Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

16th December 2020 Tnpsc Current Affairs in Tamil & English

16th December 2020 Tnpsc Current Affairs in Tamil & English

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

16th December 2020 Tnpsc Current Affairs in Tamil

நடப்பு நிகழ்வுகள்

1. இந்திய முரைனா புற்களின் புதிய இனங்கள் கீழ்க்காணும் எந்த மாநிலத்தில் காணப்படுகின்றன?

அ. கோவா

ஆ. அஸ்ஸாம்

இ. மேற்கு வங்கம்

ஈ. மகாராஷ்டிரா

  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான புனேவின் அகர்கர் ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் ஒரு புதிய வகை முரைனா புல்லைக் கண்டறிந்துள்ளது. ‘இஸ்கேமம்’ என்னும் புல் வகையினத்தைச் சார்ந்த இது, வெப்பமண்டல மற்றும் துணைவெப்பமண்டல பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது. இது பொதுவாக ‘முரைனா புல்’ என்று அழைக்கப்படுகிறது.
  • மேற்குத்தொடர்ச்சிமலையில் கோவாவில் இதன் புதிய இனமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோவா பல்கலையின் தாவரவியல் பேராசிரியர் M K ஜனார்த்தனம் அவர்களின் நினைவாக, ’Ischaemum janarthanam’ என்று அப்புதிய புல்லினத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.

2. CEEW’இன் அண்மைய ஆய்வின்படி, தீவிர காலநிலை நிகழ்வுகளின் ஹாட்ஸ்பாட்களாக இருக்கும் இந்திய மாவட்டங்களின் சதவீதம் என்ன?

அ. 55

ஆ. 65

இ. 75

ஈ. 85

  • எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில் (CEEW) வெளியிட்டுள்ள ஓர் ஆய்வின்படி, இந்தியாவில் 75 சதவீதத்திற்கும் அதிகமான மாவட்டங்கள் தீவிர காலநிலை நிகழ்வுகளின் ஹாட்ஸ்பாட்களாக உள்ளன. 63.8 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் அம்மாவட்டங்கள் சூறாவளி, வெள்ளம், வறட்சி, வெப்ப மற்றும் குளிர் அலைகள் போன்ற தீவிர காலநிலை நிகழ்வுகளின் ஹாட்ஸ்பாட்களாகும். நாட்டின் தீவிர வானிலை நிகழ்வு ஹாட்ஸ்பாட்கள் வரைபடமாக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

3. HIMS – மருத்துவமனை மேலாண்மை தகவல் அமைப்பை தொடங்கியுள்ள அமைப்பு எது?

அ. இந்திய இரயில்வே

ஆ. இந்திய வான்படை

இ. இந்தியக் கடற்படை

ஈ. AIIMS

  • இந்திய இரயில்வே, மருத்துவமனை மேலாண்மை தகவல் அமைப்பு சோதனைத் திட்டத்தை, தெற்கு மத்திய இரயில்வே மண்டலத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இரயில்வே ஊழியர்களின் நலனுக்காக, மற்றொரு தகவல் தொழில்நுட்ப நடவடிக்கையாக, மருத்துவமனை மேலாண்மை தகவல் அமைப்பை இந்திய இரயில்வே தொடங்கியுள்ளது. இந்தப் புதிய அமைப்பானது நலவாழ்வுச் சேவைகளின் தரத்தை மேம்படுத்தும், மருத்துவ வசதிகளை வெளிப்படையாகப் பயன்படுத்த உதவும்.

4. “ஹீரோஸ் ஆப் 2020” என்றவொன்றை வெளியிடும் அமைப்பு எது?

அ. பில் & மெலிண்டா அறக்கட்டளை

ஆ. UNESCO

இ. டைம்ஸ் இதழ்

ஈ. NDTV

  • “2020’இன் ஹீரோக்கள்” என்பதை டைம்ஸ் இதழ் வெளியிடுகிறது. அது, “கடமையைத் தாண்டியும் சேவை செய்வோரை” கெளரவிக்கிறது. ஜார்ஜ் பிலாய்ட் கொல்லப்பட்டதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 70’க்கும் மேற்பட்டவர்களுக்கு தனது வாஷிங்டன் D C வீட்டின் கதவுகளைத் திறந்தமைக்காக இந்திய-அமெரிக்கரான இராகுல் துபே இந்தப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

5. டிசம்பர்.9 அன்று, எந்தக் கருப்பொருளின்கீழ் பன்னாட்டு ஊழல் எதிர்ப்பு நாள் அனுசரிக்கப்பட்டது?

அ. The Power of People’s pressure

ஆ. Recover with Integrity

இ. Fight Corruption

ஈ. End of corruption

  • ஊழல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், எவ்வாறு அதை எதிர்த்துப் போராடுவது என்பது குறித்தும் பரப்புவதற்காக, ஒவ்வோர் ஆண்டும் டிச.9 அன்று பன்னாட்டு ஊழல் எதிர்ப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. கடந்த 2003ஆம் ஆண்டில் மெக்ஸிகோவில் கையெழுத்திடப்பட்ட ஊழலுக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தின் அங்கிகாரத்திற்காகவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. “Recover with Integrity” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.

6. அண்மையில் எந்தத் தேதியில், தேசிய ஆற்றல் பாதுகாப்பு நாள் (National Energy Conservation Day) இந்தியாவில் கொண்டாடப்பட்டது?

அ. டிசம்பர் 11

ஆ. டிசம்பர் 12

இ. டிசம்பர் 13

ஈ. டிசம்பர் 14

  • தேசிய ஆற்றல் பாதுகாப்பு நாளானது ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர்.14 அன்று கொண்டாடப்படுகிறது. மத்திய எரிசக்தி அமைச்சகத்தின்கீழ் இயங்கும் எரிசக்தித்திறன் பணியகமானது (BEE) 1991ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் இந்நாளைய கொண்டாட்டங்களுக்கு தலைமைதாங்குகிறது.
  • ஆற்றல் சேமிப்பு மற்றும் நீடித்த எரிசக்தி ஆதாரங்களுக்கு மாறவேண்டியதன் அவசியம் குறித்து BEE மக்களிடையே விழிப்புணர்வை பரப்புகிறது.

7. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, “The Presidential Years” என்பது கீழ்க்காணும் எந்த இந்தியக் குடியரசுத்தலைவரின் நினைவுக்குறிப்பு ஆகும்?

அ. பிரதிபா பாட்டீல்

ஆ. பிரணாப் முகர்ஜி

இ. இராம்நாத் கோவிந்த்

ஈ. APJ அப்துல் கலாம்

  • “The Presidential Years” என்பது இந்தியாவின் காலஞ்சென்ற முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி எழுதிய வரவிருக்கும் நூலாகும். இந்த நினைவுக்குறிப்பு, வரும் 2021 ஜனவரியில் உலகளவில் வெளியிடப்படும் நினைவுக்குறிப்புகளின் நான்காவது தொகுதியாகும். 2017ஆம் ஆண்டில், “The Coalition Years — 1996-2012” என்ற சுயசரிதையின் மூன்றாவது தொகுதி வெளியானது.

8. கடல் மட்டத்திலிருந்து 3000 மீட்டர் உயரத்தில் இராயல் வங்கப்புலியைக் கண்ட நாடு எது?

அ. இந்தியா

ஆ. நேபாளம்

இ. பிரேசில்

ஈ. தென்னாப்பிரிக்கா

  • அண்மையில் கடல்மட்டத்திலிருந்து 3165 மீ உயரத்தில் கம்பீரமான இராயல் வங்கப்புலியை (பாந்தெரா டைக்ரிஸ்) நேபாளம் முதன்முதலில் கண்டறிந்துள்ளது. அனைத்து ஆசிய பெரிய பூனை வகைகளிலும் மிகப்பெரியதான இதனை வனத்துறை தனது கேமராமூலம் கண்டுபிடித்துள்ளது. கிழக்கு நேபாளத்தின் கஞ்சஞ்சங்கா நிலப்பரப்புக்கு அந்நாடு சிறப்பு கவனம் செலுத்த உள்ளது. இது இந்தியாவின் சிங்காலியா தேசிய பூங்கா மற்றும் டூவர்ஸ் வெள்ளப்பெருக்குச் சமவெளிகளுக்கு இணைப்பை வழங்குகிறது.

9. நீடித்த மலை மேம்பாட்டுக்கான உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்துள்ள அமைப்பு எது?

அ. பன்னாட்டு மலை நிறுவனம்

ஆ. இந்திய மலை முன்னெடுப்பு

இ. WHO

ஈ. UNESCO

  • இந்திய மலைகள் முன்னெடுப்பானது டேராடூனில் 9ஆவது நீடித்த மலைகள் மேம்பாட்டுக்கான உச்சி மாநாட்டை நடத்தியது. COVID-19 தொற்றுநோயைக் கருத்தில்கொண்டு இவ்வுச்சிமாநாடு மெய்நிகராக நடத்தப்பட்டுள்ளது. நான்கு நாள் நடைபெற்ற இவ்வுச்சிமாநாடு இடம்பெயர்வு, நீர் பாதுகாப்பு, காலநிலை நெகிழ்திறன்போன்ற தலைப்புகளில் கவனம் செலுத்தியது.

10. இந்தியாவின் முதல் mRNA தடுப்பூசியை உருவாக்கியுள்ள மருந்து நிறுவனம் எது?

அ. ஜெனோவா நிறுவனம்

ஆ. சீரம் நிறுவனம்

இ. சிப்லா நிறுவனம்

ஈ. ரான்பாக்ஸி

  • இந்தியாவில் முதன்முறையாக தயாரிக்கப்பட்ட mRNA தடுப்பூசியை மனிதர்களிடம் முதல் & இரண்டாம் கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. புனேவில் உள்ள ஜெனோவா நிறுவனம் HGCO19 என்ற mRNA தடுப்பூசியை தயாரித்துள்ளது. உயிரி தொழில்நுட்பத்துறையின் ஆதவில் இந்தத்தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது. பெருந்தொற்று பிரச்சனைக்கு தீர்வுகாண mRNA அடிப்படையிலான தடுப்பூசிகள், அறிவியல்பூர்வமாக சிறந்ததேர்வாக கருதப்படுகிறது.

16th December 2020 Tnpsc Current Affairs in English

1. A new species of Indian Muraina grasses has been spotted in which state?

[A] Goa

[B] Assam

[C] West Bengal

[D] Maharashtra

  • Agharkar Research Institute (ARI), Pune, an autonomous institute of the Department of Science & Technology, has recently spotted a new species of Murainagrass. Ischaemum is a genus of grass, widespread in tropical and semitropical regions. It is commonly called as Murainagrass. A new and tolerant species has been spotted in Goa in the Western Ghats. It was named Ischaemum janarthanamiiin honour of Goa University’s Botany Professor M. K. Janarthanam.

2. As per the recent study of CEEW, what is the per centage of Indian districts that are hotspots of extreme climate events?

[A] 55

[B] 65

[C] 75

[D] 85

  • According to a study released by the Council on Energy, Environment and Water (CEEW), over 75% districts in India are hotspots of extreme climate events.
  • The districts, which are home to more than 63.8 crore people, are hotspots of extreme climate events such as cyclones, floods, droughts, heat and cold waves. This is the first time the extreme weather event hotspots in the country are being mapped.

3. HIMS – Hospital Management Information System has been launched by which organisation?

[A] Indian Railways

[B] Indian Air Force

[C] Indian Navy

[D] AIIMS

  • The Indian Railways has recently launched Hospital Management Information System (HMIS). This aims to provide enhanced health care facilities to its employees. The trial version of the project has been launched in South Central Railway. This is expected to improve the health care system of the Railways and improve the utilisation of resources.

4. “Heroes of 2020” is published by which organisation?

[A] Bill and Melinda Gates Foundation

[B] UNESCO

[C] TIMES Magazine

[D] NDTV

  • The “Heroes of 2020” is published by the TIMES Magazine. It honours those people who have “went above and beyond the call of duty”. Rahul Dubey who is an Indian–American has been listed in the Heroes of 2020, who opened the doors of his Washington DC home to over 70 people demonstrating against the killing of George Floyd.

5. International Anti–Corruption Day is being observed on December 9, 2020 under which theme?

[A] The Power of People’s pressure

[B] Recover with Integrity

[C] Fight Corruption

[D] End of corruption

  • International Anti–Corruption Day is observed on 9 December. The day aims to raise awareness about corruption and the measures that can be taken to combat corruption. The theme for the year 2020 is “Recover with Integrity”.

6. When is the ‘National Energy Conservation Day’ observed in India?

[A] December 11

[B] December 12

[C] December 13

[D] December 14

  • The National Energy Conservation Day is celebrated every year on December.14. The Bureau of Energy Efficiency (BEE), under Union Ministry of Power spearheads the celebrations of the day every year since 1991.

7. “The Presidential Years”, which was seen in the news recently, is the memoir of which Indian President?

[A] Pratipa Patil

[B] Pranab Mukherjee

[C] Ramnath Govind

[D] APJ Abdul Kalam

  • “The Presidential Years” is an upcoming book authored by the late former President of India Pranab Mukherjee. This memoir is the fourth volume of the memoirs, that will be released globally in January 2021. The third volume of former President’s autobiography titled “The Coalition Years — 1996–2012” in the year 2017.

8. Which country has spotted the Royal Bengal Tiger at an altitude of over 3000 m above sea level?

[A] India

[B] Nepal

[C] Brazil

[D] South Africa

  • Nepal has recently spotted the majestic Royal Bengal Tiger (Panthera Tigris), at an altitude of 3,165 m above sea level for the first time. The largest of all Asian big cats has been spotted by a camera trap set up by the Forest Department. The country is to provide special attention to the Kanchenjunga Landscape in eastern Nepal. It provides connectivity to India’s Singalia National Park and Dooars floodplains.

9. The Sustainable Mountain Development Summit is organized by which organization?

[A] International Mountain Institute

[B] Indian Mountain Initiative

[C] WHO

[D] UNESCO

  • Indian Mountain Initiative (IMI) organized the 9th edition of Sustainable Mountain Development Summit in Dehradun. The summit has been organized in a Virtual Mode, on account of the COVID 19 pandemic. It is a 4–day long summit where issues like migration, water security, climate resilience would be discussed by delegates.

10. Which pharma company has developed India’s first mRNA vaccine?

[A] Gennova Biopharmaceuticals

[B] Serum Institute

[C] Cipla Pharma

[D] Ranbaxy

  • Gennova Biopharmaceuticals has developed India’s first Covid–19 vaccine candidate based on mRNA. It has recently received approval from drug regulators of the country for entrusting it to clinical trials. HGCO19 is the name of the mRNA vaccine candidate developed by the Pune based institution, using the seed grant received under Ind–CEPI mission of the department of biotechnology of the Union Ministry of science and technology.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!