Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

17th & 18th January 2021 Tnpsc Current Affairs in Tamil & English

17th & 18th January 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 17th & 18th January 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

17th & 18th January 2021 Tnpsc Current Affairs in Tamil

1. சமீபத்தில் எந்த மாநிலத்தில், செர்ரிப் பூக்கும் மாவோ திருவிழா நடத்தப்பட்டது?

அ) நாகாலாந்து

ஆ) மணிப்பூர்

இ) ஹிமாச்சல பிரதேசம்

ஈ) சிக்கிம்

  • ஆண்டுதோறும் நடக்கும் செர்ரிப்பூக்கும் திருவிழா, மணிப்பூர் மாநிலத்தில் மாவோவில் அண்மையில் நடத்தப்பட்டது. இந்த விழா, மெய்நிகர் முறையில் நடைபெற்றது. மாவோ நகரம் முழுவதும் செர்ரிப்பூக்களால் அலங்கரிக்கப்பட் -டிருந்தது. இவ்விழா, பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. பாரம்பரிய நாட்டுப்புற நடனங்கள் மற்றும் செர்ரி நாச்சோம் என்ற சிறப்பு பாலே நடனம் ஆகியவை இவ்விழாவின் ஒருபகுதியாக இருந்தன.

2. ‘தேசிய AIDS கட்டுப்பாட்டமைப்பின் (NACO)’ தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?

அ) மும்பை

ஆ) தில்லி

இ) ஹைதராபாத்

ஈ) கொல்கத்தா

  • தேசிய AIDS கட்டுப்பாட்டு அமைப்பு (NACO) தனது முதல் ரெட் ரிப்பன் கிளப் வினாடி வினா போட்டியை ஏற்பாடு செய்தது. NACO, 1992’இல் சுகாதார அமைச்சகத்தின் ஒரு பிரிவாக நிறுவப்பட்டது. புது தில்லியை தலைமையிட666666666666666666666666666666666666666666666மாகக்கொண்ட இது, NCERT உடன் இணைந்து பள்ளிகளில், ‘வளரிளம் பருவத்தினர் கல்வித்திட்டத்தை’ செயல்படுத்தி வருகிறது.
  • கல்லூரி பயிலும் இளையோரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 12,500 ரெட் ரிப்பன் கிளப்புகளையும் அது நிறுவியுள்ளது.

3. இந்திய ராணுவத்தின் பின்வரும் எந்தப்பிரிவு, அடுத்த ஆண்டு முதல் பெண்களை விமானிகளாக பணியமர்த்தவுள்ளது?

அ) சமிக்ஞை படைகள்

ஆ) கவசப்படைகள்

இ) இராணுவ வான்படை

ஈ) பொறியாளர்கள் படை

  • இந்திய இராணுவத்தின் தலைமைத்தளபதியான மனோஜ் முகுந்த் நரவனேவின் ஓர் அண்மைய அறிவிப்பின்படி, அடுத்த ஆண்டு முதல் பெண்கள் இராணுவ வான்படையில் விமானிகளாக பணியமர்த்தப் -படுவார்கள். இதற்கு முன்னர்வரை, இராணுவ விமானப்படையில் பெண்களுக்கு தரைசார் பணிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன.
  • பெண் விமானிகள் ஹெலிகாப்டர்களை இயக்குவதோடு எல்லைப் புற நடவடிக்கைகளின் ஒருபகுதியாகவும் இருப்பார்கள்.

4. எந்த இந்திய மாநிலம் / யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து வக்ஃப் சொத்துக்களையும், நிலக்குறியீடு இடுவதற்கு சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகம் முடிவு செய்துள்ளது?

அ) தில்லி ஆ) புதுச்சேரி

இ) கோவா ஈ) சிக்கிம்

  • மத்திய சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகம் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து வக்ஃப் சொத்துக்களையும் நிலக் குறியீடு செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவித்தது.
  • இந்நடவடிக்கை, உள்ளூர் குண்டர்களால் அந்தச் சொத்துக்கள் சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்படுவதாக பல புகார்கள் வந்ததை அடுத்து எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் வக்ப் வாரியத்தை அமைப்பதற்கும் அவ்வமைச்சகம் செயல்பட்டு வருகிறது. பிரதம மந்திரி ஜன்-விகாஸ் காரிகிராமின்கீழ், சமூக-பொருளாதார உட்கட்டமைப்பைக் ஏற்படுத்து -வதற்கும் மத்திய அரசு நிதியளிக்கும்.

5. வரி ஏய்ப்பு, வெளிநாட்டிலுள்ள இரகசிய சொத்துக்கள் மற்றும் பினாமி சொத்துக்கள் தொடர்பாக இணையதளம் ஒன்றைத் தொடங்கியுள்ள அமைப்பு எது?

அ) மத்திய மறைமுக வரிகள் & சுங்கங்கள் வாரியம்

ஆ) அமலாக்கத்துறை

இ) மத்திய நேரடி வரிகள் வாரியம்

ஈ) இந்திய ரிசர்வ் வங்கி

  • மின்னாளுகை மற்றும் வரி ஏய்ப்பை தடுப்பதில் மக்கள் ஈடுபாட்டை ஊக்கப்படுத்துதல் ஆகியவற்றில் மற்றுமொரு முக்கிய நடவடிக்கை
    -யாக, வரி ஏய்ப்பு, பினாமி சொத்துகள், வெளிநாட்டிலுள்ள இரகசிய சொத்துகள் தொடர்பான புகார்களைப் பதிவு செய்வதற்கான இணை -யதளத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.

6. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான தீர்மானம் 1373’ உடன் தொடர்புடைய அமைப்பு எது?

அ) RBI

ஆ) SEBI

இ) UNSC

ஈ) ICJ

  • பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான 1373 தீர்மானம், ஐ.நா அவையின் பாதுகாப்பு கவுன்சிலால் 2001 செப்.28 அன்று ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. செப்.11 அன்று அமெரிக்கா மீதான பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து இது ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • அண்மையில், ஐநா அவையின் பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) “உலகளவில் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக்கொண்ட 1373 தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இருபது ஆண்டுகளுக்குப் பிறகு” என்ற தலைப்பில் விவாதம் ஒன்று நடைபெற்றது. இதில், இந்தியாவின் சார்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் Dr S .ஜெய்சங்கர், மெய்நிகராக பங்கேற்றார்.

7. இந்தியாவின் புதிய வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை, எப்போது நடைமுறைக்கு வரும்?

அ) 2021 பிப்ரவரி 01

ஆ) 2021 மார்ச் 01

இ) 2021 ஏப்ரல் 01

ஈ) 2021 மே 01

  • இந்தியாவின் புதிய வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை, 2021 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வர உள்ளது. இந்தக் கொள்கை 2021 முதல் 2026 வரை ஐந்து ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். இது, பன்னாட்டு வர்த்தகத்தில் இந்தியாவை ஒரு தலைமையாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மாவட்ட ஏற்றுமதி மையங்கள், இந்தப் புதிய வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையின் ஒரு முக்கிய அங்கமாக அமையும் என்பதும் அறியப்படுகிறது.

8. “2020 ஹுருன் குளோபல் 500” பட்டியலில், முதலிடத்தில் உள்ள நிறுவனம் எது?

அ) ஆப்பிள்

ஆ) கூகுள்

இ) அமேசான்

ஈ) சாம்சங்

  • “2020 ஹுருன் குளோபல் 500” பட்டியலின்படி, ஆப்பிள் நிறுவனம் $2.1 டிரில்லியன் டாலர் மதிப்புடடன் உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக உள்ளது. மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்கள், தலா $1.6 டிரில்லியன் டாலர்களைக் கொண்டுள்ளன.
  • 2020 ஹுருன் குளோபல் 500 என்பது உலகின் மிக மதிப்புமிக்க 500 அரசு சாரா நிறுவனங்களின் பட்டியலாகும். இந்தப் பட்டியலில் 11 இந்திய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள், $169 பில்லியன் டாலர் மதிப்புடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலிடத்தில் உள்ளது.

9. தர்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், பின்வரும் எந்த வான்பொருளின் உருவாக்கத்தை விளக்குவதற்காக, ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் அடிப்படையிலான உருவகப்படுத்துதல் வசதியை உருவாக்கியுள்ளனர்?

அ) ஞாயிறு

ஆ) திங்கள்

இ) செவ்வாய்

ஈ) புதன்

  • சமீபத்தில், தர்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், திங்களின் உருவாக்கத்தை விளக்குவதற்காக ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் அடிப்படை
    -யிலான உருவகப்படுத்துதல் வசதியை உருவாக்கியுள்ளனர். சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ‘தியா’ என்ற செவ்வாய் போன்ற கோள், பூமியில் மோதியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
  • அதன் விளைவாக உண்டான எச்சங்கள், ஒரு சுய-ஈர்ப்பு பொருளாக உருவாகி, நிறை மற்றும் இரும்புப் பண்புகளின் அடிப்படையில் திங்கள் உருவாக்கியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

10. ஒரு புத்தாக்க தொழிற்சாலையைத் தொடங்குவதற்காக, NASSCOM, பின்வரும் எந்த மாநிலத்தின் AI திட்டத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது?

அ) தமிழ்நாடு

ஆ) மத்திய tபிரதேசம்

இ) ஆந்திர பிரதேசம்

ஈ) தெலங்கானா

  • ஒரு புத்தாக்க தொழிற்சாலையைத் தொடங்குவதற்காக தேசிய மென் பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கம் (NASSCOM) தெலுங்கானா மாநில செயற்கை நுண்ணறிவுத் திட்டத்துடன் (T-AIM) கூட்டிணைந்துள்ளது.
  • வேளாண்மைத் துறையில் உள்ள சவால்களுக்கான புதுமையான செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தீர்வுகளை அங்கீகரித்து அவற்றை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. துளிர் நிறுவனங்கள், நிறுவனங்கள் இச்சவாலை வென்றால் `1 இலட்சம் பரிசுத்தொகையும், தெலுங்கானா மாநில நிறுவனங்களின் வழிகாட்டுதலும் கிடைக்கும்.

1. The Cherry Blossom Mao Festival was organised in which state recently?

A) Nagaland

B) Manipur

C) Himachal Pradesh

D) Sikkim

  • The Annual Cherry Blossom Festival event was organised at Mao of Manipur recently. The event was held in a virtual format. The entire Mao town was adorned with cherry blossom flowers and it was streamed live on Face book, YouTube, Instagram etc. Traditional folk dances and Special ballet named Cherri Nachom was also a part of the event.

2. Where is the headquarters of the ‘National AIDS Control Organisation (NACO)’ located?

A) Mumbai

B) Delhi

C) Hyderabad

D) Kolkata

  • The National AIDS Control Organisation (NACO) organised its first ever Red Ribbon club Quiz Competition. NACO was established in 1992 as a division of Health Ministry. Headquartered in New Delhi, it is implementing the ‘Adolescence Education Programme’ in schools, in association with NCERT. It has also established 12,500 Red Ribbon Clubs (RRCs) to create awareness among the college youth.

3. Ministry of Minority Affairs has decided to geo–tag all Waqf properties in which Indian state/UT?

A) Delhi

B) Puducherry

C) Goa

D) Sikkim

  • The Union Ministry of Minority Affairs announced that it has decided to geo–tag all Waqf properties in the Union Territory of Puducherry. This step follows many complaints being received on illegal occupation of the properties by local goons.
  • The Ministry is also working to constitute a Waqf Board in the UT. Under Pradhan Mantri Jan Vikas Karykram, the Cenre will also finance to construct socio–economic infrastructure.

4. Which organization has launched a portal regarding tax evasion, foreign undisclosed assets and benami properties?

A) Central Board of Indirect Taxes & Customs

B) Enforcement Directorate

C) Central Board of Direct Taxes

D) Reserve Bank of India

  • The Central Board of Direct Taxes (CBDT) has launched a dedicated portal for receiving and processing complaints related to regarding tax evasion, foreign undisclosed assets and benami properties. This step is seen a move to enhance e–governance and to involve public participation to abolish tax evasion.

5. ‘Resolution 1373 on counter terrorism’, that is seen in news recently, is associated with which organization?

A) RBI

B) SEBI

C) UNSC

D) ICJ

  • The resolution 1373 on counter terrorism was adopted by the United Nations Security Council unanimously on 28 September 2001. This was adopted following the 11 September terrorist attacks on the USA.
  • Recently, an open debate was held at the United Nations Security Council (UNSC) titled ’20 years after the adoption of resolution 1373’ that focused on combating terrorism on a globally. India was represented virtually by External affairs Minister Dr.S.Jaishankar.

6. When will India’s New Foreign Trade Policy will come into effect?

A) 2021 February 01

B) 2021 March 01

C) 2021 April 01

D) 2021 May 01

  • The new Foreign Trade Policy of India, is set to take effect from 1st April 2021. The policy will be in effect for 5 years from 2021 to 2026. It aims to make India a leader in international trade. It is also known that the District Export Hubs initiative will form an important component of the new Foreign Trade Policy.

7. Which company has been ranked at the top in the “2020 Hurun Global 500” list?

A) Apple

B) Amazon

C) Samsung

D) Google

  • As per the ‘2020 Hurun Global 500’ list, Apple is the world’s most valuable company with a value of USD 2.1 trillion followed by Microsoft and Amazon with USD 1.6 trillion each.
  • The 2020 Hurun Global 500 is a list of 500 most valuable non–state–controlled companies in the world. 11 Indian firms are a part of the list, which is led by Reliance Industries worth USD 169 billion.

8. The researchers of Durham University have developed a supercomputer simulation to explain the formation of which space body?

A) Sun

B) Moon

C) Mars

D) Mercury

  • Recently, researchers of Durham University have developed a supercomputer simulation to explain the formation of moon.
  • The researchers have stated that Earth collided with a Mars like planet named Theia about 4.5 billion years ago. The resulting debris is found to be a self–gravitating body, which has a great resemblance to moon in term of mass and ferric properties.

9. Which arm of the Indian Army is to recruit women as Pilots for the first time from next year?

A) Corps of Signals

B) Armoured Corps

C) Army Aviation Corps

D) Corps of Engineers

  • As per the recent announcement of the Indian Army Chief General Manoj Mukund Naravane, women will be inducted as Pilots in the Army Aviation Corps from next year.
  • Prior to this, women were being allotted only ground duties in the Army Aviation Corps. Women pilots would fly helicopters and be part of operations at the borders.

10. The NASSCOM has partnered with which state’s AI mission, to launch an Innovation Factory?

A) Tamil Nadu

B) Madhya Pradesh

E) Andhra Pradesh

D) Telangana

  • The National Association of Software and Services Companies (NASSCOM) has collaborated with Telangana Artificial Intelligence Mission (T–AIM) to launch an Innovation Factory.
  • It aims to recognise and promote innovative Artificial intelligence (AI) solutions for challenges in agricultural sector. The start–ups, companies and institutions winning the challenge will get Rs 1 lakh prize money along with mentorship from state entities.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!