TnpscTnpsc Current Affairs

16th November 2021 Tnpsc Current Affairs in Tamil & English

16th November 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 16th November 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

November Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாள் அனுசரிக்கப்பட்ட தேதி எது?

அ) நவம்பர் 7 

ஆ) நவம்பர் 8

இ) நவம்பர் 10

ஈ) நவம்பர் 12

  • இந்தியாவில், தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாளானது ஒவ்வோர் ஆண்டும் நவ.7 அன்று அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோயை முன்கூட்டி -யே கண்டறிந்து குணப்படுத்துவது குறித்து மக்களுக்குக் கற்பிப்பதே இச்சிறப்பு நாளின் முக்கிய குறிக்கோளாகும். நாட்டில் சுமார் 2.9 மில்லிய -ன் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 1.1 மில்லியன் புதிய பாதிப்புகள் பதிவாகின்றன.

2. தேசிய சட்ட சேவைகள் நாள் அனுசரிக்கப்பட்ட தேதி எது?

அ) நவம்பர் 7

ஆ) நவம்பர் 9 

இ) நவம்பர் 11

ஈ) நவம்பர் 13

  • ‘தேசிய சட்ட சேவைகள் நாளானது’ ஆண்டுதோறும் நவ.9 அன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இது சட்ட சேவைகள் ஆணையச்சட்டம் இயற்றப்பட்டதை நினைவுகூருவதோடு சட்டம் தொடர்பான விதிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தியாவில், 1987ஆம் ஆண்டில் சட்ட சேவைகள் ஆணையச் சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் 1995 நவ.9’இல் நடைமுறைக்கு வந்தது.

3. உலக நிமோனியா நாள் அனுசரிக்கப்பட்ட தேதி எது?

அ) நவம்பர் 10

ஆ) நவம்பர் 12 

இ) நவம்பர் 14

ஈ) நவம்பர் 16

  • உலக நிமோனியா நாளானது ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 12 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவத -ற்காக, 2009ஆம் ஆண்டில் ‘ஸ்டாப் நிமோனியா’ முன்முயற்சியால் இந்த நாள் நிறுவப்பட்டது. உலகெங்கிலும், குழந்தைகளில் இறப்புகளை ஏற்படுத்தும் முக்கிய நோயாக நிமோனியா கருதப்படுகிறது.
  • ‘Stop Pneumonia’ முயற்சி மற்றும் ‘Every Breath Counts’ கூட்டணி ஆகியவை இணைந்து இந்நோயைக் கையாள்வது குறித்து மக்களை அணிதிரட்டுகின்றன.

4. உலக கருணை நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ) நவம்பர் 13 

ஆ) நவம்பர் 14

இ) நவம்பர் 15

ஈ) நவம்பர் 16

  • உலக கருணை நாளானது ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 13 அன்று கொண்டாடப்படுகிறது. இது சமூகத்தில் நற்செயல்களை முன்னிலைப்ப -டுத்துகிறது. இது நேர்மறையான ஆற்றல் மற்றும் நம்மை பிணைக்கும் கருணையின் பொதுவான இழையில் கவனம் செலுத்துகிறது. இனம், அரசியல், பாலினம் உள்ளிட்ட பிளவுகளை இணைக்கும் மனிதத்தின் அடிப்படைப் பகுதியாக கருணை உள்ளது. கடந்த 1998ஆம் ஆண்டில், பல்வேறு நாடுகளின் கருணை தன்னார்வ தொண்டு நிறுவனங்களான உலக கருணை இயக்கத்தால் இந்த நாள் அறிமுகப்படுத்தப்பட்டது.

5. உலக நீரழிவு நோய் நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) நவம்பர் 10

ஆ) நவம்பர் 12

இ) நவம்பர் 14 

ஈ) நவம்பர் 16

  • நவ.14ஆம் தேதி உலக நீரழிவு நோய் நாளாக அனுசரிக்கப்படுகிறது. இது உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச நீரழிவு கூட்டமைப்பு ஆகியவற்றால் கூட்டாக ஏற்பாடு செய்யப்படுகிறது. உலக நீரழிவு நாளின் சின்னமானது ஒரு நீல வட்டத்தினால் குறிக்கப்படுகிறது. அது, வாழ்க்கை மற்றும் நலத்தைக் குறிக்கிறது. நவம்பர்.14, இன்சுலினைக் கண்டுபிடித்தவரான பிரடெரிக் பான்டிங்கின் பிறந்தநாளைக் குறிக்கிறது.
  • “Access to Diabetes Care – If Not Now, When?” என்பது 2021-2023 வரையிலான உலக நீரிழிவு நாளிற்கான கருப்பொருளாகும்.

6. தேசிய குழந்தைகள் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ) நவம்பர் 12

ஆ) நவம்பர் 13

இ) நவம்பர் 14 

ஈ) நவம்பர் 15

  • இந்தியாவில் குழந்தைகள் நாள் நவ.14 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாள் குழந்தைகளின் உரிமைகள், பராமரிப்பு மற்றும் கல்விபற்றிய விழிப்புணர்வை மக்களிடையே அதிகரிக்கிறது. குழந்தைகள் நாட்டின் எதிர்காலம். இந்த நாள், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக உள்ளது.

7. உலக சகிப்புத்தன்மை நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ) நவம்பர் 16 

ஆ) நவம்பர் 14

இ) நவம்பர் 12

ஈ) நவம்பர் 10

  • சமுதாயத்தில் சகிப்புத்தன்மையின் அவசியத்தைப்பற்றி மக்களுக்குக் கற்பிப்பதற்கும், சகிப்புத்தன்மையின் எதிர்மறையான விளைவுகளைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவுவதற்குமாக ஐநா அவையின் உலக சகிப்புத்தன்மை நாள் ஆண்டுதோறும் நவ.16 அன்று கடைப்பிடிக்கப்படு -கிறது. இந்நாள் உலகளாவிய சகிப்புத்தன்மையின் முக்கியத்துவத்தை பற்றி மக்களுக்குக் கற்பிக்கிறது.

8. தேசிய கால்-கை வலிப்பு நோய் நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) நவம்பர் 17 

ஆ) நவம்பர் 16

இ) நவம்பர் 13

ஈ) நவம்பர் 14

  • இந்தியாவில், கால்-கை வலிப்பு நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத் -துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் நவம்பர்.17ஆம் தேதி தேசிய கால்-கை வலிப்புநோய் நாள் அனுசரிக்கப்படுகிறது. கால்-கை வலிப்பு என்பது மூளையில் ஏற்படும் ஒரு நாள்பட்ட கோளாறு ஆகும்.
  • வலிப்புகள் நியூரான்களில் (மூளை செல்கள்) திடீர், அதிகப்படியான மின் வெளியேற்றங்களின் விளைவாக ஏற்படுகின்றன. இந்த நிலை எந்த வயதினரையும் பாதிக்கலாம்.

9. அண்மையில் பணிக்கு சேர்க்கப்பட்ட ‘ICGS சர்தக்’ என்ற புதிய உள்நாட்டுக்கப்பல், எந்த மாநிலத்தில் பணியமர்த்தப்படவுள்ளது?

அ) தமிழ்நாடு

ஆ) கேரளா

இ) குஜராத் 

ஈ) மகாராஷ்டிரா

  • கோவாவில் ‘சர்தக்’ என்ற பெயரிலான புதிய உள்நாட்டுக்கப்பல் அண்மையில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. ‘ICGS சர்தக்’, குஜராத்தில் உள்ள போர்பந்தரை மையமாகக் கொண்டு இந்தியாவின் மேற்குக் கடற்பரப்பில் பணியாற்றும். இது கடலோர காவல்படை பிராந்தியத்தின் (வடமேற்கு) தளபதியின் செயல்பாட்டு மற்றும் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இயக்கப்படும்.
  • இந்திய கடலோர காவல்படைக்காக கோவா ஷிப்யார்ட் லிமிடெட்மூலம் உள்நாட்டில் கட்டப்பட்டு வரும் ஐந்து கடற்புற ரோந்து கப்பல்களின் வரிசையில் ‘ICGS சர்தக்’ நான்காவதாக உள்ளது.

10. எதிர்வரும் 2022’இல் ஐநா காலநிலை மாற்ற மாநாடு-COP27’ நடத்தவுள்ள நாடு எது?

அ) இந்தியா

ஆ) சீனா

இ) அமெரிக்கா

ஈ) எகிப்து 

  • ஐநா காலநிலை மாற்ற மாநாடு – COP27’ஐ எகிப்து 2022’இல் நடத்தும் மற்றும் COP28’ஐ ஐக்கிய அரபு அமீரகம் (UAE) 2023’இல் நடத்தும். COP என்பது காலநிலை மாற்றம் தொடர்பான ஐநா கட்டமைப்பின் முடிவெடுக் -கும் அமைப்பாகும். இந்தக் கட்டமைப்பில் 197 நாடுகள் உள்ளன. கால நிலை மாற்றம் குறித்த 2015 பாரிஸ் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்குகளை அடைய அந்நாடுகள் பாடுபடுகின்றன.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மேகாலயாவுக்கு மாற்றம்: குடியரசுத் தலைவர் உத்தரவு

கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாகப் பதவி வகித்த சஞ்ஜிப் பானர்ஜி, கடந்த ஜன.4-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றார்.

இந்நிலையில், இவரை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய, உச்ச நீதிமன்ற தலைமைநீதிபதி அடங்கிய கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இதற்கிடையே, 75 நீதிபதிகள் கொண்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான சஞ்ஜிப் பானர்ஜியை, 3 நீதிபதிகள் கொண்ட மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தும், இடமாற்றத்தை மறுபரிசீலனை செய்யவும் கோரி, சென்னை உயர் நீதிமன்றமூத்த வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் சங்கத்தினர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், உச்ச நீதிமன்ற கொலீஜியத்துக்கும் கடிதம் அனுப்பியிருந்தனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நேற்று மவுன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில், உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்று, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த், நேற்று உத்தரவிட்டார்.

2. நவ.15 பழங்குடியினர் பெருமை தினம் – பிரதமருக்கு ஆளுநர் நன்றி :

பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த தினமான நவ.15-ம் தேதியை பழங்குடியினர் பெருமை தினமாக அறிவித்தமைக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்திய விடுதலைப் போரில் அதிமான பங்களிப்பை பழங்குடியினர் வழங்கியுள்ளனர். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பரவி வாழும் அவர்கள், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கடும் துயரங்களை அனுபவித்தனர். பகவான் மிர்சா முண்டா, இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களில் முக்கியமானவர். துணிச்சலுடன் போராடிய தலைவரான அவர், ஆங்கிலேயேருடன் ஏற்பட்ட போராட்டத்தில் இளம் வயதிலேயே மரணத்தைத் தழுவினார். இந்நிலையில், பகவான் மிர்சா முண்டாவின் பிறந்த தினமான நவம்பர் 15-ம் தேதியை பழங்குடியினர் பெருமை தினமாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

பழங்குடியினரின் தியாகங்களைப் போற்றும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டமைக்காக, பிரதமர் மோடிக்கு தமிழகம் சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவி நன்றி தெரிவித்துள்ளார். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. வெளிநாடுகளில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களின் முதல் தேர்வு அமெரிக்கா

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்த ஆண்டு சர்வதேச கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, இந்தியா உட்பட 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 9 லட்சத்து 14 ஆயிரம் மாணவர்கள் அமெரிக்காவில் உயர் கல்வி பயில்கின்றனர். இதில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை தோராயமாக 20 சதவீதம். 2020-2021-ம் கல்வி ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 67,582 இந்திய மாணவர்கள் அமெரிக்க கல்வி நிறுவனங்களில் படிக்கிறார்கள். வெளிநாடுகளில் மேற்படிப்பு படிக்க விரும்பும் இந்திய மாணவர்களின் முதல் தேர்வாக அமெரிக்கா இருக்கிறது.

கடந்த ஆண்டு கரோனா பெருந்தொற்று சூழலில் வெளிநாட்டு மாணவர்களின் கல்வி நலனை பாதுகாக்கும் பொருட்டு அமெரிக்க அரசும் அமெரிக்க உயர்கல்வி நிறுவனங்களும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டன. எந்த வகையிலும் படிப்பு பாதிக்காமல் இருக்க இணையவழி உள்ளிட்ட மாற்று ஏற்பாடுகள் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன.

அமெரிக்காவில் உயர்கல்வி பயில விரும்பும் வெளிநாட்டு மாணவர்கள் அதுதொடர்பான அனைத்து தகவல்களையும் உதவிகளையும் பெறுவதற்கு Education USA India என்ற மொபைல் செயலியை இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த செயலி மூலம் அமெரிக்க கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கை நடைமுறை குறித்த அனைத்து தகவல்களையும் அறிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

4. பணிக்காலத்தின்போது உயிரிழக்கும் பத்திரிகையாளர்களுக்கான குடும்ப நல நிதியை ரூ.5 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு: பணிபுரிந்த ஆண்டுகள் அடிப்படையில் நிதி வழங்கப்படும்

பணிக் காலத்தின்போது உயிரிழக்கும் பத்திரிகையாளர் குடும்ப நலநிதியை ரூ.5 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணை:

தமிழகத்தில் உள்ள பத்திரிகைதுறையில் தொடர்ந்து பணியாற்றிய ஆசிரியர்கள், துணை ஆசிரியர்கள், செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், பிழை திருத்துபவர்கள் ஆகியோர் பணியில் இருக்கும்போது இயற்கை எய்தினால், அவர்களது குடும்பத்துக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து கடந்த 2018-ம் ஆண்டுமுதல் குடும்ப நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

பத்திரிகையாளர் 20 ஆண்டுகள் பணியாற்றி வரும் நிலையில் இறந்தால் ரூ.3 லட்சம், 15 ஆண்டுகள் எனில்ரூ.2.25 லட்சம், 10 ஆண்டுகளுக்கு ரூ.1.50 லட்சம், 5 ஆண்டுகளுக்கு ரூ.75 ஆயிரம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், சட்டப்பேரவையில் 2021-22 ஆண்டுக்கான மானியக் கோரிக்கையின்போது செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்,‘‘பத்திரிகை துறையில் ஆசிரியர்,உதவி ஆசிரியர், நிருபர், புகைப்படக் கலைஞர், பிழை திருத்துபவர் ஆகியோர் பணிக் காலத்தில் இயற்கை எய்தினால், அவர்களது குடும்பத்துக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து தற்போது ரூ.3 லட்சம் வரை வழங்கப்படும் குடும்ப நிதியுதவி ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்’’ என்று அறிவித்தார்.

அரசின் கவனமான பரிசீலனைக்குப் பிறகு, பத்திரிகையாளர் 20 ஆண்டுகள் பணியாற்றி இறந்தால் ரூ.5 லட்சம், 15 ஆண்டுகள் எனில் ரூ.3.75 லட்சம், 10 ஆண்டுகளுக்கு ரூ.2.50 லட்சம், 5 ஆண்டுகளுக்கு ரூ.1.25 லட்சம்என, நடைமுறையில் உள்ள விதிகளின்படி குடும்ப நிதியுதவி உயர்த்தி வழங்கப்படும்.

இந்த உதவியை பெற, உரிய சான்றிதழ்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் வாயிலாக மாவட்ட ஆட்சியரின் பரிந்துரை பெற்று, செய்தித் துறை இயக்குநருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

ஓய்வூதிய பரிசீலனைக் குழு இந்தவிண்ணப்பங்களை பரிசீலித்து, பரிந்துரை அடிப்படையில் உத்தரவு வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

5. இந்தியாவிலேயே முதன்முறையாக தஞ்சாவூரில் ரூ.1.1 கோடியில் உணவு அருங்காட்சியகம்: மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் காணொலி மூலம் திறந்து வைத்தார்

இந்தியாவிலேயே முதன்முறையாக இந்திய உணவுக் கழகம்சார்பில் தஞ்சாவூரில் ரூ.1.1 கோடி மதிப்பீட்டில் உணவு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் காணொலி மூலம் நேற்று திறந்து வைத்தார்.

இந்திய உணவுக் கழகம் தஞ்சாவூரில் 1965-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தஞ்சாவூர் நிர்மலா நகரில் உள்ள இந்நிறுவனத்தின் மண்டல அலுவலகத்தில் உணவு அருங்காட்சியகம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, 2,500 சதுரஅடி பரப்பளவில் உணவு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது.

பெங்களூருவில் உள்ளவிஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்பஅருங்காட்சியகத்தின் உதவியுடன், 13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் உணவுக்காக எப்படி வேட்டையாட தொடங்கினான் என்பதில் தொடங்கி, உழவு கருவிகள், விவசாயம், உலகில் உள்ள தானிய களஞ்சியங்கள், உலகளவில் உணவு உற்பத்தியின் சவால்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள், இந்தியாவில் உள்ள உணவு முறைகள், பொதுவிநியோகத் திட்டம், விவசாயத்தில் உழவுப்பணி, நாற்றங்கால், நடவு, களை எடுப்பு, அறுவடை, கொள்முதல், அரைவை, மக்களுக்கு அரிசிவிநியோகம் வரை உள்ள பணிகள் மெழுகு பொம்மைகளாகதத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த அருங்காட்சியகத்தை நேற்று பொதுமக்கள் பார்வைக்காக மத்திய உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை அமைச்சர் பியூஸ்கோயல் மும்பையில் இருந்தவாறு காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

பின்னர் அவர் பேசும்போது, “இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக, இந்தியாவிலேயே முதன்முறையாக தஞ்சாவூரில் உணவு அருங்காட்சியகம் அமைக்கஏற்பாடுகளை செய்த இந்திய உணவுக் கழகத்தினருக்கு பாராட்டுகள். இறக்குமதியாளர் முதல் ஏற்றுமதியாளர் வரை உணவுப் பாதுகாப்பின் மூலம் தேசத்தில் விவசாயப் புரட்சியை இந்திய உணவு கழகம் ஏற்படுத்தி வருகிறது. சமூகத்தில் ஏழைகள் மற்றும் சலுகைகள் கிடைக்காத பிற பிரிவினருக்கு இந்திய உணவுக் கழகம் தொடர்ந்து சேவை செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.

இதையடுத்து, தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தென்மண்டல செயல் இயக்குநர் டல்ஜித்சிங், முதன்மைப் பொது மேலாளர் சஞ்சீவ்குமார் கவுதம், தமிழக பொது மேலாளர் பி.என்.சிங், தஞ்சாவூர் மண்டல மேலாளர் தேவேந்திர சிங் மார்டோலியா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த அருங்காட்சியகத்தை அலுவலக வேலை நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 5மணி வரை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம். இந்த அருங்காட்சியகம் ப்ரொஜெக்ஷன் மேப்பிங், டச் ஸ்கிரீன் கியோஸ்க், ப்ராக்ஸிமிட்டி சென்சார்கள் போன்ற நவீன தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது. மேலும், இந்திய உணவுக் கழகத்தின் செயல்பாடுகள் குறித்தும் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

6. உ.பி.யில் மாடுகளுக்காக ஆம்புலன்ஸ், அழைப்பு மையங்கள்: மாநில அமைச்சர் அறிவிப்பு

உத்தர பிரதேசத்தில் மாடுகளுக் காக ஆம்புலன்ஸ் சேவை மற்றும்உதவிகளுக்கான அழைப்பு மையங்களின் சேவை துவக்கப்பட உள்ளது.

பாஜக ஆளும் உ.பி.யின் முதல்வர் ஆதித்யநாத் ஆட்சியில் மாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதற்கு இந்துக்கள் இடையே பசுமாடுகள் புனிதமாகக் கருதப்படுவது காரணம். இதனால், மனிதர்களுக்கானதை போல், மாடுகளுக்கும் சிகிச்சை வசதிகள் அளிக்க ஆம்புலன்ஸ் மற்றும் அழைப்பு மையங்கள் சேவை உ.பி.யில் டிசம்பர் முதல் துவக்கப்படுகிறது.

இது குறித்து மதுராவில் செய்தியாளர்களிடம் தனது அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் நாராயண் சவுத்ரி, ‘‘24 மணி நேரங்களுக்கான இந்த ஆம்புலன்ஸ் சேவைக்கானஎண் 115 மற்றும் உதவிகளுக்கான அழைப்பு மையங்கள் எண் 112ஆகும். மாநில அளவில் ஒருங்கிணைந்த அழைப்பு மையம் தலைநகர் லக்னோவில் அமைக்கப்படும். ஒவ்வொரு ஆம்புலன்ஸிலும் ஒரு கால்நடை மருத்துவரும், இரண்டு உதவியாளர்களும் இருப்பார்கள். அழைப்பு வந்த சுமார் 20 நிமிடங்களுக்குள் சேவை கிடைக்கும்’’ எனத் தெரிவித்தார்.

இதுபோன்ற கால்நடைகளுக்கான சேவை வேறு எந்த மாநிலங்களிலும் இல்லை எனக் கருதப்படுகிறது. இத்துடன் இலவசமாக உயரிய வகைப் பசு மாடுகளுக்கான இன உற்பத்தி நிலையமும், அனைத்து பசுக்களையும் அதிகபால் தருவதாக மாற்றும் தொழில்நுட்பமும் துவக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இவை துவக்கக் கட்டமாகசோதனை அடிப்படையில் மதுரா உள்ளிட்ட உத்தர பிரதேச மாநிலத்தின் எட்டு மாவட் டங்களில் துவக்கப்படுவதாகவும் அமைச்சர் நாராயண் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

7. சேதி தெரியுமா?

நவ.7: இந்திய கடற்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் நவம்பர் 30-ஆம் தேதியுடன் ஓய்வு பெறுவதையொட்டி, புதிய தளபதியாக ஆர்.ஹரிகுமார் நியமிக்கப்பட்டார்.

நவ.8: விண்வெளியில் நடந்த முதல் சீனப் பெண் என்ற வரலாற்றை வாங் யாபிங் (41) படைத்தார். விண்வெளி நிலைய கட்டமைப்புப் பணிக்காக விண்வெளியில் நடந்து இச்சாதனையைப் புரிந்தார்.

நவ.8: யுனெஸ்கோ அமைப்பின் படைப்பாற்றல் கொண்ட நகரங்களின் பட்டியலில் காஷ்மீரில் உள்ள ஸ்ரீ நகர் இணைந்தது. உலகம் முழுவதும் 49 நகரங்கள் இப்பட்டியலில் உள்ளன.

நவ.9: குளிர்பதன பெட்டியில் வைக்க அவசியமில்லாத புதிய கரோனா தடுப்பூசியை அமெரிக்காவின் பாஸ்டன் நகர் குழந்தைகள் மருத்துவமனை ஆராய்ச்சி குழுவினர் உருவாக்கியுள்ளனர். அறை வெப்பநிலையில் 7 நாட்கள் வரை வைத்து இதைப் பயன்படுத்தலாம்.

நவ.9: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயாவுக்கு இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்தது.

நவ.9: ஈஃபிள் கோபுரம் அளவிலான ‘4660 நெரியஸ்’ என்று பெயரிடப்பட்ட குறுங்கோள் டிசம்பர் மாதத்தில் புவியை நோக்கி நகரும் என்று அமெரிக்காவின் நாசா அறிவித்தது.

நவ.10: இந்திய டி20 கிரிக்கெட் அணியின் தலைவராக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். டி20 கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகியதை அடுத்து இப்பொறுப்புக்கு அவர் நியமிக்கப்பட்டார்.

நவ.10,11: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி நியூசிலாந்தும், பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியாவும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது.

நவ.11: வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையைக் கடந்தது. இதன் காரணமாக பெய்த மழையால் சென்னை மாநகரம் வெள்ளக்காடானது.

நவ. 12: சர்வதேச துப்பாக்கிச் சுடும் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் போலந்தில் நடைபெற்ற பிரசிடெண்ட்ஸ் கோப்பைக்கான போட்டியில் இந்திய அணி 2 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என 5 பதக்கங்களை வென்றது.

1. On which date, the National Cancer Awareness Day was observed?

A) November 7 

B) November 8

C) November 10

D) November 12

  • In India, the National Cancer Awareness Day (NCAD) is observed every year on 7th of November. The main motto of the special day is to educate people on early detection & cure of cancer. It is estimated that there are about 2.9 million cases of cancer in the country with 1.1 million new cases being reported annually.

2. When is the ‘National Legal Services Day’ observed in India?

A) November 7

B) November 9 

C) November 11

D) November 13

  • ‘National Legal Services Day’ is observed across the country annually on 9 November. It aims to commemorate the enactment of the Legal Services Authorities Act and to create awareness about the provisions related to the act. The Legal Services Authorities Act was enacted in 1987. The Act came into existence on 9 November 1995.

3. When is ‘World Pneumonia Day’ observed?

A) November 10

B) November 12 

C) November 14

D) November 16

  • World Pneumonia Day is observed every year on 12 November. The day was established by the Stop Pneumonia Initiative in 2009 to raise awareness about the disease. Pneumonia is considered as the leading disease which causes more deaths of children around the world. ‘Stop Pneumonia Initiative’ and ‘Every Breath Counts Coalition’ jointly mobilise the people about tackling the disease.

4. On which date, the World Kindness Day is celebrated?

A) November 13 

B) November 14

C) November 15

D) November 16

  • The World Kindness Day is celebrated every year on 13th of November to highlight good deeds in the community focusing on the positive power and the common thread of kindness which binds us. Kindness is a fundamental part of the human condition which bridges the divides of race religion, politics, gender and zip codes.
  • The day was introduced in 1998 by the World Kindness Movement, a coalition of nations’ kindness NGOs.

5. On which date, World Diabetes Day is observed?

A) November 10

B) November 12

C) November 14 

D) November 16

  • November 14 is observed as World Diabetes Day. It is jointly organized by the World Health Organisation and the International Diabetes Federation. The logo of World Diabetes Day is a blue circle, which symbolizes life and health. November 14 marks the birthday of the man who co–discovered insulin, Frederick Banting.
  • “Access to Diabetes Care – If Not Now, When?” is the theme for the World Diabetes Day 2021–2023.

6. On which date, National Children’s Day is celebrated?

A) November 12

B) November 13

C) November 14 

D) November 15

  • Children’s Day is celebrated on 14 November in India. This day increases awareness in people about the rights, care, and education of children. Children are the future of the country. This day commemorates the birth anniversary of the first Prime Minister of India, Jawaharlal Nehru.

7. “International Day for Tolerance” is celebrated on which date?

A) November 16 

B) November 14

C) November 12

D) November 10

  • The United Nations’ International Day for Tolerance is annually observed on November 16 to educate people about the need for tolerance in society and to help them understand the negative effects of intolerance. The International Day for Tolerance educates people about the importance of global tolerance.

8. On which date, the National Epilepsy Day is observed?

A) November 17 

B) November 16

C) November 13

D) November 14

  • In India, the National Epilepsy Day is observed every year on 17th of November to create awareness about epilepsy. Epilepsy is a chronic disorder of brain characterized by recurrent ‘seizures’ or ‘fits’.
  • The seizures are caused as a result of sudden, excessive electrical discharges in the neurons (brain cells). The condition can affect people at any age.

9. The new indigenous ship, named ‘ICGS Sarthak’, which was recently commissioned, is set to be based at which state?

A) Tamil Nadu

B) Kerala

C) Gujarat 

D) Maharashtra

  • A new indigenous ship, named ‘Sarthak’ was recently commissioned and dedicated to the nation in Goa. ICGS Sarthak will be based at Porbandar in Gujarat and operate on India’s Western Seaboard. It will be operated under the Operational and Administrative Control of the commander of Coast Guard Region (Northwest).
  • ICGS Sarthak is fourth in the series of five Offshore Patrol Vessels (OPVs) that are being built indigenously by Goa Shipyard Limited for the Indian Coast Guard.

10. Which country is set to host the UN climate change conference COP27 in 2022?

A) India

B) China

C) USA

D) Egypt 

  • The United Nation Climate Change conference – COP27 would be hosted by Egypt in the year 2022 and the COP 28 would be hosted by the United Arab Emirates (UAE) in 2023.
  • The COP is the decision–making body of the United Nations Framework Convention on Climate Change (UNFCCC). The Convention has 197 Parties and is striving to achieve the goals set out in the 2015 Paris Agreement on climate change.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!