Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

16th & 17th October 2021 Tnpsc Current Affairs in Tamil & English

16th & 17th October 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 16th & 17th October 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

October Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. சமீபத்தில் குரோஷியாவுடன் இந்தியா எந்த துறையில் ஒப்பந்தம் செய்து கொண்டது?

அ) இந்திய பாரம்பரிய மருத்துவம் 

ஆ) விளையாட்டு

இ) டிஜிட்டல் கல்வி

ஈ) பாதுகாப்பு

  • இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஆராய்ச்சி & மேம்பாட்டுக்காக மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம், குரோஷியா அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் (AIIA) இந்திய சார்பாக கையெழுத்திட்டது. குரோஷியா தனது சுற்றுலாத் தொகுப்புகளுடன் இந்திய ஆயுர்வேதம் & யோகாவையும் சேர்க்க முன்வந்துள்ளது.

2. இந்தியா உட்பட 136 நாடுகளின் குழு, பெரு நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச உலகளாவிய வரி விகிதத்தை எத்தனை சதவீதத்தில் நிர்ணயித்துள்ளது?

அ) 5%

ஆ) 10%

இ) 15% 

ஈ) 20%

  • இந்தியா உட்பட 136 நாடுகளின் குழுமம், பெரிய நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச உலகளாவிய வரியை 15% ஆக நிர்ணயித்துள்ளது.
  • இந்த நாடுகள் முதலீட்டை ஈர்ப்பதற்காக குறைந்தபட்ச வரி விகிதத்தை நிர்ணயக்கிறது. மேலும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு குறைந்த அளவில் நாடுகள் வரி விதிப்பதை இது தடுக்கிறது. அமெரிக்கா உட்பட பல நாடுகளால், இந்த நடவடிக்கை ஒரு சமநிலை நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த விகிதம், பல நாடுகளில் கார்ப்பரேட் வரி விகிதத்தைவிட 23.5% குறைவாக உள்ளது.

3. துருக்கிய கிராண்ட் பிரிக்ஸ்-2021’ஐ வென்ற பந்தய ஓட்டுநர் யார்?

அ) லூயிஸ் ஹாமில்டன்

ஆ) வால்டேரி போட்டாஸ் 

இ) மேக்ஸ் வெர்ஸ்டாபென்

ஈ) செர்ஜியோ பெரஸ்

  • பின்னிஷ் பந்தய ஓட்டுநர் வால்டேரி பொட்டாஸ் துருக்கிய கிராண்ட் பிரிக்ஸ்-2021’இல் வெற்றிபெற்றார். மற்றொரு பந்தய ஓட்டுநர் மேக்ஸ் வெர்ஸ்டாபென் இரண்டாமிடத்திலும், செர்ஜியோ பெரெஸ் மூன்றாவது இடத்திலும் இருந்தார். முன்னணி ஓட்டுனர் லூயிஸ் ஹாமில்டன் 5ஆம் இடத்தில் பந்தயத்தை நிறைவுசெய்தார், சார்லஸ் லெக்லெர்க் நான்காம் இடத்தைப் பிடித்தார். 32 வயதான ஓட்டுநர் பொட்டாஸ் 2017 முதல் 2021 வரை பத்து பந்தயங்களில் வெற்றி பெற்றுள்ளார்.

4. டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையத்தின் (C-DOT) தலைமையகம் எங்குள்ளது?

அ) நியூயார்க்

ஆ) புது தில்லி 

இ) கொழும்பு

ஈ) ரோம்

  • டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையமென்பது இந்திய அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டு மையமாகும். இதன் தலைமையகம் புதுதில்லியில் அமைந்துள்ளது. 5G மற்றும் பிற எதிர்கால தொழில்நுட்பங்களைவிட 50 மடங்கு வேகமானதாகக் கூறப்படும் 6G தொழில்நுட்பங்களில் பணியாற்ற C-DOT கேட்கப்பட்டுள்ளது. யூனியன் டெலிகாம் செயலாளர் சமீபத்தில் C-DOT’இன் குவாண்டம் தொடர்பு ஆய்வகத்தைத் திறந்து வைத்து, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட குவாண்டம் கீ டிஸ்ட்ரிபியூஷன் (QKD) தீர்வைத் தொடங்கினார்.

5. ஹென்லி கடவுச்சீட்டு குறியீடு-2021’இல் இந்தியாவின் நிலை என்ன?

அ) 90 

ஆ) 82

இ) 70

ஈ) 65

  • உலகின் மிகவும் பயணத்திற்கு ஏற்ற கடவுச்சீட்டுகளை பட்டியலிடும் ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில், இந்தியாவின் தரவரிசை கடந்த ஆண்டிலிருந்து 6 இடங்கள் சறுக்கி 90ஆவது இடத்தில் உள்ளது.
  • ஒரு நாட்டின் கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் எத்தனை வெளிநாடுக -ளுக்கு விசா இல்லாமல் செல்லமுடியும் என்பதை கணக்கிட்டு அதன் அடிப்படையில் இப்பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு வான் போக்குவரத்து சங்கம் வழங்கிய தரவுகளின் பகுப்பாய்வினடிப்படையில் இந்தத் தரவரிசை அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குறியீட்டில் ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்துள்ளன. தென்கொரியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் இரண்டாவது இடத்தைப் பகிர்ந்துள்ளன.

6. 2021 – பன்னாட்டு முதியோர் நாளின் கருப்பொருள் என்ன?

அ) Digital Equity for All Ages 

ஆ) Respect and Love for Elders

இ) Empathy and Equity

ஈ) Fair Treatment to all Elders

  • ‘பன்னாட்டு முதியோர் நாளானது’ ஒவ்வோர் ஆண்டும் அக்.1 அன்று கொண்டாடப்படுகிறது. முதியோருக்கான நலவாழ்வு வசதிகள் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதே இந்த நாளின் நோக்கமாகும். 1990 டிச.14 அன்று, ஐநா பொதுச்சபை அக்டோபர்.1’ஐ சர்வதேச முதியோர் நாளாக அறிவித்தது. “Digital Equity for All Ages” என்பது நடப்பு 2021ஆம் ஆண்டில் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும்.

7. எந்த மாநிலத்தின் மாநில தேர்தல் ஆணையம், இந்தியாவின் முதல், “திறன்பேசிமூலமாக வாக்களித்தல்” முறையை சோதனை செய்யவுள்ளது?

அ) ஆந்திர பிரதேசம்

ஆ) தெலுங்கானா 

இ) கர்நாடகா

ஈ) கேரளா

  • தெலுங்கானா மாநில தேர்தல் ஆணையமானது திறன்பேசிகளைப் பயன்படுத்தி சோதனை வாக்கெடுப்பை நடத்தவுள்ளது. இதற்கு மாநில அரசிடம் அனுமதி கிடைத்துள்ளது. 2021 அக்டோபர்.20 அன்று கம்மம் மாவட்டத்தில் இந்தச் சோதனை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இது திறன்பேசிகளைப் பயன்படுத்தி நடத்தப்படும் நாட்டின் முதல் மின்னணு வாக்குப்பதிவு ஆகும்.

8. மலபார் பயிற்சியுடன் தொடர்புடைய இந்திய ஆயுதப்படை எது?

அ) இந்திய இராணுவம்

ஆ) இந்திய கடற்படை 

இ) இந்திய கடலோர காவல்படை

ஈ) தேசிய பாதுகாப்புப் படை

  • மலபார் பயிற்சி என்பது இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவின் கடற்படைகளின் ஒரு கடல்சார் பயிற்சியாகும். மலபார் பயிற்சியின் இரண்டாம் கட்டம், 2021 அக்டோபர் 12-15 வரை வங்காள விரிகுடாவில் நடத்தப்பட்டது. INS ரான்விஜய், INS சாத்புரா, P8I கடல் ரோந்து வானூர்தி மற்றும் நீர்மூழ்கிக்கப்பல் ஆகியவை இப்பயிற்சியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தின.

9. சமீப செய்திகளில் இடம்பெற்ற சுனில் சேத்ரியுடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ) மட்டைப்பந்து

ஆ) கால்பந்து 

இ) கைப்பந்து

ஈ) கபடி

  • இந்திய கால்பந்து வீரரும் இந்திய தேசிய கால்பந்து அணியின் அணித் தலைவருமான சுனில் சேத்ரி அண்மையில் தனது 77ஆவது சர்வதேச கோலை நேபாளத்திற்கு எதிரான ஆட்டத்தில் SAFF சாம்பியன்ஷிப்பில் அடித்தார். இதன்மூலம் அவர், முன்னாள் பிரேசிலிய கால்பந்து வீரரான பீலேவின் கோலை சமன்செய்துள்ளார். இந்தியாவுக்கான அவரது 123 ஆவது போட்டியில், அவர் இந்தச் சாதனையை படைத்துள்ளார்.

10. பிரதமர் கதிசக்தி திட்டத்திற்கான உத்தேச நிதி செலவு என்ன?

அ) `100 கோடி

ஆ) `1 இலட்சம் கோடி

இ) `10 இலட்சம் கோடி

ஈ) `100 இலட்சம் கோடி 

  • 75ஆம் சுதந்திரநாள் உரையில், பிரதமர், உட்கட்டமைப்பு மேம்பாட்டை இலக்காகக்கொண்டு மொத்தமாக `100 இலட்சம் கோடி நிதி செலவில் ‘PM கதிசக்தி மாஸ்டர் திட்டத்தை’ அறிவித்தார். இத்திட்டம் 1000’க்கும் மேற்பட்ட தொழிற்துறை குழுமங்களுக்கு மாதிரி இணைப்பை வழங்க முன்மொழியப்பட்டது. மேலும் தற்போதுள்ள பாரத்மாலா, சாகர்மாலா, உடான்போன்ற திட்டங்களின்கீழ் திட்டங்களை உள்ளடக்கியது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1.பொன்னேரி, திருநின்றவூர் உட்பட 19 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரமுயர்த்தி அரசாணை

தமிழகத்தில் 19 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்ட அரசாணை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2021-22ஆம் ஆண்டிற்கான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (தேர்தல்) துறை மானியக்கோரிக்கையின் போது, 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நகர்ப்புற மக்கள் தொகை 48.45% ஆகும். 2021ஆம் ஆண்டு தற்போதைய சூழலில் மொத்த மக்கள் தொகையில் நகர்ப்புற மக்கள்தொகை சுமார் 53 சதவீதமாக உயர்ந்துள்ளதென கருதப்படுகிறது.

தற்போது நகர்ப்புற உள்ளாட்சிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் நகர்ப்புரத்தன்மை, மக்கள் தொகை, மக்கள் அடர்த்தி, ஆண்டு வருமானம், பொருளாதார முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையிலும் நகர்ப்புறமாக மாறி வருகின்ற இந்த பகுதிகளிலும் இணையான அடிப்படை வசதிகளை அளித்திடும் நோக்கத்தில் உள்ளாட்சி அமைப்புகள் தரம் உயர்த்தப்படுகின்றன. அதன்படி, நாகர்கோவில் மாநகராட்சிக்கு அருகாமையில் அமைந்துள்ள தெங்கம்புதூர் பேரூராட்சி, ஆளுர் பேரூராட்சி, புத்தேரி ஊராட்சி, திருப்பதி சாரம் ஊராட்சி, பீமநகரி ஊராட்சி, தேரேகால் புதூர் ஊராட்சி, மேல சங்கரன்குழி ஊராட்சி, கணியாகுளம் ஊராட்சி ஆகியவை முழுமையாகவும், தர்மபுரம் ஊராட்சி, ராஜக்கமங்கலம் ஊராட்சி ஆகியவை பகுதியாகவும் இணைப்படுகிறது.

இதேபோல், திருவள்ளூர் மாவட்டம் – பொன்னேரி, திருநின்றவூர், கடலூர் மாவட்டம்- திட்டக்குடி, வடலூர், தஞ்சாவூர் மாவட்டம்- அதிராம்பட்டினம், தூத்துக்குடி மாவட்டம்- திருச்செந்தூர், கோவை மாவட்டம்- கருமத்தம்பட்டி, காரமடை, கூடலூர், மதுக்கரை, கரூர் மாவட்டம்- பள்ளப்பட்டி, திருப்பூர் மாவட்டம்- திருமுருகன்பூண்டி ஆகிய 12 பேரூராட்சிகள் நகராட்சிகளாக அமைத்துருவாக்கப்படும். சிவகங்கை மாவட்டம்- மானாமதுரை, திருச்சி மாவட்டம்- முசிறி, இலால்குடி, சேலம் மாவட்டம்- தாரமங்கலம், இடங்கணசாலை ஆகிய 5 பேரூராட்சிகள் நகராட்சிகளாக அமைத்துருவாக்கப்படும். மேலும், கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு, கரூர் மாவட்டம் புகளூர் ஆகிய 2 பேரூராட்சிகள் நகராட்சிகளாக அமைத்துருவாக்கப்படும். கும்பகோணம் மாநகராட்சியை அமைத்துருவாக்கும் பொருட்டு கும்பகோணம் நகராட்சிக்கு அருகாமையில் அமைந்துள்ள தராசுராம் முதல்நிலை பேரூராட்சியை கும்பகோணம் நகராட்சியுடன் இணைக்கப்படலாம் என உத்தேச முடிவு மேற்கொண்டு ஆணையிடுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

2. தேசிய புட்சால் போட்டியில் – தமிழக அணிக்கு சாம்பியன் பட்டம்:

15 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய புட்சால் சாம்பியன்ஷிப் போட்டி தருமபுரியில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக அணி, லீக் சுற்றில் மும்பை, ஆந்திரா, புதுச்சேரி, கேரளா, புனேஆகிய அணிகளை தோற்கடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

அரை இறுதியில் தமிழக அணி, கர்நாடகாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. தொடர்ந்துஇறுதிப் போட்டியில் மகாராஷ்டிராவை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து தமிழக அணி சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது. தமிழக அணியின் கோல் கீப்பர்ராகுல் கண்ணன் தொடரின் சிறந்தகோல் கீப்பராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்துடன் தமிழக அணியைச் சேர்ந்த 5 வீரர்கள், இந்திய புட்சால் அணிக்காக தேர்ந்தெடுக் -கப்பட்டுள்ளனர். இந்த அணி அடுத்த மாதம் பராகுவேயில் நடைபெற உள்ள 15 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் கலந்து கொண்டு விளையாடுகிறது.

3. செல்வ வள மேலாண் திட்ட சேவை: இந்தியன் வங்கி அறிமுகம்

இந்தியன் வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு புதிதாக மின்னணு செல்வவள மேலாண்மை திட்டங்கள் வழங்கும் சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்காக, பிஸ்டம் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில், இந்தியன் வங்கியின் செயல் இயக்குநர் முன்னிலையில், இந்தியன் வங்கியின் பொதுமோளர் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஏற்கனவே உள்ள மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மற்றும் இ-என்பிஎஸ் மட்டுமின்றி புதியமின்னணு திட்டங்களான மியூச்சுவல் ஃபண்ட் அறிவுரை திட்டம், மின்னணு தங்கம், மின்னணு வரித்தாக்கல் சேவைகளும் வழங்கப்படும்.

4. நீதிமன்றங்களில் இனி பச்சை நிற லீகல் சைஸ் பேப்பருக்கு வேலையில்லை; வெள்ளை நிற ஏ4 பேப்பரில் மனுக்களை தாக்கல் செய்தால் போதும்: உயர் நீதிமன்ற பதிவுத் துறை உத்தரவு

நீதிமன்றங்களில் இனி மனுக்களை தாக்கல் செய்ய பச்சை நிற லீகல் சைஸ் பேப்பரை தேடி அலைய வேண்டியதில்லை. வெள்ளை நிறஏ4 பேப்பரில் மனுக்களை தாக்கல்செய்தால் போதும் என உயர் நீதிமன்ற பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை உள்ளிட்ட தமிழகம், புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் பிரமாண பத்திரங்கள், பிராதுகள், ஆவணங்கள், உத்தரவுநகல்கள், வக்காலத்து நாமா மற்றும் பதில் மனுக்களை தாக்கல் செய்ய 100 ஜிஎஸ்எம் தரம் கொண்ட பச்சை நிற ஃபுல்-ஸ்கேப் லீகல் சைஸ் பேப்பர்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது.

பொதுவாக நீதிபதிகள் படிப்பதற்காக தாக்கல் செய்யப்படும் பிரமாணப் பத்திரங்கள், மனுக்கள்மற்றும் ஆவணங்கள் அனைத்தும்பச்சை நிற லீகல் சைஸ் பேப்பர்களிலும், பிரதிவாதிகளுக்கான மனுக்கள் வெள்ளை நிற பேப்பர்களிலும் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். தற்போது இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதன்படி உரிமையியல் நடைமுறை சட்டம் – 1908, பிரிவு 122-ன்கீழ் உரிமையியல் விதிகளுக்கான தொழில் நெறி பயிற்சி மற்றும் சுற்றறிக்கைக்கான உத்தரவுகள் – விதி 6-ல் சில திருத்தங்களை தமிழக அரசின் அனுமதியுடன் சென்னை உயர் நீதிமன்றம் கொண்டுவந்துள்ளது. இந்த திருத்தங்கள் குறித்த அறிவிப்பாணை தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பி தனபால் அனைத்து நீதிமன்றங்களுக்கும் பிறப்பித்த உத்தரவில், ‘நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் அனைத்து பிராதுகள், எழுத்துப்பூர்வமான வாதங்கள், மனுக்கள், பிரமாணப் பத்திரங்கள், மேல்முறையீட்டு மனுக்கள் இனி 75 ஜிஎஸ்எம் கொண்ட வெள்ளை நிற ஏ4 பேப்பரில் தாக்கல் செய்தால் போதும். முன்பக்கம் மற்றும் பின்புற பக்கங்களில் மனுக்களை தாக்கல் செய்யும்போது அதற்கான பக்கங்களை நம்பர்களில் குறிப்பிட வேண்டும். மேல்முறையீட்டு மற்றும் அசல் வழக்குகளுக்கான ஆவணங்களை தாக்கல் செய்யும்போது ஏ4 சைஸ் பேப்பரில் மேல்புறம் மற்றும் அடிப்பக்கத்தில் இருந்து 2.5 செமீ அளவுக்கும், இடது புறத்தில் 3 செமீ அளவுக்கும், வலது புறத்தில் 2.5 செமீ அளவுக்கும் மார்ஜின் விட வேண்டும்’ என்று அறிவுறுத்தியுள்ளார்.

5. 22 நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பின்னர் – மயங்கிய நிலையில் பிடிபட்டது ‘டி23’ புலி: மயக்க ஊசிசெலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்

நீலகிரி மாவட்டத்தில் 4 பேரை கொன்ற ஆட்கொல்லி புலியை 22 நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பின்னர் நேற்று மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் உயிருடன் பிடித்தனர்.

நீலகிரி மாவட்டம் மசின குடியின்கவுரி, தேவன் எஸ்டேட் பகுதியில் குஞ்சு கிருஷ்ணன், சந்திரன், சிங்காரா வனப்பகுதியில் பசுவன் ஆகியோர் டி.23 என வனத்துறையினரால் அழைக்கப்படும் புலியால்அடித்துக் கொல்லப்பட்டனர். இதைஅடுத்து, புலியை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டனர்.

22 நாட்களாக புலியை பிடிக்க வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு புலியைப் பார்த்த வனத்துறையினர், புலிக்கு இரு முறை மயக்க ஊசி செலுத்தினர். ஆனால், புலி அடர்ந்த புதருக்குள் பதுங்கி தப்பியது. இந்நிலையில், நேற்று மதியம் மாயார் வனத்தில் கூற்றுப்பாறை பகுதியில் நடமாடிய புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி உயிருடன் பிடித்தனர்.

6. பாகிஸ்தான், வங்கதேசத்தைவிட மோசம்: உலக பட்டினிக் குறியீட்டில் இந்தியா 101 இடத்துக்குச் சரிந்தது

2021ஆம் ஆண்டுக்கான உலக பட்டினிக் குறியீட்டில் 116 நாடுகளில் இந்தியா 101ஆவது இடத்துக்கு சரிந்துள்ளது. அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் ஆகியவற்றைவிட இந்தியாவில் பட்டினியால் வாடுவார் அதிகரித்துள்ளனர். கடந்த 2020ஆம் ஆண்டு 107 நாடுகளுக்கான பட்டியலில், 94ஆவது இடத்தில் இருந்த இந்தியா, 116 நாடுகளுக்கான பட்டியலில் 2021ஆம் ஆண்டில் 101ஆவது இடத்துக்கு பின்தங்கியுள்ளது.

ஊட்டச்சத்து குறைபாடு, 5வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் சத்துணவு குறைபாட்டால் தங்கள் உயர்த்துக்கு ஏற்ற எடை இல்லாமல் இருத்தல், வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாமல் இருத்தல், 5வயதுக்கு உட்பட்ட குழந்தை உயிரிழப்புகள் ஆகிய காரணிகளை அடிப்படையாக வைத்து உலக பட்டினி குறியீடு கணக்கிடப்படுகிறது.

உலகளவில் பட்டினிச் சாவு, சரிவிகித சத்துணவு மக்களுக்குக் கிடைப்பது ஆகியவற்றைக் கண்டறிந்து அறிக்ைக வெளியிடப்பட்டுள்ளது. ஐயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் அமைப்பு மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ப் ஆகிய அமைப்பும் சேர்ந்து தயாரித்த அறிக்கையில், இந்தியாவில் பட்டினியின் அளவு அபாயக்கட்டத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

அதேசமயம், சீனா, பிரேசில், குவைத் உள்ளிட்ட 18 நாடுகளில் பட்டினிக் குறியீடு என்பது 5-க்கும் குறைவாகவே இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த 1998-2002ம் ஆண்டு இந்தியாவில் 5 வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் சத்துணவு குறைபாட்டால் தங்கள் உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமல் இருத்தல் சதவீதம் 17.1 ஆக இருந்த நிலையில் 2016 முதல் 2020ம் ஆண்டில் இது 17.3 ஆகஅதிகரித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவலால் இந்தியாவில் உள்ள மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும், இந்தியாவில் உள்ள குழந்தைகள் சத்துணவுக் குறைபாடு பிரச்சினைகளால் மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளனர். குழந்தைகளுக்கு சத்துணவு, சரிவிகித உணவு வழங்குவதிலும், உலக பட்டினிக் குறியீட்டிலும் இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம் 76வது இடம், வங்கதேசம் (76), மியான்மர் (71), பாகிஸ்தான் (92) ஆகிய இடங்களில் உள்ளனர்.

இருப்பினும் இந்தியாவைவிட முன்னேறியிருந்தாலும், சத்துணவு, சரிவிகித உணவுகளை வழங்குவதில் இன்னும் முன்னேற்றம் தேவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இந்தியாவில் 5 வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் உயிரிழப்பு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், சத்துணவு, சரிவிகித உணவு உணவு கிடைப்பதில்தான் இன்னும் சிக்கல் நீடிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டினிக்கு எதிராக உலக நாடுகள் போராடும் பாதையில் 47 நாடுகள் 2030ம் ஆண்டுக்குள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய முடியாது. குறைந்த அளவு பட்டினிக் குறியீட்டை எட்டமுடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கான உணவுப் பாதுகாப்பு பல்வேறு முனைகளில் இருந்து தாக்குதலுக்கு ஆளாகிறது. உள்நாட்டுக் குழப்பம், பிரச்சினைகள், பருவநிலை மாறுபாடு, பொருளாதார, சுகாதார சிக்கல்கள், கரோனா வைரஸ் போன்றவற்றால் பட்டினிக் குறியீட்டின் அளவை அதிகரிக்கிறது. அதுமட்டுமல்லாமல் நாடுகளுக்கு இடையே வளர்ச்சியில் வேறுபாடு, உள்நாட்டில் பிராந்தியங்களில் சமநிலையின்மை, மாவட்டங்கள், சமூகங்களிடையே சமத்துவமின்மை போன்றவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் பட்டினிக் குறியீடு அதிகரித்துள்ளது.

இந்தியாவை விட மோசமாக 15 நாடுகள் உள்ளன. பப்புவா நியூ கினியா (102), ஆப்கானிஸ்தான் (103), நைஜிரியா (103) காங்கோ (105), மொசாம்பிக் (106), சியா லியோன் (106), தைமூர் லெஸ்டி (108), ஹெய்தி (109), லைபீரியா (110), மடகாஸ்கர் (111), காங்கோ ஜனநாயகக் குடியரசு (112), சாட் (113), மத்திய ஆப்ரிக்க குடியரசு (114), ஏமன் (115), சோமாலியா (116) நாடுகள் உள்ளன.

7. ஐ.நா. மனித உரிமை கவுன்சிலுக்கு இந்தியா மீண்டும் தேர்வு

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் 2022-24ஆம் ஆண்டுகளுக்கான உறுப்பினர் பதவிக்கு இந்தியா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 3 ஆண்டுகள் பதவிக் காலம் கொண்ட ஐ.நா. மனித உரிமை கவுன்சில் உறுப்பினர் பொறுப்புக்கான தேர்வு 76ஆவது ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் நடைபெற்றது.

2022-2024ஆம் ஆண்டு வரை நீடிக்கவிருக்கும் அந்தப் பொறுப்புக்கு 18 புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், பெருவாரியான வாக்குகள் பெற்று இந்தியா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது. 193 உறுப்பினர்களைக்கொண்ட ஐ.நா. பொது சபையில், இந்தியாவுக்கு ஆதரவாக 184 வாக்குகள் பதிவாகின.

8. அண்ணா மேலாண்மை நிலையம் இனி நிர்வாகப் பணியாளர் கல்லூரி என அழைக்கப்படும்

அண்ணா மேலாண்மை நிலையம், இனி அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி என்ற பெயரில் அழைக்கப்படும் என தலைமைச் செயலாளர் வெ இறையன்பு அறிவித்துள்ளார். தலைமைச் செயலாளரும், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் இயக்குநருமான வெ இறையன்பு, வெளியிட்ட அறிவிப்பு:

அண்ணா மேலாண்மை நிலையத்தில் இளநிலை உதவியாளர்கள் முதல் இந்திய ஆட்சிப் பணியாளர்கள் வரை அனைவருக்குமான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அவ்வப்போது துறை அலுவலர்களுக்கு அலுவலக நடைமுறை, தகவல் பெறும் உரிமைச் சட்டம், ஒழுங்கு நடவடிக்கை விதிகள், மன அழுத்த மேலாண்மை, குழு மேலாண்மை, ஓய்வுக்கு முந்தைய ஆலோசனை, நேர மேலாண்மை, பேரிடா் மேலாண்மை, தலைமைப்பண்புகள் போன்ற பல தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

ஆதிதிராவிட மாணவர் விடுதியின் காப்பாளர்களுக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்த அலுவலர்களுக்கும் அலுவலக நடைமுறைகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அரசுத் துறைகள் நீதிமன்ற வழக்குகளை உரிய முறையில் அணுகுவதற்கு வழக்குகள் மேலாண்மை பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

பெயர் மாற்றம்: இந்த நிறுவனம் இதுவரை, ‘அண்ணா மேலாண்மை நிலையம்’ என்றே அழைக்கப்பட்டு வந்தது. ‘மேலாண்மை நிலையம்’ என்று அழைக்கப்படுவதால், இந்த நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து தெளிவின்மை ஏற்பட்டது. நிர்வாகப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் நிறுவனம்தான் என்பதைக் கருத்தில் கொண்டு இதன் பெயர், ‘அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி’ என்று அழைக்கப்படும். இதற்கான அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தனது அறிவிப்பில் தலைமைச் செயலாளர் வெ இறையன்பு தெரிவித்துள்ளார்.

9. 2021 அக்.16 – உலக உணவு நாள்

கருப்பொருள்: Safe Food Now for a Healthy Tomorrow

10. இந்தியா-ரஷியா இடையே எஃகு, நிலக்கரித் துறை ஒப்பந்தம்

இந்தியா-ரஷியா இடையே எஃகு தயாரிப்பு, நிலக்கரி துறையில் முக்கிய ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது.

ரஷிய எரிசக்தி வார நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இரு நாள் பயணமாக மத்திய எஃகு துறை அமைச்சர் ராம் சந்திர பிரசாத் சிங் மாஸ்கோ சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு எரிசக்தி துறை அமைச்சர் நிகோலாய் சுல்கிநோவை அவர் சந்தித்து பேசினார்.

அப்போது எஃகு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் கோகிங் நிலக்கரி, அதன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஒத்துழைப்பு தொடர்பாக முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்மூலம் கூட்டு திட்டங்கள், எஃகு தயாரிப்பு நிலக்கரியில் வர்த்தக செயல்பாடுகள், இந்தியாவிற்கு நல்ல தரமான கோகிங் நிலக்கரியை நீண்டகாலத்திற்கு விநியோகம் செய்வது, கோகிங் நிலக்கரியின் சேமிப்பு வசதிகள், போக்குவரத்து தளவாட மேம்பாடு, நிலக்கரி உற்பத்தி மேலாண்மையில் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுதல், சுரங்க தொழில்நுட்பங்கள் & பயிற்சிகள் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்த வகை செய்யப்பட்டு உள்ளது.

11. கும்பகோணம் மாநகராட்சியாகிறது: தமிழகத்தில் புதிதாக 19 நகராட்சிகள் உதயம்

தமிழகத்தில் புதிதாக 19 நகராட்சிகளை உருவாக்குவதற்கான உத்தரவுகளை நகராட்சி நிர்வாகத்துறை வெளியிட்டது. இந்த உத்தரவுகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா பிறப்பித்தார். கும்பகோணம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது. தமிழகத்தில் தற்போது 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் என மொத்தம் 664 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன.

மக்கள் தொகையின் அளவு, பரப்பளவு ஆகியவற்றுக்கு ஏற்ப பேரூராட்சிகள் நகராட்சியாகவும், நகராட்சிகள் மாநகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தாத காரணத்தால், தனி அலுவலர்களின்மூலமாக தீர்மானங்கள் பெறப்பட்டு அரசுக்கு வரப்பெறப்படுகின்றன.

அந்த வகையில் தமிழகத்தில் ஒரு சில பேரூராட்சிகளை ஒன்றிணைத்தும், சில பேரூராட்சிகள் முழுமையாக நகராட்சிகளாகவும் தரம் உயா்த்தப்பட்டுள்ளன. அதன் விவரம்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொல்லங்கோடு மற்றும் ஏழுதேசம் ஆகிய இரண்டு பேரூராட்சிகள் இணைக்கப்பட்டு கொல்லங்கோடு நகராட்சியாக தரமுயர்த்தப்படுகிறது. இதேபோன்று, கரூர் மாவட்டத்தில் புஞ்சை புகளூர் மற்றும் தமிழ்நாடு காகித ஆலை புகளூர் ஆகிய பேரூராட்சிகள் இணைக்கப்பட்டு புகளூர் நகராட்சியாக தரம் உயர்த்தப்ப -டுகிறது. இதேபோன்று, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருச்சி மாவட்டம் முசிறி, லால்குடி, சேலம் மாவட்டம் தாரமங்கலம், இடங்கணசாலை, திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர், பொன்னேரி, கடலூர் மாவட்டம் திட்டக்குடி, வடலூர், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டி -னம், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, காரமடை, கூடலூர், மதுக்கரை, கரூர் மாவட்டம் பள்ளப் பட்டி, திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி ஆகிய பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன.

தேர்தல் எப்போது? உத்தேச நகராட்சிகளின் வாா்டு எல்லைகளை வரையறை செய்த பிறகு சம்பந்தப்பட்ட நகராட்சிகளுக்கு அடுத்த சாதாரண தேர்தல் நடத்தப்படும்.

கும்பகோணம் மாநகராட்சி: தமிழகத்தின் 16ஆவது மாநகராட்சியாக கும்பகோணம் நகராட்சி, தரமுயர்த்தப்படுகிறது. கும்பகோணம் நகராட்சி மற்றும் தாராசுரம் பேரூராட்சிப் பகுதிகளை உள்ளடக்கிய உத்தேச கும்பகோணம் மாநகராட்சிக்கான வார்டுகள் வரையறை செய்யப்பட்டு, அடுத்த சாதாரணத் தேர்தல் நடத்தப்படும். இதன் அடிப்படையில் கும்பகோணம் மாநகராட்சி அமைத்து உருவாக்கப்படும்.

நாகர்கோவில் மாநகராட்சி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த மாநகராட்சிப் பகுதியுடன் கன்னியாகுமரி மாவட்டத்தின் தெங்கம்புதூர், ஆளூர் பேரூராட்சிகள் முழுமையாக இணைக்கப்படுகின்றன என்று தனது உத்தரவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

எண்ணிக்கை எவ்வளவு: அரசின் உத்தரவு காரணமாக, தமிழகத்தில் நகராட்சிகளின் எண்ணிக்கை 139 ஆக அதிகரிக்கும். மாநகராட்சிகளின் எண்ணிக்கை 15-லிருந்து 16ஆக உயரும்.

புதிய நகராட்சிகள் விவரம்:

1. கொல்லங்கோடு, 2. புகளூர், 3. மானாமதுரை, 4. முசிறி, 5. லால்குடி, 6. தாரமங்கலம், 7. இடங்கணசாலை, 8. திருநின்றவூர், 9. பொன்னேரி, 10. திட்டக்குடி, 11. வடலூர், 12. அதிராம்பட்டினம், 13. திருச்செந்தூர், 14. கருமத்தம்பட்டி, 15. காரமடை, 16. கூடலூர், 17. மதுக்கரை, 18. பள்ளப்பட்டி, 19. திருமுருகன்பூண்டி.

புதிய மாநகராட்சி: கும்பகோணம்.

12. சென்னை சாம்பியன்: கொல்கத்தாவை வீழ்த்தியது

ஐபிஎல் போட்டியின் 14ஆவது சீசன் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 27 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தி சாம்பியன் ஆனது. சென்னை கோப்பை வெல்வது இது 4ஆவது முறையாகும். இதற்குமுன் 2010, 2011, 2018 ஆகிய ஆண்டுகளில் சென்னை சாம்பியனாகியுள்ளது. கடந்த சீசனில் மிகமோசமான வகையில் தோற்ற நிலையில், அதிலிருந்து மீண்டு தற்போது சாம்பியனாகி சாதித்திருக்கிறது சென்னை.

டூ பிளெஸ்ஸிஸ் ஆட்டநாயகன் ஆனார். இந்த ஆட்டம், டி20 பாரர்மட்டில் கேப்டனாக எம் எஸ் தோனியின் 300ஆவது ஆட்டமாகும். இதன்மூலம் கிரிக்கெட் உலகில் கேப்டனாக 300 டி20 ஆட்டங்களில் களம் கண்ட ஒரே வீரர் என்ற சாதனையை தோனி எட்டியுள்ளார். ஐபிஎல் போட்டியின் 14 சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 12 சீசன்களில் 214 ஆட்டங்களில் வழி நடத்தியிருக்கிறார் தோனி. அது தவிர ஒரு சீசனில் ரைசிங் புனே சூப்பர் ஜயன்ட்ஸ் அணிக்கு 14 ஆட்டங்களில் தலைமை தாங்கியிருக்கிறார். லீக் போட்டிகள் தவிர்த்து, இந்திய அணியை 72 டி20 ஆட்டங்களில் வழி நடத்தியிருக்கிறார் தோனி. இதில் 6 டி20 உலகக்கோப்பை போட்டிகளும் அடங்கும்.

13. நாட்டின் ஏற்றுமதி 23% அதிகரிப்பு: வரலாற்று உச்சத்தில் வர்த்தக பற்றாக்குறை

இந்தியாவின் ஏற்றுமதி கடந்த செப்டம்பர் மாதத்தில் 22.63 சதவீத வளா்ச்சியை எட்டியுள்ளது. இந்த நிலையில், நாட்டின் வா்த்தக பற்றாக்குறை இதுவரை இல்லாத வரலாற்று உச்சத்தை பதிவு செய்துள்ளது கவலைக்குரிய அம்சமாக மாறியுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:

நாட்டின் ஏற்றுமதி நடப்பாண்டு செப்டம்பரில் 22.63 சதவீதம் அதிகரித்து 3,379 கோடி டாலராக (இந்திய மதிப்பில் சுமாரர் `2.53 லட்சம் கோடி) வளா்ச்சி கண்டுள்ளது.

வரலாற்று உச்சம்: அதேசமயம், கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் இறக்குமதி வெகுவாக அதிகரித்ததையடுத்து நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறையானது அந்த மாதத்தில் இதுவரை இல்லாத வரலாற்று உச்சமாக முதன் முறையாக 2,259 கோடி டாலரை (`1.69 லட்சம் கோடி) எட்டியுள்ளது. இதற்கு முன்பு வர்த்தக பற்றாக்குறையானது 2012 அக்டோபரில் 2,020 கோடி டாலரைத் தொட்டதே அதிகபட்ச அளவாக கருதப்பட்டு வந்தது. செப்டம்பரில் இறக்குமதியானது 5,639 கோடி டாலராக இருந்தது. இது, கடந்தாண்டு இதே மாத இறக்குமதியுடன் ஒப்பிடுகையில் 84.77 சதவீதம் அதிகமாகும்.

தங்கம் இறக்குமதி விறுவிறு: நடப்பாண்டு செப்டம்பரில் தங்கம் இறக்குமதி 511 கோடி டாலராக கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் இறக்குமதி கடந்தாண்டு செப்டம்பரில் 60.1 கோடி டாலா் அளவுக்கே இருந்தது. 2021 ஏப்ரல் முதல் செப் வரையிலான ஆறு மாத காலத்தில் தங்கத்தின் இறக்குமதி 680 கோடி டாலரிலிருந்து 2,400 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

கச்சா எண்ணெய் இறக்குமதி உயர்வு: இதேபோன்று, கச்சா எண்ணெய் இறக்குமதியும் கடந்த செப்டம்பரில் 1,744 கோடி டாலராக கணிசமாக அதிகரித்துள்ளது. அதேசமயம், 2020 செப்டம்பரில் இதன் இறக்குமதி 583 கோடி டாலராக மட்டுமே காணப்பட்டது. அதன்படி, 2021 ஏப்ரல்-செப் காலகட்டத்தில் நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதியானது 3,201 கோடி டாலரிலிருந்து 7,299 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

நிலக்கரி: அதேபோன்று, நிலக்கரி இறக்குமதியும் கடந்த செப்டம்பரில் 119 கோடி டாலரிலிருந்து 218 கோடி டாலராக அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டு காலத்தில் நிலக்கரி இறக்குமதி ஒட்டுமொத்த அளவில் 1,193 கோடி டாலரை எட்டியுள்ளது. இது, 2020-21 ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 670 கோடி டாலராக இருந்தது. 2021 ஏப்ரல்-செப்டம்பரில் இறக்குமதி கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 3,201 கோடி டாலரிலிருந்து 7,299 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

சாதக வளர்ச்சி: நடப்பாண்டு செப் மாதத்தில், காபி, முந்திரி, பெட்ரோலிய பொருள்கள், கைத்தறி, பொறியியல், ரசாயனம், நூல்/ துணி வகைகள், நவரத்தினங்கள்-ஆபரணங்கள், பிளாஸ்டிக் & கடல் உணவுப் பொருள் துறைகளின் ஏற்றுமதி நேர்மறை வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. 2021 ஏப்ரல்-செப்டம்பா் வரையிலான ஆறு மாத காலத்தில் நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 19,789 கோடி டாலரைத் தொட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியான 12,562 கோடி டாலருடன் ஒப்பிடுகையில் 57.53 சதவீதம் அதிகம் என்பது கவனிக்கத்தக்கது

இறக்குமதி: அதேபோன்று, இதே காலகட்டத்தில் நாட்டின் இறக்குமதியும் 15,194 கோடி டாலரிலிருந்து 81.67 சதவீதம் அதிகரித்து 27,600 கோடி டாலரை எட்டியுள்ளது. ஏற்றுமதியை காட்டிலும் இறக்குமதி அதிகரித்த
-தையடுத்து நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 2,631 கோடி டாலரிலிருந்து 7,813 கோடி டாலராக உயர்ந்துள்ளது என மத்திய அரசு புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

14. தெற்காசிய கால்பந்து: 8ஆவது முறையாக இந்தியா சாம்பியன்

5 அணிகள் இடையிலான 13ஆவது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி மாலத்தீவில் நடந்தது. இதில் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, நேபாளத்தை எதிர்கொண்டது. பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும், ஷாட் அடிப்பதிலும் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 3-0 என்ற கோல்கணக்கில் நேபாளத்தை வீழ்த்தி சாம்பியன் கோப்பை
-யை கைப்பற்றியது. இந்திய கேப்டன் சுனில் சேத்ரி 49ஆவது நிமிடத்தில் முதலாவது கோல் அடித்தார்.

மொத்தத்தில் இது அவரது 80ஆவது சர்வதேச கோலாகும். இதன்மூலம் அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ள அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்சியை (80 கோல்) சமன் செய்தார்.

சேத்ரியை தொடர்ந்து சுரேஷ் வாங்ஜாம் (50ஆவது நிமிடம்), சஹால் சமாத் (90ஆவது நிமிடம்) ஆகியோரும் கோல் போட்டு அசத்தினர். 1993ஆம் ஆண்டு முதல் நடந்து வரும் இந்த போட்டியில் இந்திய அணி இந்தக் கோப்பையை வெல்வது இது 8ஆவது முறையாகும்.

1. India has entered into an agreement with Croatia in which field, recently?

A) Indian traditional medicine 

B) Sports

C) Digital Education

D) Defence

  • The Union Ministry of Ayush, Government of India has entered into an agreement with the Government of Croatia for research and development in Indian traditional medicine systems.
  • The MoU agreement was signed by the All–India Institute of Ayurveda (AIIA) on Indian behalf. Croatia has proposed to include Indian Ayurveda and Yoga along with its tourism packages.

2. A group of 136 countries, including India have set a minimum global tax rate at what per cent, for big companies?

A) 5%

B) 10%

C) 15% 

D) 20%

  • A set of 136 countries including India have set a minimum global tax of 15% for big companies. This sets a floor tax rate for these countries to attract investment and prevents countries from levying tax at a lower rate to multinational companies. By many countries including the USA, this move is seen as a level playing field and this rate is lower than the corporate tax rate of 23.5% in many countries.

3. Which racing driver won the Turkish Grand Prix 2021?

A) Lewis Hamilton

B) Valtteri Bottas 

C) Max Verstappen

D) Sergio Perez

  • Finnish racing driver Valtteri Bottas wins the Turkish Grand Prix 2021. Another Racing Driver Max Verstappen came in the 2nd place and Sergio Perez was in the 3rd place. Ace Racing Driver Lewis Hamilton crossed the line in the 5th place while Charles Leclerc took the fourth place. Bottas, the 32–year–old driver has won ten races from 2017 till 2021.

4. Where is the Centre for Development of Telematics (C–DOT) headquartered?

A) New York

B) New Delhi 

C) Colombo

D) Rome

  • The Centre for Development of Telematics is an Indian Government owned telecommunications technology development centre.
  • It is headquartered at New Delhi. C–DOT has been asked to start working on 6G technologies which is said to be 50 times faster than 5G and other futuristic technologies. Union Telecom Secretary recently inaugurated C–DOT’s Quantum Communication Lab and launched the indigenously developed Quantum Key Distribution (QKD) solution.

5. What is the rank of India, in the Henley Passport Index 2021?

A) 90 

B) 82

C) 70

D) 65

  • India’s rank has slipped by six places from last year to 90 on the Henley Passport Index, which lists the world’s most travel–friendly passports. The index ranks the passports of countries according to the number of destinations their holders can visit without a prior visa.
  • The rankings are based on the analysis of data provided by the International Air Transport Association (IATA). Japan and Singapore hold the first rank on the passport index, while the second position is shared by South Korea and Germany.

6. What is the theme of the ‘International Day of Older Persons’ 2021?

A) Digital Equity for All Ages 

B) Respect and Love for Elders

C) Empathy and Equity

D) Fair Treatment to all Elders

  • ‘International Day of Older Persons’ is celebrated every year on October 1. The aim of the day is to spread awareness about the need for health facilities and social care for elderly. On Dec.14 1990, the United Nations General Assembly declared Oct.1 as the International Day of Older Persons. The theme for 2021 is “Digital Equity for All Ages”.

7. The State Election Commission of which state is set to conduct India’s first dry run for “Voting through smart phone”?

A) Andhra Pradesh

B) Telangana 

C) Karnataka

D) Kerala

  • The State Election Commission of Telangana is about to conduct a dry run of the voting using their smartphones. This trial has got approval from the state government. The trial would be run in Khammam district on October 20th 2021 and would be the country’s first e–voting process using mobile smart mobile phones.

8. The Exercise Malabar is associated with which Armed force of India?

A) Indian Army

B) Indian Navy 

C) Indian Coast Guard

D) National Security Guard

  • The Exercise Malabar is a Naval / Maritime Exercise of Navies of India, Japan, Australia and USA. The second phase of Malabar exercise would be conducted from October 12–15, 2021 in the Bay of Bengal. INS Ranvijay, INS Satpura, P8I Maritime Patrol Aircraft and a Submarine would be representing India in the exercise.

9. Sunil Chhetri, who was in the news recently, is associated with which sports?

A) Cricket

B) Football 

C) Volleyball

D) Kabaddi

  • Indian professional footballer and the Captain of Indian National Football team – Sunil Chhetri has recently scored his 77th international goal, in a match against Nepal at the SAFF Championships in Male. With this, he has equalled the goal table of Pele, former legendary Brazilian Footballer. This record was made by him in his 123rd match for India.

10. What is the proposed financial outlay for the PM Gati Shakti Master Plan?

A) Rs. 100 crores

B) Rs. 1 lakh crore

C) Rs. 10 lakh crores

D) Rs. 100 lakh crores 

  • The PM on the 75th Independence Day speech had announced for “PM Gati Shakti Master Plan” at a total financial outlay of Rs.100 lakh crore, aiming for holistic infrastructure development. The scheme is proposed to offer modal connectivity to more than 1000 industrial clusters and would include projects under existing schemes like Bharatmala, Sagarmala, Udaan etc.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!