Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

15th October 2021 Tnpsc Current Affairs in Tamil & English

15th October 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 15th October 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

October Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. இந்தியாவில் பிறந்த டாக்டர். அப்துல் காதர் கான் அண்மையில் காலமானார். அவர், எந்தத் துறையுடன் தொடர்புடையவர்?

அ) அணு மற்றும் அணு அறிவியல் 

ஆ) மட்டைப்பந்து

இ) அரசியல்

ஈ) வேளாண்மை

  • பாகிஸ்தானின் ‘அணுவாயுதத்திட்டத்தின் தந்தை’ என்றழைக்கப்படும் இந்தியாவில் பிறந்த Dr அப்துல் காதர் கான் சமீபத்தில் பாகிஸ்தானில் காலமானார். அவர் 1936ஆம் ஆண்டு போபாலில் பிறந்தார். 1947ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தார்.

2. சர்வதேச பெண்குழந்தைகள் நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) அக்டோபர்.10

ஆ) அக்டோபர்.11 

இ) அக்டோபர்.14

ஈ) அக்டோபர்.15

  • ஆண்-பெண் சமத்துவ பாதிப்புகளை முன்னிலைப்படுத்துவதற்காக சர்வதேச பெண் குழந்தைகள் நாள் ஆண்டுதோறும் அக்டோபர்.11 அன்று அனுசரிக்கப்படுகிறது. 2011’இல், ஐக்கிய நாடுகள் பொதுச்சபை, பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை முன்னிறுத்துவதற்காக அக்.11’ஐ சர்வதேச பெண் குழந்தைகளின் நாளாக அறிவித்தது.
  • இந்த ஆண்டு, பலதரப்பட்ட பணிகளில் உள்ள பாலின டிஜிட்டல் பிளவை நீக்க உலகை ஐநா வலியுறுத்துகிறது.

3. பாரத்பே நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வங்கியாளர் யார்?

அ) அருந்ததி பட்டாச்சார்யா

ஆ) ரஜினிஷ் குமார் 

இ) சந்தா கோச்சார்

ஈ) உர்ஜித் படேல்

  • பாரத வங்கியின் முன்னாள் தலைவரான ரஜினிஷ் குமார், பின்டெக் நிறுவனமான பாரத்பே நிறுவனத்தின் தலைவராக சேர்ந்துள்ளார். 2020 அக்டோபரில் 40 ஆண்டுகால சேவைக்குப் பிறகு ரஜினிஷ் குமார் ஓய்வுபெற்றார். அவர் முன்னர், வங்கி நிறுவனமான HSBC’இன் ஆசிய பிரிவின் நிர்வாகமற்ற இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

4. கீழ்காணும் எந்த இடைப்பட்ட காலத்திற்கு, இந்திய உயிரியல் பூங்காக்களுக்கான தொலைநோக்கு திட்டத்தை மத்திய வனம் & சுற்றுச்சூழல் அமைச்சர் வெளியிட்டார்?

அ) 2021-2031 

ஆ) 2021-2025

இ) 2022-2032

ஈ) 2022-2026

  • மத்திய வனவுயிரிச்சாலை ஆணையத்தால் ஏற்பாடுசெய்யப்பட்ட மற்றும் குஜராத்தின் சர்தார் படேல் உயிரியல் பூங்காவில் நடத்தப்பட்ட உயிரியல் பூங்கா இயக்குநர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்களுக்கான தேசிய மாநாட்டில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் முதன்மை வெளியீடுகளை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் வெளியிட்டார்.
  • முதலில், இந்திய உயிரியல் பூங்காக்களை உலக தரத்திற்கு மேம்படுத்த -வும், மத்திய உயிரியல் பூங்கா ஆணயத்தை வலுப்படுத்தவும் தொலை நோக்குத்திட்டம் (2021-2031) வெளியிடப்பட்டது. இது வனவுயிரி பராமரி -ப்பு, ஆராய்ச்சி & பார்வையாளர் அனுபவங்களில் கவனஞ்செலுத்துகிறது. 2ஆவதாக, பணியாளர் மற்றும் பார்வையாளர்களுக்கான வளாகத்தில், WASH வசதிகளை உருவாக்குவதற்கும் பராமரிப்பதற்குமான உயிரியல் பூங்காக்களுக்கான WASH கையேடு வெளியிடப்பட்டது. CZA அமைத்த ‘பிராணி மித்ரா’ விருதுகளையும் அவர் வழங்கினார்.

5. இந்திய விண்வெளி சங்கத்தின் (ISPA) தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

அ) அனில் பட் 

ஆ) அமித் ஷா

இ) அஜித் தோவல்

ஈ) ராஜ்நாத் சிங்

  • பிரதமர் சமீபத்தில் இந்திய விண்வெளி சங்கத்தை (ISPA) தொடங்கினார். இது விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் நிறுவனங்களின் தொழில் சங்கமாகும். இதன் நிறுவன உறுப்பினர்களுள் லார்சன் அண்ட் டூப்ரோ, நெல்கோ (டாடா குழுமம்), ஒன்வெப், பார்தி ஏர்டெல், மேப் மை இந்தியா, வால்சந்த்நகர் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அனந்த் டெக்னாலஜி லிமிடெட் ஆகியவை அடங்கும். கோத்ரெஜ், ஹியூஸ் இந்தியா உள்ளிட்டவை மற்ற முக்கிய உறுப்பினர்களாக உள்ளனர். லெப்டினன்ட் ஜெனரல் அனில் பட் (ஓய்வு), இச்சங்கத்தின் பொது இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

6. ‘6S பரப்புரை’ என்ற பெயரிலான பரப்புரையைத் தொடங்கியுள்ள பொதுத்துறை வங்கி எது?

அ) பாரத வங்கி

ஆ) பஞ்சாப் தேசிய வங்கி 

இ) கனரா வங்கி

ஈ) பரோடா வங்கி

  • நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் தேசிய வங்கி, ஸ்வபிமான், சம்ருத்தி, சம்பார்க் மற்றும் ஷிகர், சங்கல்ப் மற்றும் ஸ்வாகத் போன்ற பல்வேறு திட்டங்களை உள்ளடக்கிய ‘6S பரப்புரை திட்டத்தை’த் தொடங்கியுள்ளது. நாட்டில் நிதியியல் சேவைகளை மேம்ப -டுத்துவதற்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுப்பதே இதன் நோக்கமாகும். கடன் வளர்ச்சி, சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் டிஜிட்டல் வங்கி உந்துதல், குறிப்பாக வேளாண் துறைக்கான கடனுதவி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

7. எந்த நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்காக, $200 மில்லியன் டாலர் கடன் வழங்குவதற்கு இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது?

அ) நேபாளம்

ஆ) தஜிகிஸ்தான்

இ) கிர்கிஸ்தான் 

ஈ) இந்தோனேசியா

  • பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு உறவுகளை மேம்படுத்து-
    வதற்காக வெளியுறவு அமைச்சர் S ஜெய்சங்கர் முன்னணி கிர்கிஸ்தான் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்காக, $200 மில்லியன் டாலர் கடன் வழங்குதற்கு இந்தியா ஒப்புக்கொண்டது. 3 மத்திய ஆசிய நாடுகளுடனான இருதரப்பு உறவை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், S ஜெய்சங்கர் தனது நான்கு நாள் பயணமாக கிர்கிஸ்தான், கஜகஸ்தான் & ஆர்மீனியாவுக்குச் செல்கிறார்.

8. சமீபத்திய செய்திகளில் இடம்பெற்ற பிளாங்க் சிகரம் என்பது எந்த மலைத்தொடரின் மிகவுயர்ந்த சிகரமாகும்?

அ) இமயமலை

ஆ) ஆல்ப்ஸ் 

இ) ஆண்டிஸ்

ஈ) எவரெஸ்ட் மலை சிகரம்

  • பிளாங்க் சிகரமானது ஆல்ப்ஸ் மற்றும் மேற்கு ஐரோப்பாவின் மிக உயரமான சிகரமாகும். பிளாங்க் சிகரம், கடந்த இருபது ஆண்டுகளில் 2 மீ அளவுக்கு குறைந்துள்ளது. அண்மையில், வல்லுநர்கள் மற்றும் மலை வழிகாட்டிகள் உள்ளிட்ட அளவீட்டாளர்கள் அந்தச் சிகரத்தினை அளந்து அதன் புதிய அளவீடுகளை அறிவித்தனர். இது கடல்மட்டத்திலிருந்து 4,807.81 மீ உயரத்தில் உள்ளது. 2007’இல், அதிகபட்சமாக 4,810.9 மீட்டராக இதன் உயரம் இருந்தது.

9. சர்வதேச மொழிபெயர்ப்பு நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ) செப்டம்பர்.30 

ஆ) அக்டோபர்.1

இ) அக்டோபர்.2

ஈ) அக்டோபர்.3

  • ஆண்டுதோறும் செப்டம்பர்.30 அன்று சர்வதேச மொழிபெயர்ப்பு நாள் கொண்டாடப்படுகிறது. மொழிபெயர்ப்பாளர்களின் தந்தையாகக் கருதப்படும் பைபிள் மொழிபெயர்ப்பாளர் புனித ஜெரோம் நினைவாக இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. கடந்த 2017’இல் ஐநா பொதுச்சபையால் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாடுகளை இணைப்ப -திலும் அமைதியை மேம்படுத்துவதிலும் மொழி வல்லுநர்கள் வகிக்கும் பங்கை அங்கீகரிப்பதற்காக இந்நாள் கொண்டாடப்படுகிறது.

10. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டெம் படபூட்டியன் ஆகியோர் வென்ற பரிசு / பதக்கம் எது?

அ) மேன்புக்கர் பரிசு

ஆ) ஆபெல் பரிசு

இ) நோபல் பரிசு 🗹

ஈ) பீல்ட்ஸ் பதக்கம்

  • 2021 உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு, டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டெம் படபூட்டியன் ஆகியோருக்கு கூட்டாக அறிவி -க்கப்பட்டுள்ளது. வெப்பநிலை மற்றும் தொடுதலுக்கான ஏற்பிகளைக் கண்டுபிடித்ததற்காக அவர்கள் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள -னர். இது உயிர்வாழ்வதற்குத் தேவையான வெப்பம், குளிர் மற்றும் தொடுதலை உணரும் திறனை அளிக்கிறது.
  • டேவிட் ஜூலியசு, சான்பிரான்சிசுகோவின் கலிபோர்னியா பல்கலையில் மருத்துவப்பள்ளியில் பேராசிரியராக உள்ளார். ஆர்டெம் படபூட்டியன், ஹோவர்ட் ஹியூஸ் மருத்துவ நிறுவனத்தில் நரம்பியல் துறையில் பேராசிரியராக உள்ளார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. புவிசார் குறியீடு பெற்ற – திருப்புவனம் பட்டுக்கு சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு:

புவிசார் குறியீடு பெற்ற திருப்புவனம் பட்டுக்கு சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனம் பட்டுச்சேலைக்கு கடந்த 2019’இல் புவிசார் குறியீடு கிடைத்தது. இதன் தொடர்ச்சியாக, 75ஆவது ஆண்டு சுதந்திர நாள் விழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, புவிசார் குறியீடு பெற்ற பொருட்களுக்கு சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டு வருகிறது.

அதன்படி, புவிசார் குறியீடு பெற்ற திருப்புவனம் பட்டுக்கு `25’க்கான சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது.

1. Indian Born Dr Abdul Qadeer Khan, who passed away recently is associated with which field?

A) Atomic and Nuclear Science 

B) Cricket

C) Politics

D) Agriculture

  • Indian Born Dr Abdul Qadeer Khan, also known as the father of Pakistan’s atomic weapons program died recently in Pakistan. He was born in the year 1936 in Bhopal and moved to Pakistan during the 1947 Partition of India and Pakistan.

2. When is the ‘International Day of the Girl Child’ observed across the world?

A) October.10

B) October.11 

C) October.14

D) October.15

  • The International Day of the Girl Child is observed annually on October 11, to highlight the gender equality impacts. In 2011, the United Nations General Assembly declared October 11 as the International Day of the Girl Child, to recognise the challenges faced by girls.
  • This year, the UN urges the world to bridge the gender digital divide existing in diverse skills and jobs.

3. Which Indian banker has joined as the Chairman of BharatPe?

A) Arundhati Bhattacharya

B) Rajnish Kumar 

C) Chanda Kochhar

D) Urjit Patel

  • Rajnish Kumar, former chairman of State Bank of India (SBI), has joined the board of Fintech firm BharatPe as its Chairman. Rajnish Kumar earlier retired from the country’s largest lender after four decades of service in October 2020. He was previously appointed as a non–executive director for banking giant HSBC’s Asia unit.

4. Minister for Forest and Environment released the Vision Plan for Indian zoos, for which duration?

A) 2021–2031 

B) 2021–2025

C) 2022–2032

D) 2022–2026

  • Union Environment Minister released important publications of the Central Zoo Authority, at the National conference for Zoo directors and veterinarians organized by Central Zoo Authority and hosted by Sardar Patel Zoological Park, Gujarat.
  • First is the Vision Plan (2021–2031) for Indian zoos to upgrade them to global standards and strengthening of Central Zoo Authority. It focusses on animal care, research, and visitor experiences. Second is the WASH Manual for Zoos– for creating and maintaining WASH facilities within the premises for staff and visitors. He also gave away ‘Prani Mitra’ Awards, set up by CZA.

5. Who has been appointed the director–general of the Indian Space Association (IsPA)?

A) Anil Bhatt

B) Amit Shah

C) Ajit Doval

D) Rajnath Singh

  • The Prime Minister recently launched the Indian Space Association (IsPA). It is an industry association of space and satellite companies. The Founding members include Larson & Toubro, Nelco (Tata Group), OneWeb, Bharti Airtel, Mapmyindia, Walchandnagar Industries and Ananth Technology Limited. Other core members include Godrej, Hughes India, among others. Lt Gen Anil Bhatt (Retd) has been appointed the director–general of the association.

6. Which public sector bank has launched a campaign named “6S Campaign”?

A) State Bank of India

B) Punjab National Bank 

C) Canara Bank

D) Bank of Baroda

  • Punjab National Bank, the country’s second largest Public Sector Bank, has launched a “6S Campaign” including different schemes such as – Swabhiman, Samruddhi, Sampark and Shikhar, Sankalp and Swagat. The objective is to drive awareness campaign for development of financial services in the country. It aims to create awareness on credit growth, social security schemes and drive digital banking push, especially credit outreach for the agricultural sector.

7. India agreed to provide a USD 200 million Line of Credit for development projects in which country?

A) Nepal

B) Tajikistan

C) Kyrgyzstan 

D) Indonesia

  • External Affairs Minister S Jaishankar held talks with the top Kyrgyztan leadership to boost bilateral ties, including defence cooperation. India also agreed to provide a USD 200 million Line of Credit for development projects in the country. Jaishankar is on his four–day visit to Kyrgyzstan, Kazakhstan and Armenia with an aim to further expand bilateral ties with the three Central Asian countries.

8. Mont Blanc, which was seen in the news recently, is the highest peak in which mountain range?

A) Himalayas

B) Alps 

C) Andes

D) Mount Everest

  • Mont Blanc is the highest mountain in the Alps and Western Europe. The summit of the Mont Blanc peak, has shrunk by two metres over the past 20 years. Recently, surveyors including experts and high mountain guides measured the peak and announced its new measurements. It has reached an official height of 4,807.81 metres above sea level. The highest reading was 4,810.9 metres in 2007.

9. When is the International Translation Day celebrated every year?

A) September 30 

B) October 1

C) October 2

D) October 3

  • Every year, the 30th September is celebrated as the International Translation Day. This day is chosen to remember the Bible translator St. Jerome, who is considered the father of translators.
  • A resolution in this regard was passed by the United Nations General Assembly in the year 2017, in order to recognise the role played by language professionals in connecting nations and promoting peace.

10. David Julius and Ardem Patapoutian, who were in the news recently, are the winners of which award?

A) Manbooker Prize

B) Abel Prize

C) Nobel Prize 

D) Fields Medal

  • 2021 Nobel Prize in Physiology or Medicine has been announced to two joint winners, David Julius and Ardem Patapoutian.
  • The award has been given for their discoveries of receptors for temperature and touch that gives the ability to sense heat, cold and touch needed for survival. David Julius is a professor with the School of Medicine at the University of California, San Francisco. Ardem Patapoutian is an immigrant, is a Professor in the Department of Neuroscience at the Howard Hughes Medical Institute.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!