TnpscTnpsc Current Affairs

15th November 2021 Tnpsc Current Affairs in Tamil & English

15th November 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 15th November 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

November Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. கர்நாடக மாநிலத்தில் உள்ள ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய மும்பை-கர்நாடக பகுதியின் புதிய பெயர் என்ன?

அ) கல்யாண-கர்நாடகா

ஆ) கித்தூர்-கர்நாடகா 

இ) பெலகாவி-கர்நாடகா

ஈ) ராணி-கர்நாடகா

  • 7 மாவட்டங்களை உள்ளடக்கிய மும்பை-கர்நாடகா பகுதிக்கு ‘கித்தூர் கர்நாடகா’ எனப் பெயர் மாற்ற கர்நாடக மாநில அரசு முடிவு செய்துள்ளது.
  • மும்பை-கர்நாடக பகுதி உத்தர கன்னடா, பெலகாவி, தார்வாட், விஜய புரா, பாகல்கோட், கடக் மற்றும் ஹாவேரி மாவட்டங்களைக்கொண்டுள் -ளது. கித்தூர் என்பது பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க தாலுக்கா ஆகும். இது ராணி சென்னம்மாவால் ஆளப்பட்டது. கடந்த 2019ஆம் ஆண்டில், ஹைதராபாத்-கர்நாடகா பகுதி “கல்யாண்-கர்நாடகா” என மறுபெயரிடப்பட்டது.

2. முதல் உலகளாவிய மருந்துக் கொள்கைக் குறியீடு – 2021‘இல் இந்தியாவின் தரநிலை என்ன?

அ) 10

ஆ) 18 

இ) 25

ஈ) 30

  • தீங்கு குறைப்பு கூட்டமைப்பினால் முதல் உலகளாவிய மருந்துக் கொள்கைக் குறியீடு சமீபத்தில் வெளியிடப்பட்டது. நார்வே, நியூசிலாந்து, போர்ச்சுகல், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை மனிதாபி -மான மற்றும் ஆரோக்கியம் சார்ந்த மருந்துக் கொள்கைகளில் முதல் 5 இடங்களில் உள்ளன. 74/100 மதிப்பெண்களுடன் 30 நாடுகளில் இந்தியா 18ஆவது இடத்தில் உள்ளது.
  • பிரேசில், உகாண்டா, இந்தோனேசியா, கென்யா மற்றும் மெக்சிகோ ஆகியவை கடைசி ஐந்து இடங்களில் உள்ளன. இந்தக்குறியீடு மருந்துக் கொள்கையின் 75 குறிகாட்டிகளைக் கொண்டுள்ளது.

3. ஒவ்வொரு நவம்பரிலும் நிகழும் புகழ்பெற்ற எரிகல் பொழிவின் பெயர் என்ன?

அ) லியோனிட்ஸ் விண்கல் மழை 

ஆ) பெர்சீட் விண்கல் மழை

இ) ஓரியானிட்ஸ் விண்கல் மழை

ஈ) டெம்பல் விண்கல் மழை

  • முதலில் 1833’இல் கண்டுபிடிக்கப்பட்ட லியோனிட்ஸ் எரிகல் பொழிவு, ஒவ்வொரு நவம்பர் மாதமும் நிகழ்கிறது. இந்த எரிகல் பொழிவு, இந்த ஆண்டு நவ.6ஆம் தேதி தொடங்கியது. நவ.30 வரை இது நிகழும். இதனை வெறுங்கண்ணால் பார்க்க முடியும்.
  • பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் 55P/Tempel-Tuttle வால்மீன் விட்டுச்சென்ற குப்பைகளை இந்த எரிகல் பொழிவு கொண்டுள்ளது. இக் குப்பை பொருட்கள் விண்கற்கள் என்று அழைக்கப்படுகின்றன.

4. COVID’க்கு சிகிச்சையளிப்பதற்கான உலகின் முதல் பிளாஸ்மிட் DNA தடுப்பூசியின் பெயர் என்ன?

அ) ZyCoV-D 

ஆ) மாடர்னா

இ) ஸ்புட்னிக் வி

ஈ) கோவாக்சின்

  • சைடஸ் கேடில்லாவின் ZyCoV-D என்பது உலகின் முதல் பிளாஸ்மிட் DNA தடுப்பூசியாகும். ஊசி இல்லாத அப்ளிகேட்டரைப் பயன்படுத்தி செலுத்தக்கூடிய முதல் COVID தடுப்பூசி இதுவாகும். 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் அவசரகால பயன்பாட்டிற்காக இந்திய தலைமை மருந்துக் கட்டுப்பாட்டாளரால் (DCGI) இதன் 3-டோஸ் ஷாட் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

5. கனிமச்சலுகை விதிகள், 2021’இல் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய திருத்தங்களின்படி, சொந்த சுரங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் கனிமத்தில் எவ்வளவு சதவீதம் வரை விற்க முடியும்?

அ) 25

ஆ) 50 

இ) 75

ஈ) 100

  • கனிம விதிகளில் திருத்தம் செய்து புதிய விதிமுறைகளை மத்திய கனிமங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. சொந்த குத்தகையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் 50% கனிமத்தை விற்பனை செய்யும் நடை முறை புதிய விதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது. சுரங்கங்களை எந்தவித கட்டணமும் இன்றி இடமாற்றம் செய்வதற்கு இது உதவுகிறது. சுரங்க குத்தகை வழங்குவதற்கான குறைந்தபட்ச பகுதி 5 ஹெக்டேரில் இருந்து 4 ஹெக்டேராக திருத்தப்பட்டுள்ளது.

6. எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை தேசிய சாதனை ஆய்வு நடத்தப்படுகிறது?

அ) இரண்டு ஆண்டுகள்

ஆ) மூன்று ஆண்டுகள் 

இ) ஐந்து ஆண்டுகள்

ஈ) ஆறு ஆண்டுகள்

  • தேசிய சாதனை ஆய்வானது (NAS) மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. கடைசியாக 2017’இல் இது நடத்தப்பட்டது. 2020’இல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. COVID-19 நிலைமை காரணமாக, அது இந்த ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டது.
  • 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 1,23,000 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 3.8 மில்லியன் மாணவர்கள் தேசிய சாதனை ஆய்வு – 2021’இல் பங்கேற்பார்கள். 3, 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களின் திறன்களை இது மதிப்பிடுகிறது. தனியார் பள்ளிகள் இந்த ஆய்வில் சேர்க்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.

7. 5 மாவட்டங்களில் மெட்ரோ வசதிகள்கொண்ட ஒரே மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?

அ) மேற்கு வங்கம்

ஆ) புது தில்லி

இ) உத்தர பிரதேசம் 

ஈ) கேரளா

  • உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சமீபத்தில் கான்பூர் மெட்ரோ இரயிலின் சோதனை ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். கான்பூர் மெட்ரோவின் பணி நவம்பர் 15, 2019 அன்று தொடங்கியது. உத்தர பிரதேச மாநிலத்தில் தற்போது காசியாபாத், நொய்டா, கிரேட்டர் நொய்டா மற்றும் லக்னோவில் மெட்ரோ இரயில் சேவை செயல்பட்டு வருகிறது.
  • கான்பூர் மெட்ரோ இரயில் தொடங்கப்பட்ட பிறகு, ஐந்து மாவட்டங்களில் மெட்ரோ வசதிகள் உள்ள ஒரே மாநிலமாக உத்தர பிரதேசம் இருக்கும்.

8. சமீபத்தில் எந்த நாட்டின் இராணுவ தளபதிக்கு இந்திய இராணு -வத்தின் கெளரவ ஜெனரல் பதவி வழங்கப்பட்டது?

அ) நேபாளம் 

ஆ) இலங்கை

இ) வங்காளதேசம்

ஈ) பூடான்

  • நேபாள இராணுவ தளபதி ஜெனரல் பிரபு ராம் சர்மாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்திய ராணுவத்தின் கெளரவ ஜெனரல் பதவியை வழங்கினார். இருநாடுகளும் பரஸ்பர இராணுவ தளபதிகளு -க்கு ஜெனரல் பதவியை வழங்குவது வழக்கமாகும். ஜெனரல் ஷர்மா, 2021 செப்டம்பரில் இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்றார். அவர் இந்தியாவில் உள்ள தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் பட்டம் பெற்றவர்.

9. பின்வரும் எந்தத் திட்டத்தின் கீழ், ‘தூய்மையான பசுமை கிராம வாரம்’ அனுசரிக்கப்பட்டது?

அ) DDU-GKY

ஆ) MGNREGS 

இ) DAY-NRLM

ஈ) DAY-NULM

  • ஆசாதி கா அம்ரித் மகோத்சவின் ஒருபகுதியாக, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் MGNREG திட்டத்தின்கீழ், 2021 அக்.29 முதல் நவ.4 வரை ஒருவாரகால ‘தூய்மை பசுமை கிராம’ செயல்பாடுகளை மேற்கொண்டு உள்ளன. தூய்மை பசுமை கிராம வாரத்தின்போது, கழிவு நீர்ப்போக்குக் குழிகளை அடையாளங்கண்டு நிர்மாணிப்பதில் கவனஞ்செலுத்தப்பட்ட -து. மண்புழு உரம்/NADEP குழி மற்றும் புழு உரமாக்கல், கழிவுப்பொரு -ட்களின் மறுபயன்பாடு, மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்தல் போன்ற முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

10.“சில்லறை விற்பனை நேரடித்திட்டம்” மற்றும் “ஒருங்கிணைந்த குறைதீர்க்கும் திட்டம்” ஆகியவற்றை தொடங்கிய அமைப்பு எது?

அ) இந்திய ரிசர்வ் வங்கி 

ஆ) ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்

இ) காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்

ஈ) பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம்

  • இந்திய ரிசர்வ் வங்கியின் “சில்லறை விற்பனை நேரடித்திட்டம்” மற்றும் “ஒருங்கிணைந்த குறைதீர்க்கும் திட்டம்” ஆகியவை பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.
  • சில்லறை நேரடித்திட்டத்தின்கீழ், சில்லறை முதலீட்டாளர்கள் அரசாங்கப் பத்திரங்களை இணையத்தில் வாங்கலாம் மற்றும் விற்கலாம். ஒருங்கி -ணைந்த ஒம்புட்ஸ்மேன் திட்டமானது வாடிக்கையாளர் புகார்களில் குறைதீர்க்கும் பொறிமுறையை மேம்படுத்த உதவுகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ‘முதல்வரின் முகவரி’: தமிழக அரசு அரசாணை வெளியீடு

முதல்-அமைச்சரின் குறைதீர்ப்பு துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு, முதல்வரின் முகவரி என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர், முதல்-அமைச்சர் உதவி மையம், குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு ஒருங்கிணைப்பு ஆகிய துறைகள் ஒன்றிணைந்து ‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் முதல்வரின் முகவரி என்ற புதிய துறை சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. முதல்வரின் முகவரி துறையில் மனுக்கல் தீர்வுக்காண ஒற்றை இணையதள முகப்பு பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தலைமைச் செயலாளா் இறையன்பு வெளியிட்ட அரசாணையில், முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, முதல்-அமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீா்ப்பு மேலாண்மை அமைப்பு (ஐஐபிஜிசிஎம்எஸ்), உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறை ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு, ‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறை உருவாக்கப்படுகிறது.

முதல்-அமைச்சர் முகவரி துறையின் மனுக்களுக்குத் தீா்வு காண முதல்வரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீா்ப்பு மேலாண்மை அமைப்பின் உதவி எண் மாநிலம் முழுவதும் ஒற்றை இணையதள முகப்பாகப் பயன்படுத்தப்படும். இது முதல்வரின் முகவரி துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும். உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறையின் சிறப்பு அலுவலா் ஷில்பா பிரபாகா் சதிஷ், முதல்வரின் முகவரி துறையின் சிறப்பு அலுவலராக நியமிக்கப்படுகிறாா்” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

2. கரோனா காலத்துக்கும் நேருவின் அறிவியல்

உலகப் பேரிடராக கரோனா தொற்று மாறியிருக்கும் சூழலில், ஜவாஹர்லால் நேருவின் அன்றைய அறிவியல்பூர்வமான பார்வையும் ஒரு அறிவியல் சமுதாயத்தை உருவாக்குவதில் அவர் மேற்கொண்ட முயற்சிகள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பொருத்தமாகவும் இருக்கின்றன. நேருவின் கூற்றுப்படி, அறிவியல் என்பது மனித மனதின் முக்கியமான வெற்றியாகும். இது, மனித குலத்தை நோய், தேவை, துயரம் போன்றவற்றிலிருந்து விடுவிக்கும்.

தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அறிவியலின் பங்களிப்பை நேரு புரிந்துகொண்டிருந்தார். இது குறித்து நேரு எழுதும்போது, உண்மையையும் புதிய அறிவையும் தேடுதல், சோதனையின்றி எதையும் ஏற்க மறுத்தல், புதிய சான்றுகளின் அடிப்படையில் முந்தைய முடிவுகளை மாற்றும் திறன், உண்மைகளை நம்புதல், முந்தைய கோட்பாட்டைத் தொடராமல் இருத்தல், கடினமான ஒழுக்கம் கொண்ட மனம் இருத்தல் அவசியம் என்கிறார். கேம்ப்ரிட்ஜ் சயின்ஸ் டிரிபோஸ், ஜேம்ஸ் ஜீன்ஸ், ஆர்தர் எடிங்டன் மற்றும் பிரிட்டனின் முன்னணி அறிவியலர்களுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் நேருவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆர்வத்தை அறியலாம்.

இந்தியாவில் உயர் தரமான கல்வி நிறுவனங்களை அமைக்க வேண்டும் என்பதே நேருவின் திட்டமாக இருந்தது. அமெரிக்கப் பயணத்தின்போது, அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் நாட்டுக்குத் தொழில்நுட்ப, அறிவியல் முன்னேற்றத்தை வழங்குவதைப் புரிந்துகொண்டார். 1949-ல் மாசசூசிட்ஸ் தொழில்நுட்பக் கழகத்துக்கு அவர் சென்றதுதான் 1950-ல் காரக்பூரிலும், 1958-ல் பம்பாயிலும், 1959-ல் சென்னை, டெல்லியிலும் ஐஐடி எனப்படும் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களை உருவாக்க வழிவகுத்தது.

அறிவியல் கற்றலுக்கும் ஆராய்ச்சிக்குமான நிறுவனங்களை நடத்திய விக்ரம் சாராபாய், சர் சி.வி.ராமன், ஹோமி ஜே.பாபா, சதீஷ் தவான், எஸ்.எஸ்.பட்நாகர் போன்ற பல அறிவியலர்களைப் பயன்படுத்திக்கொள்ளும் திறமையை நேரு பெற்றிருந்தார்.

அறிவியலுக்குச் சமூகத்தின் ஏற்பும் அரசின் ஆதரவும் நிலைத்திருக்க வேண்டும் என்ற உண்மையை நேரு முழுமையாக அறிந்திருந்தார். இதனால்தான் 1954-ல் அணுசக்தித் துறை, பாபா அணு ஆராய்ச்சி மையம், 1949-ல் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம், 1952-ல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவற்றைத் தொடங்கி, அறிவியல் முன்னேற்றத்தின் அதிகாரத்துவ இயந்திரங்களாக மாற்றினார்.

நேருவுக்கு எதிரிகள் அன்றும் இருந்தார்கள், இன்றும் இருக்கிறார்கள். அவரது அறிவியல் பணியைத் தடுக்கப் போலி தேசியவாதம் தூண்டப்பட்டது. அறிவியலுக்கு எல்லைகள் இல்லை. ஆங்கில அறிவியல், பிரெஞ்சு அறிவியல் என்றெல்லாம் பேச முடியாது. தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அறிவியலின் பங்கு முக்கியமானது என்பதை நேரு புரிந்து வைத்திருந்தார்.

சுதந்திரத்துக்குப் பிறகு, நாட்டின் மக்கள்தொகையில் பாதிப் பேருக்கு மலேரியா பாதிப்பு ஏற்பட்டது. 1953-ல் மலேரியா பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டது. 1951-ல் பெரியம்மை பாதிப்பால் இறந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 48 ஆயிரமாக இருந்தது. அடுத்த 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 300 ஆகக் குறைக்கப்பட்டது. மக்களைப் பாதிக்கும் இது போன்ற நோய்களிடம் போராட ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் திட்டம் வகுக்கப்பட்டது.

1950-களில் பாலியல் நோய்கள், தொழுநோய், டைஃபாய்டு, கக்குவான் இருமல், நிமோனியா, மூளைக்காய்ச்சல் போன்றவற்றைக் கட்டுப்படுத்தத் தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டன. மருத்துவம், பரவலான தடுப்பூசித் திட்டங்கள் மூலம் இந்த நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டன. 1940-களில் பரவிய பிளேக் நோயால், நாட்டு மக்கள்தொகையில் 3% பேர் இறந்துபோனார்கள். கடுமையாகப் போராடி 1950-களில் பிளேக் நோய் முற்றிலும் அழிக்கப்பட்டது.

தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதற்குப் பெருமளவு நிதி ஒதுக்கீடுகளுடன், அதிக எண்ணிக்கையிலான மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டன. அதற்காகப் புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டும் பணியும், இருக்கும் மருத்துவக் கல்லூரிகளை மேம்படுத்தும் பணியும் நடைபெற்றன. 1946-ல் 15 மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. இந்த எண்ணிக்கை 1965-ல் 81 ஆக உயர்ந்தது. 1951-ல் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 1,200. இது 1961-ல் 10 ஆயிரமாக உயர்ந்தது.

கரோனா என்ற கொடிய தொற்றுநோயை எதிர்த்துப் போராடும்போது, கடந்த கால நோய்களுக்கு எதிரான நேருவின் போராட்டத்தை நினைவில்கொள்வது அவசியம். சீனா, தைவான், வியட்நாம், சிங்கப்பூர், கியூபா போன்ற நாடுகளில் மலிவாக மருத்துவம் கிடைப்பதால்தான், மற்ற பெரிய பணக்கார நாடுகளைவிட கரோனா தொற்றை இந்த நாடுகள் எளிதாக எதிர்கொள்ள முடிந்தது.

பிளேக், காலரா நோய்களை அறிவியல்பூர்வமாக முறியடித்ததைக் குறிப்பிட்டு, மகள் இந்திராவுக்கு நேரு எழுதிய கடிதத்தில் சுகாதாரம், ஆரோக்கியம், சில நோய்களின் மீதான வெற்றி போன்றவை அறிவியலைப் பொறுத்தது என்று சுட்டிக்காட்டியிருந்தார்.

தான் கட்டமைத்த நிறுவனங்கள் மூலம் கரோனா பரவல் காலத்திலும் நேரு வாழ்ந்துகொண்டிருக்கிறார். 1952-லேயே பூனாவில் நிறுவப்பட்ட நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜி நிறுவனம், கரோனா காலத்தில் பெருமளவில் பயன்படுவதை மறக்க முடியாது.

மனிதர்களின் அறிவியல் தேடல் குறித்த நேருவின் நம்பிக்கை, கரோனா பரவல் இருக்கும் இந்தக் காலத்திலும் பொருந்தும். அறிவியலின் மீது நேரு வைத்திருந்த இந்த நம்பிக்கையும், மனிதர்களின் திறமையுடன் அவர் உருவாக்கிய அறிவியல் நிறுவனங்களும்தான், இந்த அழிவுகரமான உலகப் பேரிடரிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொண்டிருக்கிறது.

3. உரம் தயாரிக்க பசுவின் சாணம் வாங்க முடிவு: மத்திய பிரதேச முதல்வர் சவுகான் அறிவிப்பு

மத்திய பிரதேச தலைநகர் போபாலில் நேற்று இந்திய கால்நடை மருத்துவ சங்கம் ஏற்பாடு செய்திருந்த பெண் கால் நடை மருத்துவர்கள் மாநாட்டில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கலந்துகொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:

பசுக்கள், மாடுகள் இல்லாமல் பல வேலைகள் நடப்பதில்லை. எனவே, அவை மிகவும் முக்கிய மானவை. முறையான அமைப்பை ஏற்படுத்தினால், பசுக்கள் மற்றும் அவற்றின் சாணம், சிறுநீர் ஆகியவை, மாநிலம் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவும். இந்த துறையில் பெண்களின் பங்களிப் புடன் நாம் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன். பசுவின் சாணம் மற்றும் சிறுநீரில் இருந்து, பூச்சிக்கொல்லிகள் முதல் மருந் துகள் வரை பல முக்கிய பொருட் களை தயாரிக்கலாம்.

மத்தியபிரதேச மாநிலத்தில் பெருமளவில் உரம் தயாரிப்பதற்கு பசுவின் சாணம் தேவைப்படுகிறது. எனவே அந்த பசுவின் சாணத்தை விலை கொடுத்து வாங்க அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான பூர்வாங்க வேலைகளில் அரசு ஈடுபட்டுள் ளது. விரைவில் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிடுவோம்.

பொதுமக்களின் அவசர மருத்துவ உதவிக்காக 108 என்ற ஆம்புலன்ஸ் சேவை உள்ளது. அதைப் போலவே, கால்நடைகளைப் பாதுகாக்கவும், அவற்றுக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்கவும் 109 என்ற ஹெல்ப்லைன் சேவையை தொடங்க அரசு பரிசீலித்து வருகிறது. அவசர சிகிச்சை தேவைப்படும் கால்நடைகள் தொடர்பாக 109 என்ற தொலை பேசி எண்ணுக்கு போன் செய் தால் கால்நடைகள் இருக்கும் இடத்துக்கே மருத்துவர்கள் வந்து சிகிச்சை வழங்குவர்.

இவ்வாறு அவர் பேசினார்.

பாஜக ஆளும் ம.பி.யில், பசுக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பசுக்களைப் பாதுகாப்பதற்கும், பசுஉற்பத்தியை மேம்படுத்துவதற்கும் 6 துறைகளின் அமைச்சர்களைக் கொண்ட பசு அமைச்சரவை உருவாக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

4. எஸ்.400 ஏவுகணை அமைப்புகளை இந்தியாவுக்கு விநியோகிக்க தொடங்கியது ரஷ்யா

ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ஏவுகணைகள் வாங்க இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. 5.5 பில்லியன் டாலர் மதிப்பில் 2019-ல் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த எஸ் 400 ஏவுகணைகள், தரையிலிருந்து வானில் வரும் இலக்குகளைக்கூட மிகத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.

இதனால் முதல் கட்டமாக 800 -மில்லியன் டாலரை இந்தியா ரஷ்யாவிடம் 2019-லேயே கொடுத்துவிட்டது. ஆனால் இன்னும் ஏவுகணைகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவில்லை. இந்த நிலையில், திட்டமிட்டபடி இந்தியாவுக்கு எஸ் 400- ஏவுகணை அமைப்புகளை விநியோகிக்கும் பணி தொடங்கியதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

5. 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது – 2020-ல் சிறார்களுக்கு எதிரான இணையவழி குற்றம் 400% உயர்வு :

கடந்த 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2020-ல் சிறார்களுக்கு எதிரான இணையவழி குற்றங்கள் 400% அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தில் உள்ள தரவுகளில் கூறியிருப்பதாவது:

நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு, கடந்த 2020-ம் ஆண்டுசிறார்களுக்கு எதிரான இணையவழி குற்றங்கள் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. சிறார்களை வைத்து எடுக்கப்படும் ஆபாசப் படங்களை வெளியிடுதல், ஆன்லைன் மூலம் பாலியல் தொல்லை கொடுத்தல் உள்ளிட்ட குற்றங்கள் இதில் அடங்கும்.

கடந்த 2019-ம் ஆண்டு சிறார்களுக்கு எதிரான இணையவழி குற்றங்கள் தொடர்பாக 164 வழக்குகள் பதிவாகின. இதுவே 2018, 2017-ம் ஆண்டுகளில் முறையே 117, 79 ஆக இருந்தது. ஆனால், 2020-ம் ஆண்டில் சிறார்களுக்கு எதிரான இணையவழி குற்றம் தொடர்பாக 842 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2019-ம் ஆண்டில் பதிவான வழக்குகளை விட 400 சதவீதம் அதிகம் ஆகும். இவற்றில் 738 வழக்குகள் சிறார் ஆபாசப் படங்களை வெளியிடுதல் தொடர்பானவை.

கரோனா பரவல்..

இதுகுறித்து குழந்தைகள் உரிமை அமைப்பின் (க்ரை) தலைவர் பூஜா மர்வாஹா கூறும்போது, “கரோனா பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்றன. இதனால் கிட்டத்தட்ட பெரும்பாலான சிறார்களுக்கு ஸ்மார்ட் போன்கள் கிடைத்துவிட்டன. அதிக நேரம் ஆன்லைனில் செலவிடுவதால், சில சமயங்களில் ஆபாச இணையதளங்களால் அவர்கள் கவரப்பட வாய்ப்பு உருவானது. இதுவே இதுதொடர்பான இணையவழி குற்றங்களுக்கு ஆரம்பப் புள்ளி ஆகும். இதனால்தான், 2020-ம் ஆண்டு சிறார்களுக்கு எதிராக அதிக அளவில் இணையவழி குற்றங்கள் அரங்கேறியுள்ளன” என்றார். – பிடிஐ

6. சென்னையில் வெள்ள தடுப்புக்கு அறிவுரைக் குழு

சென்னையில் வெள்ளத் தடுப்புக்கான அறிவுரைக் குழு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் தில்லி நகா் மற்றும் ஊரமைப்பு நிறுவன தலைமை திட்ட அலுவலா், காலநிலை பின்னடைவு பயிற்சி உலக வள நிறுவன இயக்குநா் நம்பி அப்பாதுரை, சென்னை வளா்ச்சி கல்வி நிறுவனப் பேராசிரியா் ஜானகிராமன், மும்பை ஐஐடி கட்டுமானப் பொறியியல் துறை பேராசிரியா் கபில் குப்தா, சென்னை அண்ணா பல்கலைக்கழக மனித குடியமா்வு மைய இயக்குநா் பிரதீப் மோசஸ், ஹைதராபாத் தேசிய ரிமோட் சென்சிங் துறையின் பிரதிநிதி , அண்ணா பல்கலைக்கழக ரிமோட் சென்சிங் நிறுவன பேராசிரியா் திருமலைவாசன், ஐஐடி கட்டுமானப் பொறியியல் துறை தலைவா் பாலாஜி நரசிம்மன், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும தலைமை திட்ட அதிகாரி, சென்னை மண்டல நீா்வளத் துறை தலைமைப் பொறியாளா், நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளா், சுற்றுச்சூழல் துறை இயக்குநா் ஆகியோா் உறுப்பினா்களாக இருப்பா். இந்தக் குழுவானது வெள்ளத்தை தடுக்கும் வழிமுறைகளையும், வெள்ளத்தின் பாதிப்பைக் குறைக்கும் வகையில் மழைநீா் வடிகால்களை அமைக்கவும் உரிய அறிவுறுத்தல்களை அரசுக்கு வழங்கும்.

7. நிா்வாகத் திறனை மேம்படுத்த மத்திய அமைச்சரவை 8 குழுக்களாகப் பிரிப்பு

மத்திய அரசின் நிா்வாகத் திறனை மேம்படுத்தும் வகையில் எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகளை கண்காணிக்க மத்திய அமைச்சரவை எட்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

பிரதமா் மோடி தலைமையிலான அமைச்சரவையில் 77 அமைச்சா்கள் இடம்பெற்றுள்ளனா். தொழில்நுட்பம் சாா்ந்த வளங்களை மேம்படுத்துவது, தொழில் நிபுணா்கள் அடங்கிய தொகுப்பை உருவாக்குவது ஆகியவற்றுக்காக அமைச்சா்கள் எட்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனா். நிா்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும், மத்திய அரசின் செயல்திறனை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு முன்பாக பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் ஐந்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு கூட்டமும் சுமாா் 5 மணி நேரம் நடைபெற்றது.

தனிப்பட்ட திறன், கவனத்துடன் கூடிய அமலாக்கம், அமைச்சரவை செயல்பாடு, பணிகளில் ஒத்துழைப்பு மற்றும் திறன்வாய்ந்த தகவல் தொடா்பு, நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆகிய 5 தலைப்புகளில் இந்தக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவும், மாநிலங்களவைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடுவும் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டங்கள் அனைத்தும் மத்திய அரசின் நிா்வாகத் திறனை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டன. இந்த நோக்கில் அடுத்தகட்ட நடவடிக்கையாகவே அமைச்சரவைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தக் குழுக்கள் ஒவ்வொன்றிலும் 9 முதல் 10 அமைச்சா்கள் இருப்பாா்கள். ஓா் அமைச்சா் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருப்பாா்.

ஒவ்வொரு அமைச்சரின் அலுவலகத்துக்கும் ஒரு இணையதளம் உருவாக்கப்படும். அதில் மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் தொடா்பான அமலாக்கம் குறித்த தகவல்கள் இடம்பெறும். சம்பந்தப்பட்ட அமைச்சா்கள் எடுக்கும் முடிவுகள் தொடா்பாக தகவல் பலகை உருவாக்கப்படும். கூட்டங்களை நடத்துதல் கடிதத் தொடா்பை நிா்வகிப்பது ஆகியவையும் மேற்கொள்ளப்படும். இவற்றை இந்த எட்டு குழுக்களும் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் மாநில அமைச்சகங்களுடன் இந்தக் குழுக்கள் இணைந்து செயல்படும்.

இந்தக் குழுக்களில் ஒரு குழுவானது, ஆராய்ச்சி, தகவல் தொடா்பு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற குறைந்தபட்சம் மூன்று தொழில் நிபுணா்களைக் கொண்ட குழுவை உருவாக்க வேண்டும்.

அதேபோல் ஓய்வு பெற்ற ஊழியா்களின் பின்னூட்டங்கள் மற்றும் அனுபவங்களை பராமரிக்க ஓா் இணையதளத்தை உருவாக்கும் பொறுப்பு ஒரு குழுவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

எட்டு குழுக்களின் ஒருங்கிணைப்பாளா்களாக மத்திய அமைச்சா்கள் ஹா்தீப் சிங் புரி, நரேந்திர சிங் தோமா், பியூஷ் கோயல், தா்மேந்திர பிரதான், ஸ்மிருதி இரானி, அனுராத் தாக்குா் உள்ளிட்டோா் இருப்பாா்கள்.

இந்த அமைச்சா்கள் தங்கள் அலுவலகங்களின் சிறந்த நடைமுறைகள் தொடா்பாக தங்கள் அமைச்சரவை சகாக்களுடன் பகிா்ந்து கொள்வாா்கள்.

8. நெக்ஸ்ட் ஜென் ஏடிபி ஃபைனல்ஸ்: கோப்பை வென்றார் கார்லோஸ்

இ‌த்​தா​லி​யி‌ல் நடைபெற்ற நெ‌க்‌ஸ்‌ட் ஜெ‌‌ன் ஏடிபி ஃபைன‌‌ல்‌ஸ் டெ‌ன்​னி‌ஸ் போ‌ட்டி​யி‌ல் ‌ஸ்பெ​யி‌ன் வீர‌ர் கா‌ர்லோ‌ஸ் அ‌ல்​க​ரா‌ஸ் கா‌ர்ஃ​பியா சா‌ம்​பி​ய‌ன் ஆனா‌ர்.

உல​கி‌ன் 32-ஆ‌ம் நிலை வீர​ராக இரு‌க்​கு‌ம் கா‌ர்லோ‌ஸ் இறு​தி‌ச்​சு‌ற்​றி‌ல் 4-3 (7/5), 4-2, 4-2 எ‌ன்ற‌ நே‌ர் செ‌ட்க​ளி‌ல் அமெ​ரி‌க்​க​ரு‌ம், உல​கி‌ன் 39-ஆ‌ம் நிலை வீர​ரு​மான‌ செபா‌ஸ்​டி​ய‌ன் கோ‌ர்​டாவை தோ‌ற்​க​டி‌த்​தா‌ர். இ‌ந்த ஆ‌ட்ட‌த்​தி‌ல் முத‌ல் இரு செ‌ட்க​ளி‌ல் ம‌ட்டு‌ம் ச‌ற்று தடு​மா‌ற்​ற‌‌ம் கா‌ட்டிய கா‌ர்​லோ‌ஸ், அத‌ன் பிற‌கு ஆ‌ட்ட‌த்தை மு‌ற்​றி​லு​மாக தன‌து க‌ட்டு‌ப்​பா‌ட்​டி‌ல் கொ‌ண்டு வ‌ந்​தா‌ர்.

9. நவ.15 – பழங்குடியினர் கௌரவ தினம்.

10. மனிதர்களுக்கு 108 இருப்பதுபோல் கால்நடைகளுக்கு ‘109 ஆம்புலன்ஸ்’: மபி அரசு புதுமை திட்டம்

நோய் பாதிப்புகள், விபத்தில் காயமடைவது போன்றவற்றால் பாதிக்கப்படும் மக்களுக்கு சிகிச்சை அளிக்க, ‘108 ஆம்புலன்ஸ்’ சேவை நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஒன்றிய அரசின் நிதியில், மாநில அரசுகள் இந்த சேவையை அமல்படுத்தி வருகின்றன. இந்நிலையில், மனிதர்களே போலவே நோய்களால் அவதிப்படும் கால்நடைகளுக்கும் உடனடியாக சிகிச்சை அளிப்பதற்காக, ‘109 ஆம்புலன்ஸ்’ சேவை திட்டத்தை அமல்படுத்த, மத்திய பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது.

இம்மாநில தலைநகர் போபாலில், ‘இந்திய கால்நடை சங்கம்’ சார்பாக பெண் கால்நடை மருத்துவர்களுக்கான, ‘சக்தி-2021’ என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது.

இதில், இம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் பங்கேற்று பேசுகையில், ‘109 என்ற உதவி மைய எண் மூலமாக கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கான ஆம்புலன்ஸ் சேவை தொடங்குவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இதன் மூலம், கால்நடைகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டிய அவசியமில்லை. மாட்டு சாணம், கோமியத்தில் இருந்து உரங்கள், பூச்சிக்கொல்லி, மருந்துகள் உட்பட பல்வேறு பொருட்களை தயாரிக்கப்படுகிறது. எனவே, இந்த தயாரிப்புகளுக்காக மாட்டு சாணத்தை அரசே கொள்முதல் செய்யவும் திட்டமிட்டுள்ளது. மாட்டு சாணம், கோமியத்தால் நாட்டின் பொருளாதாரமே உயரும்,” என்றார்.

1. What is the new name of the Mumbai–Karnataka region comprising seven districts in Karnataka?

A) Kalyana–Karnataka

B) Kittur–Karnataka 

C) Belgavi–Karnataka

D) Rani–Karnataka

  • Karnataka government has decided to rename the Mumbai–Karnataka region comprising seven districts as ‘Kittur Karnataka’. The Mumbai–Karnataka region consists of Uttara Kannada, Belagavi, Dharwad, Vijayapura, Bagalkote, Gadag and Haveri districts. Kittur is a historical taluk in Belagavi district that was ruled by Rani Chennamma. In 2019, the Hyderabad–Karnataka region was renamed as “Kalyana–Karnataka”.

2. What is the rank of India in the inaugural Global Drug Policy Index 2021?

A) 10

B) 18 

C) 25

D) 30

  • The inaugural Global Drug Policy Index was recently released by the Harm Reduction Consortium. Norway, New Zealand, Portugal, the UK and Australia were ranked at the top 5 spots on humane and health–driven drug policies.
  • India’s rank is 18 out of 30 countries with a score of 74/100. The five lowest–ranking countries are Brazil, Uganda, Indonesia, Kenya, and Mexico. The index comprises of 75 indicators of drug policy.

3. What is the name of the famous meteor shower that occurs every November?

A) Leonids Meteor Shower 

B) Perseid meteor Shower

C) Orionids Meteor Shower

D) Tempel Meteor Shower

  • Originally discovered in 1833, the Leonids Meteor Shower is observed every November. The meteor began on November 6 this year and will continue until November 30 and can be witnessed through the naked eye. The Meteor Shower contains debris left behind by the 55P/Tempel–Tuttle comet that enter Earth’s atmosphere. These debris objects are called meteors.

4. What is the name of the world’s first plasmid DNA vaccine to treat COVID?

A) ZyCoV–D 

B) Moderna

C) Sputnik V

D) Covaxin

  • Zydus Cadila’s ZyCoV–D is the world’s first plasmid DNA vaccine. It is also the first Covid–19 vaccine that can be administered using a needle–free applicator. The 3–dose shot was approved by the Drugs Controller General of India (DCGI) for emergency use in adults and children aged 12 years and above.

5. As per the recent amendments made in Minerals Concession Rules, 2021, what percent of mineral produced from captive mines can be sold?

A) 25

B) 50 

C) 75

D) 100

  • The Mines ministry has notified the Minerals (Other than Atomic and Hydro Carbons Energy Mineral) Concession (Fourth Amendment) Rules, 2021. Under the new mechanism, 50 percent of mineral produced from the captive mines can be sold.
  • It also facilitates transfer of mines without any charges. Minimum area for grant of mining lease has been revised from 5 ha. (hectares) to 4 ha.

6. The National Achievement Survey (NAS) is conducted once in how many years?

A) Two years

B) Three years 

C) Five years

D) Six years

  • The National Achievement Survey (NAS) is conducted every three years. The survey was last conducted in 2017 and was scheduled to take place in 2020. Due to the Covid–19 situation, it was postponed until this year.
  • Around 3.8 million students from 1, 23,000 schools from across 36 states and UTs will participate in the National Achievement Survey (NAS) 2021. The survey assesses the competencies developed by the students at grades 3, 5 and 8. This is the first time that private schools are included in this NAS.

7. Which is the only state/UT in the country to have metro facilities in five districts?

A) West Bengal

B) New Delhi

C) Uttar Pradesh 

D) Kerala

  • Uttar Pradesh Chief Minister Yogi Adityanath recently flagged off the trial run of the Kanpur Metro. The work on Kanpur Metro had started on November 15, 2019.
  • Uttar Pradesh is currently having operational metro railway service in Ghaziabad, Noida, Greater Noida and Lucknow. After the Kanpur Metro is flagged off, Uttar Pradesh would be the only state in the country to have metro facilities in five districts.

8. Which country’s Army Chief was conferred the honorary rank of General of the Indian Army recently?

A) Nepal 

B) Sri Lanka

C) Bangladesh

D) Bhutan

  • Nepal Army Chief General Prabhu Ram Sharma was conferred the honorary rank of General of the Indian Army by President Ram Nath Kovind. It is a customary practice by the two countries to confer the honorary rank of General on each other’s Army Chiefs. Gen. Sharma took over as the Chief of the Army Staff in September 2021. He is also a graduate of the National Defence College in India.

9. ‘Clean Green Village week’ has been observed under which scheme?

A) DDU–GKY

B) MGNREGS 

C) DAY–NRLM

D) DAY–NULM

  • As part of Azadi Ka Amrit Mahotsav, States/UTs have conducted week–long Clean Green Village activity under MGNREG scheme from 29th November to 4th November 2021.
  • During the Clean Green Village Week, the focus was on the identification and construction of Soak pits, Vermicompost/NADEP pit and initiatives such as vermin–composting, reuse of waste materials, recycling of non–biodegradable waste.

10. “Retail Direct Scheme” and “Integrated Ombudsman Scheme” have been launched by which organisation?

A) Reserve Bank of India 

B) Pension Fund Regulatory and Development Authority

C) Insurance Regulatory and Development Authority

D) Securities and Exchange Board of India

  • The Reserve Bank of India’s “Retail Direct Scheme” and “Integrated Ombudsman Scheme” has been launched and dedicated to the nation by Prime Minister Narendra Modi. Under the Retail Direct Scheme, retail investors can buy and sell government securities online. The Integrated Ombudsman Scheme helps improve the grievance redressal mechanism on customer complaints.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!