Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

17th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

17th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 17th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

June Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

17th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. ICAR – இந்திய நறுமணப்பொருட்கள் ஆராய்ச்சி நிறுவனமானது எந்தத் தாவரத்தின் நுண்ணூட்டச்சத்து இலைசார் உருவாக்கத்திற் -கான காப்புரிமையைப் பெற்றுள்ளது?

அ) கருமிளகு

ஆ) வெண்மிளகு

இ) மஞ்சள்

ஈ) ஏலக்காய்

  • இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின்கீழ் (ICAR) இயங்கும் இந்திய நறுமணப் பொருட்கள் ஆராய்ச்சி நிறுவனம் கருமிளகு நுண்ணூட்டச்சத் -து இலைசார் உருவாக்கத்திற்கான காப்புரிமையைப் பெற்றுள்ளது.
  • ICAR-IISR ஆனது நுண்ணூட்டச்சத்து குறைபாடுகளை கையாளுவதற் -காக முக்கிய நறுமணப் பொருட்களுக்கு (கருமிளகு, இஞ்சி, மஞ்சள் & ஏலக்காய்) நுண்ணூட்டச்சத்து இலைசார் சூத்திரங்களை உருவாக்கியு -ள்ளது.

2. 3 புதிய குகைகள் கண்டுபிடிக்கப்பட்ட திரிராஷ்மி பௌத்த குகை வளாகம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) மகாராஷ்டிரா

இ) பீகார்

ஈ) ஒடிஸா

  • மகாராஷ்டிராவின் நாசிக் அருகே அமைந்துள்ள திரிராஷ்மி பௌத்த குகை வளாகத்தில் 3 புதிய குகைகளை இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்தக் குகை வளாகம் பாண்டவ் லெனி என்றும் அழைக்கப்படுகிறது. இத்தளம் கிட்டத்தட்ட இருபதாண்டுகளுக்கு முன்னர் ஒரு பிரிட்டிஷ் இராணுவ அதிகாரியால் ஆவணப்படுத்தப்பட்டது.

3. அண்மையில் காலமான ‘பத்மஸ்ரீ’ விருது பெற்ற இலட்சுமி நந்தன் போரா சார்ந்த எது?

அ) விளையாட்டு

ஆ) இலக்கியம்

இ) இசை

ஈ) நடனம்

  • அஸ்ஸாமியைச் சார்ந்த பிரபல அஸ்ஸாமிய கல்வியாளர் மற்றும் ‘பத்மஸ்ரீ’ விருதாளருமான இலட்சுமி நந்தன் போரா சமீபத்தில் COVID காரணமாக காலமானார். அவருக்கு வயது 89. இலட்சுமி நந்தன் போரா, அஸ்ஸாமி மொழியில் அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். பதல் பைர -வி மற்றும் காயகல்பா ஆகியவை அவரது சிறந்த படைப்புகளாகும். கடந்த 2015ஆம் ஆண்டில் அவருக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கப்பட்டது.

4. அண்மையில் திறந்துவைக்கப்பட்ட இன்டஸ் பெஸ்ட் பிரம்மாண்ட உணவுப் பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது?

அ) பஞ்சாப்

ஆ) ஹரியானா

இ) சத்தீஸ்கர்

ஈ) ஒடிஸா

  • மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், சத்தீஸ்கர் மாநிலம் இராய்ப்பூரில் இன்டஸ் பெஸ்ட் பிரம்மாண்ட உணவுப்பூங்காவை தொடங்கிவைத்தார். மதிப்புக்கூட்டல், வேளாண் பொருட்களை நீண்டநாட்கள் சேமிப்பதற்கான வசதி, விவசாயிகளுக்கு அதிக வருவாய், தலைசிறந்த பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் இப்பகுதியின் உழவர்களுக்கு சந்தைப்படுத்துவதற்கான மாற்றுமுறைகள் போன்றவற் -றை இந்த உணவுப்பூங்கா உறுதிசெய்யும்.
  • இந்தப் பூங்காவின்மூலம் சுமார் 5000 பேருக்கு நேரடியாகவும், மறைமு -கமாகவும் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

5. 4700’க்கும் மேற்பட்ட பன்றிகளைக் கொன்ற ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ள இந்திய மாநிலம் எது?

அ) கோவா

ஆ) மிசோரம்

இ) உத்தரபிரதேசம்

ஈ) பீகார்

  • முதல் பாதிப்பு பதிவாகியதிலிருந்து, 2 மாதங்களுக்குள்ளாக 4,700’க்கும் மேற்பட்ட பன்றிகளின் மரணத்திற்குக் காரணமான ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலால் மிசோரம் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
  • இப்போதைக்கு, மாநிலத்தின் 99 கிராமங்களையும், வட்டாரங்களையும் “பாதிக்கப்பட்ட பகுதிகளாக” மிசோரம் மாநில அரசு அறிவித்துள்ளது, அவற்றுள் 56, தலைநகரான ஐஸால் மாவட்டத்தில் அமைந்துள்ளன.

6. நுகர்வோர் நம்பிக்கைக்குறியீட்டை வெளியிடுகிற அமைப்பு எது?

அ) பாரத வங்கி

ஆ) நுகர்வோர் விவகாரங்கள்

இ) இந்தியா மதிப்பீடுகள்

ஈ) இந்திய ரிசர்வ் வங்கி

  • நுகர்வோர் நம்பிக்கை ஆய்வானது இந்திய ரிசர்வ் வங்கியால் (RBI) நடத்தப்படுகிறது. அது, பொதுவான பொருளாதார நிலைமைகள் குறித்து பங்கேற்பவரின் கருத்துக்களை வழங்குகிறது. சமீபத்தில், ரிசர்வ் வங்கி, நுகர்வோர் நம்பிக்கைக் குறியீட்டை வெளியிட்டுள்ளது. அது, COVID-19 தொற்றின் இரண்டாவது அலை காரணமாக இதுவரையில்லா அளவுக்கு வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது. தற்போதைய சூழ்நிலைக் குறியீடு 48.5 ஆகவும், எதிர்கால எதிர்பார்ப்புக்குறியீடு 96.4 ஆகவும் சரிந்துள்ளது.

7. அண்மையில் பணியிலிருந்து நீக்கப்பட்ட இந்திய கடற்படையின் மிகப்பழைமையான நீரியல் ஆய்வுக்கப்பல் எது?

அ) INS கொல்கத்தா

ஆ) INS சந்தயக்

இ) INS சிந்துராக்ஷக்

ஈ) INS சுவீர்

  • இந்திய கடற்படையின் மிகப்பழைமையான நீரியல் ஆய்வுக்கப்பலான INS சந்தயக், 2021 ஜூன்.4 அன்று விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்ப
    -டையிலிருந்து நீக்கப்பட்டது. 40 ஆண்டுகள் பழமையான இந்தக்கப்பல், 200’க்கும் மேற்பட்ட பெரிய நீரியல் ஆய்வுகளை நடத்தியுள்ளது. இது, இலங்கையில் நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் பவன்’ (1987), ‘ஆபரேஷன் ரெயின்போ’ (2004) போன்ற முக்கியமான ஆபரேஷன்களின் ஒருபகுதி -யாகவும் இருந்துள்ளது.

8. திட்டமிடப்பட்ட செயற்கைத் தீவான லினெட்டெஹோம் கட்டப்பட உள்ள நாடு எது?

அ) ஆஸ்திரியா

ஆ) ரஷ்யா

இ) உக்ரைன்

ஈ) டென்மார்க்

  • லினெட்டெஹோம் என்ற செயற்கைத் தீவை நிர்மாணிக்க டென்மார்க் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 1 சதுர மைல் (2.6 சதுரகிமீட்டர்) பரப்பளவில் இத்தீவு அமையவுள்ளது. மேலும் அதன் துறைமுகத்தை உயரும் கடல் மட்டங்கள் மற்றும் புயல்களிலிருந்து பாதுகாக்க, அதன் சுற்றளவு முழுவ -தும் ஒரு தடுப்பு அமைப்பு இருக்கும். இத்தீவு, சுரங்கச்சாலைகள் மற்றும் மெட்ரோ பாதைகள் வழியாக முதன்மை நிலத்துடன் இணைக்கப்படும்.

9. மாணவர்களுக்கான ‘YounTab’ திட்டம் தொடங்கப்பட்டுள்ள மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் எது?

அ) தில்லி

ஆ) புதுச்சேரி

இ) கர்நாடகா

ஈ) லடாக்

  • லடாக் யூனியன் பிரதேசம், “YounTab” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்கீழ் லடாக் துணைநிலை ஆளுநர் R K மாத்தூர், 9-12 வரை படிக்கும் மாணவர்களுக்கு டேப்லெட் வகை கைக்கணினிகளை வழங்குவார். லடாக் அரசுப்பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான கிட்டத்தட்ட 12,300 மாணவர்களுக்கு இலவச கைக்கணினிகளை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

10. எந்த நிறுவனத்தால் தயாரிக்கப்படும், ‘கார்பேவாக்ஸ்’ என்னும் தடுப்பூசியை கொள்முதல்செய்வதாக இந்திய அரசு அறிவித்துள்ளது?

அ) பயாலாஜிக்கல் E

ஆ) SII

இ) ரான்பாக்ஸி

ஈ) பாரத் பயோ டெக்

  • பயாலாஜிக்கல் E நிறுவனத்தால் தயாரிக்கப்படும் “கார்பேவாக்ஸ்” என்ற COVID-19 தடுப்பூசியினை 30 கோடி டோஸ்கள் கொள்முதல் செய்வதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமையகம் ஹைதராபாத்தில் உள்ளது.
  • உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இத்தடுப்பூசியானது, “Recombinant Protein Sub Unit Vaccine” (அதாவது) COVID வைரசின் ஸ்பைக் புரதத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது, கோவாக்ஸின் (அ) கோவிஷீல்ட் தடுப்பூசிகளி -லிருந்து வேறுபட்டது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. சென்னை – குமரி தொழில்வழித்தடத்திற்கு 484 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தம்.

பின்தங்கியுள்ள தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரையோர மாவட்டங்களின் போக்குவரத்து இணைப்பு, தொழில்வளர்ச்சிகளை உருவாக்கும் சென்னை – கன்னியாகுமரி தொழில்வழித்தடத் திட்டத்திற்கு ஆசிய வளர்ச்சி வங்கி அளிக்கும் 484 மில்லியன் டாலர் கடனுக்கான ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டது.

மேற்கு வங்கத்திலிருந்து தமிழகம் வரையிலான ‘சாகர்மாலா’ என்கிற கிழக்குக் கடற்கரை பொருளாதார வழித்தடத் திட்டத்தை மத்திய தொழில் துறையின் தொழில் கொள்கை, மேம்பாட்டுப் பிரிவு உருவாக்கியது. இந்த கிழக்குக்கடற்கரை பொருளாதார வழித்தடத்திட்டதின் ஒருபகுதி சென்னை – கன்னியாகுமரி தொழில்வழித்தடமாகும். இதில் தமிழக அரசும் முக்கிய பங்கு வகிக்கிறது.

சென்னை – கன்னியாகுமரி வழித்தடத்திட்டத்தில் தமிழகத்தின் 23 மாவட்டங்கள் பயன்பெறுகின்றன. குறிப்பாக மதுரை – தூத்துக்குடி; சென்னை – திருச்சி தொழில் வழித்தடங்களும் இணைந்துள்ளன. இந்த மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான கிமீட்டரில் சிறிய சாலைகள், சுமார் 590 கிமீட்டர் வரையிலான மாநில நெடுஞ்சாலைகள், எண்ணூர், தூத்துக்குடிபோன்ற பெரிய துறைமுகங்கள், காட்டுப்பள்ளி, காரைக்கால் போன்ற சிறிய துறைமுகங்களும் இந்தத் திட்டத்தின்மூலம் தரமுயர்த்தப் -படவுள்ளது.

கடலோரத்தில் உள்ள நிலப்பகுதிகளில் உருவாகும் தொழில் முனையங் -கள், துறைமுகங்களுடன் இணைப்பதன் வாயிலாக, குறிப்பாக, சர்வதே -ச உற்பத்தி இணைப்புகள் மற்றும் சா்வதேச மதிப்பு சங்கிலிகளில் இந் -திய தயாரிப்புகளின் பங்கு அதிகரிக்கப்படுகிறது. மேலும், இந்த வழித்தட -த்தில் வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படுகிறது. இதற்கான முதலீட் -டிற்கான கடன் வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி தமிழகத்தில் சாலைகள் உள்ளிட்ட பலவற்றில் பல ஆய்வுகளை மேற்கொண்டு வந்தது.

இறுதியாக கடந்த ஏப்ரலில் 484 மில்லியன் டாலர் கடன் அளிக்க ஆசிய வளர்ச்சி வங்கி முடிவுசெய்தது. தற்போது இதற்கான ஒப்பந்தம் அதிகாரபூர்வமாக கையெப்பமானது. கிழக்குக் கடற்கரை பொருளாதார வழித்தடத்தின்மூலம் தெற்கு, தென்கிழக்கு மற்றும் கிழக்கு ஆசியாவின் தொழில் உற்பத்தியோடு இந்தியா இணைகிறது. இதனால், கிழக்குக் கடற்கரை பொருளாதார மண்டலத்தை மேம்படுத்தும் பணிகளில் ஆசிய வளர்ச்சி வங்கி, இந்திய அரசுடன் ஆர்வத்துடன் பங்கேற்று செயல்பட்டுள் -ளது குறிப்பிடத்தக்கது.

2. ரோபோட்டிக் அறுவை சிகிச்சை கருவிகண்டுபிடிப்புக்கு தேசிய விருது

உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் குறைந்த விலையில் அதிநவீன ரோபோட்டிக் அறுவை சிகிச்சை கருவியை உருவாக்கிய சென்னை S S இன்னொவேஷன்ஸ் நிறுவனத்துக்கு சிறந்த கண்டுபிடிப்புக்கான தேசிய விருது அண்மையில் வழங்கப்பட்டுள்ளது.

3. அமெரிக்காவில் அதிகாரம் படைத்த பெடரல் நீதிபதியாக சரளா வித்யா நியமனம்

அமெரிக்காவின் கனெக்டிகட் மாவட்ட நீதிமன்றத்தின் பெடரல் நீதிபதியா -க, இந்திய வம்சாவளியை சேர்ந்த சரளா வித்யா நாகலாவை செனட் சபை தேர்வுசெய்துள்ளது. இதன்மூலம், அமெரிக்காவில் முதல் முறையா -க பெடரல் நீதிபதியாக நியமிக்கப்படும் தெற்காசியாவை சேர்ந்தவர் என்ற பெருமையை சரளா பெற்றுள்ளார். இவர், கடந்த 2017ஆம் ஆண்டு முதல் கனெக்டிகட் மாவட்ட அட்டார்னி அலுவலகத்தில் முக்கிய குற்றப்பி -ரிவின் துணை தலைமை அதிகாரியாக பணியாற்றிவருகிறார். அதற்கு முன்பு, 2012ஆம் ஆண்டு முதல், அமெரிக்க அட்டார்னி அலுவலகத்தில் குற்றப்பிரிவு ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வந்தார்.

பெடரல் நீதிபதி பதவி வாழ்நாள் பதவியாகும். பிரதிநிதி மற்றும் செனட் அவையில் பதவி நீக்க தீர்மானம் நிறைவேற்றினால் மட்டுமே பெடரல் நீதிபதியை பதவி நீக்க முடியும். பெடரல் நீதிபதி ஒருவர் அவர் விரும்பும் வரை அப்பணியில் தொடரலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அதிகாரங்கள் இப்பதவிக்கு உள்ளன.

4. முதியோர் நல மருத்துவர் வி எஸ் நடராஜனுக்கு சாரகா விருது:

முதியோர் நல மருத்துவர் வி எஸ் நடராஜனுக்கு சாரகா விருது வழங்கி ரோட்டரி சங்கம் கவுரவித்துள்ளது. மருத்துவத் துறையில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் சிறந்த நிபுணர்கள் மற்றும் எளியமக்களுக்குப் பயனளிக் -கும் வகையில் சமூகசேவை செய்துவரும் மருத்துவர்களுக்கு ரோட்டரி சங்கத்தின் கிண்டி கிளையின் சார்பாக சாரகா விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2020-21ஆம் ஆண்டுக்கான சாரகா விருது வழங்கும் நிகழ்ச்சி இணையவழியில் நடைபெற்றது.

அதில், முதியோருக்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவம் மற்றும் சமுதாய விழிப்புணர்வு செய்து வரும் முதியோர் நல மருத்துவர் V S நடராஜனுக்கு சாரகா விருது மற்றும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

5. நாட்டிலேயே முதல்முறையாக மத்திய பிரதேசத்தில் கரோனாவில் இருந்து மீண்டவருக்கு பச்சை பூஞ்சை நோய் பாதிப்பு

மத்திய பிரதேசத்தில் கரோனாவிலிருந்து மீண்டவருக்கு நாட்டிலேயே முதல் முறையாக பச்சைபூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டது. இது முகம், மூக்கு, கண் அல்லது மூளையை பாதிக்கிறது. இதனால் பார்வையிழப்பு ஏற்படவும் நுரையீரலுக்கு பரவவும் வாய்ப்பு உள்ளது. பின்னர் சிலருக்கு மஞ்சள், வெள்ளை பூஞ்சை பாதிப்பும் ஏற்பட்டது.

நுரையீரலை தாக்கும்

பச்சை பூஞ்சை என்பது அஸ்பெர்ஜில்லோசிஸ் தொற்று ஆகும். இதுகுறித்து ஆய்வுசெய்ய வேண்டியது அவசியம். மிகவும் அரிதாக ஏற்படும் இந்த நோய் நுரையீரலையும் தாக்கும். கருப்புப்பூஞ்சை மற்றும் பச்சை பூஞ்சையை குணப்படுத்தும் மருந்துகள் வெவ்வேறானவை.

1. ICAR – Indian Institute of Spices Research (IISR) has received a patent for the micronutrient foliar formulation?

A) Black Pepper

B) White Pepper

C) Turmeric

D) Cardamom

  • The Indian Council of Agricultural Research (ICAR)–Indian Institute of Spices Research (IISR) has received a patent for black pepper micronutrient foliar formulation.
  • ICAR–IISR has developed crop–specific micronutrient foliar formulations for major spices (black pepper, ginger, turmeric, and cardamom) to overcome micronutrient deficiencies.

2. Trirashmi Buddhist caves complex, where 3 new caves have been discovered, is located in which state?

A) Tamil Nadu

B) Maharashtra

C) Bihar

D) Odisha

  • The Archaeological Survey of India (ASI), has discovered three new caves in the Trirashmi Buddhist cave complex, which is located near Nashik in Maharashtra. This cave complex is also called the Pandav Leni. This site was first documented by a British military officer nearly two decades ago.

3. To which field, the Padma Shri awardee Lakshmi Nandan Bora, who died recently, belonged to?

A) Sports

B) Literature

C) Music

D) Dance

  • Lakshmi Nandan Bora, a noted Assamese litterateur and Padma Shri awardee belonging to Assam, passed away recently, due to COVID. He was 89 years old. Lakshmi Nandan Bora has authored more than 60 books in Assamese language.
  • Patal Bhairavi and Kayakalpa are his famous writings. He received the Padma Shri award from the Government of India in 2015.

4. Indus Best Mega Food Park, which was inaugurated recently, is located in which state?

A) Punjab

B) Haryana

C) Chhattisgarh

D) Odisha

  • The Indus Best Mega Food Park, has been launched in Raipur of Chhattisgarh, by the union minister for Food Processing Industries Narendra Singh Tomar. This mega food park aims to make value addition, increase shelf life and provide better price realisation to farmers. It is expected that this park would provide direct and indirect employment to about 5,000 persons.

5. Which state in India has been witnessing African Swine Fever, which claimed over 4500 pigs?

A) Goa

B) Mizoram

C) Uttar Pradesh

D) Bihar

  • The state of Mizoram has been severely affected by African Swine Fever (ASF), which has claimed more than 4,700 pigs in over two months, since the first case was reported.
  • As of now, the state government has declared 99 villages and localities as “infected areas”, of which 56 are located in Aizawl District, which is the state capital.

6. The Consumer Confidence Index is released by which organisation?

A) State Bank of India

B) Ministry of Consumer Affairs

C) India Ratings

D) Reserve Bank of India

  • The Consumer Confidence Survey is conducted by the Reserve Bank of India, which provides the respondent’s perceptions on general economic conditions. Recently, the RBI has released the Consumer Confidence Index, which has recorded an all–time low due to the second wave of COVID–19 disease. The Current Situation Index (CSI) fell to 48.5 and the Future Expectation Index (FEI) fell to 96.4.

7. Which is the Indian Navy’s oldest Hydrographic Survey vessel, that has been decommissioned recently?

A) INS Kolkata

B) INS Sandhayak

C) INS Sindhurakshak

D) INS Suveer

  • INS Sandhayak, the Indian Navy’s oldest Hydrographic Survey Vessel, was decommissioned from the Navy at Visakhapatnam on July 4, 2021. The vessel is 40 years old and has conducted more than 200 major hydrographic surveys. It has also been a part of important operations like ‘Operation Pawan’ in Sri Lanka (1987), Operation ‘Rainbow for Humanitarian Assistance’ (2004) etc.

8. Lynetteholm, a proposed artificial island, is to be constructed in which country?

A) Austria

B) Russia

C) Ukraine

D) Denmark

  • The Government of Denmark has approved for construction of an artificial giant island named Lynetteholm.
  • This island would be 1 sq mile (2.6 sq km) in area and would include a dam system around its perimeter to protect its harbour from rising sea levels and storms. This island would be connected to the mainland by way of tunnel roads and metro lines.

9. YounTab scheme for students is launched in which state / UT?

A) Delhi

B) Puducherry

C) Karnataka

D) Ladakh

  • The Union Territory of Ladakh has launched a scheme named “YounTab”, under which the Ladakh Lt Governor RK Mathur distributed tablets to the students studying in 9 to 12, in the UT. This was the first phase of the scheme’s implementation. The scheme aims to provide free tabs to nearly 12,300 students of 6th to 12th class who are studying in government schools of the UT.

10. The Government of India has announced the procurement of “Corbevax” vaccine, manufactured by which company?

A) Biological E

B) SII

C) Ranbaxy

D) Bharat Bio Tech

  • The Government of India has announced that it would procure 30 crore doses of the COVID vaccine “Corbevax” which is manufactured by the company Biological E. The firm is headquartered in Hyderabad. This indigenously made vaccine is a “Recombinant Protein Sub Unit Vaccine ” (i.e.) made from the spike protein of COVID virus and is different from Covaxin or Covishield vaccines.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!