TnpscTnpsc Current Affairs

17th August 2022 Tnpsc Current Affairs in Tamil & English

17th August 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 17th August 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

August Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

17th August 2022 Tnpsc Current Affairs in Tamil

1. COVID ஒமைக்ரான் திரிபுக்கான தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த முதல் நாடு எது?

அ. இந்தியா

ஆ. அமெரிக்கா

இ. ஐக்கிய பேரரசு (UK) 

ஈ. இத்தாலி

  • ஒமைக்ரான் திரிபுக்கு சிகிச்சையளிக்கும் COVID தடுப்பூசியை அங்கீகரிக்கும் முதல் நாடாக UK மாறியுள்ளது. UKஇன் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை ஆணையமும், இதற்கு ஒப்புதல் அளித்த உலகின் முதல் நிறுவனமாக ஆனது. இத்தடுப்பூசி 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர்க்கு பயன்படுத்த அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது கொரோனா வைரஸின் அசல் திரிபு மற்றும் ஒமைக்ரான் BA.1 ஆகிய இரண்டனையும் குறிவைக்கிறது.

2. ‘முதலமைச்சர் அனுபிரதி பயிற்சி யோஜனா’வைச் செயல்படுத்துகிற இந்திய மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. பஞ்சாப்

ஆ. இராஜஸ்தான் 

இ. குஜராத்

ஈ. கர்நாடகா

  • இராஜஸ்தான் மாநில அரசாங்கமானது 2021–22இல் ‘முதல்வர் அனுபிரதி பயிற்சி யோஜனா’ அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின்கீழ், அத்தகைய மாணாக்கர்களுக்கு புகழ்பெற்ற பயிற்சி நிறுவனங்களின்மூலம் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டில், இராஜஸ்தான் மாநில அரசு, `17.15 கோடி ஒதுக்கீடு செய்து, இத்திட்டத்தின் கீழ் உள்ள இடங்களின் எண்ணிக்கையை 15,000ஆக உயர்த்தியது. இது பட்டியலினம், பட்டியல் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை உள்ளடக்கியுள்ளது.

3. நாசியுள் செலுத்தப்படும் COVID தடுப்பூசிக்கான சோதனைகளை முடித்துள்ள மருந்து நிறுவனம் எது?

அ. பாரத் பயோடெக் 

ஆ. பயோகான்

இ. டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம்

ஈ. சீரம் நிறுவனம்

  • ஹைதராபாத்தைச் சார்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் அதன் நாசியுள் செலுத்தப்படும் COVID தடுப்பூசியான BBV154 இன் மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனைகளின் தரவை மருந்து கட்டுப்பாட்டாளரிடம் சமர்ப்பித்துள்ளது. இது முதன்மையான இரு தவணை தடுப்பூசி மற்றும் ஒரு பன்முக பூஸ்டர் தடுப்பூசி ஆகிய இரண்டிற்கும் அனுமதி கோரியுள்ளது. ஒரு பன்முக பூஸ்டர் என்பது தடுப்பூசியின் மூன்றாவது அல்லது அடுத்தடுத்த தவணை தடுப்பூசிகள் அதன் முதன்மை தவணையிலிருந்து வேறுபட்டு காணப்படும்.

4. முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் நடுவணரசின் பயணிகள் செயலாக்க அமைப்பின் பெயர் என்ன?

அ. டிஜியாத்ரா 

ஆ. பாரத யாத்ரா

இ. பிரதமர் டிஜிட்டல் யாத்ரா அபியான்

ஈ. பாரத் ஃபேஸ் RT

  • தில்லி பன்னாட்டு வானூர்தி நிலைய லிட் (DIAL) நடுவண் அரசின் ‘டிஜியாத்ரா’ முனைவை அறிவித்தது. இது ஆண்ட்ராய்டு இயங்குதளங்களுக்கான அதன் செயலியின் பீட்டா பதிப்பையும் வெளியிட்டது. ‘டிஜியாத்ரா’ என்பது முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பயணிகள் செயலாக்க அமைப்பு ஆகும். இந்தத் தொழில்நுட்பத்தின்மூலம், அனைத்து சோதனைச் சாவடிகளும் முகத்தை அடையாளம் காணும் அமைப்பின் அடிப்படையில் பயணிகளின் உள்ளீடுகளை தாமாகவே செயல்படுத்தும்.

5. ‘இந்திய பன்னாட்டு கடல்சார் உணவுகள் கண்காட்சி’ நடைபெறும் இடம் எது?

அ. சென்னை

ஆ. மும்பை

இ. கொச்சி

ஈ. கொல்கத்தா 

  • இந்திய பன்னாட்டு கடல்சார் உணவுகள் கண்காட்சியின் (IISS) 23ஆவது பதிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. கடல் உணவுப்பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (MPEDA) இந்திய கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கத்துடன் (SEAI) இணைந்து இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்யும்.

6. 2022 – காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், கீழ்க்காணும் எந்த விளையாட்டில் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்றது?

அ. கூடைப்பந்து

ஆ. ஸ்குவாஷ்

இ. லான் பௌல்ஸ் (Lawn Bowls) 

ஈ. ரக்பி செவன்ஸ்

  • 2022 – காமன்வெல்த் விளையாட்டுப்போட்டியில் இந்திய மகளிர் புல்வெளி பந்துவீச்சு அணி, அந்த விளையாட்டில் முதன்முறையாக தங்கம் வென்று வரலாறு படைத்தது. மேலும், இவ்விளையாட்டில் இந்தியாவுக்குக் கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும். லவ்லி சௌபே, பிங்கி சிங், நயன்மோனி சைகியா மற்றும் ரூபா இராணி டிர்கி ஆகியோர் தென்னாப்பிரிக்கா அணியை 17–10 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றனர்.

7. கீழ்க்காணும் எந்த மிகப்பெரிய மின்னணு வணிக நிறுவனம் அதன் டெலிவரி சேவைகளை அதிகரிப்பதற்காக இந்திய இரயில்வேயுடன் கூட்டு சேர்ந்துள்ளது?

அ. பிளிப்கார்ட்

ஆ. அமேசான் 

இ. பிக்பாஸ்கெட்

ஈ. ஜியோமார்ட்

  • அமேசான் இந்தியா தனது ஒப்படைப்பு சேவைகளை அதிகரிப்பதற்காக இந்திய ரயில்வேயுடன் கூட்டிணைந்துள்ளது. 2019ஆம் ஆண்டில் ரயில்வே வலையமைப்புகள்மூலம் விரைவுச்சேவைகளை உருவாக்க இந்திய ரயில்வேயுடன் இணைந்த முதல் இணையவழி டெலிவரி நிறுவனம் இதுவாகும். இந்தக் கூட்டாண்மைமூலம், அமேசான் 110–க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு இடையேயான வழித்தடங்களில் பொதிகளை கொண்டுசெல்ல முடியும்.

8. 2022 – பார்ச்சூன் 500 பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்திய வங்கி எது?

அ. ICICI வங்கி

ஆ. HDFC வங்கி

இ. பாரத வங்கி 

ஈ. கனரா வங்கி

  • அண்மையில் வெளியிடப்பட்ட பார்ச்சூன் 500 பட்டியலில், பாரத வங்கி (SBI) 236ஆவது இடத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும், இப்பட்டியலில் இந்தியாவிலிருந்து இடம்பெற்ற ஒரே வங்கி இதுவாகும். 2022ஆம் ஆண்டுக்கான பட்டியலில் அமெரிக்க சில்லறை விற்பனையாளர் வால்மார்ட் முதலிடம் பிடித்துள்ளது. ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (LIC) பார்ச்சூன் 500 பட்டியலில் முதன்முறையாக 98ஆம் இடத்தில் உள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 51 இடங்கள் முன்னேறி 104ஆவது இடத்தைப் பிடித்தது; அதே வேளையில் ஐஓசி, ஓஎன்ஜிசி, பிபிசிஎல் உள்ளிட்ட எண்ணெய் மற்றும் எரிசக்தி பொதுத்துறை நிறுவனங்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் ஒன்பது இந்திய நிறுவனங்கள் உள்ளன; அவற்றுள் ஐந்து அரசுக்குச் சொந்தமானவை மற்றும் நான்கு தனியார் துறையைச் சேர்ந்தவை.

9. தேஜஸ்வின் சங்கர் என்பவர் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் எந்த விளையாட்டில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் ஆனார்?

அ. குண்டெறிதல்

ஆ. உயரந்தாண்டுதல் 

இ. மும்முறை தாண்டுதல்

ஈ. தண்டூன்றித் தாண்டுதல்

  • காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஆடவருக்கான உயரந்தாண்டுதலில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை தேஜஸ்வின் சங்கர் பெற்றார். தேசிய சாதனை படைத்த அவர் வெண்கலப்பதக்கத்திற்கான நிகழ்வில் மூன்றாமிடத்தைப் பிடித்தார். 2.29 மீ உயரந்தாண்டி, தேசிய சாதனையை அவர் படைத்துள்ளார்.

10. வழக்கத்திற்கு மாறாக மிகவறண்ட கோடை நிலவுவதைத் தொடர்ந்து, அண்மையில் தண்ணீர் தட்டுப்பாட்டை அறிவித்த நாடு எது?

அ. எகிப்து

ஆ. நெதர்லாந்து 

இ. நமீபியா

ஈ. சோமாலியா

  • வழக்கத்திற்கு மாறாக மிகவறண்ட கோடை நிலவுவதைத் தொடர்ந்தும் எதிர்காலத்தில் மழைப் பொழிவதற்கான எந்தக் கணிப்பும் இல்லாததை அடுத்தும் டச்சு அரசாங்கம் (நெதர்லாந்து) அண்மையில் தண்ணீர் தட்டுப்பாட்டை அறிவித்தது. கடந்த மாதம் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் பெரும் பகுதிகளை கடுமையான வெப்ப–அலைகள் தாக்கியது; புவி வெப்பமடைதலைக் கையாளுவதற்கான முனைவுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகின்றன. டச்சு மக்களில் 2/3 பங்கினர் கடல் மட்டத்திற்கு கீழே வசிப்பதால், நெதர்லாந்தில் வறட்சி என்பது ஒரு கடுமையான சிக்கலாக மாறும். இதனால் ஆறுகளில் வண்டல் மண் படிந்து, நீர் போக்குவரவுக்கு இடையூறு ஏற்படும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள் 

1. மொத்த விலை பணவீக்கம் 13.93%ஆக சரிவு

கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவில் ஜூலை மாதம் மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் 13.93 சதவீதமாக குறைந்தது. கடந்த ஜூன் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 15.18 சதவீதமாகவும், மே மாதத்தில் 15.88 சதவீதமாகவும் பதிவானது. இதுவே கடந்த ஆண்டு ஜூலையில் 11.57 சதவீதமாக இருந்தது. மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் தொடர்ந்து இரண்டாவது மாதமாக குறைந்துள்ளது. இருப்பினும், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து தொடர்ந்து 16 மாதங்களாக இரட்டை இலக்கத்திலேயே பதிவாகி வருகிறது.

கடந்த ஜூலையில் உணவுப்பொருள் மீதான பணவீக்கம் 10.77 சதவீதமாகவும், ஜூனில் 14.39 சதவீதமாகவும் பதிவானது. மேலும் ஜூனில் காய்கறிகளின் விலை உயர்வு 56.75 சதவீதமாக இருந்த நிலையில், ஜூலையில் இது 18.25 சதவீதமாக சரிந்தது.

எரிபொருள், மின்சாரத்தைப் பொருத்தவரை ஜூலையில் 40.38 சதவீதமாகவும், ஜூனில் 40.38 சதவீதமாகவும் பணவீக்கம் பதிவானது. இதேபோல உற்பத்தி பொருள்கள், எண்ணெய் வித்துக்களின் பணவீக்கம் முறையே 8.16 சதவீதமாகவும், -4.06 சதவீதமாகவும் பதிவானது.

சில்லறை பணவீக்கத்தின் அடிப்படையில்தான் ரிசர்வ் வங்கி பணக்கொள்கையை வகுக்கிறது. அந்த வகையில், சில்லறை பணவீக்கம் கடந்த 7 மாதமாக ரிசர்வ் வங்கியின் மதிப்பீட்டுக்கு உகந்த அளவில்தான் பதிவாகி வருகிறது. கடந்த ஜூலையில் சில்லறை பணவீக்கம் 6.71 சதவீதமாக பதிவானது. 2022-23 நிதியாண்டில் சில்லறை பண வீக்கம் சராசரியாக 6.7 சதவீதமாக பதிவாகும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2. மூன்றரை கிமீ நீள ‘வாசுகி’ சரக்கு இரயில் வெள்ளோட்டம் – 27,000 டன் நிலக்கரியுடன் பயணம்

நாட்டிலேயே நீளமான மற்றும் அதிக சரக்குப்பெட்டிகளை எடுத்துச்செல்லக்கூடிய ‘சூப்பர் வாசுகி’ சரக்கு இரயில் (3.5 கிமீ நீளம்) திங்கள்கிழமை வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.

சத்தீஸ்கர் மாநிலம், கோர்பாவில் இருந்து மகாராஷ்டிரத்தின் நாகபுரிக்கு 295 சரக்குப் பெட்டிகளில் 27 ஆயிரம் டன் நிலக்கரியை ஏற்றிக்கொண்டு, இந்த இரயில் சாதனைப்பயணத்தை மேற்கொண்டது. இந்த இரயிலில் 6 எஞ்சின்கள் பொருத்தப்பட்டிருந்தன. முதலிலும் இறுதியிலும் இரு எஞ்சின்களும் குறிப்பிட்ட இடைவெளிகளில் இடையிடையே மேலும் 4 எஞ்சின்களும் பொருத்தப்பட்டிருந்தன.

இந்திய விடுதலையின் 75 ஆண்டுகள் நிறைவு கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக ‘சூப்பர் வாசுகி’ இரயிலின் சோதனை இயக்கம் மேற்கொள்ளப்பட்டதென தென்கிழக்கு மத்திய இரயில்வே தெரிவித்தது. நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக, நாட்டில் இந்த ஆண்டு தொடக்கத்தில் மின்வெட்டுப் பிரச்னை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

3. ஒண்டிவீரன் நினைவு அஞ்சல்தலை ஆகஸ்ட்.20-இல் வெளியீடு: நடுவணரசு தகவல்

விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவு அஞ்சல்தலை ஆகஸ்ட்.20-ஆம் தேதி திருநெல்வேலியில் வெளியிடப்படுவதாக நடுவணரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவீரன் பூலித்தேவனின் படைத்தளபதியாக விளங்கி, ஆங்கிலேயரை எதிர்த்து போர் புரிந்தவர் மாவீரன் ஒண்டி வீரன். தமிழ்நாட்டில் கிளர்ந்தெழுந்த முதல் இந்திய விடுதலைப் போரின் தளபதிகளில் ஒருவராக திகழ்ந்த மாவீரன் இவர். ஒரு கையை இழந்த பிறகும் நம்பிக்கையை இழக்காமல் இறுதிவரை களம்நின்று ஆங்கிலேய படைகளை தனியாகச்சென்று அழித்தார் என்றும் அதனால் அவர் ‘ஒண்டிவீரன்’ எனவும் அழைக்கப்பட்டார்.

ஒண்டி வீரனின் 251-ஆவது நினைவு நாள் ஆகஸ்ட்.20-ஆம் தேதி அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு அன்றைய நாள் அவரின் நினைவு அஞ்சல்தலை வெளியிடப்படும் என நடுவணரசின் அஞ்சல்துறை அறிவித்துள்ளது.

17th August 2022 Tnpsc Current Affairs in English

1. Which is the first country to approve a vaccine for COVID Omicron variant?

A. India

B. USA

C. UK 

D. Italy

  • The UK has become the first country to authorise a Covid–19 vaccine to treat the Omicron variant. UK’s Medicines and Healthcare products Regulatory Authority was also the first in the world to approve an original COVID–19 jab. The vaccine is authorised for use in people aged 18 and over. It targets both the original strain of the virus and Omicron BA.1.

2. Which Indian state/UT implements the ‘Mukhyamantri Anuprati Coaching Yojana’?

A. Punjab

B. Rajasthan 

C. Gujarat

D. Karnataka

  • The Rajasthan government introduced the ‘Mukhyamantri Anuprati Coaching Yojana’ in 2021–22. Under the scheme, such students are provided free coaching from reputed coaching institutes. For the current financial year, the state government has allotted Rs 17.15 crore and the number of seats under the scheme has increased to 15,000. It covers students from scheduled caste, scheduled tribe, other backward classes, minority, economically–backward classes and specially–abled.

3. Which pharma company has completed trials for its intranasal COVID vaccine candidate?

A. Bharat Biotech 

B. Biocon

C. Dr Reddy’s

D. Serum Institute

  • Hyderabad–based Bharat Biotech has submitted data from Phase 3 clinical trials of BBV154, its intranasal Covid vaccine candidate, to the drug regulator. It has sought approval both as a primary two–dose vaccine, and a heterologous booster shot. A heterologous booster means the third or subsequent dose of the vaccine is different from its primary dose.

4. What is the name of the Centre’s passenger processing system based on facial recognition technology?

A. DigiYatra

B. Bharat Yatra

C. PM Digital Yatra Abhiyan

D. Bharat Face RT

  • The Delhi International Airport Ltd (DIAL) announced the launch of the Centre’s DigiYatra initiative. It also rolled out the beta version of its app for Android platforms. DigiYatra is the passenger processing system based on facial recognition technology. With this technology, all checkpoints would automatically process the entries of the passengers based on the facial recognition system.

5. Which is the venue of the ‘India International Seafood Show (IISS)’?

A. Chennai

B. Mumbai

C. Kochi

D. Kolkata 

  • The 23rd edition of India International Seafood Show (IISS) is set to be held in Kolkata in February next year. The seafood show will be organised by the Marine Products Export Development Authority (MPEDA) in collaboration with the Seafood Exporters Association of India (SEAI).

6. India won its first ever medal in which sport in the Commonwealth Games 2022?

A. Netball

B. Squash

C. Lawn bowls 

D. Rugby Sevens

  • Indian women lawn bowls team created history at 2022 Commonwealth Games by winning the first–ever gold in the sport. It was also the first ever medal for India in the sport. Lovely Choubey, Pinki Singh, Nayanmoni Saikia and Rupa Rani Tirkey clinched gold, beating South Africa 17–10.

7. Which major e–commerce company partnered with the Indian Railways to boost its delivery services?

A. Flipkart

B. Amazon 

C. Bigbasket

D. Jiomart

  • Amazon India has partnered with Indian Railways to boost its delivery services in the country. It was also the first online delivery company to engage with the Indian Railways to build an express transportation product through rail networks in 2019. Through this partnership, Amazon will be able to transport packages on more than 110 inter–city routes.

8. Which is the only Indian bank to be listed in the Fortune 500 list in 2022?

A. ICICI Bank

B. HDFC Bank

C. State Bank of India 

D. Canara Bank

  • In the recently released Fortune 500 list, State Bank of India is the only bank to be featured from India in 236th rank. US retailer Walmart topped the 2022 list. The Life Insurance Corporation (LIC) has been named for the first time in the Fortune Global 500 list at rank 98.
  • Reliance Industries jumped 51 places to rank 104 while oil and power PSUs including IOC, ONGC, BPCL were also featured in the list. The list has nine Indian companies – five state–owned, and four from the private sector.

9. Tejaswin Shankar became the first Indian to win a medal in Common wealth Games in which sports?

A. Shot Put

B. High Jump 

C. Triple Jump

D. Pole Vault

  • Tejaswin Shankar became the first Indian to win men’s high jump medal in the Commonwealth Games. The national record holder cleared 2.22m to finish third on the event winning bronze medal.  He holds the high jump national record of 2.29 metre.

10. Which country has recently declared a water shortage, following an unusually dry summer?

A. Egypt

B. The Netherlands 

C. Namibia

D. Somalia

  • The Dutch government (Netherlands) has recently declared a water shortage following an unusually dry summer with no rain forecast in the near future. Intense heat–waves hit large parts of Europe and the United States last month, rising calls for more efforts to tackle global warming. As two–thirds of the Dutch population living below sea level, droughts can become an acute problem in the Netherlands. This may lead to silting up of rivers and hampering of water traffic.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!