Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

16th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English

16th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 16th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

June Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. 2022-இல் இந்தியாவின் ‘முதல் தேசிய தலைமைச் செயலாளர்கள் மாநாட்டுக்குத்’ தலைமை வகித்தவர் யார்?

அ. மத்திய உள்துறை அமைச்சர்

ஆ. பிரதமர் 

இ. மத்திய நிதி அமைச்சர்

ஈ. மத்திய பாதுகாப்பு அமைச்சர்

  • ஜூன்.16, 17 ஆகிய தேதிகளில் தர்மசாலாவில் நடைபெறவுள்ள முதலாவது தேசிய தலைமைச் செயலாளர்கள் மாநாட்டுக்குப் பிரதமர் தலைமை வகிக்கிறார். மத்திய மாநில அரசுகளுக்கிடையிலான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதை நோக்கிய முக்கிய நடவடிக்கையாக இந்த மாநாடு இருக்கும். தேசிய கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்துவது, நகர்ப்புற நிர்வாகம், பயிர் மாற்றம் மற்றும் வேளாண் பொருட்களில் தன்னிறைவை அடைதல் ஆகிய மூன்று கருப்பொருட்கள்குறித்து விரிவான விவாதம் இம்மாநாட்டின்போது நடைபெறும்.

2. ஐநா அவையில் பயன்படுத்தப்படவுள்ள, ‘வழி கண்டறியும் வடிவமைப்புக்கருவி’ உருவாக்கப்போவதாக அறிவித்து உள்ள நாடு எது?

அ. அமெரிக்கா

ஆ. ரஷ்யா

இ. இந்தியா 

ஈ. ஐக்கிய அரபு அமீரகம்

  • ஜெனீவாவில் உள்ள ஐநா அலுவலகத்தில் பயன்படுத்தப்படவுள்ள, ‘வழி கண்டறியும் வடிவமைப்புக் கருவி’ குறித்து இந்தியா–ஐநா இடையேயான ஒப்பந்த ஆலோசனைக்கு நடுவண் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • ‘தேசங்களின் அரண்மனை’ என்று வர்ணிக்கப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க 21 அடுக்குகளைக் கொண்ட ஐநா அலுவலகம் ஜெனீவாவில் உள்ளது. பல்வேறு கூட்டங்கள், மாநாடுகள், போன்றவற்றில் பங்கேற்பதற்கு ஏராளமானோர் பிரதிநிதிகளாகவும், பார்வையாளர்களாகவும் வந்து சேர்கின்றனர். இந்தக் கட்டடத்தின் பல்வேறு அரங்குகளைக் கண்டறிவதில் உள்ள சிரமங்களைக் கணக்கில்கொண்டு எளிதாக ஒவ்வொரு தளத்திலும் உள்ள தனித்தனி அரங்குகள்பற்றிய விவரங்களை GPS அடிப்படையில் கண்டறிந்து செல்வதற்கான செயலி உருவாக்கப்பட் -டுள்ளது. 2 மில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள இந்தச் செயலியை உருவாக்கவும், பராமரிக்கவும் இந்தியா முன்வந்துள்ளது. இதன்படி, ஐநா’இன் 75ஆம் ஆண்டு விழாவையொட்டி, இந்தச் செயலியை உருவாக்குவதற்கான தொகையை இந்தியா நன்கொடையாக வழங்கியுள்ளது.

3. ஓர் அண்மைய அறிவிப்பின்படி, 5G அலைக்கற்றை எத்தனை ஆண்டுகளுக்கு ஏலம் விடப்படும்?

அ. 5

ஆ. 10

இ. 20 

ஈ. 25

  • 72 GHz அலைக்கற்றையை இருபாதாண்டு காலத்திற்கு ஏலம் விடுவதற்கான தொலைத்தொடர்புத்துறையின் முன்மொழிவுக்கு நடுவண் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குடிமக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு 5ஜி சேவைகளை வழங்க வழிசெய்யும். 5ஜி சேவைகள் 4ஜியைவிட சுமார் 10 மடங்கு வேகமானதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. வாகனம், சுகாதாரம், வேளாண்மை, எரிசக்தி & இதர துறைகளில் இயந்திரங்கள் இடையேயான தகவல் பரிமாற்றம், இணைய உபகரணங்கள், AI முதலிய தொழிற்துறை 4.0 செயல்பாடுகளில் புதுமைகளை ஊக்குவிக்க தனியார் இணைப்புகளை உருவாக்கவும் அமைச்சரவை முடிவு செய்தது.

4. அண்மையில் உருவாக்கப்பட்ட, ‘I2U2 குழுமத்தில்’ கீழ்காணும் எந்தெந்த நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன?

அ. இந்தியா, ஈராக், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து

ஆ. இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து

இ. இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் 

ஈ. இந்தியா, ஈராக், அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம்

  • இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் மேற்கு ஆசிய QUAD தலைவர்கள் முதலாவது மெய்நிகர் உச்சிமாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். இந்தக் கூட்டத்திற்கு வெள்ளை மாளிகை அழைப்பு விடுத்துள்ளது. இதன் சமயம் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் உரையாற்றுவார். அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மேற்கு ஆசியாவிற்கும் – இஸ்ரேல் மற்றும் சௌதி அரேபியாவிற்கு விஜயம் செய்கிறார். இந்தியா, இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்கா முதலிய நாடுகளை உள்ளடக்கிய இந்தப் புதிய குழுவிற்கு ‘I2U2’ என வெள்ளை மாளிகை பெயரளித்துள்ளது.

5. BIMSTEC தொழில்நுட்ப பரிமாற்ற மையம் அமைந்துள்ள இடம் எது?

அ. புது தில்லி

ஆ. டாக்கா

இ. கொழும்பு 

ஈ. ஜகார்த்தா

  • இலங்கையின் கொழும்புவில் 2022 மார்ச்.30 அன்று நடைபெற்ற 5ஆவது BIMSTEC உச்சிமாநாட்டில், BIMSTEC தொழில்நுட்ப பரிமாற்ற மையத்தை, கொழும்புவில் இந்தியா நிறுவுவதற்கு BIMSTEC உறுப்புநாடுகளால் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு நடுவண் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • தொழில்நுட்ப பரிமாற்றம், அனுபவப் பகிர்வு, திறன் கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்த BIMSTEC உறுப்பு நாடுகளிடையே, தொழில்நுட்பத்தை பரிமாற்றஞ்செய்வதை ஒருங்கிணைப்பது, ஒத்துழைப்பை வலுப்படுத்துவது ஆகியவை BIMSTEC தொழில்நுட்ப பரிமாற்ற வசதியின் நோக்கமாகும்.

6. பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டமானது (PMEGP) எந்த ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது?

அ. 2023-24

ஆ. 2024-25

இ. 2025-26 

ஈ. 2026-27

  • பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டம் (PMEGP) 2025-26 வரை தொடர ஒப்புதலளிக்கப்பட்டுள்ளது, இதன் மொத்தச் செலவு `13,554.42 கோடியாகும். இத்திட்டத்தின் நீட்டிப்பு 2021-22 முதல் 2025-26 வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கு 15ஆவது நிதி ஆணைய சுழற்சியின்கீழ் வந்துள்ளது. ஐந்து நிதியாண்டுகளில் சுமார் 40 இலட்சம் பேருக்கு நிலையான வேலைவாய்ப்புகளை இத்திட்டம் உருவாக்கும். இது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறை அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது.

7. இந்திய ரிசர்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கையின்படி, முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது, 2021-22இல் கள்ள இந்தியப் பணத்தாள்களின் போக்கு என்னவாக இருந்தது?

அ. அதிகரித்தது

 ஆ. குறைந்துள்ளது

இ. அப்படியே உள்ளது

ஈ. கணக்கிடப்படவில்லை

  • இந்திய ரிசர்வ் வங்கியானது RBI ஆண்டறிக்கை 2021-22-ஐ வெளியிட்டது. அறிக்கையின்படி, வங்கித்துறையில் கண்டறியப்பட்ட அனைத்து வகை கள்ள இந்தியப் பணத்தாள்களின் மொத்த எண்ணிக்கை 2,30,971ஆக அதிகரித் -துள்ளது. `10, `20, `200, `500, `2000 பணத்தாள்கள் முறையே 16.4%, 16.5%, 11.7%, 101.9% மற்றும் 54.6% அதிகரித்துள்ளது. 2021-2022-இல் பணத்தாள் அச்சடிப்பிற்கான மொத்தச்செலவு, முந்தைய ஆண்டிலிருந்த `4,012.1 கோடியிலிருந்து `4,984.8 கோடியாக அதிகரித்துள்ளது.

8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற எட்டாலின் நீர்மின்திட்டம் அமையவுள்ள மாநிலம்/UT எது?

அ. பஞ்சாப்

. அருணாச்சல பிரதேசம் 

இ. இராஜஸ்தான்

ஈ. கேரளா

  • எட்டாலின் நீர்மின்திட்டம் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. 3,097 MW மின் உற்பத்தித் திறனுடைய இந்தத் திட்டத்திற்கு 1100 ஹெக்டேர்களுக்கு மேல் வன நிலம் மற்றும் 280,000 மரங்களை வெட்ட வேண்டும். அருணாச்சல பிரதேச மாநிலத்தின் வனவுயிர் ஆய்வாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் இந்தத் திட்டத்தால் உள்ளூர் பல்லுயிர் பெருக்கத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின்கீழ் உள்ள வன ஆலோசனைக் குழுவிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

9. ‘இராஜீவ் காந்தி கேல் இரத்னா விருது’ மற்றும் ‘இராஜீவ் காந்தி ஊரக ஒலிம்பிக்’ ஆகியவற்றை அறிவித்த மாநிலம் எது?

அ. சத்தீஸ்கர்

ஆ. இராஜஸ்தான் 

இ. பஞ்சாப்

ஈ. மணிப்பூர்

  • இராஜஸ்தான் மாநிலத்தின் விளையாட்டு வீரர்களுக்கு இராஜீவ் காந்தி கேல் இரத்னா விருது அறிமுகப்படுத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். ‘இராஜீவ் காந்தி ஊரக ஒலிம்பிக்’ 2022 ஆகஸ்ட் முதல் தொடங்கும் என்றும், அனைத்து வயதுக்குட்பட்ட 27 லட்சத்துக்கும் அதிகமான வீரர்கள் இதில் பங்கேற்பார்கள் என்றும் முதலமைச்சர் கூறினார். இராஜஸ்தான் மாநில உயர் செயல்திறன் விளையாட்டு மற்றும் மறுவாழ்வு மையத்தையும் அவர் திறந்து வைத்தார்.

10. அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற இளவேனில் வாலறிவன், ஸ்ரேயா அகர்வால் மற்றும் ரமிதா ஆகியோருடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. மல்யுத்தம்

ஆ. துப்பாக்கிச் சுடுதல் 

இ. வாள்சண்டை

ஈ. படகோட்டம்

  • 2022 – ISSF உலகக்கோப்பையில் 10 மீ ‘ஏர் ரைபிள்’ பெண்கள் குழு போட்டியில் இளவேனில் வாலறிவன், ஸ்ரேயா அகர்வால் மற்றும் இரமிதா ஆகியோரைக்கொண்ட இந்திய பெண்கள் துப்பாக்கிச் சுடுதல் அணி, இந்தியாவுக்காக தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. அஜர்பைஜான் தலைநகரம் பாகுவில் நடைபெற்ற ISSF உலகக்கோப்பையில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இதுவாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

Newspaper, news icon - Free download on Iconfinder

Newspaper, news icon - Free download on Iconfinder

1. மொழி, உரிமைகளுக்கு ஏற்ற வகையில் மாநில கல்விக் கொள்கை: நீதிபதி முருகேசன்

மொழி, உரிமைகளுக்கு ஏற்ற வகையில் மாநில கல்விக்கொள்கை வடிவமைக்கப்படும் எனக் குழுவின் தலைவரும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான த முருகேசன் கூறினார்.

மாநில கல்விக்கொள்கை வடிவமைப்பு தொடர்பான ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினருடன் முதல்வர் மு க ஸ்டாலின் சில ஆலோசனைகளை வழங்கினார். ஆலோசனைக் கூட்டத்துக்குப்பிறகு நீதிபதி முருகேசன் செய்தியாளர்களிடம் கூறியது: முதல் ஆலோசனைக்கூட்டத்தில் அனைத்தையும் கேட்டறிந்தோம். இதையடுத்து வேலைவாய்ப்புக்கு ஏற்ற பாடத்திட்டம், பாடத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தனித்தனியாக துணைக் குழுக்கள் அமைக்கப்படும். இந்தக் குழுவினா் நேரடியாக பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று அவா்கள் கூறக்கூடிய கருத்துகளையும் கேட்டு பதிவு செய்வாா்கள். பள்ளிக்கல்வி, உயா்கல்வி, தொழிற்கல்வி என அனைத்தும் மேம்பட கூடிய வகையில் இந்த அறிக்கையைத் தயாரிக்கவுள்ளோம். மொழி, உரிமைகளுக்கு ஏற்ற வகையில் புதிய கல்விக் கொள்கை அமையும் என்றார் அவர்.

2. தொழிற்துறையினருக்கு சேவைகள் அளிக்க தனி இணையதளம் தொடக்கம்

தொழில்துறையினர் உள்பட பல்வேறு தரப்பினருக்கான தேவைகள், பிரச்னைகளுக்குத் தீர்வுதர தனி இணைய தளம் (www.valar.tn.gov.in) தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் உருவாக்கப்பட்ட ‘வளர் 4.0’ என்ற இணையதளத்தை குறு, சிறு & நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா மோ அன்பரசன், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் த மனோ தங்கராஜ் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி: மாநிலத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையில் திறனை மேம்படுத்தவும், உற்பத்தியைப் பெருக்கவும், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும், கருத்துகளைப் பரிமாறவும், பிரச்னைகள் மற்றும் சவால்களுக்குத் தீர்வுகாணவும் ‘வளர் 4.0’ என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள், சேவை வழங்குநர்களின் விவரங்கள், திட்டங்கள் தொடர்பான தகவல்கள் கிடைக்கும். இந்த இணையதளத்தில் தொழில் துறையினர், சேவை வழங்குநர்கள், கல்வி நிறுவனங்கள், உணவு பதப்படுத்துதல், மென்பொருள், வன்பொருள் மற்றும் பொருள்களின் தொகுப்புத் தேவைகள் போன்ற பல்வேறு பிரச்னைகள், சிக்கல்கள் மற்றும் சவால்களுக்கு யோசனைகள், தீர்வுகள் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

279 சேவைகள், 20 திட்டங்கள் மற்றும் 389 நிபுணர்களின் விவரங்கள் இணையதளத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த இணையதளத்தை தமிழ்நாடு மின்னாளுமை முகமையானது, இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் துணையுடன் வடிவமைத்து உருவாக்கியுள்ளது.

3. வேலையின்மை விகிதம் 4.2%-ஆக குறைந்தது

வேலையின்மை விகிதம் கடந்த 2020-21-இல் 4.2 சதவீதமாக குறைந்துள்ளதாக மத்திய அரசின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் வெளியிட்ட காலமுறை தொழிலாளர் திறன் கணக்கெடுப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பொருளாதாரச் சீர்குலைவை ஏற்படுத்திய கரோனா பேரிடருக்கு மத்தியில் ஜூன் 2020-ஜூன் 2021 ஆண்டில் நாட்டில் வேலையின்மை விகிதம் 4.2 சதவீதமாக குறைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டில் 4.8 சதவீதமாக காணப்பட்டது. மேலும், 2018-19-இல் வேலையின்மை விகிதம் 5.8 சதவீதமாகவும், 2017-18-இல் 6 சதவீதமாகவும் அதிகரித்து காணப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. Who chaired India’s ‘First National Conference of Chief Secretaries’ in 2022?

A. Union Home Minister

B. Prime Minister 

C. Union Finance Minister

D. Union Defence Minister

  • Prime Minister Narendra Modi chairs the country’s ‘first national conference of chief secretaries’ in Dharamsala in the month of June 2022. The conference will be a major step towards further strengthening partnership between Centre and the state governments.
  • Three themes have been identified for deliberations including Implementation of the National Education Policy; Urban governance; crop diversification and achieving self–sufficiency in oilseeds, pulses and other agri–commodities.

2. Which country has announced to develop a ‘Way Finding Application’ for the United Nations (UN) buildings?

A. USA

B. Russia

C. India 

D. UAE

  • India’s Union Cabinet has approved the proposal on the agreement between the Government of India and the United Nations on a ‘Way Finding Application’ to be used in the United Nations Office at Geneva (UNOG). The Office is housed at the historic Palais des Nations. In view of the complexity of buildings and huge participation, India announced to develop the ‘Way Finding Application’ to UN on the occasion of its 75th anniversary in 2020. The estimated outlay for development and maintenance of the App is USD 2 Million.

3. As per recent notification, the 5G spectrum will be auctioned for how many years?

A. 5

B. 10

C. 20 

D. 25

  • The Union Cabinet has approved a proposal of the Department of Telecommunications for the auction of 72 GHz of spectrum for a 20–year–period. It will make way for providing 5G services to public and enterprises. 5G services is said to be about 10 times faster than 4G.The Cabinet also decided to enable the development of ‘Private Captive Networks’ to promote innovation in industry 4.0 applications.

4. Which countries are the members of the recently formed ‘I2U2 Grouping’?

A. India, Iraq, USA and UK

B. India, Israel, USA and UK

C. India, Israel, USA and UAE 

D. India, Iraq, USA and UAE

  • The leaders of the West Asian QUAD – India, Israel, the US and UAE will meet for the first ever virtual summit. The meeting has been called by the White House and will be addressed by the US President Joe Biden. US President Joe Biden is also making a visit to West Asia – Israel and Saudi Arabia. The White House has given a new acronym to identify the new grouping as I2U2: India, Israel and UAE and the US.

5. Which is the location of the BIMSTEC Technology Transfer Centre?

A. New Delhi

B. Dhaka

C. Colombo 

D. Jakarta

  • The Union Cabinet has approved a Memorandum of Association (MoA) by India for establishment of Bay of Bengal Initiative for Multi–Sectoral Technical and Economic Cooperation (BIMSTEC) Technology Transfer Facility (TTF) was signed by the BIMSTEC member countries at the 5th BIMSTEC Summit held at Colombo, Sri Lanka on 30th March, 2022.
  • The main objectives of the BIMSTEC TTF are to coordinate, facilitate and strengthen cooperation in technology transfer among the BIMSTEC Member States by promoting the transfer of technologies, sharing of experiences and capacity building.

6. The Prime Minister’s Employment Generation Programme (PMEGP) has been extended till which year?

A. 2023–24

B. 2024–25

C. 2025–26 

D. 2026–27

  • The Prime Minister’s Employment Generation Programme (PMEGP) has been approved for continuation till 2025–26 with the total outlay of Rs 13,554.42 crore. The extension of the scheme is over the 15th Finance Commission Cycle for five years from 2021–22 to 2025–26. The scheme will create sustainable employment opportunities for about 40 lakh persons in five financial years. It is implemented by the Ministry of micro, small and medium enterprises.

7. As per the RBI Annual Report, what is the trend of total number of Fake Indian Currency Notes (FICNs) in 2021–22, compared to previous year?

A. Increased

 B. Decreased

C. Remained Same

D. Not Calculated

  • The Reserve Bank of India (RBI) released the RBI Annual Report 2021–22. As per the report, the total number of Fake Indian Currency Notes (FICNs) of all denominations detected in the banking sector increased to 2,30,971 pieces. There was an increase of 16.4 per cent, 16.5 per cent, 11.7 per cent, 101.9 per cent and 54.6 per cent in the counterfeit notes detected in the denominations of Rs 10, Rs 20, Rs 200, Rs 500 and Rs 2,000, respectively. The total expenditure on security printing during 2021–2022 was ₹4,984.8 crore as against ₹4,012.1 crore in the previous year.

8. Etalin hydroelectric project, which was seen in the news, is proposed to be set up in which state/UT?

A. Punjab

B. Arunachal Pradesh 

C. Rajasthan

D. Kerala

  • Etalin hydroelectric project is proposed to be set up in the state of Arunachal Pradesh. The 3,097–MW project requires diversion of over 1100 hectares of forest land and felling of over 280,000 trees. Wildlife scientists and conservationists in the state have written to Forest Advisory Committee (FAC) under the Union Ministry of Environment, Forest and Climate Change (MoEF&CC), about the threats to local biodiversity from the project.

9. Which state announced ‘Rajiv Gandhi Khel Ratna Award’ and ‘Rajiv Gandhi Rural Olympics’?

A. Chhattisgarh

B. Rajasthan 

C. Punjab

D. Manipur

  • Rajasthan Chief Minister Ashok Gehlot announced that the Rajiv Gandhi Khel Ratna Award will be introduced in the state for sportspersons. The Chief Minister also said the ‘Rajiv Gandhi Rural Olympics’ will start from August 2022 and over 27 lakh players of all ages will participate in it. He also inaugurated Rajasthan High Performance Sports and Rehabilitation Centre.

10. Elavenil Valarivan, Shreya Agarwal and Ramita, seen in the news, are associated with which sports?

A. Wrestling

B. Shooting 

C. Fencing

D. Sailing

  • Indian women’s shooting team of Elavenil Valarivan, Shreya Agarwal and Ramita have bagged a gold medal for India in the 10m air rifle women’s team event at the ISSF World Cup 2022. This was India’s first medal at the ongoing ISSF World Cup being held in Baku, capital of Azerbaijan.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!