scheme, which would offer free gynaecological and other medical care services to women within walking distance from their homes.

2. Which department has launched online 5G certification course for its officials?

A) Department of Financial Services

B) Department of Telecommunications

C) Department of Electronics and IT

D) Department for Promotion of Industry and Internal Trade

 • The Department of Telecommunications has launched the online 5G certification course for its officials.
 • The Department aims to create an in–house pool of 5G experts and policymakers, by launching a twelve–week online course, which will be conducted by National Telecommunications Institute for Policy Research, Innovation & Training, the training arm of the department.

3. Which institution organised a national–level virtual workshop on Asset Monetisation along with Department of Economic Affairs?

A) NITI Aayog

B) TERI

C) FICCI

D) ASSOCHAM

 • NITI Aayog, along with the Department of Economic Affairs (DEA), organized a national–level virtual workshop on asset monetization.
 • The workshop was chaired by the Union Finance Minister Nirmala Sitharaman and it included the Chief Secretaries of States and Administrators of Union Territories.

4. Who has been appointed as the Chief of Asset Reconstruction Co India Ltd (ARCIL)?

A) A K Bhalla

B) Pallav Mohapatra

C) G C Murmu

D) R K Mathur

 • Central Bank of India Former CEO Pallav Mohapatra has been appointed as chief of Asset Reconstruction Co India Ltd (ARCIL). RCIL is India’s oldest asset reconstruction company, and it was founded in 2002. Pallav Mohapatra is succeeding Vinayak Bahuguna as the CEO.

5. Which Indian personality has been appointed as the Chairman of the Panel of External Auditors of the United Nations?

A) A K Bhalla

B) Pallav Mohapatra

C) G C Murmu

D) R K Mathur

 • Comptroller and Auditor General of India, Girish Chandra Murmu, has been appointed Chairman of the Panel of External Auditors of the United Nations for the second time in a row for 2021.
 • The panel consists of countries including India, Germany, China, the UK, France, Switzerland, Italy, Indonesia, Russia among others. The UN General Assembly in 1959 established the Panel of External Auditors, with individual external auditors of the United Nations system.

6. What is the name of the third Scorpene–class submarine that has been inducted into the Indian Navy recently?

A) INS Kanakalata

B) INS Chennai

C) INS Kolkata

D) INS Karanj

 • The Indian Navy has inducted into its fleet INS Karanj – the third Scorpene–class conventional diesel–electric submarine. This has been built by the Mazagon Dock Limited (MDL) under its project 75.
 • Under this project, six Scorpene–class submarines are built under technology transfer from France.

7. What is the name given to the proposed celebrations marking 75 years of Indian Independence?

A) Adi Mahotsav

B) Independence India

C) Swathantra India

D) Amrit Mahotsav

 • The Prime Minister Narendra Modi has requested all MPs to be a part of the ‘Amrit Mahotsav’ which marks the 75 years of Indian Independence. It has been stated that the festival to commemorate the 75th year of Independence would be celebrated across 75 locations of the country for a period of 75 weeks.

8. According to NASA, which lake on earth most resembles the Jezero Crater of Mars?

A) Pazhaverkadu Lake

B) Lake Salda

C) Vembanad Lake

D) Victoria Lake

 • As per a recent release by NASA, the rock and mineral deposits found on the Turkish Lake Salda, has the closest resemblance to the Jezero Crater of Mars. NASA’s spacecraft Perseverance has landed on the Jezero Crater of Mars, which is said to be once flooded with water.

9. The World Consumer Rights Day is observed on which date?

A) February 12

B) March 15

C) January 16

D) April 9

 • The World Consumer Rights Day (WCRD) is observed every year on March 15 as an occasion of solidarity among consumers for promotion of the rights of consumers and to ensure that consumers are protected from unscrupulous traders and their consumer grievances are redressed. The 2021 theme is “Tackle plastic pollution”.

10. As per the recent amendment in the Telecom License norms, which is the designated authority for upgradation of networks?

A) DoT Secretary

B) National Cyber Security Coordinator

C) Telecom Minister

D) Prime Minister

 • The Central Government amended telecom license norms that will enable it to control the installation of network equipment from non–trusted sources. As per the amendments, telecom operators will be required to take permission from the National Cyber Security Coordinator (NCSC) for up–gradation of existing networks.
 • NCSC will be the designated authority that can impose conditions for the procurement of telecom equipment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Turnoff the Ad Blocker to view the content