Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

17th December 2020 Tnpsc Current Affairs in Tamil & English

17th December 2020 Tnpsc Current Affairs in Tamil & English

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

17th December 2020 Tnpsc Current Affairs in Tamil

நடப்பு நிகழ்வுகள்

1. EXIM வங்கியானது எந்நாட்டின் உட்கட்டமைப்பு திட்டங்களுக்காக $448 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடனை வழங்கவுள்ளது?

அ. சீனா

ஆ. மியான்மர்

இ. உஸ்பெகிஸ்தான்

ஈ. கஜகஸ்தான்

  • ஏற்றுமதி-இறக்குமதி வங்கியானது (EXIM வங்கி) அண்மையில் உஸ்பெகிஸ்தான் நாட்டின் பல்வேறு உட்கட்டமைப்பு திட்டங்களுக்காக $448 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடன் தவணையை நீட்டித்துள்ளது. இந்திய அரசின் சார்பாக நீட்டிக்கப்பட்ட இந்தக் கடன் தவணை, நாட்டின் போக்குவரத்து, நீர் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் பல்வேறு திட்டங்களில் பயன்படுத்தப்படும். EXIM வங்கி இதுவரை 266 கடன் தவணைகளை பல்வேறு நாடுகளுக்கு நீட்டித்துள்ளது.

2. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தூதர்களுக்காக திரைப்படத் தொடர்களைத் தொடங்குவதற்கான இந்தியாவின் முன்முயற்சியின் பெயர் என்ன?

அ. CinemaSCOpe

ஆ. IndiaSCOpe

இ. KaleidoSCOpe

ஈ. SCOre

  • பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் அண்மையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்காக (SCO) “CinemaSCOpe” என்ற திரைப்படத்தொடரை (Movie Series) அறிமுகப்படுத்தியது. இந்த நிகழ்ச்சியின்கீழ், ருஷிய மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட 24 இந்திய திரைப்படங்கள் மாதாந்திர அடிப்படையில் திரையிடப்படும். 2023’இல் நடைபெறும் SCO ‘நாடுகளின் தலைவர்களின் கவுன்சில்’ கூட்டத்திற்கு இந்தியா தலைமைதாங்கும் நாள் வரை இந்தத் திரையிடல் தொடரும்.

3. ‘அங்காரா A5’ என்ற பெயரில் ஹெவி லிப்ட் ஸ்பேஸ் இராக்கெட்டை சோதனை செய்த நாடு எது?

அ. சீனா

ஆ. இரஷ்யா

இ. இஸ்ரேல்

ஈ. UAE

  • இரஷ்யா தனது ‘அங்காரா A5’ என்ற ஹெவி லிப்ட் ஸ்பேஸ் ஏவுகணையை இரண்டாவது முறையாக வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இதற்கு முன்பு கடந்த 2014’இல் அது சோதனை செய்யப்பட்டது. அந்நாட்டின் விண்வெளி நிறுவனமான ரோசுகோசுமோசின் கூற்றுப்படி, இந்த அங்காரா ஏவுகணைகள் நச்சுவாய்ந்த எரிபொருள்களைப் பயன்படுத்துவதில்லை. இதனால் ஏவுதள வளாகத்தை ஒட்டியுள்ள பகுதிகளிலும், ஏவுகணை செல்லும் மண்டலங்களிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

4. FAO’இன் கூற்றுப்படி, 2021’ஆம் ஆண்டில் கீழ்க்காணும் எந்த நாட்டின் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பசிக்கு ஆளாக நேரிடும்?

அ. ஓமான்

ஆ. கென்யா

இ. சோமாலியா

ஈ. ஏமன்

  • ஐநா அவையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பானது (FAO) 2021ஆம் ஆண்டில் ஏமனில் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பட்டினியை நோக்கிச் செல்வார்கள் எனக் கூறியுள்ளது. மேலும், அந்நாட்டில் உள்ள 50,000’க்கும் மேற்பட்ட மக்கள் அடுத்த ஆண்டுக்குள் பஞ்ச நிலைக்குச்செல்வார்கள் எனவும் FAO மதிப்பிட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போரில் ஏமன் ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாக அதன் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

5. ஐநா அவையானது 2021ஆம் ஆண்டை கீழ்க்காணும் எதுவாக அறிவித்துள்ளது?

அ. பன்னாட்டு படைப்புப் பொருளாதாரத்திற்கான ஆண்டு

ஆ. பன்னாட்டு கொள்ளைநோய் ஆராய்ச்சிக்கான ஆண்டு

இ. பன்னாட்டு அமைதிக்கான ஆண்டு

ஈ. பன்னாட்டு தடுப்பூசிக்கான ஆண்டு

  • 2021ஆம் ஆண்டானது ஐநா அவையால் நீடித்த வளர்ச்சிக்கான ஆக்கபூர்வமான பொருளாதாரத்தின் பன்னாட்டு ஆண்டாக (International Year of Creative Economy for Sustainable Development) அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் நடைபெற்ற ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் இது முடிவுசெய்யப்பட்டது. இந்தோனேசியாவால் தொகுக்கப்பட்ட இந்தத்திட்டத்தை சீனா, இந்தியா, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளின் குழு ஐ. நாவிடம் வழங்கின.

6. கீழ்க்காணும் எந்த அமைப்பு, “ஆபரேஷன் ஆலிவா” என்றவொன்றைத் தொடங்கியுள்ளது?

அ. தேசிய உயிரிபல்வகைமை ஆணையம்

ஆ. இந்தியக் கடலோரக் காவல்படை

இ. WWF இந்தியா

ஈ. இந்திய வான் படை

  • இந்தியக் கடலோரக் காவல்படையானது அண்மையில் “ஆபரேஷன் ஆலிவா” என்ற பெயரில் ஒரு நடவடிக்கையை தொடங்கியது. இந்த நடவடிக்கை, ஒடிசா கடற்கரையின் ஆலிவ் ரிட்லி ஆமைகளை பாதுகாப்பதை நோக்கமாகக்கொண்டுள்ளது. மீன்பிடிக் கப்பல்கள் நுழைவதைத் தடுக்கும் நோக்கில், கடலோரக்காவல்படை, ஆலிவ் ரிட்லிகள் கூடு கட்டும் இடங்களுக்கு அருகே 2 கப்பல்களை ஏவியுள்ளது. இதன் ஒருபகுதியாக கடலோர காவல்படையின் வானூர்திகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

7. அண்மையில் வெளியான, ‘தி ஷெளரியா அன்பவுண்ட்’ என்ற நூல், எந்தச் சம்பவம் பற்றியது?

அ. 2001 இந்திய நாடாளுமன்ற தாக்குதல்

ஆ. 2005 தில்லி குண்டு வெடிப்பு

இ. 2008 மும்பைத் தாக்குதல்

ஈ. 2016 பதன்கோட் தாக்குதல்

  • மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, இந்திய நாடாளுமன்ற தாக்குதலின் 19ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நூலொன்றை வெளியிட்டார். 2001ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவம் குறித்து, ‘The Shaurya Unbound’ (ஆங்கிலப்பதிப்பு) மற்றும் ‘Samundar Samawe Boond Mein’ (ஹிந்திப்பதிப்பு) என்ற நூல் வெளியிடப்பட்டது. இந்தச் சம்பவத்தின்போது ஐந்து பயங்கரவாதிகள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.

8. இந்தியாவின் குடியரசு நாள் அணிவகுப்பில் முதன்மை விருந்தினராக கலந்துகொள்ளவுள்ள நாட்டின் பிரதமர் யார்?

அ. யுனைடெட் ஸ்டேட்ஸ்

ஆ. ஆஸ்திரேலியா

இ. யுனைடெட் கிங்டம்

ஈ. நியூசிலாந்து

  • புதுதில்லியில் 2021 ஜன.26 அன்று நடைபெறவுள்ள இந்தியாவின் குடியரசு நாள் கொண்டாட்டங்களில் பிரதமர் மோடியின் பிரதம விருந்தினராக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்துகொள்ளவுள்ளார். இதன்மூலம், 1993’இல் ஜான் மேஜருக்குப் பிறகு கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட இரண்டாவது இங்கிலாந்து பிரதமரானார் போரிஸ் ஜான்சன். மேலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடத்தப்படும் G7 உச்சிமாநாட்டில் பங்கேற்குமாறும் போரிஸ் ஜான்சன் அழைப்பு விடுத்துள்ளார்.

9. தனது அரசியலமைப்பில் காலநிலை இலக்குகளைச் சேர்க்க வாக்கெடுப்பு அறிவித்துள்ள நாடு எது?

அ. பிரான்ஸ்

ஆ. யுனைடெட் கிங்டம்

இ. நியூசிலாந்து

ஈ. ஜெர்மனி

  • பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் காலநிலை மாற்றத்திற்கு எதிரான முயற்சிகளையும் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் பிரெஞ்சு அரசியலமைப்பில் இணைப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்றை அறிவித்துள்ளார். முன்னதாக, இம்மானுவேல் மக்ரோன் உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள், 2030’க்குள் 1990 மட்டங்களுடன் ஒப்பிடும்போது குறைந்தது 55 சதவீதத்தை அடைய ஒப்புக்கொண்டனர்.

10. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, இந்திய பன்னாட்டு அறிவியல் விழாவின் விளம்பர நடவடிக்கைகளின் பெயர் என்ன?

அ. விக்யான் யாத்ரா

ஆ. விக்யான் பரிக்ஷித்

இ. விக்யான் சம்மேளன்

ஈ. விக்யான் விழா

  • இந்திய பன்னாட்டு அறிவியல் விழாவின் விளம்பர நடவடிக்கைகளின் பெயர் ‘விக்யான் யாத்திரை’ ஆகும். மக்களிடையே அறிவியல் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக, இந்த விழாவின் ஒருபகுதியாக நடமாடும் அறிவியல் கண்காட்சி வாகனங்கள் பல நகரங்களில் உலாவரும். COVID-19 தொற்றால், இந்திய பன்னாட்டு அறிவியல் விழாவின் ஆறாவது பதிப்பானது டிசம்பர் 22 முதல் 25 வரை மெய்நிகர் முறையில் நடத்தப்படவுள்ளது.

தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்

  • தமிழ்நாட்டில் ‘அம்மா மினி கிளினிக்’ திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி தொடங்கிவைத்தார். காய்ச்சல், சளி போன்ற பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை இராயபுரம் ஷேக் மேஸ்திரி தெருவில், முதலாவது ‘மினி கிளினிக்’கை அவர் தொடங்கிவைத்தார்.
  • திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் கீழ்ராவந்தவாடி கிராமத்தில் உள்ள சிற்பக்குளம் (அம்மாகுளம்); அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தின் அழகர்மலை கிராமத்தில் உள்ள யானைச்சிற்பம் ஆகிய இரண்டு புராதனச்சின்னங்களும் பாதுகாக்கப்பட்ட புராதனச்சின்னங்களாக தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 92 பாதுகாக்கப்பட்ட புராதனச்சின்னங்கள் தொல்லியல்துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
  • வாடகையுந்து சேவை நிறுவனமான ஓலா, எடெர்கோ என்னும் நிறுவனத்துடன் இணைந்து உலகின் மிகப்பெரிய மின்-ஸ்கூட்டர் தயாரிப்பு தொழிற்சாலையை ஓசூரில் அமைக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், `2354 கோடி மதிப்பில் புதிய தொழிற்சாலையை அமைப்பதற்கான ஒப்பந்தம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் க பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது.

17th December 2020 Tnpsc Current Affairs in English

1. The Exim Bank of India has extended a USD 448–million line of credit (LOC) for infrastructure projects of which country?

[A] Chile

[B] Myanmar

[C] Uzbekistan

[D] Kazakhstan

  • The Export–Import Bank of India (Exim Bank) has recently extended a USD 448–million line of credit (LOC) for various infrastructure projects in Uzbekistan. Extended on behalf of the Indian government, the LoC would be used in various projects in transport, water and technology sectors in the country. EXIM Bank has so far extended 266 LOCs to various countries.

2. What is the name of the initiative of India, to launch movie series for the Shanghai Cooperation Organisation diplomats?

[A] CinemaSCOpe

[B] IndiaSCOpe

[C] KaleidoSCOpe

[D] SCOre

  • The Indian Embassy in Beijing recently launched a movie series “CinemaSCOpe”, for the Shanghai Cooperation Organisation (SCO). Under the programme, over two dozen Indian films dubbed in Russian, will be screened on a monthly basis. The screening will continue till India’s chairmanship of the SCO ‘Council of Heads of State’ meeting in 2023.

3. Which country has test launched the Heavy lift space rocket– ‘Angara A5’?

[A] China

[B] Russia

[C] Israel

[D] UAE

  • Russia has successfully test–launched its heavy lift Angara A5 space rocket for the second time, the first launch having undertaken in 2014. As per the state space agency Rocosmos, these Angara rockets do not use aggressive and toxic propellants, thereby increasing environmental safety in the areas adjacent to the launch complex and in the drop zones.

4. As per FAO, more than 5 million population of which country would head into hunger in 2021?

[A] Oman

[B] Kenya

[C] Somalia

[D] Yemen

  • The Food and Agriculture Organisation (FAO) of the United Nations (UN) has stated that more than 5 million people of Yemen would head towards hunger in the year 2021. Also, FAO has estimated that more than 50,000 people in the country would be living in famine conditions by next year. Yemen has been in a civil war since 2014 and the normal life of the Arab country has been severely hurt.

5. By what name, the United Nations has declared the year 2021?

[A] International Year of Creative Economy

[B] International Year of Pandemic Research

[C] International Year of Peace

[D] International Year of Vaccination

  • The year 2021 has been declared as the International Year of Creative Economy for Sustainable Development, by the United Nations. This has been decided in the UN General Assembly meeting held in December 2020. The proposal was sponsored by Indonesia and was presented by a group of nations including China, India, Australia, Philippines and Thailand.

6. Which organisation has launched the “Operation Oliva”?

[A] National Biodiversity Authority

[B] Indian Coastal Guard

[C] WWF India

[D] Indian Air Force

  • The Indian Coast Guard has recently launched an operation named “Operation Oliva”. This operation aims to protect the Olive Ridley turtles of the Odisha coast, which are endangered. The Coast Guard has launched two ships near the major nesting sites, to prevent entry of fishing vessels. Aircrafts of the coast guard have also been deployed as a part of this operation.

7. The book titled ‘The Shaurya Unbound’, which was released recently, is about which incident?

[A] 2001 Indian Parliament Attack

[B] 2005 Delhi Blast

[C] 2008 Mumbai Attacks

[D] 2016 Pathankot Attack

  • Lok Sabha Speaker Om Birla released a book on occasion of 19th anniversary of the Indian Parliament attack. The book titled ‘The Shaurya Unbound’ (English Version) and ‘Samundar Samawe Boond Mein’ (Hindi Version) were released on the 2001 incident. As many as 14 people including the five terrorists died during the incident.

8. Which country’s Prime Minister is to attend India’s Republic Day parade as Chief Guest?

[A] United States

[B] Australia

[C] United Kingdom

[D] New Zealand

  • Britain Prime Minister Boris Johnson accepted the invitation by Prime Minister Narendra Modi to be the Chief Guest at India’s Republic Day celebrations on 26 January, 2021 in New Delhi. With this, Boris Johnson becomes the second UK prime minister to attend the celebrations after John Major in 1993. Moreover, UK Prime Minister has invited Indian Prime Minister Narendra Modi to join the UK–hosted G7 summit next year.

9. Which country has announced referendum to add climate goals in its Constitution?

[A] France

[B] United Kingdom

[C] New Zealand

[D] Germany

  • French President Emmanuel Macron has announced a referendum to add the efforts against climate change and the need to protect the environment in the French Constitution. Earlier, the EU leaders including Macron agreed to achieve at least 55 percent compared with 1990 levels, by 2030.

10. What is the name of the promotional activity of the India International Science Festival, which is in the news recently?

[A] Vigyan Yatra

[B] Vigyan Parikshit

[C] Vigyan Sammelan

[D] Vigyan Festival

  • Vigyan Yatra is the name of the promotional activity of the India International Science Festival. Mobile science exhibition vans were flagged off from many cities as a part of the activity, to promote the culture of science among the people.
  • The sixth edition of the India International Science Festival to be organised from December 22 to 25 on a virtual platform due to the COVID–19 pandemic.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!