Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

17th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

17th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 17th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

August Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

17th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. 2020 டோக்கியோ ஒலிம்பிக்கின் பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு எது?

அ) அமெரிக்கா 

ஆ) சீனா

இ) ஜப்பான்

ஈ) இந்தியா

  • 2020 டோக்கியோ விளையாட்டுக்கள், ஆக.8 அன்று நிறைவுற்றதாக பன்னாட்டு ஒலிம்பிக் குழுமத்தின் தலைவர் தாமஸ் பாக் அறிவித்தார். அமெரிக்கா, 39 தங்கங்கள் வென்று பதக்கப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. சீனாவை அமெரிக்காவைவிட ஒரு தங்கம் குறைவாகப் பெற்று இரண்டாமிடம் பெற்றது.
  • போட்டியை நடத்திய ஜப்பான் 27 தங்கங்களுடன் மூன்றாமிடத்தையும், கிரேட் பிரிட்டன் 22 தங்கப்பதக்கங்களுடன் நான்காமிடத்தையும் 20 தங்கங்களுடன் ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி ஐந்தாமிடத்தையும் பிடித்தது. இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலத்துடன் 48ஆவது இடத்தைப் பிடித்தது.

2. ஆண்டுதோறும் சர்வதேச பழங்குடிகள் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ) ஆகஸ்ட் 09 

ஆ) ஆகஸ்ட் 10

இ) ஆகஸ்ட் 11

ஈ) ஆகஸ்ட் 12

  • சர்வதேச பழங்குடிகளின் நாளானது ஆண்டுதோறும் ஆகஸ்ட்.9 அன்று கொண்டாடப்படுகிறது. “Leaving no one behind: Indigenous peoples and the call for a new social contract” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும். உலகம் முழுவதும் 90 நாடுகளில், 476 மில்லியனுக்கும் அதிகமான பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். இது, உலக மக்கள்தொகையில் 6.2% ஆகும். பழங்குடி மக்கள் தனித்துவமான கலாசாரம், மரபுகள் மற்றும் மொழிகள் ஆகியவற்றின் பரந்த பன்முகத் தன்மையைக் கொண்டவர்கள்.

3. சமீபத்தில், ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் 79ஆவது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. மும்பையில் எந்த இடத்திலிருந்து கொண்டு ‘மகாத்மா’ காந்தி வெள்ளையனை விரட்டுவதற்காக “செய் அல்லது செத்துமடி” என முழக்கமிட்டார்?

அ) ஆகஸ்ட் கிரந்தி மைதானம் 

ஆ) ராஜாபாய் மணிக்கூண்டு

இ) அமைதி கோபுரம்

ஈ) மணி பவன்

  • ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் 79ஆம் ஆண்டுவிழா 2021 ஆகஸ்ட்.8 அன்று அனுசரிக்கப்பட்டது. 1942ஆம் ஆண்டு இதே நாளன்று, ‘தேசத்தந்தை’ ‘மகாத்மா’ காந்தி, பிரிட்டிஷாரை நாட்டைவிட்டு விரட்டும் நோக்கில் அனைத்து இந்தியர்களை நோக்கியும் “செய் அல்லது செத்து மடி” என்று முழக்கமிட்டார். மும்பையிலுள்ள ஆகஸ்ட் கிரந்தி மைதானம் (கோவாலியா) என்ற இடத்திலிருந்து இந்த இயக்கம் தொடங்கியது. ஆண்டுதோறும் ஆகஸ்ட் கிரந்தி நாளாக இது கடைப்பிடிக்கப்படுகிறது.

4. ஒலிம்பிக் தடகளப்போட்டிகளில் இதுவரை எத்தனை பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது?

அ) 1 

ஆ) 2

இ) 3

ஈ) 10

  • நீரஜ் சோப்ரா, ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் 87.58 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தடகளத்தில் இந்தியாவுக்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க தங்கப்பதக்கத்தை வென்றுதந்தார். ஒலிம்பிக் தடகளத்தில், இது, இந்தியா வெல்லும் முதல் தங்கப்பதக்கமாகும்.

5. நாட்டிலுள்ள எத்தனை காவல்துறை அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சரின் சிறந்த புலனாய்வு விருது வழங்கப்பட்டுள்ளது?

அ) 151

ஆ) 152 

இ) 155

ஈ) 145

  • 2021ஆம் ஆண்டுக்கான, “சிறந்த புலனாய்வுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கம்”, அகில இந்திய அளவில் 152 காவல்துறை அலுவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வில் சிறந்த செயல்திறனை ஊக்குவிக்கவும், புலனாய்வில் சிறப்பாக செயல்படும் அதிகாரிகளுக்கு அங்கீகாரம் அளிக்கவுமாக, கடந்த 2018ஆம் ஆண்டில் இவ்விருது நிறுவப்பட்டது. இந்த ஆண்டுக்கான (2021) விருதாளர்களுள் தமிழ்நாட்டைச் சேர்ந்த நால்வர் உட்பட, 28 பேர் மகளிர் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

6. நுண்-உணவு செயலாக்க நிறுவனங்கள் திட்டத்தின் PM முறைப்படுத்தலின்கீழ் 7,500 SHG உறுப்பினர்களுக்கு தொடக்க நிதியாக பிரதமரால் அறிவிக்கப்பட்ட நிதி எவ்வளவு?

அ) `35 கோடி

ஆ) `45 கோடி

இ) `15 கோடி

ஈ) `25 கோடி 

  • 2021 ஆகஸ்ட்.12 அன்று பிரதமர் நரேந்திர மோடி, உணவு பதப்படுத்தும் தொழிற்துறை அமைச்சகத்தின் PMFME (PM Formalisation of Micro Food Processing Enterprises) திட்டத்தின்கீழ் 7,500 SHG உறுப்பினர்களுக்கு `25 கோடி மற்றும் 75 FPO’களுக்கு `4.13 கோடி நிதியாக வழங்கினார். இந்த SHG’கள் தீனதயாள் அந்தியோதயா யோஜனா-தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் (DAY-NRLM) ஊக்குவிக்கப்படுகின்றன.

7. மத்திய & மாநில அரசுகள் மற்றும் தனியார் துறை பிரிவுகளின் துறைசார்ந்த நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் எத்தனை பணியாளர்களுக்கு பிரதம அமைச்சரின் ஷ்ராம் விருதுகள் வழங்கப்படும்?

அ) 67

ஆ) 75

இ) 59

ஈ) 69 

  • 2021 ஆக.12 அன்று, இந்திய அரசு, 2018ஆம் ஆண்டிற்கான பிரதமரின் ஷ்ராம் விருதுகளை அறிவித்தது. இந்த விருதுகள் மத்திய மற்றும் மாநில அரசுகள் மற்றும் தனியார் துறைகளின் துறைசார்ந்த மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் 69 தொழிலாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது. அவர்களின் தனித்துவமான செயல்திறனை அங்கீகரிக்கும் வகையில் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.
  • இந்த ஆண்டு (2021) பிரதமரின் ஷ்ராம் விருதுகள் மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. அவை, ஷ்ராம் பூஷன் விருதுகள் (`1,00,000/- ரொக்கப் பரிசு), ஷ்ராம் வீர்/ஷ்ராம் வீராங்கனா விருதுகள் (`60,000/- ரொக்கப் பரிசு) மற்றும் ஷ்ராம் ஸ்ரீ/ஷ்ராம் தேவிவிருதுகள் (`40,000/- ரொக்கப் பரிசு) ஆகும்.

8. 2021 CONCACAF தங்கக்கோப்பையை வென்ற அணி எது?

அ) அமெரிக்கா 

ஆ) மெக்ஸிகோ

இ) கோஸ்ட்டா ரிக்கா

ஈ) கத்தார்

  • US ஆடவர் தேசிய அணியானது இறுதிப்போட்டியில் மெக்ஸிகோவை தோற்கடித்து 16ஆவது CONCACAF தங்கக்கோப்பையை வென்றது. இறுதிப்போட்டி, அமெரிக்காவின் நெவாடாவின் லாஸ் வேகாஸில் உள்ள அலெஜியண்ட் அரங்கில் நடந்தது. இந்தக் கோப்பை, அமெரிக்கா வென்ற 7ஆவது தங்கக்கோப்பையாகும். ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டி, CONCACAF’ஆல் நடத்தப்படுகிறது.

9. ஆகஸ்ட் மாதத்தின் எந்தத் தேதி, உலக சிங்கங்கள் நாளாக கொண்டாடப்படுகிறது?

அ) ஆகஸ்ட் 09 

ஆ) ஆகஸ்ட் 10

இ) ஆகஸ்ட் 11

ஈ) ஆகஸ்ட் 12

  • சிங்கங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஆக.10 அன்று உலக சிங்கங்கள் நாள் கொண்டாடப்படுகிறது. சிங்கத்தின் பாதுகாப்பிற்கான ஆதரவை திரட்டவும் இந்த நாள் முயற்சி செய்கிறது. விலங்குகளுக்கான உலகளாவிய நிதியத்தின்படி (WWF), சிங்கங்கள், புல்வெளிகள் மற்றும் சமவெளிகளில் மட்டுமே வாழ்கிறது.
  • சசன்-கிர் தேசியப்பூங்காவின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் கம்பீரமான ஆசிய சிங்கத்தின் தாயகம் இந்தியா ஆகும். WWF’இன் கூற்றுப்படி, சிங்கங்கள் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பா முழுவதும் காணப்பட்டன. ஆனால் சமீப காலமாக, அவற்றின் எண்ணிக்கை இந்தக் கண்டங்களில் குறைந்து வருகிறது. சிங்கங்களைப் பாதுகாப்பதற்கான முன்னெடுப்பு, 2013’இல் தொடங்கப்பட்டது. முதல் உலக சிங்கங்கள் நாள் 2013’இல் அனுசரிக்கப்பட்டது.

10. எஞ்சிய ஆசிய சிங்கங்கள் காணப்படுகிற தேசியப்பூங்கா எது?

அ) துத்வா தேசியப்பூங்கா

ஆ) கசிரங்கா தேசியப்பூங்கா

இ) கிர் தேசியப்பூங்கா 

ஈ) கன்ஹா புலிகள் காப்பகம்

  • எஞ்சிய ஆசிய சிங்கங்கள் குஜராத் மாநிலத்தின் கிர் தேசியப்பூங்காவில் காணப்படுகின்றன. 2020ஆம் ஆண்டில், குஜராத்தின் கிர் காடுகளில் வாழும் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை சுமார் 29% அதிகரித்தது. சிங்கங்கள் பரவி வாழும் பகுதியும் 36% அதிகரித்துள்ளது.
  • கிர் தேசியப் பூங்கா மற்றும் வனவுயிரி சரணாலயமானது சசன்-கிர் என்றும் அழைக்கப்படுகிறது. இது, இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தலலா கிர் அருகிலுள்ள ஒரு காடு, தேசியப்பூங்கா மற்றும் வனவிலங்கு சரணாலயமாகும். கடந்த 1965’இல் இந்தத் தேசியப்பூங்கா நிறுவப்பட்டது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. சென்னை உள்பட 10 இடங்களில் கைத்தறி வடிவமைப்பு வள மையம்: மத்திய அரசு அமைக்கிறது

கைத்தறி துறைக்கு பெரியளவில் ஊக்கமளிக்கும் வகையில் பல்வேறு புதிய நடவடிக்கைகளை ஜவுளி அமைச்சகம் எடுத்து வருகிறது. இதன்படி, சென்னை உள்பட 10 இடங்களில் கைத்தறி வடிவமைப்பு வள மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

கைத்தறி துறையில் வடிவமைப்பு சாா்ந்த உயா்சிறப்பு நிலையை எட்டும் வகையிலும், நெசவாளா்கள், ஏற்றுமதியாளா்கள், உற்பத்தியாளா்கள் மற்றும் வடிவமைப்பாளா்களுக்கு மாதிரி, பொருள் மேம்பாடு மற்றும் உருவாக்கத்துக்கான வடிவமைப்பு களஞ்சியங்களை வழங்கும் நோக்கத்திலும் சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், கண்ணூா், இந்தூா், நாகபுரி, மீரட், பாகல்பூா் மற்றும் பானிப்பட் ஆகிய இடங்களில் உள்ள நெசவாளா் சேவை மையங்களில் மேலும் 10 கைத்தறி வடிவமைப்பு வள மையங்களை மத்திய தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப நிறுவனம் (நிஃப்ட்) அமைக்கவுள்ளது.

ஜவுளி அமைச்சகத்தின் அமைப்பாக நிஃப்ட் விளங்குவதாலும், நவீன நாகரிகம் மற்றும் வடிவமைப்பு உள்ளிட்டவற்றில் நிஃப்ட்டின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி கைத்தறி துறைக்கு பெரியளவில் சந்தை இணைப்புகளை வழங்க முடியுமென்பதாலும், இப்பணிக்காக நிஃப்ட்டை அமைச்சகம் தோ்ந்தெடுத்துள்ளது.

நெசவாளா் சேவை மையங்களில் நிஃப்ட் படிப்படியாக அமைக்கவிருக்கும் கைத்தறி வடிவமைப்பு வள மையங்களின் மூலம் நெசவாளா்கள், ஏற்றுமதியாளா்கள், உற்பத்தியாளா்கள் மற்றும் வடிவமைப்பாளா்களுக்கு வடிவமைப்பு மற்றும் வளங்கள் குறித்த விரிவான தகவல்கள் கிடைக்கும். தில்லி, மும்பை, ஆமதாபாத், புவனேசுவரம், குவாஹாட்டி, ஜெய்ப்பூா் மற்றும் வாரணாசியில் உள்ள நெசவாளா் சேவை மையங்களில் கைத்தறி வடிவமைப்பு வள மையங்கள் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன. காஞ்சிபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள எட்டாவது கைத்தறி வடிவமைப்பு வள மையத்தை தேசிய கைத்தறி தினமான கடந்த 7 -ஆம் தேதி திறந்துவைக்கப்பட்டது.

2. தூத்துக்குடி வஉசி துறைமுகம் நிலக்கரி கையாள்வதில் சாதனை:

தூத்துக்குடி வஉசி துறைமுக பொறுப்புக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வஉசி துறைமுகத்தின் கப்பல் சரக்குதளம் 9-ல் கடந்த 15.08.2021 அன்று எம்.வி. ஸ்டார் லாரா என்ற கப்பலில் இருந்து 57,090 டன் நிலக்கரியை 24 மணி நேரத்தில் கையாண்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இச்சாதனையானது இதற்கு முன்பு கடந்த 27.10.2020 அன்று கப்பல் சரக்கு தளம் 9-ல் எம்.வி. ஓசன் ட்ரீம் என்ற கப்பலில் இருந்து 24 மணி நேரத்தில் கையாளப்பட்ட அளவான 56,785 டன் நிலக்கரியை விட அதிகம்.

மார்செல் தீவு கொடியுடன் வந்துள்ள எம்.வி. ஸ்டார் லாரா என்ற பனமாக்ஸ் வகை கப்பல் 14.20 மீட்டர் மிதவை ஆழம் கொண்டது. இந்தோனேசியா நாட்டில் உள்ள முரா புரோவ் என்ற துறைமுகத்தில் இருந்து 77,675 டன் நிலக்கரியை ஏற்றிக்கொண்டு வஉசி துறைமுகம் வந்துள்ளது. இக்கப்பலில் வந்த 77,675 டன் நிலக்கரியும் இந்தியா கோக் & பவர் பிரைவேட் லிட் நிறுவனத்துக்காக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. புதிய சாதனை படைக்க காரணமாக இருந்த அனைத்து ஊழியர்களுக்கும் துறைமுக பொறுப்புக் கழக தலைவர் தா கி ராமச்சந்திரன் பாராட்டு தெரிவித்தார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. இந்தியாவுடன் புதுவை இணைந்த நாள்: கீழூா் நினைவிடத்தில் மரியாதை

பிரான்ஸ் ஆதிக்கத்திலிருந்த புதுவை மாநிலம், கடந்த 1962 ஆகஸ்ட்.16 ஆம் தேதி இந்தியாவுடன் அதிகாரப்பூா்வமாக இணைக்கப்பட்டது. முன்னதாக, புதுச்சேரி அருகே உள்ள கீழூா் பகுதியில் பொதுமக்கள் முன்னிலையில், தலைவா்கள் வாக்கெடுப்பை நடத்தி, இதற்கான முடிவை எடுத்தனா். இதையடுத்து, தாயகத்துடன் புதுவை சட்டப்பூா்வமாக இணைந்தது. இந்த நாளில், கீழூரில் வாக்கெடுப்பு நடைபெற்ற இடத்தில் புதுவை அரசு சாா்பில் ஆண்டுதோறும் மரியாதை செலுத்தப்படுகிறது.

4. நரிக்குறவா் மொழி உள்பட பத்து மொழிகளில் வெளியாகிறது திருக்குறள்

நரிக்குறவா் இன மக்கள் பேசும் வாக்ரிபோலி மொழி உள்பட பத்து மொழிகளில் திருக்குறள் மொழிபெயா்ப்புகள் வெளியிடப்படவுள்ளதாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனத்தின் இயக்குநா் பேராசிரியா் இரா.சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மத்திய கல்வி அமைச்சகம், திருக்குறளை இந்திய அரசமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள 21 மொழிகளில் மொழிபெயா்க்கும் திட்டத்தைச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. இந்த நிறுவனம், ஏற்கெனவே பஞ்சாபி (2012), மணிப்புரி (2012), தெலுங்கு (2014), கன்னடம் (2014), குஜராத்தி (2015) ஆகிய மொழிகளில் திருக்குறள் மொழிபெயா்ப்புகளை வெளியிட்டுள்ளது. மேலும் திருக்குறள் ஆங்கில மொழிபெயா்ப்புகளின் தொகுப்புகளையும் மூன்று பாகங்களாக வெளியிட்டுள்ளது.

இதன் தொடா்ச்சியாக வரும் அக்டோபா் மாதம் மலையாளம், மராத்தி, ஒடியா, ஹிந்தி, நேபாளி, உருது, அரபி, பாரசீகம், வாக்ரிபோலி (நரிக்குறவா் மொழி), படுகு ஆகிய பத்து மொழிகளில் திருக்குறள் மொழிபெயா்ப்புகள் வெளியிடப்படவுள்ளன. இது தவிர மொழிபெயா்ப்புத் திட்டத்தின் மூலமாகவும், குறுந்திட்ட ஆய்வுகள் மூலமாகவும் வரப் பெற்றுள்ள ஆய்வுகள் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் நூலாக்கம் பெற்று வருகின்றன. அந்த வகையில் உ.வே.சாமிநாதையா் நாட்குறிப்பு, உ.வே.சாமிநாதையா் அருஞ்சொல் அகராதியும் சங்கநூற் சொல்லடைவும், நற்றிணை (கன்னட மொழிபெயா்ப்பு), தொல்காப்பியம் (ஹிந்தி மொழிபெயா்ப்பு), பதிற்றுப்பத்து (கன்னட மொழிபெயா்ப்பு) ஆகியவை உள்ளிட்ட 20 நூல்கள் செப்டம்பா் மாதம் வெளியிடப்படவுள்ளன என அதில் தெரிவித்துள்ளாா்.

1. Which country has topped the medals tally in Tokyo 2020 Olympics?

A) USA 

B) China

C) Japan

D) India

  • The Tokyo 2020 Games were declared closed by IOC chief Thomas Bach on August 8, 2021. The Olympic flag was passed to Paris mayor Anne Hidalgo for the 2024 Games at the Tokyo closing ceremony. The United States topped the tally with 39 gold medals, just one ahead of China.
  • Host Japan finished third with 27 golds followed by Great Britain with 22 and the Russian Olympic Committee, the team for Russian athletes after their country was banned for systematic doping, were fifth with 20. India finished 48th with 1 gold, 2 silver and 4 bronze medals.

2. When was the International Day of Indigenous Peoples celebrated every year?

A) August 09 

B) August 10

C) August 11

D) August 12

  • The International Day of Indigenous Peoples was celebrated on August 9, 2021 with its theme: “Leaving no one behind: Indigenous peoples and the call for a new social contract”.
  • There are over 476 million indigenous peoples living in 90 countries across the world, accounting for 6.2% of the global population. Indigenous peoples are the holders of a vast diversity of unique cultures, traditions, languages and knowledge systems.

3. Recently, 79th anniversary of Quit India movement was observed. From which place in Mumbai, Mahatma Gandhi gave the call of Do or Die to drive away Britishers?

A) August Kranti Maidan 

B) Rajabai Clock Tower

C) Tower of Silence

D) Mani Bhavan

  • The 79th anniversary of Quit India movement was observed on August 8, 2021. On this day in 1942, father of the nation Mahatma Gandhi gave the clarion call of Do or Die to all Indians to drive away Britishers from the country. The movement had begun from Gowalia Tank in Mumbai. The day is observed as August Kranti Day every year.

4. How many medals so far India has won in Athletics at the Olympics?

A) 1 

B) 2

C) 3

D) 4

  • Neeraj Chopra, who won the historic gold for India in athletics by throwing 87.58m at the men’s Javelin Throw final. Not only is this Independent India’s first gold in Athletics at the Olympics but also the only medal ever by an Indian from Athletics.

5. How many police officers in the country have been conferred with the Home Minister’s Medal for Excellence in Investigation award?

A) 151

B) 152 

C) 155

D) 145

  • As many as 152 police officers in the country have been conferred with the ‘Union Home Minister’s Medal for Excellence in Investigation’ for 2021 for their high professional standards of investigation of crime. The Union Home Ministry, in a statement on August 12, 2021, said the awardees include 28 women police officials from across the country. This medal was constituted in 2018 with the objective to promote high professional standards of investigation of crime and to recognise such excellence in investigation by investigating officers.

6. What amount has been released by the PM as seed money for 7,500 SHG members under PM Formalisation of Micro Food Processing Enterprises scheme?

A) Rs 35 crore

B) Rs 45 crore

C) Rs 15 crore

D) Rs 25 crore 

  • Prime Minister Narendra Modi on August 12, 2021 released Rs 25 crore as seed money for 7,500 SHG members under the PMFME (PM Formalisation of Micro Food Processing Enterprises) scheme of the Ministry of Food Processing Industries and Rs 4.13 crore as funds to 75 FPOs. These SHGs are promoted under the Deendayal Antyodaya Yojana–National Rural Livelihoods Mission (DAY–NRLM).

7. How many workers, employed in the Departmental Undertakings & Public Sector Undertakings of the Central and State Governments and Private Sector Units, will be awarded the Prime Minister’s Shram Awards?

A) 67

B) 75

C) 59

D) 69 

  • On August 12, 2021, the Government of India announced the Prime Minister’s Shram Awards (PMSA) for the year 2018. These awards are to be awarded to 69 workers employed in the Departmental Undertakings & Public Sector Undertakings of the Central and State Governments and Private Sector Units employing 500 or more workers in recognition of their distinguished performance.
  • This year the Prime Minister’s Shram Awards are given in three categories namely Shram Bhushan Awards which carry a cash prize of Rs.1,00,000/– each, Shram Vir/Shram Veerangana Awards which carry a cash prize of Rs. 60,000/– each and Shram Shree/Shram Devi Awards which carry a cash prize of Rs.40,000/– each.

8. Which team has won CONCACAF Gold Cup 2021?

A) USA 

B) Mexico

C) Costa Rica

D) Qatar

  • The United States Men’s National Team (USMNT) has won the CONCACAF Gold Cup 2021 by defeating Mexico in the finals. The final was held in the Allegiant Stadium, Las Vegas, Nevada, USA. This 2021 championship win marks the 7th Gold Cup title won by US. This year’s tournament was the 16th edition of this biennial tournament which is organized by CONCACAF.

9. Which date of August is celebrated as World Lion Day?

A) August 09

B) August 10 

C) August 11

D) August 12

  • World Lion Day is celebrated on August 10 every year in a bid to raise awareness on lions. The day also seeks to mobilise support for protection and conservation of Lion.
  • As per World Wide Fund for animals (WWF), it only lives in grasslands and plains. India is home to majestic Asiatic Lion, who inhabit protected territory of Sasan–Gir National Park. According to WWF, lions were once found throughout Africa, Asia and Europe. But over the years, their numbers have reduced across these continents. Initiative to protect lion started in 2013 so the first World Lion Day was observed in 2013 itself.

10. In which national park, last remaining population of the Asiatic Lions are found?

A) Dudhwa National Park

B) Kaziranga National Park

C) Gir National Park 

D) Kanha Tiger Reserve

  • Last remaining population of the Asiatic Lions are found in Gir National Park of Gujarat. In 2020, population of Asiatic lions has surged by almost 29% in Gujarat’s Gir forests. The distribution area of lions has also increased by 36%. Gir National Park and Wildlife Sanctuary, also known as Sasan Gir, is a forest, national park, and wildlife sanctuary near Talala Gir in Gujarat, India. This national park was established in 1965.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!