TnpscTnpsc Current Affairs

17th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English

17th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 17th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

June Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ‘பிலிபித் புலிகள் பாதுகாப்பு அறக்கட்டளை’யை அமைக்க ஒப்புதல் அளித்துள்ள மாநிலம் எது?

அ. உத்தரகாண்ட்

ஆ. உத்தர பிரதேசம் 

இ. ஆந்திர பிரதேசம்

ஈ. சிக்கிம்

  • வனவுயிரி (பாதுகாப்பு) சட்டம், 1972இன் விதிகளின்கீழ் பிலிபித் புலி பாதுகாப்பு அறக்கட்டளையை அமைப்பதற்கான முன்மொழிவுக்கு உத்தரபிரதேச அமைச்சரவை ஒப்புதலளித்தது. மாநிலத்தின் முதல் முன்மொழியப்பட்ட மருத்துவச் சாதனப் பூங்காவில் அலகுகளை அமைப்பதற்கு ஊக்கத்தொகை வழங்க அமைச்சரவை முடிவுசெய்தது. பண்டித தீன தயாள் உபாத்யாய கிஸ்ஸான் சம்ருதி யோஜனா திட்டத்தை 2026–27 வரை மாநிலத்தில் செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

2. 2022 – உலகப் போட்டித்தன்மைக் குறியீட்டெண்ணில் இந்தியாவின் தரநிலை என்ன?

அ. 97

ஆ. 68

இ. 54

ஈ. 37 

  • மேலாண்மை மேம்பாட்டுக்கான நிறுவனத்தால் தொகுக்கப்பட்ட வருடாந்திர உலகப் போட்டித்தன்மைக் குறியீடு அண்மையில் வெளியிடப்பட்டது. ஆசியப் பொருளாதாரங்களில் இந்தியா மிகக்கூர்மையான உயர்வைப் பதிவு செய்துள்ளது; பொருளாதாரச் செயல்திறனில் ஏற்பட்ட ஆதாயங்களால் குறியீட்டில் 6 இடங்கள் முன்னேறி 43ஆவது இடத்தில் இருந்த இந்தியா 37ஆவது இடத்திற்கு சென்றுள்ளது.
  • சிங்கப்பூர், ஹாங்காங், தைவான் மற்றும் சீனா ஆகியவை ஆசியப்பொருளாதாரத்தில் சிறந்து விளங்கின. டென்மார்க் முதலிடத்திலும், சுவிச்சர்லாந்து முதலிடத்திலிருந்து இரண்டாவது இடத்துக்கும் தள்ளப்பட்டது.

3. ‘அக்னிவீரர்களுக்கு’ திறனடிப்படையிலான இளங்கலை பட்டப்படிப்பை வழங்குகிற நிறுவனம் எது?

அ. ஐஐடி மெட்ராஸ்

ஆ. IGNOU 

இ. AICTE

ஈ. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்

  • கல்வி அமைச்சகம், ‘அக்னிவீரர்களுக்கான’ சிறப்பு 3 ஆண்டு திறன் அடிப்படையிலான இளங்கலை பட்டப்படிப்பை தொடங்குவதாக அறிவித்தது. இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (IGNOU) வழங்கும் பட்டப்படிப்பு வேலைவாய்ப்பு மற்றும் கல்விக்காக இந்தியாவிலும் வெளிநாட்டிலும் அங்கீகரிக்கப்படும். புதிதாகத் தொடங்கப்பட்ட ‘அக்னிபத்’ திட்டத்தின்கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்படும் பாதுகாப்புப் பணியாளர்கள் ‘அக்னிவீரர்கள்’ ஆவர்.

4. அணுவாயுதம் தாங்கிச்செல்லும் பிருத்வி–II ஏவுகணையை உருவாக்கிய அமைப்பு எது?

அ. போயிங்

ஆ. DRDO 

இ. HAL

ஈ. டஸ்ஸால்ட் ஏவியேஷன்

  • இந்தியா உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட, அணுவாயுதங்களை தாங்கிச் செல்லும் திறன்கொண்ட பிருத்வி–II ஏவுகணையை ஒடிஸா கடற்கரையில் உள்ள சோதனை வரம்பிலிருந்து வெற்றிகரமாக சோதனைசெய்தது. இந்த ஏவுகணையை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கியுள்ளது. இது சுமார் 250 கிமீ தூரம் செல்லும் மற்றும் ஒரு டன் பேலோடை சுமந்து செல்லக்கூடியது.
  • 4,000 கிமீ தூரம் வரை செல்லக்கூடிய இடைநிலை ஏவுகணையான அக்னி–IV–ஐ இந்தியா பரிசோதித்த பத்து நாட்களுக்குப் பிறகு இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

5. 2021–22ஆம் ஆண்டில் நாட்டின் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதிக்கு சிறந்த ஏற்றுமதி இடமாக இருந்த நாடு எது?

அ. ஐக்கிய அரபு அமீரகம்

ஆ. அமெரிக்கா 

இ. சீனா

ஈ. சிங்கப்பூர்

  • 2021–22 நிதியாண்டில் $44.4 பில்லியன் டாலர்களாக இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியை பதிவுசெய்துள்ளது. கைவினைப்பொருட்கள் உள்ளிட்ட ஏற்றுமதிகள் 2020–21 நிதியாண்டு தொடர்புடைய புள்ளிவிவரங்களைவிட 41 சதவீதம் அதிகரித்துள்ளது. நாட்டின் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியில் 27 சதவீத பங்குகளுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் (18%), வங்காளதேசம் (12%) மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (6%) ஆகியவை உள்ளன.

6. 2022–இல் தகவல் சமூக மன்றம் குறித்த உலக உச்சிமாநாடு நடைபெறும் இடம் எது?

அ. நியூயார்க்

ஆ. ஜெனிவா 

இ. பாரிஸ்

ஈ. டாவோஸ்

  • 2022 – தகவல் சமூக (WSIS) மன்றம் குறித்த உலக உச்சிமாநாடானது 2022 மார்ச்.15 முதல் மெய்நிகர் வடிவத்தில் தொடங்கி நடந்து வருகிறது. இறுதி வார நிகழ்வு 2022 மே.30 முதல் ஜூன்.3 வரை சுவிச்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள ITU தலைமையகத்தில் நடைபெற்றது. ‘ICTs for Well–Being, Inclusion and Resilience: WSIS Cooperation for Accelerating Progress on the SDGs’ என்ற கருப்பொருளின் கீழ் இந்த மன்றம் நடைபெற்றது. WSIS மன்றம் குறித்த மாநாடு ITU, UNESCO, UNDP மற்றும் UNCTAD ஆகியவற்றால் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

7. அண்மையில் இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் விஜயம் செய்த லிப்ரேவில் என்பது கீழ்க்காணும் எந்த நாட்டின் தலைநகரமாகும்?

அ. செனகல்

ஆ. காபோன் 

இ. கினியா

ஈ. கேமரூன்

  • இந்தியத்துணைக்குடியரசுத்தலைவர் M வெங்கையா காபோன், செனகல் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தியத் துணைக்குடியரசுத் தலைவர் அளவில் இந்தியாவிலிருந்து இந்த 3 நாடுகளுக்கு மேற்கொள்ளப்படும் முதல் பயணம் இதுவாகும். லிப்ரேவில் என்பது மத்திய–ஆப்பிரிக்க நாடான காபோனின் தலைநகரமாகும். காபோனின் நம்பகமான கூட்டாளராக இருப்பதற்கான இந்திய அரசின் உறுதி நிலைப்பாட்டை இந்தியத் துணைக்குடியரசுத் தலைவர் அப்போது வலியுறுத்தினார். இவ்விருநாடுகளுக்கு இடையேயான இருதரப்பு வர்த்தகம் 2021–22–இல் $1.12 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது.

8. இந்தியாவின் முதல் லாவெண்டர் திருவிழாவை நடத்திய மாநிலம்/UT எது?

அ. சிக்கிம்

ஆ. நாகாலாந்து

இ. ஜம்மு காஷ்மீர் 

ஈ. அருணாச்சல பிரதேசம்

  • மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், ஜம்மு–காஷ்மீர் மாநிலம் பதேர்வாவில் வைத்து இந்தியாவின் முதல் லாவெண்டர் திருவிழாவை தொடங்கி வைத்தார். தோடா மாவட்டத்தில் உள்ள பதேர்வா ‘ஊதா புரட்சி’யின் பிறப்பிடமாகும்; மேலும் அது நிலம் மற்றும் காலநிலை அடிப்படையில் லாவெண்டர் சாகுபடிக்கு பெயர்பெற்றதாகும். CSIR–Aroma Mission, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ், நறுமணம் தொடர்பான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உழவர்கள், தொழிற்துறை மற்றும் சமூகத்தை சென்றடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

9. பசிபிக் பருவத்தின் முதல் புயலான, ‘அகதா’ சமீபத்தில் எந்த நாட்டைத் தாக்கியது?

அ. கனடா

ஆ. மெக்ஸிக்கோ 

இ. டென்மார்க்

ஈ. ஜப்பான்

  • பசிபிக் பருவத்தின் முதல் புயலான, ‘அகதா’ மெக்ஸிக்கோவைத் தாக்கியது. இதன்காரணமாக தெற்கு மெக்சிகோவில் குறைந்தது 10 பேராவது இறந்திருப்பர். மேலும் பொழிந்த கனமழையால் அந்த நாட்டில் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டது. 1949இல் பதிவு செய்தல் தொடங்கியதிலிருந்து மே மாதத்தில் மெக்ஸிக்கோவின் பசிபிக் கரையோரத்தில் நிலச்சரிவை ஏற்படுத்திய மிகவும் வலிமையான புயல் இதுவாகும். மெக்ஸிக்கோ அதன் பசிபிக் மற்றும் அட்லாண்டிக் கடற்கரைகளின் காரணமாக மே மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் வெப்பமண்டலப் புயல்களால் தொடர்ந்து தாக்கப்படுகிறது.

10. உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டரான ‘பிரான்டியர் – Frontier’ஐ உருவாக்கிய நாடு எது?

அ. அமெரிக்கா 

ஆ. ரஷ்யா

இ. சீனா

ஈ. இஸ்ரேல்

  • லின்மார்க் பெஞ்ச்மார்க் ஸ்கோரான 1.1 எக்ஸாபிளாப்ஸ்கொண்ட உலகின் சக்திவாய்ந்த சூப்பர் கம்ப்யூட்டர்களின் டாப் 500 பட்டியலின்படி, ‘பிரான்டியர்’ உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டராக மாறியுள்ளது. இது Hewlett Packard Enterprise (HPE) கட்டமைப்பைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் ஆகும். அட்வான்ஸ்டு மைக்ரோ டிவைஸஸின் (AMD) செயலிகளை இது கொண்டுள்ளது. இது RIKEN மற்றும் Fujitsu லிட் இணைந்து உருவாக்கிய ஜப்பானின் சூப்பர் கம்ப்யூட்டரான ‘Fugaku’ஐ விட திறன் மிகுந்ததாகும். இந்தக் கணினி 2020–இல் சூப்பர் கம்ப்யூட்டர் தரப்படுத்தல் குறியீட்டில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

Newspaper, news icon - Free download on Iconfinder

Newspaper, news icon - Free download on Iconfinder

1. ‘அக்னிபத்’ திட்டம்: நுழைவு வயது நீட்டிப்பு

‘அக்னிபத்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளதையடுத்து, ஆயுதப்படைகளில் புதிதாகப் பணியமர்த்தப்படுவோருக்கான நுழைவு வயது 17½ – 21 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஈராண்டுகளில் பணியமர்த்தலை மேற்கொள்ள இயலாத காரணத்தால், 2022ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள பணியமர்த்தல் சுழற்சிக்கு ஒருமுறை விலக்கு அளிக்கப்படும் என்று அரசு முடிவு செய்துள்ளது. எனவே, 2022-ஆம் ஆண்டிற்கான ‘அக்னிபத்’ திட்டத்தின் கீழ் பணியமர்த்தல் நடைமுறைக்கான அதிகபட்ச வயது வரம்பு 23-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

2. தமிழ்நாட்டில் புதிதாக 20 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

காவல்துறை சார்பில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனைத்து உட்கோட்டங்களிலும் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் என்ற வகையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 20 அனைத்து மகளிர் காவல் நிலையங்களை தமிழ்நாட்டு முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கடந்த 1973-ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் முதன்முதலில் மகளிர் காவல் பணியில் நியமிக்கப்பட்டனர். சட்டம் – ஒழுங்கைப் பராமரித்தல், குற்றங்களைத் தடுத்தல் மற்றும் கண்டறிதல், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணிகளில் மகளிர் காவல் துறையினர் திறம்பட செயலாற்றி வருகின்றனர். தற்போது மாநிலத்தில் 202 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் செயல்படுகின்றன.

புதிதாக திறக்கப்பட்ட மகளிர் காவல் நிலையங்கள்:

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்திற்குட்பட்ட வளசரவாக்கம்.

தாம்பரம் மாநகரம் – சேலையூர், ஆவடி மாநகரம் – எஸ்ஆர்எம்சி.

தாம்பரம் மாநகரம் – வண்டலூர்.

வேலூர் மாவட்டம் – காட்பாடி; திருவண்ணாமலை மாவட்டம் – திருவண்ணாமலை ஊரகம்.

கடலூர் மாவட்டம் – திட்டக்குடி; கரூர் மாவட்டம் – கரூர் ஊரகம்; புதுக்கோட்டை மாவட்டம் – கோட்டைப்பட்டினம்.

தஞ்சாவூர் மாவட்டம் – ஒரத்தநாடு; திருவாரூர் மாவட்டம் – முத்துப்பேட்டை.

கோயம்புத்தூர் மாவட்டம் – மேட்டுப்பாளையம்; ஈரோடு மாவட்டம் – பெருந்துறை.

கிருஷ்ணகிரி மாவட்டம் – ஊத்தங்கரை; மதுரை மாவட்டம் – ஊமச்சிக்குளம்; திண்டுக்கல் மாவட்டம் – திண்டுக்கல் ஊரகம்; தேனி மாவட்டம் – பெரியகுளம்; இராமநாதபுரம் மாவட்டம் – முதுகுளத்தூர்; திருநெல்வேலி மாவட்டம் – சேரன்மாதேவி; தென்காசி மாவட்டம் – புளியங்குடி.

1. Which state has approved to set up ‘Pilibhit Tiger Protection Foundation’?

A. Uttarakhand

B. Uttar Pradesh 

C. Andhra Pradesh

D. Sikkim

  • The Uttar Pradesh cabinet approved a proposal to set up Pilibhit Tiger Protection Foundation under the provisions of Wildlife (Protection) Act, 1972. The cabinet decided to give incentives to set up units in the state’s first proposed medical device park. It was also decided to implement the Pt Deendayal Upadhyay Kisan Samridhi Yojana in the state till 2026–27.

2. What is the rank of India in the World Competitiveness Index 2022?

A. 97

B. 68

C. 54

D. 37 

  • The annual World Competitiveness Index compiled by the Institute for Management Development was recently released. India has registered the sharpest rise among the Asian economies, with a six–place jump from 43rd to 37th rank on the index due to gains in economic performance. Singapore, Hong Kong, Taiwan, and China were the top–performing Asian economies. Denmark was placed on top, while Switzerland slipped from the top to the second position.

3. Which institution offers the skill–based bachelor degree programme for ‘Agniveers’?

A. IIT Madras

B. IGNOU 

C. AICTE

D. Jawaharlal Nehru University

  • The Ministry of Education (MoE) announced the launch of a special three–year skill based bachelor degree programme for ‘Agniveers’. The degree programme offered by the Indira Gandhi National Open University (IGNOU) will be recognised both in India and abroad for employment and education. Agniveers are the defence personnel to be recruited under the newly launched ‘Agnipath’ scheme.

4. Which organisation developed the nuclear–capable Prithvi–II missile?

A. Boeing

B. DRDO 

C. HAL

D. Dassault Aviation

  • India successfully test–fired its indigenously developed, nuclear–capable Prithvi–II missile from a test range off the Odisha coast. The missile was developed by Defence Research and Development Organisation of India. It has a range of around 250 km and can carry a one tonne payload.
  • The test comes around 10 days after India tested its Intermediate Range Ballistic Missile Agni–IV, which can travel as far as 4,000 km.

5. Which country was the top export destination for the country’s textiles and apparel shipments in 2021–22?

A. UAE

B. USA 

C. China

D. Singapore

  • India recorded its highest–ever textiles and apparel exports in the financial year 2021–22 at USD 44.4 billion. The exports including handicrafts recorded an increase of 41 per cent over corresponding figures in FY21. USA was the top export destination for the country’s textiles and apparel shipments with 27 per cent share, followed by the European Union (18 %), Bangladesh (12 %) and UAE (6 %).

6. Which is the venue of the ‘World Summit on the Information Society (WSIS) Forum 2022’?

A. New York

B. Geneva 

C. Paris

D. Davos

  • The World Summit on the Information Society (WSIS) Forum 2022 started from 15 March in a virtual format with the final week held physically from 30 May to 3 June 2022 at the ITU Headquarters in Geneva, Switzerland. The forum was held under the theme of ‘ICTs for Well–Being, Inclusion and Resilience: WSIS Cooperation for Accelerating Progress on the SDGs’. The WSIS Forum is co–organized by ITU, UNESCO, UNDP and UNCTAD.

7. Libreville is the capital of which country, recently visited by the Vice President of India?

A. Senegal

B. Gabon 

C. Guinea

D. Cameroon

  • Vice President M. Venkaiah Naidu is on a visit to Gabon, Senegal, and Qatar, the first visit from India at the level of Vice President to the three countries. Libreville is the capital of the Central– African country Gabon. The Vice President reiterated the commitment of the Government of India to be Gabon’s reliable partner. The bilateral trade between the countries reached USD 1.12 billion in 2021–22.

8. Which state/UT hosted the India’s first Lavender Festival?

A. Sikkim

B. Nagaland

C. Jammu and Kashmir 

D. Arunachal Pradesh

  • Union Minister Jitendra Singh inaugurated the Lavender Festival, the first–of–its kind in India, in Bhaderwah, Jammu and Kashmir. Bhaderwah in Doda district is the birthplace of the purple revolution and it is known for lavender cultivation in terms of land and climate. CSIR–Aroma Mission, under the Ministry of Science & Technology, aims to develop aroma–related science and technology to reach farmers, industry, and society.

9. ‘Hurricane Agatha’, the first of the Pacific season, recently hit which country?

A. Canada

B. Mexico 

C. Denmark

D. Japan

  • ‘Hurricane Agatha’, the first of the Pacific season hit Mexico and the casualties climbed to at least 10 dead and around 20 missing in southern Mexico. Heavy rains triggered landslides and flooding in the country. The storm was the strongest to make landfall along Mexico’s Pacific coast in May since record keeping began in 1949. Mexico is regularly hit by tropical storms on both its Pacific and Atlantic coasts, between May and November.

10. Frontier, the world’s fastest supercomputer, is developed in which country?

A. USA 

B. Russia

C. China

D. Israel

  • ‘Frontier’ became the world’s fastest supercomputer, according to the Top500 list of world’s most powerful supercomputers with Linmark benchmark score of 1.1 exaflops. It is a supercomputer built using Hewlett Packard Enterprise (HPE) architecture and equipped with Advanced Micro Devices (AMD) processors. It surpassed Fugaku, Japan’s supercomputer jointly developed by RIKEN and Fujitsu Ltd., which topped the supercomputer benchmarking index in 2020.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!