Hi Welcome

Tnpsc

16th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

16th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 16th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

June Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

16th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. நடப்பாண்டுக்கான (2021) புக்கர் பரிசை வென்றவர் யார்?

அ) டேவிட் டியோப்

ஆ) டக்ளஸ் ஸ்டூவர்ட்

இ) மார்கரெட் அட்வுட்

ஈ) பெர்னார்டின் எவரிஸ்டோ

  • நடப்பாண்டுக்கான (2021) விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, பன்னாட்டு புக்கர் பரிசை வென்ற முதல் பிரெஞ்சு எழுத்தாளர் என்ற பெருமையை டேவிட் டியோப் பெற்றுள்ளார். அவரது இரண்டாவது புதினமான ‘அட்நைட் ஆல் பிளட் இஸ் பிளாக்’ஐ அமெரிக்க எழுத்தாளரும் கவிஞருமான அண்ணா மோஸ்கோவாக்கிஸ் மொழிபெயர்த்தார்.

2. Experimental Advanced Superconducting Tokamak (EAST) என்ற அறிவியல் பரிசோதனையை மேற்கொள்ளும் நாடு எது?

அ) இந்தியா

ஆ) ஜப்பான்

இ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஈ) சீனா

  • சீனாவின் Experimental Advanced Superconducting Tokamak (EAST) ஆனது அதன் சமீப சோதனையில் புதிய சாதனையை படைத்துள்ளது. இச்சோதனை, 101 விநாடிகளில் 216 மில்லியன் பாரன்ஹீட் பிளாஸ்மா வெப்பநிலையை அடைந்தது. “செயற்கை சூரியன்” திட்டத்தில் பணிபுரியும் அறிவியலாளர்கள், 20 விநாடிகளில் 288 மில்லியன் பாரன்ஹீட் வெப்பநிலையை அடைந்தனர். டோகாமக் சாதனம் என்பது சூரியன் விண்மீன்களில் நிகழும் இயற்கையான அணுக்கரு இணைவு செயல் முறையை நகலாக்கம் செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

3. சுற்றுச்சூழல் மீட்டுருவாக்கம் தொடர்பான ஐநா தசாப்தமாக அறிவி -க்கப்பட்டுள்ள தசாப்தம் எது?

அ) 2001-2010

ஆ) 2011-2020

இ) 2021-2030

ஈ) 2031-2040

  • ஐநா சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் ஐநா’வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பால், சமீபத்தில், சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு தொடர்பான ஐநா தசாப்தமாக 2021-2030 அறிவிக்கப்பட்டது. இதன் தொடக்கத்தை குறிக்கும் வகையில் ‘#GenerationRestoration: Ecosystem restoration for People, Nature and Climate’ என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையையும் அந்த நிறுவனங்கள் வெளியிட்டன. அடுத்த தசாப்தத்தில், குறைந்தது 1 பில்லியன் சீரழிந்த ஹெக்டேர் நிலத்தையாவது மீட்டுருவாக்கம் செய்ய, இந்த அறிக்கை, உலக நாடுகளை வலியுறுத்துகிறது.

4. ‘நிரல்படுத்தக்கூடிய டிஜிட்டல் ஃபைபர்’ஐ அறிமுகப்படுத்திய பன் -னாட்டு நிறுவனம் எது?

அ) MIT

ஆ) கூகிள்

இ) மைக்ரோசாப்ட்

ஈ) IBM

  • மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் (MIT) ஆராய்ச்சியாளர்கள் முதன்முறையாக ‘நிரல்படுத்தக்கூடிய டிஜிட்டல் ஃபைபர்’ ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த டிஜிட்டல் ஃபைபர் உடலியல் செயல்பாடுகளை ஊகிப்பதற்காக நினைவகம், வெப்பநிலை உணரிகள் மற்றும் ஒரு நரம்பணு வலைய நிரல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
  • நூற்றுக்கணக்கான சதுர சிலிக்கான் மைக்ரோஸ்கேல் டிஜிட்டல் சில்லு -களை ஒரு முன்னுரிவடிவில் வைப்பதன்மூலம் இது உருவாக்கப்படுகிறது. அது பின்னர் பாலிமர் ஃபைபர் உருவாக்க பயன்படுகிறது.

5. அண்மையில் உருவாக்கப்பட்ட ‘சிப்-ஆஃப் நுட்பத்தின்’ முக்கிய நோக்கம் என்ன?

அ) தரவு மீட்டெடுப்பு

ஆ) தங்கச்சுரங்கம்

இ) கிரிப்டோகரன்சி தேடல்

ஈ) உயிரி-எரிவாயு உற்பத்தி

  • ஹைதராபாத்தின் மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தின் அறிவியலாளர்கள் ஓர் உள்நாட்டு சிப்-ஆஃப் நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.
  • பூட்டப்பட்ட மற்றும் கடுமையாக சேதமடைந்த திறன்பேசிகளிலிருந்து மறைகுறியாக்கப்பட்ட தரவுகளை மீட்டெடுப்பதே இந்நுட்பத்தின் முக்கிய நோக்கமாகும். குற்றவாளிகளுக்கு எதிராக நம்பகமான ஆதாரங்களை உருவாக்க, இது புலனாய்வு அமைப்புகளுக்கு பயனளிக்கும்.

6. SAGE (Senior-care Aging Growth Engine) என்பது எந்த மத்திய அமைச்சகத்தின் முன்முயற்சியாகும்?

அ) பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

ஆ) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

இ) சட்டம் மற்றும் நீதி அமைச்சகம்

ஈ) சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம்

  • முதியோர்களுக்கான சேவைகளை அளிக்கும் SAGE (முதியோர் பராம -ரிப்பு வளர்ச்சி இயந்திரம்) இணையதளத்தை மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தவார்சந்த் கெலாட் தொடங்கிவைத்தார். இந்த SAGE இணையதளத்தில் முதியோர் பராமரிப்புக்கான அனைத்து பொருட்களையும் வாங்கமுடியும். மேலும், துளிர்நிறுவனங்கள் அளிக்கும் நம்பகமான சேவைகளையும் பெறமுடியும்.

7. எந்த நோயைக் குணப்படுத்துவதற்காக, நானோ-ஃபைபர் அடிப் -படையிலான மாத்திரைகளான ‘AmB’ஐ, IIT-H உருவாக்கியுள்ளது?

அ) கருங்காய்ச்சல்

ஆ) மலேரியா

இ) டெங்கு

ஈ) ஜப்பானிய மூளைக்காய்ச்சல்

  • ஹைதராபாத் – இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் (IIT-H) ஆராய்ச்சி -யாளர்கள் ஆம்போடெரிசின் B’இன் நானோ ஃபைபர் அடிப்படையிலான வாய்வழி உட்கொள்ளும் மாத்திரைகளை உருவாக்கியுள்ளனர்.
  • கருங்காய்ச்சலை குணப்படுத்துவதற்காக, ஆம்போடெரிசின் – B’இன் நானோ ஃபைப்ரஸ் அடிப்படையிலான வாய்வழி உட்கொள்ளும் மாத்தி -ரைகளை உருவாக்குவதற்கான முதல்முயற்சி இதுவாகும். கருங்காய்ச் -சலுக்கான சிகிச்சை தற்போது கருப்புப் பூஞ்சைக்கான சிகிச்சையாகப் பயன்படுத்தப்படுவதால், COVID-19 சிகிச்சைக்குப் பின்னான பூஞ்சை தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்க இது பயன்படுத்தப்படலாம்.

8. 2021 ஜூனில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள் -கைக்குழு கூட்டத்திற்குப் பிறகு, ரெப்போ விகிதம் ______ என நிர்ணயிக்கப்பட்டுள்ளது?

அ) 3.75 %

ஆ) 4.00 %

இ) 4.25 %

ஈ) 4.50 %

  • ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான இந்திய ரிசர்வ் வங்கியின் ஆறு உறுப்பினர்களைக்கொண்ட பணவியல் கொள்கைக்குழு, முக்கிய வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்திருந்தது. ரெப்போ விகிதம் 4.00% ஆகவும், தலைகீழ் ரெப்போ விகிதம் 3.35% ஆகவும் தொடரும்.
  • இதன்மூலம், ரெப்போ விகிதம் தொடர்ந்து ஆறாவது முறையாக மாறாமல் உள்ளது. கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மை & பணவீக்கம்குறித்த அச்சங்களுக்கிடையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

9. உலக நீடித்த வளர்ச்சி உச்சிமாநாட்டை நடத்துகிற நிறுவனம் எது?

அ) IEA

ஆ) உலக வங்கி

இ) TERI

ஈ) NITI ஆயோக்

  • உலக நீடித்த வளர்ச்சி உச்சிமாநாடு என்பது எரிசக்தி மற்றும் வள நிறுவ -னத்தின் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஒரு முதன்மை நிகழ்வாகும்.
  • “‘Redefining Our Common Future: Safe and Secure Environment for All” என்ற கருப்பொருளின்கீழ் நடைபெறுகிறது. உலக சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், இவ்வுச்சிமாநாட்டில் உரையாற்றினார்.

10.உணவுப்பொருட்களின் பன்னாட்டு விலைகளைக் கண்டறிவத -ற்காக, உணவு விலைக்குறியீட்டை வெளியிடுகிற அமைப்பு எது?

அ) உணவு மற்றும் உழவு அமைப்பு

ஆ) உலக வங்கி

இ) பன்னாட்டுச் செலவாணி நிதியம்

ஈ) பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு

  • ஐநா – உணவு மற்றும் உழவு அமைப்பின் (FAO) உணவு விலைக்குறி -யீடு என்பது தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பால் பொருட்கள், இறைச்சி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட உணவுப் பொருட்களின் பன்னா -ட்டு விலையில் மாதந்தோறும் ஏற்படுகிற மாற்றத்தை அளவிடும் ஒரு நடவடிக்கையாகும். சமீப குறியீட்டின்படி, மே மாதத்திய உணவு விலை ஏப்ரல் மாதத்தைவிட 4.8% அதிகமாக இருந்தது. இது 2010 அக்டோபர் மாதத்திற்குப்பிறகு நிகழும் அதிகப்படியான மாதாந்திர விலை உயர்வா -கும். இந்த விலைகள், 2020 மே மாதத்தைவிட 39.7% அதிகமாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தொழிற்படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை நிலை: ஆராய நீதிபதி முருகேசன் தலைமையில் ஆணையம்

தொழிற்கல்விப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை அளவினை ஆராய்ந்து, பரிந்துரை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் ஆலோசனைக்கூட்டம் தொடங்கியது.

2. காப்பீட்டுத் துறையில் 74% அந்நிய நேரடி முதலீடு: டிபிஐஐடி அறிவிப்பு

காப்பீட்டுத் துறையில் அரசின் முன்னனுமதியின்றி 74% அந்நிய நேரடி முதலீடு பெறுவது தொடர்பான அறிவிக்கையை மத்திய தொழிலக மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை முறையாக வெளியிட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு உச்சவரம்பை 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக மத்திய அரசு அதிகரித் -தது. இந்நிலையில் அந்தத் துறையில் அரசின் முன்னனுமதியின்றி 74% அந்நிய நேரடி முதலீட்டை பெறுவதற்கு வழிவகை செய்ய மத்திய அரசு முடிவுசெய்தது. அதுதொடர்பான காப்பீட்டுச் சட்டத்திருத்த மசோதா- 2021 கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. அந்த மசோதா நிறைவேறியதன்மூலம் 23 தனியார் காப்பீட்டு நிறுவனங்கள், 21 ஆயுள் காப்பீடு அல்லாத இதர தனியார் காப்பீட்டு நிறுவனங்கள், 7 தனியார் சிறப்பு மருத்துவக்காப்பீட்டு நிறுவனங்கள் பலனடையும் என எதிர்பார்க்கப்படுகி -றது.

இந்நிலையில் அந்நிய நேரடி முதலீட்டு உச்சவரம்பு அதிகரிப்பு குறித்து மத்திய தொழிலக மற்றும் உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டுத் துறை முறையாக அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அந்தத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், காப்பீட்டுத் துறையில் 74% அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்து மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் முடிவு அந்நிய செலாவணி மேலாண்மை சட்ட அறிவிக்கை வெளியிடப்பட்ட தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. ‘விவாடெக்’ தொழில்நுட்ப மாநாடு

ஐரோப்பிய நாடுகளின் மிகப்பெரிய டிஜிட்டல், புதுமை கண்டுபிடிப்புகளுக்கான அறிவியல் தொழில்நுட்ப மாநாடு, ‘விவாடெக்’ என்ற பெயரில் பிரான்ஸ் தலைநகரம் பாரீஸில் கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு வருகிறது. ஐந்தாவது மாநாடு, ஜூன் 16-19 வரை நடைபெறவுள்ளது.

1. Who is the winner of the 2021 International Booker Prize?

A) David Diop

B) Douglas Stuart

C) Margaret Atwood

D) Bernardine Evaristo

  • David Diop has become the first French writer to win the International Booker Prize, as he was selected for the prestigious award in 2021. His second novel, At Night All Blood is Black, was translated by the US author and poet Anna Moschovakis.

2. Experimental Advanced Superconducting Tokamak (EAST) is a Scientific Experiment being undertaken by which country?

A) India

B) Japan

C) USA

D) China

  • China’s Experimental Advanced Superconducting Tokamak (EAST) has set a new record in the latest experiment. The experiment achieved a plasma temperature of 216 million Fahrenheit for 101 seconds.
  • The scientists working on the “Artificial sun” project also achieved 288 million Fahrenheit for 20 secs. The Tokamak device has been designed to reproduce the nuclear fusion process, natural to the Sun and stars.

3. Which decade has been declared as the UN Decade on Ecosystem Restoration?

A) 2001–2010

B) 2011–2020

C) 2021–2030

D) 2031–2040

  • The UN Decade on Ecosystem Restoration 2021–2030 was launched recently by the UN Environment Programme (UNEP) and the Food and Agriculture Organization of the UN (FAO).
  • The organisations also launched a report titled ‘#Generation Restoration: Ecosystem restoration for People, Nature and Climate’, to mark the launch of the decade. The report urges the countries to restore at least 1 billion degraded hectares of land in the next decade.

4. Which global institution launched the ‘Programmable Digital Fiber’?

A) MIT

B) Google

C) Microsoft

D) IBM

  • Researchers from the Massachusetts Institute of Technology (MIT) has developed a first–of–its kind ‘Programmable Digital Fiber’.
  • This digital fiber contains memory, temperature sensors, and a neural network program to infer physical activity. It was created by placing hundreds of square silicon microscale digital chips into a preform, which was then used to create a polymer fiber.

5. What is the main objective of the ‘Chip–off technique’, that has been developed recently?

A) Data Retrieval

B) Gold Mining

C) Cryptocurrency Mining

D) Biogas production

  • The Scientists at Central Forensic Science Laboratory (CFSL), Hyderabad have developed an indigenous Chip–off technique.
  • The main objective of the technique is to retrieve encrypted data from locked and severely damaged smartphones. This would benefit investigative agencies to produce credible evidences against criminals.

6. SAGE (Senior–care Aging Growth Engine) is the initiative of which Union Ministry?

A) Ministry of Women and Child Development

B) Ministry of Social Justice and Empowerment

C) Ministry of Law and Justice

D) Ministry of Minority Affairs

  • Minister of Social Justice and Empowerment, Thaawarchand Gehlot virtually launched the SAGE (Senior–care Aging Growth Engine) initiative. He also launched the SAGE portal, which can be accessed by the elderly persons for elderly care products and services by select start–ups. The start–ups will be selected on the basis of innovative products and services.

7. AmB, is the nano–fibre based tablets, developed by IIT–H, for curing which disease?

A) Kala Azar

B) Malaria

C) Dengue

D) Japanese Encephalitis

  • Researchers from the Indian Institute of Technology (IIT), Hyderabad has developed nano–fibre based oral tablets of Amphotericin B, called as AmB. This was the first–ever attempt to fabricate nanofibrous oral tablets of Amphotericin B for curing Kala Azar. As Kala–Azar treatment is being currently used as a treatment for Mucormycosis, this can be used to treat fungal infections post COVID treatment.

8. After the RBI’s monetary policy committee meeting held in June 2021, the Repo rate is fixed at …………?

A) 3.75 %

B) 4.00 %

C) 4.25 %

D) 4.50 %

  • The Reserve Bank of India’s (RBI’s) six–member monetary policy committee, headed by Governor Shaktikanta Das, kept the benchmark interest rate unchanged. The repo rate will continue at 4.00% and reverse repo rate at 3.35%. With this, the repo rate has remained unchanged for a sixth consecutive time. The decision has been taken amid coronavirus uncertainty and fears over inflation.

9. Which institution organises the World Sustainable Development Summit?

A) IEA

B) World Bank

C) TERI

D) NITI Aayog

  • The World Sustainable Development Summit is the annual flagship event of the Energy and Resources Institute. The WSDS 2021 is being held under the umbrella theme of ‘Redefining Our Common Future: Safe and Secure Environment for All’.
  • Environment, Forest and Climate Change Minister Prakash Javadekar addressed the summit on the occasion of the World Environment Day.

10. Which organisation releases the Food Price Index, to track the international prices of a basket of food commodities?

A) FAO

B) World Bank

C) IMF

D) ILO

  • The UN Food and Agriculture Organization’s (FAO) food price index is a measure of the monthly change in international prices of a basket of food commodities including cereals, oilseeds, dairy products, meat and sugar.
  • According to the recent index, food prices in May were 4.8% higher than April. This is registered as the biggest monthly rise since October 2010. The prices were also 39.7% higher than this time last year, May 2020.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!