Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

16th September 2020 Current Affairs in Tamil & English

16th September 2020 Current Affairs in Tamil & English

16th September 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

16th September Tamil Current Affairs 2020

16th September English Current Affairs 2020

 

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1.பன்னாட்டு எழுத்தறிவு நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. செப்டம்பர் 8

ஆ. செப்டம்பர் 9

இ. செப்டம்பர் 10

ஈ. செப்டம்பர் 11

  • பன்னாட்டு எழுத்தறிவு நாளானது ஒவ்வோர் ஆண்டும் செப்.8 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப் –படுகிறது. முதலாவது பன்னாட்டு எழுத்தறிவு நாள், கடந்த 1966ஆம் ஆண்டு நடைபெற்ற UNESCO பொதுமாநாட்டின்போது அறிவிக்கப்பட்டது. உலகெங்கிலும் உள்ள தனிநபர்களுக்கும் சமூகங்களுக்கும் எழுத்தறிவின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதை இந்த நாள் நோக்கமாகக்கொண்டுள்ளது. “Literacy teaching and learning in the Covid–19 crisis and beyond” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும்.

2.எந்த அரசாங்கத் திட்டத்துக்கான புதிய இலச்சினையை, மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், அண்மையில் அறிமுகப்படுத்தினார்?

அ. தேசிய மூங்கில் இயக்கம்

ஆ. தேசிய தேனீ வளர்ப்பு இயக்கம்

இ. தேசிய தோட்டக்கலை இயக்கம்

ஈ. தேசிய கால்நடை பராமரிப்பு இயக்கம்

  • மத்திய வேளாண் மற்றும் உழவர்நலத்துறை அமைச்சரான நரேந்திர சிங் தோமர், அண்மையில், குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, அஸ்ஸாம், நாகாலாந்து, திரிபுரா, உத்தரகண்ட் மற்றும் கர்நாடகா ஆகிய 9 மாநிலங்களிலும் சேர்த்து மொத்தம் 22 மூங்கில் தொகுதிகளை திறந்து வைத்தார். போட்டியின்மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய மூங்கில் இயக்கத்துக்கான இலச்சினையையும் அவர் வெளியிட்டார். மஞ்சள்–பச்சை வண்ணத்திலான இப்புதிய இலச்சினை, தொழிற்துறை சக்கரம் மற்றும் மூங்கில் கண்டுகளுடன் கூடிய உழவர் பெருமக்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

3.தில்லி–மீரட் RRTS வழித்தடத்திற்கு, $500 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக வழங்கவுள்ள நிறுவனம் எது?

அ. ஆசிய உட்கட்டமைப்பு & முதலீட்டு வங்கி

ஆ. உலக வங்கி

இ. ஆசிய வளர்ச்சி வங்கி

ஈ. BRICS வங்கி

  • தில்லி–மீரட் பிராந்திய விரைவுப் போக்குவரத்து அமைப்பு (RRTS) வழித்தடத்தை உருவாக்குவதற்காக ஆசிய வளர்ச்சி வங்கியும் இந்திய அரசும் அண்மையில், $500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய கடனொப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
  • இந்தியாவின் தேசிய தலைநகரப் பிராந்தியத்தில் (NCR) அதி நவீன, அதிவேக 82 கிலோமீட்டர் RRTS வழித்தடத்தை நிர்மாணிப்பதற்காக வழங்கப்படவுள்ள மொத்த $1 பில்லியன் டாலர் மதிப்பிலான கடன் தொகுப்பில் இது முதல் தவணையாகும். தில்லியை பிற நகரங்களுடன் இணைப்பதற்காக, NCR பிராந்திய திட்டம், 2021’இன்கீழ், மொத்தம் 3 இரயில் வழித்தடங்களும் திட்டமிடப்பட்டுள்ளன.

4.பாகல்பூர் மற்றும் வாரணாசியில், புதிய திறன்வளர்ப்பு மற்றும் தொழில்நுட்ப ஆதரவு மையங்களை அமைக்கவுள்ள நிறுவனம் எது?

அ. CIPET

ஆ. பூச்சிக்கொல்லி தொழில்நுட்பத்தை உருவாக்கும் நிறுவனம்

இ.CSIR – மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம்

ஈ. CSIR – மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம்

  • மத்திய இரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின்கீழ் இயங்கிவரும் மத்திய பெட்ரோகெமிக்கல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (CIPET), இரு திறன்வளர்ப்பு மற்றும் தொழில்நுட்ப ஆதரவு மையங்களை பாகல்பூர் (பீகார்) மற்றும் வாரணாசியில் (உத்தரபிரதேசம்) விரைவில் அமைக்கவுள்ளது. பெட்ரோகெமிக்கல் மற்றும் அதை சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்காக பட்டயம் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள், ஆண்டுதோறும் தலா 1000 இளையோர்க்கு இம்மையங்களின் மூலம் வழங்கப்படவுள்ளது.

5.கடந்த 2019ஆம் ஆண்டுக்கான, ‘இந்திரா காந்தி அமைதிப்பரிசு’ யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

அ. டேவிட் அட்டன்பரோ

ஆ. டேவிட் மால்பாஸ்

இ. ரத்தன் டாடா

ஈ. முகேஷ் அம்பானி

  • பிரிட்டிஷ் ஒளிபரப்பாளரான டேவிட் அட்டன்பரோவுக்கு, கடந்த 2019ஆம் ஆண்டுக்கான ‘இந்திரா காந்தி அமைதிப்பரிசு’ வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மெய்நிகராக நடைபெற்ற ஒரு நிகழ்வில் அவருக்கு இந்தப் பரிசினை வழங்கினார். “அமைதி, நிராயுதபாணியாக்கம் மற்றும் வளர்ச்சிக்கான இந்திரா காந்தி பரிசு”, 1986’இல் நிறுவப்பட்டது. சர்வதேச அமைதியை அடைய உழைக்கும் தனிநபர்கள் / நிறுவனங்களுக்கு இந்தப்பரிசு வழங்கப்படுகிறது. பாராட்டுச் சான்றிதழுடன் கூடிய `25 இலட்சம் ரொக்கப்பரிசினை இவ்விருது கொண்டுள்ளது.

6. COVID–19 தடுப்பூசிகளை அதிக அளவில் கொள்முதல் செய்யும் நிறுவனம் எது?

அ. உலக நலவாழ்வு அமைப்பு

ஆ. UNICEF

இ. UNESCO

ஈ. AIIMS

  • COVID–19 தடுப்பூசிகளை வாங்குவதிலும் வழங்குவதிலும் UNICEF முன்னணியில் உள்ளது. இது, உலகின் மிகப்பெரிய & மிகவிரைவான தடுப்பூசி கொள்முதல் மற்றும் விநியோக செயல்முறையாக இருக்கலாம் எனக்கருதப்படுகிறது. அமெரிக்க நலவாழ்வு அமைப்புடன் (PAHO) இணைந்து, UNICEF, 92 குறைந்த & நடுத்தர வருவாய்கொண்ட நாடுகளுக்கு, COVID–19 தடுப்பூசிகளை வழங்குவதற்கான முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளது.

7. COVID–19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள கடன்களை மறுசீரமைப்பது தொடர்பாக, ரிசர்வ் வங்கியால் (RBI) அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?

அ. உதய் கோடக்

ஆ. உஷா தோரத்

இ. K V காமத்

ஈ. உர்ஜித் படேல்

  • கட்டுமானம், மனை வணிகம், சுரங்கம், வாகனத்துறை உள்ளிட்ட இருபத்தாறு துறைகளில் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை செயல்படுத்தலாம் என்ற K V காமத் குழுவின் பரிந்துரையை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஏற்றுக்கொண்டுள்ளது. கடன் மறுசீரமைப்பு உட்பட அந்தக்குழு வழங்கிய பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
  • COVID சூழலில் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிறுவனங்களுக்காக கடன் மறுசீரமைப்புத் திட்டங்களை அறிவிப்பது தொடர்பாக பரிந்துரைக்க, மூத்த வங்கியாளர் K V காமத் தலைமையிலான குழுவை இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஆகஸ்ட் மாதம் அமைத்தது.

8. NSO’இன் ஓர் அண்மைய அறிக்கையின்படி, எந்த மாநிலமானது எழுத்தறிவு விகிதத்தில் முதலிடம் வகிக்கிறது?

அ. குஜராத்

ஆ. உத்தர பிரதேசம்

இ. கேரளா

ஈ. மத்திய பிரதேசம்

  • தேசிய மாதிரி கணக்கெடுப்பின் எழுபத்தைந்தாவது சுற்றின் ஒருபகுதியாக, அண்மையில், தேசிய புள்ளிவிவர அலுவலகம் (NSO) ‘Household Social Consumption: Education in India’ குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, நாட்டின் கல்வியறிவில் 96.2 சதவீதத்துடன் கேரள மாநிலம் முதலிடம் வகிக்கிறது. தில்லி (88.7%), உத்தரகண்ட் (87.6%), ஹிமாச்சல பிரதேசம் (86.6%), அஸ்ஸாம் (85.9%) ஆகிய மாநிலங்கள் அடுத்த இடங்களை வகிக்கின்றன. அதேசமயம் ஆந்திர பிரதேசம் (66.4%) கடைசி இடம்பிடித்துள்ளது.
  • இதில், எட்டாமிடத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில், கிராமப்புறத்தில் 77.5 சதவீத மக்களும், நகர்ப் புறத்தில் 89% மக்களும் ஒட்டுமொத்தத்தில் 82.9% பேர் கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர்.

9.இந்திய இரயில்வேயின் இரயில்வே பாதுகாப்புப்படையால் தடைசெய்யப்பட்ட சட்டத்துக்குப் புறம்பான மென்பொருளின் பெயரென்ன?

அ. டிக்–டாக்

ஆ. பப்ஜி

இ. ரியல் மேங்கோ

ஈ. ரியல் ஆப்பிள்

  • இந்திய இரயில்வேயின் இரயில்வே பாதுகாப்புப்படையின் (RPF) நாடு தழுவிய விசாரணையில், “ரியல் மேங்கோ” என்ற சட்டத்துக்குப்புறம்பான மென்பொருளின் செயல்பாடு சீர்குலைக்கப்பட்டது. பயணிகள் இரயில்சேவைகள் மறுதொடக்கம்செய்யப்பட்டபின்னர், தரகு செயல்பாடுகள் அதிகரித்ததன் காரணமாக இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சட்டவிரோத மென்பொருளின் செயல்பாட்டில் ஈடுபட்ட கிங் பின் (அமைப்பு உருவாக்குநர்) மற்றும் முக்கிய மேலாளர்கள் உட்பட ஐம்பது குற்றவாளிகளை RPF இதுவரை கைதுசெய்துள்ளது.

10.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, பத்திரிகா வாயில் அமைந்துள்ள நகரம் எது?

அ. வாரணாசி

ஆ. ஜெய்ப்பூர்

இ. போபால்

ஈ. அகமதாபாத்

  • ஜெய்ப்பூரில் அமைந்துள்ள பத்திரிகா வாயிலை, பிரதமர் மோடி, செப்டம்பர்.8 அன்று மெய்நிகராக திறந்து வைத்தார். இந்த அடையாள நுழைவு வாயிலை, ஜெய்ப்பூரின் ஜவஹர்லால் நேரு மார்க் பகுதியில், பத்திரிகா குழுமம் கட்டியுள்ளது.
  • பத்திரிகா குழுமத்தின் தலைவர் எழுதிய இரு நூல்களையும் பிரதமர் மோடி அப்போது வெளியிட்டார். இந்நினைவுச்சின்னம், அப்பகுதியில், சுற்றுலாவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1. When is the ‘International Literacy Day’ celebrated across the world?

[A] September 8

[B] September 9

[C] September 10

[D] September 11

  • The International Literacy Day was observed on September 8 every year, across the world. The first International Literacy Day was declared at the UNESCO General Conference in 1966. The day aims to highlight the importance of literacy to individuals and communities around the world. The theme of this year’s International Day focusses on “Literacy teaching and learning in the Covid–19 crisis and beyond.”

2. Union Agriculture Minister Narendra Singh Tomar has launched a new Logo of which Government scheme?

[A] National Bamboo Mission

[B] National Beekeeping Mission

[C] National Horticulture Mission

[D] National Animal Husbandry Mission

  • Union Minister for Agriculture and Farmers’ Welfare, Narendra Singh Tomar has recently inaugurated 22 bamboo clusters in 9 States viz. Gujarat, MP, Maharashtra, Odisha, Assam, Nagaland, Tripura, Uttarakhand and Karnataka. He also unveiled a logo for the National Bamboo Mission, selected through a contest conducted. The yellow–green logo showcases a bamboo culm with half an industrial wheel and half farmers.

3. Which organisation is to provide USD 500 million for Delhi–Meerut RRTS Corridor?

[A] Asian Infrastructure Investment Bank

[B] World Bank

[C] Asian Development Bank

[D] BRICS Bank

  • The Asian Development Bank (ADB) and the Government of India has recently signed a USD 500 million loan, to build the Delhi–Meerut Regional Rapid Transit System (RRTS) corridor.
  • This is the first tranche of a total USD 1 billion facility extended to construct the modern, high–speed 82–kilometer RRTS corridor in India’s national capital region (NCR). A total of three priority rail corridors planned under the NCR Regional Plan 2021, to connect Delhi to other cities.

4. Which institute is to set up new Centres for Skilling and Technical Support in Bhagalpur and Varanasi?

[A] CIPET

[B] Institute of Pesticides Formulation Technology

[C] CSIR–Central Food Technological Research Institute

[D] CSIR–Central Drug Research Institute

  • The Central Institute of Petrochemicals Engineering and Technology (CIPET) is to establish two new Centres for skilling and technical support at Bhagalpur and Varanasi. CIPET is an autonomous research and training institution under the Chemicals and Fertilisers Ministry. Around 1,000 youths will be trained in each centre every year through Diploma and Skill development programmes for employment in petrochemicals and allied industries.

5. Who has been conferred with the Indira Gandhi Peace Prize 2019?

[A] David Attenborough

[B] David Malpass

[C] Ratan Tata

[D] Mukesh Ambani

  • The Indira Gandhi Peace Prize 2019 was conferred to the British broadcaster David Attenborough. The price was conferred to him in a virtual event by former Indian PM Manmohan Singh. The “Indira Gandhi Prize for Peace, Disarmament and Development” was instituted in 1986 and is awarded to individuals / institutions who work to achieve international peace. It consists of a monetary award of Rs.25 lakh along with a citation.

6. Which organization is set to become the largest procurer of COVID–19 vaccines?

[A] WHO

[B] UNICEF

[C] UNESCO

[D] AIIMS

  • UNICEF is leading in efforts to procure and supply COVID–19 vaccines. This could be the world’s largest and fastest ever procurement and supply of vaccines. In collaboration with Pan American Health Organization (PAHO), UNICEF is set in its efforts to procure and supply doses of COVID–19 vaccines for 92 low and lower middle–income countries.

7. Who is the head of the committee constituted by RBI regarding restructuring of loans impacted by COVID–19?

[A] Uday Kotak

[B] Usha Thorat

[C] KV Kamath

[D] Urjit Patel

  • The committee appointed by Reserve Bank of India headed by KV Kamath has made a recommendation for 26 sectors of the country that could be factored by financial institutions while finalizing loan resolution plans. The committee was formed in the month of August to make recommendations on the parameters to be considered during restructuring of loans impacted by COVID–19.

8. Which state has topped in literacy rate as per a recent report by NSO?

[A] Gujarat

[B] Uttar Pradesh

[C] Kerala

[D] Madhya Pradesh

  • Recently National Statistical Office (NSO) has released a report on ‘Household Social Consumption: Education in India’ as part of 75th round of National Sample Survey. As per the report, Kerala ranks No.1 in literacy with 96.2% literacy rate. It is followed by Delhi with 88.7% and Uttarakhand with 87.6%. Andhra Pradesh featured at the bottom with a rate of 66.4%. Of these, Tamil Nadu is in eighth place. In Tamil Nadu, 82.9% are literate.

9. What is the name of the illegal software that has been blocked by Railway Protection Force (RPF) of Indian Railways?

[A] Tik–Tok [B] Pub G

[C] Real Mango [D] Real Apple

  • The Railway Protection Force (RPF) of Indian Railways has disrupted the operation of illegal software called “Real Mango”, in a nationwide investigation.
  • The investigation was made on account of increase in touting activity after restart of the passenger train services. RPF have been able to arrest 50 criminals so far including the King pin (system developer) and key managers involved in operation of this illegal software.

10. Patrika Gate, that was seen in news recently, is located in which city?

[A] Varanasi

[B] Jaipur

[C] Bhopal

[D] Ahmedabad

  • Prime Minister Narendra Modi has recently inaugurated the Patrika Gate in Jaipur through video conference. This Iconic Gate has been built by the Patrika Group of Newspapers in Jaipur, Rajasthan. The Prime Minister Modi also released two books written by the Group Chairman during the virtual event. This cultural monument is expected to boost tourism in the region.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!