TnpscTnpsc Current Affairs

16th December 2021 Tnpsc Current Affairs in Tamil & English

16th December 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 16th December 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

December Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. OECD’இன் சமீபத்திய பொருளாதாரக் கண்ணோட்டத் -தின்படி, இந்த ஆண்டுக்கான உலகளாவிய GDP வளர்ச்சி விகிதம் என்ன?

அ) 9.5%

ஆ) 8%

இ) 5.6% 

ஈ) 2.3%

  • OECD அதன் சமீபத்திய பொருளாதாரக் கண்ணோட்டத்தில் உலக வளர்ச்சி இந்த ஆண்டு 5.6%ஆக இருக்கும் என்று கூறியுள்ளது. உலகளாவிய GDP வளர்ச்சி 2022’இல் 4.5%ஆகவும், 2023’இல் 3.2%ஆகவும் இருக்கும் என்பதையும் அது சிறப்பித்துக்கூறியுள்ளது.

2. அண்மையில் நிறைவேற்றப்பட்ட ‘அணை பாதுகாப்பு மசோதா, 2019’ உடன் தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது?

அ) உள்துறை அமைச்சகம்

ஆ) ஜல் சக்தி அமைச்சகம் 

இ) உழவு அமைச்சகம்

ஈ) சுற்றுச்சூழல், வன அமைச்சகம்

  • அண்மையில் மாநிலங்களவையில், ‘அணை பாதுகாப்பு மசோதா, 2019’ நிறைவேற்றப்பட்டது. மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், இந்த மசோதா நீர், அணை உரிமை அல்லது பராமரிப்பு, அல்லது மின்சாரம் போன்ற வளங்கள் மீதான மாநிலங்களின் உரிமைகளை கைக்கொள்ளும் நோக்கத்தை கொண்டிருக்கவில்லை என்று தெளிவுபடுத்தினார்.
  • நாடு முழுவதுமுள்ள அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அணைகள் தொடர்பான பேரிடர்களை தடுக்கவும் இந்த மசோதா வகை செய்கிறது.

3. “State Finances: A Study of Budgets of 2021-22” என்ற தலைப்பில் ஆய்வை வெளியிட்ட நிறுவனம் எது?

அ) NITI ஆயோக்

ஆ) நிதி அமைச்சகம்

இ) ஆர்பிஐ 

ஈ) ஏடிபி

  • ரிசர்வ் வங்கியின் வருடாந்திர வெளியீடு, “State Finances: A Study of Budgets of 2021-22” என்ற தலைப்பில் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையின்படி, மாநிலங்களின் ஒருங்கிணைந்த கடன்-ஜிடிபி விகிதம் 2022 மார்ச் இறுதிக்குள் 31 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 2022-23ல் (FY23) அடைய வேண்டிய இலக்கான 20 சதவீதத்தைவிட அதிகமாகும்.

4. அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ‘GJ 367 b’ என்பது ஒரு ………..?

அ) கருந்துளை

ஆ) புறக்கோள் 

இ) சிறுகோள்

ஈ) விண்கல்

  • புதன் கோள் போன்று 8 மணிநேரத்தை ஓராண்டாகக் கொண்ட புறக்கோள் ‘GJ 367 b’ஐ அறிவியலாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். இது புதன் போன்று பாறைக்கோள் என்றும் பூமியின் பாதி நிறை கொண்டது என்றும் கருதப்படுகிறது.
  • ‘GJ 367 b’ ஆனது 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் தங்கள் நட்சத்திரத்தை சுற்றிவரும் புறக் கோள்கள் குழுவிற்கு உரியதாகும். இதனை ஜெர்மன் விண்வெளி மையத்தின் கோள் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

5. எந்நிறுவனம் / குழுமத்தின் 75ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், இந்திய அரசு நினைவு அஞ்சல்தலை வெளியிட்டுள்ளது?

அ) டாடா குழுமம்

ஆ) ரிலையன்ஸ் குழுமம்

இ) மஹிந்திரா மற்றும் மஹிந்திரா குழுமம் 

ஈ) கோத்ரேஜ் குழுமம்

  • மஹிந்திரா மற்றும் மஹிந்திரா குழுமத்தின் 75 ஆண்டு நிறைவை முன்னிட்டு, இந்திய அரசு நினைவு அஞ்சல் தலைகளை வெளியிட்டுள்ளது. 1945ஆம் ஆண்டு KC மஹிந்திரா மற்றும் அவரது சகோதரர் JC மஹிந்திரா ஆகியோரால் நிறுவப்பட்டதுதான் மஹிந்திரா மற்றும் மஹிந்திரா குழுமம். கடந்த 1947’இல், வில்லிஸ் ஜீப்களை அந்த நிறுவனம் உற்பத்தி செய்யத் தொடங்கியது.

6. 2021 – உலக எய்ட்ஸ் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ) Know your Status

ஆ) Communities Make the Difference

இ) Global Solidarity Shared Responsibility

ஈ) End inequalities. End Aids. End pandemics 

  • ‘உலக எய்ட்ஸ் நாள்’ ஒவ்வோர் ஆண்டும் டிச.1 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இது முதன் முதலில் 1988’இல் அனுசரிக்கப்பட்டது. “End inequalities. End Aids. End pandemics” என்பது இந்த ஆண்டுக்கான உலக எய்ட்ஸ் நாளின் கருப்பொருளாகும்.

7. 2021 – ‘சர்வதேச தன்னார்வலர் நாளுக்கானக்’ கருப் பொருள் என்ன?

அ) Volunteer now for our common future 

ஆ) World needs Volunteers

இ) Volunteering during Pandemic

ஈ) Welcoming Volunteers

  • ஆண்டுதோறும், நீடித்த வளர்ச்சி இலக்குகளை (SDGs) அடைவதற்காக தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் தன்னார்வலர்களின் பங்கை ஊக்குவிப்பதற்காக டிச.5 அன்று சர்வதேச தன்னார்வலர்கள் நாள் அனுசரிக்கப்படு -கிறது. இந்நாள் உலகெங்குமுள்ள தன்னார்வலர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கிறது.
  • UNGA, 2001’ஐ சர்வதேச தன்னார்வலர்களின் ஆண்டாக குறித்தது. “Volunteer now for our common future” என்பது இந்த ஆண்டுக்கான ‘சர்வதேச தன்னார்வலர் நாளின்’ கருப்பொருளாகும்.

8. உலக மண் நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) டிசம்பர் 3

ஆ) டிசம்பர் 5 

இ) டிசம்பர் 7

ஈ) டிசம்பர் 9

  • மண்ணின் முக்கியத்துவம் மற்றும் அதன் நிலையான மேலாண்மை குறித்து மக்களின் கவனத்தைக் குவிப்பதற்காக, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5ஆம் தேதி உலக மண் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பிரச்சாரமானது “Halt soil salinization, boost soil productivity” என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டது.

9. ‘சிப்ரியன் போயாஸ் பரிசுடன்’ தொடர்புடைய துறை எது?

அ) விண்வெளி அறிவியல்

ஆ) கணிதம் 

இ) வைராலஜி

ஈ) வணிகம்

  • புகழ்பெற்ற இந்திய-அமெரிக்க கணிதவியலாளர் நிகில் ஸ்ரீவஸ்தவா, முதன் முறையாக வழங்கப்பட்டும் $5,000 மதிப்புடைய சிப்ரியன் போயாஸ் பரிசுக்கு கூட்டாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆபரேட்டர் தியரியில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக அமெரிக்க கணித சங்கம் அவருக்கு இவ்விருதை வழங்குகிறது.

10. ‘Public Service Ethics – A Quest for Naitik Bharat’ என்ற நூலை எழுதியவர் யார்?

அ) பிரபாத் குமார் 

ஆ) விஜய் குமார்

இ) இறையன்பு

ஈ) அஜய் பூஷன் பாண்டே

  • ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் ஆளுநரும், இந்திய அரசின் முன்னாள் கேபினட் செயலாளருமான பிரபாத் குமார் எழுதிய, ‘Public Service Ethics – A Quest for Naitik Bharat’ என்ற நூலை குடியரசுத் துணைத் தலைவர் வெளியிட்டார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. எண்ம பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்க ரூ.1,300 கோடி மத்திய அமைச்சரவை ஒப்புதல்

யுபிஐ, ரூபே டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் எண்ம பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்க ரூ.1,300 கோடி திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விவரித்தார். அவர், “எண்ம பரிமாற்றத்தை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக ரூ.1,300 கோடி முதலீடு செய்யப்படும்’ என்றார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

எண்ம வழியில் பணப் பரிமாற்றங்கள் செய்யும்போது அந்தத் தொகைக்கு ஏற்ப பரிமாற்றக் கட்டணம் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்தப் பரிமாற்றக் கட்டணத்தை திருப்பிச் செலுத்த அரசு முடிவு செய்துள்ளது. அதாவது, இந்தத் திட்டத்தின் கீழ் பீம்}யுபிஐ, ரூபே டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ரூ.2,000 வரையிலான எண்ம பரிவர்த்தனைகளில், பரிவர்த்தனைக் கட்டணம் திருப்பி அளிக்கப்படும். மேலும், பீம்}யுபிஐ, ரூபே டெபிட் கார்டுகள் மூலமாக நடைபெறும் எண்ம பரிவர்த்தனைகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் ஊக்கத்தொகையாக வங்கிகளுக்கு அரசு அளிக்கும். இதனால், வங்கிகள் எண்ம பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும். அதிகமானோர் எண்ம பரிமாற்றத்துக்கு மாறுவார்கள்.

இந்தத் திட்டத்துக்காக, கடந்த ஏப்ரல் 1}ஆம் தேதியில் இருந்து ஓராண்டுக்கு ரூ. ரூ.1,300 கோடியை மத்திய அரசு முதலீடு செய்யவுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செமிகண்டக்டர், மின்னணு திரை உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.76,000 கோடி: செமி கண்டக்டர், மின்னணு சாதனங்களில் பயன்படுத்தப்படும் திரைகள் ஆகியவற்றின் உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.76,000 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், “நம் அன்றாட வாழ்வில் மின்னணு சாதனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மின்னணு உபகரணங்களில் செமிகண்டக்டர் உதிரிபாகங்கள் முக்கியமானவை.

பிரதமர் மோடி வரவேற்பு: அமைச்சரவை முடிவுகள் தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “செமி கண்டக்டர் உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசு முடிவெடுத்திருப்பது, அந்தத் துறையில் புதுமைக் கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சியை ஊக்குவிக்கும். உற்பத்தியும் அதிகரிக்கும். மத்திய அரசின் சுயசார்பு இந்தியா திட்டத்துக்கு இது வலுசேர்க்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

வாக்காளர் அட்டை – ஆதார் இணைக்கப்படும்

தேர்தல் சீர்திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதாவின்படி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்படும். இதனால், ஒருவர் பல வாக்காளர் அடையாள அட்டையைப் பயன்படுத்துவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

தற்போது ஜனவரி 1}ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு புதிய வாக்காளர்கள் சேர்க்கப்படுகிறார்கள். ஆண்டுக்கு நான்கு தேதிகளை அடிப்படையாகக் கொண்டு புதிதாக வாக்காளர்கள் சேர்ப்பதற்கு மசோதா வழிவகுக்கிறது. தற்போதைய நிலையில், பணிசார்ந்து ராணுவ வீரர் வெளியூர் சென்றுவிட்டால் அவருக்குப் பதிலாக அவருடைய மனைவி வாக்களிக்க முடியும். ஆனால், பெண் ராணுவ அலுவலர் ஊரில் இல்லாவிட்டால் அவருடைய கணவரால் வாக்களிக்க முடியாது. எனவே, கணவரும் வாக்களிக்கும் வகையில், இதுதொடர்பான சட்டப் பிரிவில் “மனைவி’ என்ற வார்த்தைக்குப் பதிலாக “வாழ்க்கைத் துணைவர்’ என்ற வார்த்தையை சேர்ப்பதற்கு மசோதா வழிவகுக்கிறது.

2. ராணி மேரி கல்லூரியின் 5,500 மாணவிகள் சுகாதாரத் தூதுவர்களாக நியமனம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

ராணி மேரி கல்லூரியில் பயிலும் 5,500 மாணவிகள் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் சுகாதாரத் தூதுவர்களாக நியமிக்கப்படுவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

“ராணி மேரி கல்லூரி மாணவிகளுக்கு நடைபெறும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் கலந்து கொள்வதிலும், இங்கு மாணவிகளின் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளின் மூலம் கரோனா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கு பெற்றதிலும் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இக்கல்லூரி மாணவிகளின் ஆர்வத்தைப் பாராட்டும் வகையிலும், அவர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் இங்கு பயிலும் 5,500 மாணவிகள் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் சுகாதாரத் தூதுவர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

இவர்களுக்கு சுகாதாரத்துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் அடையாள அட்டை வழங்கப்படும். இந்த மாணவிகள் தங்கள் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் உறவினர்களுக்கு கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும், கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள்.

இந்தக் கல்லூரியில் பயிலும் 5,500 மாணவிகளில் 3800 மாணவிகள் இரண்டு தவணை தடுப்பூசியும், 800 மாணவிகள் முதல் தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர். 900 மாணவிகள் மட்டுமே தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். அவர்களும் இந்தத் தடுப்பூசி முகாமில் கலந்துகொண்டு ஆர்வமாகத் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர். 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய கல்லூரி என்கிற நிலையை ராணி மேரி கல்லூரி ஓரிரு நாட்களில் அடைந்துவிடும். இதற்காக கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளுக்கு என்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நைஜீரியா நாட்டிலிருந்து சென்னை வந்த ஒரு நபருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டு, அதில் மரபியல் மாற்றம் இருந்தது. அவருடன் தொடர்புடைய உறவினர்களுக்குப் பரிசோதனை மேற்கொண்டதில் 6 நபர்களுக்கு கரோனா தொற்றும், அதில் மரபியல் மாற்றமும் கண்டறியப்பட்டதால் இந்த 7 நபர்களின் தடயவியல் மாதிரிகள் ஒமைக்ரான் வகை தொற்றா எனக் கண்டறிய பெங்களூருக்கு ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது. 7 நபர்களும் சென்னை கிங்ஸ் நிறுவன மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் உடல்நிலை சீரான நிலையில் உள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களில் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதிக பாதிப்புள்ள 12 நாடுகளிலிருந்து வரும் பயணிகள் முழுமையாகப் பரிசோதனை செய்யப்படுகின்றனர். அதன்படி, இதுவரை 12,039 நபர்களுக்கு கோவிட் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதிப்பு குறைவாக உள்ள நாடுகளிலிருந்து 63,411 பயணிகள் தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளனர். இவர்களில் 2 சதவீதம் நபர்களுக்கு, அதாவது 1,834 நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்களில் 40 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 36 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களின் சளி மாதிரிகள் மீண்டும் ஆய்வு செய்வதற்காக பெங்களூருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு மரபியல் மாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவக்கூடியது எனத் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வகை வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முகக்கவசம் அணிவதும், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்துவதுமே நிரந்தரத் தீர்வு எனத் தெரிவித்துள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டாலும், ஆக்சிஜன் சுவாச உதவி போன்ற தீவிர பாதிப்பு இன்றி லேசான அறிகுறிகளுடன் உயிர்ப் பாதுகாப்பு உள்ளது.

பாதிப்பு குறைவாக உள்ள நாடுகளிலிருந்து வரும் நபர்களில் 2% நபர்களுக்கு மட்டும் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டாலும், விமான நிலையத்திலிருந்து வெளிவரும்போது வெப்பநிலை பரிசோதனை மற்றும் மருத்துவக் குழுவால் பரிசோதிக்கப்படும்போது ஏதேனும் அறிகுறிகள் இருப்பின் அவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதிக பாதிப்புள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை எடுக்கப்பட்டு தொற்று பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டாலும் அவர்கள் வீட்டுத் தணிமையில் 8 நாட்களுக்கு இருக்க அறிவுறுத்தப்பட்டு மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னரே வெளியில் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் காவல் துறையின் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்துவது மற்றும் 18 வயதிற்குக் கீழ் உள்ள நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசின் முடிவினைப் பொறுத்து முறையான வழிமுறைகளைப் பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

3. வேளாண் விளைபொருள் பட்டியலில் இருந்து பருத்தி நீக்கம்: விவசாயிகள் அதிர்ச்சி

நெல், நிலக்கடலைக்கு அடுத்தபடியாக அதிக சந்தைக் கட்டணம் வசூலித்துக் கொடுத்த பருத்தியை, வேளாண் விளைபொருள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்து தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) சட்டத்தின் கீழ் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் அறிவிக்கை செய்யப்பட்ட வேளாண்மை மற்றும் தோட்டக்கலை விளைபொருள்களுக்கு 1 சதவீத சந்தைக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் அதிகம் விளையும் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை அல்லது அந்த உற்பத்திப் பொருளுக்கு தகுந்த விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக குறிப்பிட்ட பயிர்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலிருந்து சுமார் 16 கி.மீட்டர் சுற்றளவிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், விற்பனைக்கு வரும் விளைபொருள்களுக்கு வியாபாரிகளிடம் சந்தைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேபோல் வெளியிடங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வரும் விளைபொருள்களையும் வெளிப்படையாகத் தெரிவித்து 1 சதவீத சந்தைக் கட்டணத்தை வியாபாரிகள் செலுத்தி வருகின்றனர். இதனை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு அந்தந்தப் பகுதியிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜிஎஸ்டி வரியை செலுத்தும் வியாபாரிகள், 1 சதவீத சந்தைக் கட்டணத்தை செலுத்துவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.20 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டி தந்து கொண்டிருந்த பருத்தியை, தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) சட்டத்திலிருந்து நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வியாபாரிகளுக்கு மட்டுமே சாதகமான இந்த சட்டத் திருத்தம், விவசாயிகள் மட்டுமின்றி வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அதிகாரிகள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 மாத இடைவெளியில் முழு விலக்கு: தமிழகத்தில் திருப்பூர், கோவை, திண்டுக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் பருத்தி உற்பத்தியில் முன்னிலை வகித்து வருகின்றன.

அதேபோல், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களும் பருத்தி சாகுபடியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இந்த மாவட்டங்களில் தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) சட்டத்தின் கீழ், நூலிழைகள் என்ற பிரிவின் கீழ் பருத்திக்கு கபாஸ், லின்ட், கழிவு என்ற 3 பிரிவுகளில் சந்தைக் கட்டணமாக 1 சதவீதம் வசூலிக்கப்பட்டு வந்தது. நாளொன்றுக்கு 50 கிலோவுக்கு கூடுதலான பருத்திப் பஞ்சையும், 100 கிலோவுக்கு கூடுதலான கழிவுப் பஞ்சையும், 150 கிலோவுக்கு கூடுதலான கபாஸ் (விதை நீக்காத பருத்தி) எடுத்துச் செல்லும்போதும் இந்த 1 சதவீத கட்டணம் வசூலிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், லின்ட் (விதை நீக்கப்பட்ட பஞ்சு), கழிவு (கழிவு பஞ்சு) ஆகியவற்றுக்கு சந்தைக் கட்டணத்திலிருந்து கடந்த செப்டம்பர் மாதம் விலக்கு அளித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதன்தொடர்ச்சியாக 2 மாத இடைவெளியில், பருத்திக்கும் (கபாஸ்) சந்தைக் கட்டணத்திலிருந்து விலக்கு அளித்து கடந்த 20 நாள்களுக்கு முன்பு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பருத்தி வேளாண் விளைபொருள் இல்லையா?: தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) சட்டத்தின் கீழ் நூலிழைகள் என்ற பிரிவில் இடம் பெற்றிருந்த பருத்தியை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டதன் மூலம், பருத்தி இனி வேளாண் விளைபொருள் கிடையாதா என்ற சந்தேகம் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

நெல், நிலக்கடலைக்கு அடுத்தப்படியாக பருத்தி மூலமாக மட்டுமே தமிழக அரசுக்கு அதிக வருவாய் கிடைத்து வரும் நிலையில், வியாபாரிகளின் நலனுக்காக விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். வேளாண் விளைபொருள் பட்டியலில் இருந்து பருத்தி நீக்கப்பட்டிருப்பது விவசாயிகளுக்கு எதிர்காலத்தில் பெரும் இழப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

இது தொடர்பாக அகில இந்திய விவசாயிகள் சங்க மத்தியக் குழு உறுப்பினர் இரா.சச்சிதானந்தம் கூறியதாவது:

மகாராஷ்டிரம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து பருத்தியை கொள்முதல் செய்வதற்கு வியாபாரிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் பருத்தி சாகுபடி பரப்பு தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. இதுபோன்ற சூழலில், பருத்திக்கு சந்தைக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பது, விவசாயிகளுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் முடிவாக அமைந்துள்ளது.

தமிழகத்தில் குறைவான உற்பத்தி இருந்தாலும் கூட, சந்தைக் கட்டண வசூல் அமலில் இருந்தால் மட்டுமே விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்கும்; இல்லாத நிலையில், வியாபாரிகள் சின்டிகேட் அமைத்து குறைந்த விலைக்கு கொள்முதல் செய்வார்கள். இதனைத் தடுக்கும் வகையில் பருத்திக்கு விலக்கு அளிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும். விவசாயிகள் வருமானம் ஈட்டக் கூடிய பணப் பயிராக உள்ள பருத்திக்கு, ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் நியாயமான விலை கிடைப்பதையும் அரசு உறுதிப்படுத்த வேண்டும்என்றார்.

4. பன்னாட்டு நிறுவன தலைவா்கள் பட்டியலில் இந்தியா வம்சாவளி பெண்

மகாராஷ்டிர மாநிலம், கோலாப்பூரில் பிறந்து வளா்ந்த இந்திய வம்சாவளியைச் சோ்ந்த லீனா நாயா் பன்னாட்டு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பேற்கவுள்ளாா்.

இந்திய வம்சவாளியான லீனா நாயா் (52), யுனிலீவா் நிறுவனத்தில் தலைமை மனிதவள அதிகாரியாக பணியாற்றினா். அந்தப் பதவியை வகித்த முதல் பெண் அவா் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், லீனா யுனிலீவா் நிறுவனத்திலிருந்து விலகி பிரெஞ்ச் லக்ஸரி குழுமத்தில் இணைந்தாா்.

தற்போது அந்தக் குழுமத்தின் லக்ஸரி ஃபேஷன் ஹவுஸ் சேனலின் தலைமைச் செயல் அதிகாரியாக லீனா நாயா் அடுத்த மாதம் பொறுப்பேற்கவுள்ளாா்.

இதன்மூலம், பன்னாட்டு நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பை வகிக்கும் இந்திய வம்சாவளியினா் பட்டியலில் உள்ள சுந்தா் பிச்சை, பராக் அக்ரவால், சத்யா நாதெள்ளா வரிசையில் லீனா நாயரும் இணையவுள்ளாா்.

5. மூத்த குடிமக்களுக்கு எதிரான குற்றங்கள்!

2018-ஆம் ஆண்டுமுதல் 2020-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பாக இந்தியா முழுவதும் 76,947 வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வழக்குகள் தொடா்பாக 78,217 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 7,113 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சா் வீரேந்திர குமாா் செவ்வாய்க்கிழமை எழுத்துபூா்வமாக தாக்கல் செய்த பதிலில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் இத்தகவலை வழங்கியுள்ளது. மூத்த குடிமக்களுக்கு எதிரான குற்றங்களுக்கான காரணங்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் பராமரிக்கவில்லை.

‘இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, பொது ஒழுங்கானது மாநிலம் தொடா்புடைய விஷயம். மூத்த குடிமக்களின் பாதுகாப்புக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இதுதொடா்பாக இரண்டு விரிவான அறிவுறுத்தல்களை அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு கடந்த 2008 மற்றும் 2013-ஆம் ஆண்டுகளில் மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. அதில் மூத்த குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக’ அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

தமிழகம்: மூத்த குடிமக்களுக்கு எதிரான குற்றங்களில் இந்தியா முழுவதும் 3 ஆண்டுகளில் தண்டனை விதிக்கப்பட்ட மொத்த நபா்கள் 7,113. இதில், அதிகபட்சமாக தமிழகத்தில் 2018-இல் 955 போ், 2019-இல் 1030 போ், 2020-இல் 201 போ் என மொத்தம் 2,186 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம்

இந்தியா முழுவதும் 3 ஆண்டுகளில் 7,113 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக தமிழகத்தில் 2018}இல் 955 பேர், 2019}இல் 1,030 பேர், 2020}இல் 201 பேர் என மொத்தம் 2,186 பேர் தண்டனை பெற்றுள்ளனர்.

6. சூரியனைத் ‘தொட்ட’ நாசா விண்கலம்!

இதுவரை இல்லாத நெருக்கத்தில் சென்று சூரியனில் ஆய்வு மேற்கொள்வதற்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அனுப்பியுள்ள ‘பாா்க்கா்’ விண்கலம், முதல்முறையாக சூரியனின் வளிமண்டலத்தில் நுழைந்து சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து நாசா வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வரலாற்றில் முதல்முறையாக ஒரு விண்கலம் சூரியனைத் ‘தொட்டுள்ளது’. நாசாவின் பாா்க்கா் விண்கலம் சூரிய வளிமண்டலத்தில் மேல்பகுதியில் நுழைந்து பல்வேறு புதிய தகவல்களை சேகரித்துள்ளது.

நிலவில் முதல்முறையாக மனிதா்கள் தரையிறங்கிய பிறகுதான் அதனைக் குறித்த பல விவரங்கள் அறிவியல் உலகுக்குத் தெரியவந்தது. அதே போல், சூரியனின் வளிமண்டலத்துக்குள் பாா்க்கா் விண்கலம் நுழைந்துள்ளது இதுதொடா்பான ஆய்வில் மிகப் பெரிய முன்னேற்றத்தை அளித்துள்ளது.

நீண்ட தொலைவிலிருந்து மற்ற விண்கலன்களால் தெரிந்து கொள்ள முடியாத உண்மைகளை பாா்க்கா் விண்கலம் சூரியனின் வளிமண்டலத்துக்குள் நுழைந்து கண்டறிந்துள்ளது என்று நாசா வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரியனில் இதுவரை கண்டறியப்படாத உண்மைகளைக் கண்டறியும் முயற்சியாக, அதற்கு மிக நெருக்கத்தில் விண்கலத்தை அனுப்பி ஆய்வு செய்யும் திட்டத்தை நாசா கடந்த 2009-ஆம் ஆண்டு அறிவித்தது.

அந்த விண்கலத்தை மேரிலாண்ட் மாகாணம், பால்ட்டிமோா் நகரிலுள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் ஆய்கவகம் வடிவமைத்தது.

கடந்த 2015-ஆம் ஆண்டே இந்த விண்கலத்தை விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டாலும், பல்வேறு காரணங்களால் அந்தத் திட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

இந்தச் சூழலில், ஃப்ளோரிடா மாகாணம், கேப் காா்னிவல் பகுதியிலுள்ள ராக்கெட் ஏவுதளத்திலிருந்து சக்தி வாய்ந்த அலையன்ஸ் டெல்ட்டா 4 வகை கனரக ராக்கெட்கள் மூலம் பாா்க்கா் விண்கலம் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

அதன் பிறகு 3 ஆண்டுகளாக சூரியனை சுற்றி வரும் அந்த விண்கலம், அதன் நெருக்கத்தில் செல்லும்போது பல தகவல்களை சேகரித்து அனுப்பியது.

இந்த நிலையில் தற்போது சூரியனின் காற்றுமண்டலத்துக்குள் முதல் முறையாக நுழைந்து பாா்க்கா் விண்கலம் ஆய்வு மேற்கொண்டுள்ளது. இந்தப் பகுதியில்தான், பூமியில் தாக்கங்களை ஏற்படுத்தும் பல்வேறு உண்மைகள் பொதிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அந்தப் பகுதியில் பாா்க்கா் விண்கலம் மேற்கொண்டுள்ள ஆய்வு, சூரியனைக் குறித்தும், பிரபஞ்சத்தைக் குறித்தும் பல மா்ம முடிச்சுகளை அவிழ்க்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

7 ஆண்டுகளில் இந்த விண்கலம் சூரியனை 24 முறை நீள்வட்டப்பாதையில் வலம் வரும் எனவும், மிகவும் குறைந்தபட்சமாக சூரியனுக்கு 61.2 லட்சம் கி.மீ. நெருக்கத்தில் வரும் 2025-ஆம் ஆண்டு கடந்து செல்லும் எனவும் கூறப்படுகிறது.

சூரியனின் வளிமண்டலத்துக்குள் நுழைந்த முதல் விண்கலம் என்பது மட்டுமன்றி, மனிதா்களால் உருவாக்கப்பட்டு, வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு அதிவேகத்தில் பாய்ந்து செல்லும் பொருள் என்ற சிறப்பும் பாா்க்கா் விண்கலத்துக்கு உள்ளது.

அதுமட்டுமன்றி, உயிரோடிருக்கும் விஞ்ஞானியின் பெயா் சூட்டப்பட்டுள்ள முதல் விண்வெளி ஆய்வுக் கலம் என்பதும் பாா்க்கரின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

சூரியக் காற்று குறித்த உண்மைகளை கடந்த 1958-ஆம் ஆண்டு கண்டறிந்து சொன்ன விஞ்ஞானி யுஜீன் பாா்க்கரின் (91) பெயா் இந்த விண்கலத்துக்குச் சூட்டப்பட்டுள்ளது.

பாா்க்கா் – ஒரு பாா்வை..

2025-ஆம் ஆண்டு வரை வலம் வரும்

சூரியனை 24 முறை நெருங்கிக் கடக்கும்

அதிகபட்சமாக சூரியனுக்கு 61.2 லட்சம் கி.மீ. நெருக்கத்தில் செல்லும்

1,300 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தைத் தாங்கும்

மணிக்கு 7 லட்சம் கி.மீ. வேகம் (நொடிக்கு 190 கி.மீ.)

1. What is the Global GDP Growth for this year, as forecasted by OECD’s latest economic outlook?

A) 9.5%

B) 8%

C) 5.6% 

D) 2.3%

  • Organisation for Economic Cooperation and Development said in its latest economic outlook that global growth is set to hit 5.6% this year. It also highlighted that the Global GDP growth would moderate to 4.5% in 2022 and 3.2% in 2023.

2. Which Union Ministry is associated with the ‘Dam Safety Bill, 2019’ passed recently?

A) Ministry of Home Affairs

B) Ministry of Jal Shakti 

C) Ministry of Agriculture

D) Ministry of Environment, Forest and Climate Change

  • The Rajya Sabha passed the Dam Safety Bill, 2019 recently. The union minister for Jal Shakti Gajendra Singh Shekhawat clarified that the Bill was not intended to encroach upon the states’ rights on their waters, dam ownership or maintenance, or even resources like power. The bill seeks to ensure the safety of dams across the country and prevent dam–related disasters.

3. Which institution released the publication titled ‘State Finances: A Study of Budgets of 2021–22’?

A) NITI Aayog

B) Finance Ministry

C) RBI 

D) ADB

  • The Reserve Bank’s annual publication titled ‘State Finances: A Study of Budgets of 2021–22’ was released recently. As per the report, the combined debt–to–GDP ratio of states is expected to remain at 31 per cent by end–March 2022 which is higher than the target of 20 per cent to be achieved by 2022–23 (FY23).

4. ‘GJ 367 b’, which was discovered recently, is a ………..?

A) Black–hole

B) Exoplanet 

C) Asteroid

D) Meteor

  • Scientists have recently discovered Mercury–like exo–planet ‘GJ 367 b’ where a year is only eight hours long. It’s believed to be a rocky planet like Mercury and has half the mass of Earth. GJ 367 b also belongs to the ‘ultra–short period’ (USP) group of exo–planets that orbit their star in less than 24 hours. Planet GJ 367b was discovered by scientists at the German Aerospace Center (DLR) Institute of Planetary Research.

5. To mark 75 years of which company / group, commemorative postage stamp has been released by the Government of India?

A) TATA Group

B) Reliance Group

C) Mahindra and Mahindra Group 

D) Godrej Group

  • To mark 75 years of Mahindra and Mahindra Group, the Government of India has released commemorative postage stamps.
  • The Indian conglomerate was founded by KC Mahindra & his brother JC Mahindra in the year 1945. Soon in 1947, the company started manufacturing Willys Jeeps.

6. What is the theme of ‘World Aids Day’ 2021?

A) Know your Status

B) Communities Make the Difference

C) Global Solidarity Shared Responsibility

D) End inequalities. End Aids. End pandemics 

  • ‘World Aids Day’ is observed every year on December 1, across the world. It was first observed in 1988. “End inequalities. End Aids. End pandemics.” is the theme for this year’s World Aids Day.

7. What is the theme of the ‘International Volunteer Day’ in 2021?

A) Volunteer now for our common future 

B) World needs Volunteers

C) Volunteering during Pandemic

D) Welcoming Volunteers

  • Every year, International Volunteer Day is observed on December 5 to encourage the role of volunteers at national and international level for achieving sustainable development goals (SDGs). This day recognises the contribution of volunteers across the globe.
  • UNGA signified 2001 as International Year of Volunteers (IYV). The theme of this year’s ‘International Volunteer Day’ is ‘Volunteer now for our common future’.

8. When is the ‘World Soil Day’ observed every year?

A) December 3

B) December 5 

C) December 7

D) December 9

  • World Soil Day is celebrated every year on December 5, to highlight people’s attention to the importance of soil and its sustainable management. This year’s campaign is based on the theme of “Halt soil salinization, boost soil productivity”.

9. ‘Ciprian Foias Prize’ is associated with which field?

A) Space Science

B) Mathematics 

C) Virology

D) Business

  • Eminent Indian–American mathematician Nikhil Srivastava, has been jointly selected for the inaugural $5,000 Ciprian Foias Prize. He was awarded for his contribution in Operator Theory by the American Mathematical Society (AMS).

10. Who is the author of the book titled ‘Public Service Ethics – A Quest for Naitik Bharat’?

A) Prabhat Kumar 

B) Vijay Kumar

C) Irai Anbu

D) Ajay Bhushan Pandey

  • The Vice President recently released a book titled, ‘Public Service Ethics – A Quest for Naitik Bharat’ written by Prabhat Kumar, former Governor of Jharkhand and former Cabinet Secretary to the Government of India.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!