TnpscTnpsc Current Affairs

15th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

15th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 15th September 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

September Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

15th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. துணிகர மூலதனம் மற்றும் தனிப்பட்ட சரியொப்பு (Private Equity) ஆகியவை எதிர்கொள்ளும் சிக்கல்களைத்தீர்க்க நடுவண் நிதியமைச்சகத்தால் அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?

அ. அஜை தியாகி

ஆ. மகாலிங்கம்

இ. M தாமோதரன்

ஈ. சுபாஷ் சந்திர கார்க்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. M தாமோதரன்

  • துணிகர மூலதனம் மற்றும் தனிப்பட்ட சரியொப்பு ஆகியவைமூலம் முதலீடுகளை அதிகரிப்பதற்காக ஒழுங்குமுறை சிக்கல்களைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை ஆய்வுசெய்து பரிந்துரைப்பதற்காக SEBI–இன் முன்னாள் தலைவர் M தாமோதரன் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை நிதியமைச்சகம் அமைத்தது. குழுவின் பிற உறுப்பினர்களில் SEBIஇன் முன்னாள் முழுநேர உறுப்பினரும், ரிசர்வ் வங்கியின் நிர்வாக இயக்குநருமான G மகாலிங்கம்; CBICஇன் பிரதிநிதிகள்; வருமான வரித்துறையினர்; NCAER உறுப்பினர்கள் அடங்குவர். FY23 பட்ஜெட் அத்தகைய குழுவை அமைக்க முன்மொழிந்தது.

2. ‘தேசிய அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில்’ எத்தனை மருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளன?

அ. 84

ஆ. 184

இ. 284

ஈ. 384

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. 384

  • நடுவண் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் Dr மன்சுக் மாண்டவியா, அத்தியாவசிய மருந்துகளின் தேசிய பட்டியல்கள் – 2022ஐ அறிமுகப்படுத்தினார். நாட்டு மக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகளை வழங்க இந்தப் பட்டியல்கள் வகைசெய்கிறது. இந்தப் பட்டியலில் கூடுதலாக 34 மருந்துகளுடன் 384 மருந்துகள் இடம்பெற்றுள்ளன. முந்தைய பட்டியலிலிருந்து 26 மருந்துகள் நீக்கப்பட்டுள்ளன.

3. 2022இல் நடைபெற்ற, ‘அனைத்திந்திய அலுவல் மொழி மாநாட்டை’ நடத்தும் நகரம் எது?

அ. சூரத்

ஆ. அகமதாபாத்

இ. பெங்களூரு

ஈ. புனே

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. சூரத்

  • குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற, ‘அகில இந்திய அலுவல் மொழி’ மாநாட்டில் நடுவண் உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். நாடு முழுவதும் ஆண்டுதோறும் செப்டம்பர்.14ஆம் தேதி கொண்டாடப்படும் ஹிந்தி மொழி நாளை முன்னிட்டு இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

4. ‘சந்திர மறைவு’ என்ற நிகழ்வால் செப்.14 அன்று கீழ்க்காணும் எந்தக் கோள் பார்வைக்குத் தென்படாமலிருந்தது?

அ. புதன்

ஆ. வெள்ளி

இ. யுரேனஸ்

ஈ. சனி

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. யுரேனஸ்

  • சூரியனிலிருந்து ஆறாவது கோளான யுரேனஸ் புவியின் துணைக்கோளான நிலவுக்குப் பின்னால் நேரடியாகக் கடந்துசென்றது; இதன் காரணமாக சுமார் 3½ மணிநேரம் அது பார்வைக்குத் தென்படாமலிருந்தது. இம்மறைந்து போகும் செயல், ‘யுரேனஸின் சந்திர மறைவு’ என்றும் அழைக்கப்படுகிறது. ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவில் உள்ளோரால் மட்டுமே இந்த நிகழ்வைப் பார்க்க முடிந்தது.

5. அண்மையில் தொடங்கப்பட்ட, ‘ஸ்வச் சாகர்’ இணையதளத்துடன் தொடர்புடைய நடுவண் அமைச்சகம் எது?

அ. நடுவண் புவி அறிவியல் அமைச்சகம்

ஆ. நடுவண் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம்

இ. நடுவண் ஊரக வளர்ச்சி அமைச்சகம்

ஈ. நடுவண் உள்துறை அமைச்சகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. நடுவண் புவி அறிவியல் அமைச்சகம்

  • நடுவண் புவி அறிவியல் அமைச்சர் Dr ஜிதேந்திர சிங், தற்போது நடந்துவரும் கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் இயக்கத்திற்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில் பிரத்தியேக இணையதளத்தை வெளியிட்டார். ‘ஸ்வச் சாகர், சுரக்ஷித் சாகர்’ என்ற விழிப்புணர்வு பரப்புரையானது ‘சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் நாளில்’ முடிவடையும். இந்தியா முழுவதும் நடந்து வரும் கடற்கரை தூய்மை இயக்கத்தின் ஒருபகுதியாக, ‘வாசுகி’ என்ற பிரச்சார இலச்சினையையும் Dr ஜிதேந்திர சிங் வெளியிட்டார்.

6. இந்திய கடலோரக் காவல்படையானது கீழ்க்காணும் எந்நகரத்தில், ‘SAREX–22’ என்ற தேசிய கடல்சார் தேடல் மற்றும் மீட்புப்பயிற்சியை நடத்தியது?

அ. சென்னை

ஆ. மும்பை

இ. விசாகப்பட்டினம்

ஈ. தூத்துக்குடி

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. சென்னை

  • இந்திய கடலோரக்காவல்படையானது சென்னையில் பத்தாவது தேசிய கடல்சார் தேடல் மற்றும் மீட்புப்பயிற்சி, ‘SAREX–22’ஐ நடத்தியது. ICG டோர்னியர் விமானங்கள், அவசரகாலங்களில் கப்பல்கள் மற்றும் விமானங்களில் இருந்து பயணிகளை மீட்பதற்கான வழிகளைச் செய்துகாட்டின. ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தப் பயிற்சியின் இந்த ஆண்டு (2022) பதிப்பின் கருப்பொருள், “Capacity Building towards Marine Passenger Safety” என்பதாகும்.

7. உலகின் மிகநீளமான கிளைக்கால்வாய் திறக்கப்பட்டுள்ள மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. ஹிமாச்சல பிரதேசம்

ஆ. அஸ்ஸாம்

இ. கேரளா

ஈ. குஜராத்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. குஜராத்

  • தெற்கு குஜராத்தில் உள்ள நர்மதா சரோவர் அணையில் இருந்து கட்ச் பகுதிக்கு தண்ணீர் கொண்டுவரும் நர்மதா கால்வாயை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். நர்மதா மாவட்டத்தில் சர்தார் சரோவர் நர்மதா அணையில் இருந்து குஜராத்தின் மாண்ட்வி வட்டத்தின் கடைசிகட்ட கிராமங்கள் வரை 357.18 கிலோ மீட்டர் நீளத்திற்கு கட்ச் கிளைக்கால்வாய் நீண்டுள்ளது. `6493 கோடி செலவில் கட்டப்பட்ட இந்தக்கிளைக்கால்வாய், உலகின் மிகநீளமான கிளைக்கால்வாய் என்று கூறப்படுகிறது.

8. தேசிய புற்றுநோய் கட்டமைப்பு என்பது கீழ்க்காணும் எந்தத் துறையின்மூலம் இயக்கப்படும் இந்திய அரசின் ஒரு முனைவாகும்?

அ. அணுவாற்றல் துறை

ஆ. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை

இ. சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை

ஈ. சுகாதாரம் மற்றும் ஆராய்ச்சித் துறை

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. அணுவாற்றல் துறை

  • தேசிய புற்றுநோய் கட்டமைப்பு (NCG) என்பது இந்திய அரசின் அணுவாற்றல் துறை மற்றும் டாடா நினைவு மையம் ஆகியவற்றால் மேற்கொள்ளப்படும் ஒரு முனைவாகும். தேசிய புற்றுநோய் கட்டமைப்பானது அண்மையில், இந்தியா முழுவதும், புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்துவதற்காக, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் கருவிகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக, ‘டிஜிட்டல் புற்றுநோயியலுக்கான கொய்டா மையத்தை’ நிறுவியுள்ளது. NCG, தற்போது இந்தியா முழுவதும் அதன் வலையமைப்பில் 270 மருத்துவமனைகளைக் கொண்டுள்ளது.

9. எந்த மாநிலத்தில் பாயும் சுக்தாவா ஆற்றின்மீது கட்டப்பட்டுள்ள 150 ஆண்டுகள் பழமையான பெய்லி பாலத்தை இந்திய இராணுவம் புனரமைக்கத் தொடங்கியது?

அ. மகாராஷ்டிரா

ஆ. மத்திய பிரதேசம்

இ. கர்நாடகா

ஈ. அஸ்ஸாம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. மத்திய பிரதேசம்

  • இந்திய இராணுவமானது சுக்தாவா ஆற்றின்மீது கட்டப்பட்டுள்ள 150 ஆண்டுகள் பழமையான பெய்லி பாலத்தை புனரமைக்கத் தொடங்கியது; அப்பாளம் கடந்த ஏப்ரலில் இடிந்து விழுந்தது. இது போபால் – நாக்பூர் நெடுஞ்சாலையில் உள்ளது. மலைப்பாங்கான பகுதிகளில் பாலம் கட்டும் தொழில்நுட்பத்தை இதில் இராணுவம் பயன்படுத்தவுள்ளது. இந்தப் பாலம் 93 அடி நீளமும், 10.50 அடி அகலமும் கொண்டதாக அமைக்கப்படும். இது மிகவும் வலிமையாக இருக்கும் வகையிலும் 40 டன் எடையைக்கூட தாங்கும் வகையிலும் கட்டப்படும்.

10. ‘மருத்துவ உதவியாளர்களுக்கான மருத்துவ திறன்களுக்கான மையம்’ தொடங்கப்படவுள்ள மாநிலம்/UT எது?

அ. அஸ்ஸாம்

ஆ. சிக்கிம்

இ. மேகாலயா

ஈ. மேற்கு வங்காளம்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. மேகாலயா

  • மேகாலயா மாநிலத்தின் மேற்குக் கரோ மலையில் அமைந்துள்ள பாபாதாமில், ‘மருத்துவப் பணியினைச்சார்ந்த பணியினர்களுக்கான மருத்துவத் திறன்களை வளர்த்தெடுக்கும் மையம்’ அமைக்கப்படவுள்ளது. `152 கோடி செலவில் கட்டப்படும் இந்த மையத்தைக் கட்ட மேகாலயா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மருத்துவத் திறன் வழங்கும் இந்த ஹுனார் மையமானது விடுதி, மருந்துக்கல்லூரி, பாராமெடிக்கல் கல்லூரி மற்றும் திறன்மேம்பாட்டு மையம் உள்ளிட்ட பல வசதிகளுடன் 2500 மாணாக்கருக்கான இடவசதியைக் கொண்டிருக்கும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள் 

1. 15-09-2022: ‘பேரறிஞர்’ அண்ணாதுரை அவர்களின் 114ஆவது பிறந்தநாள்

2. ‘சிற்பி’ திட்டத்தின் சிறப்பம்சங்கள்

பள்ளிக்குழந்தைகளை நல்வழியில் செல்ல வகை செய்யும் ‘சிற்பி’ திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு தனிச் சீருடை வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசு வெளியிட்ட தகவல்: சென்னை பெருநகர காவல் துறையின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கென பிரத்யேகமாக ‘சிற்பி’ திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டமானது `4.25 கோடி மதிப்பில் செயல்படுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.

சென்னையில் நூறு பள்ளிகளிலிருந்து தலா ஐம்பது மாணவ-மாணவிகள் தேர்வுசெய்யப்பட்டு அவர்களுக்கு நல்லொழுக்கம் குறித்த பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. இந்தப் பயிற்சி வகுப்புகள் ஒவ்வொரு புதன்கிழமையும் மாணவர்களுக்கு அளிக்கப்படும். காவல்துறை அதிகாரிகளும், துறைசார் நிபுணத்துவம் பெற்றவர்களும் பயிற்சி வகுப்புகளை நடத்துவர். இதற்கென பிரத்யேகமாக நூல் வழங்கப்படும்.

சத்தான உணவு: ‘சிற்பி’ திட்டத்தின்கீழ், ஆண்டுக்கு 5,000 மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்படும். அதில், மாணவர்கள் எண்ணிக்கை 2,764. மாணவிகள் 2,236. மொத்தம் 5,000 பேர். இந்தத்திட்டத்தின் நோக்கமாக சில பண்புநலன்கள் வடித்தெடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, சமத்துவ உணர்வு, மதச்சார்பற்ற கண்ணோட்டம் மற்றும் விசாரணை மனப்பான்மையுடன் கூடிய தலைமைப் பண்புகளை வளர்த்தல், காவல்துறை எவ்வாறு சமூகத்துடன் இணைந்து செயல்படுகிறது என்பதை கவனிக்கச்செய்தல், வகுப்புவாதம், போதை பழக்கம் மற்றும் குடிப்பழக்கத்துக்கு எதிராக மாணவர்களை உருவாக்குதல் ஆகியன திட்டத்தின் நோக்கங்களாகும். இந்தத்திட்டத்தில் இணையும் மாணவர்களுக்கு தனிச் சீருடை வழங்கப்படும்.

பாடவேளையின்போது, முளைகட்டிய பயறு வகைகள், இனிப்பு கொழுக்கட்டை, பழங்கள் ஆகியன சிற்றுண்டிகளாக வழங்கப்படும். கவாத்துப் பயிற்சி, போக்குவரத்து விதிகள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு வழிமுறைகள், பேரிடர் கால முன்னெச்சரிக்கை குறித்தும் விளக்கப்படும். மேலும், மாணவ, மாணவியர்கள் சென்னையில் புகழ்பெற்ற எட்டு இடங்களுக்கு சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்படுவர்.

3. ஆகஸ்டில் மொத்த விலை பணவீக்கம் 12.41%ஆக குறைவு

மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் தொடர்ந்து 3ஆவது மாதமாகக் குறைந்து 12.41 சதவீதமாக ஆகஸ்டில் பதிவாகியுள்ளது. இதுவே கடந்த ஜூலையில் 13.93 சதவீதமாகவும், கடந்த ஆண்டு ஆகஸ்டில் 11.64 சதவீதமாகவும் பதிவானது. மேலும் தொடர்ந்து 17ஆவது மாதமாக நிகழாண்டு ஆகஸ்டில் மொத்த விலை பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் பதிவாகியுள்ளது. கடந்த மே மாதம் அதிகபட்சமாக 15.88 சதவீதத்தை மொத்த விலை பணவீக்கம் எட்டியது நினைவுகூரத்தக்கது.

உணவுப்பொருள் மீதான பணவீக்கம் கடந்த ஜூலையில் 10.77 சதவீதமாக பதிவான நிலையில், ஆகஸ்டில் 12.37 சதவீதமாக உயர்ந்தது. எரிபொருள், மின்சாரத்தை பொறுத்தமட்டில் ஜூலையில் 43.75 சதவீதமாக பதிவான பணவீக்கம், ஆகஸ்டில் 33.67 சதவீதமாக பதிவானது. உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள், எண்ணெய் வித்துகளை பொறுத்தவரை பணவீக்கம் முறையே 7.51 சதவீதமாகவும், -13.48 சதவீதமாகவும் பதிவாகியது. ரிசர்வ் வங்கி சில்லறை விலை பணவீக்கத்தின் அடிப்படையில் பணக்கொள்கையை வகுப்பது குறிப்பிடத்தக்கது.

15th September 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. Who is the head of the Committee constituted by the Finance Ministry to address issues faced by venture capital (VC) and private equity (PE)?

A. Ajay Tyagi

B. Mahalingam

C. M Damodaran

D. Subash Chandra Garg

Answer & Explanation

Answer: C. M Damodaran

  • The Finance Ministry constituted an expert committee headed by former SEBI chief M. Damodaran to examine and suggest measures to address regulatory issues to scale up investments by venture capital (VC) and private equity (PE). Other members of the committee include G Mahalingam, former whole–time member of SEBI and executive director of RBI; representatives from CBIC; Income tax Department; NCAER among others. FY23 budget proposed to set up such a committee.

2. How many drugs are included in the ‘National List of Essential Medicines (NLEM)’?

A. 84

B. 184

C. 284

D. 384

Answer & Explanation

Answer: D. 384

  • Dr Mansukh Mandaviya, Union Minister for Health and Family Welfare launched National Lists of Essential Medicines (NLEM) 2022. NLEM ensures accessibility of affordable quality medicines and helps in reduction in Out–of–Pocket Expenditure on healthcare for the citizens. 384 drugs have been included in this list with addition of 34 drugs, while 26 from the previous list have been dropped.

3. Which city is the host of ‘All–India Official Language Conference’ held in 2022?

A. Surat

B. Ahmedabad

C. Bengaluru

D. Pune

Answer & Explanation

Answer: A. Surat

  • Union Home Minister Amit Shah participated in the All–India Official Language Conference in Gujarat’s Surat. The conference is being organised on the occasion of Hindi Day, which is celebrated annually on September 14 across the country.

4. Which planet disappeared from sight on September 14, due to a phenomenon called ‘Lunar occultation’?

A. Mercury

B. Venus

C. Uranus

D. Saturn

Answer & Explanation

Answer: C. Uranus

  • The sixth planet from the sun, Uranus appeared to pass directly behind Earth’s moon, going out of sight for three and a half hours. The disappearing act is also known as the lunar occultation of Uranus. Only viewers in Europe, northern Africa and western Asia were at the exact right angle to see the phenomenon.

5. ‘Swachh Sagar’ portal, which was recently launched, is associated with which Union Ministry?

A. Union Ministry of Earth Sciences

B. Union Ministry of Housing and Urban Affairs

C. Union Ministry of Rural Development

D. Union Ministry of Home Affairs

Answer & Explanation

Answer: A. Union Ministry of Earth Sciences

  • Union Minister for Earth Sciences, Dr. Jitendra Singh unveiled a dedicated website to give further boost to the ongoing Coastal Clean–Up campaign. The awareness campaign ‘Swachh Sagar, Surakshit Sagar’ will culminate on ‘International Coastal Clean–up Day’. Dr. Singh also launched the campaign Logo–Vasuki, as a part of ongoing pan–India Coastal Clean–Up campaign.

6. The Indian Coast Guard conducted ‘SAREX–22’ National Maritime Search and Rescue Exercise in which city?

A. Chennai

B. Mumbai

C. Visakhapatnam

D. Thoothukudi

Answer & Explanation

Answer: A. Chennai

  • The Indian Coast Guard (ICG) conducted the 10th National Maritime Search and Rescue Exercise SAREX –22 in Chennai. ICG Dornier planes demonstrated ways of rescuing passengers from ships and aircraft during emergencies. The theme of this edition of the biennial exercise is “Capacity Building towards Marine Passenger Safety”.

7. The world’s longest branch canal in the world has been inaugurated in which state/UT?

A. Himachal Pradesh

B. Assam

C. Kerala

D. Gujarat

Answer & Explanation

Answer: D. Gujarat

  • Prime Minister Narendra Modi inaugurated the Narmada canal that will bring water to Kutch from the Narmada Sarovar dam in south Gujarat. The 357.18–km long Kutch Branch Canal (KBC) that stretched from the Sardar Sarovar Narmada Dam in Narmada district, to the last of the villages of Gujarat’s Mandvi taluka. Built at the cost of Rs 6493 crore, KBC has been claimed as the longest branch canal in the world.

8. National Cancer Grid (NCG) is an initiative of the Government of India through which department?

A. Department of Atomic Energy

B. Department of Science and Technology

C. Department of Health and Family Welfare

D. Department of Health and Research

Answer & Explanation

Answer: A. Department of Atomic Energy

  • The National Cancer Grid (NCG) is an initiative of the Government of India through the Department of Atomic Energy and its grant–in–aid institution, the Tata Memorial Centre. The National Cancer Grid (NCG) has recently established the Koita Centre for Digital Oncology (KCDO) to promote use of digital technologies and tools to improve cancer care across India. NCG has over 270 hospitals in its network across India, at present.

9. The Indian Army began the reconstruction of the 150–year–old Bailey Bridge over the Sukhtawa River in which state?

A. Maharashtra

B. Madhya Pradesh

C. Karnataka

D. Assam

Answer & Explanation

Answer: B. Madhya Pradesh

  • The Indian Army began the reconstruction of the 150–year–old Bailey Bridge over the Sukhtawa River, which collapsed earlier in April. It is on the Bhopal –Nagpur Highway. The Army is using the technique, which is used to build bridges in hilly areas. The bridge will be 93 feet long and 10.50 feet wide. It will be very strong and can sustain even 40 tonnes of weight.

10. ‘The Centre for Medical Skills for paramedical staff’ is set to come up in which state/UT?

A. Assam

B. Sikkim

C. Meghalaya

D. West Bengal

Answer & Explanation

Answer: C. Meghalaya

  • ‘The Centre for Medical Skills for paramedical staff’ is set to come up at Babadam in West Garo Hills of Meghalaya. The Meghalaya Cabinet approved the construction of Centre that will be built at the cost of Rs 152 crores. The Medical Skill Hunar Hub will have space for 2500 students with several facilities including hostel, Pharmaceutical College, Paramedical College and Skill Development Centre.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!