Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

16th January 2021 Tnpsc Current Affairs in Tamil & English

16th January 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 16th January 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

16th January 2021 Tnpsc Current Affairs in Tamil

1. எரிசக்தி சிக்கன அலுவலகம் என்பது பின்வரும் எந்த நடுவண் அமைச்சகத்தின்கீழ் இயங்கும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்?

அ) ஊரக வளர்ச்சி அமைச்சகம்

ஆ) புதிய & புதுப்பிக்கத்தக்க அமைச்சகம்

இ) எரிசக்தி அமைச்சகம்

ஈ) புவி அறிவியல் அமைச்சகம்

  • எரிசக்தி சிக்கனத்துக்கான அலுவலகத்துடன் இணைந்து, 30ஆவது தேசிய எரிசக்தி சேமிப்பு விருதுகள் நிகழ்ச்சியை மத்திய மின்சக்தி அமைச்சகம் நடத்தியது. COVID-19 பெருந்தொற்றின் காரணமாக, விக்யான் பவனில் மெய்நிகர் முறையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. BEE என்பது மின்சக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது, ஆற்றல் சேமிப்பு மற்றும் பாதுகாப்பில் கொள்கை & திட்டங்களை செயல்படுத்தும் ஓர் அமைப்பாக விளங்குகிறது.

2. இணையவழி வகுப்புகளில் கலந்துகொள்வதற்காக கல்லூரி மாணாக்கர்களுக்கு இலவச இணைய இணைப்பு வசதியை அறிவித்துள்ள மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) கேரளா

இ) ஆந்திர பிரதேசம்

ஈ) பீகார்

  • 2021 ஏப்ரல் வரை ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்வதற்கு ஏதுவாக கல்லூரி மாணவர்களுக்கு நாளொன்றுக்கு 2 GB அளவுக்கு இலவச தரவு வசதியை தமிழ்நாடு அரசு வழங்கவுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்-தொழில்நுட்ப நிறுவனங்களில் பொறியியல் பயிலும் 9 இலட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இந்த வசதி வழங்கப்படும். சுயநிதிக்கல்லூரி மாணவர்களுக்கான திட்டத்தை ELCOT செயல்படுத்தும்.

3. “வண்ணத்துப்பூச்சிகள் அதிகம் நிறைந்த பகுதி (சூப்பர்-ஹாட்ஸ்பாட்)” என்று அடையாளங்காணப்பட்டுள்ள சிறுவாணி மலைகள், தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?

அ) தேனி

ஆ) கோயம்புத்தூர்

இ) தென்காசி

ஈ) கன்னியாகுமரி

  • தமிழ்நாட்டில் இதுவரை 325 வகை வண்ணத்துப்பூச்சிகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதில், 74% வண்ணத்துப்பூச்சி வகைகள் (240 இனங்கள்) கோயம்புத்தூர் சிறுவாணி பகுதியில் மட்டுமே இருப்பது இயற்கை & பட்டாம்பூச்சி அமைப்பினர் (TNBS) நடத்திய 6 ஆண்டு தொடர் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
  • TNBS’இன கூற்றுப்படி, ஒரு குறிப்பிட்ட பகுதியில் 5 கி.மீ சுற்றளவில் குறைந்தபட்சம் 75 வகையான வண்ணத்துப்பூச்சிகள் தென்படும் இடங்களை வளமான பகுதிகளாக குறிப்பிடலாம். சிறுவாணியில் மட்டுமே 240 வகை வண்ணத்துப்பூச்சிகள் கண்டறியப்பட்டுள்ளன. எனவே, அப்பகுதியை அதிக வளம்மிக்க (சூப்பர்-ஹாட்ஸ்பாட்) பகுதியாகக் குறிப்பிடலாம்.

4. மாஸ்டர்கார்டு கூட்டாக தயாரித்த, “டிஜிட்டல் எவல்யூஷன் ஸ்கோர்கார்டில்” இந்தியாவின் தரநிலை என்ன?

அ) முதலாவது

ஆ) இரண்டாவது

இ) மூன்றாவது

ஈ) நான்காவது

  • “டிஜிட்டல் பரிணாம மதிப்பெண் அட்டையை” மாஸ்டர்கார்டுடன் இணைந்து டப்ஸ் பல்கலைக்கழகத்தின் பிளெட்சர் பள்ளி தயாரித்து உள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட இக்குறியீட்டின் மூன்றாவது பதிப்பில், மிக வேகமாக டிஜிட்டல் மயமாகும் நாடுகளின் வரிசையில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. அதிக தேவை மற்றும் புதுமைகளுடன் சீனா இக்குறியீட்டின் முதலிடத்தில் உள்ளது.

5. சமீபத்திய செய்திகளில் இடம்பெற்ற, ‘காதி பிரகிரிதிக்’ என்றால் என்ன?

அ) வண்ணப்பூச்சு

ஆ) ஊதுவத்தி

இ) தரை தூய்மையாக்கி

ஈ) தொற்றுநீக்கி

  • நாட்டின் முதல் பசுஞ்சாண வண்ணப்பூச்சை, காதி கிராமத் தொழில் ஆணையம் உருவாக்கியுள்ளது. “காதி பிரகிரிதிக் வண்ணப்பூச்சு” என அழைக்கப்படும் இந்த வண்ணப்பூச்சு சுற்றுச்சூழலுக்கு ஏற்றது, நச்சுத்தன்மையற்றது. முதன்முறையாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த வண்ணப்பூச்சு, பூஞ்சை, நுண்ணுயிர் பாதிப்புக்கு எதிரானது.
  • பசுஞ்சாணத்தை முக்கிய மூலப்பொருளாககொண்டு, தயாரிக்கப்பட்ட இந்த மலிவு விலை வண்ணப் பூச்சு, வாடையற்றது. இதற்கு இந்திய தர நிலை அலுவலகம் சான்றிதழ் அளித்துள்ளது.

6. BIMSTEC’இன் புதிய பொதுச்செயலரான டென்சின் லெக்பெல் சார்ந்த நாடு எது?

அ) பூடான்

ஆ) இலங்கை

இ) இந்தியா

ஈ) மியான்மர்

  • டென்சின் லெக்பெல், BIMSTEC’இன் (வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவிற்கான முன்னெடுப்பு) புதிதாக நியமிக்கப்பட்ட பொதுச்செயலாளராவார். அவர், வங்கதேசத்துக்கு வருகை புரிந்ததை அடுத்து அண்மைச் செய்திகளில் இடம்பெற்றார்.
  • செயலகத்திற்கான புதிய வளாகத்தைக் கட்டும் பணியில் அந்நாடு உள்ளது. BIMSTEC என்பது வங்கதேசம், பூடான், இந்தியா, நேபாளம், இலங்கை, மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய 7 நாடுகளைக் கொண்ட ஒரு பிராந்திய அமைப்பாகும்.

7. ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டின்படி, பின்வரும் எந்த நாட்டின் கடவுச்சீட்டு, மிகவும் சக்திவாய்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது?

அ) சிங்கப்பூர்

ஆ) ஜப்பான்

இ) இந்தியா

ஈ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

  • ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டின் அண்மைய அறிக்கையின்படி, ஜப்பானிய கடவுச்சீட்டு உலகின் மிகச்சக்திவாய்ந்த கடவுச்சீட்டாகும். ஜப்பானிய கடவுச்சீட்டுமூலம், ஒருவர் விசா இல்லாத அல்லது குறிப்பிட்ட நாட்டுக்கு சென்றபின் விசாபெறும் முறையின்மூலம் 191 நாடுகளுக்கு பயணிக்க முடியும்.
  • இப்பட்டியலில் இந்தியா 85ஆவது இடத்தில் உள்ளது. சிரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் மோசமான கடவுச்சீட்டைக் கொண்டிருக்கும் நாடுகளாக உள்ளன.

8. மத்திய வேளாண் அமைச்சகத்தின் எத்திட்டம், அண்மையில், ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்தது?

அ) பிரதமர் பசல் பீமா யோஜனா

ஆ) பிரதமர் கிசான் மன்-தன் யோஜனா

இ) பிரதமர் கிருஷி சிஞ்சாயி யோஜனா

ஈ) பிரதமர் வீட்டுவசதித் திட்டம்

  • வேளாண் அமைச்சகத்தின் பிரதமர் பசல் பீமா யோஜனா (PMFBY) அண்மையில் அதன் 5 ஆண்டுகளை நிறைவு செய்தது. இது ஒரு பயிர் காப்பீட்டுத் திட்டமாகும்; இது 2016 ஜனவரி 13 அன்று தொடங்கப்பட்டது. இதுவரை, இந்தத் திட்டத்தின்கீழ், `90,000 கோடிக்கும் அதிகமான காப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் கூறியுள்ளது.

9. அண்மையில், “One Planet Summit – ஒரு கோள் உச்சிமாநாடு” என்றவொன்றை நடத்திய நாடு எது?

அ) பெல்ஜியம்

ஆ) சுவீடன்

இ) பிரான்ஸ்

ஈ) ஆஸ்திரேலியா

  • அண்மையில், பிரான்ஸ் நாடு ‘One Planet Summit’ஐ நடத்தியது. இதில், 30 தலைவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர். COVID-19 தொற்றுநோய் அச்சத்தால் இந்த உச்சிமாநாடு மெய்நிகர் முறையில் நடைபெற்றது.
  • நிலம் மற்றும் கடற்சூழலியல் அமைப்புகள் மற்றும் வேளாண் சூழலியல் ஆகிவற்றை பாதுகாப்பதில் கவனம் செலுத்திய இந்த உச்சிமாநாட்டின் போது, ஐம்பது நாடுகள் 2030’க்குள் 30% நிலத்தையும் கடலையும் பாதுகாப்பதாக உறுதியளித்தன.

10. சுவீடனைச் சார்ந்த ஆட்டோலிவ் நிறுவனம் அதன் உற்பத்தி அலகினை எந்த மாநிலத்தில் நிறுவ முடிவு செய்துள்ளது?

அ) தமிழ்நாடு

ஆ) மத்திய பிரதேசம்

இ) ஆந்திர பிரதேசம்

ஈ) அருணாச்சல பிரதேசம்

  • சுவீடனை தலைமையிடமாகக் கொண்ட ஆட்டோலிவ் இன்க்., அதன் உற்பத்தி அலகினை தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செய்யாற்றில் நிறுவ முன்வந்துள்ளது. இந்த நிறுவனம் தனது இந்த ஆலைக்கு `100 கோடியை முதலீடு செய்யவுள்ளது.
  • மேலும், இதன்மூலம் 400 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனம் காற்றுப்பைகள், இருக்கை வார்கள் மற்றும் இயக்காழி சக்கரங்களின் வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது.

1. Bureau of Energy Efficiency is a statutory body under which ministry?

A) Ministry of Rural Development

B) Ministry of New & Renewable Resources

C) Ministry of Power

D) Ministry of Earth Sciences

  • The Union Power Ministry in partnership with Bureau of Energy Efficiency (BEE), has recently organised the 30th “National Energy Conservation Awards (NECA)” function.
  • The event was organised at Vigyan Bhawan – New Delhi and telecasted as a virtual event. BEE is a statutory body under the Ministry of Power that has a mandate to implement policy and programs in energy efficiency and conservation.

2. Which Indian state announced free data card to college students for attending online classes?

A) Tamil Nadu

B) Kerala

C) Andhra Pradesh

D) Bihar

  • The Tamil Nadu government is to provide free data cards of 2 GB per day to college students to enable them attend online classes till April 2021. The data cards will be provided to over 9 lakh students studying in government and aided Arts and Sciences colleges, engineering colleges and polytechnic institutions. The Electronics Corporation of Tamil Nadu (ELCOT) will implement the scheme for self–finance college students.

3. Siruvani hills, which has been identified as a butterfly super–hotspot, is located in which district of Tamil Nadu?

A) Theni

B) Coimbatore

E) Tenkasi

D) Kanyakumari

  • After a six–year study conducted by ‘The Nature and Butterfly Society (TNBS)’, the Siruvani hills in the state of Tamil Nadu has been identified as a butterfly super–hotspot. 240 out of the total 325 species found in Tamil Nadu, are from the hills between 2015 and 2020.
  • As per TNBS, if 25% of the state checklist species are found in a single area, it can be identified as a hotspot. Here around 74 per cent of the total species is found in the hills, from six families.

4. What is the rank of India in the ‘Digital Evolution Scorecard’, prepared jointly by Mastercard?

A) First

B) Second

C) Third

D) Fourth

  • The ‘Digital Evolution Scorecard’ is developed by Fletcher School, Tufts University in partnership with Mastercard. In the recently released third edition of the index, India is ranked fourth among the ‘Break Out Economies’, which means the countries that are digitalising very fast. China leads the index with high demand and innovation.

5. What is ‘Khadi Prakritik’, which was making news recently?

A) Paint

B) Agarbatti

C) Floor cleaner

D) Disinfectant

  • Khadi Prakritik Paint is the first–of–its–kind paint product, which has been developed by the Khadi and Village Industries Commission.
  • It is an eco–friendly, non–toxic paint which is also claimed to have anti–fungal and anti–bacterial properties. The paint is based on cow dung as its main ingredient and has been certified by Bureau of Indian Standards.

6. Tenzin Lekphell, the new Secretary General of BIMSTEC, is from which country?

A) Bhutan

B) Sri Lanka

C) India

D) Myanmar

  • Tenzin Lekphell is the newly appointed Secretary General of the BIMSTEC (Bay of Bengal Initiative for Multi–Sectoral Technical and Economic Cooperation).
  • He was seen in the news for his visit to Bangladesh. The country is also in the process of building a new premise for the Secretariat. BIMSTEC is a regional organization with 7 countries namely Bangladesh, Bhutan, India, Nepal, Sri Lanka, Myanmar and Thailand.

7. Which country’s passport is declared the most powerful, as per the Henley Passport Index?

A) Singapore

B) Japan

C) India

D) United States

  • As per the recent report of the Henley Passport Index, Japanese passport has retained the rank of topmost powerful passport in the world. With the Japanese passport, one can travel to as many as 191 countries by visa–free or visa–on–arrival mode.
  • India ranks 85th in the list while Syria, Iraq and Afghanistan remain the the countries with the worst passport to hold.

8. Which scheme of the Union Agriculture Ministry has recently crossed the 5–year mark?

A) Prime Minister’s Fasal Bima Yojana

B) Prime Minister’s Kisan Mann-Tan Yojana

C) Prime Minister’s Krishi Sinchai Yojana

D) Prime Minister’s Awas Yojana

  • The Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY) of the Union Agriculture Ministry has recently completed 5 years since its launch. It is a crop insurance scheme that was launched on January 13, 2016. The Ministry has stated that claims worth Rs.90,000 crore have so far been disbursed to farmers since the launch.

9. Which country has recently hosted the “One Planet Summit”?

A) Belgium

B) Sweden

C) France

D) Australia

  • France has hosted the One Planet Summit recently, in which 30 leaders, government officials and heads of international organizations participated. The summit was held in a virtual mode due to the ongoing COVID pandemic. During the summit, which focussed on protecting terrestrial and marine ecosystems, and agroecology, 50 countries pledged to protect 30% of land and sea by 2030.

10. Sweden’s Autoliv Inc. has proposed to establish its manufacturing unit in which state?

A) Tamil Nadu

B) Madhya Pradesh

E) Andhra Pradesh

D) Arunachal Pradesh

  • Autoliv Inc., headquartered in Sweden has proposed to establish its manufacturing facility in Tamil Nadu. The company is to invest a sum of Rs.100 crore for its plant and is expected to create 400 job opportunities. The company is involved in design, manufacturing and marketing of air–bags, seat belts and steering wheels.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!