Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

16th & 17th February 2021 Tnpsc Current Affairs in Tamil & English

16th & 17th February 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 16th & 17th February 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

16th & 17th February 2021 Tnpsc Current Affairs in Tamil

1. ‘ஸ்வவலம்பன் சாஷக்த் – பிரம்மாண்ட பரப்புரை’யை இந்திய பெண்கள் தொழில்முனைவோர் கூட்டமைப்பும் கீழ்க்காணும் எந்த நிறுவனமும் இணைந்து தொடங்கியுள்ளன?

அ) DRDO

ஆ) SIDBI

இ) ECGC

ஈ) LIC

  • இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கியானது (SIDBI), இந்திய மகளிர் தொழில்முனைவோர் கூட்டமைப்புடன் இணைந்து, ‘ஸ்வவலம்பன் சாஷக்த் – பிரம்மாண்ட பரப்புரை’யைத் தொடங்கியுள்ளது.
  • இது ‘Standup India’ திட்டத்தை மேம்படுத்துவதற்கான ஒரு வலையரங்க தொடர் நிகழ்வாகும். ஒரு புதிய நிறுவனத்தை அமைப்பதற்காக, ஒரு கிளைக்கு குறைந்தது 1 SC அல்லது ST மற்றும் ஒரு பெண் கடனாளிக்கு 10 இலட்சம் முதல் 1 கோடி வரை கடன் வழங்கப்படுகிறது.

2. பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு உரங்கள் நிறுவனம் அமைந்துள்ள இடம் எது?

அ) ஒடிசா

ஆ) அஸ்ஸாம்

இ) மேற்கு வங்கம்

ஈ) ஜார்க்கண்ட்

  • யூரியா உற்பத்திப் பிரிவுகளின் செயல்பாடுகளைத் தொடர்ந்து மேற்கொள்வதற்காக அஸ்ஸாம் நம்ரூப் பகுதியில் உள்ள, பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு உரங்கள் நிறுவனத்துக்கு `100 கோடி மானிய உதவி அளிக்கும், உரத்துறையின் திட்டத்துக்கு பொருளாதார விவகாரங்களுக் -கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது. கம்பெனிகள் சட்டப்படி, மத்திய அரசின் உரத்துறையின்கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமாக பிரம்மபுத்ரா பள்ளத்தாக்கு உரங்கள் உள்ளது.

3. கடற்படை மின்னணு அமைப்புகளின் நீரடிப் பிரிவில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக, இந்திய கடற்படை, பின்வரும் எந்த நிறுவனத் -துடன் கூட்டிணைந்துள்ளது?

அ) IIT தில்லி

ஆ) NIT திருச்சி

இ) IIT கெளகாத்தி

ஈ) IISc பெங்களூரு

  • இந்திய கடற்படை மற்றும் IIT தில்லி சமீபத்தில் கடற்படை மின்னணு அமைப்புகளின் நீரடிப்பிரிவு தொடர்பான ஆராய்ச்சிகிக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன. இது தொடர்புடைய முதன்மை தொழில்நுட்பங்களை, 1970’களிலிருந்து IIT தில்லியிலுள்ள மின்னணு பயன்பாட்டு ஆராய்ச்சி மையம் (CARE) உருவாக்கி வருகிறது.

4. எந்த இந்திய வங்கி தனது ‘இ-டீலர்’ திட்டத்தின்கீழ், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுடன் ஒப்பந்தம் செய்துள்ளது?

அ) இந்தியன் வங்கி

ஆ) பஞ்சாப் தேசிய வங்கி

இ) பரோடா வங்கி

ஈ) யூனியன் இந்தியா வங்கி

  • எண்ணெய் நிறுவனத்தின் விநியோகஸ்தர்களுக்கு `2 கோடி வரை வழங்க, பஞ்சாப் தேசிய வங்கி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்கீழ், குறைந்த வட்டி விகிதங்க -ள், குறைந்த அளவு மற்றும் குறைந்தபட்ச அல்லது சுழிய இணை தேவைகளுடன் வங்கிக்கடன் வழங்கப்படும். இந்த நடவடிக்கைகள் PNB இ-டீலர் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படவுள்ளன.

5. “விண்வெளியில் மனிதர்கள் கொள்கை-2021” என்ற வரைவை வெளியிட்ட நாடு எது?

அ) ஜப்பான்

ஆ) இந்தியா

இ) சீனா

ஈ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

  • இந்திய விண்வெளி ஆய்வு மையமானது (ISRO) சமீபத்தில், “விண்வெ -ளியில் மனிதர்கள் கொள்கை – 2021” என்ற வரைவை வெளியிட்டது. இந்தக் கொள்கை, அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும்.
  • இந்தக் கொள்கை இந்தியாவின் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்திற்கான தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கு முயல்கிறது. இப்பணிக்குத் தேவையான தொழினுட்பங்களைப் ஆய்வதற்காக ISRO இரண்டு உறுப்பினர்களைக்கொண்ட குழுவையும் அமைத்துள்ளது.

6. பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு & ஓய்வூதியங்கள் அமைச்சகத்தின்படி, குடும்ப ஓய்வூதியத்திற்கான புதிய உச்சவரம்பு என்ன?

அ) 50,000

ஆ) 75,000

இ) 1,00,000

ஈ) 1,25,000

  • குடும்ப ஓய்வூதியத்திற்கான உச்சவரம்பு மாதத்திற்கு `45,000’இல் இருந்து `1,25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று பணியாளர், பொது மக்கள் குறைகள், ஓய்வூதிய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்துள்ளார்.
  • இந்த உச்சவரம்பு, ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் ஊதிய உயர்வுக்கு ஏற்ப அமைந்துள்ளது. உயிரிழந்த பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் வாழ்க்கையை இந்நடவடிக்கை எளிதாக்குவதோடு, போதுமான நிதி பாதுகாப்பை அவர்களுக்கு வழங்கும்.

7. தொழிற்துறை உற்பத்திக்குறியீட்டை அறிவிக்கிற நடுவண் அமை -ச்சகம் எது?

அ) புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்

ஆ) நிதி அமைச்சகம்

இ) பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம்

ஈ) உள்துறை அமைச்சகம்

  • மத்திய புள்ளியியல் & திட்ட அமலாக்க அமைச்சகமானது தொழிற்துறை உற்பத்தி குறியீட்டை வெளியிடுகிறது. இத்தரவுகளின் சமீப பதிப்பின்படி, 2020 டிசம்பரில் இதன் சதவீதம் 1 சதவீத அளவுக்கு வளர்ந்தது. காய்கறி விலை சரிவு காரணமாக, நுகர்வோர் விலைக் குறியீட்டு பணவீக்கம், 2021 ஜனவரியில் 4.06 சதவீதமாகக் குறைந்து காணப்பட்டது.

8. உலக அளவில் மிக அதிகமாக சாலை விபத்து இறப்புகளை பதிவு செய்கிற நாடு எது?

அ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஆ) இந்தோனேசியா

இ) இந்தியா

ஈ) பாகிஸ்தான்

  • உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்துக்களை இந்தியா பதிவுசெய்கின்றது. உலக வங்கியானது அண்மையில், “Traffic Crash Injuries and Disabilities: The Burden on Indian Society” என்ற தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்டது. மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி இவ்வறிக்கையை வெளியிட்டார். இந்தியாவில் 75%’க்கும் மேற்பட்ட வறியநிலைக் குடும்பங்கள் சாலைப்போக்குவரத்து விபத்துக்குப்பிறகு இன்னும் வறியநிலைக்குச் செல்கின்றன.

9. சித்தெளரா ஏரி அமைந்துள்ள மாநிலம் எது?

அ) ஒடிஸா

ஆ) ஆந்திர பிரதேசம்

இ) உத்தர பிரதேசம்

ஈ) மத்திய பிரதேசம்

  • சித்தெளரா ஏரி, உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரியிலிருந்து தேரி என்ற ஆறு உருவாகிறது. ஆகஸ்ட் – அக்டோபர் மாதங்களில் பல புலம்பெயர்ந்த பறவைகள் இந்த ஏரிக்கு வருகை தருகின்றன. இது ஒரு முக்கியமான ஹிந்து புனிதத்தலமாகும். பிரதம மந்திரி நரேந்திர மோடி, சித்தெளரா ஏரியின் வளர்ச்சிப்பணிகளை சமீபத்தில் தொடக்கினார்.

10. உலக வானொலி நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ) பிப்ரவரி 12

ஆ) பிப்ரவரி 13

இ) பிப்ரவரி 14

ஈ) பிப்ரவரி 15

  • உலக வானொலி நாளானது ஒவ்வோர் ஆண்டும், பிப்.13 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் முதன்முதலில், 2011’இல் UNESCO’இன் உறுப்புநாடுகளால் அறிவிக்கப்பட்டது. ஐநா பொது அவை 2012’இல் இந்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டது.
  • நடப்பாண்டு (2021) வரும் உலக வானொலி நாள் பரிணாமம், புதுமை & இணைப்பு ஆகிய 3 முக்கிய துணை கருப்பொருள்களை அடிப்படை -யாகக் கொண்டது. இந்நாளின்போது, “New World; New Radio” என்ற காணொலியை UNESCO வெளியிட்டது.

தமிழக நடப்பு நிகழ்வுகள்

  • சேலம் மாவட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்கள் இணைய விற்பனைக்கான ‘சேலம் மதி’ என்ற புதிய திறன்பேசி செயலியை முதலமைச்சர் க பழனிசாமி தொடங்கிவைத்தார்.
  • சென்னை IIT’இன் ‘சாரங்’ கலைவிழா, வரலாற்றில் முதல்முறையாக இணையவழியில் மட்டும் நடத்தப்படுகிறது. தேசிய உயர்கல்வி தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, சென்னை IIT’இன் மாணவர்கள் சார்பில், ‘சாரங்’ என்ற கலை மற்றும் கலாசார விழா நடத்தப்படுகிறது.
  • பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கப்பட்ட திட்டங்கள்:
  1. சென்னை மெட்ரோ இரயில் முதற்கட்ட விரிவாக்கத் திட்டம்
  2. சென்னை கடற்கரை – அத்திப்பட்டு இடையேயான நான்காவது இரயில்தடம்.
  3. விழுப்புரம் – கடலூர் – மயிலாடுதுறை – தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை – திருவாரூர் இடையே மின்மயமாக்கப்பட்ட ஒருவழி இரயில்தடம்.
  4. கல்லணைக் கால்வாய் விரிவாக்கம், புனரமைப்பு மற்றும் நவீ -னப்படுத்தும் திட்டம், சென்னை IIT டிஸ்கவரி வளாகத்திற்கா -ன பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
  5. மேற்கண்ட புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், அர்ஜுன் பீரங்கியை (Mk-1A) பிரதம மந்திரி இராணுவத்திடம் ஒப்படைத்தார்.
  • தமிழ்நாடு அரசின் புதிய தொழிற்கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி க பழனிசாமி வெளியிட்டார். புதிய தொழில் திட்டங்களுக்கான 28 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. இந்தப் புதிய தொழில் கொள்கையில் `10 லட்சம் கோடி முதலீட்டை ஈர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த முதலீடுகள்மூலம் 10 லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கப்பெறும் என தொழில் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. ‘Swavalamban Sashakt – Mega Campaign’ has been launched by Confederation of Women Entrepreneurs of India (COWE) and ………….?

A) DRDO

B) SIDBI

C) ECGC

D) LIC

  • Small Industries Development Bank of India (SIDBI), in partnership with the Confederation of Women Entrepreneurs of India (COWE), has launched the ‘Swavalamban Sashakt – Mega Campaign’. It is a webinar series to promote the ‘Stand Up India’ scheme.
  • Loan between ₹10 lakh and ₹1 crore to at least 1 SC or ST borrower and at least 1 woman borrower is provided per bank per branch, to set up a new enterprise.

2. Where is the Brahmaputra Valley Fertilizers Corporation Limited (BVFCL) located?

A) Odisha

B) Assam

C) West Bengal

D) Jharkhand

  • Brahmaputra Valley Fertilizer Corporation Limited, previously the Namrup Fertilizer Complex, is located on the bank of Dilli river, Assam.
  • The Cabinet Committee on Economic Affairs approved the proposal of the Department of Fertilizers for Grant–in–aid of Rs.100 crore to BVFCL, Namrup (Assam) for smooth operations of its urea manufacturing units.

3. The Indian Navy has partnered with which institution for research in underwater domain of Naval Electronic Systems?

A) IIT Delhi

B) NIT Trichy

C) IIT Guwahati

D) IISC Bengaluru

  • The Indian Navy and IIT Delhi has recently signed an MoU on research in underwater domain of Naval Electronic Systems. The key technologies for Navy in underwater electronics have been developed by the Centre for Applied Research in Electronics (CARE) at IIT Delhi since 1970s.

4. Which Indian bank has signed pact with Indian Oil Corporation under its ‘e–Dealer’ scheme?

A) Indian Bank

B) Punjab National Bank

C) Bank of Baroda

D) Union Bank of India

  • Punjab National Bank (PNB) has signed an agreement with Indian Oil Corporation to provide up to Rs 2 crore to the dealers of the Oil company. Under the MoU, the bank would provide credit facilities at lower interest rates, nil margin, and with minimum or zero collateral requirements. These measures are to be undertaken under the PNB e–Dealer scheme.

5. Which country has unveiled a draft “Humans in space policy 2021”?

A) Japan

B) India

C) China

D) United States of America

  • The Indian Space Research Organisation (ISRO) has recently unveiled the draft “Humans in space policy 2021”.
  • The policy will be sent to the government for approval. The policy seeks to facilitate start–ups and the local industry to build technologies for its human space programme. ISRO has also set up a two–member team to study the technologies needed for the mission.

6. What is the new upper ceiling for family pension, as per the Ministry of Personnel, Public Grievances and Pensions?

A) Rs 50,000

B) Rs 75,000

C) Rs 1,00,000

D) Rs 1,25,000

  • Union Minister Jitendra Singh announced that the upper ceiling has been raised from Rs 45,000 to Rs 1.25 lakh per month.
  • This increase is in accordance with the increase of salary as per the recommendations of the seventh pay commission. This step will ensure that the family members of the deceased employees get access to adequate financial security.

7. Which Union Ministry announces the Index of Industrial Production (IIP)?

A) Ministry of Statistics and Programme Implementation

B) Ministry of Finance

C) Ministry of Corporate Affairs

D) Ministry of Home Affairs

  • Union Ministry of Statistics and Programme Implementation (MoSPI) releases the Index of Industrial Production (IIP). As per the recent edition of the data, the IIP measure grew 1 per cent for December 2020. The Consumer Price Index inflation (CPI) decreased to 4.06 per cent in January 2021, due to the decline in vegetable prices.

8. Which country records the world’s highest number of Road crash deaths?

A) United States of America

B) Indonesia

C) India

D) Pakistan

  • India records the highest number of Road crash deaths, across the world. The World Bank recently released a report titled “Traffic Crash Injuries and Disabilities: The Burden on Indian Society”.
  • Union Transport minister Nitin Gadkari released the report. Over 75% of the poor households in India reported a decline in their income after a road traffic crash.

9. In which state the Chittaura Lake is situated?

A) Odisha

B) Andhra Pradesh

C) Uttar Pradesh

D) Madhya Pradesh

  • Chittaura Lake is situated in Uttar Pradesh. A river named Teri Nadi originates from this lake. It is known for many migratory birds during August – October months. It is also an important Hindu Pilgrimage site in the state. Prime Minster Narendra Modi is scheduled to inaugurate the development works of the Chittaura Lake.

10. When is the ‘World Radio Day’ celebrated across the world?

A) February 12

B) February 13

C) February 14

D) February 15

  • ‘World Radio Day’ is celebrated on Feb.13 every year, across the world. It was first proclaimed by the member states of UNESCO in 2011. The UN General Assembly adopted the proposal in 2012.
  • The 2021 edition of World Radio Day is based on 3 main sub–themes namely Evolution, Innovation and Connection. UNESCO released a video named “New World; New Radio”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!