Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

16th 17th August 2020 Current Affairs in Tamil & English

16th 17th August 2020 Current Affairs in Tamil & English

16th 17th August 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

16th 17th August 2020 Current Affairs Pdf Tamil

16th 17th August 2020 Current Affairs Pdf English

 

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. Which Indian state has launched a new scheme named ‘Indira Van Mitan Yojana’?

[A] Punjab

[B] Chhattisgarh

[C] Rajasthan

[D] Sikkim

  • The Chief Minister of Chhattisgarh, Bhupesh Baghel has announced the launch of a new scheme called ‘Indira Van Mitan Yojana’. The scheme was announced on the occasion of World Tribal Day. It aims to make the forest dwellers in the state self–reliant. Under this scheme, groups of youth will be formed in 10,000 villages of the state and all forest–based economic activities will be conducted via these groups.

2. The ‘Swachh Bharat Mission (SBM) Academy’ has been inaugurated in which city?

[A] Mumbai

[B] New Delhi

[C] Lucknow

[D] Gurugram

  • Union Jal Shakti Minister Gajendra Singh Shekhawat has launched Swachh Bharat Mission (SBM) Academy in New Delhi. This has been inaugurated as part of the ongoing week–long behaviour change campaign Gandagi Mukt Bharat. This is an Interactive Voice Response (IVR) based free mobile online learning course on ODF Plus. The ODF Plus is an extension of the ODF programme under the Swachch Bharat Mission.

3. The Supreme Court ruled on the equal heirship rights of daughters, referring to which act?

[A] Hindu Marriage act, 1955

[B] Hindu Succession (Amendment) Act, 2005

[C] Hindu Heirship Act, 1955

[D] Hindu Coparcenary Act, 2005

  • The Supreme Court of India ruled that the daughters cannot be deprived of their right of equality and they will have equal coparcenary rights in joint Hindu family property even if the father died before the Hindu Succession (Amendment) Act, 2005. The daughters will have the right to inherit their ancestral property with retrospective effect with similar rights and liabilities as sons hold. Coparcener refers to a person who assumes a legal right in parental property by birth.

4. Which e–commerce platform launched a seller–driven campaign named ‘Itna Aasan Hai’?

[A] Amazon

[B] Flipkart

[C] Snapdeal

[D] Myntra

  • Leading e–commerce platform Amazon India has recently launched its new seller driven campaign ‘Itna Aasan Hai’. The campaign seeks to communicate to sellers who are not on the platform about the simple procedure to enrolling in Amazon digital platform as a seller. It aims to reach millions of MSME about joining the digital commerce ecosystem.

5. Which Indian organisation has entered the list of world’s top 100 companies on the Fortune Global 500 list?

[A] Reliance Industries

[B] HDFC

[C] State Bank of India

[D] Adani Ports

  • Mukesh Ambani led Reliance Industries has gone 10 places ahead in the Fortune Global 500 list and entered into the world’s top 100 companies. As per the recent 2020 ranking released by Fortune, Reliance has been ranked at 96th place globally. This is the highest rank ever of any Indian company on the Fortune Global 500 list. Indian Oil Corporation (IOC) slipped to 151st rank, Oil and Natural Gas Corporation (ONGC) is ranked 190th while State Bank of India (SBI) is at 221st rank.

6. Which Union Ministry launched ‘Minimum Standards of Architectural Education Regulations’?

[A] Ministry of Culture

[B] Ministry of Tourism

[C] Ministry of Education

[D] Ministry of External Affairs

  • Union Education Minister Ramesh Pokhriyal Nishank has virtually launched the Minimum Standards of Architectural Education Regulations, 2020. These regulations have been prepared by the experts of the Council of Architecture (CoA). It aims to address the major challenges lying in the field of human habitat in the country. The Minister asked the Council to use innovation in the field of Architecture.

7. The webinar titled “Cellular Jail: Letters, Memoirs & Memories” has been organised by which Ministry?

[A] Ministry of Culture

[B] Ministry of Tourism

[C] Ministry of Education

[D] Ministry of External Affairs

  • The Union Ministry of Tourism organised a themed webinar titled “Cellular Jail: Letters, Memoirs & Memories”, as a part of the “Dekho Apna Desh” webinar series. The webinar has been organised ahead of the 74th Independence Day celebrations. The Cellular Jail is in Andaman and Nicobar Islands where Indian Nationalist who were part of freedom struggle were exiled and imprisoned. The Webinar showcased the journey of India’s independence struggle through the galleries and cells of the Cellular jail.

8. When is International Youth Day observed every year?

[A] August 12

[B] August 13

[C] August 14

[D] August 15

  • International Youth Day is celebrated every year on 12th August. The theme of this year’s International Youth Day is, “Youth Engagement for Global Action”. In 1998, a resolution to observe August 12 every year as International Youth Day was passed in the World Conference of Ministers Responsible for Youth, which was hosted by the Government of Portugal in cooperation with the United Nations.

9. The Medal for Excellence in Investigation that is awarded to Police Personnel is constituted by which ministry?

[A] Ministry of Defence

[B] Ministry of Home Affairs

[C] Ministry of External Affairs

[D] Ministry of Parliamentary Affairs

  • The “Union Home Minister’s Medal for Excellence in Investigation”, constituted by the Home Ministry, for the year 2020 has been awarded to 121 Police personnel.
  • This medal was constituted in the year 2018 by the Union Government with the aim to promote professional standards of investigation of crime. It also stands as a Reward of Excellence in Investigation by investigating officers.

10. The Defence Ministry has proposed to procure 106 Basic Trainer Aircrafts for Indian Air Force from which aircraft manufacturer?

[A] Dassault Aviation

[B] Boeing

[C] HAL

[D] Rafael

  • The procurement of 106 Basic Trainer Aircraft from Hindustan Aeronautics Limited (HAL) for Indian Air Force has been approved by the Ministry of Defence. The procurement of 106 HTT–40 aircraft from HAL was approved by Defence Acquisition Council (DAC), the highest decision–making authority of the Defence Ministry. A total of Defence Acquisition proposals worth over Rs.8500 crore was cleared by the DAC.

நடப்பு நிகழ்வுகள்

1. ‘இந்திரா வான் மிதன் யோஜனா’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசு எது?

அ. பஞ்சாப்

ஆ. சத்தீஸ்கர்

இ. இராஜஸ்தான்

ஈ. சிக்கிம்

  • சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல், ‘இந்திரா வான் மிதன் யோஜனா’ என்ற புதியதொரு திட்டத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளார். உலக பழங்குடியினர் நாளை முன்னிட்டு இந்தத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது, மாநிலத்தில் உள்ள பழங்குடிகளை தன்னம்பிக்கை கொள்ளவைப்பதை நோக்கமாகக்கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ், மாநிலத்தின் 10,000 சிற்றூர்களில், இளையோர் குழுக்கள் உருவாக்கப்பட்டு, அக்குழுக்கள் வழியாக அனைத்து வன அடிப்படையிலான பொருளாதார நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

2. ‘தூய்மை இந்தியா இயக்க அகாதமி’ திறக்கப்பட்ட நகரம் எது?

அ. மும்பை

ஆ. புது தில்லி

இ. லக்னோ

ஈ. குருகிராம்

  • மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், ‘தூய்மை இந்தியா இயக்க அகாதமி’யை தொடக்கி வைத்தார். ‘காந்தகி முக்த் பாரத்’ என்ற ஒருவாரகால இயக்கத்தின் ஒருபகுதியாக இந்நிகழ்வு நடைபெற்றது. கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணுக்கு அழைப்பு விடுத்து இந்த SBM அகாதமியை அமைச்சர் தொடக்கிவைத்தார். இது, ODF பிளஸில், IVR அடிப்படையிலான ஓர் இலவச அலைபேசி இணைய வழி கற்றல் பாடமாகும். ODF பிளஸ் என்பது தூய்மை இந்தியா இயக்கத்தின்கீழ் உள்ள ODF திட்டத்தின் ஓர் துணைத்திட்டம் ஆகும்.

3.எச்சட்டத்தைக் குறிப்பிட்டு, மகள்களுக்கும் சொத்தில் சமவுரிமை உண்டென இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது?

அ. ஹிந்து திருமணச் சட்டம், 1955

ஆ. ஹிந்து வாரிசுரிமைச் (திருத்தம்) சட்டம், 2005

இ. ஹிந்து வாரிசுச் சட்டம், 1955

ஈ. ஹிந்து பங்குரிமை அமைப்புச் சொத்துச் சட்டம், 2005

  • மகள்களின் சமத்துவ உரிமையை பறிக்க முடியாது என்றும், ஹிந்து வாரிசுரிமைச் (திருத்தம்) சட்டம், 2005’க்கு முன்னர் தந்தை இறந்திருப்பினும், அவர்களுக்கு ஹிந்து கூட்டுக்குடும்பச்சொத்தில் சமமான உரிமைகள் உண்டு என்றும் இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
  • மகள்களுக்கு, மகன்கள் கொண்டுள்ள உரிமைகள் மற்றும் பொறுப்புகளுடன் அவர்களின் மூதாதையர் சொத்துக்கள் மீதான உரிமையும் உண்டு என இந்தத் தீர்ப்பு விளக்குகிறது. ‘பங்காளி’ என்பது பிறப்பால் பெற்றோர் சொத்தில் சட்டப்பூர்வ உரிமையைப்பெறும் ஒரு நபரைக் குறிக்கிறது.

4. ‘இத்னா ஆசான் ஹை’ என்ற பெயரில் விற்பனையாளரால் நடத்தப்படும் பரப்புரையை தொடங்கியுள்ள மின்னணு-வணிகத்தளம் எது?

அ. அமேசான்

ஆ. பிளிப்கார்ட்

இ. ஸ்னாப்டீல்

ஈ. மிந்த்ரா

  • முன்னணி மின்னணு-வணிகத் தளமான அமேசான் இந்தியா, அண்மையில், விற்பனையாளரால் நடத்தப்படும் தனது புதிய ‘இத்னா ஆசான் ஹை’ என்ற பரப்புரை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அமேசான் டிஜிட்டல் தளத்தில் ஒரு விற்பனையாளராக சேருவதற்கான எளிய நடைமுறை குறித்து அந்தத் தளத்தில் இல்லாத விற்பனையாளர்களுடன் தொடர்புகொள்ள இந்தப் பரப்புரை முற்படுகிறது. டிஜிட்டல் வர்த்தகச்சூழல் அமைப்பில் இணைவது குறித்து மில்லியன் கணக்கான குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை சென்றடைவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

5.பார்ச்சூன் குளோபல் 500 பட்டியலில், உலகின் சிறந்த நூறு நிறுவனங்களுள் ஒன்றாக தெரிவான இந்திய அமைப்பு எது?

அ. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ஆ. HDFC

இ. பாரத வங்கி

ஈ. அதானி துறைமுகங்கள்

  • முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பார்ச்சூன் குளோபல் 500 பட்டியலில் 10 இடங்கள் முன்னேறி உலகின் சிறந்த 100 நிறுவனங்களுள் ஒன்றாக தெரிவாகியுள்ளது. அண்மையில், பார்ச்சூன் வெளியிட்ட நடப்பாண்டு (2020) தரவரிசைப்படி, ரிலையன்ஸ், உலகளவில் 96ஆவது இடத்தில் உள்ளது. பார்ச்சூன் குளோபல் 500 பட்டியலில் எந்தவொரு இந்திய நிறுவனமும் இதுவரை இந்த அளவிற்கான மிகவுயர்ந்த தரநிலைக்குச் சென்றதில்லை.
  • இந்திய எண்ணெய் நிறுவனம் (IOC) 151ஆவது இடத்திலும், எண்ணெய் & இயற்கை எரிவாயுக் கழகம் (ONGC) 190ஆவது இடத்திலும், பாரத வங்கி (SBI) 221ஆவது இடத்திலும் உள்ளது.

6. ‘கட்டடக்கலை கல்வி விதிமுறைகளின் குறைந்தபட்ச தரநிலைகளை’ வெளியிட்ட மத்திய அமைச்சகம் எது?

அ. கலாச்சார அமைச்சகம்

ஆ. சுற்றுலா அமைச்சகம்

இ. கல்வி அமைச்சகம்

ஈ. வெளியுறவு அமைச்சகம்

  • மத்திய கல்வி அமைச்சகத்தால் செய்யப்படும் பொருத்தமான கல்விச் சீர்திருத்தங்களின் தொடர்ச்சியாக, கல்வியமைச்சர் ரமேஷ் போக்ரியால் ‘நிஷாங்க்’, “கட்டடக்கலை கல்வி விதிமுறைகளின் குறைந்தபட்ச தரநிலைகள், 2020”ஐ வெளியிட்டார். இந்த விதிமுறைகள் கட்டடக்கலை கவுன்சிலின் நிபுணர்களால் தயாரிக்கப்பட்டுள்ளன. நாட்டில், மனித வாழ்விடத் துறையிலுள்ள சவால்களை எதிர்கொள்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. கட்டடக்கலைத் துறையில் புதுமைகளைப் பயன்படுத்துமாறு அமைச்சர் அந்தச் சபையை அப்போது கேட்டுக்கொண்டார்.

7. “செல்லுலார் சிறை: கடிதங்கள், வரலாற்றுக் குறிப்புகள் மற்றும் நினைவுகள்” என்ற தலைப்பில் ஓர் இணையவழிக் கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்துள்ள மத்திய அமைச்சகம் எது?

அ. கலாச்சார அமைச்சகம்

ஆ. சுற்றுலா அமைச்சகம்

இ. கல்வி அமைச்சகம்

ஈ. வெளியுறவு அமைச்சகம்

  • இந்தியா தனது 74ஆவது விடுதலை நாள் விழாவைக் கொண்டாடுவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் சூழலில் மத்திய சுற்றுலா அமைச்சகத்தின், ‘நமது தேசத்தைப்பாருங்கள்’ என்ற தொடர் இணையவழிக் கருத்தரங்க நிகழ்ச்சியின்கீழ், “செல்லுலார் சிறை: கடிதங்கள், வரலாற்றுக் குறிப்புகள், நினைவுகள்” என்ற தலைப்பிலான இணையவழிக் கருத்தரங்கம் நடைபெற்றது.
  • செல்லுலார் சிறையின் சிறு சிறு அறைகள் மற்றும் காட்சிக்கூடங்கள் வழியாக இந்திய விடுதலைப் போராட்டத்தின் பயணத்தைக் காட்சிப்படுத்தியது. புகழ்பெற்ற அரசியல் கைதிகளின் வாழ்க்கையையும், அவர்கள் குறித்த கதைகளையும் இது எடுத்துக்காட்டியது. அந்தமான் – நிகோபார் தீவுகளின் போர்ட் பிளேயரில் உள்ள செல்லுலார் சிறையானது ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற வேண்டும் என்று போரிட்ட இந்தியர்களை நாடு கடத்தி மிகவும் மனிதாபிமானமற்ற கொடூரமான சூழலில் சிறைப்படுத்தி வைக்கக்கூடிய ஒரு சிறையாக இருந்தது.

8. பன்னாட்டு இளையோர் நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ. ஆகஸ்ட் 12

ஆ. ஆகஸ்ட் 13

இ. ஆகஸ்ட் 14

ஈ. ஆகஸ்ட் 15

  • ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட்.12 அன்று பன்னாட்டு இளையோர் நாள் கொண்டாடப்படுகிறது. “Youth Engagement for Global Action” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்த நாளுக்கான கருப்பொருள் ஆகும். 1998ஆம் ஆண்டில், ஐநா அவையின் ஒத்துழைப்புடன் போர்ச்சுகல் அரசாங்கத்தால் நடத்தப்பட்ட இளையோருக்கு பொறுப்புடைய அமைச்சர்களின் உலக மாநாட்டில், ஒவ்வோர் ஆண்டும் ஆக.12ஆம் தேதியை பன்னாட்டு இளையோர் நாளாகக் கொண்டாடுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

9.காவல்துறைசார் பணியாளர்களுக்கு வழங்கப்படும், “விசாரணையில் சிறந்து விளங்குவோருக்கான பதக்கத்தை” வழங்கும் அமைச்சகம் எது?

அ. பாதுகாப்பு அமைச்சகம்

ஆ. உள்துறை அமைச்சகம்

இ. வெளியுறவு அமைச்சகம்

ஈ. நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம்

  • 2020ஆம் ஆண்டுக்கான, “சிறந்த புலனாய்வுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கம்”, அகில இந்திய அளவில் 121 காவல்துறை அலுவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வில் சிறந்த செயல்திறனை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு, கடந்த 2018ஆம் ஆண்டில் இந்தப் பதக்கம் நிறுவப்பட்டது. புலனாய்வில் சிறந்து விளங்கும் அதிகாரிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்காக இது வழங்கப்படுகிறது.
  • இதில், தமிழ்நாட்டைச் சார்ந்த காவல்துறை ஆய்வாளர்கள், A பொன்னம்மாள், G. ஜான்சி இராணி, M கவிதா, C சந்திரகலா, A கலா மற்றும் காவல்துறை சார்-ஆய்வாளர் வினோத் குமார் ஆகிய ஆறு பேர் விருது பெறுகிறார்கள்.

10.எந்த வானூர்தி தயாரிப்பாளரிடமிருந்து, இந்திய வான்படைக்கு, நூற்றியாறு அடிப்படைப் பயிற்சி வானூர்திகளை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது?

அ. டஸ்ஸால்ட் ஏவியேஷன்

ஆ. போயிங்

இ. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிட்

ஈ. ரபேல்

  • இந்திய விமானப்படைக்காக ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெடிலிருந்து (HAL) 106 அடிப்படைப் பயிற்சி வானூர்திகளை வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. HAL’லிலிருந்து 106 HTT-40 வானூர்திகளை வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சின் மிகவுயர்ந்த முடிவெடுக்கும் ஆணையமான பாதுகாப்புக் கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்தது. `8,722.38 கோடி மதிப்பிலான, பல்வேறு உபகரணங்களை வாங்குவதற்கான கருத்துருக்களுக்கு பாதுகாப்புக் கொள்முதல் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்

  • 1998ஆம் ஆண்டில், “விசாரணை கமிஷன்” என்ற புதினத்திற்காக, தமிழுக்கான சாகித்திய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளர் சா. காந்தசாமி (80) அண்மையில் காலமானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!