Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

15th September 2020 Current Affairs in Tamil & English

15th September 2020 Current Affairs in Tamil & English

15th September 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

15th September Tamil Current Affairs 2020

15th September English Current Affairs 2020

 

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. COVID-19 தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு காங்கோ மற்றும் தெற்கு சூடானுக்கு உதவுவதற்காக, ஐநா பணிக்குழுவுக்கு தனது வல்லுநர் குழுக்களை அனுப்பவுள்ள நாடு எது?

அ. ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஆ. சீனா

இ. இந்தியா

ஈ. பிரேசில்

  • இந்தியாவின் ஐநா அமைதிகாக்கும் படையினரின் ஓர் அண்மைய அறிக்கையின்படி, தெற்கு சூடான் மற்றும் காங்கோ மக்களாட்சிக் குடியரசு (DRC) ஆகியவற்றில் ஐநா அமைதிகாக்கும் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இந்தியா இரண்டு நிபுணர்கள் குழுக்களை அனுப்பவுள்ளது. இந்நடவடிக்கை, அவ்விருநாடுகளிலும் COVID-19 சவாலை எதிர்கொள்ளும் நோக்கம் கொண்டது. 15 நிபுணர்களைக் கொண்ட ஒரு குழு DRC’இல் உள்ள கோமாவுக்கு அனுப்பப்படும்.
  • மேலும் 15 நிபுணர்களைக்கொண்ட மற்றொரு குழு தென் சூடானில் உள்ள ஜூபாவுக்கு அனுப்பப்படும். இது, இந்திய அமைதிகாக்கும் படையினரால் நிர்வகிக்கப்படும் மருத்துவ வசதிகளை வலுப்படுத்தவும் COVID-19 தொற்றுநோயை எதிர்த்துப்போராடவும் அந்த இருநாடுகளுக்கும் உதவும்.

2.உலகம் முழுவதும், ‘பன்னாட்டுத் தொண்டு நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. செப்டம்பர் 5

ஆ. செப்டம்பர் 6

இ. செப்டம்பர் 7

ஈ. செப்டம்பர் 8

  • ஒவ்வோர் ஆண்டும் செப்.5 அன்று உலகம் முழுவதும் சர்வதேச தொண்டு நாள் அனுசரிக்கப்படுகிறது. தன்னார்வ மற்றும் கொடை நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு மக்களையும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் ஊக்குவிப்பதே இந்நாளின் நோக்கமாகும். செப்.5-அன்னை தெரசாவின் நினைவு நாளையும் குறிக்கிறது. கொல்கத்தாவில் மேற்கொண்ட தொண்டுகளுக்காக அவர் அறியப்படுகிறார். கடந்த 1979ஆம் ஆண்டில், அமைதிக்கான ‘நோபல்’ பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.

3.அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பு குறித்த இந்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் மனுதாரராக இருந்தவரும் அண்மையில் காலமானவருமானவர் யார்?

அ. கேசவானந்த பாரதி

ஆ. நரேந்திர குமார் சுவைன்

இ. S மொஹிந்தர்

ஈ. இராமகிருஷ்ணா பாபா பாட்டீல்

  • கடந்த 1973ஆம் ஆண்டில், அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பு குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பின் மனுதாரராக இருந்த கேசவானந்த பாரதி, அண்மையில் காலமானார். கேரளாவின் காசர்கோடுவில் உள்ள ஒரு மடத்தின் தலைவராக இருந்த அவர், கடந்த 1969ஆம் ஆண்டு கேரள அரசாங்கத்தின் நிலச் சீர்திருத்தச் சட்டத்தை சவால்செய்து உச்சநீதிமன்றத்தை நாடினார். அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பானது உடைக்க முடியாதது என்றும் நாடாளுமன்றத்தால் திருத்தஞ்செய்யமுடியா என்றும் இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

4.ஜப்பானைத் தாக்கிவிட்டு தற்போது தென்கொரியாவை நெருங்கிவரும் சூறாவளியின் பெயரென்ன?

அ. ஹைஷென்

ஆ. சின்லாகு

இ. ஹாகுபிட்

ஈ. பவி

  • ஜப்பானிய வானிலை ஆய்வுமையத்தின்படி, ஹைஷென் சூறாவளி ஜப்பானைத் தாக்கியதோடு அங்கு கடுமையான காற்றுக்கும் பெருமழைக்கும் காரணமாக மாறியுள்ளது. ‘ஹைஷென்’ என்றால் சீன மொழியில், ‘கடற்கடவுள்’ எனப்பொருளாகும். மணிக்கு 180 கிமீ மேற்பட்ட வேகத்தில் வீசிய காற்றுக்கு காரணமான இந்தச்சூறாவளி, கியுஷு தீவில் உள்ள ஒகினாவாவின் சில பகுதிகளை சேதப்படுத்தியது. தற்போது இச்சூறாவளி, தென்கொரியாவின் சிலபகுதிகளை நெருங்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

5.கீழ்க்காணும் எந்த உணவுப்பொருளை மதிய உணவுத்திட்டத்தில் சேர்ப்பதற்கு, இந்தியக் குடியரசுத் துணைத்தலைவர் பரிந்துரைத்துள்ளார்?

அ. பால்

ஆ. முட்டை

இ. இறைச்சி

ஈ. பழங்கள்

  • குழந்தைகளின் ஊட்டச்சத்து அளவை மேம்படுத்துவதற்காக காலை உணவிலோ/மதிய உணவிலோ பாலைச்சேர்க்கலாம் என இந்தியக் குடியரசுத்துணைத்தலைவர் M வெங்கையா எண்ணம் தெரிவித் -தார். மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் ஸ்மிரிதி இரானியுடன் பேசும்போது இந்த எண்ணத்தை வெங்கையா தெரிவித்தார்.
  • மதிய உணவுத்திட்டத்தில் பாலைச் சேர்க்க அனைத்து மாநிலங்களுக்கும் பரிந்துரைக்க, மத்திய அரசு பரிசீலிக்கும் என்று இந்தியக்குடியரசுத்துணைத்தலைவரிடம் அமைச்சர் உறுதியளித்தார்.

6.முதலாம் உலக சூரிய ஆற்றல் உற்பத்தி தொழில்நுட்ப உச்சிமாநாட்டை நடத்திய அமைப்பு எது?

அ. பன்னாட்டு அணுவாற்றல் நிறுவனம்

ஆ. பன்னாட்டு சூரிய ஆற்றல் உற்பத்தி கூட்டணி

இ. ஐநா சுற்றுச்சூழல் திட்டம்

ஈ. உணவு மற்றும் வேளாண் அமைப்பு

  • முதலாம் உலக சூரிய ஆற்றல் உற்பத்தி தொழில்நுட்ப உச்சிமாநாட்டை (WSTS) 2020 செப்.8 அன்று பன்னாட்டு சூரிய ஆற்றல் உற்பத்தி கூட்டணி (ISA) நடத்தியது. 149 நாடுகளைச் சேர்ந்த 25000’க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் மற்றும் பல புகழ்பெற்ற நீதிபதிகள், இவ்வுச்சிமாநாட்டில் பங்கேற்றனர். இக் கூட்டணியின் தலைவரும், இந்திய புதிய & புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் அமைச்சருமான RK சிங், முதன்மை அறிவியல் ஆலோசகரான K விஜய இராகவனுடன் இதில் பங்கேற்றார்.

7.முதலாவது கஞ்சா மருந்துத்திட்டம் அமைக்கப்படவுள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?

அ. இலட்சத்தீவுகள்

ஆ. ஜம்மு – காஷ்மீர்

இ. சிக்கிம்

ஈ. அஸ்ஸாம்

  • பிரதமர் அலுவலகத்திலிருந்து வந்த செய்தியின்படி, ஜம்முவில் அமைந்துள்ள இந்திய ஒருங்கிணைந்த மருத்துவ நிறுவனத்தில் (IIIM), நாட்டின் முதலாவது கஞ்சா மருந்துத்திட்டம் அமைக்கப்படவுள்ளது. இத் திட்டம், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமாக ஆன பிறகு மேற்கொள்ளப்படும் முதல் முதன்மை அயல் நாட்டு முதலீட்டில் அமையும் திட்டமாகும். இது, கனடாவுடன் இணைந்து நிறுவப்படும். கஞ்சாவிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து, வலி நிவாரணி தயாரிக்க பயன்படுகிறது.

8.ஆண்டுதோறும் நடைபெறும் இந்தோ-பசிபிக் வர்த்தக கருத்துக்களம், எதிர்வரும் அக்டோபர் மாதத்தில், எந்த நாட்டில் நடைபெறவுள்ளது?

அ. பிலிப்பைன்ஸ்

ஆ. வியட்நாம்

இ. இந்தியா

ஈ. இலங்கை

  • மூன்றாவது இந்தோ-பசிபிக் வர்த்தக கருத்துக்களமானது, எதிர்வரும் 2020 அக்டோபர்.28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் வியட்நாமின் தலைநகரமானன ஹனோய் நகரில் நடைபெறவுள்ளது. அமெரிக்க-ASEAN வணிகக் கவுன்சில் மற்றும் பிற வர்த்தக சங்கங்கள், வியட்நாம் அரசாங்கம் ஆகியவற்றுடன் இணைந்து இந்தக் கருத்துக்களத்தை ஐக்கிய அமெரிக்க நாடுகள் அரசு நடத்தவுள்ளது. உட்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சந்தை இணைப்பு, நலவாழ்வு மற்றும் பொருளாதார மீட்சி ஆகியவற்றில் இந்தக் கருத்துக்களம் முக்கிய கவனம் செலுத்தும்.

9. ‘காதி அகர்பத்தி ஆத்மநிர்பார் மிஷன்’ என்ற திட்டத்தை செயல்படுத்துகிற அமைச்சகம் எது?

அ. கல்வி அமைச்சகம்

ஆ. பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

இ. MSME அமைச்சகம்

ஈ. தொழிலாளர் நல அமைச்சகம்

  • ‘காதி அகர்பத்தி தற்சார்பு இந்தியா திட்ட’த்தை மத்திய MSME அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. வேலையற்றோர் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதை நோக்கமாகக்கொண்ட இத்திட்டம், கைவினைஞர்களுக்கும் உள்ளூர் அகர்பத்தி தொழிற்துறைக்கும் ஆதரவளிக்கிறது. இந்தத் துறையில் இந்தியாவை தன்னம்பிக்கைகொள்ளச்செய்ய, திட்டத்தின் மொத்த மதிப்பீடு `55 கோடிக்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • இதில் 1,500 கைவினைஞர்களுக்கு உடனடி ஆதரவு மற்றும் `2.20 கோடி செலவில் இரண்டு சிறப்பு மையங்களை உருவாக்குதல் ஆகியவை அடங்கும்.

10.மின்னணு மற்றும் வன்பொருள் உற்பத்திக்கான கொள்கையை அறிவித்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. ஒடிசா

இ. அஸ்ஸாம்

ஈ. கேரளா

  • தமிழ்நாடு அரசானது புதிய மின்னணு மற்றும் வன்பொருள் உற்பத்தி கொள்கையை அறிவித்துள்ளது. இந்தக்கொள்கை, 2025ஆம் ஆண்டில் மாநிலத்தின் மின்னணு தொழில் உற்பத்தியை 100 பில்லியன் டாலராக உயர்த்துவதை நோக்கமாகக்கொண்டுள்ளது. வரும் 2024ஆம் ஆண்டளவில் 1,00,000’க்கும் மேற்பட்ட மக்களுக்கு திறன் பயிற்சி அளிப்பதற்கும், மின்னணு தொழிற்துறையில் மாநிலத்தின் மனித வள தேவையை பூர்த்திசெய்வதற்கும் இந்தக்கொள்கை முற்படுகிறது.

1. Which country is to send its expert teams to United Nations missions to help Congo and South Sudan fight COVID–19?

[A] United States of America

[B] India

[C] China

[D] Brazil

  • As per the recent statement from the India’s UN mission, India is to send two teams of specialists to support UN peacekeeping operations in South Sudan and the Democratic Republic of Congo (DRC).
  • This move is aimed to meet the COVID–19 challenge in two countries. One team of 15 specialists will be sent to Goma in DRC and another team of 15 specialists will be sent to Juba in South Sudan. This will strengthen the hospital facilities managed by Indian peacekeepers and will help those two countries in fighting COVID–19.

2. When is ‘International Day of Charity’ observed across the world?

[A] September 5

[B] September 6

[C] September 7

[D] September 5

  • The International Day of Charity is observed every year on September 5, across the world. The day aims to sensitize people and NGOs to engage in volunteer and philanthropic activities.
  • This date of 5 September marks the day of the anniversary of the passing away of Mother Teresa. She was honoured as a Saint was known for her missionary work in Kolkata. She received the Nobel Peace Prize in 1979.

3. What is the name of the petitioner in the landmark SC judgement on basic structure of the Constitution, who has recently passed away?

[A] Kesavananda Bharati

[B] Narendra Kumar Swain

[C] S Mohinder

[D] Ramkrishna Baba Patil

  • Kesavananda Bharati, who was a petitioner of the landmark Supreme Court judgement on basic structure of the Constitution in 1973, has recently passed away. He was the head of a Mutt at Kasaragod in Kerala, and had moved the Supreme Court challenging the Kerala government’s land reforms Act of 1969. Supreme Court ruled that the basic structure of the Constitution is unbreakable and cannot be amended by Parliament.

4. What is the name of the typhoon that has hit Japan and is approaching South Korea?

[A] Haishen

[B] Sinlaku

[C] Hagupit

[D] Bavi

  • As per the Japan Meteorological Agency, the typhoon Haishen hit Japan and released fierce winds and rains. Haishen means Sea God in Chinese and the typhoon unleashed winds of speed over 180 kilometers per hour and damaged some parts of Okinawa, Kyushu island. The typhoon is estimated to approach some regions of South Korea.

5. The Vice President of India has suggested to include which food product in Mid–day Meal scheme?

[A] Milk

[B] Egg

[C] Meat

[D] Fruits

  • The Vice President has recently suggested to include Milk as a part of the Mid–day Meal scheme, in break fast or meal, to improve the nutritional levels of children. The Vice President earlier discussed this proposal with the Union Minister for Women and Child Development in this regard. He also said that the Central Government would recommend to all states to include Milk.

6. Which organisation is to organise the first–ever World Solar Technology Summit?

[A] International Atomic Energy Agency

[B] International Solar Alliance

[C] United Nations Environment Programme

[D] Food and Agricultural Organisation

  • The first World Solar Technology Summit (WSTS) is to be organized by the International Solar Alliance (ISA) on September 8, 2020.
  • More than 25000 participants from 149 countries and several distinguished judges are set to participate in the virtual summit. The President of the assembly and India’s New and Renewable Energy Minister R K Singh will be joined by Principal Scientific Adviser, K. Vijay Raghavan.

7. The first–ever Cannabis medicine project is to be set up in which state/UT?

[A] Lakshadweep

[B] Jammu and Kashmir

[C] Sikkim

[D] Assam

  • As per the news from the Prime Minister’s Office, the first–ever cannabis medicine project will be set up at Indian Institute of Integrative Medicine (IIIM) in Jammu. This project will be the first major foreign investment in Jammu and Kashmir after it became a Union Territory (UT). It will be established in collaboration with Canada. The medicine prepared from Cannabis are used to produce pain–relief medicine.

8. The annual Indo–Pacific Business Forum is to be held in which country, in the month of October?

[A] Philippines

[B] Vietnam

[C] India

[D] Sri Lanka

  • The third annual Indo–Pacific Business Forum is to be held in Hanoi, the capital of Vietnam on October 28 and 29, 2020. The United States Government will sponsor the forum, in collaboration with the Government of Vietnam, the US–ASEAN Business Council and others trade associations. The main focus will be on Infrastructure, Digital economy, Market connectivity, health and economic recovery.

9. The programme named “Khadi Agarbatti AatmaNirbhar Mission” is implemented by which Ministry?

[A] Ministry of Education

[B] Ministry of Tribal Affairs

[C] Ministry of MSME

[D] Ministry of Labour

  • The programme named ‘Khadi Agarbatti Aatmanirbhar Mission’ is implemented by the Union MSME Ministry. The programme is aimed at creating employment for the unemployed and migrant workers give handholding artisans and support the local agarbatti industry.
  • To make India self–reliant in this sector, the total size of the programme, has been increased to more than ₹55 crore. This includes immediate support to 1,500 artisans and development of two centres of Excellence costing at ₹2.20 crore.

10. Which state has announced a policy for Electronics and Hardware Manufacturing?

[A] Tamil Nadu

[B] Kerala

[C] Odisha

[D] Assam

  • The Government of Tamil Nadu has announced a new electronics & hardware manufacturing policy. The policy aims to increase the State’s electronics industry output to $100 billion by 2025. The policy undertakes to impart skill training for more than 1,00,000 people by 2024, to meet the state’s human resource demand in electronics sector.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!