Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

16th October 2020 Current Affairs in Tamil & English

16th October 2020 Current Affairs in Tamil & English

16th October 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

16th October 2020 Tnpsc Current Affairs in Tamil

16th October 2020 Tnpsc Current Affairs in English

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1.இணைய பாதுகாப்பு குறித்த அறிவு & தொழில்நுட்ப பரிமாற்றத்திற்காக எந்த நாட்டுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?

அ. ஜெர்மனி

ஆ. பிரான்ஸ்

இ. ஜப்பான்

ஈ. சிங்கப்பூர்

  • இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கிடையே இணைய பாதுகாப்பு குறித்த கூட்டுறவுப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட, பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இயற்கை எரிவாயு விலையிடலில் தரப்படுத்தப்பட்ட மற்றும் வெளிப்படையான மின்னணு-ஏல நடைமுறைக்கு நடுவணமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கொல்கத்தா மெட்ரோ இரயிலின் ஒரு திட்டத்தின் திருத்தப்பட்ட செலவினத்திற்கும் அது அனுமதி அளித்துள்ளது. COVID-19 குறித்த பொது விழிப்புணர்வு பரப்புரைத் திட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

2.விழாக்காலங்களை முன்னிட்டு இந்தியப்பிரதமர் தொடங்கியுள்ள COVID-19 விழிப்புணர்வு பரப்புரைத் திட்டத்தின் பெயரென்ன?

அ. ஜன் அந்தோலன்

ஆ. பாரத் அந்தோலன்

இ. COVID ஜக்ருதா

ஈ. COVID சோடோ இந்தியா

  • அண்மையில் பிரதமர் மோடி, COVID-19 தற்காப்பு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக, ‘ஜன் அந்தோலன்’ என்ற பரப்புரைத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார். திருவிழாக்கள், குளிர்காலம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் செயல்படவுள்ளதை கருத்தில்கொண்டு இப்பரப்புரை தொடங்கப்பட்டுள்ளது. முகமறைப்பு அணியவும், கைகளை நன்றாக கழுவவும், சமூக விலகலை பின்பற்றவும் பிரதமர் மோடி அப்போது கேட்டுக்கொண்டார்.

3.உலக பருத்தி வணிகத்தில், இந்திய உயர்ரக பருத்தியின் புதிய வணிகப் பெயர் (brand) என்ன?

அ. பாரத் பருத்தி

ஆ. வியத்தகு பருத்தி

இ. கஸ்தூரி பருத்தி

ஈ. மகாராஜா பருத்தி

  • மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, அண்மையில், இந்திய பருத்திக்கான முதல் வணிகப் பெயரையும் இலச்சினையையும் வெளியிட்டார். அது, அக்டோபர்.7 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட இரண்டாவது உலக பருத்தி நாளன்று வெளியிடப்பட்டது.
  • இந்தியாவின் உயர்ரக பருத்தி, உலக பருத்தி வணிகத்தில், ‘கஸ்தூரி பருத்தி’ என்று அழைக்கப்படும். இந்திய பருத்திக்கான புதிய இலச்சினையையும் அமைச்சர் அப்போது வெளியிட்டார்.

4.நெதர்லாந்து பேரரசிற்கான இந்தியாவின் அடுத்த தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

அ. நவ்தேஜ் சர்னா

ஆ. பிரதீப் குமார் ராவத்

இ. அருண்குமார் சிங்

ஈ. ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா

  • 1990ஆம் ஆண்டைச் சார்ந்த மூத்த இந்திய வெளியுறவு சேவை (IFS) அதிகாரியான பிரதீப் குமார் ராவத் நெதர்லாந்து பேரரசிற்கான இந்தியாவின் அடுத்த தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, தற்போது இந்தோனேசிய குடியரசின் இந்திய தூதராக இருக்கும் பிரதீப் குமார், விரைவில் புதிய பதவியை ஏற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

5.இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) புதிய துணை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

அ. M இராஜேஸ்வர் ராவ்

ஆ. ஆஷிமா கோயல்

இ. ஜெயந்த் R வர்மா

ஈ. சஷங்கா பிதே

  • ரிசர்வ் வங்கியின் புதிய துணை ஆளுநராக M இராஜேஸ்வர் ராவை நடுவணரசு நியமித்துள்ளது. அவர் தற்போது RBI’இன் நிர்வாக இயக்குநராக பணியாற்றி வருகிறார். மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு, இந்த நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது, N S விஸ்வநாதனை அடுத்து RBI’இன் நான்காவது துணை ஆளுநராக M இராஜேஸ்வர் ராவ் பொறுப்பேற்கவுள்ளார்.

6.இந்தியாவின் முதல் அதிநவீன உற்பத்தி மையம் (AMHUB) நிறுவப்படவுள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கர்நாடகா

இ. கேரளம்

ஈ. மேகாலயா

  • இந்தியாவின் முதல் அதிநவீன உற்பத்தி மையமானது (Advanced Manufacturing HUB AMHUB) தமிழ்நாட்டில் நிறுவப்படவுள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாட்டின் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் உதவி நிறுவனமான, ‘The Guidance’ உலக பொருளாதார மன்றத்துடன் (WEF) கூட்டிணைந்துள்ளது. AMHUB என்பது WEF வடிவமைத்த பத்தொன்பது தளங்களுள் ஒன்றாகும். நான்காம் தொழிற்துறை புரட்சியின் வாய்ப்புகளைக் கண்டறிந்து, அவற்றுக்கு உரிய தீர்வுகளை வழங்குவதன்மூலம், இது, தமிழ்நாட்டில் உற்பத்தி சூழலியல் அமைப்புக்கு உதவிபுரியும்.

7.ரிசர்வ் வங்கியின் அண்மைய அறிக்கையின்படி, எந்த நாட்டினுடைய அந்நிய நேரடி முதலீட்டில் நிதி நிறுவனங்களை அமைக்கவியலாது?

அ. மாலத்தீவு

ஆ. மொரிஷியஸ்

இ. செஷல்ஸ்

ஈ. கேமன் தீவுகள்

  • நிதியியல் நடவடிக்கை பணிக்குழு வகுத்துள்ள வரையறைகளை பூர்த்திசெய்யாத மொரிஷியஸ் அல்லது பிற களங்களினுடைய அந்நிய நேரடி முதலீட்டில் நிதி நிறுவனங்களை அமைக்க முடியாது என்று இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்தது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, வங்கி சாரா நிதி நிறுவனங்களின் வருடாந்திர வருவாயை பேரளவுக்கு பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

8.முதன்முறையாக, போர்ப்ஸ் இந்தியா செல்வந்தர்கள் பட்டியல் – 2020’இன் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்ற இந்திய தொழிலதிபர் யார்?

அ. கெளதம் அதானி

ஆ. சிவ் நாடார்

இ. சைரஸ் பூனவல்லா

ஈ. உதய் கோடக்

  • சமீபத்தில் வெளியிடப்பட்ட போர்ப்ஸ் இந்தியா செல்வந்தர்கள் பட்டியல் – 2020’இன்படி, ரிலையன்ஸ் தொழிற்துறையின் தலைவர் தொடர்ந்து பதிமூன்றாம் ஆண்டாக செல்வந்த இந்தியராக இருக்கிறார். அவரது நிகர மதிப்பு $88.7 பில்லியன் டாலராக உள்ளது. முகேஷ் அம்பானியைத் தொடர்ந்து $25.2 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் கெளதம் அதானியும், $20.4 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் சிவ் நாடரும் உள்ளனர். முதன்முறையாக முதல் பத்து இடங்களுக்குள் சீரம் இந்தியா நிறுவனத்தின் தலைவர் சைரஸ் பூனவல்லா இடம்பெற்றுள்ளார்.

9.INOX வளி தயாரிப்புகளால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய கிரீன்பீல்ட் உயிர்வளி (oxygen) ஆலையை திறந்துவைத்துள்ள மாநில அரசு எது?

அ. குஜராத்

ஆ. பீகார்

இ. உத்தர பிரதேசம்

ஈ. ஜார்க்கண்ட்

  • உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், காசியாபாத்தின் மோடி நகரில், மாநிலத்தின் மிகப்பெரிய உயிர்வளி ஆலையைத் திறந்து வைத்துள்ளார். தொழிலக மற்றும் மருத்துவ வாயுக்களின் முன்னணி உற்பத்தியாளர்களான INOX வளி தயாரிப்புகள் நிறுவனம் இந்த ஆலையை உருவாக்கி உள்ளது. இவ்வாலையின் திட்ட செலவினம் `135 கோடியாகும். இந்த ஆலை, நாளொன்றுக்கு 150 டன் திரவ மருத்துவ உயிர்வளியை உற்பத்தி செய்யும் திறன்கொண்டதாகும்.

10.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘SARDP-NE’ என்பதை செயல்படுத்தும் நடுவணமைச்சகம் எது?

அ. சாலைப் போக்குவரத்து & நெடுஞ்சாலைகள் அமைச்சகம்

ஆ. சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சகம்

இ. வீட்டு வசதி & நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

ஈ. உழவு & உழவர்கள் நல அமைச்சகம்

  • வடகிழக்கு பகுதிகளில் சிறப்பு விரைவுச் சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடை இந்த நிதியாண்டில் மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் கிட்டதட்ட இரு மடங்காக உயர்த்தியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் நெடுஞ்சாலைகள் அமைக்க, 2020-21’ஆம் நிதி ஆண்டுக்கு முன்பு `390 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. தற்போது இதே காலகட்டத்துக்கு இந்தத் தொகை `760 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் `300 கோடி, அருணாச்சல பிரதேச மாநிலத்தில் சாலைகளை மேம்படுத்தும் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்

  • “Indian Sat” என்ற பெயரில் கருர் மாவட்டத்தைச் சார்ந்த மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோள், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான NASA’ஆல் விண்ணில் ஏவப்படவுள்ளது.

1. The Union Cabinet has approved an MoU with which country for the exchange of knowledge and technology on cyber–security?

[A] Germany

[B] France

[C] Japan

[D] Singapore

  • The Union Cabinet has approved the MoU with Japan for the exchange of knowledge and technology on cyber–security. The Cabinet also approved a standardized and transparent e–bidding process in natural gas pricing. It also gave nod for the revised cost of a project of the Kolkata metro rail. The cabinet also gave its approval to public awareness campaign on COVID–19.

2. What is the name of the COVID–19 awareness campaign launched by the Indian Prime Minister ahead of festive seasons?

[A] Jan Andolan

[B] Bharat Andolan

[C] COVID Jagrutha

[D] COVID Chodo India

  • Prime Minister Narendra Modi recently launched a campaign on Jan Andolan for COVID–19 Appropriate Behaviour. The campaign has been launched considering the festivals, winter season and the opening up of the economy. The Prime Minister asked the people to wear a mask, wash hands and follow social distancing by maintaining ‘Do Gaz Ki Doori.’

3. What would be the new brand name of India’s premium Cotton in the World Cotton Trade?

[A] Bharat Cotton

[B] Incredible Cotton

[C] Kasturi Cotton

[D] Maharaja Cotton

  • Union Minister of Textiles Smriti Irani has recently launched the first–ever brand and logo for Indian Cotton. It was launched on the second World Cotton Day, which is celebrated across the world on October 7. India’s premium Cotton would be known as ‘Kasturi Cotton’ in the World Cotton trade. The Minister also released a new logo for the Indian Cotton.

4. Who has been appointed as the next Ambassador of India to Kingdom of Netherlands?

[A] Navtej Sarna

[B] Pradeep Kumar Rawat

[C] Arun Kumar Singh

[D] Harsh Vardhan Shringla

  • Veteran Indian Foreign Service (IFS) Officer of 1990 batch Pradeep Kumar Rawat has been appointed as the next Ambassador of India to Kingdom of Netherlands. As per the recent statement of the Union Ministry of External Affairs (MEA), Pradeep Kumar, who is presently Ambassador of India to the Republic of Indonesia, is expected to take up the new role shortly.

5. Who has been appointed as the new Deputy Governor of the Reserve Bank of India (RBI)?

[A] Top of Form

M Rajeshwar Rao

[B] Ashima Goyal

[C] Jayanth R Varma

[D] Shashanka Bhide

  • The Central government has appointed M Rajeshwar Rao as the new Deputy Governor of the Reserve Bank of India (RBI). He is currently serving as the Executive Director of the country’s central bank. The Appointment Committee of the Union cabinet has approved the appointment and he will succeed NS Vishwanathan as the fourth Deputy Governor.

6. In which state, India’s first advanced manufacturing hub (AMHUB) is to be established?

[A] Tamil Nadu

[B] Karnataka

[C] Kerala

[D] Meghalaya

  • India’s first advanced manufacturing hub (AMHUB) is to be established in the state of Tamil Nadu. The Guidance, nodal investment promotion and facilitation agency of the state has partnered with the World Economic Forum (WEF) in this regard. AMHUB is one of the nineteen platforms designed by the WEF. It will help the production ecosystem in Tamil Nadu by identifying and addressing the regional opportunities of the Fourth Industrial Revolution.

7. As per the recent statement from the RBI, Finance companies cannot be set up with FDI from which country?

[A] Maldives

[B] Mauritius

[C] Seychelles

[D] Cayman Islands

  • The Reserve Bank of India (RBI) has recently announced that Finance companies cannot be set up with foreign direct investment (FDI) from Mauritius or other domains that do not meet the benchmarks laid down by Financial Action Task Force (FATF). This move of the Reserve Bank is expected to impact the huge annual inflows in the Non–Banking Financial Companies (NBFC) space.

8. Which Indian businessperson has entered the top–10 of Forbes India Rich List 2020 for the first time?

[A] Gautam Adani

[B] Shiv Nadar

[C] Cyrus Poonawalla

[D] Uday Kotak

  • As per the Forbes India Rich List 2020 that was released recently, the chairman of Reliance Industries Limited remains the richest Indian for the 13th consecutive year. His net worth stands at USD 88.7 billion. Mukesh Ambani is followed by Gautam Adani with a net worth of $25.2 billion and Shiv Nadar at $20.4 billion. The new entrant in the top 10 is Cyrus Poonawalla, the Chairman of Serum Institute of India (SII).

9. Which Indian state has inaugurated its largest Greenfield oxygen plant commissioned by INOX Air Products?

[A] Gujarat

[B] Bihar

[C] Uttar Pradesh

[D] Jharkhand

  • The Uttar Pradesh Chief Minister Yogi Adityanath has virtually inaugurated the state’s largest oxygen plant in Modinagar, Ghaziabad. The plant is commissioned by the leading manufacturers of industrial and medical gases, INOX Air Products (INOX). The project outlay of the plant is Rs 135 crore and it has a capacity of 150 tonnes liquid medical oxygen per day.

10. SARDP–NE, which was in news recently, is implemented by which Union Ministry?

[A] Ministry of Road Transport and Highways

[B] Ministry of Social Justice and Empowerment

[C] Ministry of Housing and Urban Affairs

[D] Ministry of Agriculture and Farmers Welfare

  • The Special Accelerated Road Development Programme in the North East (SARDP–NE) was launched by the Ministry of Road Transport and Highways. Recently, the Central Government has increased funding for road development in the Northeast by 95 per cent from Rs 390 crore to Rs 760 crore. This is the second consecutive increase of funding for the region this year.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!