17th & 18th October 2020 Current Affairs in Tamil & English

17th & 18th October 2020 Current Affairs in Tamil & English

17th & 18th October 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

17th & 18th October 2020 Tnpsc Current Affairs in Tamil

17th & 18th October 2020 Tnpsc Current Affairs in English

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1.நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றதற்காக இராம்விலாஸ் பஸ்வான் கின்னஸ் சாதனை படைத்தார்; அவர் எந்தத் தொகுதியிலிருந்து இந்தச் சாதனையை புரிந்தார்?

அ. ஹாஜிப்பூர்

ஆ. புத்த கயா

இ. பாட்னா சாஹிப்

ஈ. நாளந்தா

 • ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளுக்காகப் போராடிய மூத்த அரசியல் தலைவரும், லோக் ஜனசக்தி கட்சியின் நிறுவனருமான இராம்விலாஸ் பஸ்வான் தனது 74ஆம் வயதில் காலமானார். நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றமைக்காக கின்னஸ் சாதனை படைத்தார். 1977ஆம் ஆண்டில் பீகார் மாநிலத்திலுள்ள ஹாஜிப்பூர் தொகுதியிலிருந்து 4.24 இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார். நுகர்வோர் விவகார அமைச்சராக பணியாற்றி வந்த பஸ்வானின் மறைவுக்குப் பிறகு, அவரின் பொறுப்பை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், கூடுதலாக நிர்வகித்து வருகிறார்.

2. ரிசர்வ் வங்கியின் அண்மைய அறிவிப்பின்படி, 2020 டிசம்பர் முதல், கீழ்க்காணும் எந்தச் சேவை, 24×7 (நாள் முழுவதும்) கிடைக்கவுள்ளது?

அ. NEFT

ஆ. IMPS

இ. RTGS

ஈ. BBPS

 • எதிர்வரும் 2020 டிசம்பர் முதல் RTGS (Real Time Gross Settlement) என்ற பணமனுப்பும் முறையில் 24 மணி நேரமும் (24×7) பணம் அனுப்ப முடியும் என இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். தற்போதுள்ள RTGS சேவையில், ஒரு வேலை நாளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே வாடிக்கையாளரால் பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ள முடியும். நேரக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது என்பது இணையவழி பணப்பரிமாற்றத்தை மிகவும் பயனுள்ளதாக்கும். குறைந்தபட்சம் `2 லட்சத்திலிருந்து உச்சவரம்பு ஏதுமில்லாமல் RTGS மூலம் இனி பணமனுப்பவியலும்.

3.நடப்பாண்டில் (2020) அமைதிக்கான நோபல் பரிசை வென்ற நபர் / நிறுவனம் யார் / எது?

அ. ஜெசிந்தா ஆடெர்ன்

ஆ. கிரேட்டா துன்பெர்க்

இ. உலக நலவாழ்வு அமைப்பு

ஈ. ஐநா உலக உணவுத் திட்டம்

 • COVID-19 தொற்றுநோய்க்கு இடையில் மில்லியன் கணக்கான மக்களுக்கு உணவளித்தமைக்காக ஐநா அவையின் உலக உணவுத்திட்டத்திற்கு நடப்பாண்டுக்கான (2020) அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 1961ஆம் ஆண்டில் ஐநா உலக உணவுத்திட்டம் நிறுவப்பட்டது.
 • இந்த ஐநா அமைப்பானது கடந்த ஆண்டில் மட்டும் 97 மில்லியன் உலக மக்களுக்கு உதவியுள்ளது. மேலும், 88 நாடுகளைச் சார்ந்த 15 பில்லியனுக்கும் அதிகமானோருக்கு கடந்த ஆண்டில் உணவுப் பொருட்களை அது வழங்கியுள்ளது. இந்தப் பரிசு தங்கப்பதக்கம், பட்டயம் மற்றும் பத்து மில்லியன் சுவீட குரோனாருக்கான காசோலையைக் கொண்டுள்ளது.

4.உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டு DRDO’ஆல் பரிசோதிக்கப்பட்ட கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணையின் பெயரென்ன?

அ. ருத்ரம்

ஆ. சிவா

இ. சக்தி

ஈ. இறைவா

 • ஒடிசா கடற்பகுதியிலிருந்து SU30 MK1 போர் விமானத்தின்மூலம், மேம்படுத்தப்பட்ட கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணையின் (ருத்ரம்) சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்திய வான்படைக்காக, பாதுகாப்பு ஆராய்ச்சி & மேம்பாட்டு அமைப்பு (DRDO), இந்த ‘ருத்ரம்’ எனும் முற்றிலும் உள்நாட்டிலேயே உருவான மேம்படுத்தப்பட்ட கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணையை தயாரித்தது. இந்த ஏவுகணையின்மூலம் இந்திய வான்படை வீரர்கள், வெகு தொலைவிலிருந்தே எதிரி நாடுகளின் ரேடார்கள், டிராக்கிங் மற்றும் தகவல் தொடர்பை அழிக்கவியலும்.

5.எந்தவொரு திட்டத்தின்கீழ், சொத்து விவர அட்டைகளின் விநியோகத்தை பிரதமர் தொடங்கவுள்ளார்?

அ. ஸ்வாமித்வா

ஆ. ஸ்வயம்

இ. ஸ்வநிதி

ஈ. ஸ்வீகார்

 • பிரதமர் மோடி, SVAMITVA (Survey of Villages and Mapping with Improvised Technology in Village Areas) திட்டத்தின்கீழ் சொத்து விவர அட்டைகளை விநியோகத்தை தொடங்கவுள்ளார். கடன் பெறவோ அல்லது இதர நிதி பயன்பாடுகளுக்காகவோ கிராம மக்கள், தங்களது சொத்துகளை, ஒரு நிதி சொத்தாக உபயோகிப்பதற்கு இந்த நடவடிக்கை வழி வகுக்கும். இந்நிகழ்வின்போது 132,000’க்கும் மேற்பட்ட நில உரிமையாளர்களுக்கு சொத்து விவர அட்டைகளின் நகல்கள் ஒப்படைக்கப்படும். அட்டைகளை மாநில அரசுகளும் மக்களுக்கு விநியோகிக்கும்.

6.நாட்டின் வேலைவாய்ப்பு நிலையை மதிப்பிடுவதற்காக தொழிலாளர் அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் தலைவர் யார்?

அ. S P முகர்ஜி

ஆ. சந்தோஷ் கங்வார்

இ. நிர்மலா சீதாராமன்

ஈ. பியூஷ் கோயல்

 • நாட்டின் வேலைவாய்ப்பு நிலைகுறித்து மதிப்பீடு செய்வதற்காக தொழிலாளர் பணியகம் அமைக்கப்பட்டிருப்பதாக தொழிலாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது. SP முகர்ஜி தலைமையிலான நிபுணர் குழு புலம்பெயர்தல், தொழிற்முறை அமைப்புகள், வீட்டுப்பணியாளர்கள் குறித்து மூன்று ஆய்வுகள் நடத்தும். கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் கெளரவ பேராசிரியரான SP முகர்ஜி தலைமையிலான இக்குழுவில் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்கள், புள்ளியிலாளர்கள் மற்றும் அரசலுவலர்கள் இடம்பெற்றுள்ளனர்.

7.தென்சீனக்கடலில் நீர்மூழ்கிக்கப்பல் எதிர்ப்பு பயிற்சிகளை தொடங்கியுள்ள நாடு எது?

அ. சீனா

ஆ. ஜப்பான்

இ. மலேசியா

ஈ. தைவான்

 • ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் அண்மைய அறிக்கையின்படி, ஜப்பானின் கடல்சார் தற்காப்புப் படை, தென்சீனக்கடலில் நீர்மூழ்கிக்கப்பல் எதிர்ப்புப் பயிற்சிகளைத் தொடங்கியுள்ளது. இப்பயிற்சியில் உலங்கூர்தி தாங்கி கப்பல் மற்றும் நீர்மூழ்கி கப்பல் உள்ளிட்ட மூன்று கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டன. முழு தென்சீனக்கடலும் சீனாவால் உரிமைகோரப்படும் நிலையில், அந்நாடு அக்கடலில் அமைந்துள்ள செயற்கைத் தீவுகளில் இராணுவ நிலையங்களை நிறுவியுள்ளது. தென்சீனக்கடலை சீன தேசம் இராணுவமயமாக்கியதாக ஐக்கிய அமெரிக்க நாடுகள் (USA) குற்றஞ்சாட்டிவருகிறது.

8.மே மற்றும் அக்டோபர் மாதத்தில் வரும் இரண்டாம் சனிக்கிழமைகளில், பல்லுயிர் தொடர்பான எந்தச் சிறப்புநாள் கொண்டாடப்படுகிறது?

அ. உலக பல்லுயிர் நாள்

ஆ. உலக புலம்பெயர்ந்த பறவைகள் நாள்

இ. உலக பாலூட்டிகள் நாள்

ஈ. உலக நீர்வாழ் விலங்கினங்கள் நாள்

 • புலம்பெயர்ந்த பறவைகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஒவ்வோர் ஆண்டும் மே மற்றும் அக்டோபர் மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமைகளில் உலக புலம்பெயர்வு பறவைகள் நாள் அனுசரிக்கப்படுகிறது. புலம்பெயர்ந்த பறவைகள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள், சூழலியலில் அவற்றின் முக்கியத்துவம் மற்றும் அவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் ஆகிவற்றை இந்த நாள் எடுத்துக்காட்டுகிறது.
 • “Birds Connect Our World – புள்ளினங்கள் நம் உலகத்தை இணைக்கின்றன” என்பது நடப்பாண்டு (2020) அக்.10 அன்று கொண்டாடப்பட்ட உலக புலம்பெயர்ந்த பறவைகள் நாளின் கருப்பொருளாகும்.

9.அண்மையில் தேசிய கடல்சார் அறக்கட்டளையுடன் கூட்டுசேர்ந்த TAEF என்பது எந்த நாட்டில் அமைந்த ஒரு மதியுரையகமாகும்?

அ. ஜப்பான்

ஆ. தைவான்

இ. பிலிப்பைன்ஸ்

ஈ. தாய்லாந்து

 • தைவான் – ஆசியா பரிமாற்ற அறக்கட்டளை (TAEF) என்பது தைவானைச் சார்ந்த ஒரு முன்னணி மதியுரையகமும் யுஷான் மன்றத்தின் அமைப்பாளரும் ஆகும். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழை -ப்பை மேம்படுத்துவதற்காக இந்தியாவின் தேசிய கடல்சார் அறக்கட்டளையுடனான ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதால், இது அண்மைச் செய்திகளில் இடம்பெற்றது. கூட்டு ஆராய்ச்சி செய்வதையும் இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

10.எந்த மத்திய அமைச்சகத்தின்கீழ், ‘இராஷ்டிரிய காமதேனு ஆயோக்’ அமைக்கப்பட்டுள்ளது?

அ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

ஆ. மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

இ. சுற்றுச்சூழல், வனம் & காலநிலை மாற்ற அமைச்சகம்

ஈ. உழவு & உழவர்கள் நல அமைச்சகம்

 • இந்திய அரசானது மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கிவரும் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையின்கீழ், ‘இராஷ்டிரிய காமதேனு ஆயோக்’ அமைத்துள்ளது. நவீன மற்றும் அறிவியல்பூர்வ வழிமுறைகளில் கால்நடை வளர்ப்பை ஊக்குவிப்பதும், கால்நடையினங்களை பாதுகாப்பதும் மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
 • பஞ்சகவ்யப் பொருட்களைப் பயன்படுத்தித் தீபாவளியைக் கொண்டாடும் நோக்கத்தோடு, “காமதேனு தீபாவளி அபியான்” பரப்புரையை தேசிய காமதேனு ஆயோக் தொடங்கியுள்ளது.

1. Ram Vilas Paswan entered the Guinness Record for winning a parliamentary election with the highest margin, from which constituency?

[A] Hajipur

[B] Bodh Gaya

[C] Patna Sahib

[D] Nalanda

 • Veteran political leader who fought for Dalit rights and the founder of Lok Janshakti Party, Ram Vilas Paswan passed away at the age of 74. He entered the Guinness World Record for winning a parliamentary election with the highest margin. He won with a margin of 4.24 lakh votes from his Hajipur constituency in Bihar in 1977. After the leader’s demise, who was serving ans the Consumer Affairs Minister, Union Minister Piyush Goyal was assigned the additional charge.

2. As per the recent announcement of the RBI, which service is to be made available round the clock from December 2020?

[A] NEFT

[B] RTGS

[C] IMPS

[D] BBPS

 • Reserve Bank of India Governor Shaktikanta Das announced that Real Time Gross Settlement (RTGS) payment system will be available round the clock from December 2020. At present, in the RTGS service, customer transactions are allowed from 7am to 6pm only on a working day. The relaxation of time constraints would make online payment more efficient. The minimum amount to be remitted through RTGS is Rs 2 lakhs with no upper ceiling.

3. Which personality/ institution won the Nobel Peace Prize 2020?

[A] Jacinda Ardern

[B] Greta Thunberg

[C] World Health Organization

[D] UN World Food Programme

 • The Nobel Peace Prize 2020 was awarded to the United Nations World Food Programme (WFP) for feeding millions of people amid the coronavirus pandemic. The WFP was founded in the year 1961.
 • The UN organisation had helped 97 million people last year and distributed to over 15 billion rations to people in 88 countries last year. The award consists of a gold medal, a diploma and a cheque for 10 million Swedish kronor.

4. What is the name of the Indigenously Developed Anti Radiation Missile, tested by DRDO?

[A] Rudram

[B] Shiva

[C] Shakthi

[D] Iraivaa

 • Defence Research and Development Organisation (DRDO) conducted a successful test of the New Generation Anti Radiation Missile (NGRAM) called the Rudram–1. The missile has been tested at the Integrated Test Range (ITR) in Balasore. This is India’s first indigenous anti–radiation missile and it would be launched from various fighter aircraft used by the Indian Air Force.

5. The Prime Minister is to launch the Distribution of Property Cards under which scheme?

[A] SVAMITVA Top of Form

SVAMS

[B] SWAYAM

[C] SVANidhi

[D] SVEEKAR

 • Prime Minister Narendra Modi is to launch the physical distribution of property cards under the SVAMITVA (Survey of Villages and Mapping with Improvised Technology in Village Areas) scheme. Under the scheme, the rural people are empowered to use the property as a financial asset. The physical copies of property titles will be handed over to over 132,000 landowners during the event. The state governments will also physically distribute the cards to people.

6. Who is the head of the expert group formed by the Labour Ministry, to assess the employment situation in the country?

[A] SP Mukherjee

[B] Santosh Gangwar

[C] Nirmala Sitharaman

[D] Piyush Goyal

 • The Labour Ministry announced that the Labour Bureau is set to evaluate the employment situation in the country.
 • The expert group headed by SP Mukherjee will conduct three surveys on migration, domestic workers and professional bodies. He is an Emeritus Professor at the University of Kolkata. The group also consists of economists, statisticians and government functionaries.

7. Which country has commenced anti–submarine drills in the South China Sea?

[A] China

[B] Japan

[C] Malaysia

[D] Taiwan

 • Japan’s Maritime Self–defense Force has commenced anti–submarine drills in the South China Sea, as per the recent statement from the Japanese Defence Ministry. The exercise deployed three vessels including a helicopter aircraft carrier and a submarine. The entire South China Sea is claimed by China, which has established military outposts on artificial islands. The United States has been accusing China of militarising the South China Sea.

8. Which special day related to biodiversity is celebrated on the second Saturday of May and October?

[A] World Bio–diversity Day

[B] World Migratory Birds Day

[C] World Mammals Day

[D] World Aquatic Animals Day

 • World Migratory Bird Day (WMBD) is observed every year on the second Saturday of May and October, to create awareness about the need to conserve migratory birds and their habitats. It also highlights the threats faced by migratory birds, their ecological importance and the need for global cooperation to conserve them. This year the theme of the World Migratory Bird Day, celebrated on October 10 is “Birds Connect Our World”.

9. TAEF, which recently partnered with National Maritime Foundation (NMF), is a think tank based in which country?

[A] Japan

[B] Taiwan

[C] Philippines

[D] Thailand

 • Taiwan–Asia Exchange Foundation (TAEF) is a leading think tank from Taiwan and the organizer of the Yushan Forum. The think tank was seen in the news recently, as it has signed a memorandum with India’s National Maritime Foundation (NMF), to promote cooperation in the Indo–Pacific region. The agreement also aims to conduct joint research.

10. ‘Rashtriya Kamdhenu Aayog’ has been constituted under which Union Ministry?

[A] Ministry of Rural Development

[B] Ministry of Fisheries, Animal Husbandry and Dairying

[C] Ministry of Environment, Forest and Climate Change

[D] Ministry of Agriculture and Farmers Welfare

 • The Government of India has constituted the ‘Rashtriya Kamdhenu Aayog’, under the Department of Animal Husbandry and Dairying, Ministry of Fisheries, Animal Husbandry and Dairying It aims to promote animal husbandry on modern and scientific means and to preserve and improve breeds of cattle. Recently, RKA started a nation–wide campaign to celebrate Kamdhenu Deepawali Abhiyan on the occasion of Diwali festival.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *