Tnpsc

16th September 2021 Tnpsc Current Affairs in Tamil & English

16th September 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 16th September 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

September Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. அண்மையில் பதவி விலகிய ஆளுநர் பேபி இராணி மௌரியா, பின்வரும் எந்த மாநிலத்தின் ஆளுநராக இருந்தார்?

அ) உத்தர பிரதேசம்

ஆ) ஒடிஸா

இ) மணிப்பூர்

ஈ) உத்தரகாண்ட் 

  • உத்தரகாண்ட் மாநில ஆளுநர் பேபி இராணி மௌரியா தனது பதவிக் காலம் முடிவதற்கு ஈராண்டுகளுக்கு முன்பே (2021 செப்டம்பர்.8) பதவி விலகியுள்ளார். அவர்தனது பதவிவிலகல் கடிதத்தை குடியரசுத்தலைவர் இராம்நாத் கோவிந்திடம் வழங்கினார். அவர், கடந்த 2018 ஆகஸ்ட்.26 அன்று உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆளுநராக பதவியேற்றார்.

2. புவி அறிவியல் துறையில் ஒத்துழைப்பு குறித்து இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு நடுவண் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?

அ) ஆஸ்திரேலியா

ஆ) பிரான்ஸ்

இ) ரஷ்யா 

ஈ) நியூசிலாந்து

  • இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் மற்றும் உருசிய கூட்டமைப்பு சட்டங்களின்கீழ் நிறுவப்பட்டுள்ள அரசுத்துறை நிறுவனமான ஜாயின்ட் ஸ்டாக் கம்பெனி ராஸ்ஜியாலோஜியா இடையே புவி அறிவியல் துறை
    -யில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

3. சில்சார் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சுகாதார உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக, அஸ்ஸாம் மாநில அரசு, எந்த அமைப்போடு கூட்டிணைந்துள்ளது?

அ) இந்திய நிலக்கரி நிறுவனம் 

ஆ) NTPC லிட்

இ) AIIMS

ஈ) ICMR

  • நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய நிலக்கரி நிறுவனம் (CIL) சில்சார் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் சுகாதார உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக அஸ்ஸாம் மாநில அரசின் நல வாழ்வு மற்றும் குடும்பநலத்துறையுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்தப் புதிய CSR முயற்சியில், CIL, `5 கோடி மதிப்பீட்டில், சில்சார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ICU வசதி மற்றும் மருத்துவ வாயு குழாய் ஆகியவற்றை அமைக்கும்.

4. அண்மையில், ரிசர்வ் வங்கியால் உடனடி திருத்த நடவடிக்கை (Prompt Corrective Action) கட்டமைப்பிலிருந்து நீக்கப்பட்ட பொதுத் துறை வங்கி எது?

அ) யூனியன் பேங்க் ஆப் இந்தியா

ஆ) பஞ்சாப் & சிந்து வங்கி

இ) பேங்க் ஆப் இந்தியா

ஈ) UCO வங்கி 

  • இந்திய ரிசர்வ் வங்கியானது பொதுத்துறை வங்கியான UCO வங்கியை நிதி மற்றும் கடன்விவரங்களை மேம்படுத்துவதற்கான உடனடி திருத்த நடவடிக்கை கட்டமைப்பிலிருந்து நீக்கியுள்ளது. இம்முடிவு, அவ்வங்கிக்கு கடன் வழங்குவதற்கு (குறிப்பாக பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நிறுவனங்களுக்கு) அதிக சுதந்திரத்தை அளிக்கிறது.

5. கல்வியை ஆபத்திலிருந்துப் பாதுகாப்பதற்கான சர்வதேச நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) செப்டம்பர் 9 

ஆ) செப்டம்பர் 10

இ) செப்டம்பர் 12

ஈ) செப்டம்பர் 15

  • கல்வியை ஆபத்திலிருந்துப் பாதுகாப்பதற்கான சர்வதேச நாள் செப்9 அன்று உலகளவில் கடைபிடிக்கப்படுகிறது. ஆபத்திலிருந்து கல்வியைப் பாதுகாப்பதற்கான முதல் சர்வதேச நாள், 2020 செப்.9 அன்று அனுசரிக் -கப்பட்டது. இராணுவ மோதல்களால் பாதிக்கப்பட்ட நாடுகளில் வாழும் குழந்தைகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வை பரப்பவும் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.

6. அண்மையில், TATA AIA ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் விளம்பரத் தூதுவராக அறிவிக்கப்பட்டவர் யார்?

அ) பஜ்ரங் புனியா

ஆ) நீரஜ் சோப்ரா 

இ) லவ்லினா போர்கோஹெய்ன்

ஈ) PV சிந்து

  • இந்திய தடகள வீரரும் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவருமான நீரஜ் சோப்ராவை TATA AIA ஆயுள்காப்பீட்டு நிறுவனம் அதன் விளம்பரத் தூதுவராக அறிவித்துள்ளது. நீரஜ் சோப்ராவால் கையொப்பமிடப்பட்ட முதல் விளம்பரத் தூதுவ கூட்டாண்மையையும் இது குறிக்கிறது.

7. அண்மையில் இந்தியா, பின்வரும் எந்த நாட்டுடன் கடல்சார் விவகார பேச்சுவார்த்தையை நடத்தியது?

அ) ஆஸ்திரேலியா

ஆ) இங்கிலாந்து

இ) ஜப்பான் 

ஈ) பிரான்ஸ்

  • 2021 செப்.9 அன்று இந்தியாவும் ஜப்பானும் தங்கள் ஆறாவது கடல்சார் விவகார பேச்சுவார்த்தையை மெய்நிகர் வடிவத்தில் நடத்தின. கடல்சார் பாதுகாப்புச்சூழல், பிராந்திய ஒத்துழைப்பு நடவடிக்கைகள் & இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இருநாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்புக்கா
    -ன வாய்ப்புகள்பற்றிய ஆலோசனைகள் இதில் கலந்துரையாடப்பட்டன.

8. சமீபத்தில், குடிபெயர்ந்தோரின் பாதுகாவலர்களின் நான்காவது மாநாட்டில் சிறப்புரை வழங்கிய வெளியுறவு இணையமைச்சர் யார்?

அ) நித்யானந்த் ராய்

ஆ) V முரளீதரன் 

இ) அனுராக் தாக்கூர்

ஈ) பாபுல் சுப்ரியோ

  • குடிபெயர்ந்தோரின் பாதுகாவலர்களின் நான்காவது மாநாடு செப்.10 அன்று நடைபெற்றது. கடந்த 1983ஆம் ஆண்டில் இதே தேதியில்தான் குடிபெயர்வுச்சட்டம் இயற்றப்பட்டது. இதன்சமயம், வெளியுறவு இணை அமைச்சர் V முரளீதரன் சிறப்புரை ஆற்றினார். அப்போது, புதிய இடங்கள் மற்றும் வாய்ப்புகள்பற்றி இளையோர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் தெரிவிப்பதில் குடிபெயர்ந்தோரின் பாதுகாவலர்கள் வகிக்கும் முக்கியப் பங்கு குறித்து அவர் சிறப்பித்துத் தெரிவித்தார்.

9. டிஜிட்டல் மக்கள்தொகை கடிகாரம் திறக்கப்பட்டுள்ள நகரம் எது?

அ) ஹைதராபாத்

ஆ) மும்பை

இ) நாக்பூர்

ஈ) தில்லி 

  • மக்கள்தொகை, மனித முதலீடு மற்றும் நீடித்த வளர்ச்சி குறித்த கருத்தரங்கிற்கு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் தலைமைதாங்கினார். தில்லி பல்கலையில் உள்ள பொருளாதார வளர்ச்சி மையத்தில், டிஜிட்டல் மக்கள்தொகை கடிகாரத்தை, அவர் திறந்து வைத்தார்.
  • Dr தீபாஞ்சலி ஹலாய் மற்றும் Dr சுரேஷ் சர்மா எழுதிய ‘அஸ்ஸாமில் குழந்தை மற்றும் குழந்தை இறப்பு – மக்கள்தொகை மற்றும் சமூக-பொருளாதார தொடர்புகள்’ என்ற நூல், HMIS சிற்றேடு, மதிப்பீட்டு கையேடு ஆகியவற்றை மத்திய இணையமைச்சர் வெளியிட்டார்.

10. பஞ்சாபின் ஆளுநராக நியமிக்கப்பட்டவர் யார்?

அ) R N இரவி

ஆ) பன்வாரிலால் புரோகித் 

இ) குர்மித் சிங்

ஈ) ஜெகதீப் தங்கர்

  • பஞ்சாப் மாநிலத்தின் புதிய ஆளுநராக தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை குடியரசுத்தலைவர் இராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தொலை தொடர்பு துறையில் முக்கிய சீர்திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தொலை தொடர்பு துறையில் அமைப்பு மற்றும் செயல்முறை சீர்த்திருத்தங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இது வேலை வாய்ப்பை உருவாக்கி பாதுகாக்கும், ஆரோக்கியமான போட்டியை ஊக்குவிக்கும், நுகர்வோர் நலனை பாதுகாக்கும், பணப்புழக்கத்தை ஏற்படுத்தும், முதலீட்டை ஊக்குவிக்கும் மற்றும் தொலை தொடர்பு சேவை அளிப்பவர்கள் மீதான ஒழுங்குமுறை சுமையை குறைக்கும்.

கொரோனா சவால்களை எதிர்கொள்வதில் தொலை தொடர்பு துறையின் சிறப்பான செயல்பாடுகளின் பின்னணியில், ஆன்லைன் கல்வி, வீட்டிலிருந்தே பணியாற்றுதல், காணொலி காட்சி கூட்டம், சமூக ஊடகம் மூலம் தனிநபர்கள் இடையேயான தொடர்பு அதிகரிப்பு ஆகியவற்றால் இணையதள டேட்டா நுகர்வு மிகவும் அதிகரித்துள்ளதால், இந்த சீர்திருத்த நடவடிக்கைகள், பிராட் பேண்ட் மற்றும் தொலை தொடர்பின் ஊடுருவல் மற்றும் பரவலை மேலும் ஊக்குவிக்கும்.

வலுவான தொலை தொடர்பு என்ற பிரதமரின் தொலைநோக்கை, மத்திய அமைச்சரவையின் முடிவு வலுப்படுத்துகிறது. போட்டி மற்றும் நுகர்வோர் தேர்வு, அனைத்தும் உள்ளடங்கிய வளர்ச்சிக்கான அந்தியோதயா மற்றும் பின்தங்கிய பகுதிகளை முன்னுக்கு கொண்டு வருதல், ஆகியவற்றுடன் இணைக்கப்படாதவர்களை உலகளாவிய பிராட்பேண்ட் இணைக்கும். இந்த சீர்திருத்தம், 4ஜி பரவலை ஊக்குவிக்கும், பணப்புழக்கத்தை புகுத்தும், 5ஜி வலையமைப்புக்கான முதலீட்டு சூழலை ஏற்படுத்தும். தொலை தொடர்பு சேவை அளிப்பவர்களுக்கான 9 அமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் 5 செயல்பாட்டு சீர்திருத்தங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அமைப்பு சீர்திருத்தங்கள்:

1. சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் சீரமைப்பு: தொலைதொடர்பு அல்லாத வருவாய் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயின் வரையறையிலிருந்து விலக்கப்படும்.

2. வங்கி உத்திரவாதங்கள் சீரமைப்பு: உரிமம் கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் மீதான வங்கி உத்திரவாத தேவைகள் 80 சதவீதம் குறைப்பு.

3. வட்டி விகிதங்கள் சீரமைப்பு / அபராதங்கள் நீக்கம்.

4. இனிமேல் நடைபெறும் ஏலங்களுக்கு வங்கி உத்திரவாதம் தேவையில்லை.

5. அலைக்கற்றை (ஸ்பெக்டரம்) ஏலம் எடுக்கும் காலம் 20 ஆண்டிலிருந்து 30 ஆண்டுகளாக அதிகரிப்பு.

6. எதிர்கால ஏலங்களில் பெறப்படும் அலைக்கற்றைகளை, 10 ஆண்டுகளுக்குப்பின் ஒப்படைக்கலாம்.

7. ஏலத்தில் பெறப்படும் அலைக்கற்றைக்கு அலைக்கற்றை பயன்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படாது.

8. அலைக்கற்றை பகிர்வு ஊக்குவிக்கப்படும்.

9. மூதலீட்டை ஊக்குவிக்க, தொலை தொடர்பு துறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி

செயல்பாட்டு சீர்திருத்தங்கள்:

1. அலைக்கற்றை ஏலம், ஒவ்வொரு நிதியாண்டில் கடைசி காலாண்டில் நடைபெறும்.

2. எளிதாக தொழில் செய்வது ஊக்குவிக்கப்படும்.

3. வாடிக்கையாளர்பற்றி அறியும் முறையில் சீர்திருத்தங்கள்: வாடிக்கையாளரின் சுய தகவல்களுக்கு அனுமதி.

4. வாடிக்கையாளர் விவரம் பற்றிய படிவங்கள் டிஜிட்டல் முறையில் சேமிக்கப்படும்.

2. ரஷியாவில் ‘எஸ்சிஓ’ நாடுகளின் கூட்டு ராணுவப் பயிற்சி: இந்தியா பங்கேற்பு

ரஷியாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு (எஸ்சிஓ) நாடுகளின் கூட்டு ராணுவப் பயிற்சியில் இந்தியா பங்கேற்றுள்ளது.

பயங்கரவாதத்துக்கு எதிரான கூட்டு ராணுவத் தாக்குதல் பயிற்சி ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளிடையே இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. இதன் 6-ஆவது கட்டப் பயிற்சி செப்.13 -25ஆம் தேதி வரை ரஷியாவின் ஆரன்பெர்க் பகுதியில் நடைபெறுகிறது.

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் உறுப்பு நாடுகள் இடையேயான உறவை மேம்படுத்துவதும், பல்வேறு நாடுகளின் ராணுவ வீரர்களுக்குத் தலைமை தாங்கும் வகையில் ராணுவ தளபதிகளின் செயல்திறனை வலுப்படுத்துவதும் இந்தப் பயிற்சியின் நோக்கமாகும்.

இந்தியாவின் சார்பில் 38 இந்திய விமானப்படை வீரர்கள் உள்பட 200 ராணுவ வீரர்கள் இந்தப் பயிற்சியில் இடம்பெற்றுள்ளனர் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் ஆயுதப் படைகள் இடையே சிறந்த பயிற்சி முறைகளை பரிமாறிக்கொள்ள இப்பயிற்சி ஏதுவாக இருக்கும். 2001இல் உருவாக்கப்ப -ட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பில் (SCO) ரஷியா, சீனா, கிர்கி -ஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் முதலில் இடம்பெற்றிருந்தன. 2017இல் இந்தியா, பாகிஸ்தானும் நிரந்தர உறுப்பினர்களாக இணைந்தன.

3. இணைய குற்றங்கள்: 2020-இல் 11.8 சதவீதம் அதிகரிப்பு

இந்தியாவில் இணைய குற்றங்கள் (சைபர் கிரைம்) தொடர்பாக 2020-ஆம் ஆண்டில் 50,035 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதும், இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 11.8 சதவீதம் கூடுதல் என்பதும் தேசிய குற்றப் பதிவுத் துறை (என்சிஆர்பி) புள்ளிவிவரத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இவற்றில் 578 வழக்குகள், சமூக ஊடகங்களில் போலியான செய்திகளை வெளியிட்டது தொடர்பானவையாகும். 972 வழக்குகள் பெண்கள் மற்றும் குழந்தைகளை சமூக ஊடகங்கள் உள்ளிட்ட இணையவழியில் பின்தொடர்ந்து தொல்லை கொடுத்தல் தொடர்பானவை. போலியான சுயவிவரப் பதிவு தொடர்பாக 149 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இணையவழியில் தகவல் திருட்டு தொடர்பாக 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2020-இல் பதிவு செய்யப்பட்ட இணைய குற்ற வழக்குகளில், குற்றத்துக்கான நோக்கத்தைப் பொருத்தவரை 60.2 சதவீதம் மோசடி திட்டத்துடன் நடைபெற்றுள்ளன. அதாவது, 50,035 வழக்குகளில் 30,142 வழக்குகள் மோசடி திட்டத்துடன் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களாகும். இதற்கு அடுத்தபடியாக, 6.6 சதவீதம் (3,293 வழக்குகள்) பாலியல் அத்துமீறல் தொடர்பான வழக்குகள், மிரட்டி பணம் பறித்தல் தொடர்பாக 4.9 சதவீத (2,440 வழக்குகள்) வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக என்சிஆர்பி புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

வழக்குப் பதிவில் உ.பி. முதலிடம்:

அதிக இணைய குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படும் மாநிலங்களைப் பொருத்தவரை 11,097 வழக்குகளுடன் உத்தர பிரேதசம் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக கர்நாடகம் (10,741 வழக்குகள்), மகாராஷ்டிரம் (5,496), தெலங்கானா (5,024), அஸ்ஸாம் (3,530) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

கர்நாடகத்தில் அதிக குற்றங்கள்: அதே நேரம், இணைய குற்றங்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் 16.2 சதவீத குற்றங்களுடன் கர்நாடகம் முதலிடம் வகிக்கிறது. அதற்கு அடுத்தபடியாக தெலங்கானா (13.4 சதவீதம்), அஸ்ஸாம் (10.1 சதவீதம்), உத்தர பிரதேசம் (4.8 சதவீதம்), மகாராஷ்டிரம் (4.4 சதவீதம்) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

தலைநகர் தில்லியில் 2020-ஆம் ஆண்டில் 168 இணைய குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றங்களின் விகிதம் 0.8 சதவீதமாக உளளது என்றும் என்சிஆர்பி புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட இணைய குற்றங்களின் எண்ணிக்கை 44,735 ஆகும். 2018-ஆம் ஆண்டில் 27,248 இணைய குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

4. தடகள சாம்பியன்ஷிப்: பவித்ரா வெங்கடேஷ் வெற்றி

தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கம்பு ஊன்றித் தாண்டுதல் போட்டியில் தமிழக வீராங்கனை பவித்ரா வெங்கடேஷ் முதலிடம் பிடித்தார். அவர் 3.90 மீ தாண்டி முதலிடம் பிடிக்க, ரயில்வே
-சின் மரியா ஜெய்சன் (3.80 மீ), கிருஷ்ணா ராச்சன் (3.60 மீ) ஆகியோர் 2 மற்றும் 3-ஆம் இடங்களைப் பிடித்தனர்.

5,000 மீ ஓட்டத்தில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் முறையே ரயில்வே போட்டியாளர்கள் அபிஷேக் பால், பாருல் சௌதரி ஆகியோர் சாம்பியன் ஆகினர். அபிஷேக் 14 நிமிஷம் 16.35 நொடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடிக்க, சர்வீசஸ் வீரர்கள் தர்மேந்தர் (14:17.20) இரண்டாம் இடம், அஜய்குமார் (14:20.98) மூன்றாமிடம் பிடித்தனர். மகளிர் பிரிவில் பாருல் 15 நிமிஷம் 59.69 விநாடிகளில் இலக்கை எட்ட, மகாராஷ்டிரத்தி -ன் கோமல் சந்திரகாந்த் (16:01), சஞ்சீவனி பாபர் ஜாதவ் (16:19) ஆகியோ -ர் அடுத்த இரு இடங்களைப் பிடித்தனர்.

5. மாரியப்பனுக்கு ‘மை ஸ்டாம்ப்’ வழங்கி கௌரவித்த தபால்துறை

பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு ‘மை ஸ்டாம்ப்’ கொடுத்து அஞ்சல் துறை கெளரவித்துள்ளது.

1. Governor Baby Rani Maurya who recently resigned, was the governor of which state?

A) Uttar Pradesh

B) Odisha

C) Manipur

D) Uttarakhand 

  • Uttarakhand Governor Baby Rani Maurya resigned on September 8, 2021, two years before completing her tenure. She tendered her resignation to President Ram Nath Kovind. She was sworn in as the governor of Uttarakhand on August 26, 2018.

2. The Union Cabinet has approved a Memorandum of Understanding between India and which country on cooperation in the field of Geosciences?

A) Australia

B) France

C) Russia 

D) New Zealand

  • Union Cabinet, chaired by Prime Minister Narendra Modi has approved the Memorandum of Understanding (MoU) between India and Russia on cooperation in the field of Geosciences. MoU was signed between the Joint Stock Company Rosgeologia (State holding Company) of Russia and the Geological Survey of India (GSI), Ministry of Mines.

3. With which organization, Assam government has partnered to strengthen the health infrastructure at the Silchar Medical College & Hospital?

A) Coal India Ltd 

B) NTPC Ltd

C) AIIMS

D) ICMR

  • Coal India Ltd. (CIL), under the Ministry of Coal has signed a MoU with the Department of Health & Family Welfare, Govt of Assam for strengthening the health infrastructure at the Silchar Medical College & Hospital, Silchar, Assam. In this new CSR initiative, CIL will contribute Rs 5 crores towards setting up of an ICU facility and medical gas pipeline in the Silchar Medical College & Hospital.

4. Recently, which public sector bank has been taken out of the Prompt Corrective Action (PCA) framework by the Reserve Bank of India?

A) Union Bank of India

B) Punjab & Sind Bank

C) Bank of India

D) UCO Bank 

  • Reserve Bank of India has taken public sector lender UCO Bank out of Prompt Corrective Action (PCA) framework (PCA) on improvement in financial and credit profile. This decision gives the bank more freedom for lending, especially to corporations and grows the network, subject to prescribed norms.

5. Which date is observed as International Day to Protect Education from Attack?

A) September 9 

B) September 10

C) September 12

D) September 15

  • International Day to Protect Education from Attack is observed globally on 9th September. The first ever International Day to Protect Education from Attack was observed on 9th Sept 2020. This day is also observed to spread awareness about the difficulties faced by those children living in countries which are affected by military conflicts.

6. Recently, who has been announced as the brand ambassador of Tata AIA Life Insurance?

A) Bajrang Punia

B) Neeraj Chopra 

C) Lovlina Borgohain

D) PV Sindhu

  • Tata AIA Life Insurance has announced Indian athlete and Olympic gold medallist Neeraj Chopra, as its brand ambassador. This association also marks the very first brand partnership to be signed with the gold medallist javelin thrower.

7. Recently, with which country India has held a Maritime Affairs Dialogue?

A) Australia

B) Great Britain

C) Japan 

D) France

  • India and Japan held their sixth Maritime Affairs Dialogue in a virtual format on September 9, 2021. The consultations involved exchanges on developments in the maritime security environment, regional cooperation activities and opportunities for cooperation between the two countries in the Indo–Pacific region.

8. Who is the Minister of State for External Affairs who has recently delivered the keynote in the fourth Conference of the Protectors of Emigrants?

A) Nityanand Rai

B) V Muraleedharan 

C) Anurag Thakur

D) Babul Supriyo

  • The fourth Conference of the Protectors of Emigrants was held on Sept 10, coinciding with the date of enactment of the Emigration Act, 1983. Minister of State for External Affairs V Muraleedharan delivered the keynote address and observed that Protectors of Emigrants have an important role to play in informing youth and workers about new destinations and opportunities.

9. In which city, a Digital Population Clock has been inaugurated?

A) Hyderabad

B) Mumbai

C) Nagpur

D) Delhi 

  • Union Minister of State for Health and Family Welfare, Dr. Bharati Pravin Pawar inaugurated and presided over the Seminar on Population, Human Capital and Sustainable Development in New Delhi on September 10, 2021.
  • She also inaugurated a digital population clock at the Institute for Economic Growth nestled inside the University of Delhi. She also launched a book titled “Infant and Child Mortality in Assam – Demographic and Socio–Economic Interrelations” on the occasion. The book was written by Dr Dipanjali Haloi and Dr Suresh Sharma. During the event, a HMIS Brochure was also launched.

10. Who has been appointed as the governor of Punjab?

A) RN Ravi

B) Banwarilal Purohit 

C) Gurmit Singh

D) Jagdeep Dhankar

  • President Ram Nath Govind has appointed Tamil Nadu Governor Banwarilal Purohit as the new Governor of Punjab.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!