TnpscTnpsc Current Affairs

16th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English

16th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 16th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

May Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. 2022 – உலக நூல் மற்றும் பதிப்புரிமை நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Read, so you never feel low 

ஆ. To share a story

இ. Imagine the World: A story of books and festivals

ஈ. Reading, it’s my right!

  • புத்தகங்கள் மற்றும் வாசிப்பின் மகிழ்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், உலக நூல் மற்றும் பதிப்புரிமை நாள் ஏப்.23 அன்று கொண்டாடப்படுகிறது. “Read, so you never feel low” என்பது நடப்பு 2022ஆம் ஆண்டில் வந்த உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை நாளுக்கானக் கருப்பொருளாகும். ஒவ்வோர் ஆண்டும், UNESCO மற்றும் புத்தகத் துறையின் 3 முக்கிய துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச நிறுவனங்கள் (பதிப்பாளர்கள், நூல் விற்பனையாளர்கள் மற்றும் நூலகங்கள்) ஓராண்டு காலத்திற்கு உலக நூல் தலைநகரத்தைத் தேர்ந்தெடுக்கின்றன. குவாதலஜாரா (மெக்ஸிக்கோ) 2022–க்கான உலக நூல் தலைநகரமாகவும், அக்ரா (கானா) நகரம் 2023–க்கான உலக நூல் தலைநகரமாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

2. ஐநா சீன மொழி நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. ஏப்ரல்.20 

ஆ. மே.15

இ. ஏப்ரல்.21

ஈ. மே.16

  • உலக அமைப்பான ஐநாஇன் ஆறு உத்தியோகபூர்வ மொழிகளில் ஒவ்வொன்றின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் சாதனைகள் பற்றிய விழிப்புணர்வையும் மரியாதையையும் ஏற்படுத்த ஐநா கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பால் (UNESCO) ஒவ்வோர் ஆண்டும் ஏப்.20 அன்று ஐநா சீன மொழி நாள் அனுசரிக்கப்படுகிறது. சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு சீன எழுத்துக்களைக் கண்டுபிடித்ததாகக் கருதப்படும் ஒரு புராண காலத்து பாத்திரமான காங் ஜிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சீன மொழிக்கான தேதியாக ஏப்.20 தேர்ந்தெடுக்கப்பட்டது. ஐநா அவையின் ஆறு அதிகாரப்பூர்வ மொழிகள் பின்வருமாறு: ஆங்கிலம், பிரஞ்சு, ருஷியம், சீனம், ஸ்பானியம் மற்றும் அரபு.

3. ஓர் அண்மைய NABARD ஆய்வின்படி, அதிக கடன்பெறும் தனிநபர் விவசாயிகள் உள்ள மாநிலம் எது?

அ. உத்தர பிரதேசம்

ஆ. பீகார்

இ. ஜார்கண்ட்

ஈ. பஞ்சாப் 

  • சமீபத்திய ஆய்வின்படி, பஞ்சாபின் ஒரு சராசரி விவசாயி உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு விவசாயியைக் காட்டிலும் நான்கு மடங்கும், மகாராஷ்டிராவில் உள்ள ஒரு விவசாயியைக் காட்டிலும் ஐந்து மடங்கும் கடன் வாங்குகிறார். மூன்று மாநில அரசுகளின் சமீபத்திய விவசாயக்கடன் தள்ளுபடி குறித்து பாரத் கிரிஷக் சமாஜுடன் இணைந்து NABARD வங்கி இந்த ஆய்வினை நடத்தியது. உ பி மற்றும் மகாராஷ்டிராவில் முறையே `84,000 மற்றும் `62,000 என ஒப்பிடும்போது, பஞ்சாபில் உள்ள ஒரு குறு விவசாயி ஆண்டுக்கு `3.4 இலட்சம் கடன் வாங்குகிறார்.

4. ‘லாக்டு ஷீல்ட்ஸ் – 2022’ சைபர் டிபென்ஸ் பயிற்சியில் வென்ற நாடு எது?

அ. அமெரிக்கா ஆ. சீனா

இ. பின்லாந்து 🗹 ஈ. ஜெர்மனி

  • இந்த ஆண்டு நிகழ்வில் பங்கேற்ற 24 அணிகளில் இருந்து, உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் சிக்கலான சர்வதேச இணையவெளிப் பாதுகாப்பு நேரடித்தீ பயிற்சியான, ‘Locked Shields–2022’ஐ பின்லாந்து வென்றது. லித்துவேனியா–போலந்து கூட்டணியும் எஸ்டோனியா–ஜார்ஜியா கூட்டணியும் இரண்டாவது இடத்தைப் பிடித்தன. இந்தப் பயிற்சியை NATO Cooperative Cyber Defense Centre of Excellence (CCDCOE) ஏற்பாடு செய்திருந்தது.

5. Class of Young Global Leaders’ என்பதை அறிவிக்கிற நிறுவனம் எது?

அ. உலக வங்கி

ஆ. உலக பொருளாதார மன்றம் 

இ. பன்னாட்டுச் செலவாணி நிதியம்

ஈ. NASA

  • 30 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆராய்ச்சியாளர்கள், புதுமையான தொழில்முனைவோர், ஆர்வலர்கள் மற்றும் நம்பிக்கைக்குரிய அரசியல் தலைவர்களை உள்ளடக்கிய, ‘Class of Young Global Leaders (YGLs)’ என்பதை உலகப் பொருளாதார மன்றம் அறிவிக்கின்றது. 2022ஆம் ஆண்டுக்கான பட்டியலில், ‘ஆம் ஆத்மி’ கட்சித் தலைவர் ராகவ் சதா, எடெல்வெய்ஸ் மியூச்சுவல் பண்ட் CEO ராதிகா குப்தா, தடகள வீராங்கனை மானசி ஜோஷி, பாரத்பே CEO சுஹைல் சமீர், Innov8 இணை நிறுவனர் ரித்தேஷ் மாலிக், சுகர் காஸ்மெட்டிக்ஸ் CEO வினீதா சிங் மற்றும் குளோபல் ஹிமாலயன் எக்ஸ்பெடிஷன் CEO ஜெய்தீப் பன்சால் உள்ளிட்ட இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

6. ‘தேசிய தரவு மற்றும் பகுப்பாய்வு தளத்தை’ தொடக்கிய நிறுவனம் எது?

அ. இந்திய ரிசர்வ் வங்கி

ஆ. NITI ஆயோக் 

இ. NASSCOM

ஈ. C–DAC

  • NITI ஆயோக் ஆனது பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தேசிய தரவு மற்றும் பகுப்பாய்வு தளத்தை அறிமுகம் செய்துள்ளது. தரவுகளை எளிதில் அணுகக்கூடியதாகவும், கலந்துரையாடக்கூடியதாகவும் பொது அரசாங்கத் தரவுகளுக்கான அணுகலை மக்கள்மயப்படுத்துவதையும் இந்தத் தளம் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது பல்வேறு அரசு நிறுவனங்களின் அடிப்படை தரவுத்தொகுப்புகளை வழங்குகிறது, அவற்றை ஒத்திசைவாக வழங்குகிறது; மேலும் பகுப்பாய்வு மற்றும் காட்சிப்படுத்தலுக்கான கருவிகளை வழங்குகிறது. இந்தப்பொது வெளியீடு இயங்குதளத்தின் பீட்டா வெளியீட்டைப் பின்பற்றுகிறது; இது குறைந்த எண்ணிக்கையிலான பயனர்களுக்கு சோதனை மற்றும் கருத்துக்கான அணுகலை வழங்கியது.

7. 2022 – உலக அருங்காட்சியக நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Bio–restoration in Museums

ஆ. Power of Museums 

இ. Cultural Exchange

ஈ. Global Co–operation

  • சமூகத்தைக் கட்டியெழுப்புதல், தேசிய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் கலாச்சார பரிமாற்றம் ஆகியவற்றில் அருங்காட்சியகங்களின் குறிப்பிடத்தக்க பங்கைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, மே.18 அன்று உலகெங்கிலும் உள்ள அருங்காட்சியகங்களால் உலக அருங்காட்சியக நாள் கொண்டாடப்படுகிறது. புது தில்லியின் தேசிய நவீன கலைக்கூடமானது, இந்த ஆண்டு அருங்காட்சியக நாளை – ‘அருங்காட்சியகங்களின் ஆற்றல்’ என்ற கருப்பொருளின்கீழ் கல்வி நடவடிக்கைகள் மற்றும் நிகழ்ச்சிகளுடன் ஒரு வார கால கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்கிறது.

8. இந்தியாவின் முதல், ‘அமிர்த நீர்நிலை’ திறக்கப்பட்ட மாநிலம் எது?

அ. கோவா

ஆ. ஜம்மு காஷ்மீர்

இ. உத்தர பிரதேசம் 

ஈ. குஜராத்

  • நாட்டின் முதலாவது ‘அமிர்த நீர்நிலை’யை உத்தர பிரதேச மாநிலம் இராம்பூரில் உள்ள பட்வாய் என்னுமிடத்தில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தொடங்கி வைத்தார். உள்ளூர் மக்கள் மற்றும் உள்ளூர் பள்ளி மாணாக்கரின் உதவியுடன், அழுக்கான ஒரு குளம் புதிய தடுப்புச்சுவர், எல்லைச்சுவர், உணவரங்கம், நீரூற்றுகள் & விளக்குகளுடன் மீட்டுருவாக்கஞ்செய்யப்பட்டுள்ளது. இந்தியா விடுதலை அடைந்த 75ஆவது ஆண்டில், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 75 நீர்நிலைகள் தூய்மையாக இருக்கவேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

9. கீழ்காணும் எம்மாநிலம் / UT–இல் மட்சோயிடே பாம்பின் புதைபடிவத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்?

அ. கேரளம்

ஆ. மேற்கு வங்கம்

இ. லடாக் 

ஈ. இலட்சத்தீவுகள்

  • லடாக்கில் அமைந்துள்ள இமயமலைப்பகுதியில் மட்சோயிடே பாம்பின் புதைபடிவத்தை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ‘Madtsoiidae’ என்பது அழிந்துபோன நடுத்தரம் முதல் பிரம்மாண்ட நீளமுடைய பாம்புகளின் குழுவாகும். இந்த ஆராய்ச்சி இந்திய துணைக்கண்டத்தில் அரியவகை பாம்பினங்கள் இருந்ததை எடுத்துக் காட்டுகிறது. அவை 30 அடி நீளம் வரை வளரும் எனக் கருதப்படுகிறது. டேராடூனின் வாடியா இன்ஸ்டிடியூட் ஆப் ஹிமாலயன் ஜியாலஜி, பஞ்சாப் பல்கலைக்கழகம், ஐஐடி ரோபார் மற்றும் சுலோவாக்கியாவின் கொமேனியஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்களால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

10. ‘கிராமப்புற பழங்குடியினர் தொழில்நுட்பப் பயிற்சி’த் திட்டமானது எவ்விடத்திலிருந்து தொடங்கப்பட்டது?

அ. வாரணாசி

ஆ. காந்தி நகர்

இ. போபால் 

ஈ. புனே

  • மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் இணையமைச்சர் இராஜீவ் சந்திரசேகர், போபாலில் உள்ள ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை பணியாளர்கள் செயல்திறன் மையத்தில், பழங்குடியின இளைஞர்கள் – கிராமப்புற பழங்குடியினர் தொழில்நுட்பப் பயிற்சிக்கான முன்னோடித் திட்டத்தைத் தொடங்கினார்.
  • இந்தியாவின் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், இராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் ஒடிஸா ஆகிய ஆறு மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 17 மாவட்டங்களின் சுமார் 250 பயனாளிகளுக்கு பயிற்சியளிக்க இந்தத் திட்டம் எண்ணுகிறது. விரைவில் ஜார்க்கண்டிலும் இது ஏற்பாடு செய்யப்படும். இப்பயிற்சியின்மூலம் இளைஞர்கள் தாங்களாகவே சொந்தமாகத் தொழில் தொடங்க முடியும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

Newspaper, news icon - Free download on Iconfinder

Newspaper, news icon - Free download on Iconfinder

1. தாமஸ் கோப்பை: வரலாறு படைத்தது இந்தியா!

தாமஸ் கோப்பை பாட்மின்டன் போட்டியின் 73 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக இந்தியா சாம்பியன் ஆகியிருக்கிறது. தாய்லாந்தில் நடைபெற்று வந்த இப்போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியா 3-0 என்ற கணக்கில், 14 முறை சாம்பியனான இந்தோனேசியாவை வீழ்த்தி வாகைசூடி வரலாறு படைத்திருக்கிறது.

இந்திய அணி, கடந்த 1979-க்குப் பிறகு இப்போட்டியில் அரையிறுதி, இறுதி ஆட்டங்களுக்கு முன்னேறியதும் இதுவே முதல் முறையாகும். இந்த முன்னேற்றத்தின்போது முக்கிய அணிகளான மலேசியா, டென்மார்க்கை இந்திய அணி சாய்த்தது குறிப்பிடத்தக்கது.

2. ஆஸி. முன்னாள் கிரிக்கெட் வீரர் சைமண்ட்ஸ் மரணம்

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் (46) கார் விபத்தில் உயிரிழந்தார். ஆஸ்திரேலியாவுக்காக 26 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடியுள்ள சைமண்ட்ஸ் 1,462 ரன்கள் எடுத்துள்ளார். பேட்டிங் சராசரி 40.61. பந்துவீச்சில் 24 விக்கெட் வீழ்த்தியுள்ளார். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அதிகம் ஆதிக்கம் செலுத்திய இவர் 198 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி 5,088 ரன்கள் குவித்துள்ளார். பேட்டிங் சராசரி 39.75. பந்துவீச்சில் 133 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

14 டி20 ஆட்டங்களில் விளையாடி 8 விக்கெட் வீழ்த்தியுள்ளார். பேட்டிங்கில் சராசரி 48.14 உடன் 337 ரன்கள் விளாசியுள்ளார் சைமண்ட்ஸ். பேட்டிங், பந்துவீச்சு மட்டுமின்றி பீல்டிங்கிலும் தலைசிறந்த வீரர் சைமண்ட்ஸ். ஐபிஎல் கிரிக்கெட்டில் டெக்கான் சார்ஜர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்காக சைமண்ட்ஸ் விளையாடியுள்ளார்.

3. இத்தாலியன் ஓபன்: ஜோகோவிச், ஸ்வியாடெக் சாம்பியன்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோர் சாம்பியன் ஆகினர். இதன்மூலம் இப்போட்டியில் 6ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார் ஜோகோவிச்.

தக்கவைத்த ஸ்வியாடெக்: இப்போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், நடப்புச் சாம்பியனான போலந்தின் இகா ஸ்வியாடெக் கோப்பையை தக்கவைத்துக் கொண்டார். இது, இப்போட்டியில் அவர் வெல்லும் 5-ஆவது பட்டமாகும்.

4. நேட்டோவில் இணைகிறது பின்லாந்து: அதிகாரபூர்வ அறிவிப்பு

நேட்டோ அமைப்பில் இணைய உள்ளதாக பின்லாந்து நாடு அதிகாரபூர்வமாக அறிவித்தது. ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்ற நேட்டோ கூட்டத்துக்குப் பின்னர், பின்லாந்து அதிபரும் பிரதமரும் கூட்டாக இதனை அறிவித்தனர். ரஷியாவின் அண்டை நாடான உக்ரைன் நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்தது. அதையடுத்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி படையெடுத்தது.

இந்த நிலையில், ரஷியாவின் மற்றொரு அண்டை நாடான பின்லாந்தும் நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்து வந்தது. உக்ரைனைப் போல தங்கள் மீதும் ரஷியா படையெடுப்பதைத் தடுப்பதற்காக அந்த முடிவை பின்லாந்து எடுக்கலாம் என்று கூறப்பட்டது. பின்லாந்தின் விருப்பத்துக்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்தது.

ஆனால், அதைப் பொருட்படுத்தாமல், நேட்டோவில் இணைவதற்கான விண்ணப்பத்தை காலம் தாழ்த்தாமல் உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் எனவும், அதற்கான நடைமுறைகள் உடனடியாகத் தொடங்கப்படும் எனவும் பின்லாந்து அதிபர் சாவ்லி நினிஸ்டோ, பிரதமர் சனா மரீன் ஆகியோர் அறிவித்தனர்.

5. வெம்பக்கோட்டை அகழாய்வில் யானை தந்தத்தாலான அணிகலன் கண்டெடுப்பு

வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் யானை தந்தத்தாலான அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய அணிகலன் மற்றும் சுடுமண்ணாலான காதணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை அடுத்த விஜயகரிசல்குளம் ஊராட்சிக்குட்பட்ட வைப்பாற்றின் வடகரையில் அமைந்துள்ள உச்சிமேட்டில் 25 ஏக்கர் பரப்பளவிலான தொல்லியல்மேட்டில், கடந்த மார்ச்.16 ஆம் தேதி முதல் அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்த அகழாய்வில் முன்னதாக, சுடுமண்ணாலான பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள், முத்துமணிகள், சங்கு வளையல்கள், சுடுமண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருள்கள், அழகிய வேலைப்பாடுகளுடன்கூடிய சுடுமண் அகல்விளக்கு உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அகழாய்வில் அழகிய வேலைப்பா -டுகளுடன் கூடிய யானை தந்தால் செய்யப்பட்ட அணிகலன் மற்றும் சுடுமண்ணாலான காதணிகள் ஆகியவையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. யானை தந்ததால் செய்யப்பட்ட அணிகலன் 5 செமீ நீளமும், 0.8 செமீ விட்டமும், 61 கிராம் எடையும் கொண்டதாக உள்ளது. அதேபோல், சுடுமண் காதணி 2.2 செமீ நீளமும், 1.01 செமீ சுற்றளவும் 65 கிராம் எடையும் கொண்டதாக உள்ளது.

கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த இரு அணிகலன்கள் மூலம் தொன்மையான மனிதர்கள் சுடுமண் பொருள்களை பல்வேறு வகையில் பயன்படுத்தி உள்ளதும், பெண்கள் அணிகலன்களை அழகிய வடிவில் பயன்படுத்தி உள்ளதும் தெரியவந்துள்ளது.

1. What is the theme of the ‘World Book and Copyright Day 2022’?

A. Read, so you never feel low 

B. To share a story

C. Imagine the World: A story of books and festivals

D. Reading, it’s my right!

  • The World Book and Copyright Day is celebrated on April 23, to promote the joy of books and reading. The theme for World Book and Copyright Day 2022 is “Read, so you never feel low.”
  • Each year, UNESCO and the international organisations representing the three major sectors of the book industry (publishers, booksellers, and libraries) select the World Book Capital for a one–year period. Guadalajara (Mexico) is the World Book Capital of 2022 and the city of Accra (Ghana) is the Capital for 2023.

2. The UN Chinese Language Day is observed on which date?

A. April.20 

B. May.15

C. April.21

D. May.16

  • The UN Chinese Language Day is observed every year on April 20 by the United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO) to raise awareness and respect for the history, culture and achievements of each of the six official languages of the world body.
  • April 20 was chosen as the date for the Chinese language to pay tribute to Cang Jie, a mythical figure who is presumed to have invented Chinese characters about 5,000 years ago. The six official languages of the United Nations are as follows: English, French, Russian, Chinese, Spanish and Arabic.

3. As per a recent NABARD Study, farmers of which state borrowed the largest amount per farmer?

A. Uttar Pradesh

B. Bihar

C. Jharkhand

D. Punjab 

  • As per a recent study, an average farmer of Punjab borrows four times the amount than his counterparts in Uttar Pradesh (UP) and over five times his counterparts in Maharashtra. The study was conducted by NABARD in collaboration with the Bharat Krishak Samaj on recent farm loan waivers by the three state governments. A marginal farmer in Punjab borrows Rs 3.4 lakh annually, as compared to Rs 84,000 and Rs 62,000 in UP and Maharashtra, respectively.

4. Which country won the ‘Locked Shields 2022’ Cyber–defence exercise?

A. USA

B. China

C. Finland 

D. Germany

  • Finland won Locked Shields 2022, the world’s largest and most complex international cyber–defence live–fire exercise, from the 24 teams participated in this year’s event. The joint team Lithuania–Poland took second place, followed by the joint Estonian–Georgian team. Locked Shields 2022 was organized by NATO Cooperative Cyber Defense Centre of Excellence (CCDCOE).

5. Which institution announces the ‘Class of Young Global Leaders (YGLs)’?

A. World Bank

B. World Economic Forum 

C. International Monetary Fund

D. NASA

  • The World Economic Forum announces the ‘Class of Young Global Leaders (YGLs)’, which includes researchers, innovative entrepreneurs, activists and promising political leaders between the ages of 30 and 40. The Indians featuring in the 2022 list are Aam Aadmi Party leader Raghav Chadha, Edelweiss Mutual Fund CEO Radhika Gupta, athlete Manasi Joshi, BharatPe CEO Suhail Sameer, Innov8 Coworking founder Ritesh Malik, Sugar Cosmetics CEO Vineeta Singh and Global Himalayan Expedition CEO Jaideep Bansal.

6. Which institution launched the ‘National Data & Analytics Platform (NDAP)’?

A. Reserve Bank of India

B. NITI Aayog 

C. NASSCOM

D. C–DAC

  • NITI Aayog launched the National Data & Analytics Platform (NDAP) for open public use. The platform aims to democratize access to public government data by making data accessible, interactive, and available on a user–friendly platform. It presents foundational datasets from various government agencies and provides tools for analytics and visualization. This public launch follows a beta release of the platform in August 2021 that had provided access to a limited number of users for testing and feedback.

7. What is the theme of the ‘International Museum Day 2022’?

A. Bio–restoration in Museums

B. Power of Museums 

C. Cultural Exchange

D. Global Co–operation

  • International Museum Day is celebrated by museums across the globe on May 18th, to generate awareness about the significant role of museums in community building, national and international cooperation as well as cultural exchange. The National Gallery of Modern Art, New Delhi is organizing week–long celebrations with educational activities and programs under the theme of this year’s Museum Day – ‘Power of Museums’.

8. India’s first ‘Amrit Sarovar’ has been inaugurated in which state?

A. Goa

B. Jammu and Kashmir

C. Uttar Pradesh 

D. Gujarat

  • Union Minister for Minority Affairs Mukhtar Abbas Naqvi inaugurated the country’s first ‘Amrit Sarovar’ in Rampur, Uttar Pradesh. With the help of local people and local school children, the dirty pond has been transformed with new retaining wall, boundary wall, food court, fountains and lighting. Prime Minister Narendra Modi had called for having at least 75 water bodies in every district in the 75th year of India’s Independence.

9. Scientists have discovered the fossil of a Madtsoiidae snake in which state/UT?

A. Kerala

B. West Bengal

C. Ladakh 

D. Lakshadweep

  • Scientists have discovered the fossil of a Madtsoiidae snake in the Himalayan Mountains in Ladakh. Madtsoiidae is an extinct group of medium–sized to gigantic snakes. This research highlights the existence of the rare serpent species in the Indian subcontinent. They are thought to grow up to 30 feet in length. The study was undertaken by researchers from Wadia Institute of Himalayan Geology, Dehradun, Panjab University, IIT Ropar and Comenius University, Slovakia.

10. ‘Rural Tribal Technical Training’ Project was inaugurated from which place?

A. Varanasi

B. Gandhi Nagar

C. Bhopal 

D. Pune

  • Minister of State, Ministry of Skill Development and Entrepreneurship, Rajeev Chandrasekhar launched the Pilot Project for Skilling Tribal Youth – Rural Tribal Technical Training at the Centre for Research and Industrial Staff Performance CRISP, Bhopal. The project seeks to provide training for about 250 beneficiaries of 17 districts selected from six states of India – Madhya Pradesh, Chhattisgarh, Gujarat, Rajasthan, Maharashtra and Odisha and will be organized at Jharkhand. The training will enable the youth to start their own business.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!