Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

17th & 18th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

17th & 18th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 17th & 18th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

April Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

17th & 18th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. “வரலாற்றுச்சார்பான நீலிஸ்டுகள்” மேற்கொண்ட இணையவழி அவதூறுகளைப் புகாரளிப்பதற்காக தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ள நாடு எது?

அ) வட கொரியா

ஆ) சீனா

இ) பிரேஸில்

ஈ) கியூபா

  • “வரலாற்றுச் சார்புடைய நீலிசம்” என்பது சீனாவில் பயன்படுத்தப்படும் ஒரு சொற்றொடராகும். அது, சீன பொதுவுடைமை கட்சியின் கடந்த கால நிகழ்வுகளின் விளக்கத்தின் மீதான பொதுமக்களின் ஐயத்தை விவரிக் -கிறது. அண்மையில், சீனாவின் இணையவெளி ஒழுங்காற்று அமைப்பு ஆளும் பொதுவுடைமை கட்சியையும் அதன் வரலாற்றையும் இழிவுபடுத் -தும் இணையவெளி அவதூறுகளைப் புகாரளிப்பதற்காக ஒரு தொலை பேசி எண்ணை அறிமுகப்படுத்தியது. அக்கட்சியின் நூறாவது ஆண்டு விழா இவ்வாண்டு ஜூலை மாதம் வருகிறது.

2. பிரிட்டிஷ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சிக் கலைகள் அகாடமி (BAFTA)’இன் ‘சிறந்த திரைப்பட’ விருதை வென்ற படம் எது?

அ) நோமட்லேண்ட்

ஆ) சோல்

இ) அனதர் ரவுண்ட்

ஈ) ஜூடாஸ்

  • “நோமட்லேண்ட்”, பிரிட்டிஷ் திரைப்பட & தொலைக்காட்சிக் கலைகள் அகாடமியான BAFTA’இன் சிறந்த திரைப்படத்திற்கான விருது உட்பட 4 பரிசுகளை வென்றது. சோலி ஜாவோ, “நோமட்லேண்ட்” திரைப்படத் -திற்கான சிறந்த இயக்குநருக்கான BAFTA’இன் விருதினை வென்ற இரண்டாவது பெண்மணி ஆனார். சிறந்த நடிகருக்கான விருது 83 வயதான அந்தோனி ஹாப்கின்ஸுக்கும், சிறந்த நடிகைக்கான விருது பிரான்சிஸ் மெக்டார்மண்டிற்கும் வழங்கப்பட்டது.

3. இந்திய வல்லுநர்கள் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட COVID-19 தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி, எந்த நாட்டுடையதாகும்?

அ) சீனா

ஆ) ரஷியா

இ) ஜெர்மனி

ஈ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

  • இந்தியாவில் ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை அவசரமாக பயன்படுத்த வல்லுநர்கள் குழு பரிந்துரைத்தது. இந்தியாவில் ‘ஸ்புட்னிக்-வி’ கரோனா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய மருந்துப் பொருள்கள் கட்டுப்பாட்டு இயக்குநரகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • மற்ற இரண்டு தடுப்பூசிகள் சீரம் நிறுவனத்தின் ‘கோவிஷீல்ட்’ மற்றும் பாரத் பயோடெக்கின் ‘கோவாக்சின்’ ஆகும். ஸ்புட்னிக்-வி, இந்தியாவில் உள்ள பல நிறுவனங்களால் இந்தியாவிலேயே தயாரிக்கப்படவுள்ளது.

4. சமீபத்திய செய்திகளில் இடம்பெற்ற, அண்டார்டிகாவின் ‘டூம்ஸ்டே பனிப்பாறை’யின் மெய்யான பெயர் என்ன?

அ) திவைட்ஸ் பனிப்பாறை

ஆ) பைன் தீவு பனிப்பாறை

இ) ஜாகோப்சவ்ன் பனிப்பாறை

ஈ) ஹெல்ஹெய்ம் பனிப்பாறை

  • “டூம்ஸ்டே பனிப்பாறை” என்றும் அழைக்கப்படுகிற திவைட்ஸ் பனிப்பா -றையானது, அண்டார்டிகாவில் உள்ளது. இது கடந்தசில ஆண்டுகளாக வேகமாக உருகிவருகிறது. 1.9 லட்சம் ச கி மீ., என்ற பேரளவிளான இப் பனிப்பாறையில், உலகின் கடல் மட்டத்தை ½ மீட்டருக்கு மேல் உயர்த்த போதுமான நீர் உள்ளது. அண்மையில், சுவீடனின் கோத்தன்பர்க் பல்க -லைக்கழக ஆராய்ச்சியாளர்கள், இந்தப் பனிப்பாறை கணித்ததைவிட மிக வேகமாக உருகுவதைக் கண்டறிந்துள்ளனர்.

5. உழவர்களுக்கான நேரடி கட்டணம் செலுத்தும் பணியில் “அர்தி -யாக்களை” ஈடுபடுத்தவுள்ள மாநிலம் எது?

அ) இராஜஸ்தான்

ஆ) பஞ்சாப்

இ) மத்திய பிரதேசம்

ஈ) உத்தர பிரதேசம்

  • குறைந்தபட்ச ஆதரவு விலையை நேரடியாக உழவர்களின் கணக்குக -ளில் செலுத்துவதாக பஞ்சாப் அரசு மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது. முன்னதாக, அர்தியாக்கள் (தரகு முகவர்கள்) உழவர்களுக்கு பணம் செலுத்துவார்கள். பஞ்சாப் மாநில முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங், கொள்முதல் மென்பொருளை மாநில உணவுத் துறை திருத்தியுள்ளதாக அறிவித்தார், இதனால் நேரடி பணம் செலுத்தும் பணியில் அர்தியாக்கள் தொடர்ந்து ஈடுபடுத்தப்படுவார்கள்.

6. தடுப்பூசி செயல்முறை குறித்து செய்திகளில் அடிக்கடி காணப்பட்ட ‘AEFI’ என்பதன் விரிவாக்கம் என்ன?

அ) Adequate events following immunisation

ஆ) Adverse events following immunisation

இ) Appropriate events following immunisation 

ஈ) Affected events following immunisation

  • AEFI என்பது “நோய்த்தடுப்புக்குப்பின் ஏற்படும் மோசமான நிகழ்வுக ளை” குறிக்கிறது. இந்தியா இதற்கு முன்னர் AEFI தொடர்பான தேசிய குழுவை அமைத்திருந்தது. சுமார் 617 கடுமையான மற்றும் தீவிரமான AEFI (இறப்புகள் உட்பட) மற்றும் 180 இறப்புகள் பதிவாகியுள்ளன. AEFI தொடர்பான தேசியக் குழுவின் உறுப்பினர் ஒருவர், நிலைமையைக் கண்காணிக்க, விரிவான எந்திரங்களை இந்தியா கொண்டுள்ளதாக எடுத்துரைத்துள்ளார்.

7. வர்த்தக & தொழிற்துறை அமைச்சரானவர் எந்த அலுவலகத்தின் ‘வர்த்தக வசதி திறன்பேசி செயலி’யை அறிமுகப்படுத்தினார்?

அ) DGFT

ஆ) DGTR

இ) MPEDA

ஈ) APEDA

  • வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சரான பியூஷ் கோயல் சமீபத்தில் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தின், ‘வர்த்தக வசதி திறன்பேசி செயலி’யை அறிமுகப்படுத்தினார். இச்செயலி அதிநவீன அமைப்பைக் கொண்டுள்ளதோடு மட்டுமல்லாமல் நிகழ்நேர வர்த்தக கொள்கை புதுப்பிப்புகள், பயன்பாடுகள் மற்றும் நிகழ்நேர தரவையும் வழங்குகிறது.
  • இது செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான 24×7 உதவியையும் DGFT’இன் அனைத்து சேவைகளையும் வழங்கும்.

8. ஊட்டச்சத்து சீரான உணவை வலியுறுத்தி சுகாதார அமைச்சரால் தொடங்கப்படவுள்ள இயக்கத்தின் பெயர் என்ன?

அ) போஷான் கிரந்தி

ஆ) ஆகார் கிரந்தி

இ) உணவு இந்தியா இயக்கம்

ஈ) உணவு கழிவில்லா இயக்கம்

  • ஊட்டச்சத்து சீரான உணவின் அவசியத்தை வலியுறுத்தி, “ஆகார் கிரந்தி” என்ற இயக்கத்தை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தொடங்கவுள்ளார். “நல்ல உணவு-நல்ல அறிவாற்றல்” என்ற தாரக மந்திரத்துடன் விஞ்ஞான பாரதி மற்றும் உலகளாவிய இந்திய அறிவியலா ளர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் மன்றம் (GIST) ஆகியவை இணைந்து இதனை தொடங்கின.
  • இந்தத் திட்டம் மாணவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும்.

9. ஓர் அண்மைய தரவுகளின்படி, சிலிக்கா ஏரியில், பின்வரும் எந்த உயிரினத்தின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது?

அ) ஓங்கில்கள்

ஆ) முதலைகள்

இ) கெழுத்தி மீன்கள்

ஈ) ஆமைகள்

  • சிலிக்கா ஏரியானது இந்தியாவின் மிகப்பெரிய உப்பு நீர் ஏரியாகும்; இது, ஒடிஸா மாநிலத்தின் பூரி, குர்தா மற்றும் கஞ்சம் ஆகிய மாவட்டங்களில் பரவியுள்ளது. மாநில வன மற்றும் சுற்றுச்சூழல் துறையின் சமீபத்திய தரவு வெளியீட்டின்படி, இந்த ஏரியில் வாழ்ந்து வரும் ஓங்கில்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இருமடங்காக அதிக -ரித்துள்ளது. சிலிக்கா ஏரி அதன் ஐராவதி ஓங்கில்களுக்கு பெரும் பெயர் பெற்றதாகும்.

10. ஆர்ட்டெமிஸ் திட்டத்தை மேற்கொள்ளும் அமைப்பு எது?

அ) DRDO

ஆ) ISRO

இ) NASA

ஈ) உலக வங்கி

  • ஆர்ட்டெமிஸ் திட்டம் என்பது NASA’இன் மனிதனை நிலவுக்கு அனுப்பும் திட்டமாகும். 2024ஆம் ஆண்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. 2024’இல் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தின் ஒருபகுதியாக, அண் -மையில், நிலவில் கால்பதிக்கவுள்ள முதல் வெள்ளையரல்லாத பெண்ணையும் NASA அறிவித்துள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. மு க ஸ்டாலினுக்கு விருது

சமூக நலத்திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்தியதற்காக ‘இன்டராக்டிவ் போரம் ஆன் இந்தியன் எகானமி’ அமைப்பு சார்பில் திமு கழக தலைவர் மு க ஸ்டாலினுக்கு விருது வழங்கப்பட்டது. ‘இன்டராக்டிவ் போரம் ஆன் இந்தியன் எகானமி’ என்ற அமைப்பு சார்பில் திமு கழக தலைவர் மு க ஸ்டாலினுக்கு சமூக நலத் திட்டங்களுக்கான ‘சேம்பியன்ஸ் ஆப் சேஞ்ச்’ விருது கோவா மாநிலம் தாஜ் ரெசார்ட் மற்றும் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரி தலைமைவகித்தார்.

2. 5 மாநிலத் தேர்தலில் ரூ. 1,000 கோடி பறிமுதல்: தமிழகம் முதலிடம்

5 மாநில பேரவைத் தேர்தல்களில் இதுவரை இல்லாத அளவுக்கு `1,000 கோடிக்கு ரொக்கம், மதுபானம், இலவச பொருள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது கடந்த 2016’இல் பறிமுதல் செய்யப்பட்டதைவிட நான்கு மடங்கு அதிகமாகும்.

இதில் தேர்தல் முடிவடைந்த தமிழ்நாட்டில் அதிகபட்சமாக `446.28 கோடியும், நான்கு கட்டத் தேர்தல் முடிவடைந்த மேற்கு வங்கத்தில் `300.11 கோடியும், அஸ்ஸாமில் `122.35 கோடியும், கேரளத்தில் `84.91 கோடியும், புதுச்சேரியில் `36.95 கோடியும் அடங்கும். இதுவரை மொத்தம் `1001.44 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த 2016’இல் இது `225.77 கோடியாக இருந்ததாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

தேர்தலில் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா, இலவச பொருள்கள், மதுபானப் பொருள்கள் ஆகியவை வழங்குவதைத் தடுக்க வாக்குப் பதிவு நடைபெறும் வரை தேர்தல் ஆணையம் காவல்துறை, வருமான வரித்துறையினருடன் சேர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் பிடிபட்ட `446.28 கோடி பணத்தில் `236.69 கோடி வாக்காளர்களுக்கு விநியோ -கிக்கப்பட இருந்தது. தமிழகத்தில் பெரும்பாலும் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்படுகிறது.

புதுவையில் வாக்காளர்களைக் கவர விலை உயர்ந்த பொருள்கள் வழங்கப்படுகின்றன. அங்கு பறிமுதல் செய்யப்பட்ட `36.95 கோடியில் `27.42 கோடியில் விலை உயர்ந்த பொருள்களாக உள்ளன.

மேற்கு வங்கத்தில் இதுவரை `118.33 கோடிக்கு போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கேரளத்தில் வாக்காளர்களை கவர தங்க நகைகள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருள்கள் வழங்கப்படுகின்றன. அங்கு பறிமுதல் செய்யப்பட்ட `84.91 கோடியில் `50.86 கோடிக்கு விலை உயர்ந்த பொருள்களாகும். அஸ்ஸாமில் வாக்காளர்களுக்கு இலவசமாக மதுபானங்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி `41.97 கோடிக்கு மது பானங்கள் அங்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

5 மாநில பேரவைத் தேர்தலில் 1,000 கோடி வரையில் பறிமுதல் செய்யப் -பட்டுள்ளது தேர்தல் ஆணையத்தின் வரலாற்றில் மைல்கல் என்றும், வருமான வரி உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் சேர்ந்து நடத்திய சோதனையில்தான் இது சாத்தியமானது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களில் பேரவைத் தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. மேற்கு வங்கத்துக்கு இன்னும் மூன்றுகட்டத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. வாக்கு எண்ணிக்கை மே.2 அன்று நடைபெறுகிறது.

3. பொருளாதார விவகாரத் துறை செயலராக அஜய் சேத் பொறுப்பேற்பு

மத்திய நிதி அமைச்சகத்தில் பொருளாதார விவகாரத் துறை செயலராக அஜய் சேத் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இதுகுறித்து நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள சுட்டுரை செய்தியில் தெரிவித்துள்ளதாவது: மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறையின் புதிய செயலராக அஜய் சேத் பொறுப்பேற்றுக்கொண்டார்.

பொருளாதார விவகாரத் துறையின் செயலராக இருந்த தருண் பஜாஜ் மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய்த்துறை செயலராக நியமிக்கப்பட்ட -தைத் தொடர்ந்து அஜய் சேத் இப்பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளதாக அந்தச் சுட்டுரைப் பதிவில் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 1987ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்திலிருந்து IAS பணிக்கு தேர்வானவர் அஜய் சேத். பிரதமர் தலைமையிலான அமைச்சரவையின் நியமனக் குழு ஏப்.6 அன்று அஜய் சேத்தை பொருளாதார விவகாரங்களுக்கான செயலராக நியமனம் செய்வதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

4. ஆசிய மல்யுத்தம்: வினேஷ், அன்ஷுவுக்கு தங்கம்

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகத், அன்ஷு மாலிக் ஆகியோர் தங்கம் வென்றனர். கஜகஸ்தானின் அல்மேட்டி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் மகளிர் 53 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற வினேஷ் போகத், ஒரு புள்ளியைக்கூட இழக்காமல் தங்கம் வென்றுள்ளார். சீனா மற்றும் ஜப்பானைச்சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்காததால் வினேஷ் போகத்தின் வெற்றி எளிதானது. மகளிர் 57 கிலோ எடைப்பிரிவில் 19 வயதான அன்ஷு மாலிக் தங்கம் வென்றார்.

வினேஷ் போகத், அன்ஷு மாலிக் ஆகியோர் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷி -ப்பில் தங்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும். வினேஷ் போகத் இதற்கு முன்பு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் 3 வெள்ளி உள்பட 7 பதக்கங்கள் வென்றிருந்தபோதிலும், இப்போதுதான் முதல் முறையாக தங்கம் வென்றுள்ளார். இதேபோல் இந்தியாவின் திவ்யா காக்ரன் (72 கிலோ எடைப் பிரிவு) தங்கமும், சாக்ஷி மாலிக் (65 கிலோ எடைப் பிரிவு) வெள்ளிப்பதக்கமும் வென்றனர்.

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா இதுவரை 4 தங்கம், 1 வெள்ளி, இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. முன்னதாக நடைபெற்ற ஆட்டங்களில் சரிதா (59 கிலோ எடைப்பிரிவு) தங்கமும், சீமா பிஸ்லா (50 கிகி எடைப்பிரிவு), பூஜா (76 கிலோ எடைப்பிரிவு) ஆகியோர் வெண்கலமும் வென்றது குறிப்பிடத்தக்கது.

5. 60% யுரேனியம் செறிவூட்டலை தொடங்கியது ஈரான்

வல்லரசு நாடுகளுடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தை மீறி, அணுசக்தி எரிபொருளான யுரேனியத்தை 60% வரை சுத்திகரிக்கும் பணியைத் தொடங்கியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. நடான்ஸ் நகரத்தில் அமைந்து உள்ள தங்கள் நாட்டின் முக்கிய யுரேனியம் செறிவூட்டும் மையத்தில் இஸ்ரேலின் சதிச்செயலால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டி வரும் ஈரான், அதற்குப் பதிலடியாக இந்த நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுக்கும் வகையில் அந்த நாடு மீது ஐநா’இன் சர்வதேசப் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக ஈரானின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், அமெரிக்கா, பிரிட்டன், ரஷியா, பிரான்ஸ், சீனா ஆகிய ஐநா பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பு நாடுகள், ஐரோப்பிய யூனியன் மற்றும் ஜெர்மனியுடன் ஈரான் கடந்த 2015ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொண்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த ஒப்பந்தத்தில், தனது அணுசக்தி திட்டங்கள் அணுவாயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஈரான் ஒப்புக்கொண்டது.

அதற்குப்பதிலாக, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ள வல்லரசு நாடுகளும் சம்மதித்தன. ஒப்பந்தத்தின் ஒருபகுதியாக, யுரேனியம் எரிபொருளை 3.67 சதவீதத்துக்கும் மேல் செறிவூட்ட மாட்டோ -ம் என ஈரான் உறுதியளித்தது. யுரேனியத்தை 90% செறிவூட்டினால்தான் அதனை அணுவாயுதங்களில் பயன்படுத்த முடியும் என்பதால் ஒப்பந்த -த்தில் இந்த அம்சம் இடம்பெற்றிருந்தது.

இச்சூழலில், அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்தபோது உருவாக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக, அடுத்த வந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 2017ஆம் ஆண்டு அறிவித்தார். அதன் தொடர்ச்சி -யாக, அந்த ஒப்பந்தத்தின்கீழ் விலக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை ஈரான் மீது அவர் மீண்டும் விதித்தார். இதற்கு, அணுசக்தி ஒப்பந்த நிபந்தனைகளை மீறுவதன்மூலம் ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்த 3.67 சதவீதத்துக்கு பதிலாக 20% வரை யுரேனியத்தை ஈரான் செறிவூட்டி வந்தது.

இதற்கிடையே, அணுசக்தி ஒப்பந்தத்தைப் பாதுகாப்பதற்காக ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் ஈரானுக்கும் வல்லரசு நாடுகளுக்கும் இடையே கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், அந்த ஒப்பந்தத்தில் மீண்டும் இணைய விருப்பம் தெரிவித்துள்ள புதிய அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசும் பங்கேற்றது.

இந்த நிலையில், ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த நடான்ஸ் செறிவூட்டு மையத்தில் திடீர் மின்தடை ஏற்பட்டு, அதன் செறிவூட்டு கருவிகள் பாதிக்கப்பட்டன. இஸ்ரேலின் சதிச்செயல் காரணமாகவே அந்த பாதிப்பு ஏற்பட்டதாக ஈரான் குற்றஞ்சாட்டி வருகிறது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் தற்போது யுரேனியத்தை 60% செறிவூட்டத் தொடங்கியி -ருப்பது, அணுசக்தி ஒப்பந்தத்தைப் பாதுகாப்பதற்காக நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தையில் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

6. அசோக் லேலண்ட் தயாரித்த குண்டு துளைக்காத வாகனம்: இந்திய விமானப் படையிடம் ஒப்படைப்பு

அசோக் லேலண்ட் நிறுவனம் லாக்கீட் மார்ட்டினுடன் இணைந்து தயாரித்த குண்டு துளைக்காத இலகு இரக வாகனம் இந்திய விமானப் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அசோக் லேலண்ட் நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது: இந்திய விமானப் படைக்கு தேவையான இலகுரக குண்டு துளைக்காத வாகனத்தை தயாரிக்கும் ஒப்பந்தத்தைப் அசோக் லேலண்ட் பெற்றது. இதையடுத்து, லாக்கீட் மார்ட்டின் நிறுவனத்திடமிருந்து தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தத் -தின்கீழ் இந்த வாகனத்தை அசோக் லேலண்ட் உருவாக்கியுள்ளது.

முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த வாகனம் லாக்கீட் மார்ட்டின் ‘CVNG’ வாகனத்தின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். இந்த வாகனம் முதல் கட்டமாக ஏப்.13ஆம் தேதி விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. LPPV வாகனம் சேறு, மண், பாறை, தண்ணீர் உள்ளிட அனைத்திலும் இயங்கக்கூடியது. இதில், தாக்குதலுக்கு தேவையான கணிசமான உபகர -ணங்களை கொண்டு செல்லலாம் என்பதுடன், 6 பேர் அடங்கிய குழுவும் இவ்வாகனத்தில் பயணிக்கலாம் என அசோக்லேலண்ட் தெரிவித்துள்ளது.

7. ‘ஹீமோபிலியா நோயால் 1,800 குழந்தைகள் பாதிப்பு’

தமிழ்நாட்டில் 1800 ஆண் குழந்தைகள் ‘ஹீமோபிலியா’ நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக எழும்பூர் குழந்தைகள்நல மருத்துவர் தெரிவித்தார். உலக ‘ஹீமோபிலியா’ நாள் ஒவ்வோர் ஆண்டும் ஏப்.17 அன்று கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து குழந்தைகள் நலப்பிரிவு ஹீமட்டாலஜி துறை பேராசியர் Dr. இரவிச்சந்திரன் கூறியதாவது: காயத்தால் ஏற்படும் ரத்தக்கசிவு, ரத்தத்தில் உள்ள உறையும் தன்மையால், மனிதர்களுக்குச் சிறிது நேரத்தில் ரத்தம் வடிவது நின்றுவிடும். இந்த ரத்தம் உறைவதற்கு என நமது உடலில் 13 வகையான இரத்த உறைபொருள்கள் உள்ளன. ஆனால், இரத்த உறை பொருளின் குறைபாட்டால் இரத்தக்கசிவு சிலருக்கு எளிதில் நிற்பதில்லை. இதுவே ‘ஹீமோபிலியா’ எனப்படுகிறது.

உலகளவில் ‘ஹீமோபிலியா’ நோய் 10 ஆயிரத்தில் ஒருவருக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நோய்க்கு சிகிச்சையளிப்பதற்காக தமிழகத்தில், எழும்பூர் குழந்தைகள்நல மருத்துவமனை, தேனி, தருமபுரி, மதுரை, சேலம் என 5 அரசு மருத்துவமனைகளில் பிரத்யேக சிகிச்சை மையங்கள் உள்ளன. இது பரம்பரை நோய் ஆகும். ஆண்களை மட்டும் தாக்கும் நோய். தமிழ்நாட்டில் இதுவரை 1,800 ஆண் குழந்தைகள் ஹீமோபிலியா நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

8. நிலவில் தரையிறங்குவதற்கான NASA விண்கலம்: உருவாக்குகி -றது ஸ்பேஸ்-எக்ஸ்

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் தனது திட்டத்துக்காக, தரையிறங்கும் கலத்தை உருவாக்கும் பொறுப்பை தனியார் நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸுக்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் NASA வழங்கியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது: வரும் 2024ஆம் ஆண்டில் நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்ப NASA ஆய்வுமையம் திட்டமிட்டுள்ளது. அந்தத்திட்டத்தின்கீழ், நிலவுக்கு முதல்முறையாக ஒரு பெண் விண்வெளி வீராங்களை செல்லவிருக்கிறார்.

அத்திட்டத்தின்கீழ், நிலவில் தரையிறங்குவதற்கான கலத்தை உருவாக்கு -ம் பணியை தனியார்நிறுவனத்துக்கு வழங்க NASA முடிவுசெய்தது. 289 கோடி டாலர் (சுமார் `21,542 கோடி) மதிப்புடைய இந்த ஒப்பந்தத்துக்காக, அமேஸான் நிறுவனர் ஜெஃப்ரி பேஸோஸின் நிறுவனம், அலாபாமாவைச் சேர்ந்த டைனடிக்ஸ், எலான் மஸ்கின் ஸ்பேஸ்-எக்ஸ் ஆகிய நிறுனங்கள் போட்டியிட்டன. இதில் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் வெற்றிபெற்றுள்ளது.

அந்த நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் கலத்தை அடிப்படையாகக் கொண்டு நிலவில் தரையிறங்குவதற்கான கலம் வடிவமைக்கபடவுள்ளது. தற்போது தெற்கு டெக்ஸாக்ஸ் பகுதியில் ஸ்பேஸ்-எக்ஸின் ஸ்டார்ஷிப் சோதித்துப் பார்க்கப்பட்டு வருகிறது என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

9. கரோனா தடுப்பூசி போட்டால் கூடுதல் வட்டி: சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா புதிய திட்டம்:

இதுகுறித்து சென்ட்ரல் பாங்க் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தற்போதை -ய பேரிடர் காலத்தை கருத்தில்கொண்டு, நோயற்ற சமுதாயத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா ‘நோயெதிர்ப்பு இந்தியா வைப்புத் திட்டம்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்படி, தடுப்பூசி போட்டுக்கொண்ட வாடிக்கையாளர்கள், 1,111 நாட்களுக்கு குறிப்பிட்ட தொகையை வைப்புத்தொகையாக செலுத்தினால், அவர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் வட்டி வருவாயை விட 0.25% கூடுதலாக வழங்கப்படும். எனவே, அனைத்து வாடிக்கையாளர்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டு, குறைந்த காலமே அமலில் இருக்கும் இந்தச் சிறப்பு சலுகை திட்டத்தை பயன்படுத்தி பயன்பெற வேண்டுகிறோம். மூத்த குடிமக்களுக்கும் இத்திட்டம் பொருந்தும்.

10. அருந்தானிய ஆண்டு

ஐநா பொதுக்குழு 2023ஆம் ஆண்டை அருந்தானிய ஆண்டாக (Year of Millets) அறிவித்துள்ளது. 193 நாடுகளை உறுப்பினர்களாகக்கொண்ட பொதுக்குழுவில் இந்தியா முன்மொழிந்த இந்தத் தீர்மானத்தைக் கென்யா, நைஜீரியா, நேபாளம், ரஷியா, வங்காளதேசம், செனகல் உள்ளிட்ட எழுபது நாடுகள் ஆதரித்தன. இந்த அறிவிப்பால், அருந்தானிய உற்பத்தி அதிகரிக்கு -ம் என எதிர்பார்க்கப்படுகிறது.

1. Which country has launched a hotline to report online defamatory comments done by “Historical nihilists”?

A) North Korea

B) China

C) Brazil

D) Cuba

  • “Historical nihilism” is a phrase used in China which describes public doubt over the description of past events by Chinese Communist Party. Recently, China’s cyber regulator has launched a hotline to report online comments that tend to defame the ruling Communist Party and its history. The Party’s 100th anniversary falls on July this year.

2. Which movie won the British Academy of Film and Television Arts (BAFTA) – Best picture award?

A) Nomadland

B) Soul

C) Another Round

D) Judas

  • “Nomadland” won four prizes including the one for Best picture at the British Academy of Film and Television Arts (BAFTA). Chloe Zhao, became only the second woman to win the BAFTA for best director for the movie ‘Nomadland’. Best actor award went to 83–year–old Anthony Hopkins while Best actress award was given to Frances McDormand.

3. Sputnik V, the COVID–19 vaccine, which was approved by the Indian Experts panel, was launched by which country?

A) China

B) Russia

C) Germany

D) USA

  • The expert committee recommended the emergency use of Russia’s Sputnik V vaccine in India. Now, the Drugs Controller General of India (DCGI) will consider this recommendation and authorise the restricted emergency use in India. The other two vaccines are Covishield by Serum Institute and Covaxin by Bharat Biotech. Sputnik V will be manufactured in India by several companies in India.

4. What is the original name of the Antarctica’s “Doomsday Glacier”, which was making news recently?

A) Thwaites Glacier

B) Pine Island Glacier

C) Jakobshavn Glacier

D) Helheim Glacier

  • Thwaites Glacier – also called the “Doomsday Glacier” is present in Antarctica and has been melting fast over the years. Due to its large size of 1.9 lakh square km, it contains enough water to raise the world sea level by more than half a metre. Recently, Researchers at Sweden’s University of Gothenburg have found that the glacier is melting at a higher rate than it was originally thought.

5. Which state is to involve “Arhtiyas” in the direct payment process for Farmers?

A) Rajasthan

B) Punjab

C) Madhya Pradesh

D) Uttar Pradesh

  • The Punjab government has said to the central government that it will pay the Minimum Support Price directly into the accounts of farmers. Earlier, the Arhtiyas (commission agents) used to pay the farmers.
  • Punjab Chief Minister captain Amarinder Singh announced that the State Food Department has amended the procurement software so that the Arhtiyas will continue to be involved in the direct payment process.

6. With reference to the process of vaccination, what is the full form of AEFI, which was seen often in the news?

A) Adequate events following immunisation

B) Adverse events following immunisation

C) Appropriate events following immunisation

D) Affected events following immunisation

  • AEFI stands for “Adverse events following immunisation”. India had earlier constituted a national committee on AEFI. Around 617 severe and serious (including deaths) AEFI and 180 deaths were reported. A member of the National committee on AEFI highlighted that Indian has elaborate machinery to monitor the situation.

7. Commerce and Industry Minister launched the ‘Trade facilitation mobile app’ of which office?

A) DGFT

B) DGTR

C) MPEDA

D) APEDA

  • Commerce and industry Minister Piyush Goyal recently launched the “Trade facilitation mobile app” of the Directorate General of Foreign Trade. The app has a state–of–the–art system and provides real–time trade policy updates, applications and real–time data.
  • It will also provide artificial intelligence–based 24×7 assistance and all services of the DGFT.

8. What is the name of the movement to be launched by the Health Minister to emphasise on nutritionally balanced diet?

A) POSHAN Kranti

B) Aahar Kranti

C) Food India Movement

D) No food waste Movement

  • Union Health Minister Harsh Vardhan is set to launch “Aahaar Kranti” mission, which aims to emphasis the need for a nutritionally balanced diet. Vijnana Bharati (Vibha) and Global Indian Scientists’ and Technocrats’ Forum (GIST) have partnered to launch the mission with the motto of “Good Diet–Good Cognition”. The program will train teachers who will in turn teach the students and their families.

9. As per recent data, the population of which species has doubled in the Chilika lake?

A) Dolphins

B) Crocodiles

C) Cat–fishes

D) Turtles

  • Chilika Lake is India’s largest brackish water lagoon, which is spread over the Puri, Khurda and Ganjam districts of Odisha.
  • As per a recent data release by the State Forest and Environment Department, the number of dolphin populations in the lake has doubled this year compared with last year. The state’s Chilika lake is known for its Irrawady dolphins.

10. Artemis program is undertaken by which organization?

A) DRDO

B) ISRO

C) NASA

D) World Bank

  • The Artemis program is NASA’s manned mission to the moon which is set to be executed in the year 2024. Recently, NASA has stated that it will land the first person of colour on the moon and the first woman on moon as a part of the mission in 2024.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!