TnpscTnpsc Current Affairs

17th & 18th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

17th & 18th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 17th & 18th September 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

September Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

17th & 18th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. முதல் உலகளாவிய கடல்சார் சுற்றுலாத்துறை தளமான, ‘The Green Fins Hub’ என்பதுடன் தொடர்புடைய நிறுவனம் எது?

அ. WEF

ஆ. IMF

இ. UNEP

ஈ. UNICEF

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. UNEP

  • ‘கிரீன் ஃபின்ஸ் ஹப்’ என்பது முதல் உலகளாவிய கடல்சார் சுற்றுலாத்துறை தளமாகும். ஐக்கிய நாடுகளின் (UN) சுற்றுச்சூழல் திட்டத்துடன் (UNEP) இணைந்து, ‘The Reef–World அறக்கட்டளை’ இக்கருவியை உருவாக்கியுள்ளது. கடல்சார் பாதுகாப்புச் சுற்றுலாத்துறையில் நிலைத்தன்மை சவால்களை கையாலுவதற்கு இந்தக் கருவி உதவுகிறது. இயக்கிகள் (operators) தங்கள் அன்றாட நடைமுறைகளில் எளிய மாற்றங்களைச் செய்யவும், அவர்களின் வருடாந்திர மேம்பாடுகளைக் கண்காணிக்கவும், அவர்களின் சமூகங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் தொடர்புகொள்ளவும் இது உதவுகிறது.

2. மூத்த டென்னிஸ் வீரரான ரோஜர் பெடரர், கீழ்க்காணும் எந்த நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்?

அ. பிரான்ஸ்

ஆ. சுவிச்சர்லாந்து

இ. செர்பியா

ஈ. இத்தாலி

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. சுவிச்சர்லாந்து

  • உலகின் தலைசிறந்த டென்னிஸ் விளையாட்டு வீரர்களுள் ஒருவராகக் கருதப்படும் ரோஜர் பெடரர், தனது 41ஆவது வயதில் தொழிற்முறை டென்னிஸில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். சுவிச்சர்லாந்தைச் சேர்ந்த முன்னாள் உலக நெ.1 வீரரான அவர், வரவிருக்கும் லேவர் கோப்பைக்கான போட்டி தனது இறுதி ATP போட்டியாக இருக்கும் என்று அறிவித்தார். ரோஜர் பெடரர், 24 ஆண்டுகளில் 1500–க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடி இருபது கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அவர், 2018இல் 36 வயதில் உலகின் மிகவயதான நெ.1 வீரரானார்.

3. ‘அரசுப்பள்ளி மாணாக்கருக்கான காலை உணவுத்திட்டத்தை’ அறிவித்துள்ள இந்தியாவின் முதல் மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. ஆந்திர பிரதேசம்

ஈ. தெலுங்கானா

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. தமிழ்நாடு

  • மதுரையில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான அரசுப்பள்ளி மாணாக்கருக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். காலை உணவுத் திட்டங்கள் கற்றல்திறன் மற்றும் பள்ளி வருகையை மேம்படுத்துவதற்கு வழிவகுத்தது என பல ஆய்வுகள் முடிவுசெய்துள்ளதாக முக ஸ்டாலின் தெரிவித்தார். திராவிட இயக்கத்தின் முன்னோடியான நீதிக்கட்சியால் கடந்த 1922ஆம் ஆண்டில் சென்னையில் வைத்து தமிழ்நாட்டின் முதல், ‘மதிய உணவு திட்டம்’ தொடங்கப்பட்டது.

4. ‘ANGAN – 2022’ என்ற மாநாட்டை ஏற்பாடு செய்த நிறுவனம் எது?

அ. இந்திய ரிசர்வ் வங்கி

ஆ. ஆற்றல் திறன் பணியகம்

இ. NITI ஆயோக்

ஈ. நடுவண் மறைமுக வரிகள் வாரியம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஆற்றல் திறன் பணியகம்

  • குறைந்த செலவில் புதிய பசுமை குடியிருப்புகள்மூலம் இயற்கையை விரிவுபடுத்துதல் என்ற பொருளுடைய அங்கன் – 2022 என்னும் மூன்றுநாள் சர்வதேச மாநாடு 2022 செப்.14 அன்று தொடங்கியது. “கட்டடங்களை கரியமில வாயு வெளியேற்றம் இல்லாமல் மாற்றுவது” என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த மாநாட்டை நடுவண் எரிசக்தி அமைச்சகம் நடத்தியது. இந்தியா – சுவிச்சர்லாந்து கட்டுமான எரிசக்தித்திறன் திட்டத்தின்கீழ், வளர்ச்சி & ஒத்துழைப்புக்கான சுவிஸ் முகமையுடன் ஒருங்கிணைந்து எரிசக்தி அமைச்சகத்தின் ஆற்றல் திறன் பணியகம் இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது.
  • மேலும் 8 தொடக்க அமர்வுகள், எட்டு மையப்பொருள் அமர்வுகளில் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல், கட்டடங்களில் எரிசக்தி திறன் ஆகியவை தொடர்பாக 15 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், கலந்துகொண்டு விவாதித்தனர்.

5. பிரதமர் பாரதிய ஜனௌஷாதி பரியோஜனாவுடன் தொடர்புடைய நடுவண் அமைச்சகம் எது?

அ. நலவாழ்வு மற்றும் குடும்பநல அமைச்சகம்

ஆ. இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம்

இ. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டமைச்சகம்

ஈ. சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம்

  • பிரதமர் பாரதிய மக்கள் மருந்தகம் திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 8,700–க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் தரமான மரபுசார் மருந்துகளும், அறுவை சிகிச்சை உபகரணங்களும் மற்ற பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது இக்கடைகளில் 1600–க்கும் மேற்பட்ட மருந்துகளும், 250 அறுவை சிகிச்சை உபகரணங்களும் கிடைக்கின்றன.
  • நீரிழிவு நோய்க்கான, ‘சிட்டாகிளிப்டின்’ மருந்தின் பல்வேறு வகையான கலவையில் பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தக திட்டத்தின்கீழ் மலிவு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ‘சிட்டாகிளிப்டின்’ அதன் வெவ்வேறு வகை கலவையில் அனைத்து மக்கள் மருந்தகங்களிலும், குறைந்த விலையில் கிடைக்கும். சிட்டாகிளிப்டின் பாஸ்பேட் ஐபி–50 மிகி 10 மாத்திரைகளைக்கொண்ட அட்டை `60–க்கு கிடைக்கிறது.

6. ‘முதலமைச்சர் உதிமான் கிலாடி உன்னயன் யோஜனா’வைத் தொடங்கிய மாநிலம் எது?

அ. உத்தர பிரதேசம்

ஆ. உத்தரகாண்ட்

இ. மேற்கு வங்கம்

ஈ. ஒடிஸா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. உத்தரகாண்ட்

  • உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, தேசிய விளையாட்டு நாளையொட்டி, ‘முதலமைச்சர் உதிமான் கிலாடி உன்னயன் யோஜனாவைத்’ தொடங்கினார். இத்திட்டத்தின்கீழ் 1950 சிறுவர்கள் மற்றும் 1950 சிறுமிகளுக்கு விளையாட்டுக்கான உதவித்தொகை வழங்கப்படும். மல்சாங் விளையாட்டும் விளையாட்டுக்கான கொள்கையில் இணைக்கப்படும் அதேவேளையில் நிதிப்பலன்களை வழங்குவற்காக முதலமைச்சர் விளையாட்டு மேம்பாட்டு நிதியம் நிறுவப்படும்.

7. உலகப்பொருளாதார மன்றம் வழிநடத்தும் நிலையான முனைவில் இணைந்துள்ள இந்திய வான்போக்குவரத்து நிறுவனம் எது?

அ. ஏர் இந்தியா

ஆ. இண்டிகோ

இ. ஸ்பைஸ்ஜெட்

ஈ. விஸ்தாரா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. இண்டிகோ

  • இந்தியாவின் விமானப்போக்குவரத்து நிறுவனமான, ‘இண்டிகோ’ உலகப்பொருளாதார மன்றத்தின் தலைமையில் ஒரு நிலையான முனைவில் இணைந்துள்ளது. இந்த விமானப் போக்குவரத்து நிறுவனம், ‘Clear Skies for Tomorrow’ என்ற இந்திய கூட்டு இயக்கத்தில் கையெழுத்திட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட, ‘Clean Skies for Tomorrow’ ஆனது உயரதிகாரிகள் மற்றும் பொது வாழ்வில் ஈடுபட்டு வரும் தலைவர்களுக்கு நிலையான விமான எரிபொருளுக்கு மாறுவதற்கான வழிமுறைகளை வழங்குகிறது.

8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற துகர் நீர்மின்னுற்பத்தித்திட்டம் அமைந்துள்ள மாநிலம்/UT எது?

அ. அஸ்ஸாம்

ஆ. ஹிமாச்சல பிரதேசம்

இ. மேற்கு வங்கம்

ஈ. தெலுங்கானா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஹிமாச்சல பிரதேசம்

  • அரசுக்குச் சொந்தமான நீர்மின்னுற்பத்தி நிறுவனமான ‘NHPC’, ஹிமாச்சல பிரதேச மாநில அரசுடன் 500 MW திறன் கொண்ட துகர் நீர்மின்னுற்பத்தித் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. முன்னதாக, 449 மெகாவாட் (MW) திறன்கொண்ட துகர் நீர்மின்னுற்பத்தித் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் NHPC மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநில அரசுக்கிடையே கையெழுத்தானது. துகர் நீர்மின்னுற்பத்தித் திட்டமானது ஓராண்டில் 1,759.85 மில்லியன் மின்சார அலகுகளை உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

9. ‘தேசிய சிறுதொழில் நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. ஆகஸ்ட்.27

ஆ. ஆகஸ்ட்.30

இ. செப்டம்பர்.27

ஈ. செப்டம்பர்.30

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஆகஸ்ட்.30

  • ஒவ்வோர் ஆண்டும், இந்தியாவில், ஆக.30 அன்று தேசிய சிறுதொழில் நாள் அனுசரிக்கப்படுகிறது. கடந்த 2001ஆம் ஆண்டு சிறுதொழில் அமைச்சகம் இந்த நாளை தேசிய சிறுதொழில் நாளாக அறிவித்தது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக சிறுதொழில்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இது இந்திய அரசாங்கத்தின் முனைவாகும்; இது நாட்டில் சிறு–குறுந்தொழில்களின் வளர்ச்சியை ஏற்படுத்தியது.

10. அண்மையில் காலஞ்சென்ற மிக்கேல் கோர்பச்சேவ், கீழ்க்காணும் எந்த நாட்டின் முன்னாள் அதிபராவார்?

அ. உக்ரைன்

ஆ. ரஷ்யா

இ. பெலாரசு

ஈ. பல்கேரியா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ரஷ்யா

  • 1985 முதல் 1991 வரை முன்னாள் சோவியத் யூனியனின் இறுதி அதிபராக இருந்த மிக்கேல் கோர்பச்சேவ், தனது 91ஆவது வயதில் காலமானார். கடந்த 1986ஆம் ஆண்டில், அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியனிடம் உள்ள அனைத்து தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளையும் ஒழிக்க கோர்பச்சேவ் முன்மொழிந்தார். அது பனிப் போரின் முடிவின் ஆரம்பமாகும். அவருக்கு கடந்த 1990ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள் 

1. CSIRஇன் பிரபல அறிவியல் இதழான, ‘விஞ்ஞான பிரகதி’ ‘இராஜ்பாஷா கீர்த்தி விருது’ பெற்றது

CSIRஇன் பிரபல அறிவியல் இதழான, ‘விஞ்ஞான பிரகதி’ புதிய வரலாற்றைப் படைத்துள்ளது. இந்த இதழ் தேசிய இராஜ்பாஷா கீர்த்தி விருதை (முதல் நிலை) பெற்றுள்ளது.

‘விஞ்ஞான பிரகதி’ இதழின் உள்ளடக்கங்கள் இளைஞர்களிடையே அறிவியல்பற்றிய ஆர்வத்தைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்தியாவின் சிறந்த பிரபலமான அறிவியல் இதழ்களில் ஒன்றான இது, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் இடையில் பிரபலமாக உள்ளது. அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சிக் கவுன்சில் (CSIR) இந்த இதழை, கடந்த 1952இல் வெளியிடத்தொடங்கியது. இது ஏழு தசாப்தங்களின் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.

2. 2022-23 நிதியாண்டிற்கான மொத்த நேரடி வரிவசூல் 30% வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது

2022-23 நிதியாண்டுக்கான நேரடி வரிவசூல் புள்ளிவிவரங்கள், 17.09.2022 வரையிலான நிலவரப்படி நிகர வசூல் `7,00,669 கோடியாகும். முந்தைய நிதியாண்டின் இதே காலப்பகுதியில் அதாவது 2021-22 நிதியாண்டின் `5,68,147 கோடியுடன் ஒப்பிடுகையில், இது 23% அதிகரிப்பைக் குறிக்கிறது. நிகர நேரடி வரிவசூல் `7,00,669 கோடியில், பெருநிறுவனங்கள் வரி `3,68,484 கோடி உள்ளடங்கியதாகும். தனிநபர் வருமான வரி பங்குப் பரிவர்த்தனை வரி உட்பட `3,30,490 கோடி.

2022-23 நிதியாண்டிற்கான நேரடி வரிகளின் மொத்த வசூல் (திரும்பப்பெறுவதற்கு முன்) `8,36,225 கோடியுடன், முந்தைய நிதியாண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் அதாவது 2021-22 நிதியாண்டில், `6,42,287 கோடியாக இருந்தது. இது 30% வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.

3. திருச்சியில், ‘பெரியார் உலகம்’ – அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்!

பெரியாரின் பிறந்தநாளையொட்டி திருச்சி மாவட்டம் சிறுகனூரில் அமையவுள்ள, ‘பெரியார் உலகத்துக்கு’ அடிக்கல் நாட்டினார். தந்தைப் பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக 17-09-2022 அன்று கொண்டாடப்படுகிறது. திருச்சி மாவட்டம் சிறுகனூரில் அமையவுள்ள, ‘பெரியார் உலகத்தில்’ பெரியார் நூலகம், ஆய்வகம் உள்ளிட்டவை அமைக்கப்படவுள்ளன.

4. SCO தலைமைப் பொறுப்பை ஏற்றது இந்தியா

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் தலைமைப்பொறுப்பை உறுப்புநாடுகள் சுழற்சிமுறையில் வகித்து வருகின்றன. நடப்பாண்டுக்கான தலைமைப்பொறுப்பை உஸ்பெகிஸ்தான் வகித்த நிலையில், 2023-ஆம் ஆண்டுக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா வெள்ளிக்கிழமை ஏற்றது. அதன்படி, அடுத்த ஆண்டுக்கான SCO மாநாட்டை இந்தியா நடத்தவுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டில் SCO கூட்டமைப்பில் நிரந்தர உறுப்பினராக இணைந்த இந்தியா, முதன்முறையாக அக்கூட்டமைப்புக்குத் தலைமையேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

5. டிசம்பரில் G20 தலைமைப்பொறுப்பை ஏற்கிறது இந்தியா: 200-க்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்த முடிவு

G20 அமைப்பின் தலைமைப்பொறுப்பை இந்தியா வரும் டிசம்பரில் ஏற்கிறது. அடுத்த ஓராண்டுக்கு இந்தப்பொறுப்பில் நீடிக்கும் இந்தியா, நாடு முழுவதும் 200-க்கும் அதிகமான G20 கூட்டங்களை நடத்த முடிவுசெய்துள்ளது.

G20 அமைப்பில் ஆர்ஜென்டினா, பிரேஸில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, மெக்ஸிகோ, ரஷியா, சவூதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) இவை 85 சதவீதமும், சர்வதேச வர்த்தகத்தில் 75 சதவீதமும், உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கும் கொண்டவை. இந்த G20 அமைப்பின் தலைமைப்பொறுப்பை வரும் டிசம்பர்.1 முதல் 2023 நவம்பர்.30 வரை ஓராண்டுக்கு இந்தியா வகிக்கவுள்ளது.

இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு விவரம்: இந்தியாவின் தலைமையின் கீழ், நாடு முழுவதும் 200-க்கும் அதிகமான G20 கூட்டங்கள் நடைபெறவுள்ளன. தில்லியில் அரசுகளின் தலைவர்கள் அளவிலான G20 தலைவர்கள் மாநாடு தில்லியில் அடுத்த ஆண்டு செப்.9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

இந்தியாவின் தலைமையின்கீழ் முதல்முறையாக, ‘ட்ரொய்கா’ என்ற முக்கூட்டமைப்பு ஏற்படுத்தப்படவுள்ளது. இதில் இந்தியா, இந்தோனேசியா, பிரேஸில் ஆகிய வளரும் நாடுகள் இடம்பெறுகின்றன. இதன் வாயிலாக வளரும் பொருளாதார நாடுகளுக்கு முதல்முறையாக அங்கீகாரம் அளிக்கப்படுகிறது.

வழக்கமான சர்வதேச அமைப்புகளான ஐநா., சர்வதேச நிதியம், உலக வங்கி, உலக சுகாதார அமைப்பு, உலக வர்த்தக அமைப்பு, உலக தொழிலாளர் அமைப்பு ஆகியவற்றைப்போல G20 கூட்டங்களில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்குமாறு வங்கதேசம், எகிப்து, மோரீஷஸ், நெதர்லாந்து, நைஜீரியா, ஓமன், சிங்கப்பூர், ஸ்பெயின், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு இந்தியா அழைப்பு விடுக்கும். இதுமட்டுமன்றி சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பு, ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றுக்கும் அழைப்புவிடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6. பிரணவ் ஆனந்த் இந்தியாவின் 76-ஆவது கிராண்ட்மாஸ்டர்

கர்நாடக மாநிலம், பெங்களூரைச்சேர்ந்த இளம் செஸ் போட்டியாளர் பிரணவ் ஆனந்த் (15) இந்தியாவின் 76-ஆவது கிராண்ட்மாஸ்டர் ஆகினார். ருமேனியாவில் தற்போது நடைபெற்றுவரும் உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின்மூலம் 2,500 ELO மார்க்கை அவர் எட்டியதை அடுத்து, கிராண்ட்மாஸ்டராகும் தகுதியைப் பூர்த்தி செய்தார். ஒரு செஸ் வீரர் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறுவதற்கு, 2,500 ELO புள்ளிகளை எட்டுவதுடன், தலா 9 சுற்றுகள்கொண்ட 3 போட்டிகளில், இருமுறை சாதகமான முடிவுகளைப் (நார்ம்) பெற்றிருக்க வேண்டும். இதில் தேவையான ‘நார்ம்’களை கடந்த ஜூலையில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற பியெல் செஸ் போட்டியில் பூர்த்திசெய்த பிரணவ், ELO புள்ளிகள் கணக்கை இப்போட்டியில் எட்டியிருக்கிறார்.

7. பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

பள்ளிப்பருவத்திலேயே மாணவர்களை புத்தாக்க சிந்தனை உடையவர்களாக உருவாக்கும், பள்ளிப்புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மதுரையில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற, ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ என்ற தென்மண்டல மாநாடு நடைபெற்றது. இதில் பல்வேறு புதிய திட்டங்களை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம்: தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமும், பள்ளிக்கல்வித் துறையும், UNICEF நிறுவனத்துடன் இணைந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்தவுள்ளன. நிகழ் ஆண்டில் முதற்கட்டமாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் அனைத்து மேல்நிலைப்பள்ளிகளில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் பயிலும் 1.56 இலட்சம் மாணவர்களுக்கும், 3,120 ஆசிரியர்களுக்கும் தொழில் முனைதல் பற்றிய விழிப்புணர்வு அளிக்கப்படும்.

மாணவர்களிடையே புத்தாக்கச் சிந்தனையை ஊக்குவிக்கும் வகையில், சிறந்த 40 புத்தாக்கச் சிந்தனைகளுக்கு `25,000 முதல் `1 இலட்சம் வரை ரொக்கப்பரிசு வழங்கப்படும்.

தொழில்முனைவோருக்கு விருதுகள்: 2021-22ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான சிறந்த தொழில் முனைவோருக்கான விருதுகளை முதல்வர் முக ஸ்டாலின் வழங்கினார்.

சிறந்த தொழில்முனைவோர் விருது (தூத்துக்குடி கல்பகா கெமிக்கல்ஸ்), வேளாண் சார்ந்த தொழில் விருது (திருப்பத்தூர் மாவட்டம் ப்ரெஸ்ரா பிக்ல்ஸ்), தரம் மற்றும் ஏற்றுமதி விருது (தூத்துக்குடி இரமேஷ் பிளவர்ஸ்), சிறந்த மகளிர் தொழில்முனைவோர் விருது (செங்கல்பட்டு மாவட்டம் ஐசிஏ ஸ்பெசாலிட்டிஸ்) சிறப்புப் பிரிவினருக்கான விருது (புதுக்கோட்டை மாவட்டம் பிரபு இண்டஸ்ட்ரியல்) ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிக கடன் வழங்கிய முதல் மூன்று வங்கிகளான முறையே, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பரோடா வங்கி ஆகிய வங்கிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

17th & 18th September 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. ‘The Green Fins Hub’, the first–ever global marine tourism industry platform, is associated with which institution?

A. WEF

B. IMF

C. UNEP

D. UNICEF

Answer & Explanation

Answer: C. UNEP

  • The Green Fins Hub is the first–ever global marine tourism industry platform. The tool has been developed by The Reef–World Foundation in partnership with the UN Environment Programme (UNEP). The tool helps to overcome sustainability challenges in the marine conservation tourism industry.  It helps operators to make simple changes to their daily practices, keep track of their annual improvements and communicate with their communities and customers.

2. Roger Federer, the veteran Tennis player, represents which country?

A. France

B. Switzerland

C. Serbia

D. Italy

Answer & Explanation

Answer: B. Switzerland

  • Roger Federer, regarded as one of the greatest Tennis players in the world, announced that he is retiring from professional tennis at age 41. The former World No. 1 from Switzerland announced that the upcoming edition of the Laver Cup will be his final ATP tournament. Federer has played more than 1500 matches over 24 years, winning 20 Grand Slam titles. He became the oldest World No. 1 at the age of 36 in 2018.

3. Which state has announced India’s first ‘Breakfast scheme for government school students’?

A. Tamil Nadu

B. Kerala

C. Andhra Pradesh

D. Telangana

Answer & Explanation

Answer: A. Tamil Nadu

  • Tamil Nadu Chief Minister M K Stalin launched the breakfast scheme for government school students from class 1 to 5 in Madurai. The Chief Minister announced that several studies have concluded that breakfast programmes led to improvement in learning skills and school attendance. The first–ever noon meal scheme was launched in 1922 in Chennai by the Justice Party, the precursor to the Dravidian movement.

4. Which institution organised the ‘ANGAN 2022’ Conference?

A. Reserve Bank of India

B. Bureau of Energy Efficiency

C. NITI Aayog

D. Central Board of Indirect Taxes

Answer & Explanation

Answer: B. Bureau of Energy Efficiency

  • The second edition of the international conference ANGAN 2022 (Augmenting Nature by Green Affordable New–habitat) was recently held on the title “Making the Zero–Carbon Transition in Buildings”. ANGAN 2.0 is being organised by the Bureau of Energy Efficiency (BEE), Ministry of Power, in collaboration with Swiss Agency for Development & Cooperation (SDC) under the Indo–Swiss Building Energy Efficiency Project (BEEP). The Conference had discussions related to building energy efficiency and reducing carbon emission from buildings.

5. Pradhan Mantri Bhartiya Janaushadhi Pariyojana, is associated with which Union Ministry?

A. Ministry of Health and Family Welfare

B. Ministry of Chemicals and Fertilisers

C. Ministry of Women and Child Development

D. Ministry of Law and Justice

Answer & Explanation

Answer: B. Ministry of Chemicals and Fertilisers

  • Under the Pradhan Mantri Bhartiya Janaushadhi Pariyojana, more than 8,700 Pradhan Mantri Bhartiya Janaushadhi Kendras have been opened across the country. They sell quality generic medicines, surgical equipment in affordable prices. It is implemented by the Ministry of Chemicals and Fertilisers said in a statement. The government recently launched diabetes drug Sitagliptin and its combinations at rates as low as Rs 60 per pack of ten, at Janaushadhi Kendras.

6. Which state launched the, ‘CM Udyman Khiladi Unnayan Yojana’?

A. Uttar Pradesh

B. Uttarakhand

C. West Bengal

D. Odisha

Answer & Explanation

Answer: B. Uttarakhand

  • Uttarakhand Chief Minister Pushkar Singh Dhami launched ‘CM Udyman Khiladi Unnayan Yojana’, on the occasion of National Sports Day. Under the scheme, 1950 boys and 1950 girls will be given sports scholarships. Chief Minister Sports Development Fund will be established to give financial benefits while Malchang game will also be included in the game policy.

7. Which Indian air carrier has joined a sustainable initiative spearheaded by the World Economic Forum?

A. Air India

B. IndiGo

C. Spicejet

D. Vistara

Answer & Explanation

Answer: B. IndiGo 

  • India’s air carrier IndiGo has joined a sustainable initiative spearheaded by the World Economic Forum (WEF). The airline has become a signatory to the ‘Clear Skies for Tomorrow’, India Coalition campaign. The ‘Clean Skies for Tomorrow’ launched in 2019, provides a mechanism for top executives and public leaders, for transition to sustainable aviation fuels.

8. Dugar Hydroelectric Project, which was seen in the news, is located in which state/UT?

A. Assam

B. Himachal Pradesh

C. West Bengal

D. Telangana

Answer & Explanation

Answer: B. Himachal Pradesh

  • State–owned hydro power major NHPC has signed an agreement with the Himachal Pradesh government for the implementation of 500 MW Dugar Hydroelectric Project. Earlier, a MoU for 449 MW Dugar Hydro Electric Project was signed between NHPC and government of Himachal Pradesh. Dugar Hydroelectric Project is expected to generate 1,759.85 million units in a year.

9. When is the ‘National Small Industry Day’ is observed?

A. August.27

B. August.30

C. September.27

D. September.30

Answer & Explanation

Answer: B. August.30

  • Every year, the National Small Industry Day is observed on August 30 in India. The Ministry of Small–Scale Industries declared this day as National Small Industry Day in 2001. The day is celebrated to encourage the development of small–scale businesses for the economic development of the country. This was an initiative by the Government of India which made for the growth of small–scale industries in the country.

10. Mikhail Gorbachev, who passed away recently, was a former President of which country?

A. Ukraine

B. Russia

C. Belarus

D. Bulgaria

Answer & Explanation

Answer: B. Russia

  • Mikhail Gorbachev, the last leader of the former Soviet Union from 1985 until 1991, has passed away at the age of 91. In 1986, Gorbachev made a historic proposal to eliminate all long–range missiles held by the United States and the Soviet Union. It was the beginning of the end of the Cold War. He was also awarded the Nobel Peace Prize in 1990.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!