TnpscTnpsc Current Affairs

17th December 2021 Tnpsc Current Affairs in Tamil & English

17th December 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 17th December 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

December Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. 2021ஆம் ஆண்டிற்கான ஆசிய ஆற்றல் குறியீட்டில் முதலிடம் வகிக்கிற நாடு எது?

அ) சீனா

ஆ) இந்தியா

இ) அமெரிக்கா 

ஈ) ரஷ்யா

  • ஆசிய ஆற்றல் குறியீட்டை சிட்னியின் லோவி நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட 2021ஆம் ஆண்டிற்கான குறியீட்டில், அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. ஆசிய கண்டத்தில் உள்ள 26 நாடுகள் மற்றும் பிரதேசங்களை வரிசைப்படுத்தும் இந்தக் குறியீடு, இந்தியாவை 4ஆவது ஆற்றல்மிகு நாடாக தரவரிசைப்படுத்துகிறது.
  • பொருளாதாரத் திறன், இராணுவத் திறன் மற்றும் கலாச்சார செல்வாக்கு போன்ற பல்வேறு அளவீடுகளின் அடிப்படையில் இந்தியா தனது 4ஆவது இடத்தைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது.

2. முற்றிலும் காகித பயன்பாடற்ற உலகின் முதல் அரசாக மாறியுள்ள நகரம் எது?

அ) மாஸ்கோ

ஆ) துபாய் 

இ) நியூயார்க்

ஈ) அபுதாபி

  • முற்றிலும் காகித பயன்பாடற்ற அரசாக மாறிய உலகின் முதல் அரசு துபாய் என்று அமீரகத்தின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் தெரிவித்தார். இதனால் ஆண்டுக்கு 2,650 கோடி ரூபாய் நிதியும், பணியாளர்களின் 1 கோடியே 40 லட்சம் மணி நேர பணி நேரமும் சேமிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 5 கட்டங்களாக பிரித்து இந்தத் திட்டத்தின் இலக்கு எட்டப்பட்டுள்ளது. துபாயில் 45 அரசு நிறுவனங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.

3. ஆண்டுதோறும் ‘நுபி லால் நாள்’ அனுசரிக்கப்படுகிற மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?

அ) அஸ்ஸாம்

ஆ) மணிப்பூர் 

இ) அருணாச்சல பிரதேசம்

ஈ) சிக்கிம்

  • ஆங்கிலேய அரசுக்கு எதிராக நீதிக்காகப் போராடிய மணிப்பூரின் வீரமிகு பெண்களுக்கு மரியாதைசெலுத்தும் வகையில் ‘நூபி லால் நாள்’ அனுசரிக்கப்படுகிறது. இது ஆண்டுதோறும் டிசம்பர்.12 அன்று அனுசரிக்கப்படுகிறது.

4. ஒளி-உணர்திறன் மருந்தைப் பயன்படுத்துவதை உள்ளடக்கிய சிகிச்சையின் பெயர் என்ன?

அ) போட்டோடைனமிக் சிகிச்சை 

ஆ) ஒளிமின்னழுத்த சிகிச்சை

இ) ஒளிக்கதிர் சிகிச்சை

ஈ) ஒளியியல்

  • போட்டோடைனமிக் சிகிச்சையானது ஒளி-உணர்திறன் மருந்தைப் பயன்படுத்துவதை உள்ளடக்கியது; இது ஒளி மூலத்தால் செயல்படுத்தப்படுகிறது. இச்சிகிச்சையானது சில புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. இச்சிகிச்சையின் காரணமாக பக்கவிளைவுகள் உண்டாவதாக நோயாளிகள் புகாரளிக்கின்றனர்.
  • பலர் இதன் காரணமாக இரவில் சிறந்த பார்வைத் திறனும் இருளில் அசாதாரண வடிவங்கள் தெரிவதாகவும் கூறுகின்றனர். விழித்திரையில் காணப்படும் ஒளியுணர் திறன் புரதமான ரோடப்சின், இப்புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஒளிச்சேர்க்கையான குளோரின் e6 உடன் தொடர்புகொள்வதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

5. சமீப செய்திகளில் இடம்பெற்ற செய்ன் ஆறு பாயும் நாடு எது?

அ) ரஷ்யா

ஆ) பிரான்ஸ் 

இ) ஆஸ்திரேலியா

ஈ) சீனா

  • செய்ன் என்பது பிரான்சின் வடபகுதியில் 777 கிமீட்டர் நீளம் பாயும் ஓர் ஆறாகும். பாரிஸ் ஒலிம்பிக்கின் தொடக்க விழா, 2024 ஜூலை 26 அன்று செய்ன் ஆற்றங்கரையில் நடைபெறும். 200’க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் பாரிஸில் உள்ள Pont d’Austerlitz மற்றும் Pont d’Iena பாலங்களுக்கு இடையில் கிட்டத்தட்ட 6 கிமீ பயணம் செய்வார்கள்.

6. சமீப செய்திகளில் இடம்பெற்ற யூதூ-2 என்ற நிலவு ஆய்வூர்தியை ஏவிய நாடு எது?

அ) ஜப்பான்

ஆ) சீனா 

இ) ஐக்கிய அரபு அமீரகம்

ஈ) இஸ்ரேல்

  • Yutu-2 என்பது ஒரு ரோபோட்டிக் லூனார் ரோவர் ஆகும், இது கடந்த 2018’இல் நிலவுக்கு சாங்’இ-4 திட்டத்தின் ஒரு பகுதியாக ஏவப்பட்டது. சந்திரனின் மேற்பரப்பில் ஒரு விசித்திரமான, கனசதுர வடிவிலான பொருளை இந்த ஆய்வூர்தி சமீபத்தில் கண்டறிந்துள்ளது.
  • நிலவின் தொலைவில் உள்ள வான் கர்மன் பள்ளத்தைக் கடக்கும்போது இந்த ரோவர் அப்பொருளைக் கண்டது. இப்பொருளுக்கு “மர்ம வீடு” என்று பெயரிடப்பட்டுள்ளது.

7. நிலையான வானூர்தி எரிபொருளை முதன்முதலாக பயன்படுத்தவுள்ள வானூர்தி நிறுவனம் எது?

அ) பிரிட்டிஷ் ஏர்வேஸ்

ஆ) ஏர் இந்தியா

இ) குவாண்டாஸ்

ஈ) ஏர் எமிரேட்ஸ்

  • பிலிப்ஸ் 66 லிட் உடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, ‘பிரிட்டிஷ் ஏர்வேஸ்’ இங்கிலாந்தில் வணிக ரீதியாக தயாரிக்கப்பட்ட நிலையான வானூர்தி எரிபொருளைப் (Sustainable Aviation Fuel) பயன்படுத்தும் முதல் விமான நிறுவனமாக மாறும்.
  • நிலையான வானூர்தி எரிபொருள் என்பது குறைந்த கார்பன் கொண்ட எரிபொருளாகும்; இது கழிவு தாவர எண்ணெய்கள், கொழுப்புகள் மற்றும் கிரீஸ்கள் போன்ற புதுப்பிக்கத்தக்க தீவனங்களிலிருந்து உற்பத்தி செய்யப்ப -டுகின்றது.

8. விண்ணறிவியலைப் பொறுத்தவரை, ‘லியோனார்ட்’ என்றால் என்ன?

அ) சிறுகோள்

ஆ) வால் நட்சத்திரம் 

இ) புறக்கோள்

ஈ) செயற்கைக்கோள்

  • வட விண்ணில் ஒரு பிரகாசமான வால் நட்சத்திரம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் காணப்பட்டது. இது வால்மீன் சி/2021 ஏ1, ‘லியோனார்ட்’ என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வால் நட்சத்திரம் முதன்முதலில் 2021 ஜனவரியில் வியாழனைச் சுற்றி கண்டுபிடிக்கப்பட்டது.
  • இந்த வால்மீன் ‘வேல் கேலக்ஸி’ என்றும் அழைக்கப்படும் NGC 4631’இன் மையத்தில் பச்சை நிற கோமாவுடன் காணப்பட்டது. ‘லியோனார்ட்’ வால் நட்சத்திரம் டிசம்பர் மாதத்தில் பிரகாசமாக வளரும்.

9. கொடி நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) டிசம்பர் 7 

ஆ) டிசம்பர் 8

இ) டிசம்பர் 10

ஈ) டிசம்பர் 15

  • ஆண்டுதோறும் டிசம்பர்.7ஆம் தேதி அன்று ‘கொடி நாள்’ அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் தியாகிகள் மற்றும் இந்த நாட்டிற்கு சேவை செய்யும் துணிச்சலான வீரர்களை கௌரவிக்கும் ஒரு நாளாகும். இது இந்தியாவின் ‘கொடி நாள்’ என்றும் அழைக்கப்படுகிறது மற்றும் இந்திய இராணுவத்தின் நலனுக்காக இந்திய குடிகளிடமிருந்து நிதி திரட்டுவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியா, 1949 ஆகஸ்ட் முதல் ஒவ்வோர் ஆண்டும் இந்த நாளைக் கொண்டாடுகிறது.

10. பல நாடுகளின் பேரிடர் மேலாண்மை பயிற்சியான ‘PANEX-21’ஐ நடத்தவுள்ள நாடு எது?

அ) அமெரிக்கா

ஆ) இந்தியா 

இ) ஜப்பான்

ஈ) சீனா

  • இந்திய இராணுவம் ‘PANEX-21’ எனவழைக்கப்படும் பல நாடுகளின் பேரிடர் மேலாண்மை பயிற்சியை ஏற்பாடு செய்கிறது. இப்பயிற்சி BIMSTEC நாடுகளான வங்காள தேசம், பூட்டான், நேபாளம், இலங்கை, மியான்மர், தாய்லாந்து மற்றும் இந்தியாவை உள்ளடக்கும். COVID-19 தொற்றுநோயின் பின்னணியில் நிவாரணத்தில் சிறப்பு கவனஞ்செலுத்தி, PANEX-21 பயிற்சி டிச.20-22 வரை புனேவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் பரிந்துரை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பெண்ணின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் யோசனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக கடந்த சுதந்திர தின உரையின் போது பிரதமர் நரேந்திர மோடி, பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவது குறித்து பேசினார்.

அவர் பேசுகையில், இந்த அரசாங்கம் எப்போது தேசத்தின் மகள்கள், சகோதரிகளின் உடல்நலனில் அக்கறை கொண்டுள்ளது. ஊட்டச்சத்துக் குறைபாட்டில் இருந்து பெண்களைக் காக்க, அவர்கள் சரியான வயதில் திருமணம் செய்து கொள்வதை உறுதி செய்வது அவசியம். இப்போது நாட்டில் ஆணின் திருமண வயது 21 ஆகவும், பெண்ணின் திருமண வயது 18 ஆகவும் உள்ளது. அரசாங்கம், குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் மற்றும் இந்து திருமணச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. அவ்வாறு திருத்தம் மேற்கொண்டு பெண்ணின் திருமண வயது 21 ஆக உயர்த்தப்படும் என்று கூறியிருந்தார்.

முன்னதாக, பெண்ணின் திருமண வயதை அதிகரிக்க நிதி ஆயோக் செயற்குழுவை அமைத்திருந்தது. அதற்கு ஜெயா ஜேட்லி தலைமை வகிக்கிறார். நிதி ஆயோக் நிபுணர் மருத்துவர் வி.கே.பால், சுகாதார அமைச்சகம், மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் ஆகியனவற்றின் உறுப்பினர்கள் இந்த செயற்குழுவில் இடம்பெற்றிருந்தனர். அந்தக் குழுவின் பரிந்துரைகளின்படியே பிரதமரும் பெண்ணின் திருமண வயதினை உயர்த்துவது தொடர்பாக உறுதியளித்திருந்தார். இந்நிலையில், பெண்ணின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் யோசனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இனி இது நாடாளுமன்றத்தில் சட்ட மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டு சட்ட வடிவம் பெறும்.

இதற்கான பரிர்ந்துரையை டிசம்பர் தொடக்கத்தில் செயற்குழு சமர்ப்பித்ததாகத் தெரிகிறது. அதில், பெண்ணின் திருமண வயதை அதிகரிப்பதால் அவளின் பொருளாதார, சமூக, ஆரோக்கிய மேம்பாடு உறுதி செய்யப்படும் அது குடும்பம், சமூகம், குழந்தைகள் மீது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

2. இந்தியா – பாகிஸ்தான் போரின் பொன்விழா கொண்டாட்டம்

வெற்றி தினத்தின் பொன்விழாவை முன்னிட்டு சென்னையில் உள்ள போர் வீரர்கள் நினைவுச் சின்னத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பாகிஸ்தானுடன் கடந்த 1971-ம் ஆண்டு நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த போரில் 93 ஆயிரம் பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவிடம் சரணடைந்தனர். இப்போரின் விளைவாக வங்கதேசம் விடுதலை அடைந்தது. இதையடுத்து, ஆண்டுதோறும் டிச.16-ம்தேதி வெற்றி தினமாக கொண்டாடப் பட்டு வருகிறது.

போரில் இந்தியா வெற்றி பெற்று 50 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, வெற்றி தினத்தின் பொன் விழா கொண்டாடப்படுகிறது.

3. அகில இந்திய மேயர்கள் மாநாடு – பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

நகர்ப்புறத்தில் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் குறைப்பாட்டுப் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண மத்திய அரசு பலவகையான திட்டங்களைத் தொடங்கியுள்ளது. இதற்காக சமீப காலங்களில் பல்வேறு புதிய முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

இந்த முயற்சிகளுக்கு உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளில் உத்தரப்பிரதேச மாநிலம் நகர்ப்புற உள்கட்டமைப்பில் வெகுவான முன்னேற்றம் அடைந்துள்ளது.

இந்த நிலையில் உத்தரப்பிரதேசம், வாரணாசியில் நடைபெறும் அகில இந்திய மேயர்கள் மாநாட்டை பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார். மேலும் இந்த மாநாட்டில் “புதிய நகர்ப்புற இந்தியா ” என்ற மையப்பொருளில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

நகர்ப்புற வளர்ச்சியில் மத்திய அரசு மற்றும் உத்தரப்பிரதேச அரசின் முக்கிய சாதனைகளை எடுத்துக்காட்டும் கண்காட்சி ஒன்றுக்கும் டிசம்பர் 17 முதல் 19 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

4. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.1,895 கோடி செலவு: மத்திய அரசு

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.1,894.85 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தூய்மை இந்தியா திட்டம் குறித்து பரவலான விழிப்புணா்வை ஏற்படுத்தி தகவல், கல்வி மற்றும் தொலைத்தொடா்பு (ஐஇசி) வியூகம் மூலம் விரும்பும் இலக்கை அடைய வியூகம் வகுக்கப்பட்டது. இந்த ஐஇசி வியூகத்துக்காக 2014-2015 முதல் 2021-22-ஆம் நிதியாண்டு வரையில் ரூ.1,894.85 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தூய்மை இந்தியா திட்டத்தை மத்திய அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபா் 2-ஆம் தேதி தொடக்கி வைத்தது. 2019 அக்டோபா் 2-க்குள் அனைத்து கிராமங்களிலும் கழிப்பறை வசதியை ஏற்படுத்தி தருவதன் மூலம் திறந்த வெளியில் அசுத்தம் இல்லாத நாடாக உருவெடுக்கச் செய்வதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

5.புதுச்சேரியில் சர்வதேச ஆவணப்பட, குறும்பட திருவிழா

புதுச்சேரியில் சர்வதேச ஆவணப்படம் மற்றும் குறும்பட திருவிழா இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக புதுச்சேரியில் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைந்து சர்வதேச ஆவணப்பட, குறும்பட திருவிழாவை நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக புதுச்சேரி திரை இயக்கம், அலையன்ஸ் பிரான்சிஸ், மத்திய திரைப்பட பிரிவு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் இணைந்து இந்திய திரையுலக மேதை சத்யஜித் ரே நூற்றாண்டு திருவிழாவை நடத்த திட்டமிட்டுள்ளது.

இத்திருவிழா இன்று (17ம் தேதி) தொடங்கி 19ம் தேதி வரை 3 நாட்கள் அலையன்ஸ் பிரான்சிஸ் திரையரங்கில் நடக்கிறது. இத்திருவிழாவில் சத்யஜித் ரே உருவாக்கிய உலகளவில் இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்த்து, பல விருதுகள் பெற்ற 9 திரைப்படங்களும், ஷியாம் பெனகல் உருவாக்கிய சத்யஜித் ரே ஆவணப்படமும் திரையிடப்பட உள்ளது. தொடக்க நிகழ்ச்சி இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. சத்யஜித் ரேயின் முதல்படமான உலகளவில் அனைத்து திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்ட ‘பதேர் பாஞ்சாலி’ திரையிடப்படுகிறது. பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்.

6. 81 நிமிடத்தில் உருவான திரைப்படம்

கே பாக்கியராஜ் நடிப்பில் 81 நிமிடம் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்தி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

81 நிமிட படப்பிடிப்பு

தமிழ் திரையுலகில் புதிய இயக்குனரான சிவ மாதவ் இயக்கத்தில் இயக்குநரும், நடிகருமான கே பாக்யராஜ் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘3.6.9’. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிளாக் பாண்டி, அஜய் கண்ணன், சுகைல், சத்தி மகேந்திரா மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் படத்தின் தயாரிப்பாளர் பி ஜி எஸ் நடித்துள்ளார். மாரிஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு கார்த்திக் ஹர்ஷா இசை அமைத்துள்ளனர்.

உலக சினிமா வரலாற்றில் 81 நிமிடங்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தின் படிப்பிடிப்பு புதுச்சேரி பிள்ளையார் குப்பத்தில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் நேற்று நடந்தது. காலை 11.40 மணிக்கு தொடங்கிய படப்பிடிப்பு மதியம் 1.01 மணிக்கு முடிந்தது. ஒரே நேரத்தில், ஒரு களத்தில் 24 கேமராக்கள், 150-க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள், 450 பணியாளர்களை கொண்டு படமாக்கப்பட்டது.

1. Which country topped the Asian Power Index for 2021?

A) China

B) India

C) USA 

D) Russia

  • Asian Power Index is prepared by the Lowy Institute of Sydney. In the recently released index of 2021, the United States ranked at the top spot, for exerting influence over the region.
  • The Index, which ranks 26 nations and territories in Asia, ranks India as the 4th most powerful country. India has retained its 4th position, on the basis of several measures of power such as economic capability, military capability, resilience and cultural influence.

2. Which city has become the world’s first government to turn completely paperless?

A) Moscow

B) Dubai 

C) New York

D) Abu Dhabi

  • Dubai has become the world’s first government to turn completely paperless, said the Emirate’s Crown Prince, Sheikh Hamdan bin Mohammed bin Rashid Al Maktoum. The Government announced that it provided a savings of 1.3 billion Dirham (USD 350 million) and 14–million–man hours. “The Dubai Paperless Strategy” was implemented in five phases. The strategy was implemented across all 45 government entities in the emirate, to provide than 1,800 digital services.

3. The ‘Nupi Lal Day’ is observed every year in which state/UT?

A) Assam

B) Manipur 

C) Arunachal Pradesh

D) Sikkim

  • The Nupi Lal Day is observed to pay rich homage to the brave women of Manipur who fought for justice against the British Government. It is observed every year on December 12.

4. What is the name of the therapy involving the use of light–sensitive medicine?

A) Photodynamic therapy

B) Photovoltaic therapy 

C) Photogeneric therapy

D) Photology

  • Photodynamic therapy involves the use of light–sensitive medicine, which is activated by a light source. The treatment is used to treat certain cancers, and patients report a side effect due to the treatment. Many people claim to have better night vision and also vision of unusual patterns and silhouettes in the dark. Researchers discovered Rhodopsin, a light–sensitive protein found in retinas, interacts with chlorin e6, a photosensitive used in cancer treatment.

5. River Seine, which was seen in the news recently, is located in which country?

A) Russia

B) France 

C) Australia

D) China

  • The Seine is a 777–kilometre–long river situated in northern France. The opening ceremony of the Paris Olympics on July 26, 2024, will be held on the River Seine. Athletes and officials from more than 200 countries will sail almost 6 kilometres (4 miles) between the Pont d’Austerlitz and Pont d’Iena bridges in Paris.

6. Yutu–2 moon rover, which was making news recently, was launched by which country?

A) Japan

B) China 

C) UAE

D) Israel

  • Yutu–2 is a robotic lunar rover which was launched in 2018, as a part of Chang’e 4 mission to the Moon. The rover has recently detected a strange–looking, cube–shaped object on the surface of the Moon. The rover spotted the object as it crossed the Von Karman crater on the far side of the Moon. The object has been dubbed “mystery house”.

7. Which airlines is set to be the first to use sustainable aviation fuel (SAF)?

A) British Airways 

B) Air India

C) Qantas

D) Air Emirates

  • British Airways will become the first airline to use sustainable aviation fuel produced on a commercial scale in the UK after signing the agreement with Phillips 66 Limited. Sustainable aviation fuel–SAF is a lower carbon–intensity fuel that can be produced from renewable feed–stocks such as waste vegetable oils, fats and greases.

8. With reference to Space science, what is ‘Leonard’?

A) Asteroid

B) Comet 

C) Exoplanet

D) Satellite

  • A bright comet in northern skies was spotted in November this year. It is Comet C/2021 A1, also known as Leonard. The comet was first discovered around Jupiter in January 2021. The comet was picked up by the telescope, with a greenish coma, at the heart of NGC 4631 also known as the Whale Galaxy. The comet Leonard will grow brighter in the month of December.

9. When is the ‘Armed Forces Flag Day’ observed every year?

A) December 7 

B) December 8

C) December 10

D) December 15

  • The ‘Armed Forces Flag Day’ is observed every year on December 7. The day is meant to honour martyrs, and the brave soldiers who serve this country. It is also known as India’s Flag Day and is dedicated to raising funds from Indian citizens for the welfare of the Indian Army. India has been celebrating this day every year since August 1949.

10. Which country is to play host to the multi–nation disaster management exercise ‘PANEX–21’?

A) USA B) India 

C) Japan D) China

  • The Indian Army is organising a multi–nation disaster management exercise been called PANEX 21. The exercise will involve BIMSTEC countries namely Bangladesh, Bhutan, Nepal, Sri Lanka, Myanmar, Thailand and India. The Exercise PANEX 21 is planned to be conducted at Pune from December 20–22, with a special focus on relief in the background of Covid–19 pandemic.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!