Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

16th & 17th February 2020 Current Affairs in Tamil & English

16th & 17th February 2020 Current Affairs in Tamil & English

16th & 17th February 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

16th & 17th February 2020 Current Affairs in Tamil

16th & 17th February 2020 Current Affairs in English

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1.தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகம் அமைக்கப்படவுள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. மகாராஷ்டிரா

இ. குஜராத்

ஈ. கேரளா

  • குஜராத் மாநிலத்தில் உள்ள லோத்தலில், உலகத்தரம்வாய்ந்த தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அண்மையில் இந்தியப் பிரதமர் மோடியும் போர்ச்சுகல் அதிபர் மார்செலோ ரெபெலோ டிசெளசா ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த வளாகம், இந்தியாவின் பாரம்பரிய கலைப்பொருட்களைக் காட்சிப்படுத்துவதோடு நாட்டின் வளமான பாரம்பரியத்தைப்பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும். கடல்சார் போக்குவரத்து மற்றும் துறைமுகங்கள் உட்பட பல்வேறு துறைகளில், இரு நாடுகளும் 14 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

2.இந்தியாவில், ஆய்வுக்கப்பல்களை உருவாக்கி வழங்கும் முதல் மற்றும் ஒரே தனியார் நிறுவனம் எது?

அ. திதாகர் வேகன்ஸ் லிட்

ஆ. கார்டன் ரீச் கப்பல்கட்டுநர்கள் & பொறியாளர்கள்

இ. மசகன் கப்பல்கட்டும் நிறுவனம்

ஈ. கோவா கப்பல்கட்டும் நிறுவனம்

  • இந்திய தனியார் நிறுவனமான திதாகர் வேகன்ஸ் லிட், அண்மையில், இரண்டாவது கடலோர ஆய்வுக்கப்பலான ‘சாகர் அன்வேஷிகா’வை சென்னையைச் சேர்ந்த தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்திற்காக தயாரித்து வழங்கியது. இந்நிறுவனம் கடந்த 2017ஆம் ஆண்டில் இக்கப்பலுக்கான பணிப்பைப்பெற்றது. ‘சாகர் தாரா’ என்ற முதல் ஆய்வுக்கப்பல், 2019 ஆகஸ்டில் அந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இருகப்பல்களையும் இயக்குவதன்மூலம், திதாகர் வேகன்ஸ் லிட்., ஆய்வுக்கப்பல்களை உருவாக்கி வழங்கும் நாட்டின் முதல் மற்றும் ஒரே தனியார் நிறுவனமாக மாறியுள்ளது.

3. 56ஆவது முனிச் பாதுகாப்பு மாநாடு-2020இன் கருப்பொருள் என்ன?

அ. Westlessness

ஆ. Sustainable Development Goals

இ. We Can Work Together

ஈ. Security for All

  • முனிச் பாதுகாப்பு மாநாட்டின் 56ஆவது பதிப்பு, சமீபத்தில், ஜெர்மனியின் தென்னகரமான முனிச்சில் தொடங்கியது. “Westlessness” என்பது நடப்பாண்டு (2020) மாநாட்டின் கருப்பொருளாகும். இந்த மாநாட்டில், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக வெளியுறவு அமைச்சர் S ஜெய்சங்கர் பங்கேற்றார். தற்போதைய பாதுகாப்பு நெருக்கடிகள் மற்றும் சவால்களைப்பற்றி விவாதிப்பதற்காக 35 நாடுகளின் தலைவர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் உட்பட ஐநூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச தலைவர்கள் முனிச் நகரத்தில் கூடியுள்ளனர்.

4.இந்தியாவின் மூன்றாவது தனியார் பயணிகள் இரயிலின் பெயர் என்ன?

அ. தேஜஸ் எக்ஸ்பிரஸ்

ஆ. காசி மகாகல் எக்ஸ்பிரஸ்

இ. காசி இந்தூர் எக்ஸ்பிரஸ்

ஈ. காசி விஸ்வநாத் எக்ஸ்பிரஸ்

  • இந்திய இரயில்வேயின் துணை நிறுவனமான IRCTC தனது மூன்றாவது பயணிகள் இரயிலான காசி – மகாகல் எக்ஸ்பிரஸை வாரணாசி – இந்தூர் வழித்தடத்தில் தொடங்கவுள்ளது. இது, இந்தூருக்கு அருகிலுள்ள ஓம்கரேஷ்வர் கோவில், உஜ்ஜைனின் மகாகாலேஷ்வர் கோவில் மற்றும் வாரணாசியின் காசி விஸ்வநாதர் கோவில் ஆகிய மூன்று கோவில்களை இணைக்கும்.
  • லக்னோ-தில்லி மற்றும் அகமதாபாத்-மும்பை வழித்தடங்களில் இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்குப்பிறகு, இது, மத்தியபிரதேசம் மற்றும் உத்தரபிரதேச ஆகிய மாநிலங்களில் அமைந்துள்ள மதஞ்சார் தலங்களை இணைப்பதற்கெனவே இயக்கப்படும் மூன்றாவது தனியார் இரயில் ஆகும்.

5.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘கம்பாலா’ என்பது எம்மாநிலத்தின் பாரம்பரிய விளையாட்டாகும்?

அ. தமிழ்நாடு

ஆ. கர்நாடகா

இ. குஜராத்

ஈ. கேரளா

  • கம்பாலா என்பது கர்நாடகாவின் பாரம்பரிய விளையாட்டாகும். இதில், மாநிலத்தின் கடலோர மாவட்ட மக்கள், எருமைப்பந்தயத்தை நடத்துகின்றனர். தட்சிண கன்னட மாவட்டத்தைச்சேர்ந்த உள்ளூர் போட்டியாளர்களில் ஒருவரான சீனிவாஸ் கெளடா 142.5 மீ கம்பாலாவை வெறும் 13.62 விநாடிகளில் கடந்ததையடுத்து இது, அண்மையச் செய்தியில் இடம்பெற்றது. இந்திய விளையாட்டு ஆணையம், அந்த வீரருக்கு பொருத்தமான பயிற்சியை அளிக்கவுள்ளதாக அண்மையில் அறிவித்தது.

6.யாஷ் பாரதி விருது என்பது எந்த இந்திய மாநிலம் / யூனியன் பிரதேசத்தின் மிகவுயர்ந்த விருதாகும்?

அ. மத்தியபிரதேசம்

ஆ. ஒடிசா

இ. உத்தரபிரதேசம்

ஈ. பஞ்சாப்

  • யாஷ் பாரதி விருது என்பது கடந்த 1994ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட உத்தரபிரதேச மாநில அரசின் மிக உயரிய விருதாகும். யாஷ் பாரதி விருதுக்கு பதிலாக இனி மாநில கலாசார விருது வழங்கப்படும் என அம்மாநிலம் அண்மையில் அறிவித்தது.
  • இசை, நவீன மற்றும் பாரம்பரிய கலை ராம்லீலா, நாட்டுப்புற பேச்சுவழக்குகள், ஏரி-நடனம் மற்றும் சிற்பம் உள்ளிட்ட பல துறைகளில், மாநிலத்திற்கு பங்களிக்கும் சிறந்த ஆளுமைகளுக்கு, ‘மாநில கலாசார விருது’ வழங்கப்படவுள்ளது. ரொக்கப்பரிசும் இந்த விருதில் சேர்க்கப்படவுள்ளது.

7.இந்தியாவின் முதல் நகரங்களுக்கிடையேயான மின்னாற்றலில் இயங்கும் பேருந்து சேவையை தொடங்கியுள்ள மாநிலம் எது?

அ. மத்தியபிரதேசம்

ஆ. ஒடிசா

இ. மகாராஷ்டிரா

ஈ. பஞ்சாப்

  • இந்தியாவின் முதல் நகரங்களுக்கிடையேயான மின்னாற்றலில் இயங்கும் பேருந்து சேவையானது மகாராஷ்டிரா மாநிலத்தில், மும்பை மற்றும் புனே இடையே மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியால் சமீபத்தில் தொடங்கிவைக்கப்பட்டது.
  • 43 இருக்கைகள்கொண்ட இந்த சொகுசுப்பேருந்து தனியார் நிறுவனமொன்றால் தயாரிக்கப்பட்டு, மகாராஷ்டிராவைச் சேர்ந்த மற்றொரு போக்குவரத்து நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. இப்பேருந்து, இரண்டு நகரங்களுக்கிடையில் தினமும் இரண்டு முறை இயக்கப்படுகிறது.

8. ‘இராணுவ இருப்பு’ அறிக்கையின்படி, எந்த நாட்டின் பாதுகாப்பு நவீனமயமாக்கல், அமெரிக்காவின் அதீத இராணுவ செலவினங்களுக்கு வழிவகுத்தது?

அ. இந்தியா

ஆ. இரஷ்யா

இ. சீனா

ஈ. ஜப்பான்

  • லண்டனைச்சார்ந்த ஆராய்ச்சி நிறுவனமான உத்திசார் ஆய்வுகளுக்கான பன்னாட்டு நிறுவனம் (IISS) அண்மையில் தனது வருடாந்திர, “இராணுவ இருப்பு” அறிக்கையை வெளியிட்டது. பாதுகாப்புக்கான உலகின் மொத்த செலவினம் கடந்த 2019ஆம் ஆண்டில் நான்கு சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் இது, கடந்த பத்து ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியாகும் என்றும் அது கூறியுள்ளது.
  • இந்த அதிகரிப்புக்கு காரணமாக ஐக்கிய அமெரிக்க நாடுகளும் சீனாவும் உள்ளன. சீனாவின் பாதுகாப்பு நவீனமயமாக்கல், அமெரிக்காவின் பாதுகாப்பு செலவினங்களை அதிகரிக்க வழிவகுத்தது என்பதையும் இது வெளிப்படுத்தியுள்ளது. சீனாவும் அமெரிக்காவும் பாதுகாப்புக்கான தங்கள் செலவினங்களை 6.6% அதிகரித்துள்ளன என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9.உதயனி மானே, எந்த விளையாட்டைச் சார்ந்த இந்திய வீரராவார்?

அ. டென்னிஸ்

ஆ. மல்யுத்தம்

இ. கோல்ப்

ஈ. பூப்பந்து

  • புனேவைச் சேர்ந்த கோல்ப் வீரரான உதயனி மானே, அண்மையில், டாடா ஸ்டீல் PGTI பிளேயர்ஸ் சாம்பியன்ஷிப்பை வென்றார். அவர் தனது சக வீரரான குருகிராமின் வீர் அலாவத்தை தோற்கடித்தார். டாடா ஸ்டீல் டூர் சாம்பியன்ஷிப்-2019 மற்றும் கோல்கொண்டா மாஸ்டர்ஸ்-2020 உள்ளிட்ட கடைசி இரு PGTI போட்டிகளையும் உதயனி மானே வென்றுள்ளார். டாடா ஸ்டீல் PGTIஇன் தொடர்ச்சியான மூன்று போட்டிகளை வென்ற இரண்டாவது வீரர் என்ற பெருமையை உதயனி மானே பெற்றுள்ளார்.

10. COVID-19 வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக, அண்மையில், மீட்பு-பிளாஸ்மாவை (recovery-plasma) உருவாக்கிய நாடு எது?

அ. இந்தியா

ஆ. சீனா

இ. தாய்லாந்து

ஈ. ஜப்பான்

  • சீனாவின் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனமான, ‘சீன தேசிய உயிரி தொழில்நுட்ப குழுமம்’ COVID-19 (நோவல் கொரோனா வைரஸ்) நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்ப -தற்காக நோயாற்றும் பிளாஸ்மாவை உருவாக்கியுள்ளது.
  • இந்த நிறுவனம், சீனத்தின் வுஹான் நகரத்தைச் சார்ந்த நோயிலிருந்து குணமடைந்த சில நோயாளிக -ளிடமிருந்து அப்பிளாஸ்மாவை சேகரித்து, குணப்படுத்தும் பிளாஸ்மா மற்றும் நோயெதிர்ப்பு கோளப் புரதம் உள்ளிட்ட சிகிச்சை மருந்துகளை உருவாக்கியுள்ளது. மிகவும் அபாயகரமான கட்டத்திலுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு அவை பயன்படுத்தப்படுகின்றன. அது, நோயாளிகளின் உடல் நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் காட்டிவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!