Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

16th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

16th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 16th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

April Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

16th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. சமீபத்தில் AYUSH அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட, “HCCR” வலைதளத்துடன் தொடர்புடைய துறை எது?

அ) ஆயுர்வேதம்

ஆ) யுனானி

இ) ஹோமியோபதி

ஈ) யோகா

  • மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சிக் கவுன்சில் என்பது மத்திய AYUSH அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் ஒரு தன்னாட்சி ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். இது, சமீபத்தில், உலக ஹோமியோபதி நாளான ஏப்ரல்.10 அன்று ஹோமியோபதி பிணியாளர் களஞ்சிய வலைதளம் என்றவொரு தனித்துவமான டிஜிட்டல் முன்முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • ஹோமியோபதி மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், மருத்துவ மாணவ -ர்கள் பிணியாளர்களுக்கான சிகிச்சையில் நுழைய ஒரு நிலையான தளத்தை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

2. சமீப செய்திகளில் இடம்பெற்ற, “நவீன பழைமைச் சின்னங்கள் மேலாண்மை அமைப்பு” தொடங்கப்பட்ட மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) கேரளா

இ) கோவா

ஈ) மத்திய பிரதேசம்

  • கோவாவின் காப்பகங்கள் மற்றும் தொல்பொருள் இயக்குநரகமானது நவீன பழைமைச் சின்னங்கள் மேலாண்மை அமைப்பை (AAMS) திறந்து வைத்தது. பழைமைச் சின்னங்களை சேமித்து வைப்பதற்கான முதல் அமைப்பு இதுவாகும் என்று கூறப்படுகிறது. AAMS என்பது ஒரு மென்பொருளால் இயக்கப்படும் தானியங்கி சேமிப்பகமாகும். இது, பல்வேறு பொருட்களின் சேமிப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது.
  • இந்த அமைப்பு ஒரு தொல்பொருள்பற்றிய தகவல்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல் அவற்றின் பாதுகாப்பையும் உறுதிசெய்கிறது.

3. நிதியமைச்சகத்தின் அண்மைய அறிவிப்பின்படி, கீழ்காணும் எந்நிறுவனத்தில், அடிப்படை சேமிப்பு வங்கிக்கணக்கைத் தொடங்க முடியும்?

அ) கட்டணஞ்செலுத்து வங்கி

ஆ) அயல்நாட்டு வங்கி

இ) அஞ்சல் அலுவலகம்

ஈ) சிறு நிதி வங்கி

  • 2019ஆம் ஆண்டு அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்குத் திட்டத்தில் நிதி அமைச்சகம் மாற்றங்களை அறிவித்துள்ளது. அறிவிப்பின்படி, அரசு நலத் திட்டத்தின் பயனாளி, ஓர் அஞ்சல் அலுவலகத்துடன் அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கைத் தொடங்க முடியும். இந்த அறிவிப்பின்படி, அத்தகைய கணக்கைத் தொடங்க குறைந்தபட்ச வைப்பிருக்க வேண்டிய அவசியம் இல்லை. குறைந்தபட்ச இருப்பை பராமரிக்க வேண்டிய அவசியமுமில்லை. சேமிப்புக்கணக்கில் நிலுவைத்தொகையை பராமரிக்காததற்கான கட்டணத்தையும் அமைச்சகம் குறைத்துள்ளது.

4. நாட்டிலேயே முதன்முறையாக ‘பசுமை பத்திரங்களை’ வெளியி -ட்ட மாநகராட்சி எது?

அ) சென்னை

ஆ) கிரேட்டர் நொய்டா

இ) காசியாபாத்

ஈ) ஆமதாபாத்

  • இந்தியாவிலேயே முதன்முறையாக பசுமை பத்திரங்களை காசியாபாத் மாநகராட்சி வழங்கியுள்ளது. காசியாபாத் மாநகராட்சியானது இப்பசுமை பத்திரத்தின்மூலம் `150 கோடி நிதி திரட்டியுள்ளது. இந்தப் பத்திரத்தின் மூலம் பெறப்பட்ட வருமானம், நகரத்தில், மூன்றாம்நிலை நீர் சுத்திகரிப்பு உட்கட்டமைப்பை உருவாக்க பயன்படுத்தப்படுகிறது. இந்தப்பத்திரங்கள் சமீபத்தில் BSE’இல் பட்டியலிடப்பட்டுள்ளன.

5. ‘வேளாண் ஹாக்கத்தானுக்காக AI’ஐ நடத்துவதற்காக ஹிந்துஸ் -தான் யூனிலீவர் மற்றும் கூகிள் நிறுவனத்துடன் ஒத்துழைத்துள்ள அமைப்பு எது?

அ) UNESCO

ஆ) NITI ஆயோக்

இ) AIM

ஈ) மைகெள இந்தியா

  • ஹிந்துஸ்தான் யூனிலீவர், கூகிள் மற்றும் மைகெள இந்தியா ஆகியவை இணைந்து வேளாண் துறையில் ஒரு ஹாக்கத்தானை நடத்துதற்காக ஒத்துழைத்துள்ளன. விவசாயத்தில் நீர் பாதுகாப்பிற்கான புதுமையான தீர்வுகளைக்கண்டறிவதற்கும், உழவர்களுக்கு நிலையான தீர்வுகளை வடிவமைப்பதில் துளிர்நிறுவனங்களை உருவாக்குவதற்காகவுமாக இம்மூன்று நிறுவனங்கள் ஒன்றிணைந்துள்ளன.

6. 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தங்களுக்கு விருப்பமான மதத்தைத் தேர்வு செய்ய சுதந்திரம் இருப்பதாக சமீபத்தில் கூறிய அரசியலமைப்பு ரீதியான அமைப்பு எது?

அ) தேசிய மனிதவுரிமைகள் ஆணையம்

ஆ) தேசிய நிர்வாக தீர்ப்பாயம்

இ) இந்திய உச்சநீதிமன்றம்

ஈ) பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம்

  • இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள “பரப்புரை” என்ற சொல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தங்களுக்கு விருப்பமான மதத்தை சுதந்திரமாக தேர்வுசெய்வதற்கு அனுமதிக்கிறது என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் கூறியது. மேற்கூறியவற்றை மேற்கோள் காட்டி, இந்தியாவில் மோசடியான மதமாற்றங்களை தடுப்பதற்கு நீதிமன்ற தலையீட்டைக் கோரிய பொதுநல வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

7. இணையவழி தகராறு தீர்வுக்கான ஒரு கையேட்டை வெளியிட -வுள்ள நிறுவனம் எது?

அ) SEBI

ஆ) RBI

இ) NITI ஆயோக்

ஈ) IRDAI

  • இந்திய அரசாங்கத்தின் மதியுரையகமான NITI ஆயோக், இணையவழி தகராறு தீர்வுக்கான ஒரு கையேட்டை வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்தக்கையேடு, இந்தியாவில், இணையவழி தகராறு தீர்வை வணிக நிறுவனங்களின் தலைவர்கள் பின்பற்றுவதற்கான ஓர் அழைப்பிதழாக அமையும். அகாமி மற்றும் ஓமிடியார் நெட்வொர்க் இந்தியா, ICICI வங்கி, பொதுமக்களுக்கான அசோகா கண்டுபிடிப்பாளர்கள் போன்ற அமைப்புகளுடன் இணைந்து இந்தக் கையேடு வெளியிடப்படும்.

8. ஜூலியஸ் பேயர் வாழ்க்கை முறைக் குறியீட்டின்படி, உலகில் வாழ்வதற்கு அதிகம் செலவு பிடிக்கும் இடம் எது?

அ) மும்பை

ஆ) ஷாங்காய்

இ) மெல்பர்ன்

ஈ) மாஸ்கோ

  • 2028ஆம் ஆண்டுக்குள் சீனா உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக மாறவுள்ளது. மேலும் அதன் வணிக தலைநகரான ஷாங்காய் உலகின் வாழ்வதற்கு அதிகம் செலவு பிடிக்கும் இடமாக மாறியுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட ஜூலியஸ் பேயர் வாழ்க்கை முறைக் குறியீட்டின்படி, சீனாவின் ஷாங்காய் உலகின் வாழ்வதற்கு அதிகம் செலவு பிடிக்கும் நகரமாகும். இந்தப் பட்டியலில், ஷாங்காயைத் தொடர்ந்து டோக்கியோ மற்றும் ஹாங்காங் ஆகிய நகரங்கள் 2 & 3ஆவது இடத்தில் உள்ளன.

9. அண்மையில் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த ஆலிவர் டசால்ட் என்பவர், எந்த நாட்டின் அரசியல்வாதியும் கோடீஸ்வரருமாவார்?

அ) பிலிப்பைன்ஸ்

ஆ) பிரான்ஸ்

இ) இந்தோனேசியா

ஈ) ஜப்பான்

  • பிரெஞ்சு கோடீஸ்வர அரசியல்வாதி ஆலிவர் டசால்ட் அண்மையில் வட மேற்கு பிரான்சில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் காலமானார். அவர், பிரான்ஸின் தேசிய சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். அவர் டசால் -ட் வானூர்தி தயாரிக்கும் குடும்பத்தின் வாரிசாவார். ‘டசால்ட்’ என்பது ஒரு முன்னணி பிரெஞ்சு வானூர்தி உற்பத்தி நிறுவனமாகும். அவர், உலகின் 361ஆவது பணக்காரர் என்று மதிப்பிடப்பட்டுள்ளார்.

10. இந்தியாவின் முதல் உலக திறன் மையத்தை (World Skill Centre) திறந்துள்ள மாநில அரசு எது?

அ) ஒடிஸா

ஆ) மத்திய பிரதேசம்

இ) இராஜஸ்தான்

ஈ) நாகாலாந்து

  • ஒடிஸா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் சமீபத்தில் மஞ்சேஸ்வரில் உலக திறன் மையத்தை (WSC) திறந்துவைத்தார். இந்தியாவின் முதல் திறன் மையமான WSC, ஒடிஸா திறன்மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ஆசிய வளர்ச்சி வங்கியின் ஆதரவுடன் `1,342 கோடி செலவில் உருவாக்கப்பட் -டுள்ளது. இது, மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு மேம்பட்ட மற்றும் வேலைவாய்ப்புக்கு உதவக்கூடிய திறன்களை வழங்குவதை நோக்க
    -மாகக் கொண்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ‘ககன்யான்’ திட்டம்: இந்தியா-பிரான்ஸ் ஒப்பந்தம்

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ISRO’இன் ‘ககன்யான்’ திட்டத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக இந்தியா-பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்திய மண்ணிலிருந்து மனிதர்களை முதன்முதலாக விண்வெளிக்கு அனுப்புவதற்கான பணிகளை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO) மேற்கொண்டு வருகிறது.

நாடு சுதந்திரமடைந்த 75ஆவது ஆண்டான 2022’இல் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், COVID-19 நோய்த் தொற்றுப்பரவல் காரணமாக ஏற்பட்ட இடையூறுகளால் இந்தத் திட்டத்தின் பணிகள் தாமதமடைந்துள்ளன. இந்நிலையில், ‘ககன்யான்’ திட்டத்தில் இந்தியாவும் பிரான்ஸும் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜான் ஈவ் லெடிரியன், ISRO தலைவர் சிவன் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன்படி, இந்திய விண்வெளி வீரர்களுக்கு பிரான்ஸில் பயிற்சியளிக்கப்ப -டவுள்ளது. ‘ககன்யான்’ திட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான அமைப்பில் பணிபுரிபவர்களும் பிரான்ஸில் பயிற்சிபெறவுள்ளனர். திட்டம் தொடர்பான தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும், விண்வெளி வீரர்களுக்கான உண -வு உள்ளிட்டவற்றைத் தயார் செய்வதில் ஒத்துழைப்பு அளிக்கவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது.

கருவிகளைப் பயன்படுத்த அனுமதி: பிரான்ஸ் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள கருவிகள் உள்ளிட்டவற்றை இந்திய விண்வெளி வீரர் -கள் பயன்படுத்திக் கொள்ளவும் ஒப்பந்தம் வழிவகுக்கிறது. பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் பிரான்ஸ் சார்பில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளை இந்திய வீரர்கள் பயன்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பு ஏற்பட்டு -ள்ளது. பல்வேறு பாதுகாப்புக் கருவிகளும் இந்திய வீரர்களுக்கு வழங்கப் -படவுள்ளன. விண்வெளி வீரர்கள் பயிற்சிமேற்கொள்வதற்கான சிறப்பு மையத்தை பெங்களூரில் கட்டமைக்க பிரான்ஸ் உதவி செய்யவுள்ளது.

2. இந்திய விமானப் படை தளபதிகள் மாநாடு தொடக்கம்

இந்திய விமானப்படை தளபதிகள் பங்கேற்கும் மூன்று நாள் மாநாடு ஏப்.15 அன்று தொடங்கியது. நாட்டில் நிலவும் பாதுகாப்பு சூழல் குறித்து இந்த மாநாட்டின்போது ஆய்வு செய்யப்படவுள்ளது. விமானப்படை தளபதிகளின் மாநாடு ஆண்டுக்கு இருமுறை நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டின் முதலாவது மாநாடு தில்லியில் உள்ள விமானப்படை தலைமையகத்தில் தொடங்கியது. அந்த மாநாட்டை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடக்கிவைத்தார்.

மாநாட்டின்போது, கிழக்கு லடாக் உள்ளிட்ட பகுதிகளில் காணப்படும் பாதுகாப்பு சூழல் குறித்து ஆய்வுமேற்கொள்ளப்பட்டது. எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இந்திய வான்படையின் செயல்திறனை மேம்படுத்துவது உள்ளிட்டவை தொடர்பாகவும் ஆலோசிக்கப்படவுள்ளது. விமானப்படையைச் சேர்ந்த தளபதிகளும், முக்கிய அதிகாரிகளும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

3. எந்தவித அழுத்தத்துக்கும் இந்தியா பணிந்துவிடாது: கிழக்கு லடாக் விவகாரம் குறித்து விபின் ராவத் கருத்து

“இந்தியா எந்தவித அழுத்தத்துக்கும் பணிந்துவிடாது” என சீனாவுடனான கிழக்கு லடாக் மோதல் போக்கு குறித்து முப்படைத் தளபதி விபின் ராவத் கூறினார். மத்திய வெளியுறவு அமைச்சகத்துடன் அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் என்ற அமைப்பு இணைந்து பன்னாட்டு அரசியல் மற்றும் பொருளாதாரம் குறித்த ‘ரெய்சினா பேச்சுவார்த்தை’ என்ற மாநாட்டை கடந்த 13 முதல் 16ஆம் தேதி வரை நடத்தி வருகிறது. இதில் காணொலி வழியில் பங்கேற்ற விபின் ராவத் பேசியதாவது:

சீனா தனது இராணுவபலம் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம்மூலமாக பிற நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து, தனது விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று எண்ணுகிறது. ஆனால், வடக்கு எல்லை விவகாரத்தில் இந்தியா உறுதிப்பாட்டுடன் உள்ளது. எந்தவித அழுத்தத்துக்கும் இந்தியா பணிந்துவிடாது. வடக்கு எல்லையில் இப்போது கடைப்படிக்கப்படும் நிலைப்பாட்டை மாற்ற முயற்சிப்பதை தடுப்பதில் உறுதியுடன் இருப்பதன்மூலம், பன்னாட்டு சமூகத்தின் ஆதரவையும் இந்தியா பெற முடியும். ஏனெனில், எல்லை நிலைப்பாட்டை கடைப்படிப்பது தொடர்பாக சர்வதேச சட்ட நடைமுறைகள் உள்ளன. அதை ஒவ்வொரு நாடும் பின்பற்றியாக வேண்டும்” என்றார் அவர்.

மேலும், ராணுவத்தை நவீனமயமாக்குதல் குறித்துப் பேசிய விபின் ராவத், அமெரிக்காவின் F35 போர் விமானம் நவீன தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டிருப்பது குறித்து விவரித்தார். அதே நேரம், இந்த F35 போர் விமானம் தயாரிப்பு தொழில்நுட்பத்தை அமெரிக்கா இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ளும் என்பதை உறுதியுடன் கூறமுடியாது. F35 விமானத்தைவிட குறைந்த தொழில்நுட்பத்துடன் கூடிய ‘F’ இரக போர் விமான தொழில்நுட்பத்தை மட்டுமே இந்தியாவுடன் இப்போது பகிர்ந்துகொள்ள அமெரிக்கா முன்வந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

4. அமெரிக்காவில் இணை அரசு வழக்குரைஞர் பதவியில் இந்திய-அமெரிக்க பெண் நியமனத்துக்கு அங்கீகாரம்: செனட் சபையில் வாக்கெடுப்பு

அமெரிக்க நீதித்துறையில் இணை அரசு வழக்குரைஞர் பதவிக்கு நியமிக் -கப்பட்டிருக்கும் இந்திய-அமெரிக்க பெண் வழக்குரைஞர் வனிதா குப்தாவின் நியமனத்துக்கு ஒப்புதல் அளிப்பதற்கான வாக்கெடுப்பு அமெரிக்க செனட் சபையில் நடைபெற உள்ளது. இதில் அவருடைய நியமனம் உறுதி செய்யப்பட்டால், அமெரிக்க நீதித்துறையில் சக்திவாய்ந்த மூன்றாவது நிலை அதிகாரியாக நியமிக்கப்படும் வெள்ளையரல்லாத முதல் பெண் என்ற பெருமையை வனிதா குப்தா (46) பெறுவார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன், இந்திய வம்சாவ -ளியைச் சேர்ந்த வனிதா குப்தாவை, இணை அரசு வழக்குரைஞர் பதவிக்கு நியமித்தார். அவருடைய நியமனத்துக்கு அங்கீகாரம் பெறும் வகையில், செனட் சபையில் நீதிக்குழுவில் கடந்த மார்ச் 25 அன்று நடந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மை பெற்றதன்மூலம், அவருடைய நியமனம் செனட் சபைக்கு பரிந்துரைக்கப்பட்டது. செனட் பெரும்பான்மை தலைவர் சுக் ஸ்கூமர் அவருடைய பெயரை செனட் சபை வாக்கெடுப்புக்கு அறிமுகம் செய்தார்.

5. தனியார்மயமாக்கப்படும் வங்கிகள்: நிதித்துறை அமைச்சகத்துடன் NITI ஆயோக் ஆலோசனை

நடப்பு நிதியாண்டில் தனியார்மயமாக்கப்படவுள்ள இரு பொதுத்துறை வங்கிகளின் பெயர்களை இறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசின் கொள்கை வகுக்கும் குழுவான NITI ஆயோக் தொடங்கியு -ள்ளது. இதுதொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தது:

2021-22ஆம் ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டபடி இரு பொதுத்துறை வங்கிகள், ஒரு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனம் ஆகியவை தனியார்மயமாக்கப்படவுள்ளன. இந்த வங்கிகள், காப்பீட்டு நிறு -வனத்தை தேர்வுசெய்வது தொடர்பாக நிதித்துறை அமைச்சகத்துடன் NITI ஆயோக் ஆலோசித்து வருகிறது. இதுதொடர்பாக இறுதி முடிவுக்கு வருவதற்கு முன்னர் சட்ட விதிமுறைகள், பணியாளர் நிர்வாகம், நிதி நிலைமை உள்ளிட்ட அம்சங்களை ஆராய வேண்டியுள்ளது. இதற்காக சில கூட்டங்களையும் NITI ஆயோக் நடத்தியுள்ளது.

NITI ஆயோக் தனது பரிந்துரைகளைத் தெரிவித்ததும், அதுகுறித்து பங்கு விலக்கல் தொடர்பான செயலர்கள் குழு ஆய்வு செய்யும். செயலர்கள் குழுவின் முடிவுக்குப்பின்னர், இறுதி செய்யப்பட்ட பெயர்கள் இறுதி ஒப்புதலுக்காக பிரதமர் தலைமையிலான அமைச்சர் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். அமைச்சர்கள் குழு மற்றும் மத்திய அமைச்சரவையின் அனுமதிக்குப் பின்னர் தனியார்மயமாக்கல் நடவடிக்கை தொடங்கும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ‘தனியார்மயமாக்கப்படும் வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும்’ என மத்திய நிதி அமைச்சர் நிா்மலா சீதாராமன் கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.

இரு பொதுத்துறை வங்கிகள், ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் பங்கு விலக்க -ல் நடவடிக்கைமூலமாக நடப்பு நிதியாண்டில் `1.75 லட்சம் கோடி திரட்ட அரசு திட்டமிட்டுள்ளது.

6. ஆசிய மல்யுத்தம்: சரிதாவுக்கு தங்கம்

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சரிதா தொடர்ந்து 2ஆவது முறையாக தங்கம் வென்றார். கஜகஸ்தானின் அல்மேட்டி நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் 59 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற இந்திய வீராங்கனை சரிதா, தனது முதல் சுற்றில் 4-5 என்ற கணக்கில் மங்கோலிய வீராங்கனை ஷூவ்தார் பாட்டர்ஜாவிடம் தோல்விகண்டார். எனினும், மறுவாய்ப்பை (ரெபிசேஜ் ரவுண்டு) சரியாகப் பயன்படுத்திக் கொண்ட சரிதா, அபாரமாக ஆடி அரையிறுதிக்கு முன்னேறினார். சரிதா தனது அரையிறுதியில் கிர்கிஸ்தானின் நுராய்டா அனார்குலோவாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

பின்னர் நடைபெற்ற இறுதிச்சுற்றில் சரிதா 10-7 என்ற கணக்கில் மங்கோ -லிய வீராங்கனை ஷூவ்தார் பாட்டர்ஜாவை வீழ்த்தினார். இதன்மூலம் முதல் சுற்றில் அவரிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்ததோடு, சாம்பியன் பட்டத்தையும் தக்கவைத்துக் கொண்டார் சரிதா. மகளிர் 50 கிகி எடைப்பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் சீமா வெண்கலம் வென்றார். அவர் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் தைபேவின் யங் ஷன் லின்னை வீழ்த்தினார்.

மகளிர் 76 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற இந்திய வீராங்கனை பூஜா, வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் 2-0 என்ற கணக்கில் தென் கொரியாவின் சியோன் ஜியோங்கை வீழ்த்தினார்.

7. 2010’களின் தலைசிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் கோலி: விஸ்டன் இதழ் கௌரவம்

2010’களின் தலைசிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக இந்திய கேப்டன் விராட் கோலியை தேர்வு செய்துள்ளது விஸ்டன் இதழ். ‘கிரிக்கெட்டின் பைபிள்’ என்று வர்ணிக்கப்படும் விஸ்டன் வருடாந்திர இதழானது ஆண்டுதோறும் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள் அடங்கிய பதிப்பை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி 1971 முதல் 2021 வரையிலான காலங்களில் ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் தலைசிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர்களாக திகழ்ந்தவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 1970’களின் சிறந்த வீரராக மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் கேப்டன் விவியன் ரிச்சர்ட்ஸையும், 1980’களின் தலைசிறந்த வீரராக முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவையும், 1990’களின் தலைசிறந்த வீரராக சச்சின் டெண்டுல்கரையும், 2000’களின் சிறந்த வீரராக லங்கையின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளீதரனையும், 2010’களின் சிறந்த வீரராக தற்போதைய இந்திய கேப்டனான விராட் கோலியையும் தேர்வு செய்துள்ளது விஸ்டன் இதழ்.

2008’இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான விராட் கோலி, இதுவரை 254 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 12,169 ரன்கள் குவித்துள்ளார். இதுதவிர, 2011’இல் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியிலும் கோலி இடம்பெற்றிருந்தார். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் கோலி 42 சதங்களுடன் 11 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார்.

அதேநேரத்தில் உலகின் தற்போதைய முன்னணி கிரிக்கெட் வீரராக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை தேர்வு செய்துள்ளது விஸ்டன் இதழ். அவர் தொடர்ந்து 2ஆவது ஆண்டாக இந்த விருதைப் பெற்றுள்ளார். பென் ஸ்டோக்ஸ் கடந்த சீசனில் டெஸ்ட் போட்டியில் 641 ரன்களை குவித்துள்ளதோடு, 19 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

8. இந்தியாவில் வங்கிச் சேவையிலிருந்து வெளியேறுகிறது சிட்டிபேங்க்

அமெரிக்காவைச் சேர்ந்த சிட்டிபேங்க் இந்தியாவில் நுகர்வோர் வங்கிச் சேவையிலிருந்து வெளியேறவுள்ளதாக அறிவித்துள்ளது. சிட்டிபேங்க், இந்தியாவில் கடனட்டை, சில்லறை வங்கியியல், வீட்டுக்கடன் மற்றும் சொத்து மேலாண்மை உள்ளிட்ட வர்த்தக பிரிவுகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த வங்கிக்கு இந்தியாவில் 35 கிளைகள் உள்ளன. ஏறக்குறைய 4,000 பணியாளர்கள் சிட்டிபேங்கின் நுகர்வோர் வங்கிச் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், எதிர்பார்த்த வளர்ச்சியை எட்ட இயலாததன் காரணமாக, 13 நாடுகளில் நுகர்வோர் வங்கிச்சேவையிலிருந்து வெளியேற சிட்டிபேங்கின் சர்வதேச தலைமைச் செயல் அதிகாரி ஜான் பிரேஸர் முடிவெடுத்துள்ளதாக அந்த வங்கி தெரிவித்துள்ளது.

9. நாட்டின் ஏற்றுமதி 60% அதிகரிப்பு

நாட்டின் ஏற்றுமதி சென்ற மார்ச் மாதத்தில் 60% வளர்ச்சியடைந்துள்ளது என மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது: நாட்டின் ஏற்றுமதி கடந்த மார்ச் மாதத்தில் 60.29 சதவீதம் வளர்ச்சி கண்டு 3,445 கோடி டாலரை எட்டியது. இருப்பினும், கடந்த 2020-21ஆம் முழு நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதியானது 7.26% பின்னடைவைக் கண்டு 29,063 கோடி டாலராக சரிந்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் இறக்குமதி 53.74% அதிகரித்து 4,838 கோடி டாலராக காணப்பட்டது. அதேசமயம், 2020-21 ஏப்ரல்-மார்ச் வரையிலான காலத்தில் இறக்குமதியானது 18% குறைந்து 38,918 கோடி டாலராக இருந்தது. நடப்பாண்டு மார்ச்சில் வர்த்தக பற்றாக்குறை கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 998 கோடி டாலரிலிருந்து 1,393 கோடி டாலராக உயர்ந்து உள்ளது. கடந்த முழு நிதியாண்டில் வர்த்தக பற்றாக்குறையானது 16,135 கோடி டாலரிலிருந்து 9,856 கோடி டாலராக குறைந்துள்ளது.

நடப்பாண்டு மார்ச்சில் பிண்ணாக்கு (230.4%), இரும்புத்தாது (194.89%), சணல் (105.26%), மின்னணுப் பொருள்கள் (91.98%), தரைவிரிப்புகள் (89.84%), நவரத்தினங்கள்-ஆபரணங்கள் (78.93%), பொறியியல் சாதனங்கள் (71.3%), அரிசி (66.77%), நறுமணப்பொருள்கள் (60.42%), இறைச்சி, பால் பொருள்கள் (52.79%) உள்ளிட்ட பொருள்களின் ஏற்றுமதி கணிசமான ஏற்றத்தைச் சந்தித்தன. அதேசமயம், எண்ணெய்வித்துகள் (-6.45%), முந்திரி (-1.99%) ஆகியவற்றின் ஏற்றுமதி வீழ்ச்சியடைந்தன.

இறக்குமதியைப் பொருத்தவரையில், வெள்ளி, போக்குவரத்து உபகரணங் -கள், பருப்பு வகைகள் மற்றும் உரங்கள் ஆகிய துறைகள் எதிர்மறை வளர்ச்சியை பதிவுசெய்துள்ளன. மார்ச்சில் கச்சா எண்ணெய் இறக்குமதி 2.23% அதிகரித்து 1,027 கோடி டாலராக இருந்தது. கடந்த நிதியாண்டில் இதன் இறக்குமதி 36.92% குறைந்து 8,235 கோடி டாலராக இருந்தது. அதேபோன்று, தங்கம் இறக்குமதியும் மார்ச்சில் 122 கோடி டாலரிலிருந்து 849 கோடி டாலராக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

10. வானில் பறக்கும் இ-டாக்ஸி சென்னை IIT வடிவமைப்பு: ஜூலையில் சோதனை ஓட்டம்

மின்கலத்தில் இயங்கக்கூடிய பறக்கும் இ-டாக்ஸியை சென்னை IIT வடிவமைத்துள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், பறக்கும் டாக்ஸியை வடிவமைக்க சென்னை IIT திட்டமிட்டது. அதற்காக ‘தி இ-பிளேன் கம்பெனி’ என்ற புதிய நிறுவனத்தை கடந்த ஆண்டு நிறுவியது. இந்நிலையில், மின்கலம்மூலம் இயங்கும் பறக்கும் இ-டாக்ஸி -யை IIT வடிவமைத்துள்ளது.

இதில் இரண்டு பேர் பயணிக்க முடியும். இந்த இ-டாக்ஸி சுமார் 200 கிகி அளவிலான எடையை சுமந்தபடி மணிக்கு 200 கிமீ வேகத்தில் பறக்கும். இ-டாக்ஸி சோதனை ஓட்டம் வரும் ஜூலையில் நடக்கவுள்ளது. அதைத் தொடர்ந்து 2022ஆம் ஆண்டில் முழு வடிவம் பெற்று பயணிகளை ஏற்றிச் செல்லதயாராகிவிடும். இது நடைமுறைக்கு வரும்போது, வழக்கமான கால் டாக்ஸியைவிட 2 மடங்கு மட்டுமே வாடகை அதிகம் இருக்கும்.

1. “HCCR” portal, which was recently launched by the AYUSH Ministry, is associated with which field?

A) Ayurveda

B) Unani

C) Homeopathy

D) Yoga

  • Central Council for Research in Homoeopathy (CCRH), is an autonomous apex research organization under Ministry of AYUSH. It has recently launched a unique digital initiative, the Homoeopathic Clinical Case Repository (HCCR) portal on World Homeopathy Day – April 10.
  • The portal aims to create a standard platform for Homoeopathic clinicians, researchers, medical students to enter clinical cases.

2. “Advanced Antiquities Management System”, which was making news recently, is launched by which state?

A) Tamil Nadu

B) Kerala

C) Goa

D) Madhya Pradesh

  • The Directorate of Archives and Archaeology (DAA) of Goa inaugurated the Advanced Antiquities Management System (AAMS). This is said to be the first system in the country for storage of antiquities.
  • The AAMS is a software–driven automated storage which is used for the storage of various objects. The system provides information about an antiquity and will ensure safety of the antiquities.

3. As per a recent notification from the Finance Ministry, a basic savings bank account can be opened in which institution?

A) Payment Bank

B) Foreign Bank

C) Post Office

D) Small Finance Bank

  • The Finance Ministry has notified changes in Post Office Savings Account Scheme, 2019. As per the notification, a beneficiary of the Government welfare scheme can open a basic savings bank account with a post office. As per the notification, there is no minimum deposit required for opening of such an account.
  • There will also be no requirement for maintaining minimum balance. The ministry also reduced fee for not maintain the balance in a savings account.

4. Which Municipal Corporation of India issued the first ‘Green Bonds’ in the country?

A) Chennai

B) Greater Noida

C) Ghaziabad

D) Ahmedabad

  • The Green bonds issued by Ghaziabad Municipal Corporation was the first of the kind in India. Ghaziabad Municipal Corporation raised a sum of Rs.150 crores through green bond route. The proceeds of the bond were being used for creating tertiary water treatment infrastructure in the city. These bonds have been listed in BSE recently.

5. Which body collaborated with Hindustan Unilever and Google, for conducting “AI for Agriculture Hackathon”?

A) UNESCO B) NITI Aayog

C) AIM D) MyGov India

  • Hindustan Unilever, Google and MyGov India have collaborated together for conducting a hackathon in the field of agriculture. The three entities have come together to find innovative solutions for water conservation in agriculture and to bring start–ups in designing sustainable solutions for farmers.

6. Which constitutional body has recently stated that all adults above 18 were free to choose a religion of their choice?

A) National Human Rights Commission

B) National Administrative Tribunal

C) Supreme Court of India

D) National Commission for Backward Class

  • The Supreme court has recently held that the word “propagate” mentioned in Indian Constitution permits any above the age of 18 to freely a religion of his / her choice. Quoting the above, the supreme court has dismissed a public interest litigation which had sought court intervention to stop “fraudulent” conversions in India.

7. Which institution is set to launch a hand book for Online Dispute Resolution (ODR)?

A) SEBI

B) RBI

C) NITI Aayog

D) IRDAI

  • Indian Government’s think tank – NITI Aayog has planned to launch a hand book for Online Dispute Resolution (ODR). This book would serve as an invitation to business leaders to adopt ODR in India.
  • The book would be published in association with organizations like Agami and Omidyar Network India, ICICI Bank, Ashoka Innovators for the Public etc.

8. As per the Julius Baer Lifestyle Index, which is the costliest place to live in the world?

A) Mumbai

B) Shanghai

C) Melbourne

D) Moscow

  • China is set to become the world’s biggest economy by 2028, and its commercial capital Shanghai has become the costliest place in the world. As per the recently released Julius Baer Lifestyle Index, China’s Shanghai is the most expensive city in the world. Shanghai is followed by Tokyo and Hongkong in the list at 2nd and 3rd position.

9. Olivier Dassault, who died in a helicopter crash recently, was a politician and billionaire of which country?

A) Philippines

B) France

C) Indonesia

D) Japan

  • French billionaire politician Olivier Dassault recently died in a helicopter crash occurred in northwest France. He was also a member of the National Assembly of the country. He was a descendant of the Dassault aircraft–making family. The Dassault Aviation group is a leading French plane manufacturer. He was estimated to be the 361st most wealthy person on the planet.

10. Which Indian state has inaugurated India’s first World Skill Centre?

A) Odisha

B) Madhya Pradesh

C) Rajasthan

D) Nagaland

  • Odisha Chief Minister Naveen Patnaik has recently inaugurated the World Skill Centre (WSC) at Mancheswar. India’s first skill centre, the WSC is developed at an outlay of Rs 1,342 crore with support from the Asian Development Bank under the Odisha Skill Development Project. It aims to impart advanced and employable skills to the youth in the state.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!